கேக் வகைகள்/CAKE

Discussion in 'Diwali Sweets' started by NATHIYAMOHANRAJA, Oct 31, 2018.

  1. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    6,170
    Likes Received:
    503
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    ஐஸிங் கேக்

    சமைக்க தேவையானவை

    • ஆப்பிள் - 1/2 கிலோ
    • மைதா - 500 கிராம்
    • வெண்ணெய் - 375 கிராம்
    • ஐஸிங் சர்க்கரை - 200 கிராம்
    • மில்க் மெய்ட் - 50 கிராம்
    • பால் - 50 மிலி
    • சர்க்கரை - 100 கிராம்
    • பட்டைத்தூள் - 5 கிராம்
    • பிரெட் தூள் - 100 கிராம்

    உணவு செய்முறை : ஐஸிங் கேக்

    • Step 1.

      முதலில் ஒரு பாத்திரத்தில் மைதாமாவுடன் வெண்ணெய், சர்க்கரை, மில்க்மெய்ட், பால் அனைத்தையும் கலந்து வைக்கவும். ஆப்பிளை பொடியாக நறுக்கி அதனுடன் சர்க்கரை, பட்டைத்தூள், வெண்ணெய் சேர்த்து ஐந்து நிமிடம் வேக வைக்கவும்
    • Step 2.

      ஆப்பிள் மெதுவாக மாறிவிடும். இதனுடன் பிரெட் தூள் சேர்த்து பிசையவும். அந்தக் கலவையை அரை செமீ தடிமனாகும் வரை உருட்டவும்.வட்டமான ஒரு மோல்டில் வெண்ணெய் தடவி இந்த மாவை வைத்து அதன் மேல் ஆப்பிள் கலவையை வைக்கவும்
    • Step 3.

      இதன் மேல் 10 கிராம் மில்க் மெய்டை பரவலாக சேர்த்து, 180 டிகிரி சென்டிகிரேடில் 25 நிமிடத்துக்கு பேக் செய்யவும்.
     
  2. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    6,170
    Likes Received:
    503
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    கப் கேக்

    சமைக்க தேவையானவை

    • மைதா - 250 கிராம்
    • பேக்கிங் பவுடர் - ஒரு டீஸ்பூன்
    • சர்க்கரை - 200 கிராம்
    • வெண்ணெய் - 100 கிராம் (உருகியது)
    • முட்டை - 2
    • பால் - 120 மில்லிலிட்டர்
    • வெனிலா எசன்ஸ் - ஒரு டீஸ்பூன்
    • அன்சால்டட் பட்டர் - ஒரு கப்
    • பவுடர்ட் சுகர் - 2 கப்
    • துருவிய தேங்காய் - ஒரு கப்
    • ப்ளு பெரி - அலங்கரிக்க

    உணவு செய்முறை : கப் கேக்

    • Step 1.

      முதலில் முட்டையை நன்கு அடித்துக் கொள்ளவும். சல்லடையில் மைதா மற்றும் பேக்கிங் பவுடரை சேர்த்து சலித்துக் கொள்ளவும்.வெண்ணெய், சர்க்கரை, முட்டை, எசன்ஸ் அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு நன்கு நைசாக மிருதுவான பதத்தில் அடித்துக் கொள்ளவும்.
    • Step 2.

      பின் மைதா கலவை கொஞ்சம், பால் கொஞ்சம் என சிறிது சிறிதாக கலவையில் போட்டு பேஸ்ட் பதத்தில் கலக்கிக் கொள்ளவும். கட்டி இல்லாமல் நைசாக இருக்க வேண்டும்.பின் கப் கேக் ட்ரேவில், கப்களை வைத்து மாவினை முக்கால் வாசி வரும் வரை ஊற்றிக் கொள்ளவும்.
    • Step 3.

      350 டிகிரிக்கு முற்சூடு செய்யப்பட அவனில் ஒரு 20 நிமிடம் வைத்து, கேக் பொன்னிறமாக உப்பி வந்ததும் அணைக்கவும்.கேக்கினை நன்றாக ஆற விடவும். க்ரீமையும், தேங்காய் துருவலையும் கலக்கி ஒரு சுகர் கோட்டிங் மட்டும் போட்டு விடவும். சுவையான கப் கேக் ரெடி
    • Step 4.

      இனிப்பு விரும்பிகளுக்கு வெண்ணெயையும், சக்கரையும் நன்கு கலக்கி, கேக்கின் மீது போட்டு, கோகனட் துருவலில் முக்கி எடுத்து ப்ளு பெரிக் கொண்டு அலங்கரிக்கவும்.
     
  3. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    6,170
    Likes Received:
    503
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    காரமல் கேக்

    சமைக்க தேவையானவை

    • கோதுமை மாவு - 170 கிராம்
    • வெண்ணெய் - 115 கிராம்
    • பேகிங் பவுடர் - 2 டீஸ்பூன்
    • பால் - ஒரு டீஸ்பூன்
    • ஜாம் - 30 கிராம்
    • பொடித்த சர்க்கரை - 115 கிராம்
    • பெரிய முட்டை - 2
    • தண்ணீர் - 50 மில்லி
    • சர்க்கரை - 50 கிராம்

    உணவு செய்முறை : காரமல் கேக்

    • Step 1.

      ஒரு பாத்திரத்தில் சர்க்கரை 50 கிராம் எடுத்து போட்டு அடுப்பின் மேல் வைத்து சூடாக்கவும். சர்க்கரை கரைந்து பழுப்பு நிறமாகும்போது .தண்ணீரை விட்டு 5 நிமிடம் வரை கொதிக்க விடவும். பிறகு அடுப்பிலிருந்து இறக்கவும்.
     
  4. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    6,170
    Likes Received:
    503
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    கேரட் கேக்

    சமைக்க தேவையானவை

    • கேரட் துருவியது -2 கப்
    • ரவா -1 கப்
    • மில்க் மெய்ட் 1/4 கப்
    • வெண்ணை 3 ஸ்பூன்
    • உப்பு - சிறு பிஞ்ச்
    • முந்திரி, பாதாம் - அலங்கரிக்க
    • சர்க்கரை - தேவையான அளவு
    • சாக்லேட் - 1
    • முட்டை - 2
    • பசுநெய் - 5 ஸ்பூன்

    உணவு செய்முறை : கேரட் கேக்

    • Step 1.

      முதலில் முட்டையை உடைத்து முட்டையை நன்றாக அடித்துக்கொள்ளவும்அடுத்து வாணலியில் மைதா, ரவா இரண்டையும் போட்டு லேசாக வறுத்துகொண்டு, உப்பு, மில்க்மெய்ட் சேர்த்து நன்றாக கலக்கவும்அதில் வெண்ணை, நெய், சர்க்கரை சேர்த்து அடிக்கவும்
    • Step 2.

      துருவிய கேரட்டை கால் ஸ்பூன் நெய்விட்டு கலந்து, ஓவனில் ஒரு நிமிடம் வைத்து இந்த கலவைகளுடன் சேர்த்து கலக்கவும்.பின் மீதம் உள்ள நெய்யை கேக் ட்ரேயில்விட்டு ஓவனில் 30 நொடிவைத்து சூடாக்கிகொள்ளவும் அதனை கலவையுடன் நன்கு சேரும்படி கலக்கவும்
    • Step 3.

      பின் இந்த கலவையை அதில் ஊற்றவும் முக்கால் பகுதி வரைமட்டும் ஊற்றவும் மீதமிருக்கும் கேரட்டை அதன்மேல் தூவவும் 10 நிமிடம் டைம் பிக்ஸ்செய்து ஓவனில் வைக்கவும்
    • Step 4.

      இதை ஐந்து நிமிடம் கழித்து திறந்து அதன்மேல் வறுத்தோ, வறுக்காமலோமுந்திரி அல்லது பாதாமை அலங்கரித்து, மீண்டும் ஓவனை ஆன் செய்யவும் ரெடியானதும் வெளியில் எடுத்து அதன்மேல் சாக்லேட் துருவிபோடவும்.சூட்டிலேயே கரைந்து விடும்.
     
  5. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    6,170
    Likes Received:
    503
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    மாம்பழ சீஸ் கேக்

    சமைக்க தேவையானவை

    • மேரி பிஸ்கட்ஸ் - 1/2 பாக்கெட்
    • வெண்ணெய் - 10 கிராம்
    • பனீர் - 50 கிராம்
    • தயிர் - 2 டேபிள் ஸ்பூன்
    • மாம்பழத் துண்டுகள் - தேவையான அளவு
    • ஜெலடின் - 1 ஸ்பூன்
    • லெமன் ஜூஸ் - 1 ஸ்பூன்
    • பொடித்த சர்க்கரை - 100 கிராம்
    • மாம்பழச் சாறு - 1/2 கப்

    உணவு செய்முறை : மாம்பழ சீஸ் கேக்

    • Step 1.

      முதலில் மேரி பிஸ்கட்டை உருகிய வெண்ணையுடன் பொடித்து சேர்த்து நன்றாக கிளறவும்.இந்த கலவையை பெரிய பாத்திரத்தில் அடியில் மட்டும் நிரப்பவும்..
    • Step 2.

      ஜெலடினை சுடுநீரில் கரைத்து ஆறியதும் மாம்பழச்சாறு, தயிர், பனீர், லெமன் ஜூஸ், சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் ஒரு சுத்து சுத்தி, அதை ஒரு மோல்டிங் ட்ரேயில் ஊற்றி ஃப்ரீஸரில் வைக்கவும். கலவை சற்றுக் கெட்டியானவுடன் மாம்பழத் துண்டுகளை மேலே தூவி பரிமாறவும்.
     
  6. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    6,170
    Likes Received:
    503
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    மைதா கே‌க்

    சமைக்க தேவையானவை

    • மைதா – 1 கிலோ
    • ரவை - சிறிதளவு
    • சர்க்கரை பவுடர் - 3/4கிலோ
    • சோடா உப்பு - சிறிதளவு
    • டால்டா - 3 ஸ்பூன்
    • பால்பவுடர் - 5 ஸ்பூன்
    • எண்ணெய் - தேவைகேற்ப
    • ஏலக்காய் தூள் - 1 ஸ்பூன்
    • வெண்ணிலா எசன்ஸ் - சிறிதளவு

    உணவு செய்முறை : மைதா கே‌க்

    • Step 1.

      முதலில் சல்லடையில் மைதாவையும் ரவையையும் நன்கு சலித்து வைத்துக் கொள்ளவும். அதில் டால்டா, சோடா உப்பு, அரைத்த சர்க்கரை பவுடர், தண்ணீர், ஏலக்காய் தூள், பாதாம் எசன்ஸ், பால்பவுடர் ஆகியவற்றை சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து வைத்துக் கொள்ளவும்
    • Step 2.

      இதை ஒரு மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும். பின்பு சிறிய உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும். சப்பாத்தி கல்லில் உருண்டைகளை கொஞ்சமாக மைதாமாவை தடவி சப்பாத்தி போல் கொஞ்சம் கனமாக தேய்க்கவும். தேய்த்த சப்பாத்தியை சிறு சிறு துண்டுகளாக கத்தி மூலம் வெட்டிக் கொள்ளவும். வெட்டிய துண்டுகளை தனியே எடுத்து சிறிது நேரம் காயவைத்துக் கொள்ளவும்.
    • Step 3.

      பின்பு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் துண்டுகளை போட்டு பொன்நிறம் வந்தவுடன் எடுத்து பாத்திரத்தில் போடவும். பொரித்த துண்டுகள் ஆறியதும் பரிமாறவும்
     
  7. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    6,170
    Likes Received:
    503
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    ப்ளம் கேக்


    சமைக்க தேவையானவை

    • பச்சரிசி/மைதா - 150 கிராம்
    • சர்க்கரை - 100 கிராம்
    • எண்ணெய் - 125 மிலி
    • மில்க் மேட் - 60 மிலி
    • பால் - 120 மிலி
    • பேக்கிங் பவுடர் - 1 தேக்கரண்டி
    • வெண்ணிலா எசென்ஸ் - 1 தேக்கரண்டி
    • நெய்யில் வறுத்த பப்பாளி - 200 கிராம்

    உணவு செய்முறை : ப்ளம் கேக்

    • Step 1.

      முதலில்Tutti Fruity-ஐ எடுத்துக் கொள்ளவும். அதன் மீது மாவை தூவி அதனை தனியே வைக்கவும். பின்பு மாவை எடுத்து அதனுடன். பேக்கிங் பவுடர் சேர்க்கவும்
    • Step 2.

      பேக்கிங் சோடா சேர்க்கவும். அதனை சலித்து தனியே வைக்கவும். பின்பு எண்ணெய், சர்க்கரை மற்றும் வெண்ணிலாவை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்
    • Step 3.

      அதனை நன்கு கலக்கவும். பின்பு மில்க் மேட் சேர்க்கவும். பால் சேர்க்கவும். நன்கு கலக்கவும். அதனுடன் மாவை சேர்க்கவும். நன்கு கலக்கவும். பின்பு பழக் கலவை (Tutti Fruity) சேர்க்கவும். நன்கு கலக்கவும்
    • Step 4.

      அதனை கேக் பானில் விடவும். பின்பு அதனை மைக்ரோ வேவ் அவனில் பொன்னிறமாகும் வரை வைத்து எடுக்கவும். அதனை வெட்டி பரிமாறவும். 5. டைகர் கேக்.
     
  8. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    6,170
    Likes Received:
    503
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    வாழைபழம் கேக்

    சமைக்க தேவையானவை

    • மைதா மாவு : 250 கிராம்
    • சக்கரைப் பவுடர் : 250 கிராம்
    • வெண்ணெய் : 200 கிராம்
    • வாழைப்பழம் : 250 கிராம்
    • வாழைப்பழ எசன்ஸ் : 1 டீஸ்பூன்
    • வெனிலா எசன்ஸ் : 1/4 டீஸ்பூன்
    • சோடியம் பை கார்பனேட் : 1 டீஸ்பூன்
    • உலர் திராட்சை : 125 கிராம்
    • பேக்கிங் பவுடர் : 1 டீஸ்பூன்
    • ஆப்ப சோடா : 1/2 டீஸ்பூன்
    • கோழி முட்டை : 4

    உணவு செய்முறை : வாழைபழம் கேக்

    • Step 1.

      சல்லடையில் மைதா மாவுடன், பேக்கிங் பவுடர், ஆப்ப சோடா ஆகிய இரண்டையும் சலித்துக் கொள்ளவும்.வாழைப்பழத்தையும் சோடியம் பை கார்பனேட்டையும் சேர்த்துப் பிசைந்து கொள்ள வேண்டும். வெண்ணெயை, சக்கரைப் பவுடருடன் சேர்த்து நன்கு அடித்துக் கொள்ளவும்
    • Step 2.

      முட்டையை உடைத்து ஊற்றி முட்டையை நுரை பொங்க அடிக்க வேண்டும். அடித்த முட்டையுடன், வெண்ணெய் கலவையை சேர்க்க வேண்டும்.முட்டை கலவை, வெண்ணெய் கலவை, மைதா மற்றும் பிசைந்து வைத்துள்ள வாழைப்பழம், திராட்சை, முந்திரி, எசன்சுகள் அனைத்தையும் நன்கு பிசைந்து கலவையிட வேண்டும்
    • Step 3.

      ஸ்டீல் ட்ரேயில் பட்டர் பேப்பர் போட்டு, வெண்ணெய் தடவி, கலவையை ஊற்றி அடுப்பில், சுமார் ஒரு மணி நேரம் மிதமான தீயில் வெந்து எடுக்கவும். சுவையான வாழைப்பழ கேக் தயார்
     

Share This Page