சந்தியாராகம் தொடர்கதை - Sandhiyaaragam Romantic Love Story

Discussion in 'Ramesh Bharathi Novels' started by webadmin, Dec 16, 2014.

 1. webadmin

  webadmin Administrator Staff Member

  Joined:
  Jan 1, 1970
  Messages:
  2,567
  Likes Received:
  1,103
  Trophy Points:
  113
  View attachment 443
  இதோ சந்தியராகத்தின் அடுத்த பதிவு :)

  முந்தைய பதிவினைப் படித்த, கருத்துக்கள் சொன்ன அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் !! :)

   
  12 people like this.
 2. rajakithu

  rajakithu New Member

  Joined:
  Sep 2, 2014
  Messages:
  4
  Likes Received:
  1
  Trophy Points:
  3
  very nice and interesting ud
   
  2 people like this.
 3. ugina

  ugina Member

  Joined:
  Dec 16, 2014
  Messages:
  70
  Likes Received:
  50
  Trophy Points:
  18
  Gender:
  Female
  nice update
   
  2 people like this.
 4. bhuvanas62

  bhuvanas62 New Member

  Joined:
  May 24, 2015
  Messages:
  4
  Likes Received:
  2
  Trophy Points:
  0
  Gender:
  Female
  Hi,
  Only 5 episodes are available. How to get the further episodes?
  Bhuvana
   
  2 people like this.
 5. webadmin

  webadmin Administrator Staff Member

  Joined:
  Jan 1, 1970
  Messages:
  2,567
  Likes Received:
  1,103
  Trophy Points:
  113
  Hi @bhuvanas62 Thank you for reading the story, i am going to publish the story as Full PDF,
  so remaining all episodes will be published very soon ,
  I am writing the climax portion of the story. :)
   
  5 people like this.
 6. webadmin

  webadmin Administrator Staff Member

  Joined:
  Jan 1, 1970
  Messages:
  2,567
  Likes Received:
  1,103
  Trophy Points:
  113
  Thank you :)
   
 7. webadmin

  webadmin Administrator Staff Member

  Joined:
  Jan 1, 1970
  Messages:
  2,567
  Likes Received:
  1,103
  Trophy Points:
  113
  Thanks @rajakithu :)
   
 8. Balki

  Balki Member

  Joined:
  May 8, 2015
  Messages:
  37
  Likes Received:
  13
  Trophy Points:
  8
  Gender:
  Male
  Occupation:
  Accounts Executive
  Location:
  Coimbatore
  I read 5 serials. superb
   
 9. webadmin

  webadmin Administrator Staff Member

  Joined:
  Jan 1, 1970
  Messages:
  2,567
  Likes Received:
  1,103
  Trophy Points:
  113
  சந்தியாராகம் -இசை 1

  இரவின் ஆதிக்கத்தில் கருத்துப் போயிருந்த வானம் , மங்கிய வெளிச்சத்துடன் வெளுக்க ஆரம்பிக்க அதுவரையிலான நிசப்தம் ஊர்க் குருவிகளால் கலைய ஆரம்பித்தது.அங்கொன்றும் இங்கொன்றுமாய் மின்மினிப் பூச்சிகளென வீட்டின் முன்புற விளக்குகள் வெளிச்சத்தை சிந்திக் கொண்டும், பல தெருக்களில் வாசல் தெளிக்கும் சத்தங்களும்இனிதே ஆரம்பமாகி இருந்தன. அவ்வளவு நேரமாய் தூங்கிக்கொண்டிருந்த சூரியன் , வட்டமுகத்தில் செவ்வொளி காட்ட ஆயத்தமாகிக்கொண்டிருந்தது.

  “மணி 6”!!

  மூன்று நாட்களாய் விஷக் காய்ச்சல் , சீதாலஷ்மியை பாடாய்படுத்திஇருந்ததால்வழக்கம் போல் அன்றைய தினமும் அவர் வீட்டில் சற்றே தாமதமாக கதவு திறக்கப்பட்டது.இரண்டு நாட்கள் போல் இல்லாமல் இன்று உடலுக்கு சற்றே தெம்பு வந்ததால், மகள்களைஎழுப்பாமல் அடுப்பங்கரையில் பாத்திரங்களை உருட்டிக் கொண்டிருந்தார். மணித்துளிகள் உருண்டோட,

  “அடியே!! சந்தியா!! , தூங்குனது போதாதா!! , உனக்கு?

  இன்னைக்கு நானே எல்லாவேலையும் பாத்துக்குறேன், நீ எந்தரிச்சு ஒழுங்கா சீக்கிரம் கெளம்புற வழியப் பாரு,ரெண்டு நாளு சீக்கிரம் எந்திருச்சதுக்கு ,நாலு நாளைக்கு தூக்கமா உனக்கு, என்று இரைந்தாள் .

  ஏற்கனவே அடித்த அலாரத்தை ஆப்செய்து விட்டு போர்வைக்குள் புகுந்தவளுக்கு, அம்மாவின் சத்தம் மொத்தமாய் அவளை எழுப்பியே விட்டது.

  ஒட்டிக்கொண்ட தன் இறகுகளை ,பட்டாம்பூச்சி மெல்லமாய் விரிப்பது போல்,மூடிய இமைகளுக்குள் கண்மணிகள் இடவலமாய் நகர, பிறைநிலா நெற்றி சுருங்கி, தூக்கம் வழிந்த முகத்தை போர்வையை விட்டு விலக்கினாள் சந்தியா,

  ஏம்மா!!! , உனக்கு இந்தக்கொலவெறி?, பாவம், பிள்ள தூங்கட்டும்னு கொஞ்ச நேரம் விடுறியா?, 10 மணிக்குபோறதுக்கு இப்போவே எந்த்ரிக்கனுமா என்ன? என்றவாறே கலைந்து கிடந்த தலைமுடியை சுருட்டி ஹேர் கிளிப்பிங்கில் உள்ளே திணித்து விட்டுக் கொண்டே எழுந்து உட்காந்தாள்.

  “ஆமாண்டி, இன்னும் கொஞ்சநேரம் கொஞ்ச நேரம்னு, விட்டா,
  நீ மத்தியானம் வரைக்கும் தூங்குவ, சின்னவள கரெக்ட்டா ஸ்கூலுக்கு அனுப்பனும், கூட மாட ஒத்தாசையா இருந்தா எனக்கு வேல சீக்கிரம் முடியும்ல, நான் படுத்துக் கிடந்தாதான், நீ வீட்டு வேலபாப்பியா,?"

  “ஐயோ, சீதாலச்சு, அதுக்குசொல்லல, எப்பிடியும் கொஞ்ச வருசந்தான் உன் கூட இருக்க போறேன் , அதுவர இந்த வீட்டுவேலையெல்லாம் தொட விடாம என்ன வளத்துடு!!, என்ன சரியா!!”, சொல்லிக்கொண்டே எழுந்து வந்து,
  தன் அம்மாவின் கன்னத்தைக்கிள்ளிக் விட்டு மீண்டும் படுக்கைக்கு சென்று பாய் தலையணை சுருட்டி வைத்தாள் சந்தியா.
  “இந்த டூத் பிரஷ் எங்கதான்போய் தொலையுமோ, இதெல்லாம் ஒழுங்கா எடுத்து வைக்க மாட்டியா, சீதாலச்சு நீ, வர வர உனக்கு சோம்பேறித்தனம் ஜாஸ்தி ஆய்டுச்சு!!, நாங்க போட்டது போட்டபடி கிடக்குறத எடுத்து கரெக்டா வைக்க வேண்டாமா", என வழக்கம் போல் அம்மாவைக் சீண்டிக் கொண்டேசந்தியாவின் விடியல் அன்றும் கலகலப்பாக ஆரம்பித்து விட்டது.
  கடைசியில் டூத் பிரஷ்ஷைதேடிக் கண்டுபிடித்து, பல் விளக்க ஆரம்பித்தாள்!!

  “சொல்லுவடி சொல்லுவ!! ,தெனமும் தேய்ச்சுட்டு வைக்குற இடத்துல்ல வச்சாத்தானே, இஷ்டத்துக்கு தூக்கி எரிஞ்சா, காக்கவா கொண்டு வந்து கைல கொடுக்கும்...
  உனக்கெல்லாம் டூத்ப்ரஷ்லாயக்கில்ல, கைய வச்சு விளக்கி பழகிக்கோ, லேட்டா என்திரிச்சுட்டு பேச்சப் பாரு”

  குளித்துவிட்டு ஸ்கூல்யூனிபார்மில் வெளியே வந்த கயல்விழி , அதைக் கேட்டு களுக்கென்று சிரித்து விட்டு,
  “என்னக்கா , காலாங்காத்தால அம்மாட்ட சுப்ரபாதம் கேட்டுட்டு இருக்குறியா,” என நக்கலாய் கேட்டு விட்டு சின்னதாய் சாமி போட்டோக்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் நடுவீட்டு அலமாரிக்கு முன்பு வந்து சேர்ந்தாள்.அதுதான் அவர்களது பூஜையறை.ஆடம்பரம் இல்லாமல் மூன்று பேருக்கு ஏற்றார்போல் அந்த வீடு, நடுத்தரக் குடும்பத்தின் கஷ்டங்களை சொல்லாமல் சொல்லிக்கொண்டு இருந்தது.

  “ஏய் சின்ன வாலு, பிளஸ்டூ முடிக்கிற வரைதான் உனக்கெல்லாம் மரியாதை, அதுக்கு அப்புறம் பாரு, உனக்கும் இதேதான்!!”,

  “காக்காலாம் கொடுக்காது, என்அம்மா கொடுப்பா!!, சரி எனக்கு இதுக்கு மேல காது கேக்காது , சோ , நீ அர்ச்சனை பண்றதை நிறுத்திட்டு உன் வேலையப் பாரு லச்சு, நான் குளிக்க போறேன்”, என சத்தத்தைக்கொடுத்து விட்டு பாத்ரூமை நோக்கி நடைபோட்டாள் சந்தியா.

  “அம்மா எனக்கு லேட் ஆய்டுச்சு பாரு , இன்னுமும் நீ லஞ்ச் பேக் பண்ணாம இருக்குற , அதற்குள் சின்னவள் கயல்விழியின் குரல் , சிணுங்கலாய் ஒலித்தது.

  இதோ ஆய்டுச்சுடா கண்ணு, அஞ்சே அஞ்சு நிமிஷம்தான், கொஞ்சம் பொறுத்துக்கோ, இந்த கோஸ் மட்டும் கொஞ்சம் வெந்துட்டா, உனக்கு எல்லாம் ரெடிதான், அதுக்குள்ள நீ சாப்ட்டுக்கோ,

  “சரிம்மா!! என குரல் கேட்க,
  சூடான ஆவி பறக்கும் இட்லியை, அவசரத்தில் தாளிக்காத வெள்ளை வெளேரன தேங்காய் சட்னியுடன், எப்போதும் அவள் சாப்பிடும் பூக்கோலம் போட்ட தட்டில் எடுத்துக் கொண்டு கயல்விழியிடம் வந்தார் சீதாலஷ்மி.

  “எல்லாம் எடுத்து வச்சுக்கிட்டீல, கயல் கண்ணு, சாப்ட்டுட்டு நீ ஸ்கூல்பேக் எல்லாம் எடுத்து ரெடியா இரு, நான் அஞ்சு நிமிசத்துல போனதும் டிபன் பாக்ஸ் கொண்டு வந்துடறேன்” , சொல்லிவிட்டு அடுப்பங்கரைக்கு நடை கட்டினார் லஷ்மி.

  கொடுத்த நாலு இட்லிகளில் இரண்டை மட்டும் விழுங்கிவிட்டு , மிச்சத்தை அடுப்பங்கரை திண்டில் வைத்து விட்டு சின்னவள் கை கழுவி விட்டு காத்திருந்தாள்.

  சில மணித்துளிகளில் சமையல் முடிந்ததும் டிபன்பாக்ஸ் மதிய சாப்பாடால் நிரப்பப்பட்டு கயல்விழி கைக்கு வந்ததும் வாங்கிக்கொண்டு கிளம்பினாள்.

  “பாய் ம்மா , பாய் க்கா நான்போய்ட்டு வரேன்” ,

  வெளியே சென்று சைக்கிளை எடுத்துச் செல்லும் முன் அவள் கொடுத்த சத்தம், இங்கே உள்ளே இருக்கும் லஷ்மிக்கு எட்டவில்லை என்றாலும் வழக்கம் போல் சொல்ல வேண்டியதை சொல்லினாள்,

  “பாத்துப் ஜாக்கிரதையா போம்மா கயல் கண்ணு “!!

  நேற்றிரவு மழைக்கு இன்றுகாலையில் பூத்த மலராய், சொட்டும் ஈரம் தரையை நனைக்க, தலை துவட்டிக் கொண்டேசந்தியா, அடுப்பங்கரைக்கு நுழைந்தாள், அதுவரை அவளைப் பின் தொடர்ந்த சீயக்காய்வாசம் வாசலோடு தொலைந்து, அடுப்பங்கரை கோஸ் பொரியலின் வாசம் அவள் மூக்கை துளைத்தது.

  “என்னம்மா இன்னைக்கு பொரியல்வாசம், அதிசயமா ஆளையே தூக்குது , அப்படி என்னத்த போட்டு வச்சிருக்குற“

  “அதான் சாப்பிட போறல்ல,கண்டுபிடிச்சுக்கோ நான் பெத்த செல்வமே, இது இருக்கட்டும், இன்னைக்கு நீ நல்லபடியாசெலக்ட் ஆகிடனும், சரியா !! ,
  எத்தனையோ தடவ ஏமாந்துபோயாச்சு, இந்த வாட்டியாச்சும் இந்த வீட்டுக்கு விடிவுகாலம் வரணும்னு சாமியக்கும்பிட்டுட்டு நல்லபடியா இன்டர்வியூக்கு போயி வேலையும் கையுமா வரணும்”

  ஐயோ, அம்மா இதுக்கு முன்னாடி மாதிரி கிடையாது இந்த இன்டர்வியூ , இதுல உன் பொண்ணு ஸ்ட்ராங் , சோ ..இந்த வேலைய வாங்கிக் காட்றேன் , பாரு நமக்கும் நல்ல டைம் ஸ்டார்ட் ஆய்டும் ..!!

  என்னமோடி!! , எப்பிடியாவது உனக்கு வேலை கிடைச்சுட்டா , நம்ம கஷ்டம் தீரும், எத்தன நாள் இப்படியே கடன்வாங்கியே சமாளிக்க, அதும் இல்லாம அடுத்த மாசம், கடனுக்கு வட்டி கேட்டு எல்லோரும் வந்து வாசல்ல நிக்க முன்னாடி, நானே போய் கொடுத்துடணும், ஒன்னுக்கு ரெண்டு பொண்ணா பெத்துட்டு, அந்த மனுஷன் பாதிலே போய் சேர்த்துட்டார், சும்மா போனாலும் இவ்வளோ கடனவேற நம்ம தலைல கட்டிட்டு போய்ட்டார். என்ன பண்ண, நம்ம தல விதி , ஆண்டவன் அப்பிடி எழுதிருக்கான்.” என்று நொந்தவர் குடும்பக் கதையை ஆரம்பிக்க,

  “ஐயோ!!! மறுபடியுமா ..போதும்மா .நிப்பாட்டு.. அதான் சொல்றேன்ல இன்னைக்கோட இதுக்கு முடிவு!!..இனியாச்சும் மனசப் போட்டு வருத்திக்கிட்றத விடு,”

  “சரி சீக்கிரம் சாப்பாடு போடு.. சாப்ட்டு நான் கெளம்புறேன்.முதல்ல இந்த டாபிக் விட்டு நீ வெளில வந்துடு, நான் கெளம்பும் போது கண்ணுல தண்ணி வைக்காத..!!”

  “ஹ்ம்ம் ..பாக்கலாம் ..பொழுது சாஞ்சா தெரியும்ல அந்த ஆண்டவன் என்ன எழுதி இருக்கான் நம்ம வாழ்க்கைலன்னு”,என்றவாறு சாப்பாடு அள்ளிவைத்தார் !!

  சீதாலஷ்மி, ஒரு நடுத்தரக்குடும்பத்தை, குடும்பத்தலைவன் இல்லாமல் தனி ஒருத்தியாய் தடுமாறி நிர்வகித்துக்கொண்டிருப்பவர். கணவனை ஒரு விபத்தில் பறிகொடுத்து அதற்கு பின் குடும்ப சூழ்நிலைமிகவும் நொடித்து போய் விட, வெறும் உறவுகள் என்ற பெயரில் உறவினர்களும் பதினாறாம் நாள்காரியம் முடிந்தவுடன் கழண்டு விட ..ஆரம்பம் ஆனது சிவப்பு நிற வறுமை, திக்குத்தெரியாமல் தவித்த குடும்பத்திற்கு அவள் கணவன் விபத்தில் இறந்ததால் கிடைத்தஇழப்பீட்டு தொகை ஓரளவு நடுத்தர வாழ்க்கை நடத்தும் அளவிற்கு பேருதவியாய் இருந்தது,எப்படியோ அந்த தொகையிலும் மேலும் வங்கிக் கடன்களை வாங்கியும், மூத்த மகள்சந்தியாவை, கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் படிக்க வைத்து விட்டாள். எப்படியோ தன் மகள்சம்பாதித்து இந்த குடும்பத்தின் நிலை உயரவேண்டும் என்பதே இவளின் கனவு. மேலும்சின்னவள் படிப்பும் அடுத்து இருக்கிறது, பிளஸ்டூ முடித்தவுடன் அவளையும்பட்டப்படிப்பு படிக்க வைத்தே ஆக வேண்டும் என்ற முடிவிற்கும் சந்தியா கண்டிப்பாகஒரு வேலையில் சேர்ந்தே ஆகவேண்டும். அதுவும் இந்த மாதத்தில். இவளும் சும்மாவீட்டில் இருக்க வில்லை ஒரு சூப்பர் மார்கெட்டில் வேலை பார்க்கிறாள், சம்பளம்சொல்லிக்கொள்ளும் அளவிற்கு பெரிதாய் இல்லை என்றாலும் ஓரளவு போதுமானதாய் இருந்தது.

  காலை வேளையில் இட்லி சாப்பிடபிடிக்காது என்பதால், சாம்பார் சாதம், கோஸ் பொரியல் தான் சந்தியாவிற்கு இன்றைய காலை உணவு, இன்டர்வியூ பற்றிய சிந்தனையிலே பேசிக்கொண்டே அவளும் அம்மாவும் சாப்பிட்டும் முடித்திருந்தார்கள்.

  இரண்டு பேரும் கிளம்ப தயார் ஆனார்கள். அவளது இன்டர்வியூ போகும் கம்பெனி, லஷ்மி வேலை செய்யும் சூப்பர்மார்க்கெட் வழி என்பதால், அம்மாவும் மகளும் , அரட்டை அடித்துக் கொண்டே அந்த முருகன் கோவில் பஸ் ஸ்டாப் வந்து சேர்ந்தனர்.

  இசை 1 - தொடர்ச்சி ....

  மல்லாந்து படுத்ததில் முகத்தில் கொஞ்சமாய் சூடு பரவ, சிறிதாய் போர்வையை விலக்கி பார்த்தான் அர்ஜுன்,
  கண் கூச வைத்தது ,9.30 மணி வெயில்.
  அரை கண்ணுடன் பக்கத்தில் இருந்த செல்போனில் மணியை பார்க்க, அலறி அடித்து எழுந்து உட்காருகிறான்.
  மறுபடியும் செல்போனில் பார்வை போக நிறைந்து கிடக்கும் குட் மார்னிங் மெசேஜ்களை, எக்ஸிட் கொடுத்து விட்டு.. படுக்கையை சுருட்டிக்கொண்டு மாடியில் அந்தபுறம் இருக்கும் அவனது அறைக்குள் செல்கிறான்.

  “டேய் !!, சூனியம் பிடிச்சவனே, உன்ட்ட என்ன சொல்லிட்டு நேத்து நைட் படுத்தேன் , சீக்கிரம் எழுப்பி விடச் சொன்னேனா இல்லையா!! , இப்போ இவ்ளோ நேரம் தூங்க விட்டு வேடிக்க பாத்ருக்க” , என்று வேலைக்கு செல்ல கிளம்பித் தயாராக இருந்த, அவனது நண்பன் பாலாவைப் பார்த்துக் கத்தினான் அர்ஜுன்.

  “சொல்லுவடி சொல்லுவ, எழுப்பலன்னு ...
  தண்ணி ஊத்தாத கொறதான் , அதையும் செஞ்சிருப்பேன் , அப்புறம் அதுக்கும் உன்ட்ட எவன் திட்டு வாங்குறது , அதுக்கு இதுவே பெட்டெர்னு தான் விட்டுட்டேன்,
  ஒரு மனுஷன் இப்படியா தூங்குவான் தட்டி எழுப்பினாலும், போடா போ , என்ட சண்டை போடல்லாம் உனக்கு டைம் இல்ல, பத்து நிமிஷத்துல கெளம்பப் பாரு, நான் அந்த கம்பெனில ஒரு மாதிரி பேசி வச்ருக்கேன், உன் வாயக் கொஞ்சம் குறைச்சுகிட்டு இன்டர்வியூல ஒழுங்கா பதில் சொல்லு, மத்ததெல்லாம் நான் பாத்துகிறேன், மவனே இதுதான் உனக்கு லாஸ்ட் சான்ஸ், பாத்துக்க” ... என்று பதில் சொல்லி விட்டு பாலா படிகளில் இறங்க ஆரம்பித்தான் .

  போடா, டேய் போடா!!! ..இப்போ அஞ்சு நிமிசத்துல, இந்த அர்ஜுன் எப்பிடி அங்க போய் நிக்கான்னு மட்டும் பாரு என்று பாலாவின் தலை மறையும் சவால் விட்டு அதில் ஜெயித்தும் விட்டு பஸ்ஸ்டாப் வந்து சேர்ந்தான்.

  சொந்த ஊரில் படித்து முடித்து விட்டு, இப்போது இந்த நகரத்தில் வந்து தங்கி வேலை தேடிக் கொண்டிருக்கும் தமிழ்நாட்டின் சில ஆயிரக்கணக்கான இளைஞர்களில் அர்ஜுன் ஒருவன், படித்தது கிராமப்புற இன்ஜினியரிங் கல்லூரி என்பதால் , ஆங்கிலம் அவனுக்கே பெரிய தலைவலி கொடுத்தது, ஓரளவு வசதி இருந்ததால் அவனுக்கு வீட்டில் கஷ்டம் என்றெல்லாம் இல்லை,
  ஊரில் அவனது அப்பா, இரண்டு பெரிய ரைஸ்மில்களை சொந்தமாக இயக்கிக் கொண்டிருப்பவர், படித்தது கம்ப்யூட்டர் சயின்ஸ் என்பதால் இந்தப் பெரு நகரத்திற்கு வந்தாக வேண்டிய சூழ்நிலை,
  சென்னை போன்று பெரிய பெரிய சாப்ட்வேர் கம்பெனிகள் இல்லையென்றாலும் ஓரிரு கம்பெனிகள் இயங்கிக் கொண்டிருப்பதால் இங்கே வந்து நண்பனுடன் தங்கி வேலை தேடுகிறான்.

  ஆனால் அங்கே அவனது நேரம் ஒரு வலை விரித்திருந்தது.
  வெறும் நேரம் மட்டுமல்ல , அது அவன் வாழ்கையையே திருப்பப் போகும் கொண்டை ஊசி வளைவு என அவனுக்கு தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை.
  [BCOLOR=#ffffff]
  இசைக்கும் ..
  [/BCOLOR]​
   
  Last edited by a moderator: Jul 6, 2015
 10. webadmin

  webadmin Administrator Staff Member

  Joined:
  Jan 1, 1970
  Messages:
  2,567
  Likes Received:
  1,103
  Trophy Points:
  113
  இசை 2

  ஒவ்வொருமனிதனும் தான் செய்த தவறுகளில் நியாயத்தையும்,
  செய்யும்தவறுகளுக்கு காரணத்தையும் தேடிக் கொள்கிறான் !!

  கைக்குழந்தை முதல் பெரியவர்வரை அனைத்துத் தர மக்களின் எதிர்பார்ப்புகளையும் தாங்கிக் கொண்டு அந்த பஸ்ஸ்டாப் கொஞ்சம் பரபரப்பாகவே காணப்பட்டது .எல்லோரதும் பார்வையும் தூரத்தில் எங்கோ வந்து கொண்டிருக்கும் பேருந்தை எதிர்நோக்கி இருந்தது .
  அர்ஜுன் பொடி நடையாக அங்கு வந்து சேர்ந்தான்,

  மணி 9.20 .

  சொன்ன படியாக கொஞ்சம் சீக்கிரமாகவே வந்து விட்டதில் உள்ளுக்குள் நிம்மதிதான். நடக்க ஆரம்பித்தது முதல்அங்கு வந்து சேரும் வரை எதிரில் பார்க்கும் இயந்திரவாழ்கையில் தன் எண்ணங்களை ஓடவிட்டிருந்தான். ஆனால் இன்றைய இண்டர்வியூ , அவனுக்கு நன்றாக தெரிந்த கம்ப்யூட்டர் தொடர்பான ஒரு பிரிவில் என்பது, பாலா அந்த கம்பெனியில் தன்னைப்பற்றி நல்ல ரெஃபெரன்ஸ் கொடுத்திருந்தது இது எல்லாம் அவனது வேலைக்கான உத்திரவாதத்தை சிறிது தந்திருந்தது .எனவே அதிக குழப்பங்கள் இல்லாமல் காணப்பட்டான் .

  அப்போதுதான் அவன் பார்த்துக்கொண்டு இருக்கும்போதே அந்த சம்பவம் மனதை உலுக்கும் படி நடக்க ஆரம்பித்தது. ஒரு இளம் பெண் , 19வயதிருக்கும், மஞ்சள் கலரில் அழகான ப்ளோரல் டிசைன் போட்ட சுடிதாரில் சாலையை கடக்க நின்றிருந்தாள். லூஸ் ஹேரில் முகம் வசீகரமாய் தெரிய, பார்க்கக் களையாய் தான் இருந்தாள். காதுகளில் ஹெட்செட் புகுத்தப்பட்டுஇருந்தது.

  கையில் ஒரு பாட்டிலுடனும்,மற்றொரு கையில் எதோ ஒன்றை மறைத்தபடி ஓடி வந்து கொண்டிருந்தான் ஹெல்மட் போட்டஒருவன். கண் இமைக்கும் நேரத்தில் அந்த பெண்ணின் மீது கையில் வைத்திருந்த பாட்டிலைதூக்கி எறிந்தான், சற்றே சுதாரித்துக் கொண்ட அவள், முகத்தை திருப்பிக் கொண்டு கையைவைத்து மறைக்க, ஐயோ!! அம்ம்மா!!! என முடிந்த வரை கத்தினாள், அப்போதுதான் தெரியவருகிறது அவள் மீது ஊற்றியது ஆசிட் என்று, கைகள் மற்றும் தலை முடியில் மட்டும்பட்டதால் அவள் முகம் தப்பித்தது. இதோடு விடாமல் அந்த மனித மிருகம் மற்றொரு கையில்தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவளை குத்துவதற்கு ஓங்க ,

  இதையெல்லாம் பார்த்துக்கொண்டு இருந்த அர்ஜுன் , அதற்கு பின் வேகமாக செயல்பட ஆரம்பித்து , நாலே எட்டில் அவனை அடைந்தான், ஆனால் அதற்குள் கத்தி அந்த பெண்ணின் வயிற்றில் இறங்கி இருந்தது,அவன் மேலும் ஒரு முறை குத்துவதற்கு கத்தியை உருவி, ஓங்கி குத்தும் முன் , நேர்த்தியாக கத்தியைதட்டி விட்டு தன் முழுபலம் கொண்டு தள்ளி விட்டான். அந்த அடியால் மனித மிருகம்பக்கத்தில் இருந்த சிக்னல் கம்பத்தில் மோதி நிலை குழைந்து ஓட ஆரம்பித்தது.

  அதற்குள் அந்த பெண்நினைவிழக்க ஆரம்பித்து ஈனஸ்வரத்தில் முனங்க ஆரம்பித்தாள்,
  சுற்றியுள்ள கூட்டம் வேடிக்கைமட்டும் பார்க்க ,
  அர்ஜுன் மட்டும் குரல்கொடுத்தான் ,
  “யாராச்சும் சீக்கிரம் நூத்திஎட்டுக்கு கால் பண்ணுங்க !!“
  ஆனால், அது வெறும் எதிரொலி போல், அத்தனை பேராலும் எதிரொலிக்கப்பட்டது,
  “யாராச்சும் பண்ணுங்கப்பா,என்றே ...

  “ஏய், இங்க கொஞ்சம் கண்ணுமுழிச்சு பாரு , என அவளின் கன்னத்தை தட்டி உசுப்பிக் கொண்டிருந்தான் அர்ஜுன்.
  அதற்குள் கூட்டத்தில் எதோ ஒருஜீவன் கால் பண்ணிவிட்டதாகவும், ஆனால் பக்கத்தில் இருக்கும் ஆம்புலன்ஸ் இதற்கு முந்தைய கிராஸ் ஸ்ட்ரீட் ரவுண்டானாவில்,டிராபிக்கில் சிக்கி இருப்பதாகவும் சொல்லியது.
  இனி தாமதித்தால் கதையாகாது,முதலுதவி சீக்கிரம் கிடைக்க வேண்டும் என நினைத்த அர்ஜுன், வேறு ஒன்றை யோசித்தான்.
  அந்த சமயத்தில் அங்கு வந்துகொண்டிருந்த ஒரு ஆட்டோவை அழைத்தான். அந்த ஆட்டோ டிரைவரும் ஒன்றும் சொல்லாமல் உதவி செய்ய,
  அவளை ஆட்டோவில் ஏற்றிவிட்டு,தானும் ஏறிக் கொண்டு எதிர் சாலையில் பயணிக்க சொன்னான். எதிர்பார்த்த படிஆம்புலன்ஸ் எதிரே வந்து கொண்டிருக்க, கை அசைத்து நிறுத்தினான். அவளை உள்ளே பத்திரமாக ஏற்றி விட்டு ஒரு நிம்மதி பெருமூச்சுடன் இந்த உலகத்திற்கு வந்தான். இவை அத்தனையும்ஒரு சில கணங்களில் நடந்து விட்டது. கல்லூரியில் படிக்கும் போது NCC யில் இருந்தபடியால் இது போன்ற நேரங்களில் எதையும் யோசிக்காமல் எந்த ஆபத்தையும் பார்க்காமல்இறங்கி விடுவது அவன் வழக்கம் தான், எனவே தான் மிகக் குறுகிய காலத்தில் சரியாகசெயல் பட முடிந்தது.

  கோவில்களில் கடவுளைத் தேடி அலைவதை விட
  நல்லது செய்ய பழகிக் கொண்டால்
  அடுத்தவர் சந்தோஷத்தில்
  தெய்வம் தெரியும் !!


  ஆம்புலன்ஸ் வந்து நின்றது நமக்கு முன்னமே அறிமுகமான முருகன் கோவில் பஸ்ஸ்டாப் என்பதால், அங்கு இருந்த எல்லோரும் இதைப் பார்க்கத் தவறவில்லை, சந்தியாவைத் தவிர, அவள் அந்தப்புறமாக திரும்பி போன் பேசிக்கொண்டு இருந்ததால் கவனித்திருக்க வாய்ப்பு இல்லை.

  அங்கு இருந்த எல்லோர்க்கும் என்ன நடந்திருக்கும் என யூகித்துக் கொள்ள முடிந்தது, அதனால் அர்ஜுனிடம் வந்து கேள்விகளை அடுக்கினார்கள்,

  “ஏம்ப்பா,என்ன ஆச்சு, பாத்தா கொஞ்ச வயசு பொண்ணு மாதிரி இருக்கு, என்ன ஆக்சிடென்டா?
  “ஆமாங்க, பட் உயிர் இருக்குது,ஸோ ப்ராப்லம் இருக்காது நெனைக்கேன்“ என சின்னதான பதிலைச் சொல்லி முடித்து விட்டான், இவர்களுக்கு நடந்த சம்பவத்தை சொல்ல வேண்டிய தேவை இல்லையென.

  அப்போது தான், தன் சட்டையில் இரத்தக் கரை இருப்பதை பார்க்கிறான் . இனி அதை அலசவோ வேறு சட்டை மாற்றுவதோ முடியாத காரியம் , வேறு வழி எதாவது பார்த்தாக வேண்டும் என சுற்றி முற்றி பார்வையினை ஓடவிட , அது பக்கத்தில் இருந்த விமன்பியூட்டி ஷாப்பில் நின்றது , சட்டென்று ஒரு யோசனை வர அதை நோக்கி நடக்கத்தொடங்கினான்.

  சின்ன ஷாப் என்றாலும் குளுகுளு ஏசியுடன், கண்ணாடியால் ஆன அழகழகான வேலைப்பாடுகளுடன் மினி மாளிகை போலேஇருந்தது.
  அர்ஜுன் உள்ளே நுழைய,

  “ப்ளீஸ் கம் இன் சார்”, என்ற சேல்ஸ்கேர்ளின் புன்னகை கலந்த வரவேற்பை
  வாங்கிக் கொண்டு உள்ளே நுழைந்தான்.

  “லிப்ஸ்டிக் காட்டுங்க, என்று கேட்டுக்கொண்டே இப்போது கடையின் உள்ளே முழுவதும் வந்திருந்தான்.
  “இங்க நெறைய வெரைட்டீஸ் இருக்கு பாருங்க ,
  பிராண்ட்டடுனா லக்மேல என்ரிச்சிடு சட்டின் ஷேடு பாருங்க,
  என்ன ஸ்கின் கலருக்கு பாக்குறீங்கனு, சொல்லுங்க ,
  கலர் நான் சஜ்ஜஸ்ட் செய்றேன்,
  எவ்வளவு ஹௌர்ஸ் இருக்கணும், டே முழுசுமா இல்ல ஜஸ்ட் ஃப்யு ஹௌர்ஸ் போதுமா“
  சிங்கள் ஸ்வைப்பா இல்ல மல்டிஸ்வைப்ல பாக்குறீங்களா?
  என்று அடுக்கிக்கொண்டே போனாள் அந்த சேல்ஸ்கேர்ள்.

  அர்ஜுனிற்கு ஒன்றும் புரியவில்லை, சாதாரண லிப்ஸ்டிக்கில் இவ்வளவு இருக்கிறதா என நினைத்து முழிக்க ஆரம்பித்தான் ,
  சரிதான் எந்த ஆணிற்கும் அதுபற்றி முழுவதும் தெரிந்திருக்க வாய்ப்பும் இல்லை .
  கடைசியில்,
  “நல்லா ரெட்டிஷ்ஷா இருந்தாபோதும் , டூ ஹண்ட்ரட் ருபீஸ்ல எடுத்து கொடுங்க”, என்று முடித்து வைத்தான்.
  அவள் உடனே பேச்சை மாற்றிவிட்டு, ஒரு பிராண்டை எடுத்து நீட்டினாள் ,
  “இது வாங்கலாம் சார் நீங்க ,இம்போர்ட்டெட் ஐட்டம், லாங் லாஷ்டிங்கா இருக்கும், ப்ரைஸ் ஒன் எய்ட்டி தான்வரும்”
  வேறு எதுவும் கேட்காமல் அதைஎடுத்துக் கொள்வதாக சொல்லிவிட்டு பில்லிங் கவுன்ட்டர்க்கு வந்து நின்று கொண்டான் .
  அவன் வாங்கிய லிப்ஸ்டிக் ஒருபாக்கிங்கில் வந்தது, பணம் கொடுக்க பேண்ட் பாக்கெட்டில் கை விட்டவனுக்கு அதிர்ச்சி, அங்கு பர்ஸ் இல்லை!!
  நடந்த களேபரத்தில் பர்ஸ் தொலைந்து இருக்க வேண்டும், இல்லை என்றால் அவளது ஹேண்ட்பேக் கோடு போயிருக்க வேண்டும்.

  எது எப்படியோ, அவனது ஆயிரத்துஐநூறு ரூபாய் ஸ்வாகா ஆனது இன்றைய விடியலில் ..
  இருந்தாலும் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் ஒரு உயிருக்கு முன்னால் அந்த ரூபாய் தாள்கள் ஒன்றும் பெரிதல்ல என நினைத்துக்கொண்டு , சட்டை மேல் பாக்கெட்டில் இருந்த இரண்டு நூறுரூபாய் தாள்களை நீட்ட,

  ஷாப் கேஷியர் “தேன்கயூ சார்”,என வாங்கிக் கொண்டு, இரண்டு பத்து ரூபாய் தாள்களை நீட்டினாள்.

  மீதம் வாங்கிக் கொண்டு ,கடையை விட்டு நடையைக் கட்டினான். போகும்போதே லிப்ஸ்டிக்கை திறந்து, சட்டையில் கிறுக்க ஆரம்பித்து விட்டான், கடைசியில் இரத்தக்கறையை லிப்ஸ்டிக் கறையுடன் சேர்த்து ஒரு டிசைன் போல் ஏதோ செய்து விட்டான்.பஸ்ஸ்டாப் வந்து சேரவும் டிசைன் முடியவும் சரியாய் இருந்தது. இப்போது அவன் சட்டையை சாதாரணமாக பார்க்கும் யாருக்கும் அது இரத்தக்கறை என்ற சந்தேகம் வராது.

  மணி பத்தைத் தொட்டிருந்தது. ஆனால் அந்தக் கூட்டம் மட்டும்அப்படியே நின்றுகொண்டு இருந்தது, 9.30 மணிக்கு வரும் பேருந்து அன்று வரவே இல்லை.

  “என்னம்மா , இன்னைக்கு நான் சீக்கிரம் வந்தாலும் , இந்த டி- ஃபாட்டி கால வாரிட்டானே, இப்போவே மணி 10ஆச்சு, இன்டர்வியூ இந்நேரம் ஸ்டார்ட் ஆயிருக்கும், இதுக்கே லேட்டா போனா. என் மேல ஒரு பேட்இம்ப்ரெஸ்ஷன் வந்துடும்மே” சந்தியா கலக்கம் நிறைந்த குரலில் அம்மாவிடம் சொன்னாள்.

  “அதெல்லாம் கவலைப்படாம இருடா,நல்லதே நடக்கும்னு நெனெச்சிட்டே போ, பஸ் இப்போ வந்தாலும் 15 நிமிசத்துல்ல அங்க போய்டலாம், பாப்போம், இல்லஆட்டோ பிடிச்சுடலாம்“
  சொல்லிக்கொண்டு இருக்கும்போதே, கேப் எனப்படும் 6 பேர் மட்டும் அமரக் கூடிய மினிவண்டி வந்து நிற்க,

  ““ஆர்கேபுரம்!! ஐட்டி பார்க்!!” என கூவ ஆரம்பித்தான் , அந்த வண்டிக்காரன்,
  அங்கு இருக்கும் எல்லோரையும் தவிர்த்து , மூன்று பேருக்கு உள்ளுக்குள் , அப்பாடா!! என்ற நிம்மதி கலந்த எண்ணம் வந்தது.

  பஸ் வர்ற மாதிரி தெரில,ஆட்டோல போறதுக்கு இதுலே போய்டலாம்மா, வா!!, என சந்தியா சொல்ல, “சரி சீக்கிரம் வா“ என்று லஷ்மியும் சந்தியாவும் ஏறுவதற்கு வண்டியின் அருகில் சென்றனர்.

  அதற்குள் அர்ஜுன் ஏறி முதல்வரிசையில் இருக்கும் சீட்டில் உட்காந்திருந்தான்.
  இதற்குள் சில மணித்துளிகள் ஒரே இடத்தில ஒருவருக்கொருவர் பார்த்துக் கொள்ளும்படியான சூழ்நிலையிலும்,சந்தியாவின் பார்வை இன்னும் அர்ஜுன் மேல் விழுந்ததாய் தெரியவில்லை, அதற்குஅவசியமும் அவளுக்கு இருக்கவில்லை.

  ஆனால் இவன் கதையோ வேறு, அந்தஇடத்திற்கு ஆம்புலன்ஸ் விட்டு இறங்கி, அந்த பெண்ணை அனுப்பி விட்டு திரும்பியதும் அவனது பார்வை நேரே விழுந்தது ,
  இளஞ்சிவப்பு நிற சுடிதாரில்,போன் பேசிக்கொண்டு இருக்கும் சந்தியாவின் மேல் தான், அப்போது ஆரம்பித்து வண்டியில்ஏறும் வரை, அந்த பக்கம் இருக்கும் சாலையை பார்க்கும் சாக்கில் அடிக்கடி அவளைபார்த்துக் கொண்டு தான் இருந்தான்.

  அதில் ஒன்றும் ஆச்சர்யம்இல்லை நம் வாழ்க்கையின் எல்லா நிகழ்வுகளுக்கும் அர்த்தம் இல்லாமல் இல்லை, ஒவ்வொன்றும் எதிர்காலத் தேவைக்கான முன்பதிவு போன்று தான் நடக்கின்றன. திடீர் மாற்றங்கள் ஒவ்வொன்றின் வரலாற்றை புரட்டிப் பார்த்தால் ஏதோ ஒரு இடத்தில அதற்கான விதை தூவப்பட்டு இருக்கும்.அப்படித்தான் இவர்களது சந்திப்பு அர்ஜுன் பார்வையோடு மட்டும் இருந்திருக்க வேண்டும்.

  பிரதான சாலையின் சில மைல்தொலைவை அவர்களது வண்டி கடந்து இருந்தது.
  இறங்கும் நிறுத்தம்வந்தவுடன், வேகம் குறைந்து வண்டி நின்றது,
  “சரிம்மா, நான் போயிட்டுவர்றேன், முடிஞ்சதும் நேரா வீட்டுக்கு போய்டறேன்,” என்று சொல்லிக்கொண்டு எழுந்தாள்.

  “நல்லா பண்ணுடா, நைட் வந்துநான் என்ன ஆச்சுனு கேட்டுக்கறேன், பாத்து பத்திரமா போ “ லஷ்மி பதில் சொல்ல,

  அர்ஜுன் , சந்தியா ஒருவர்பின் ஒருவர் இறங்கினார்கள்.

  மூன்று மாடிக் கட்டிடங்களுடன்பிரமாதமான கண்ணாடி மாளிகை போலே முன்புறம் ஜொலித்துக் கொண்டு இருந்தது அந்த ஐடி பார்க்.

  பெரிய முன் வாசலில் இருக்கும் பதிவேட்டில் பெயர் மற்றும் கையெழுத்து போடும்படி சொல்லப்பட்டதால் இருவரும் அதை நோக்கி சென்றனர்.
  அர்ஜுன் தன் நடையை மெதுவாக்கிக் கொண்டு நடக்க ஆரம்பித்தான், சந்தியாவை முதலில் கையெழுத்திட வைக்கவே என்ற உங்கள் யூகம் சரிதான்.

  அவன் நினைத்த படியே அது நடந்தது, சந்தியா முதலில் சென்று தன் பெயர் எழுதி கையெழுத்து இட்டுப் போக , இவன்பின்னால் சென்று பதிவிட்டான்.
  பார்ப்பதற்கு பிடித்துப் போயிருந்த அவளின் பெயரை தெரிந்துகொள்ள நல்ல வாய்ப்பு , ஏன் விட வேண்டும்.

  அதைத் தெரிந்தும் கொண்டான்,

  “ஒன்றும் செய்யப் போவதில்லை, இந்த இன்டர்வியூவோடு அவளைப் பார்க்க முடியாமல் போகலாம், அல்லது அவள் திருமணம் கூடஆகி இருக்கலாம், இந்த நினைப்பு வந்த உடன், அவனையே அறியாமல் , அப்படி மட்டும் இருக்கக் கூடாது என்ற ஆசை சட்டென்று வந்து போனது, இருந்தாலும் வெறும் பெயரை தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டுவதில் என்ன தவறு, காதலிக்கவா போகிறோம்”

  இந்த மனது இருக்கிறதே அதுஅதன் சொல் பேச்சு கேட்பதற்காக கேள்விகளையும் பதில்களையும் பரிமாறிக் கொண்டு மொத்தத்தில் நம்மை குழப்பம் அடைய செய்து, காரியம் சாதிக்கும், அப்படிதான் சின்ன சின்ன கேள்வி பதில்கள்அந்த குறுகிய நேரத்தில் சந்தியாவைப் பற்றி உள்ளுக்குள் வந்து போனது. இதையெல்லாம்விட பெரிய கேள்விக்குறி இன்டர்வியூ, அது கண் முன்னே பெரிதாய் வரவே வேகமாய் நடையைக்கட்டினான், அர்ஜுன்.

  மீண்டும் இசைக்கும்..
   
  Last edited by a moderator: Jul 6, 2015

Share This Page