ஜில் ஜில் ஜிகிர்தண்டா

Discussion in 'Recipes' started by saravanakumari, Mar 12, 2018.

  1. saravanakumari

    saravanakumari Administrator Staff Member Manager Manager Manager

    Joined:
    Nov 12, 2014
    Messages:
    2,243
    Likes Received:
    1,018
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    home maker
    Location:
    villupuram
    ஜில் ஜில் ஜிகிர்தண்டா

    [​IMG]

    தேவையான பொருட்கள் :

    பால் - ஒரு லிட்டர்
    சர்க்கரை - 8 டேபிள் ஸ்பூன்
    சைனா கிராஸ்(China Grass) - 4 டேபிள் ஸ்பூன்
    ரோஸ் சிரப் - 1 டேபிள் ஸ்பூன்
    நன்னாரி சிரப் - 1 டேபிள் ஸ்பூன்
    ஐஸ்கிரீம் ஸ்கூப் (வெனிலா) - 1
    பால் கோவா - 2 டேபிள் ஸ்பூன்


    செய்முறை :

    * அடிகனமான வாணலியில் ஒரு லிட்டர் பாலை ஊற்றி அதனுடன் சர்க்கரை சேர்த்து மெல்லிய தீயில் கொதிக்க விட்டு, ரோஸ் கலர் சேர்க்கவும். பால் அரைலிட்டராக சுண்டும் வரை மிதமான தீயில் வைக்கவும். பால் நன்றாக சுண்டியதும் ஆற வைத்து பிரிஜ்ஜில் 6 மணி நேரம் வைக்கவும்.

    * சைனாகிராஸை சூடான நீரில் ஒரு கொதிவிட்டு இறக்கி, 2 மணி நேரம் அப்படியே வைக்கவும். 2 மணி நேரம் கழித்து ஜெல்லி போல உள்ள `சைனா கிராஸை’ சிறு துண்டுகளாக வெட்டி, பிரிஜ்ஜில் 6 மணி நேரம் குளிர வைக்கவும்.ஒரு நீளமான கண்ணாடித் தம்ளரில் முதலில் குளிர்ந்த பாலை பாதியளவு ஊற்றவும்.

    * அடுத்து பாலின் மேல் ஜெல்லிகள் போல உள்ள சைனாகிராஸ் துண்டுகளைப் போடவும். பிறகு அடுத்தடுத்து அதன் மேல் ரோஸ் சிரப், நன்னாரி சிரப் ஊற்றவும்.

    * அடுத்து அதன் மேல் வெனிலா ஐஸ்கிரீம் ஸ்கூப்பை வைத்து அதன் மேல் பரவலாக பால்கோவாவைத் தூவி ஜில்லென்று பருகலாம்.

    * ஜில் ஜில் மதுரை ஜிகிர்தண்டா ரெடி.
     

Share This Page