கொரோனா வைரஸ் updates

Discussion in 'Memes and Funny Videos - Daily Updates' started by NATHIYAMOHANRAJA, Mar 16, 2020.

 1. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  8,130
  Likes Received:
  525
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  கொரோனா வைரஸ்: இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 31-ஆக அதிகரிப்பு

  இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டோரின் எண்ணிக்கை 31-ஆக அதிகரித்துள்ளது.

  டெல்லியில் உள்ள உத்தம் நகர் பகுதியில் வசிக்கும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் சிறப்பு செயலாளர் சஞ்சீவ குமார் தெரிவித்துள்ளதாக ஏஎன்ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது. இவர் தாய்லாந்து மற்றும் மலேசியாவுக்கு அண்மையில் பயணம் மேற்கொண்டுள்ளார். இதன் மூலம் இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 31-ஆக உயர்ந்துள்ளது.

  சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வு அமைச்சகம் வெளியிட்டு அறிக்கையில், கொரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் வரும்வரை, அதிக அளவில் மக்கள் கூடும் கூட்டங்களை தவிர்க்க வேண்டும் அல்லது ஒத்திவைக்கலாம் என்று அறிவுறுத்துவதாக குறிப்பிட்டுள்ளது. இது போன்ற கூட்டங்கள் நடக்கும்பட்சத்தில், இம்மாதிரியான கூட்ட ஏற்பாட்டாளர்களுக்கு எம்மாதிரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டும் என்பது குறித்த ஆலோசனைகளை அரசு வழங்கவேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

  சென்னை விமான நிலையத்தில் கொரோனா பாதிப்பு இருப்பவர்கள் கண்டறியப்பட்டால் உடனடி சிகிச்சை அளிக்க பிரத்தியேக ஆம்புலன்ஸ் வாகனம் நிறுத்தப்பட்டுள்ளது என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
  சென்னை விமான நிலையத்தில், 100 நபர்கள் கொண்ட மருத்துவக் குழுவை அமைத்து தினமும் 57 விமானங்களில் வரும் பயணிகளிடம் கொரோனா தொற்று உள்ளதா என சோதனை செய்யப்படுவதாக தெரிவித்தார்.

  சீனா மட்டுமல்லாது, இரான், இத்தாலி என கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள பல நாடுகளில் இருந்து தினமும் சுமார் 8,500 நபர்கள் சென்னை வருகிறார்கள் என்பதால், சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.


  சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், ''கொரோனா தொற்று ஏற்பட்ட நபரை கொண்டுசெல்லும் ஆம்புலன்ஸ் வாகனத்தை முழுவதுமாக சுத்திகரிப்பு (ஸ்டெர்லைஸ்) செய்துதான் அடுத்தமுறை பயன்படுத்தமுடியும். இதனால் பிரத்தியேக ஆம்புலன்ஸ் ஒன்றை தயாராக வைத்துள்ளோம். விமான நிலையத்தில் இதுவரை சுமார் 1,00,111 நபர்களுக்கு சோதனை செய்துள்ளோம். அதில் 1,243 நபர்களை நேரடியாக சோதித்து, பின்னர் அவர்கள் வீடுகளுக்குச் சென்றாலும், தொடர்ந்து அவர்களை கண்காணித்தோம். தற்போதுவரை யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்பதை உறுதிபடுத்தியுள்ளோம். 54 நபர்களின் சளி மற்றும் ரத்த மாதிரிகளை எடுத்து சோதனை செய்தோம். யாருக்கும் பாதிப்பு இல்லை,'' என்றார்.

  கொரோனா பற்றிய விழிப்புணர்வு அதிகம் தேவை என்றும் வதந்திகள் பரவுவது கட்டுப்படுத்தப்படவேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். ''சீனாவில் 100 பேருக்கு பாதிப்பு இருந்தால் இரண்டு பேர் மரணம் அடைகிறார்கள் என சீனா அரசின் சுகாதார துறை தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் 100 சதவீதத்தில் இறந்தவர்கள் இரண்டு சதவீதம். அதனால், கொரோனா பாதிப்பு குறித்து அச்சம் கொள்ளவேண்டாம். அதேநேரம், அதிக விழிப்புணர்வோடு இருக்கவேண்டும். தமிழகத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், வணிக வளாகங்கள், கல்யாண மண்டபங்கள் என மக்கள் அதிக எண்ணிக்கையில் கூடும் இடங்களில் சுகாதாரமாக இருப்பது பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன,'' என்கிறார் அமைச்சர்.''கை கழுவுவது, கைகளை தூய்மையாக வைத்திருக்கவேண்டும் என்பதை அறிவுறுத்துகிறோம்.

  மூன்று அறிகுறிகளை பார்க்கவேண்டும். தொடர் இருமல், காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் இருந்தால், உடனடியாக அரசு மருத்துவமனைக்கு செல்லவேண்டும். தனியார் மருத்துவமனைகளும் கொரோனா வார்டு ஒன்றை அமைக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளோம்,'' என்றும் அவர் தெரிவித்தார்.

  தமிழகத்தில், மருத்துவர்களுக்கு பாதுகாப்பு உடைகள் தேவையான எண்ணிக்கையில் இருப்பு உள்ளது என்றும் பாதிப்பை தடுக்க முககவசம் போதுமான அளவில் உள்ளன என்றும் தெரிவித்தார். தமிழக அரசின் இலவச மருத்துவ உதவி எண் 104-இல் தினமும் சுமார் 100 நபர்கள் கொரோனா பற்றிய சந்தேகங்களை கேட்டு தெளிவுபடுத்திக்கொள்கின்றனர் என்றார்.

  கொரோனா பாதிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், வதந்திகளை தடுக்கவும் மதுரைமாவட்ட காவல்துறையின் முகநூல் பக்கத்தில் மீம்ஸ் வெளியிடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
   
 2. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  8,130
  Likes Received:
  525
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  பூண்டு சாப்பிட்டால் கொரோனா வராதா?! – வதந்திக்கு பதில் அளித்த உலக சுகாதார அமைப்பு!

  உலகம் முழுவதும் கொரோனா தீவிரமாக பரவி வரும் நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்தலாம் என சில பொய்யான செய்திகளும் பரவி வருகின்றன.


  கொரோனா வைரஸை கட்டுப்படுத்தவோ, குணப்படுத்தவோ பல்வேறு முறைகள் இருப்பதாக போலி தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வருவதாக கூறியுள்ள உலக சுகாதார நிறுவனம். அந்த போலி செய்திகள் குறித்த விளக்கங்களையும் அளித்துள்ளது.

  சீனாவிலிருந்து வரும் பொருட்கள் மூலம் கொரோனா பரவாது. ஹெர் ட்ரையர் போன்றவற்றை பயன்படுத்தினால் கொரோனா அழியாது. ஆல்கஹால் சேர்க்கப்பட்ட ஹேண்ட்வாஷ் திரவங்களை பயன்படுத்தலாம். பூண்டு சாப்பிடுவதால் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். ஆனால் கொரோனா வராமல் இருக்கும் என்று நிரூபிக்கப்படவில்லை.
  [​IMG]

  நல்லெண்ணெய் தடவினால் கொரோனா பரவாது என்பது பொய். வீட்டு செல்லப்பிராணிகளிடம் இருந்து கொரோனா பரவாது. இருப்பினும் கைகளை அடிக்கடி சுத்தம் செய்து கொள்வது நல்லது மற்றும் நிமோனியா மருந்துகள் கொரோனா வைரஸிலிருந்து காப்பாற்றாது என்று பெரும் விளக்கங்களை வெளியிட்டுள்ளனர்.
   
 3. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  8,130
  Likes Received:
  525
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  இத்தாலியில் கொரோனா பலி 109 ஆக உயர்வு..

  இத்தாலி கொரோனா வைஸால் பலியானோரின் எண்ணிக்கை 109 ஆக உயர்ந்துள்ளது.


  சீனாவைத் தொடர்ந்து 50 க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியுள்ளது. சீனாவில் மட்டுமே 3000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் தென் கொரியா, ஈரான், உள்ளிட்ட நாடுகளில் உயிரிழப்புகள் அதிகமாகி வருகிறது.

  இதனிடையே ஐரோப்பா நாடான இத்தாலி நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 109 ஆக உயர்ந்துள்ளது. மேலும் அந்நாட்டில் 3,089 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக இத்தாலியின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

  இதனைத் தொடர்ந்து இத்தாலியில் உள்ள அனைத்து பள்ளிகளையும் வரும் 15 ஆம் தேதி வரை மூட அந்நாட்டுக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
   
 4. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  8,130
  Likes Received:
  525
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  ஒரே நாளில் 19 பேருக்கு கொரோனா: இந்தியாவில் 415ஆக உயர்வு

  ஒரே நாளில் 19 பேருக்கு கொரோனா
  உலகம் முழுவதும் கொரோனா வைரசுக்கு ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு வந்தாலும் இந்தியாவில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வரை பத்துக்கும் குறைவானவர்களுக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது படிப்படியாக இந்த எண்ணிக்கை உயர்ந்து இன்று இந்தியாவில் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 415ஆக உயர்ந்துள்ளது. இதனை மத்திய சுகாதாரத்துறை அதிகாரபூர்வமாக அறிவித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
  இதில் ஒரு அதிர்ச்சி செய்தியாக இன்று ஒரே நாளில் மட்டும் 19 பேருக்கு பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது மேலும் 18,383 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது

  இந்தியாவில் சுய கட்டுப்பாடு என்பது சுத்தமாக இல்லை என்பதால் கொரோனாவால் பாதிக்கும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் இன்னும் இரண்டு வாரங்களுக்கு மக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் முடங்கி கிடந்தால் மட்டுமே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் என்றும் இல்லையெனில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக வாய்ப்பிருப்பதாகவும் மருத்துவர்கள் எச்சரித்து வருகின்றனர்

  கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிக்கும் வரை மக்கள் சுயகட்டுப்பாடு இருக்க வேண்டும் என்றும் அனைவரும் வீடுகளிலேயே இருப்பதுதான் நல்லது என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்
   
 5. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  8,130
  Likes Received:
  525
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  என்ன செய்ய சொன்னா என்ன செஞ்சிருக்கீங்க? – பிரதமர் மோடி வேதனை!

  இந்திய மக்கள் ஊரடங்கை சரியாக பின்பற்றவில்லை என பிரதமர் மோடி வருத்தம் தெரிவித்துள்ளார்.


  நாடு முழுவதும் கொரோனா வேகமாக பரவுவதை கட்டுப்படுத்தும் நோக்கில் முன்னோட்டமாக ஒருநாள் மக்கள் ஊரடங்கை பிரதமர் மோடி அறிவித்திருந்தார். மாநில அரசுகளின் ஒத்துழைப்போடு நடைபெற்ற இந்த ஊரடங்கில் நாள் முழுவதும் மக்கள் வீடுகளுக்குள்ளேயே இருந்ததால் சாலைகள் வெறிச்சோடி இருந்தன.

  ஆனால் மாலை நிலைமை அப்படியே தலைகீழாக மாறிவிட்டது. அவ்வளவு நேரம் அமைதியாக வீட்டிற்குள் இருந்தவர்கள் மருத்துவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறோம் பேர்வழி என வெளியேறி கூடி கும்மாளம் போட்டனர். மக்கள் கூடுதலை தவிர்ப்பதற்காகதான் இந்த ஊரடங்கே பிறப்பிக்கப்பட்டது என்பதை பலர் சரியாக உள்வாங்கி கொள்ளவில்லை.

  இதுகுறித்து வருத்தம் தெரிவித்துள்ள பிரதமர் மோடி ”நிறைய மக்களுக்கு ஊரடங்கு குறித்த சரியான புரிதல் இல்லை. தயவு செய்து அரசின் பரிந்துரைகளை பின்பற்றி உங்களையும், உங்கள் குடும்பத்தையும் தற்காத்து கொள்ளுங்கள். தயவுசெய்து மாநில அரசுகளின் அறிவுரைகளை பின்பற்றுங்கள்” என்று கூறியுள்ளார்.
   
 6. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  8,130
  Likes Received:
  525
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  மருத்துவமனையிலும் அராஜகம் செய்யும் கனிகா கபூர் – மருத்துவர்கள் அதிருப்தி !

  கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாடகி கனிகா கபூர் அங்கு மருத்துவர்களின் பேச்சைக் கேட்காமல் அடம்பிடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

  பிரபல பின்னணிப் பாடகி கனிகா கபூர் சில நாட்களுக்கு முன் லண்டன் சென்றுவிட்டு, கடந்த மார்ச் 15 ஆம் தேதி லக்னோவுக்கு வந்தார்.

  அவருக்கு கொரோனா அறிகுறிகள் இருந்ததால் அவரை 15 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள சொல்லி அறிவுறுத்தப்பட்டது.

  ஆனால் அதை மதிக்காமல்
  லக்னோவில் உள்ள ஒரு பிரபல ஹோட்டலில், நடந்த பார்ட்டியில் ராஜஸ்தான் மாநில முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே மற்றும் அவர் மகனும் நாடாளுமன்ற எம்பியுமான துஷ்யந்த் உள்ளிட்டோருடன் கலந்து கொண்டார். தற்போது கனிகாவுக்கு கொரொனா பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளதை அடுத்து, வசுந்தராராஜே மற்றும் அவரது மகன் ஆகிய இருவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் அந்த பார்ட்டியில் கலந்துகொண்ட துஷ்யந்த் சிங் நாடாளுமன்றத்துக்குச் சென்று வந்ததாலும், குடியரசுத் தலைவர் ஏற்பாடு செய்த விருந்தில் கலந்து கொண்டதாலும்இந்த விவகாரம் மேலும் சிக்கலாகியுள்ளது.

  இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், மருத்துவர்களின் பேச்சைக் கேட்காமல் அடம்பிடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது சம்மந்தமாக சஞ்சய் காந்தி மருத்துவ அறிவியல் மருத்துவமனை இயக்குநர் ஆர்.கே.திமான் ‘மருத்துவமனையில் அவருக்கு சிறப்பான வசதிகள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் அவர் குழந்தைத் தனமாக அடம்பிடிப்பதை நிறுத்திவிட்டு, ஒரு நோயாளியாக நடந்து கொள்ள வேண்டும். அவர் ஒரு ஸ்டார் போல நினைத்துக் கொள்ளக் கூடாது.’ எனக் கூறியுள்ளார்.
   
 7. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  8,130
  Likes Received:
  525
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  இதுக்கு எதுக்குய்யா ஊரடங்கு போடணும்? – அப்செட்டான மருத்துவர்கள்!

  கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த நேற்று மக்கள் ஊரடங்கு செயல்படுத்தப்பட்ட நிலையிம் மாலை 5 மணிக்கு மக்கள் செய்த வேலையால் மருத்துவர்கள் பெரும் வருத்தமடைந்துள்ளனர்.


  உலகம் முழுவதும் பரவி உயிர்களை பலி கொண்டுள்ள கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவர இந்தியா தீவிரமாக முயற்சித்து வருகிறது. மக்கள் ஒன்றாக கூடுவதை தவிர்க்கவும், விழிப்புணர்வை ஏற்படுத்தவும் நேற்று மக்கள் ஊரடங்கு செயல்படுத்தப்பட்டது.

  மக்கள் ஊரடங்கை அறிவித்த பிரதமர் மாலை 5 மணிக்கு கொரோனாவிலிருந்து மக்களை காப்பாற்றி வரும் மருத்துவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் வீட்டிலிருந்தே கைத்தட்ட சொல்லி அறிவுறுத்தியிருந்தார்.

  ஆனால் காலையிலிருந்து வீடுகளுக்குள் அடங்கி கிடந்த மக்கள் மாலை 5 மணிக்கு வெளியே வந்து மேள தாளத்தோடு பாட்டு பாடி, ஆட்டம் ஆடி, ஊர்வலம் சென்று மருத்துவர்களுக்கு நன்றி சொல்லும் படலத்தை அரங்கேற்றியுள்ளனர். காலையிலிருந்து வீட்டில் இருக்க சொன்னதே கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காகதான், ஆனால் மாலையில் எல்லாரும் இப்படி ஒன்றாக கூடி ஆடுவதால் அன்றைய நாள் முழுக்க வீட்டில் அடைந்து கிடந்ததற்கு எந்த உபயோகமும் இல்லாமல் போய்விட்டதாக மருத்துவர்கள் வருத்தத்தில் உள்ளார்களாம். மக்களுக்கு இன்னமும் சரியான விழிப்புணர்வு ஏற்படவில்லை என மருத்துவ நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
   
 8. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  8,130
  Likes Received:
  525
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  கொரோனாவால் முதல் இளைஞர் பலி: எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

  கொரோனா வைரஸ் தாக்கத்தால் வயதானவர்கள் மட்டுமே அதிகமாக உயிரிழப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது இளைஞர் ஒருவர் பலியாகி உள்ளார்.


  உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை 341 பேர் இந்தியா முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் பலி எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

  இதுவரை 60 வயதுக்கும் மேற்பட்ட முதியவர்களே கொரோனாவால் பலியாகி இருந்த நிலையில் இந்தியாவில் கொரோனாவுக்கு முதன்முறையாக 38 வயது நபர் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  பாட்னாவை சேர்ந்த இளம் நபர் உயிரிழந்துள்ள நிலையில் மகராஷ்டிராவில் மேலும் 10 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது.
   
 9. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  8,130
  Likes Received:
  525
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  தனியார் லேப்களிலும் கொரோனா பரிசோதனைக்கு அனுமதி

  இந்தியாவில் முதன்முறையாக கொரோனா பரிசோதனைகளுக்கு தனியார் லேப்களுக்கு அனுமதி வழங்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.


  கொரோனா வைரஸ் உலக முழுவதும் அதிகப்படியான உயிர் பலிகளை கொடுத்து வருகிறது. இதுவரை 170 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11,000-த்தை கடந்து உள்ளது. சீனாவில் தற்போது கொரோனா கட்டுக்குள் வந்துள்ள நிலையில், இத்தாலி மற்றும் ஈரான் போன்ற நாடுகள் அதிக பாதிப்பை சந்தித்து வருகின்றன.

  இந்தியாவிலும் கொரோனா தனது கோரப்பிடியை காட்டத் துவங்கியுள்ளது. தற்போது இந்தியாவில் 315 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கொரோனா குறித்த பரிசோதனைகளுக்கு தனியார் லேப்களும் ஈடுபடலாம் என்று மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கு கட்டணமாக ரூ 4500க்கு மேல் இருக்க கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது.
   
 10. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  8,130
  Likes Received:
  525
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  கை கழுவாம கிராமத்துக்குள்ளேயே நுழைய கூடாது! – கறார் காட்டும் கிராமம்!

  கொரோனா பரவாமல் தடுக்க அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வரும் நிலையில் தஞ்சையில் உள்ள கிராமத்தின் முன்னெடுப்பு வைரலாகியுள்ளது.

  நாடு முழுவதும் கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைகள், கால்களை சுத்தமாக கழுவ மக்களுக்கு தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தின் தஞ்சை மாவட்டம் அருகே உள்ள கிராமம் ஒன்றில் புதிய நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

  கொரோனா முன்னெச்சரிக்கையாக செயல்படும் செந்தலைவயல் என்னும் அந்த கிராமத்தினர் ஊரின் நுழைவாயில் பகுதியில் கொரோனா விழுப்புணர்வு பதாதைகளுடன், கை கால்களை கழுவிக் கொள்ள தண்ணீர், சோப்பு உள்ளிட்டவற்றையும் வைத்துள்ளார்களாம். ஊருக்கு வருபவர்கள் கை கால்களை சோப்பு போட்டு கழுவி கொண்டு ஊருக்குள் போக சொல்லி மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், மேலும் வீடுகளிலும் முகப்பில் கை, கால்களை கழுவி கொள்ள தண்ணீர் வைக்க சொல்லியும் அறிவுறுத்தி வருகிறார்களாம்.

  கொரோனா முன்னெச்சரிக்கையாக செயல்படும் இந்த கிராமத்தை போலவே மற்ற பகுதிகளிலும் செயல்படுத்த வேண்டும் என சிலர் கிராமத்து நடவடிக்கையை பாராட்டியுள்ளதாக கூறப்படுகிறது.
   

Share This Page