சாய் ராம்

Discussion in 'Religious & Sprituality' started by NATHIYAMOHANRAJA, Aug 10, 2018.

 1. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  3,210
  Likes Received:
  102
  Trophy Points:
  48
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  அப்பன் நீ, அன்னை நீ, ஐயன் குருவும் நீ, அருள்தரும் ஆண்டவரும் நீ, அன்பே உருவாய், கருணையே கண்களாய், ஆதரவளிக்கும் அடைக்கலமளிக்கும், ஆர்ப்பரிக்கும் ஆனந்த கண்ணீரோடு சரணடைய வைக்கும் அற்புதம் நீ. ஹரனும் நீ, ஹரியும் நீ, அயனும் நீ, அப்பா என்றழைக்கும் கன்றுகள் எதுவாகிலும் பசி துக்கங்கள் துடைத்தெறியும் அன்னை கோமாதாவும் நீ. துவாரகா மாயீ! எங்கள் சாயீ! துணைவேண்டுவோருக்கெல்லாம் ஆயுதம் நீ! சத்குருவே, தத்தாத்ரேய அவதாரமே! நாதவம்ச பரம்பரை மகாராஜரே! கோடீஸ்வர ஜனங்களுக்கும், கோடியே இல்லா ஜனங்களுக்கும், நம்பிய காலம் முதலாக நற்றுணை சிவமாக , தேரோட்டும் கிருஷ்ணராக, அவர் வாழ்வை ஓட்டிச்செல்ல, வழிகாட்டும் நாயகா, நின் பாதங்கள் போற்றி! போற்றி!! உன்னை நாட எண்ணும் எத்துணை பாவியற்கும் நற்கதி வழங்கும் உன் சீர்மிகு திருவடிகள் போற்றி! போற்றி!! கோழைகளாய் வாழும் எவர்க்கும் நெஞ்சிலே வீரம் கொடு! கூரை வழி வானம் தெரியும் ஏழை எவர்க்கும் வீடுகட்டும் செல்வம் கொடு! அஷ்ட ஐஸ்வர்யங்கள், சகல சௌபாக்கியங்கள், கர்மவினைகளை கழட்டிவிடுகின்ற பாவ விமோச்சனங்கள், உன் சமாதியில் சரணடையும் எவர்க்கும் நீ தரும் பரிசுகள். உலகம் நலம் பெற வேண்டுகிறேன், உன் பொன்னடியில் இன்றுமுதல் சுயமாய் வீழ்த்திக்கொள்கிறேன். என்னுள் ஆணவம் வேண்டாம், அகங்காரம் வேண்டாம், அன்பே செழிக்கட்டும், அஃது, உன் அடியார் திருக்கூட்டத்தில் இந்த ஈனப்பிறவியையும் இணைத்துக்கொள்ளட்டும். வழி தாருங்கள் சாயீ! உம் கருணை விழியை கடைக்கண் அளவிலேனும் எம் மீது பாய்ச்சுங்கள். உம் புகழ் பாட , குரு புகழ் பாட, திருவருள் சித்தித்து உம் அடியார் உலகத்தில் எம்மையும் அறிமுகம் செய்துவையும் ஹரியாய் திகழும் ஷீரடி சாயீ! ஜெய் சாய் ராம், ஜெய் சாய் ராம், ஜெய் சாய் ராம்!
   

Share This Page