கோடையில் நுங்கு..

Discussion in 'Diet and Healthy Eating' started by malarmathi, Mar 9, 2018.

 1. malarmathi

  malarmathi விழுந்தால் அழாதே, எழுந்திரு!

  Joined:
  Feb 6, 2018
  Messages:
  357
  Likes Received:
  303
  Trophy Points:
  63
  Gender:
  Female
  Occupation:
  இல்லத்தரசி
  Location:
  கோவை
  கோடையில் குளிர்ச்சி தரும் நுங்கு...

  கோடை வெயில் கொளுத்திட்டிருக்கு. வெயிலோட தாக்கத்தில இருந்து தப்பிக்க குளிர்பானங்கள், பழங்கள், தர்பூசணி, வெள்ளரி போன்றவற்றை சாப்பிட்டு வர்ற இந்த நேரத்துல இயற்கையோட கொடையான நுங்கு சீசனும் தொடங்கியிருக்கு. நாம விரும்பி சாப்பிடற இந்த நுங்குல ஏராளமான நன்மைகள் இருக்கு.
  உடலுக்கு குளிர்ச்சிய தர்றதுல முக்கிய பங்கு வகிக்கிது நுங்கு. அம்மை நோயால் அவதிப்படுபவர்கள் இளம் நுங்கை சாப்பிட்டு வர உடல் குளிர்ச்சி ஏற்படும். குடலில் உள்ள சிறு புண்களையும் ஆற்றும். கோடையின் வெம்மையை கட்டுப்படுத்துவதில் நுங்கு சிறந்த உணவுப் பொருளாகும். இது குளிர்ச்சி தருவதோடு வைட்டமின் பி, சி சத்துக்கள் நிறைந்துள்ளதால் உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்றது.
  இளம் நுங்கினை அப்படியே சாப்பிட வேண்டும். ஒருசிலர் மேல்தோல் துவர்ப்பாக இருக்கிறது என்பதற்காக அதனை நீக்கிவிட்டு வெறும் சதையை மட்டுமே சாப்பிடுவார்கள். இதனால் சத்துக்கள் முழுமையாக கிடைக்க வாய்ப்பில்லை. சிறு குழந்தைகளுக்கு ஜீரணமாக நேரமாகும் என்பதால் நசுக்கிக் கொடுக்கவேண்டும். முற்றிய நுங்கு, பெரியவர்களுக்கே ஜீரணமாகாது எனவே இளம் நுங்கே உண்பதற்கு ஏற்றது.
  பசியை தூண்டவல்ல இந்த நுங்கு சீதபேதியை சரி செய்யும் குணம் கொண்டது. நுங்கை தொடர்ந்து சாப்பிட்டு வந்தா வேர்குரு மறையும். கால்சியம், வைட்டமின் பி, சி சத்துக்கள் நுங்குல இருக்கு. குடல் புண்ணை ஆற்றும் சக்தி உடையது. இதுபோன்று ஏராளமான நன்மைகள் கொண்ட நுங்கை நாமும் சாப்பிட்டு பயன்பெறலாமே. நுங்கு சாப்பிடுபவர்கள் இளம் நுங்கைதான் சாப்பிட வேண்டும். இது சுவையாக இருக்கும். முற்றிய நிலையில் உள்ள நுங்கை சாப்பிட்டால் சுவை குறைவாக இருப்பதோடு, வயிற்றுவலி உண்டாக வாய்ப்புள்ளது.
   
  jayalashmi and janaki like this.
 2. janaki

  janaki Active Member

  Joined:
  Oct 3, 2014
  Messages:
  210
  Likes Received:
  132
  Trophy Points:
  43
  Gender:
  Female
  Location:
  Madurai
  Super information.
   
 3. jayalashmi

  jayalashmi Active Member

  Joined:
  Nov 12, 2017
  Messages:
  176
  Likes Received:
  154
  Trophy Points:
  43
  Gender:
  Female
  பயனுள்ள தகவல்
   

Share This Page