ஜனநாயகத்துக்கு முரணான தீர்ப்பு: திருமாவளவன்

Discussion in 'Memes and Funny Videos - Daily Updates' started by NATHIYAMOHANRAJA, Oct 25, 2018.

 1. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  4,430
  Likes Received:
  469
  Trophy Points:
  83
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  18 எம்எல்ஏக்கள் பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளது ஜனநாயகத்துக்கும் சட்டத்துக்கும் முரணானது என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
  முதல்வர் மீது நம்பிக்கை இல்லை எனக் கூறிய அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 18 பேரைத் தகுதி நீக்கம் செய்தது செல்லும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

  இதுகுறித்து தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், ''இந்தத் தீர்ப்பு மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. இது முற்றிலும் ஜனநாயகத்துக்கு முரணானது.
  முதலமைச்சரை மாற்றவேண்டும் என்று ஆளுநரிடம் முறையிட்டார்கள் என்பதைத் தவிர அவர்கள் வேறெந்த குற்றத்தையும் செய்யவில்லை. இது கட்சித் தாவல் சட்டத்தின் கீழ் வரும் என்று அளிக்கப்பட்ட தீர்ப்பு அதிர்ச்சியை அளிக்கிறது. அவர்கள் கட்சி மாறவில்லை.
  தங்களின் அதிருப்தியை வெளிப்படுத்துவது அவர்களின் ஜனநாயக உரிமை. முதல்வரை மாற்றவேண்டும் என்று கூறியதற்காக கட்சி சார்பில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கலாம். ஆனால் அதற்காக பதவிநீக்கம் செய்தது எதேச்சதிகாரமான போக்கு. அதை உயர் நீதிமன்றம் உறுதிப்படுத்தி இருக்கிறது.
  டிடிவி தினகரன் மேல்முறையீடு செய்தால், நிச்சயம் அவருக்கு ஆதரவான தீர்ப்பு கிடைக்கும் என நம்புகிறேன்'' என்று தெரிவித்துள்ளார்
   

Share This Page