கோவை அருகே இரண்டு குழந்தைகளைக் கொன்று தந்தை தலைமறைவு

Discussion in 'Memes and Funny Videos - Daily Updates' started by NATHIYAMOHANRAJA, Dec 13, 2018.

 1. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  5,805
  Likes Received:
  489
  Trophy Points:
  83
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  கோவை: கோவை பீளமேடு அருகே இரு மகள்களின் முகத்தில் தலையணை வைத்து அழுத்தி கொலை செய்த கொடூர தந்தையை போலீசார் தேடி வருகின்றனர். கோவை சிங்காநல்லூர் மசக்காளிபாளையம் ரோடு, நீலிகோணார் வீதியை சேர்ந்தவர் பத்மநாபன். இவரது மனைவி செல்வராணி. இவர் சவுரிபாளையத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மார்க்கெட்டிங் பிரிவு மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு ஹேமாவர்சினி, ஸ்ரீஜா என்ற 2 மகள்கள் உள்ளனர். ஹேமா வர்சினி 10 ஆம் வகுப்பும் மற்றும் ஸ்ரீஜா 3 ஆம் வகுப்பும் படித்து வந்தனர். பத்மநாபனுக்கு குடிப்பழக்கம் உண்டு. இவர் குடித்து விட்டு வீட்டுக்கு வந்து மனைவியுடன் தகராறு செய்வது வழக்கம். இதனால் கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. வழக்கம் போல் நேற்று இரவும் பத்மநாபன் குடிபோதையில் வீட்டுக்கு வந்துள்ளார். அவரது மனைவி செல்வராணி அவரை அடித்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த பத்மநாபன் மனைவியை அடித்து உதைத்து தாக்கினார்.

  இதனால் மனமுடைந்த செல்வராணி வெள்ளலூரில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.

  இன்று காலை 8.30 மணி அளவில் செல்வராணி தனது வீட்டுக்கு சென்றார். வீட்டுக்குள் குழந்தைகள் இருவரும் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். குழந்தைகள் உடலை பார்த்து செல்வராணி கதறி அழுதார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு திரண்டனர். அவர்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவஇடத்துக்கு உதவி கமி‌ஷனர் சுரேஷ், சிங்காநல்லூர் இன்ஸ்பெக்டர் கனகசபாபதி மற்றும் போலீசார் விரைந்து சென்றனர். குழந்தைகள் சடலமாக கிடந்த இடத்தில் ரத்தக்காயங்கள் எதுவும் இல்லை. ஆனால் குழந்தைகள் இருவரது கழுத்தும் நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதற்கான தடயங்கள் தெரியப்பட்டன. இதனால் பத்மநாபன் தனது குழந்தைகள் கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு தப்பி ஓடியதை போலீசார் உறுதி செய்துள்ளனர்.இதையடுத்து வழக்கு பதிவு செய்துள்ள சிங்காநல்லூர் போலீசார் பெற்ற மகள்களை கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய கொடூர தந்தை பத்மநாதனை தேடி வருகின்றனர்.
   

Share This Page