கேக் வகைகள்/CAKE

Discussion in 'Diwali Sweets' started by NATHIYAMOHANRAJA, Oct 31, 2018.

 1. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  6,802
  Likes Received:
  509
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  பாதாம் கேக்

  சமைக்க தேவையானவை

  • தோல் நீக்கிய பாதம் பருப்பு - 250 கிராம்
  • மைதா மா - 250 கிராம்
  • சீனி - 250 கிராம்
  • மாஜரீன் - 250 கிராம்
  • முட்டை - 4
  • வனிலா - 1 தே. கரண்டி
  • பேக்கிங்பவுடர் - 15 கிராம்
  குறிப்பு

  உங்களுக்கு பிடித்தமான கேக் செய்ய முதலில் எப்போதும் மாவு தண்ணீர் மற்றும் சர்க்கரை அளவு சரியாக இருக்க வேண்டும்.பிறகு கேக் தேவையான பொருட்கள் கொண்ட உங்கள் பிடித்தமான கேக் வகைகள் செய்து சுவைக்கலாம்.
  உணவு செய்முறை : பாதாம் கேக்

  • Step 1.

   முதலில் பாதாமை அரைத்து கொள்ளவும். (மிகவும் பொடியாகி விட கூடாது) முதலில் மாஜரின், சீனி இரண்டையும் சேர்த்து சீனி கரையும் வரை அடிக்கவும்.
  • Step 2.

   மாஜரீனும், சீனியும் சேர்த்து அடிக்கும் போதே முட்டையை ஒவ்வொன்றாக சேர்த்து அடிக்கவும். பின்பு பாதாம் பருப்பு, மா, பேக்கிங்பவுடர் எல்லாவற்றையும் கையால் கலந்து திரும்பவும் எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து திரும்பவும் ஒரு சுற்று சுற்றி கலக்கவும்.
  • Step 3.

   கடைசியாக வனிலாவையும் சேர்த்து கலக்கவும். பின்பு பேக்கிங் தட்டில் சிறிதளவு மாஜரீன் பூசி தட்டில் ஊற்றி 325 டிகிரி F ல்; 35 அல்லது 40 நிமிடங்கள் பேக் செய்யவும்.
   
 2. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  6,802
  Likes Received:
  509
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  வெண்ணெய்யில்லா சாக்லெட் கேக்

  சமைக்க தேவையானவை

  • மைதா மாவு - 120 கிராம்
  • பொடி செய்யாத சர்க்கரை - 120 கிராம்
  • கோகோ பவுடர் - 2 மேசைக்கரண்டி
  • முட்டை - 4
  • பேக்கிங் பவுடர் - கால் தேக்கரண்டி
  • வெனிலா எசன்ஸ் - ஒரு தேக்கரண்டி

  உணவு செய்முறை : வெண்ணெய்யில்லா சாக்லெட் கேக்

  • Step 1.

   முதலில் முட்டைகளையும், சர்க்கரையையும் பீங்கான் கிண்ணத்தில் போட்டு முட்டையடிக்கும் கருவியினால் மிக நன்றாக அடிக்கவும். பின்னர் அடித்த முட்டை, சர்க்கரை கொழகொழவென்று நுரைபோல் இருக்கும். மைதா மாவு, பேகிங் பவுடர், கோகோ பவுடர் இவற்றை சலிக்கவும். மாவையும் வெனிலா எசன்ஸையும் அடித்து வைத்துள்ள முட்டைக் கலவையுடன் சேர்க்கவும்.
  • Step 2.

   விரல் நுனிகளால் மைதா மாவை கலக்கவும். (மாவு பிசைவது போல் கலக்கக் கூடாது). நன்றாக நெய் தடவிய 10 அங்குல கேக் பேக் செய்யும் தட்டில் போட்டு 400 டிகிரி F சூட்டில் சுமார் 10 இருந்து 15 நிமிடம் வரை பேக் செய்யவும். பேக் செய்தவுடன், சூடு சிறிது ஆறியவுடன் கேக்கை வெளியில் எடுத்து விடவும்.
  • Step 3.

   கத்தியினால் குறுக்கு வாட்டில் கேக்கை சரிசமமாக வெட்டிக் கொள்ளவும். ஒரு தேக்கரண்டி பொடித்த சர்க்கரையை ஒரு தேக்கரண்டி தண்ணீரில் கலக்கவும். பிறகு வெட்டிய கேக்கின் மேல் தெளிக்கவும். சாக்லெட் வெண்ணெய் ஐசிங்கை கேக்கின் மேல் தடவவேண்டும்.
  • Step 4.

   வெட்டிய கேக் இரண்டையும் நன்றாக ஒட்ட வேண்டும். கேக்கின் மேலும் பக்கவாட்டிலும் சாக்லெட் வெண்ணெய் ஐசிங்கை மழமழவென்று தடவவேண்டும். தடவியவுடன் விரும்பும் நிறத்தில் விரும்பும் விதத்தில் பூ போல செய்யும் அச்சினால் அழகுப்படுத்தலாம்
   
 3. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  6,802
  Likes Received:
  509
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  வெண்ணெய் இல்லாத கேக்

  சமைக்க தேவையானவை

  • மைதா மாவு - 90 கிராம்
  • பொடி செய்யாத சர்க்கரை - 90 கிராம்
  • முட்டை - 3
  • பேக்கிங் பவுடர் - கால் தேக்கரண்டி
  • வெனிலா எசன்ஸ் - ஒரு தேக்கரண்டி

  உணவு செய்முறை : வெண்ணெய் இல்லாத கேக்


  • Step 1.

   முதலில் முட்டைகளையும், சர்க்கரையையும் பீங்கான் கிண்ணத்தில் போட்டு முட்டையடிக்கும் கருவியினால் மிக நன்றாக அடிக்கவும்
  • Step 2.

   பின் அடித்த முட்டை, சர்க்கரை குழகுழவென்று நுரைபோல் இருக்கும். மைதா மாவு, பேக்கிங் பவுடர், கோகோ பவுடர் இவற்றை சலிக்கவும்.
  • Step 3.

   மாவையும் வெனிலா எசன்ஸையும் அடித்து வைத்துள்ள முட்டைக் கலவையுடன் சேர்க்கவும். விரல் நுனிகளால் மைதா மாவை கலக்கவும். (மாவு பிசைவது போல் கலக்கக் கூடாது). 7" கேக் பேக் செய்யும் இரண்டு தட்டுகளில் இடைவெளி விடாமல் வெண்ணெயை தடவிக் கொள்ளவும்.
  • Step 4.

   கலவையை இரு தட்டுகளிலும் சரிசமமாக நிரவ வேண்டும். 400 டிகிரி F சூட்டில் சுமார் 10 இருந்து 15 நிமிடம் பேக் செய்யவும். சூடு சிறிது ஆறியவுடன் உடையாமல் எடுத்து ஜாமை இரு கேக்குகளிலும் நன்கு பசை தடவுவது போல் தடவி இரு கேக்குகளையும் ஒன்றின் மீது ஒன்றாக வைத்து நன்கு ஒட்டி விடவும். ஐசிங் செய்யலாம். சுவையான வெண்ணை இல்லா கேக் தயார்.
   
 4. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  6,802
  Likes Received:
  509
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  ஸ்லாப் கேக்

  சமைக்க தேவையானவை

  • மைதா மாவு - 150 கிராம்
  • சர்க்கரை - 150 கிராம்
  • வெண்ணெய் - 120 கிராம்
  • பேக்கிங் பவுடர் - அரை தேக்கரண்டி
  • முட்டை - 3
  • வெனிலா எசன்ஸ் - சில துளிகள்
  • பால் - தேவையான அளவு
  • லெமன் எசன்ஸ் - சில துளிகள்
  • ஐசிங் செய்ய தேவையானவை:
  • வெண்ணெய் - 150 கிராம்
  • ஐசிங் சர்க்கரை - 350 கிராம்
  • தேவையான கலர்

  உணவு செய்முறை : ஸ்லாப் கேக்

  • Step 1.

   முதலில் வெண்ணெயையும் சர்க்கரையையும் நன்றாகக் குழைக்கவும். முட்டைகளை நன்றாக அடிக்கவும். அடித்த முட்டையை சிறிது சிறிதாக வெண்ணெய் கலந்து சர்க்கரை கலவையில் ஊற்றி தொடர்ந்தாற்போல் அடிக்கவும்
  • Step 2.

   பிறகு எசன்ஸ், கலர் சேர்க்கவும். பேக்கிங் பவுடரையும், மைதா மாவையும் இரு முறை சலித்த பிறகு அதையும் சேர்க்கவும். பிறகு இந்த கலவையில் சிறிது பால் சேர்த்து தளர்த்தியாக கலக்கவும். நிரம்ப தளர்த்தியாக இருக்கக் கூடாது. 8 அங்குல அகலம் 10 அங்குல நீளம் உள்ள தட்டில் போட்டு 400 டிகிரி F சூட்டில் சுமார் 30 இருந்து 35 நிமிடம் வரை பேக் செய்யவும்.
  • Step 3.

   பேக் ஆனவுடன் தட்டிலிருந்து எடுத்து ஆறவிடவும். கேக் நன்றாக ஆறியவுடன் 3 மேசைக்கரண்டி வெண்ணெய் ஐசிங் கலவையை கேக்கின் மேல் பக்கம் சமமாகத் தடவிக்கொள்ளவும். பிறகு நீளவாட்டில் 3 பாகங்களாக வெட்டிக் கொள்ளவும். வெண்ணெய், ஐசிங் சர்க்கரை இரண்டையும் நன்கு குழைத்துக் கொள்ளவும்
  • Step 4.

   மூன்று பாகங்களாகவோ, நான்கு பாகங்களாகவோ பிரித்து ஒவ்வொன்றுக்கும் ஒரு கலர் சேர்த்துக் கொள்ளவும். பட்டர் பேப்பர் பையில் அச்சைப் போடவும். ஐசிங் கலவையைப் பையில் போடவும்
  • Step 5.

   மேலே இஷ்டம் போல பூ வேலை செய்து கொள்ளவும். ஐசிங் செய்து ஒரு மணிநேரம் ஆனபிறகு ஒவ்வொரு துண்டையும் 8 பாகங்களாக வெட்டிக் கொள்ளவும்.
   
 5. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  6,802
  Likes Received:
  509
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  சிவப்பு வெல்வெட் கேக்


  சமைக்க தேவையானவை

  • மைதா – 1 ½ கப்
  • சர்க்கரை – 1 ½ கப்
  • எண்ணெய் – 1 ½ கப்
  • சோடா உப்பு – 3/4 தேக்கரண்டி
  • பேக்கிங் பவுடர் – 2 தேக்கரண்டி
  • முட்டை – 2
  • வெள்ளை வினிகர் – 1 தேக்கரண்டி
  • வெனிலா எசென்ஸ் – 1 தேக்கரண்டி
  • மோர் – 1 கப்
  • சிவப்பு ஃபுட் கலர் – 2 தேக்கரண்டி
  • கீரம் சீஸ் – தேவையான அளவு

  உணவு செய்முறை : சிவப்பு வெல்வெட் கேக்

  • Step 1.

   முதலில் மைதா, பேக்கிங் பவுடர், மற்றும் சோடா உப்பு ஆகியவற்றைச் சேர்த்து இருமுறை சலித்து வைத்துக் கொள்ளுங்கள்.
  • Step 2.

   ஒரு பாத்திரத்தில் எண்ணெய், முட்டை, வினீகர், சர்க்கரை மற்றும் எசன்ஸ் எல்லாவற்றையும் கலந்து நன்றாக நுரைக்க அடிக்கவும். பின் சிவப்பு ஃபுட் கலரையும் சேர்த்து அடயுங்கள். பிறகு சலித்து வைத்துள்ள மைதா கலவையும் சிறிது சிறிதாக சேர்த்துக் கலக்குங்கள்.
  • Step 3.

   பிறகு மோரையும் அதனுடன் கலக்கவும். இப்போது கேக் கலவை ரெடி. இதை கேக் பாத்திரத்தில் கொட்டி கேக் செய்யுங்கள். கேக் கலவையை இரண்டாகப் பிரித்து ஒரே அளவிலான இரண்டு தனித்தனி கேகுகளாகவும் கேக் செய்தால் இன்னும் நன்றாக இருக்கும். அதாவது கேக் ஆனா இரண்டு கேக்குகளின் நடுவே கீரீம் சீஸ்ஃபிள்ளிங்கைப் பரத்தி விட்டு அதை ஒரே கேக்காக செட் செய்யுங்கள்.
  • Step 4.

   சுவையான சிவப்பு வெல்வெட் கேக் தயார். கீரீம் சீஸ் தாயாரிக்க: தயிரை ஒரு துணியில் வடிகட்டிக் கொள்ளுங்கள். தண்ணீர் வடித்தவுடன் இந்த கெட்டித் தயிரை துணியிலிருந்து பிரித்து எடுத்து அத்துடன் இரண்டு கப் சர்க்கரை மற்றும் 1 தேக்கரண்டி வெனிலா எசன்ஸ் சேர்த்து நுரைக்க அடித்துக் கொள்ளுங்கள். கீரீம் சீஸ் தயார்.
   
 6. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  6,802
  Likes Received:
  509
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  சாக்லேட் லாவா கேக்

  சமைக்க தேவையானவை

  • டார்க் சாக்லேட் – 50கிராம்
  • மைதா -20 கிராம்
  • வெண்ணெய் -80 கிராம்
  • பொடித்த சர்க்கரை -90 கிராம்
  • முட்டை -2முழுதாக +1மஞ்சள் கரு
  • உப்பு -ஒரு சிட்டிகை
  • கோகோ பவுடர் -10 கிராம்
  • வெணிலா எஸ்ஸன்ஸ் -1/2 தேக்கரண்டி

  உணவு செய்முறை : சாக்லேட் லாவா கேக்

  • Step 1.

   முதலில் ஒரு பாத்திரத்தில் சிறிது தண்ணீர் ஊற்றி சூடு பண்ணவும். தண்ணீர் மேல் படாமல் ஒரு பாத்திரம் வைத்து அதனுள் சாக்லேட் போட்டு உருக விடவும். உருகியதும் அதனோடு வெண்ணெய் போட்டு உருகியதும் ஆறுவதற்கு தனியே எடுத்து வைக்கவும்.
  • Step 2.

   வேறொரு பாத்திரத்தில் முட்டை, வெணிலா எசன்ஸ், பொடித்த சர்க்கரை போட்டு 10 நிமிடங்களுக்கு எலெக்ட்ரிக் பீட்டர் கொண்டு அடிக்கவும்.
  • Step 3.

   அதன் பின் ஆறிய சாக்லேட் கலவையை ஊற்றி மிகக் குறைந்த வேகத்தில் அடிக்கவும்.
  • Step 4.

   பின்பு மைதா, கோகோ, உப்பு சேர்த்து மரக் கரண்டி கொண்டு நன்கு கலக்கவும். பேக் செய்வதற்கு உகந்த நான்கு கிண்ணம் எடுத்துக்கொண்டு அதில் வெண்ணெய் தடவிக் கொள்ளவும். அதன் மேல் நன்கு படுமாறு கோகோ பவுடர் கொண்டு தூவவும்.
  • Step 5.

   அதற்குப் பிறகு கிண்ணத்தில் ரெடி செய்து வைத்த கலவையை ஊற்றி ஓவனை 180 டிகிரி செல்சியஸில் 20 நிமிடத்திற்கு பேக் செய்து எடுக்கவும். சுவையான சாக்லேட் லாவா கேக் தயார்.
   
 7. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  6,802
  Likes Received:
  509
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  ஸ்ட்ராபெர்ரி சீஸ் கேக்

  சமைக்க தேவையானவை

  • மேரி பிஸ்கெட் - 5,
  • நறுக்கிய ஃப்ரெஷ் ஸ்ட்ராபெர்ரி - 1/3 கப்,
  • ஃப்ரெஷ் க்ரீம் - 1/2 கப்,
  • உருக்கிய வெண்ணெய் - 3 டீஸ்பூன்
  • கெட்டித் தயிர் - 3/4 கப்
  • சர்க்கரை - 3 டேபிள்ஸ்பூன்
  • சைனா கிராஸ் - 1 கிராம்,
  • தண்ணீர் - 1/4 கப்.

  உணவு செய்முறை : ஸ்ட்ராபெர்ரி சீஸ் கேக்

  • Step 1.

   முதலில் தயிரை ஒரு மெல்லிய துணியில் கட்டி 1 மணி நேரம் வடிகட்டி 1/2 கப் தயிராக மாற்றவும். பிஸ்கெட்களை கொர கொரப்பாக அரைத்துக் கொள்ளவும்
  • Step 2.

   உருக்கிய வெண்ணெயில் பிஸ்கெட்டை சேர்த்துக் கலக்கவும். இந்தக் கலவை சிறிது ஈரப்பதமாக இருக்கும். இதை ஒரு டம்ளரின் அடி பாகத்தில் போட்டு ஸ்பூனால் நன்கு அழுத்தவும். எனவே இது சமமாக மாறும். இது முதல் லேயர். இதை குளிர்சாதனப் பெட்டியில்மற்ற லேயர் ரெடியாகும் வரைவைத்திருக்கவும்
  • Step 3.

   ஸ்ட்ராபெர்ரி பழங்களை வெட்டி சர்க்கரையுடன் கலந்து வைத்துக் கொள்ளவும். இந்தக் கலவையை ஒரு பாத்திரத்தில் லேசாக சுட வைத்து இறக்கி வைக்கவும்.
  • Step 4.

   ஒரு பாத்திரத்தில் வடிகட்டிய தயிர், க்ரீம் இரண்டையும் கலக்கவும். இத்துடன் ஸ்ட்ராபெர்ரி துண்டுகளை கலந்து கொள்ளவும். ஒரு கடாயில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து, சைனா கிராஸ் கலந்து கொள்ளவும். சைனா கிராஸ் முழுவதும் தண்ணீருடன் கலந்து திரவ நிலையை அடையும் வரை கொதிக்க விடவும்.
  • Step 5.

   இந்தக் கலவையை வடி கட்டிய தயிர், க்ரீம் கலவையில் சேர்க்கவும். வேகமாகக் கலக்கவும். டம்ளரில் இதை இரண்டாவது லேயர் ஆக சேர்க்கவும்.
  • Step 6.

   இதை 5 மணி நேரம் அல்லது இரவு முழுவதும் குளிர வைக்கவும். இதற்கு பிறகு ஸ்ட்ராபெர்ரி துண்டுகளை மேலே சேர்க்கவும். சுவையான ஸ்ட்ராபெர்ரி -சீஸ் கேக் தயார்.
   
 8. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  6,802
  Likes Received:
  509
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  ஆரஞ்சு பழ கேக்

  சமைக்க தேவையானவை

  • மைதா - 11/4 கப்
  • சர்க்கரை- 3/4 கப்
  • பால்- 1/4 கப்
  • ஆரஞ்சு பழம்- 1
  • வெண்ணெய்- 4 டேபிள் ஸ்பூன்
  • பேக்கிங் பவுடர்- 2 டீஸ் ஸ்பூன்
  • முட்டை- 2

  உணவு செய்முறை : ஆரஞ்சு பழ கேக்

  • Step 1.

   முதலில் ஜல்லடையில் மாவில் பேக்கிங் பவுடரைப் போட்டு பல முறை ஜலித்து எடுக்கவும். ஆரஞ்சு பழத்தின் மேல் தோலை மட்டும் துருவிக் கொள்ளவும்.
  • Step 2.

   பின் மிக்ஸியில் மாவைத் தவிர்த்து மற்றப் பொருட்களை போட்டு நன்கு கலக்கவும்.பின்பு அதில் மாவையும் சிறிது சிறிதாக போட்டு கலக்கும். பிரெட் பேனில் எண்ணெயைத் தடவி மாவுக் கலவையைக் பரவலாக கொட்டவும்
  • Step 3.

   பின்பு முற்சூடு செய்த அவெனில் 350 F ல் சுமார் 40 நிமிடங்கள் வைத்திருந்து வெளியில் எடுத்து ஆறவிடவும். சுவையான ஆரஞ்சு பழ கேக் தயார்.
   
 9. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  6,802
  Likes Received:
  509
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  ஸ்வீட் பட்டர் கேக்

  சமைக்க தேவையானவை

  • மைதாமாவு - 500 கிராம்
  • சர்க்கரை - 450 கிராம்
  • பட்டர் - 500 கிராம்
  • முட்டை - 8
  • பிளம்ஸ் - சிறிதளவு
  • வெண்ணிலா - 4 டீஸ்பூன்
  • பேக்கிங் பவுடர் -4 டீஸ்பூன்
  • முந்திரிக்கொட்டை - சிறிதளவு
  .
  உணவு செய்முறை : ஸ்வீட் பட்டர் கேக்


  • Step 1.

   முதலில் மிக்ஸ்சியில் சர்க்கரை, முட்டை ஆகியவற்றை போட்டு கரையும் வரை நன்றாக அடிக்கவேண்டும்.ஒரு வாணலியில் உருக்கியபட்டர் அடித்த சர்க்கரை முட்டை கலவை ஆகியவற்றை போட்டு நன்றாக கேக் அடிக்கும் பீட்டரினால் இருபது நிமிடங்கள் அடிக்கவும்.
  • Step 2.

   தயாரித்த கலவையுடன் மைதாமவு, பேக்கிங் பவுடர் ஆகியவற்றை போட்டு கேக் பீட்டரினால் அடித்து கலக்கவும்.அதனுடன் வனிலா பிளம்ஸ் முந்திரி கொட்டை ஆகியவற்றை போட்டு கலக்கவும்.
  • Step 3.

   அளவான கேக்தட்டில் பட்டர் தடவி அதில் கேக் கலவையை தட்டின் அரை பங்கு உயரத்திற்கு ஊற்றி நன்றாக பரப்பி 250 டிகிரியில் இருபது நிமிடங்கள் அதன் பின்பு 200 டிகிரியில் 25 நிமிடங்கள் பேக் செய்யவும்.தயாராகிய கேக்கை விரும்பியவடிவில் வெட்டி அதனை ஒரு தட்டில் அடுக்கி பரிமாறவும். ஸ்வீட் பட்டர் கேக் தயார்.
   
 10. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  6,802
  Likes Received:
  509
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  உருளைக்கிழங்கு கேக்

  சமைக்க தேவையானவை

  • உருளைக்கிழங்கு - 150 கிராம்
  • அரிசிமாவு - 2 டேபிள்ஸ்பூன்
  • வெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
  • உப்பு - தேவையான அளவு

  உணவு செய்முறை : உருளைக்கிழங்கு கேக்

  • Step 1.

   முதலில் ஒரு பாத்திரத்தில் உருளைக்கிழங்கினை வேகவைத்து தோலுரித்து மசித்துக் கொள்ளவும்.மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்குடன் மாவு, வெண்ணெய் மற்றும் உப்பு கலந்து பிசைந்து கொள்ளவும்
  • Step 2.

   அதனை நீள உருளையாக உருட்டிக் கொள்ளவும். பிறகு அதனை வட்ட வடிவ துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். நெய் தடவிய தவாவில் துண்டுகளை போட்டு வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.அதன்மீது லேசாக வெண்ணெய் தடவி பரிமாறவும்.
   

Share This Page