கேபிள் TV கட்டணம் பற்றிய உண்மை

Discussion in 'Memes and Funny Videos - Daily Updates' started by NATHIYAMOHANRAJA, Dec 31, 2018.

 1. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  5,805
  Likes Received:
  489
  Trophy Points:
  83
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  கேபிள் TV கட்டணம்
  பற்றிய உண்மை
  தயவுசெய்து கட்டண சேனல்களுக்கு யாரும் செல்ல வேண்டாம் பின்னர் அவர்களே நம் வழிக்கு இலவச சேனல்களாக மாறுவார்கள் இல்லையென்றால் நாம் மாறாமல் அவர்களை மாற்றுவோம் கோடிகணக்கில் விளம்பரத்தில் கொள்ளை போதாமல் நாம் அழவேண்டுமா? எனவே ஒற்றுமையே பலம் யாருமே கட்டண சேனல் பார்காவிட்டால் விளம்பர நிறுவனம் தன் விளம்பரத்தை நிறுத்திவிட்டு இலவச சேனல்களுக்கு விளம்பரதாரர் திரும்புவர் பின்னர் கட்டண சேனல்களும் நம் பக்கம் திரும்பியே ஆகவேண்டும் ஒற்றுமையே பலம்
  தொலைக்காட்சி சேனல்களுக்கு நாம் அடிமையா..
  நமக்கு தொலைக்காட்சி சேனல்கள் அடிமையா என முடிவு செய்யும் நேரம் இது...
  TRAIன் புதிய அறிவிப்பின்படி டிசம்பர் 29 முதல் *கேபிள் டிவி*,
  *DTH*,
  *இன்டர்நெட் டிவி*
  என அனைத்திலும் உங்களுக்கு தேவையான சேனல்களுக்கு மட்டும் கட்டணம் செலுத்தினால் போதும்.
  கேட்கும்போதே உங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும்.ஆகா அருமை என்று...
  ஆனால் இந்த அறிவிப்பின் முழு விவரத்தை கேட்டால் *அட போங்கடா நீங்களும் உங்கள் அறிவிப்பும்* என்று சொல்லத் தோன்றும்..
  இதோ விவரம்...
  இதன்படி உங்களுக்கு 100 சேனல்கள் இலவசமாக கிடைக்கும்.
  நீங்கள் இலவச 100 சேனல்கள் போதும் என்றாலும்..
  அடிப்படைக் கட்டணம் என்று ஒன்று மாதாமாதம் செலுத்த வேண்டும்.
  அதாவது அதற்கு பெயர் *நெட்வொர்க் கெபாசிட்டி சார்ஜ்*
  விலை: *₹153.40*(18% GST உட்பட)
  இது கிட்டத்தட்ட நாம் இப்பொழுது செலுத்திக் கொண்டிருக்கும் கட்டணத்தின் அளவு.
  ஆனால் இதில் இலவசம்+கட்டணம் என அனைத்து சேனல்களுக்கும் கிடைக்கிறது.
  ஆனால் தற்பொழுது இந்த ₹153.60 க்கு அவர்கள் கொடுக்கும் 100 இலவச சேனல்களில் நமக்கு கிடைக்கும் *தமிழ் சேனல்கள்* இவை:
  1.ஏஞ்சல்
  2.கேப்டன்
  3.பொதிகை
  4.இசையருவி
  5.கலைஞர்
  6.கலைஞர் செய்திகள்
  7.மக்கள்
  8.முரசு
  9.நியூஸ்7
  10.பாலிமர்
  11.தந்தி
  12.புதிய தலைமுறை
  13.புது யுகம்
  14.சிரிப்பொலி
  15.சங்கரா டிவி
  16.வசந்த் டிவி
  + பிற மொழி சேனல்கள்
  *எனக்கு இந்த சேனல்களே போதும் என்றால் அவர்கள் உங்களுக்கு அடிமை..*
  இது எனக்கு பத்தாது
  என்றால் நீங்கள் அவர்களுக்கு அடிமை.
  இதற்கு மேல் நீங்கள் சேனல்கள் விரும்பினால் உங்களை போதையில் மயக்கி வைத்திருக்கும் *அந்த சேனல்கள் எல்லாம் இப்போது கட்டண சேனல்களாக மாறி விட்டன.*
  (ஒரு நாளைக்கு கோடிகளில் புரளும் அவர்களுக்கு விளம்பரதாரர்கள் மூலம் வரும் வருமானம் போதவில்லை.
  எனவே நீங்களும் பணம் தந்து உதவ வேண்டும்).
  இவர்களை நீங்கள் கண்டு கொள்ளாமல் இருந்தால்(கொஞ்சம் கஷ்டம்தான்..) அவர்களும் இலவச சேனல்களாக மாறுவார்கள்.
  இல்லையென்றால் நீங்கள்தான் அவர்களின் அடிமை.
   

Share This Page