சிவ யோகம்

Discussion in 'Religious & Sprituality' started by NATHIYAMOHANRAJA, Oct 10, 2018.

  1. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    1,750
    Likes Received:
    72
    Trophy Points:
    48
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    சிவ யோகம்
    **************
    உள்ளிருந்து வெளியேயும் வெளியிலிருந்து உள்ளேயும் என உள்ளும் புறமுமாய் திரிந்து கொண்டிருக்கும் பிராணன் எனும் மூச்சுக் காற்றை
    முறைப் படித் தடுத்து உள் நிறுத்தி சிவ நாமத்தால் தூய்மையாக்கி நன்னெறி நடப்போருக்கு சிவ யோகம் பெருகி உடம்பானது பொன்னைப் போன்ற தேகமாகும்
    உயிருக்கு உயிராய் உள்ளே விளங்குகின்ற சிவம் உடலை விட்டு வெளியேற மாட்டான்.
    சிவம் வெளியேறாத காரணத்தினால் நம்முள்ளே இருக்கின்ற சிவனின் உடலாம் உயிர் இவ்வுடலில் வலுபெற்றுத் திகழும்.
    இப்படித்தான் சித்தர்கள் பல ஆயிரம் ஆண்டுகள் உடலோடு வாழ்ந்திருக்கிறார்கள்..

    மந்திரம்
    *********
    புறப்பட்டுப் புக்குத் திரிகின்ற வாயுவை
    நெறிப்பட உள்ளே நின்மல மாக்கில்
    உறுப்பு சிவக்கும் உரோமம் கருக்கும்
    புறப்பட்டுப் போகான் புரிசடையோனே...
    திருமந்திரம் ...556
    திருமூலர்...
     

Share This Page