நடிகை சமந்தா கர்ப்பமா? டெலிவரி தேதியை அறிவித்ததால் பரபரப்பு! பிரபல நடிகை சமந்தா, தனது டெலிவரி தேதியை அறிவித்து அந்த தேதியில் தனது குழந்தை இவ்வுலகை எட்டிப்பார்க்கும் என கூறியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது நடிகை சமந்தா, நடிகர் நாகசைதன்யாவை திருமணம் செய்த பின்னர் தொடர்ந்து நாயகியாக நடித்து வருகிறார் என்பதும் திருமணத்திற்கு பின்னரும் தொடர் வெற்றிப்படங்களை கொடுத்து வரும் நாயகியாக இருந்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் சமந்தா தன்னிடம் சமூக வலைத்தள பயனாளிகளும் நிருபர்களும் தொடர்ந்து குழந்தை எப்போது? என்ற கேள்வியை கேட்டு வருவதாகவும் இதனையடுத்து தனக்கு வரும் 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7ம் தேதி காலை 7 மணிக்கு எனக்கு குழந்தை பிறக்கும்’ என்றும் கிண்டலுடன் கூறியுள்ளார். அவரது பதிலில் உள்ள நகைச்சுவையை அவரது ரசிகர்கள் ரசித்து வருகின்றனர். நடிகை சமந்தா தற்போது ‘96’ படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்து வருகிறார். இந்த படத்தை அடுத்து அவர் புதிய படங்களை ஒப்புக்கொள்ள மறுப்பதால் ஒருவேளை உண்மையிலேயே 2022ஆம் ஆண்டு குழந்தை பெற்றுக்கொள்ள அவர் முடிவு செய்துவிட்டதாகவும் கூறப்படுகிறது
பாகுபலி நடிகர்’ தந்தை வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை : அதிர்சியில் நடிகர்கள் ! தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகர்கள் தயாரிப்பாளர்களின் வீடுகள் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இந்த சம்பவம் டோலிவுட் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகுபலி படத்தில் நடித்த பிரபல நடிகர் ராணாவின் தந்தையும் சினிமா தயாரிப்பாளருமான சுரேஷ் பாபுவின் வீடு அலுவலகங்களில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர். தயாரிப்பாளர், எஸ். ராதா கிருஷ்ணாவுக்கு சொந்தமான ஹரிஸ்கா & ஹாசன் கிரியேசன்ஸ் நிறுவனத்திலும், நடிகர் நானி வால்போஸ்டர் நினிமா கம்பெனியிலும், நடிகர் மகேஷ் பாபுவுக்கு சொந்தமான ஜி.மகேஷ் பாபு எண்டர்டெயின்மெண்ட் கம்பெனி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சமீபத்தில்,தொலைக்காட்சிக்கு பேட்டி கொடுத்த ராணாவின் தந்தை, சுரேஷ்பாபு, ஆன்லைமில் படங்கள் வெளியாவதால் தொடர்ந்து நிறுவனம் நஷ்டம் அடைந்து வருவதாகவும், மின்சார கட்டணம் கூட கட்டவில்லை என தெரிவித்திருந்தார். அப்போது, அவர் கணக்குக் காட்டியிருக்கும் தொகைக்கும், அவர் பேட்டி கொடுக்கும்போது கூறிய தொகைக்கும் இடையே வேறுபாடு இருந்ததால் அவரது அலுவலகத்தில் சோதனை நடந்ததாக தகவல்கள் வெளியாகிறது. சுரேஷ் பாபுவின் அப்பா, பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் டகுபதி ஆவார். இவர்களது நிறுவனம் சார்பில் நூற்றுக் கணக்கான திரைப்படங்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ராக்கி பாய் வந்துட்டான்: KGF 2 தீம் மியூசிக் ப்ரொமோ வீடியோ! எப்போது வரும் என்று இந்தியா முழுவதும் உள்ள ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் படமான கே.ஜி.எஃப்: சாப்டர் 2ன் புதிய அப்டேட் ஒன்றை அதன் இசையமைப்பாளர் வெளியிட்டுள்ளார். யஷ் நடித்து 2018 டிசம்பரில் வெளியான படம், கே.ஜி.எஃப் சாப்டர் 1. கன்னடத்தில் எடுக்கப்பட்ட இந்த படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இந்தியா முழுவது மிகப்பெரும் வரவேற்பை பெற்றது இந்த படம். இதனை அடுத்த பாகமான கே.ஜி.எஃப்: சாப்டர் 2 எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆர்வமாக காத்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் இப்படத்தின் இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தி கன்க்ளூஷன்’ என பதிவுட்டு கே.ஜி.எஃப் 2 தீம் மியூசிக்கின் ப்ரொமோவை பகிர்ந்துள்ளார்.
இவர் தான் என் காதலர்! திருமண அறிவிப்பை வெளியிட்டார் நிக்கி கல்ராணி! தமிழ் சினிமாவிற்கு வருகைத்தந்த வேற்று மாநில நடிகைகள் பல பேர் குறுகிய காலத்தில் பேமஸ் ஆகி ரசிகர்களின் பேவரைட் நடிகையாக வலம் வருகிறார். அந்தவகையில் கர்நாடகாவை பூர்வீகமாகக் கொண்ட நிக்கி கல்ராணி கடந்த 2014-ம் ஆண்டு வெளியான "வெள்ளிமூங்கா" என்ற மலையாள படத்தின் மூலம் சினிமாவில் தடம் பதித்தார். அந்த படம் சூப்பர் ஹிட் அடித்ததால் தொடர்ந்து மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் அடுத்தடுத்து அவருக்கு படவாய்ப்புகள் குவிந்தது. பின்னர் தமிழில் நடிகர் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் கடந்த 2015ம் ஆண்டு வெளியான டார்லிங் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அந்த படமும் வெற்றியடைய பின்னர் தமிழிலும் அவருக்கும் நல்ல கேரியர் இருந்து வந்தது. இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற நிக்கி கல்ராணியிடம், திருமணம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், நடிகை நிக்கி கல்ராணி கலந்து கொண்ட படவிழா ஒன்றில் அவரிடம் காதல் குறித்தும், திருமணம் குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. என்னுடைய காதலரை நான் சென்னையில் சந்தித்தேன்.அவரோடு தான் எனக்கு திருமணம் நடக்க இருக்கிறது. 3 ஆண்டுகளுக்குப் பின் எங்கள் திருமணம் குறித்த அறிவிப்பு வரும். இப்போதைக்கு அவரை பற்றி வேறு எதுவும் கூறமுடியாது ” என்று தெரிவித்துள்ளார்.
ரிட்டையரான இளையராஜாவுக்கு வாய்ப்பு கொடுத்த உதயநிதி – இணைய உடன்பிறப்புகள் ஆர்ப்பரிப்பு ! சைக்கோ படத்தில் இளையராஜாவுக்கு உதயநிதி வாய்ப்பு கொடுத்ததாக இணைய உடன்பிறப்பு ஒருவர் ஆர்ப்பரிக்க ஆரம்பித்துள்ளார். தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் ஒரு நடிகர் இடம்பிடிக்க அவரது படத்தின் பாடல்கள் ஹிட்டாக வேண்டியது அத்தியாவசியம். இந்த வகையில் ராமராஜன், பாண்டியன், கார்த்திக், பாண்டியராஜன், பார்த்திபன் ஆகியோரின் பட்ங்களுக்கு இளையராஜா தன் பாடல்கள் மூலம் அங்கிகாரத்தைப் பெற்றுத்தந்தார். அந்த வகையில் சமீபத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் இளையராஜா இசையமைத்து மிஷ்கின் இயக்கும் படத்தின் ‘உன்ன நெனச்சு’ என்ற பாடல் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதையடுத்து இந்த பாடலின் மூலம் உதயநிதிக்கும் மக்கள் மனதில் நல்ல இடம் கிடைக்கும் எனப் பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். இதைப் பொறுத்துக்கொள்ள முடியாத உடன்பிறப்புகள் உதயநிதிதான் ரிட்டையரான இளையராஜாவுக்கு இந்தபடத்தில் வாய்ப்புக்கொடுத்தார் என்கிற ரீதியில் பேச ஆரம்பித்துள்ளனர். அப்படிபட்ட ஒரு இணைய உடன்பிறப்பின் முகநூல் பதிவு :- ராஜா இசைஞானிதான். மறுப்பவர் எவரும் இல்லை!.ராஜா உச்சத்தில் இருந்த காலத்தில் வளரும் நடிகர்களான பாண்டியன், ராமராஜன், ராஜ்கிரன், கார்த்திக், பிரபு என பலரும் ராஜாவைத் தேடிச் சென்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் வரவிற்கு பிறகு ராஜாவிற்கு பெரிய அளவிலான ஹிட் படங்கள் கடந்த 20 வருடங்களில் இல்லவே இல்லை!! இப்போது ரஹ்மான் காலம் போயி அனிருத்கள் காலம்!! இந்நிலையில் வளரும் நடிகராய் இப்போது டிரண்டில் உள்ள இசையமைப்பாளர்களைத் தேடி அவர்களது நிழலில் தான் வளர நினைக்காமல் தன் மீது நம்பிக்கை வைத்து ரிட்டையர்ட் இசையமைப்பாளரைத் தேர்ந்தெடுத்த உதயநிதியின் தில்லை தன்னம்பிக்கையை மனதாரப் பாராட்டுகிறேன்!!