கொரோனா வைரஸ் updates

Discussion in 'Memes and Funny Videos - Daily Updates' started by NATHIYAMOHANRAJA, Mar 16, 2020.

 1. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  8,130
  Likes Received:
  525
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  ஈரான் மதகுரு கொரோனாவால் மரணம் : சோகத்தில் மக்கள்!


  ஈரானில் பரவியுள்ள கொரோனா வைரஸால் மதகுரு ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


  சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 150க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. முக்கியமாக ஈரான், இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் பெரும் உயிர்பலியை சந்தித்துள்ளன.

  ஈரானில் 13,938 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 724 பேர் இறந்துள்ள நிலையில் அவர்களில் ஈரான் மதகுரு ஒருவரும் கொரோனாவுக்கு பலியாகியுள்ளார்.

  ஈரான் சட்டமன்ற நிபுணர் குழுவின் உறுப்பினராக பதவி வகித்த அயதுல்லா ஹஷேம் பதாய், ஈரானின் உச்ச தலைவரை தீர்மானிக்கும் உயர் மதக்குருக்களில் ஒருவர் ஆவார். அவரது இறப்பு ஈரானை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
   
 2. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  8,130
  Likes Received:
  525
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  சென்னை எஞ்ஜீனியருக்கு கொரோனா?? – தீவிர சிகிச்சை!


  பிரேசிலில் இருந்து சென்னை வந்த சாஃப்ட்வேர் எஞ்ஜீனியருக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சென்னை சர்வதேச விமான நிலையத்தில் வரும் பயணிகள் அனைவரும் மருத்துவ பரிசோதனைக்கு பிறகே வெளியே செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள்.

  இந்நிலையில் இன்று பிரேசிலில் இருந்து துபாய் வழியாக சென்னை வந்த சாஃப்ட்வேர் எஞ்ஜீனியர் ஒருவருக்கு கொரோனா அறிகுறிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உடனடியாக அவர் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

  ரத்த மாதிரிகளின் முடிவிற்கு பிறகே அவருக்கு கொரோனா இருக்கிறதா என்பது உறுதிப்படுத்தப்படும். இந்நிலையில் தமிழக எல்லை பகுதிகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவ சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
   
 3. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  8,130
  Likes Received:
  525
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  கொரோனாவை தடுக்க சிறப்பு யாகம்! – திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு!


  நாடு முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் சூழலில் கொரோனாவை தடுக்க சிறப்பு யாகம் செய்யப்போவதாக திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.


  உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் மெல்ல அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்தியாவில் 107 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ள நிலையில் இருவர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் மத்திய, மாநில அரசுகள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

  இந்நிலையில் திருப்பதி தேவஸ்தானத்தில் தரிசனத்திற்கு வருபவர்களை காத்திருப்பு அறையில் வைக்கும் முறை நீக்கப்பட்டுள்ளது. தரிசனத்திற்கு வருபவர்கள் நேரடியாக சென்று தரிசனம் செய்து திரும்ப வசதிகள் செய்யப்பட்டிருப்பதாக தேவஸ்தான அறங்காவலர் சேகர் ரெட்டி தெரிவித்துள்ளார்.

  மேலும் கொரோனா வைரஸால் பாதிப்பு ஏற்படாமல் இருக்க சிறப்பு யாகம் நடத்த இருப்பதாகவும், திருப்பதி வருபவர்களுக்கு மருத்துவ சோதனை செய்ய 100க்கும் மேற்பட்ட மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
   
 4. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  8,130
  Likes Received:
  525
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  தமிழக பள்ளிகளுக்கு விடுமுறை: அதிரடியாய் இறங்கிய தமிழக அரசு!

  தமிழக எல்லைப்பகுதிகளில் கொரோனா அறிகுறி தென்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


  சீனாவில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான உயிர்களை பலிகொண்டுள்ளது. தற்போது இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா வைரஸ் பாதிப்பால் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா வைரஸுக்கு தற்போது வரை இந்தியாவில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

  தற்போது கேரளா, கர்நாடகா பகுதிகளில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் தமிழக அரசு பாதுகாப்பு நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது. அதன்படி எல்லைப்புற மாவட்டங்களில் ஷாப்பிங் மால், திரையரங்குகள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

  இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழகம் முழுவதும் எல்கேஜி முதல் 5ம் வகுப்பு வரை அனைத்து பள்ளிகளிலும் விடுமுறை அளிக்க உத்தரவிட்டுள்ளார். கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு 60 கோடி நிதி ஒதுக்கியுள்ள முதல்வர் பொதுமக்கள் அரசின் ஆலோசனைகளை கேட்டு ஒத்துழைப்பு தர வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
   
 5. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  8,130
  Likes Received:
  525
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  கொரோனா எதிரொலி! திரையரங்குகள், வணிக வளாகங்கள் மூடல்!: உஷார் நிலையில் தமிழகம்!

  கொரோனா அச்சுறுத்தல் இந்தியா முழுவதும் அதிகரித்துள்ள சூழலில் தமிழக எல்லைகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.  சீனாவில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான உயிர்களை பலிகொண்டுள்ளது. தற்போது இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா வைரஸ் பாதிப்பால் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா வைரஸுக்கு தற்போது வரை இந்தியாவில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

  முக்கியமாக தமிழக எல்லை பகுதிகளான கர்நாடகா, கேரளா, தெலுங்கானா பகுதிகள் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. இதனால் தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள 60 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி உத்தரவிட்டுள்ளார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

  மேலும் தமிழகத்தின் பிற மாநில எல்லை மாவட்டங்களான கன்னியாக்குமரி, திருநெல்வேலி, திருவள்ளூர், வேலூர், கிருஷ்ணகிரி, சேலம், தென்காசி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஷாப்பிங் மால்கள், திரையரங்குகளை மூட சொல்லி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

  தமிழகத்தின் எல்லைப்பகுதிகளில் விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் மூலம் தமிழகம் ஒரு பாதுகாப்பு வளையத்திற்கு உட்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எல்லைப்பகுதிகளில் வரும் போக்குவரத்து வாகனங்கள் தீவிர கண்காணிப்பிற்கு பிறகே உள்ள அனுமதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
   
 6. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  8,130
  Likes Received:
  525
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  கேரளா நபருடன் வந்த 47 தமிழர்கள்: கொரோனா அபாயம்!

  பஹ்ரைனிலிருந்து கேரளா வந்த நபருக்கு கொரோனா கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் அவரோடு 47 தமிழர்களும் பயணித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  பஹ்ரைனிலிருந்து கேரளா வந்த விமானத்தில் பயணித்த கேரளாவை சேர்ந்த நபர் ஒருவருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அடஹி தொடர்ந்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார். இந்நிலையில் அவர் பயணித்த விமானத்தில் அவரோடு 47 தமிழர்கள் பயணித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

  அவர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்குமோ என்ற பீதி எழுந்துள்ள நிலையில் அவர்களது விவரங்கள் கிடைத்திருப்பதாகவும், அவர்கள் வீடுகளில் இருந்தபடியே கவனிக்கப்படுவார்கள் என்றும் தமிழக பொது சுகாதார இயக்குனர் குழந்தைசாமி தெரிவித்துள்ளார்.

  கொரோனா பாதிப்புகளை தவிர்க்கும் பொருட்டு சென்னைக்கு வரும் 19 சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
   
 7. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  8,130
  Likes Received:
  525
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  ஐபிஎல் போட்டிகளை குறைக்க திட்டம்? – அணி உரிமையாளர்கள் கூட்டத்தில் முடிவு!

  உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு இருப்பதால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஐபிஎல் தொடரை போட்டி எண்ணிக்கையை குறைக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.


  உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இந்தியாவிலும் கொரோனாவால் இருவர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 102 பேருக்கு கொரோனா இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

  மக்கள் ஒரே இடத்தில் அதிகமாக கூடுவதற்கு தடை, வெளிநாடுகளிலிருந்து இந்தியா வர தடை ஆகியவற்றால் ஐபிஎல் போட்டிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஏப்ரல் 15 வரை விசா தடை இருப்பதால் அதற்கு பிறகு ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது.

  ஆனால் ஜூன் முதல் உலகளாவிய கிரிக்கெட் போட்டிகள் தொடங்க இருப்பதால் மே இறுதிக்குள் ஐபிஎல்லை முடிக்க வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது. இதுகுறித்து நேற்று ஐபிஎல் கமிட்டி மற்றும் உரிமையாளர்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் இன்னமும் 2 அல்லது 3 வாரங்கள் பொறுத்திருந்து பார்க்க ஆலோசித்துள்ளதாக தெரிகிறது. சில வாரங்களில் கொரோனா கட்டுக்குள் வந்து பாதிப்பில்லை என்றால் ஐபிஎல் தொடங்குவது குறித்து யோசிக்கலாம் என்றும், ஏப்ரல் 15க்கு பிறகு நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டால் போட்டிகளை குறைப்பது குறித்தும், பார்வையாளர்கள் இன்றி நேரடி ஒளிபரப்பு செய்வது குறித்தும் பேசப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
   
 8. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  8,130
  Likes Received:
  525
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  உலக தலைவர்களையும் விட்டுவைக்காத கொரோனா!

  உலகம் முழுவதும் பல லட்சம் மக்களை பலிக் கொண்டுள்ள கொரோனா உலக தலைவர்களையும் விட்டு வைக்காமல் பரவி வருகிறது.


  கொரோனா வைரஸ் தாக்குதலால் பலியானவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை எட்ட இருக்கிறது. லட்சக்கணக்கான மக்கள் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளனர். பொதுவாக இதுபோன்ற வைரஸ்கள் பரவும்போது சாதாரண மக்கள்தான் அதிக அளவில் பாதிக்கப்படுவர்.

  ஆனால் கொரோனா தொற்று அப்படியில்லாமல் உலக தலைவர்கள் முதற்கொண்டு அனைவரையும் தாக்கி வருகிறது. ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சர், ஈரான் அமைச்சர், ஸ்பெயின் சமத்துவ அமைச்சர் ஆகியோர் கொரொனா பாதிப்புக்கு உள்ளானதை தொடர்ந்து கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவிக்கும் கொரோனா இருப்பது உறுதியானது. தற்போது ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்சஸ் மனைவிக்கும் கொரோனா இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

  மேலும் அதிபர் ட்ரம்ப்புக்கு நடத்தப்பட்ட கொரோனா சோதனையில் அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பது உறுதியானது. ஆனால் கொரோனா பாதிக்கப்பட்ட ஆஸ்திரேலிய அமைச்சருடன் சந்திப்பு நிகழ்த்தியதால் ட்ரம்ப் மகள் இவான்கா தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்றாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
   
 9. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  8,130
  Likes Received:
  525
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  இறந்தவர் உடல் மூலம் கொரோனா வைரஸ் பரவுமா ? எய்ம்ஸ் மருத்துவர்கள் விளக்கம்!

  இறந்தவர் உடல் மூலம் கொரோனா வைரஸ் பரவுமா ? எய்ம்ஸ் மருத்துவர்கள் விளக்கம்!

  கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் சடலம் மூலம் கொரோனா பரவாது என டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் ரந்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.

  இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது :

  இறந்தவர்களின் சடலம் மூலம் கொரோனா பரவுவது தும்மல் இருமல் போன்றவற்றால் மட்டுமே கொரொனா பரவும்.

  கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் உடலை தகனம் செய்வதால் எந்த பிரச்சனையும் ஏற்படாது என தெரிவித்துள்ளார்.
   
 10. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  8,130
  Likes Received:
  525
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  கொரோனா வைரஸ் பாதித்த 5 பேர் தப்பி ஓட்டம் !

  கொரோனா வைரஸ் பாதிப்பு: 5 பேர் தப்பி ஓட்டம்
  கொரோனா வைரஸுக்கு எதிராக உறுதியுடன் கொரோனா தொற்றுக்கு மேற்கு டெல்லியை சேர்ந்த 68 வயது பெண்மணி ஒருவர் பலியாகியுள்ளார். இந்நிலையில், கொரொனா வைரஸ் பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்பட்ட 5 பேர் நாக்பூர் மருத்துவமனையில் இருந்து தப்பிச் சென்றனர்.

  உலகளவில் 123 நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை 1,33,500 ஆக உயர்ந்துள்ளதாகவும், 5000 பேர் இதுவரை பலியாகி இருப்பதாகவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

  இந்நிலையில், இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 82 ஆக உயர்ந்திருப்பதாக மத்திய சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

  மேலும், கொரோனா தொற்றுக்கு மேற்கு டெல்லியை சேர்ந்த 68 வயது பெண்மணி ( ஆர் எம் எஸ் மருத்துவமனையில் ) ஒருவர் பலியாகியுள்ளார். இந்தியாவில் பதிவாகும் இரண்டாவது கொரோனா மரணம் இதுவாகும். இதற்கு முன்னர் கர்நாடகாவை சேர்ந்த முதியவர் ஒருவர் மரணமடைந்தார்.

  இந்தியாவில்
  நேற்று மாலை வரை கொரோனாவைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 82 ஆக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

  கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்பட்ட 5 பேர் நாக்பூர் மருத்துவமனையில் இருந்து தப்பிச் சென்றனர்.

  கொரோனா வைரஸ் பாதிக்கும் அபாயத்தால்,
  மும்பை, தானே, நவி மும்பை, புனே, பிம்ப்ரி சின்ச்வாட், நாக்பூர், நகரங்களில் உள்ள சினிமா தியேட்டர்கள்,ஆடிட்டோரியங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள், நீச்சல் குளங்களை மூடும்படி மராட்டிய அரசு உத்தரவிட்டுள்ளது.

  இந்நிலையில், நாக்பூர் நகரில் உள்ள மருத்துவமனையில் இருந்து கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்பட்ட 5 பேர் தப்பி சென்றனர். பின்னர் போலீஸாரால் அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டனர்.

  மேலும் ,நாக்பூரில் பயோ பொது மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் இருந்து 5 பேர் தப்பி சென்றுள்ளனர். இதில், ஒருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளதாகவும் மற்ற 4 பேரின் அறிக்கைகள் வரவில்லை என
  போலீஸார் தெரிவித்துள்ளனர்.
   

Share This Page