சிறுகதை "முன்மாதிரி"by கீதாபாலன்

Discussion in 'Geethabalan Novels' started by Geethabalan, Jul 17, 2018.

  1. Geethabalan

    Geethabalan Active Member

    Joined:
    Nov 21, 2014
    Messages:
    257
    Likes Received:
    231
    Trophy Points:
    43
    Gender:
    Female
    Occupation:
    HomeMaker,writing
    Location:
    Chennai
    வணக்கம் மக்களே,

    ரொம்ப நாட்கள் உங்களையெல்லாம் சந்திக்க முடியாம போயிடுச்சு. அனைவரும் நலமென்று நம்புகிறேன்,அதுபோல் நானும் நலமே.
    நீண்ட நாவலோட சந்திக்கனும்னு நினைத்தேன் ஆனால் குட்டி வச்சிட்டு என்னால நிமிரக்கூட முடியலை. லேப்டாப் எடுத்தா எனக்கு முன்னாடியே அதை அவங்க நோண்ட ஆரம்பிக்குறாங்க! ஹாஹா நம்ம வாரிசு அப்படி தான் இருக்கும்னு நமக்கு தெரியும் இருந்தும் கடுப்பாகுது.

    அதுனால நம்ம "தமிழ்சுரபு"யில நடந்த சிறுகதை போட்டிக்குனே புதுசா ஒரு கதை எழுதினேன். போட்டி முடிஞ்சதுக்கு அப்புறம் அட்மின் அனுமதியோட அதை இங்க போட்டுட்டேன்னு நினைத்தேன்.ஆனா இப்பதான் தெரியுது அது நினைச்சதோட போட்டுட்டேன்னு மறந்துட்டேன்னு. அதை இப்ப இங்க பதிவு செய்யலாம்னு வந்துட்டேன்.

    படிச்சிட்டு எப்படி இருக்குனு சொல்லுங்க.

    இதோ "முன் மாதிரி" சிறுகதை!!!!!



    "முன் மாதிரி" ✎கீதாபாலன்

    பெண்களுக்காக நடத்தப்படவுள்ள 'அந்த' கூட்டம் பரபரப்பாக தயாராகிக் கொண்டு இருந்தது.பெண்கள் என்றதும் வயதில் மூத்தோரென்ற அர்த்தத்தை கொள்ள வேண்டாம்!!!இங்கு 'பெண்கள்' என குறிப்பிடுவது தாய்மைக்கு தயாராகவும்,தாய்மை அடைந்தவர்களும் என இளம் தாய்மார்களும்,சிலரின் கணவர்களும் கூடி இருந்தனர்.

    கூட்டம் தொடங்க தயாராக இருந்த கடைசி நேரத்தில் சிறப்பு விருந்தினர்கள் மொத்தமாக மேடைக்கு வந்தனர்.வந்திருந்தவர்களில் ஒருவர் மட்டும் சற்று வித்தியாசமாக தோற்றமளித்தார்.ஆம்!பெண் போன்ற உடையும்,நடையும்.ஆனால் பெண்தானா என யொசிக்க வைக்கும் தோற்றம். அனைவரும் யோசனை கலந்த ஆச்சர்யத்துடன் அவரை பார்த்துக் கொண்டிருந்தனர்.மற்ற கூட்டத்திலோ இடத்திலோ பார்வைகள் பேச்சுக்களாய் மாறி இருக்கும்,ஆனால் இங்கு பார்வை பரிமாற்றங்கள் அவர்களின் பேச்சுக்கள் என்னவாக இருக்கும் என்பதை சத்தமின்றி உணர்த்தியது.அந்த சத்தமின்றி வந்த பார்வைகளை,அவரின் கண்களும் மின்னல் ஒளியோடு கம்பீரமாய் அதை எதிர்நோக்கியது.

    தாய்மை என்னும் புதிய உலகிற்கு அடியெடுத்துவைக்கும் பெண்களுக்கு அத்தியாவசியமான அறிவுறைகளை எளிய முறையில் அனைத்து தரப்பினர்களும் சென்றடையும் வகையில் வந்திருந்த அனைத்து மருத்துவர்களும்-தேவைகளுக்கு சமூக-ஆர்வலர்களும் அவர்களிடம் பேசினர்.இறுதியில் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த 'அவர்' அழைக்கப்பட்டார்.இதோ அவரின் அழைப்பு,


    "அடுத்ததாக 'மிசஸ்.ராதாகுமாரி' நம்மோடு பேச வருகிறார்.வாங்க மேடம்"என அவருக்கு அழைப்புவிடுத்தனர்.


    ராதாகுமாரி யார் என்று யாருக்கும் தெரியவில்லை தான்,ஆனால் அவர் யார்,அவரின் அறிவுறை என்னவாக இருக்குமென அறிய ஆவலாய் பார்த்தபடி இருந்தனர்.அவர்களின் ஆவலை கைத்தட்டலின் கரகோசத்தில் காட்டினர்.அரங்கமே அதிர்ந்தது.ராதாகுமாரிக்குமே இந்த கரகோசம் ஆச்சர்யமே என்பதை அவரின் முகத்தில் தெரிந்தது.

    சிரித்தபடி, "நான் மேடைக்கு வரும்போது உங்களின் பார்வையில் தெரிந்த கேள்விகளுக்கு பதிலளிக்க தயாராயிருந்த என்னால்,இப்படி என் பேச்சுக்கு முன்பே உங்களிடமிருந்து கிடைத்த கைதட்டலுக்கு 'நன்றி' தவிர என்ன கூறுவது என தெரியவில்லை என கூறிக்கொண்டே அனைவருக்கும் பெரிய வணக்கத்தை வைத்தார் ராதாகுமாரி.மீண்டும் கரகோசத்துடன் பேச ஆரம்பித்தார்.


    "என் பெயரை கேட்டதுமே நான் பெண் தான் என்பதை உங்களால் புரிந்திருக்க முடியும்.ஆனால் என் தோற்றம் முரண்பாடாக இருக்கும்.அது நான் செய்த தவறுக்கு கிடைத்த பரிசு.இன்னைக்கு உங்ககிட்ட நான் அதைப்பத்தி தான் பேச வந்திருக்கிறேன்.தாய்மையில் சிறந்தது எது?இப்படியொரு கேள்வி கேட்டால் அதற்க்கான விடையில் இன்னொரு கேள்விக்கான பதிலும் வரும்.அது 'ஒரு தாயாய் இந்த சமுதாயத்துக்கு நீங்கள் செய்யவேண்டிய கடமை எது?'


    "நோயில்லா ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்குவதே ஒரு தாயின் கடமை.அதற்கு இயற்கையே நமக்கு உடந்தையாக இருக்கிறது.பெண்களுக்கு மட்டுமே கிடைத்த அரும்பெரும்பக்கியமான 'தாய்பால்' தான் அது.'தாய்பால்' கொடுப்பதால் குழந்தை மட்டுமின்றி தாய்க்குமே நிறைய பலன்கள் இருக்கின்றன.இதுபற்றி ஏற்கனவே பேசிய மருத்துவர்கள் கூறியிருக்கின்றனர் தான்.அதையே தான் நானும் பேச வந்திருக்கிறேன்,ஆனா என்னையே நான் உங்களுக்கு "முன்மாதிரி"யாக காட்டி பேச வந்திருக்கிறேன்.


    "என்னை சுற்றி இருந்தவர்கள் அனைவரும் எனக்கு எடுத்துக்கூறினர்.தாய்பால் கொடுப்பதால் தாய்-சேய் இருவருக்கும் நல்ல புரிதல் வரும்.தாயின் அணைப்பு சேய்க்கு பாதுகாப்புணர்வை தரும்.தாய்ப்பால் கொடுப்பதால் பிரசவகால உடல் மாற்றங்கள் ஒவ்வொன்றாய் சீராகும்.பெரும்பாலான பெண்களுக்கு உடல்பருமன் மீண்டும் சீராக வாய்ப்புள்ளது.தாய்ப்பால் கொடுக்கும்போது அதிக தாகம் எடுக்கும்.தண்ணீர் குடிக்க,குடிக்க உடல் உள்-உறுப்புகளின் இயக்கம் சீராக இருக்கும்"


    "இப்படி எனக்கு அத்தனை அத்தனை நல்ல விஷயத்தை கூறினர்.அதோடு 'மார்பக புற்று நோய்' வருவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு என கூறியும் நான் கேட்கவில்லை.என் அறிவிற்கு அதுவெல்லாம் எட்டவேயில்லை.தாய்ப்பால் கொடுப்பதால் என் அழகும்,தூக்கமும் கெடும் என்று எண்ணி என் குழந்தைகளுக்கு தாய்ப்பால் தர மறுத்தேன்.இன்று என் மக்களுக்கு ஏதேனும் ஓர் உவாதைகள் வந்துக் கொண்டு இருக்கிறது.என் சந்ததிகளுக்கு மட்டும் இந்த உவாதையை நான் தராமல்,அவர்களின் சந்ததிக்கும் இதை ஓஎர் பரம்பரையாக தந்துவிட்டேன்.என்னால் நம் சமுதாயத்துக்கு ஆரோக்கியமான சந்ததிகளை தர இயலவில்லை.அதோடு அன்று அனைவரும் சொன்னதை கேட்காமல் என் அழகு முக்கியமென எண்ணி தாய்ப்பால் தர மறுத்த எனக்கு மார்பக புற்று நோய் தாக்கியது. எதற்கும் உதவாத என் மார்பகங்கள் வெட்டி வீசப்பட்டன.அதற்கு நான் கவலைப்படவில்லை.இனி இந்த நிலை மற்றவர்களுக்கு வரவேக்கூடாது என எண்ணி.என்னையே முன்-நிறுத்தி தாய்ப்பாலின் முக்கியத்துவத்தை கூற தெளிந்து வந்த நான், உங்களை தெளிவாக்க வந்துள்ளேன்.


    "தாய்ப்பால் கொடுங்கள்,'அழிவின் விளிம்பில்' இருக்கும் சந்ததியினரை காப்பாற்றுங்கள்"


    -கீதாபாலன்

    Do read & give your comments here
     

Share This Page