சில வாரங்களிlலேயே உங்கள் தொப்பையை குறைக்க உதவும் அற்புத வழிகள்....!

Discussion in 'Fitness & Easy workouts' started by NATHIYAMOHANRAJA, Feb 11, 2019 at 6:37 PM.

 1. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  3,850
  Likes Received:
  351
  Trophy Points:
  83
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  தூங்கும்போது குப்புறப்படுத்து தூங்குங்கள். இதனாலும் தொப்பை குறையும். அதிலும் இரண்டே வாரங்களில் தொப்பை குறைய வேண்டுமானால், குப்புறப்படுங்கள். மேலும் தொப்பையை குறைக்க உதவும் உடற்பயிற்சி யோகமுத்ரா.

  இந்த யோகானசம் செய்வதற்கு பத்மாசன நிலையில் அதாவது உட்கார்ந்து கொண்டு கால்களின் பாதங்கள் வெளிப்பகுதியில் இருக்குமாறு வைத்துக்கொண்டு உடலை நேராக நிமிர்த்தி கைகளை மிக இளக்கமாக வைத்து முதுகின் பின் புறத்திற்கு கொண்டு வந்து, உடலை முன்னோக்கி வளைத்து கைகள் இரண்டால் கால் கட்டை விரல்களைப் பிடித்து முகத்தை தரையில் பதிக்க வேண்டும்.

  ஆரம்பத்தில் இதனை செய்வது கடினமாகத் தோன்றினாலும், நாளடைவில் எளிதாக செய்துவிட முடியும். குனியும்போது மூச்சை வெளிவிட்டு, நிமிரும் போது மூச்சை உள்வாங்க வேண்டும். இவ்வாறு மூன்றிலிருந்து ஐந்து முறை செய்தல் வேண்டும்.

  பயன்கள்: கீழ்முதுகுத் தண்டுவலி நீங்கும். உடலின் இரத்த ஓட்டம் சீராகும். தொப்பை குறையும். வாயுத்தொல்லை நீங்கும். செரிமான சக்தி அதிகரிக்கும். கல்லீரல் பலப்படும். நரம்புகள் புத்துணர்வு பெறும்.
  [​IMG]
  கால் மூட்டுகளில் வலி இருப்பின், அவை குறையும். நன்கு மூச்சு விடவும், தினமும் தியான நிலையில் 30 நிமிடம் மூச்சுப்பயிற்சி செய்து வந்தாலும், தொப்பை குறைய ஆரம்பிக்கும்.

  எதற்கெடுத்தாலும், வண்டியில் செல்வதை தவிர்த்துவிட்டு, நடந்து சென்றால், தொப்பை குறைவதோடு, கால்களும் வலுவாகும். சைக்கிளில் செல்வதால், சுற்றுச்சூழலை மாசுபடாமல் வைத்திருப்பதோடு, தொப்பையும் கரையும். அதிலும் தினமும் ஒரு மணிநேரம் சைக்கிள் ஓட்டி வந்து, இரண்டு வாரம் கழித்து பாருங்கள். உங்கள் உடலில் நல்ல மாற்றம் தெரியும்.

  தொப்பை குறைவதற்கு, நன்கு வாய்விட்டு சப்தமாக அடிக்கடி சிரிக்க வேண்டும். இது வயிற்று தசைகளுக்கான ஒரு உடற்பயிற்சியாகும். மேலும் வாய்விட்டு சிரித்தால், நோயின்றி வாழலாம்.

  தொப்பை குறைய வேண்மென்றால், தண்ணீரை அதிகம் குடிக்க வேண்டும். தண்ணீர் அதிகம் குடித்தால், நிச்சயம் 2 வாரங்களில் தொப்பை குறையும்

  எப்போதும் மெதுவாக ரசித்து ருசித்து சாப்பிடுவதால், அதிகமான அளவில் சாப்பிடாமல் இருக்கலாம். மேலும் உணவில் பச்சை காய்கறிகளை அதிகம் உட்கொள்ளுங்கள். அதிலும் ப்ராக்கோலி, பாகற்காய் மற்றும் முட்டைக்கோஸ் ஆகியவற்றை ஜூஸ் போட்டு குடித்து வந்தால், உடல் எடை விரைவில் குறைவதோடு, தொப்பையும் குறையும்.

  நீர்ச்சத்துள்ள பழங்களான பேரிக்காய் மற்றும் தர்பூசணியை பசி ஏற்படும் போது சாப்பிட்டால், உடலில் கொழுப்புக்கள் சேராமல் இருப்பதோடு, தொப்பையும் குறையும்.

  நார்ச்சத்துள்ள உணவுகளை டயட்டில் சேர்த்து வந்தால், தொப்பை கரையும். அதிலும் ஓட்ஸ், ரொட்டி, ப்ரௌன் பிரட் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
   

Share This Page