கொசுக்கடியினால் எய்ட்ஸ் பரவுமா ?

Discussion in 'Health care' started by saravanakumari, Mar 16, 2018.

 1. saravanakumari

  saravanakumari Administrator Staff Member Manager Manager Manager

  Joined:
  Nov 12, 2014
  Messages:
  2,261
  Likes Received:
  1,030
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  home maker
  Location:
  villupuram
  சிரிஞ்சில் உறிஞ்சபட்ட இரத்தம் அந்த குழாய்ல அப்படியே இருக்கும். அது மறுபடி யார் உடம்பிலாவது செலுத்தினால் அப்படியே உள்ளே போய் நோய் தாக்கும். இங்க கவனிக்க வேண்டியது இரண்டு பேரும் மனிதர்கள்.

  1) HIV அதன் பெயரில் உள்ளது போலவே மனிதனை தாக்கும் ஒரு வைரஸ். பிற இரத்தம் உறிஞ்சும் கொசு, மூட்டைபூச்சி, அட்டை வகையறாக்களில் அவை உயிர் வாழ்வது இல்லை.

  2) பொதுவாக கொசு மூலம் பரவும் மலேரியா, டெங்கு ஆகிய கிருமிகள் கொசுவின் வயிற்றுக்குள் சென்று செரிமானம் ஆகி, பின் பெருகி, அதன் பின் கொசுவின் எச்சில் சுரப்பிகளில் படிந்து அதன் மூலமாக இன்னொரு மனிதனை கடிக்கும் போது பரவுகிறது. நீங்கள் நினைக்கிற மாதிரி கொசு உறிஞ்சும் இரத்தம், சிரிஞ்சினைப் போல குழாயில் இருந்து நேரடியாக மறுபடி வேறு உடம்புக்குள் சென்று பாதிப்பதில்லை. கொசு HIV பாதிக்கப்பட்ட இரத்தத்தை உறிந்து செரிமானம் செய்ததும், அதன் உடலில் HIV கிருமி வாழாது என்பதால் அது கொசுவின் எச்சில் சுரப்பிக்கு வருவதற்கு வாய்ப்பில்லை. அதனால் பிற மனிதர்க்கு பரவவும் வாய்ப்பில்லை.

  1988'ல் கிட்டத்தட்ட 10,000 நபர்கள் மேல் செய்த ஆராய்ச்சியில் கொசு மூலமாக பரவ வாய்ப்பில்லை என்பதை கண்டுபிடித்தார்கள். 1996'ல் நீங்கள் நினைப்பது போல கொசுவின் உறிஞ்சு குழாயில் படியும் இரத்தம் மூலம் ஒரு வேளை பரவுவதாக இருந்தால் 10 மில்லியன் கொசுக்கள் HIV கொண்டிருக்கும் ஒருவரை கடித்து, அப்படியே கிளம்பி வந்து உங்களை கடித்தால் வாய்ப்பு இருக்கிறது என கணக்கிட்டார்கள்.

  ஒருவேளை உங்களை 10 மில்லியன் கொசுக்கள் இரண்டு நாட்களுக்குள் கடித்திருந்தால் 3 மாதத்திற்கு பின் HIV டெஸ்ட் செய்து கொள்ளவும்
   
  Athvika and jayalashmi like this.
 2. jayalashmi

  jayalashmi Active Member

  Joined:
  Nov 12, 2017
  Messages:
  198
  Likes Received:
  169
  Trophy Points:
  43
  Gender:
  Female
  இப்படி பட்ட சந்தேககம் நிறைய பேருக்கு உண்டு . தெளிவு படுத்தியமைக்கு நன்றி
   
 3. Athvika

  Athvika Member

  Joined:
  Feb 14, 2018
  Messages:
  61
  Likes Received:
  27
  Trophy Points:
  8
  Gender:
  Female
  useful
  thanks
   

Share This Page