சட்டீஸ்கரில் 15 நக்சல்கள் சுட்டுக்கொலை

Discussion in 'Magazines' started by NATHIYAMOHANRAJA, Aug 7, 2018.

  1. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    2,830
    Likes Received:
    91
    Trophy Points:
    48
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    சட்டீஸ்கரில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில் 15 நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். சட்டீஸ்கரின் சுக்மா மாவட்டம் நக்சல்கள் ஆதிக்கம் மிகுந்த பகுதியாகும். இதன் தெற்கு சுக்மாவில் உள்ள காட்டுப்பகுதியில் நக்சல்கள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    இதன் அடிப்படையில் நேற்று காலை அங்கு பாதுகாப்பு படையினர் நக்சல் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது நக்சல்கள் திடீரென வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள். இதற்கு பாதுகாப்பு படையினர் தகுந்த பதிலடி கொடுத்தனர். பாதுகாப்பு படையினரின் பதில் தாக்குதலில் 15 நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
     

Share This Page