ஜெ ஜெயலலிதா பயோடேட்டா

Discussion in 'Short Stories' started by NATHIYAMOHANRAJA, Dec 5, 2019.

  1. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    7,858
    Likes Received:
    523
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    அரசியல் பங்களிப்பு[தொகு]

    [​IMG]

    பொதுக்கூட்டம் ஒன்றில் கருணாநிதி, எம்ஜிஆருடன் ஜெயலலிதா
    1981ல் அ. தி. மு. க. வில் இணைந்து, அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் ஆனார். அதன் பிறகு 1984ஆம் ஆண்டு நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் ஆனார். நாடாளுமன்றத்தில் தன் ஆங்கில புலமையால் பல தலைவர்களை கவர்ந்தார். தன் கன்னி பேச்சுகளால் அப்போது பிரதமராக இருந்த இந்திராகாந்தியே கவர்ந்தார். இவருக்கு நாடாளுமன்றத்தில் 185வது இருக்கை அளிக்கப்பட்டது. இது பல காலத்திற்கு முன்னர் அறிஞர் அண்ணா (முன்னாள் தமிழக முதல்வர் கா. ந. அண்ணாதுரை) அமர்ந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு முன்னால் மோகனரங்கம் (மேலவை உறுப்பினர்) அமர்ந்திருந்தார்.[8] எம். ஜி. இராமச்சந்திரனின் மறைவுக்குப் பிறகு, இரண்டு ஆண்டுகள் கழித்து [9] 1989 ஆவது ஆண்டில் அ. தி. மு. கவின் தலைமைப் பொறுப்பேற்று அதன் பொதுச்செயலாளர் ஆனார்.
    1984 முதல் 1989 வரை தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். முன்னாள் முதல்வர் ம. கோ. இராமச்சந்திரனின் இறப்புக்குப் பின்னர் அவரது அரசியல் வாரிசாக ரசிகர்களால் ஜெயலலிதா அறியப்பட்டார். அப்போது அதிமுக இரு அணிகளாக பிரிந்தது. எனினும் தம் முயற்சியால் இரு அணிகளையும் மீண்டும் இணைத்து முடக்கப்பட்ட கட்சி சின்னத்தை காப்பாற்றினார். ஜானகி இராமச்சந்திரனுக்குப் பின்னர் தமிழ்நாட்டின் இரண்டாவது பெண் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
    இவர் முதல்வராக இருந்த 1991–96 பதவிக் காலத்தில் பல புரச்சிகரமான திட்டங்களை தமிழகத்தில் கொண்டு வந்தார். பெண்கள் முன்னேற்றத்தில் மிகுந்த அக்கறை கொண்டு பல நல்ல திட்டங்களை கொண்டு வந்தார். 1996 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் எதிர்க்கட்சிகள் இவர் மீது பல வழக்குகளை தொடர்ந்தன.
     
  2. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    7,858
    Likes Received:
    523
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    சட்டமன்றப் பொறுப்புகள்[தொகு]

    தமிழக முதல்வர்[தொகு]

    ஜெயலலிதா தமிழக முதல்வராக கீழ்காணும் காலங்களில் பணியாற்றியிருக்கிறார்.
    முதல்வரைதேர்தல்குறிப்பு
    ஜூன் 24, 1991மே 11, 19961991 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்தமிழகத்தின் 11வது முதல்வர்
    மே 14, 2001செப்டம்பர் 21, 2001தேர்தலில் போட்டியிடாமல் முதல்வராக பதவி வகித்தார்இப்பதவி முடக்கப்பட்டது
    மார்ச் 2, 2002மே 12, 20062001 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்தமிழகத்தின் 14வது முதல்வர்
    மே 16, 2011செப்டம்பர் 27, 20142011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்தமிழகத்தின் 16வது முதல்வர் (இப்பதவி முடக்கப்பட்டது)
    மே 23, 2015மே 22, 20162015 ஆர். கே. நகர் இடைத்தேர்தல்[10]தமிழகத்தின் 18வது முதல்வர்
    மே 23, 2016டிசம்பர் 5, 20162016 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்தமிழகத்தின் 19வது முதல்வர் (இப்பதவி முடக்கப்பட்டது)
    இவர் மேல் வழக்குகள் இருந்தாலும் 2001, மே அன்று முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். உச்ச நீதிமன்றத்தால் கண்டிக்கப்பட்டதால் நான்கு மாதம் கழித்து பதவி விலகினார். இவர் மீதான தண்டனை டான்சி வழக்கில் நீக்கப்பட்டதை தொடர்ந்து 2002, மார்ச்சு மாதம் முதல்வராக பதவியேற்றார்.[11] 2002இல் ஜெயலலிதா ஆண்டிப்பட்டியில் போட்டியிட ஏதுவாக தங்க தமிழ்ச்செல்வன் ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதியிலிருந்து பதவி விலகினார். [12] 2002, பிப்ரவரி 21ல் சட்டமன்ற இடைத்தேர்தலில் ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிட்டு வென்றார்.
     
  3. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    7,858
    Likes Received:
    523
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர்[தொகு]

    ஜெயலலிதா தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் முதல் பெண் எதிர்க்கட்சித் தலைவராகப் பணியாற்றியிருக்கிறார்.
    1. 1989 முதல் 1991வரை.
    சட்டமன்ற உறுப்பினர்[தொகு]

    ஆண்டுநிலைமைஇடம்
    1989வெற்றிபோடிநாயக்கனூர்
    1991வெற்றிபர்கூர், காங்கேயம்
    1996தோல்விபர்கூர்
    2002வெற்றிஆண்டிப்பட்டி
    2006வெற்றிஆண்டிப்பட்டி
    2011வெற்றிதிருவரங்கம்
    2015வெற்றிடாக்டர்.ராதாகிருஷ்ணன் நகர்
    2016வெற்றிடாக்டர்.ராதாகிருஷ்ணன் நகர்
    2001, ஏப்பிரல் 24. அன்று ஜெயலலிதா 2001, மே 10 அன்று நடைபெற்ற 2001 சட்டமன்றத் தேர்தலுக்கு 4 தொகுதிகளுக்கு ( ஆண்டிப்பட்டி, கிருஷ்ணகிரி, புவனகிரி, புதுக்கோட்டை) வேட்புமனு அளித்திருந்த மனுக்கள் தள்ளுபடி\நிராகரிக்கப்பட்டன. இவையனைத்தும் இரண்டு ஆண்டுகளுக்கோ அதற்கு மேலோ தண்டனைபெற்ற குற்றவாளிகள் தேர்தலில் போட்டியிட சட்டம் அனுமதிக்கவில்லை என்பதால் தள்ளுபடி செய்யப்பட்டன.[14] ஆண்டிப்பட்டி தேர்தல் அதிகாரி செயா, கிருஷ்ணகிரி தேர்தல் அதிகாரி மதிவாணன் சட்ட உட்கூறு 8(3) கீழ் வேட்புமனுவை தள்ளுபடி செய்தனர். இச்சட்டத்தின் படி ஒருத்தர் இரு தொகுதிகளுக்கு மேல் மனு தாக்கல் செய்திருந்தால் மனுவை தள்ளுபடி செய்யலாம். ஜெயலலிதா டான்சி நில வழக்கில் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெற்றிருந்தார். அவரது மேல் முறையீடு மனு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டிருந்தாலும் தேர்தலில் போட்டியிட ஜெயலலிதா முடிவு செய்தார். 2001ம் ஆண்டு ஆண்டிப்பட்டியில் தங்க. தமிழ்ச்செல்வன் அதிமுக சார்பாக வென்றார்.
     
  4. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    7,858
    Likes Received:
    523
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    2016 தேர்தலில் போட்டி[தொகு]

    2016 தமிழக சட்டமன்ற தேர்தலில் டாக்டர்.ராதாகிருஷ்ணன் நகர் போட்டியிட்டார்.அவரது வேட்புமனுவில் உள்ள சொத்து விவரங்களின்படி, செயலலிதாவுக்கு உள்ள மொத்த சொத்துக்களின் மதிப்பு ரூ.118.58 கோடியாகும், கடன் ரூ.2.04 கோடி. 2006ம் ஆண்டு ஜெயலலிதா சட்டசபை தேர்தலில் போட்டியிட்டபோது அவரின் சொத்து மதிப்பு ரூ.24.7 கோடியாக இருந்தது. 2011 சட்டசபை தேர்தலின்போது அவரின் சொத்து மதிப்பு ரூ.51.40 கோடியாக உயர்ந்தது.[15] ஏப்பிரல் 25, 2016 அன்று வேட்புமனு அளித்தார்[16]. அத்தேர்தலில் டாக்டர். ராதாகிருஷ்ணன் நகரில் போட்டியிட்டு 97,218 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
    ஜெயலலிதா தலைமையில் அதிமுகவின் சாதனைகள்[தொகு]

    • 1991 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற சட்டமன்றப் பொதுத்தேர்தலில் 168 இடங்களில் போட்டியிட்டு 164 இடங்களில் வெற்றிபெற்று அதிமுக ஆட்சியில் அமர்ந்தது.
    • 1998 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றப் பொதுத்தேர்தலில் 18 இடங்களில் வெற்றிபெற்று அடல் பிகாரி வாச்பாய் தலைமையில் அமைந்த மத்திய அரசில் அதிமுக அங்கம் வகித்தது.
    • 2001 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற சட்டமன்றப் பொதுத்தேர்தலில் 132 இடங்களில் வெற்றிபெற்று அதிமுக ஆட்சியில் அமர்ந்தது.
    • 2011 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்றப் பொதுத்தேர்தலில் 150 இடங்களில் வெற்றிபெற்று ஜெயலலிதா முதல்வராக பதவியேற்றார்.
    • 2011 ஆம் ஆண்டு செப்டம்பர்/அக்டோபர் மாதம் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில், தமிழகத்தில் அப்போது இருந்த 10 (இப்போது 12) மாநகராட்சிகளிலும் வெற்றிபெற்றது.
    • 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றப் பொதுத்தேர்தலில் தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 தொகுதிகளிலும் ஜெயலலிதாவின் தலைமையில் தனித்துப் போட்டியிட்ட அதிமுக, 37இல் வென்று வரலாற்றுச் சாதனை புரிந்தது. மேலும் நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சி என்ற பெருமையையும் பெற்றது.
    • 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றப் பொதுத்தேர்தலில் அதிமுக தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் 227இல் நேரடியாகவும், 7இல் அதிமுக கூட்டணியில் இருந்த மற்ற கட்சிகள் அதிமுகவின் இரட்டை இல்லை சின்னத்திலும் போட்டியிட்டு 134 தொகுதிகளில் வென்று ஆட்சியைத் தக்கவைத்தது. 1984 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஆளுங்கட்சி மீண்டும் ஆட்சியைத் தக்கவைத்தது 2016இல் தான்.
    • 2016 ஜூன் மாதம் நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தலில் 4 உறுப்பினர்களை அனுப்பியதன் மூலம், நாடாளுமன்றத்தில் அதிமுகவின் பலம் 50 (37 மக்களவை + 13 மாநிலங்களவை) ஆக உயர்ந்தது. இது தமிழ்நாட்டில் எந்த ஒரு கட்சியும் செய்யாத சாதனை.
    • 2011 சட்டமன்ற தேர்தல், 2011 உள்ளாட்சித் தேர்தல், 2014 நாடாளுமன்றத் தேர்தல், 2016 சட்டமன்றத் தேர்தல் என தொடர்ச்சியாக 4 தேர்தல்களில் பெரும்பாலும் தனித்து நின்று ஜெயலலிதா தலைமையில் அதிமுக வெற்றிவாகை சூடியது.
     
  5. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    7,858
    Likes Received:
    523
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    அதிமுக தோற்றுவிக்கப்பட்ட பிறகு நடந்த தேர்தல்கள்[தொகு]

    மேலும் அதிமுக தோற்றுவிக்கப்பட்ட பிறகு இதுவரை நடந்த 10 சட்டமன்றப் பொதுத்தேர்தலில் 7 முறை அதிமுக ஆட்சியைப்பிடித்து, தமிழகத்தில் அதிக முறை ஆட்சி அமைத்த கட்சி என்ற சாதனையைப் படைத்தது.
    சட்டசபை[தொகு]

    வருடம்பொதுத்தேர்தல்கிடைத்த வாக்குகள்வெற்றிபெற்ற தொகுதிகள்தலைவர்
    19776வது சட்டசபை5,194,876131எம்.ஜி.ஆர்
    19807வது சட்டசபை7,303,010129எம்.ஜி.ஆர்
    19848வது சட்டசபை8,030,809134எம்.ஜி.ஆர்
    19899வது சட்டசபை148,63027 / 2ஜெ அணி /ஜா அணி
    199110வது சட்டசபை10,940,966164ஜெ. ஜெயலலிதா
    199611வது சட்டசபை5,831,3834ஜெ. ஜெயலலிதா
    200112வது சட்டசபை8,815,387132ஜெ. ஜெயலலிதா
    200613வது சட்டசபை10,768,55961ஜெ. ஜெயலலிதா
    201114வது சட்டசபை1,41,49,681151ஜெ. ஜெயலலிதா
    201615வது சட்டசபை1,76,17,060134ஜெ. ஜெயலலிதா
    இதில் நான்கு முறை ஜெயலலிதா தலைமையில் ஆட்சியைக் கைப்பற்றியது அதிமுக.
     
  6. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    7,858
    Likes Received:
    523
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    நிலக்கரி இறக்குமதி வழக்கு[தொகு]

    • தமிழக அனல் மின்நிலையங்களில் பயன்படுத்த ஆஸ்திரேலியா மற்றும் இந்தோனேசியாவிலிருந்து நிலக்கரி இறக்குமதி செய்ததில் முறைகேடுகள் நடந்ததாகவும் அதனால் அரசுக்கு 6.5 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக ஜெயலலிதா, முன்னாள் அமைச்சர் கண்ணப்பன், தலைமைச் செயலாளர் டி.வி. வெங்கட்ராமன், மின்வாரியத் தலைவர் ஹரிபாஸ்கர் ஆகியோர் மீது வழக்குத் தொடுக்கப்பட்டது.
    • தீர்ப்பு - சிறப்பு நீதிமன்றம் குற்றச்சாட்டுக்களைத் தள்ளுபடி செய்தது. சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது.
    • இந்த வழக்கில் சுப்ரமணியம் சுவாமியும் ஒரு சாட்சியாக விசாரிக்கப்பட்டார். ‘700 கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்திருப்பதாகப் புகார் அளித்திருந்த சுப்ரமணியம் சுவாமியால், விசாரணையின்போது குற்றச்சாட்டுகளைப் பட்டியலிடவோ, விளக்கவோ முடியவில்லை என்று நீதிபதி தனது தீர்ப்பில் கூறியிருந்தார்.
    டிட்கோ-ஸ்பிக் பங்குகள் வழக்கு[தொகு]

    • அரசு -தனியார் கூட்டுறவில் உருவான நிறுவனம் ஸ்பிக். செட்டிநாட்டரசர் குடும்பத்தைச் சேர்ந்த எம்.ஏ. சிதம்பரமும், அவரது மகன் ஏ.சி. முத்தையாவும், தோற்றுவித்த அந்த நிறுவனத்தின் பெரும்பான்மையான பங்குகளை (26%) தமிழக அரசு நிறுவனமான டிட்கோ வைத்திருந்தது. நிறுவனத்தின் தலைவராக எம்.ஏ.சிதம்பரமும், துணைத்தலைவராக ஏ.சி.முத்தையாவும் இருந்தார்கள். 89-ஆம் ஆண்டு ஏற்பட்ட திமுக ஆட்சியின்போது பெரும்பான்மைப் பங்குகளை தமிழக அரசு வைத்திருப்பதால் தலைமைச் செயலாளர்தான் தலைவராக இருக்க வேண்டும் என்று அரசு முடிவெடுத்தது. :எம்.ஏ.சிதம்பரம் குடும்பத்தினர் தலைவராவதற்கு ஏதுவாக தமிழக அரசு தன்னிடமிருந்த 2 லட்சம் கடன் பத்திரங்களை அவர்களுக்கு மாற்றிக் கொடுத்தது. 12.37 கோடி ரூபாய் மதிப்புள்ள பத்திரங்களை 40.66 கோடி ரூபாய் பெற்றுக்கொண்டுதான் கொடுத்தது. ஆனால், இதில் ஊழல் நடந்ததாக சுப்ரமணியன் சுவாமி கூறி வந்த குற்றச்சாட்டுக்களையடுத்து சென்னை உயர் நீதிமன்றம் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டது.
    • தீர்ப்பு - 2004-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 24-ஆம் நாள் சிறப்பு நீதிமன்றம் சி.பி.ஐ. குற்றச்சாட்டுக்களை நிரூபிக்கவில்லை எனச் சொல்லி வழக்கைத் தள்ளுபடி செய்து, ஜெயலலிதாவை விடுதலை செய்தது. அரசுக்கோ, டிட்கோவிற்கோ நிதி இழப்பு ஏற்படவில்லை என்றும் சொல்லியது.
    • செய்தித்தாளில் வந்த ஒரு கட்டுரையின் அடிப்படையில் பொது நல வழக்குத் தொடர்ந்ததாகவும், இந்தப் பங்கு பரிமாற்றம் பற்றித் தனக்குத் தனிப்படத் தெரியாது என்றும் அதுவும் கட்டுரை வெளிவந்து மூன்றரை ஆண்டுகளுக்குப் பின் வழக்குத் தொடர்ந்திருப்பதாலும் பொது நல வழக்குத் தொடர்ந்த சுப்ரமணிய சுவாமியின் சாட்சியத்தை ஏற்க இயலாது என நீதிபதி தீர்ப்பில் குறிப்பிட்டார்.
    பிறந்த நாள் பரிசு வழக்கு[தொகு]

    • 1992-ஆம் ஆண்டு 57 பேரிடமிருந்து 89 வரைவோலைகள் (இதில் அயல்நாட்டிலிருந்து 3 லட்சம் டாலருக்கான ஒரு வரைவோலையும் அடக்கம்) மூலம் 2 கோடி ரூபாய்க்கு மேல் தனது பிறந்த நாளன்று பரிசாகப் பெற்றதாக சி.பி.ஐ. தனது முதல் தகவல் அறிக்கையில் தெரிவித்திருந்தது. பின்பு குற்றச்சாட்டுப் பதிவு செய்தபோது 21 பேரிடமிருந்து 1.48 கோடி ரூபாய் என்று அதைக் குறைத்துவிட்டது. இந்த வழக்கில் அன்றைய அமைச்சர்கள் செங்கோட்டையன், அழகு திருநாவுக்கரசு ஆகியோரும் குற்றம் சாட்டப்பட்டார்கள்.
    • தீர்ப்பு - 2011-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி உயர் நீதிமன்ற நீதிபதி கே.என். பாஷா, சி.பி.ஐ.யின் முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்த மொத்தக் குற்றசாட்டுக்களையும் தள்ளுபடி செய்து ஆணை பிறப்பித்தார். பத்தாண்டுகளாகியும் சி.பி.ஐ. விசாரணையை முடிக்காமல் காரணமின்றி இழுத்தடிக்கிறது என்று குறிப்பிட்ட நீதிபதி, பாதிக்கப்பட்ட எவரும் புகார் அளித்து, சி.பி.ஐ. இந்த வழக்கைத் தொடரவில்லை என்றும், ஜெயலலிதா அவரது வருமான வரி தாக்கலின் போது பிறந்தநாள் பரிசுகள் குறித்துக் கொடுத்திருந்த தகவலை அடிப்படையாகக்கொண்டே குற்றச்சாட்டு கூறப்படுகிறது. எனவே அவர் எந்தத் தகவலையும் மறைக்கவில்லை என்பது தெள்ளத் தெளிவாகப் புலனாகிறது என்று நீதிபதி குறிப்பிட்டிருந்தார்.
     
  7. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    7,858
    Likes Received:
    523
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    சொத்துக் குவிப்பு வழக்கு[தொகு]

    முதன்மைக் கட்டுரை: ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு
    • ஜெயலலிதா தமிழக முதல்வராக 1991 முதல் 1996 ஆம் ஆண்டு வரை ஜெயலலிதா பதவி வகித்தபோது, வருமானத்துக்கு அதிகமாக ரூ.66.56 கோடி அளவுக்கு சொத்துகள் சேர்த்ததாக 1996 ஆம் ஆண்டு ஜூன் 14 ஆம் தேதி சென்னை நீதிமன்றத்தில் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீது தி.மு.க. அரசு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கினைத் தொடர்வதற்கான அனுமதியை மாநில ஆளுனரிடமிருந்து சுப்பிரமணியன் சுவாமி பெற்றார்.
    • 2001 ஆம் ஆண்டில் ஜெயலலிதா முதல்வரானது இந்த வழக்கின் விசாரணையை கர்நாடகத்துக்கு மாற்ற வேண்டும் என தி.மு.க. பொதுச் செயலாளர் அன்பழகன் மனு அளித்தார். அதை ஏற்று கொண்ட நீதிமன்றம், ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கை கர்நாடகத்துக்கு மாற்றி கடந்த 2003 ஆம் ஆண்டு நவம்பர் 18 ஆம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
    • பெங்களூருவில் உள்ள மாநகர சிட்டி சிவில் நீதிமன்ற வளாகத்தில் சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டு 2004 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 ஆம் தேதி முதல் விசாரணை தொடங்கியது.
    • இவ்வழக்கில் 252 அரசுத் தரப்பு சாட்சிகளிடமும், 99 எதிர்தரப்பு சாட்சிகளிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
    • குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 313ன் கீழ், ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளன.
    • 2014 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27 ஆம் தேதியுடன் வாதங்கள் நிறைவடைந்தன.
    • 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் 20 ஆம் தியதி தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா அறிவித்தார்.
    • பாதுகாப்பு காரணங்களுக்காக தீர்ப்பு கர்நாடக மாநிலத்தின் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறை வளாகத்தில் 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வழங்கப்படும் என என நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா அறிவித்தார்.
    • இவர் முதல்வராக இருந்த 1991–96 பதவிக் காலத்தில் வருமானத்துக்கு மீறிய அளவில் ஜெயலலிதா சுமார் 66.65 கோடி சொத்து சேர்த்தார் என்ற வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம், செயலலிதா குற்றவாளி என்று தீர்ப்பளித்தது.[19][20][21].
    • இதன் தொடர்ச்சியாக அவர் முதல்வர் பதவியை இழந்தார். அவருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ.100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது.[22][23].
    • மே 11 ,2015 அன்று சொத்துக்குவிப்பு வழக்கின் வழங்கப்பட்ட தண்டனைக்கெதிராக இவரால் தொடுக்கப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரையும் விடுவித்து கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி சி.ஆர்.குமாரசாமி தீர்ப்பு வழங்கினார்.[24]
    • ஜெயலலிதாவின் விடுதலையை எதிர்த்து இந்திய உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு மேல் முறையீடு செய்தது.[25]
    • 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14 ஆம் திகதி உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் ஜெயலலிதா, சசிகலா, வி. என். சுதாகரன், ஜெ. இளவரசி ஆகிய நான்கு பேரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பு கூறப்பட்டுள்ளது. இதில் நான்கு பேரில் செயலலிதா மட்டும் இறந்ததை அடுத்து வி. கே. சசிகலா, வி. என். சுதாகரன் மற்றும் ஜெ. இளவரசி ஆகிய மூன்று பேருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூபாய் 10 கோடி அபராதமும் செலுத்த வேண்டும் என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.[
     
  8. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    7,858
    Likes Received:
    523
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    வருமானவரிக் கணக்கு வழக்கு[தொகு]

    ஜெயலலிதா வருமான வரி வழக்கு தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீது அவர் 1993-1994 ஆம் ஆண்டில் தனது வருமானம் குறித்த கணக்கை வருமான வரித்துறைக்கு சமர்ப்பிக்கவில்லை என வருமான வரித் துறையால் 1996 ஆம் ஆண்டில் தொடரப்பட்ட வழக்காகும். 1991-1992, 1992-1993 ஆகிய ஆண்டுகளில் சசி எண்டர்பிரைசசும் அதன் பங்குதாரர்களான ஜெயலலிதா மற்றும் சசிகலா ஆகியோரும் வருமான வரிக்கணக்கைத் தாக்கல் செய்யவில்லை எனக் கூறி, 1997ல் மேலும் ஒரு வழக்கைத் தாக்கல் செய்தது வருமானவரித் துறை. வருமானவரிக் கணக்கு தாக்கல் செய்யாதது தொடர்பான வருமானவரி வழக்கு சென்னை கூடுதல் தலைமை பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்துவந்தது.
    இந்த வழக்குகளைத் தள்ளுபடி செய்யவேண்டுமெனக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் 2006ல் நிராகரிக்கப்பட்டன. பிறகு, உச்ச நீதிமன்றத்தில் ஜெயலலிதா தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம் நான்கு மாதங்களுக்குள் விசாரணையை முடிக்கும்படி எழும்பூர் பெருநகர நீதிமன்றத்திற்கு கடந்த 30 ஜனவரி 2014ஆம் தேதியன்று உத்தரவிட்டது. பிறகு இந்த கால அவகாசம் மேலும் நீட்டிக்கப்பட்டது. இதற்கிடையில், இந்த விவகாரத்தை சமரசமாகப் பேசித் தீர்ப்பதற்கு கடந்த ஜூன் 25ஆம் தேதியன்று வருமான வரித்துறையிடம் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பு மனுத்தாக்கல் செய்திருந்தது. இந்த வழக்கு விசாரணை எழும்பூர் நீதிமன்றத்தில் 17-09-2014ல் நடந்தது. இந்த வழக்கு நவம்பர் 6ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. [27]
    இந்நிலையில் ரூபாய் வருமான வரித்துறையினர் விதித்த அபராதத் தொகை இரண்டு கோடியை வருமானவரித் துறைக்கு ஜெயலலிதா மற்றும் சசிகலா அபராதம் செலுத்தியதால், 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் தேதி அன்று வருமானவரித் துறையினர் வழக்கை திரும்ப பெற்றதின் மூலம் வருமானவரிக் கணக்கு வழக்கு முடிவுக்கு வந்தது.[28] அனைத்து வழக்குகளிலிருந்தும் இவர் விடுவிக்கப்பட்டமையால் 2015 மே மாதம் 23 ஆம் தேதி அன்று தமிழக முதலமைச்சராகப் ஐந்தாவது முறையாகப் பதவி ஏற்றுக்கொண்டார்.[29][30]
    2016 ஆம் ஆண்டு ஏற்பட்ட உடல்நலக் குறைவும், மருத்துவ சிகிச்சைகளும்[தொகு]

    முதன்மைக் கட்டுரை: ஜெயலலிதாவின் உடல்நலக் குறைவு, 2016
    2016ஆம் ஆண்டின் செப்டம்பர் 22 அன்று உடல்நலக் குறைவின் காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். 75 நாட்களுக்குப் பிறகு உடல்நலம் மிகவும் மோசமாகி உயிரிழந்தார்.
    மறைவு[தொகு]

    [​IMG]

    நினைவிடம்
    ஜெயலலிதா, 5 டிசம்பர் 2016 அன்று இரவு 11.30 மணிக்கு சென்னையிலுள்ள அப்போலோ மருத்துவமனையில் காலமானார்.[31][32][33]
    மருத்துவமனையிலிருந்து போயஸ் கார்டனிலுள்ள அவரின் வேத நிலையம் இல்லத்துக்கு ஜெயலலிதாவின் பூதவுடல் எடுத்துச் செல்லப்பட்டு, இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டன. அதன் பிறகு ராஜாஜி அரங்கத்திற்கு அவரின் உடல் எடுத்துச் செல்லப்பட்டு, பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.[34] இந்திய சனாதிபதி பிரணப் முகர்ஜியின் இறுதி அஞ்சலிக்குப்பின் முப்படையிடம் ஒப்படைக்கப்பட்டு[35] மாலை 6.10 மணிக்கு ஆளுனரின் மரியாதைக்குப் பின்னர் எம்ஜிஆர் நினைவிடத்திற்குப் பக்கத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.[36] இறுதிச் சடங்குகளை ஜெயலலிதாவின் தோழி சசிகலாவும், ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக்கும் செய்தனர்.
     
  9. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    7,858
    Likes Received:
    523
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    வரலாறு ஜெயலலிதா குறித்து என்ன தீர்ப்பு சொல்லப் போகிறது?


    சென்னை: 2001 ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அஇஅதிமுக அமோக வெற்றி பெற்றது. திமுக வை வீழ்த்த ஒரு பெரிய கூட்டணியை அமைத்தார் ஜெ. அதில், மறைந்த ஜி.கே. மூப்பனாரின் தமிழ் மாநில காங்கிரஸ் (தமாகா), காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம் மற்றும் பாமக இருந்தன. அஇஅதிமுக 130 க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. அந்த தேர்தலில் ஜெயலலிதா நிற்க முடியவில்லை. காரணம், டான்சி மற்றும் கொடைக் கானல் ப்ளசண்ட் ஸ்டே ஹோட்டல் வழக்குகளில் அவர் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப் பட்டதால் ஜெ வால் தேர்தலில் நிற்க முடியவில்லை. ஆனால் அதன் காரணமாகத்தான் தன்னால் தேர்தலில் நிற்க முடியவில்லை என்ற கருத்தோட்டம் மக்கள் மனதில் இருக்க கூடாது என்பதற்காக, 4 தொகுதிகளில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தார் ஜெயலலிதா. 2 தொகுதிகளுக்கு மேல் யாராவது தேர்தலில் நிற்க மனு செய்திருந்தால், அவரது அனைத்து மனுக்களும் தள்ளுபடியாவதுடன், அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு சம்மந்தப்பட்டவர் எந்த தேர்தலிலும் நிற்க முடியாது என்ற சட்டத்தை பற்றியும் கவலைப்படாமல் ஜெ 4 தொகுதிகளில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தார். அவரது 4 மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன. மே 13, 2001ல் தேர்தல் முடிவுகள் வந்தன. அஇஅதிமுக 130 க்கும் மேற்பட்ட எம்எல்ஏ க்களை பெற்று தனிப் பெரும்பான்மை உள்ள கட்சியாக உருவெடுத்தது. அடுத்த நாள், மே 14 ம் தேதி காலை 11 மணிக்கு அஇஅதிமுக தலைமை கழுகத்தில் அனைத்து அஇஅதிமுக எம்எல்ஏ க்களும் கூடி ஜெயலலிதாவை தங்களது சட்டமன்ற குழு தலைவராக தேர்ந்தெடுத்தனர். அன்று மாலையிலேயே ஜெ முதலமைச்சராக பொறுப்பேற்றார். ஆனால் இதனை எதிர்த்து திமுக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அதாவது எம்எல்ஏ வாக நிற்க தகுதி இல்லாதவர் எப்படி முதலமைச்சராக முடியும் என்பதுதான் வழக்கு. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு, எம்எல்ஏ வாக நிற்க தகுதியில்லாதவர் முதலமைச்சராக முடியாது என்று செப்டம்பர் 21, 2001 ல் தீர்ப்பளித்தது. பின்னர் டிசம்பர், 2001 ல் சென்னை உயர்நீதிமன்றம் ஜெ வுக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பை ரத்து செய்து ஜெயலலிதா நிரபராதி என்று தீர்ப்பளித்தது. 2002 பிப்ரவரியில் தேர்தலில் நின்று ஜெ வெற்றி பெற்றார். 2002 மார்ச் மாதத்தில் முதலமைச்சராக பொறுப்பேற்றார் ஜெ.
     
  10. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    7,858
    Likes Received:
    523
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    2002 டூ 2006 ஜெ. ஆட்சி 2002 - 2006 ஆட்சிக் காலம் ஜெ வின் 1991 - 1996 ஆட்சி காலத்தை விட மோசமாக இருந்தது. கொடுக்கப்பட்டிருந்த சலுகைகள் ரத்து செய்யப்ட்டதை எதிர்த்து 2002 ம் ஆண்டு தமிழகம் முழுவதும் 12 லட்சம் தமிழக அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அதில் ஒன்றரை லட்சம் ஊழியர்களை டிஸ்மிஸ் செய்தார் ஜெயலலிதா. இவ்வாறு டிஸ்மிஸ் ஆனவர்களில் 55 ஊழியர்கள் அடுத்தடுத்த மாதங்களில் மாரடைப்பால் மாண்டு போயினர். டிஸ்மிஸ் செய்யப்பட்டதை எதிர்த்து ஊழியர்கள் செய்த மனுக்களை விசாரித்த சென்னை உயர்நீதி மன்றம், இந்த ஒன்றரை லட்சம் ஊழியர்களில் 6,000 ஊழியர்களை மீண்டும் பணியில் அமர்த்த உத்திரவிட்டது. அந்த 6,000 ஊழியர்கள் உச்சநீதிமன்றம் சென்றனர். உச்ச நீதிமன்றம் 900 ஊழியர்களை தவிர மற்றவர்களை பணியில் அமர்த்த உத்திரவிட்டது. ஆனால் நல்ல வேலையாக 2006 ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல்கள் நெருங்கி வந்த வேளையில் இந்த 900 ஊழியர்களையும் மீண்டும் பணியில் சேர்க்க ஜெயலலிதா உத்திரவிட்டார். மொத்தத்தில் டிஸ்மிஸ் செய்யப்பட்ட ஊழியர்கள் அனைவரும் தங்களது அரசாங்க வேலையில் மீண்டும் வந்து அமர்ந்தனர். மதமாற்ற தடை சட்டம், ஆடு, மாடு கோழிகளை காணிக்கையாக கோயில்களில் பலி க்கு வெட்டிக் கொல்லப்படுவதற்கு தடை விதித்தார்.
     

Share This Page