டிரம்ப் இந்தியா வருகை

Discussion in 'Memes and Funny Videos - Daily Updates' started by NATHIYAMOHANRAJA, Feb 24, 2020.

 1. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  8,130
  Likes Received:
  525
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  தாஜ்மஹாலை சுற்றிப் பார்க்கும் டிரம்ப் மற்றும் அவரது குடும்பத்தினர்...

  தாஜ்மஹாலை சுற்றிப் பார்க்கும் டிரம்ப் மற்றும் அவரது குடும்பத்தினர்
  இன்று (24 ஆம் தேதி) குஜராத் மாநிலம் அகமதாபாத்திற்கு தனது குடும்பத்தினருடன் விமானத்தில் வந்திறங்கிய அதிபர் டிரம்ப், அங்குள்ள பட்டேல் மைதானத்தில் நமஸ்தே ட்ரம்ப் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.
  அங்கு லட்சக்கணக்கான மக்கள் குழுமியுள்ள நிலையில், முதலில் பிரதமர் மோடி பேசினார். அதன்பிறகு டிரம்ப் பேச ஆரம்பித்தார்.

  அதில், இந்தியாவின் நம்பிக்கைக்குரிய நட்பு நாடாக அமெரிக்கா விளங்கும். இந்தியர்களின் ஒற்றுமை உலகத்திற்கே எடுத்துக்காட்டாய் விளங்குகிறது என தெரிவித்தார். மேலும், இந்தியாவின் வளர்ச்சிக்கு நவீன ஆயுதங்கள் வழங்க தயாராக உள்ளோம்.
  சிறப்பு வரவேற்பளித்த நண்பர் மோடிக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மோடி குஜராத்தின் பெருமை மட்டுமல்ல , கடின உழைப்பு பக்திக்கு வாழும் உதாரணம் மோடி என
  தெரிவித்தார்.
  அதன்பிறகு டிரம்ப் தனது குடும்பத்தினருடன் உத்திரபிரதேசம் மாநிலம் ஆக்ரா நதிக்கரையில் உள்ள தாஜ்மஹாலைப் பார்க்க செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது, டிரம்ப் மற்றும் அவரது குடும்பத்தினர் அங்குச் சென்றுள்ளனர்.
  இதற்கிடையே, டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு டுவீட் ஹிந்தியில் பதிவிட்டுள்ளார். அதில், ' அமெரிக்காவும் இந்தியாவும் தங்கள் நாடுகளை வலுப்படுத்தும், தங்கள் மக்களை வளமாக்கும், பெரிய கனவு காண்பவர்களை பெரிதாக்குகின்றன, அவர்களின் எதிர்காலத்தை முன்பு இருந்தததையும் விட பிரகாசமாக்கும் ... இது ஒரு தொடக்கம் மட்டுமே எனப் பதிவிட்டுள்ளார்.
  தற்போது தாஜ்மஹாலில்
  உள்ள வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்ட டிரம்ப் அவரது மனைவி மெலனியா, மகள் இவாங்கா, மருமகன் ஜேரட் குஷ்னருடன் யனுமை நதிக்கரையில் உள்ள தாஜ்மஹாலை சுற்றிப் பார்த்துக் கொண்டிருக்கிறார். அப்போது, டிரம்ப் புகைப்படம் எடுத்துக் கொண்டார். அவர்களுக்கு சுற்றுலா வழிகாட்டி விளக்கினார்.

  அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் இந்திய சுற்றுப்பயணம் உலக நாடுகளிடையே பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.
   
 2. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  8,130
  Likes Received:
  525
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  இந்திய மண்ணில்முதன்முறையாக கால்பதித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் : அகமதாபாத் முதல் ஆக்ரா வரையிலான ட்ரம்ப் பயணத்தின் முழு விவரம்

  அகமதாபாத் : அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், மனைவி மெலானியா ட்ரம்புடன் இந்தியா வந்தடைந்தார். அகமதாபாத் விமானநிலையத்தில் பிரதமர் மோடி அதிபர் ட்ரம்பை ஆரத்தழுவி வரவேற்றார்.

  *முதல்முறையாக இந்தியாவில் அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், மனைவி மெலானியா ட்ரம்புடன் இந்தியா வந்தடைந்தார்.

  *காலை 11.40 மணியளவில் தரையிறங்கும் எனக் கூறப்பட்டிருந்த அமெரிக்க அதிபரின் சிறப்பு தனி விமானம் ஏர்போர்ஸ் -1, 11.37 மணிக்கே அகமதாபாத்தின் சர்தார் வல்லபாய் படேல் விமான நிலையத்தில் தரையிறங்கியது.

  *அதற்கு ஒரு மணி நேரம் முன்னதாகவே பிரதமர் மோடி அகமதாபாத் வந்தடைந்தார். பாதுகாப்பு குழுவினர் இறங்கிய பின்னர், மனைவி மெலானியாவுடன் விமானத்திலிருந்து இறங்கி வந்த அமெரிக்க அதிபர் டிரம்பை, பிரதமர் மோடி ஆரத் தழுவி வரவேற்றார். *அதன் பின்னர் டிரம்ப் இணையருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் மோடியுடன் இணைந்து சிவப்பு கம்பளத்தில் நடந்து வந்த அமெரிக்க அதிபர், இரு புறமும் அரங்கேறிய பாரம்பரிய நடனங்களை பார்வையிட்டார்.

  *பின்னர் அங்கு தயாராக நின்றிருந்த பீஸ்ட் காரில் ஏறி அமெரிக்க அதிபரும், அவரது மனைவியும் சபர்மதி ஆசிரமம் நோக்கி புறப்பட்டனர். செல்லும் வழி எங்கும் அவர்களுக்கு ஒவ்வொரு மாநிலத்தின் பாரம்பரியத்தை விளக்கும் வகையிலான கலை நிகழ்ச்சிகள் மூலம் வரவேற்பு அளிக்கப்பட்டது.

  *இதனை தொடர்ந்து சபர்மதி ஆசிரமம் நோக்கி அமெரிக்க அதிபர் காரில் பயணம் மேற்கொண்டார். சாலையின் இரு மருங்கிலும் திரண்டிருந்த ஏராளமான பொதுமக்கள் அவரை வரவேற்றனர்.

  *ஆங்காங்கே கண்கவர் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. சபர்மதி ஆசிரமத்தை வந்தடைந்த ட்ரம்ப் தம்பதிக்கு, அவர்களுக்கு முன்னதாகவே அங்கு வந்திருந்த பிரதமர் மோடி கைத்தறி துண்டு அணிவித்து வரவேற்றார்.

  *அதன் பின்னர் அமெரிக்க அதிபர் ட்ரம்பையும், மெலானியாவையும் ஆசிரமத்துக்குள் அழைத்துச் சென்ற பிரதமர் மோடி, மாகாத்மா காந்தியடிகள் வாழ்ந்த இடத்தின் சிறப்புகளை எடுத்துரைத்தார்.

  *அங்கிருந்த காந்தியின் உருவப்படத்தில் கைத்தறி நூலால் ஆன மாலையை பிரதமர் மோடியும், அமெரிக்க அதிபரும் சேர்ந்து அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

  *தொடர்ந்து ஆசிரமத்திலுள்ள நூல் நூற்கும் ராட்டை குறித்து பிரதமர் மோடி, ட்ரம்ப் தம்பதியினருக்கு விளக்கி கூறினார். அவரை தொடர்ந்து ஆசிரம நிர்வாகிகள் ராட்டையை இயக்குவது குறித்து எடுத்துக் கூற, அமெரிக்க அதிபர் மனைவி மெலானியாவுடன் இணைந்து ராட்டையை இயக்கினார்.

  *இதையடுத்து சபர்மதி ஆசிரமத்தின் முன்பு மூவரும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அதன் பின்னர் அங்கிருந்த விருந்தினர் பதிவேட்டில் அமெரிக்க அதிபர் கையெழுத்திட்டார். அதில் பிரதமர் மோடியை தனது சிறந்த நண்பர் எனக் குறிப்பிட்டு, இந்த அருமையான பயணத்துக்கு நன்றி என கூறி கையெழுத்திட்டிருந்தார்.

  *தொடர்ந்து தீயதை பேசாதே, தீயதை பார்க்காதே, தீயதை கேட்காதே எனும் காந்தியின் கொள்கையை வலியுறுத்தும் குரங்கு பொம்மை குறித்து அமெரிக்க அதிபருக்கு, பிரதமர் மோடி விளக்கிக் கூறினார்.

  *சபர்மதி ஆசிரம நிகழ்வுகளை முடித்துக் கொண்டு, உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான மொடேராவுக்கு அமெரிக்க அதிபரும், அவரது மனைவியும் புறப்பட்டு சென்றனர்.

  *அகமதாபாத் காந்தி நகரில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் கிரிக்கெட் மைதானத்தில் நடந்த நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில் பங்கேற்று உரை நிகழ்த்தினார்.

  *அகமதாபாத்தில் 'நமஸ்தே டிரம்ப்' நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் ஆக்ரா வந்தடைந்தார் அமெரிக்க அதிபர் டிரம்ப். அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பிற்கும் மனைவி மிலானியாவுக்கும் ஆக்ராவில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

  *ஆக்ரா விமான நிலையத்தில் டிரம்ப்பை உ.பி. முதல்வர் ஆதித்யநாத், ஆளுநர் ஆனந்திபென் படேல் ஆகியோர் வரவேற்றனர். பள்ளி மாணவ மாணவியர்கள் மயிலாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டத்துடன் டிரம்ப் தம்பதியை வரவேற்றனர். பின்னர் ஆக்ரா விமான நிலையத்தில் இருந்து தாஜ்மகாலுக்கு டொனால்ட் டிரம்ப் புறப்பட்டனர்.

  *சுமார் 5 மணி அளவில் தாஜ்மகாலை அதிபர் ட்ரம்ப் சென்று அடைந்தார். மனைவி மெலனியா, மகள் இவாங்கா மற்றும் மருமகனுடன் தாஜ்மகாலை அமெரிக்க அதிபர் டிரம்ப் பார்வையிட்டார்.தொல்லியல் துறையை சேர்ந்த தலைமை ஆய்வாளர், உலக அதிசயமான தாஜ்மகாலின் தொன்மை மற்றும் சிறப்புக்கள் குறித்து ட்ரம்ப் குடும்பத்தினரிடம் விளக்கினார்.

  *அத்துடன் தாஜ்மகாலுக்கு முன்பாக மனைவி மெலனியாவுடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டார் ட்ரம்ப், அமெரிக்க அதிபர் டிரம்ப் தாஜ்மகாலை பார்வையிடும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்கவில்லை.
   
 3. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  8,130
  Likes Received:
  525
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  தாஜ் மகாலைப் பார்வையிட்டு வருகிறார் டிரம்ப்

  ஆக்ரா: உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள தாஜ் மகாலைக் காண வருகை தந்திருக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அவரது மனைவி மெலனியா, மகள் இவாங்கா ஆகியோருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
  உத்தரப்பிரதேச மாநில ஆளுநர் ஆனந்தி பென் படேல், முதல்வர் ஆதித்யநாத் உள்ளிட்டோர், டிரம்ப் தம்பதிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
  இந்நிலையில், டொனால்ட் டிரம்ப் மற்றும் மெலானியா டிரம்ப் ஆகியோர் தற்போது தாஜ் மகால் வந்தடைந்துள்ளனர். அங்கு மனைவியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட டிரம்ப், வருகைப் பதிவேட்டில் தன்னுடைய வருகையைக் குறிப்பிட்டார். இதைத் தொடர்ந்து தற்போது மனைவியுடன் இணைந்து தாஜ் மகாலைப் பார்வையிட்டு வருகிறார் டிரம்ப்.
  முன்னதாக இன்று காலை ஆமதாபாத் விமான நிலையம் வந்தடைந்த அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்ளிட்டோரை பிரதமர் மோடி வரவேற்றனார். பின்னர் தனித்தனி வாகனங்களில் சபர்மதி ஆசிரமம் சென்றனர்.

  [​IMG]

  அங்கு மகாத்மா காந்தியின் புகைப்படத்துக்கு மரியாதை செலுத்திய டிரம்ப் தம்பதி, இராட்டையில் நூல் நூற்று மகிழ்ந்தனர்.
  டிரம்ப் வருகையை முன்னிட்டு ஆமதாபாத்தில் உள்ள மொடெரா கிரிக்கெட் மைதானத்தில் இன்று நமஸ்தே டிரம்ப் என்ற சிறிப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில், இரு தலைவர்களும் உரையாற்றினர்.
  இவ்விரு முக்கிய நிகழ்ச்சிகளும் நிறைவு பெற்றதை அடுத்து, பிரதமர் மோடி புது தில்லி விரைந்தார். பிறகு, டொனால்ட் டிரம்ப், மனைவி மற்றும் மகள், அமெரிக்க உயர் மட்ட அதிகாரிகள் குழுவினருடன் ஆக்ரா சென்றுள்ளார்.
  அங்கு தாஜ் மகாலை பார்வையிட்ட பிறகு, புது தில்லி செல்கிறார்கள்.
   
 4. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  8,130
  Likes Received:
  525
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  காதல் சின்னம் தாஜ்மகாலை கண்டு வியந்த டிரம்ப்

  ஆக்ரா: அமெரிக்க அதிபர் டிரம்ப், ஆக்ராவில் உள்ள 'காதல் சின்னம்' தாஜ்மகாலை மனைவியுடன் பார்வையிட்டார்.இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், ஆமதாபாத்தில் உள்ள சர்தார் படேல் மைதானத்தை திறந்துவைத்து ஒரு லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்களுக்கு மத்தியில் உரையாற்றினார். அதன்பின்னர், ஆக்ராவில் உள்ள உலக அதிசயங்களுள் ஒன்றான தாஜ்மகாலை பார்வையிட ஆமதாபாத்தில் இருந்து ஆக்ராவிற்கு புறப்பட்டார். ஆக்ரா விமானநிலையத்தில் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியாவை உத்தர பிரதேச கவர்னர் ஆனந்திபென் படேல், முதல்வர் யோகி ஆதித்யநாத் வரவேற்றனர்.விமான நிலையத்தில் 3000 நடனக்கலைஞர்கள் பங்கேற்ற மயிலாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம் உள்ளிட்ட பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளுடன் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து தாஜ்மகாலை காண சென்றார். 10 கி.மீ., தூர பயணத்தில் 31 ஆயிரம் பள்ளி மாணவர்கள் வரவேற்றனர். ஆண்டுக்கு 80 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் தாஜ்மகாலில் டிரம்ப் வருகையால் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. டிரம்ப் மகள் இவாங்கா, மருமகன் ஜேரட் குஷ்னர் ஆகியோரும் தாஜ்மகாலை பார்வையிட்டனர். கையெழுத்து தாஜ்மகாலின் நுழைவில் உள்ள பதிவேட்டில் டிரம்ப் மற்றும் மெலனியா தங்களது வருகையை பதிவு செய்தனர். அந்த பதிவேட்டில், 'தாஜ்மகால் பிரமிப்பைத் தூண்டுகிறது, இந்திய கலாச்சாரத்தின் பணக்கார மற்றும் மாறுபட்ட அழகுக்கு காலமற்ற சான்று! நன்றி, இந்தியா,' என எழுதி கையொப்பமிட்டனர்.
   
 5. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  8,130
  Likes Received:
  525
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  சந்திரயான், ககன்யான் திட்டங்கள் பெரிய விஷயம் என பாராட்டிய டொனால்ட் டிரம்ப்

  அகமதாபாத்: இரு நாட்கள் பயணமாக இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இஸ்ரோவின் சந்திரயான், ககன்யான் திட்டங்களை பாராட்டினார்.
  இன்றும் நாளையும் இந்திய மண்ணில் தங்கவுள்ள டொனால்ட் டிரம்ப் அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் மைதானத்திற்கு சென்றார். அங்கு நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
  அப்போது அவர் நமஸ்தே என கூறி தனது உரையை தொடங்கினார். அவர் பேசுகையில் சந்திரயான் திட்டம் போன்ற மகிழ்ச்சிகரமான திட்டங்களால் இந்தியா அனைவரையும் ஈர்க்கக் கூடிய முன்னேற்றங்களை செய்து வருகிறது. வேகமாகவும் முன்னேறி வருகிறது.
  விண்வெளித் துறையில் இந்தியாவுக்கு ஒத்துழைப்பு நல்ல அமெரிக்கா விரும்புகிறது. உங்கள் வரம்புகளை மீறி மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டம் மூலம் இலக்குகளை அடைகிறீர்கள். அது பெரிய விஷயம்.
  இந்தியாவும் அமெரிக்காவும் எப்போதும் நட்பு நாடுகளாகவே இருக்கும். அதிலும் விண்வெளித் துறையில் எங்கள் பயணத்தில் நட்பு இருக்கும் என்றார். அடுத்த ஆண்டு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தில் இஸ்ரோ ஈடுபடவுள்ளதாகவும் சந்திரயான் 3 மூலம் லேண்டருக்கு பாதிப்பில்லாத வண்ணம் தரையிறக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  சந்திரயான் 2 திட்டத்தை விண்ணில் செலுத்திய போது அதனுள் இருந்த லேண்டர் சாப்ட் லேண்டிங் மூலம் தரையிறங்காமல் நிலவின் தென்துருவத்தில் சாய்வு தளமாக விழுந்தது. இதனால் இஸ்ரோவுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. இந்த தொடர்பை ஏற்படுத்த இஸ்ரோவுடன் இணைந்து அமெரிக்காவின் நாசாவும் முயற்சி செய்தது குறிப்பிடத்தக்கது.
   
 6. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  8,130
  Likes Received:
  525
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  இந்திய மண்ணில்முதன்முறையாக கால்பதித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் : அகமதாபாத் முதல் ஆக்ரா வரையிலான ட்ரம்ப் பயணத்தின் முழு விவரம்

  அகமதாபாத் : அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், மனைவி மெலானியா ட்ரம்புடன் இந்தியா வந்தடைந்தார். அகமதாபாத் விமானநிலையத்தில் பிரதமர் மோடி அதிபர் ட்ரம்பை ஆரத்தழுவி வரவேற்றார்.

  *முதல்முறையாக இந்தியாவில் அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், மனைவி மெலானியா ட்ரம்புடன் இந்தியா வந்தடைந்தார்.

  *காலை 11.40 மணியளவில் தரையிறங்கும் எனக் கூறப்பட்டிருந்த அமெரிக்க அதிபரின் சிறப்பு தனி விமானம் ஏர்போர்ஸ் -1, 11.37 மணிக்கே அகமதாபாத்தின் சர்தார் வல்லபாய் படேல் விமான நிலையத்தில் தரையிறங்கியது.

  *அதற்கு ஒரு மணி நேரம் முன்னதாகவே பிரதமர் மோடி அகமதாபாத் வந்தடைந்தார். பாதுகாப்பு குழுவினர் இறங்கிய பின்னர், மனைவி மெலானியாவுடன் விமானத்திலிருந்து இறங்கி வந்த அமெரிக்க அதிபர் டிரம்பை, பிரதமர் மோடி ஆரத் தழுவி வரவேற்றார். *அதன் பின்னர் டிரம்ப் இணையருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் மோடியுடன் இணைந்து சிவப்பு கம்பளத்தில் நடந்து வந்த அமெரிக்க அதிபர், இரு புறமும் அரங்கேறிய பாரம்பரிய நடனங்களை பார்வையிட்டார்.

  *பின்னர் அங்கு தயாராக நின்றிருந்த பீஸ்ட் காரில் ஏறி அமெரிக்க அதிபரும், அவரது மனைவியும் சபர்மதி ஆசிரமம் நோக்கி புறப்பட்டனர். செல்லும் வழி எங்கும் அவர்களுக்கு ஒவ்வொரு மாநிலத்தின் பாரம்பரியத்தை விளக்கும் வகையிலான கலை நிகழ்ச்சிகள் மூலம் வரவேற்பு அளிக்கப்பட்டது.

  *இதனை தொடர்ந்து சபர்மதி ஆசிரமம் நோக்கி அமெரிக்க அதிபர் காரில் பயணம் மேற்கொண்டார். சாலையின் இரு மருங்கிலும் திரண்டிருந்த ஏராளமான பொதுமக்கள் அவரை வரவேற்றனர்.

  *ஆங்காங்கே கண்கவர் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. சபர்மதி ஆசிரமத்தை வந்தடைந்த ட்ரம்ப் தம்பதிக்கு, அவர்களுக்கு முன்னதாகவே அங்கு வந்திருந்த பிரதமர் மோடி கைத்தறி துண்டு அணிவித்து வரவேற்றார்.

  *அதன் பின்னர் அமெரிக்க அதிபர் ட்ரம்பையும், மெலானியாவையும் ஆசிரமத்துக்குள் அழைத்துச் சென்ற பிரதமர் மோடி, மாகாத்மா காந்தியடிகள் வாழ்ந்த இடத்தின் சிறப்புகளை எடுத்துரைத்தார்.

  *அங்கிருந்த காந்தியின் உருவப்படத்தில் கைத்தறி நூலால் ஆன மாலையை பிரதமர் மோடியும், அமெரிக்க அதிபரும் சேர்ந்து அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

  *தொடர்ந்து ஆசிரமத்திலுள்ள நூல் நூற்கும் ராட்டை குறித்து பிரதமர் மோடி, ட்ரம்ப் தம்பதியினருக்கு விளக்கி கூறினார். அவரை தொடர்ந்து ஆசிரம நிர்வாகிகள் ராட்டையை இயக்குவது குறித்து எடுத்துக் கூற, அமெரிக்க அதிபர் மனைவி மெலானியாவுடன் இணைந்து ராட்டையை இயக்கினார்.

  *இதையடுத்து சபர்மதி ஆசிரமத்தின் முன்பு மூவரும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அதன் பின்னர் அங்கிருந்த விருந்தினர் பதிவேட்டில் அமெரிக்க அதிபர் கையெழுத்திட்டார். அதில் பிரதமர் மோடியை தனது சிறந்த நண்பர் எனக் குறிப்பிட்டு, இந்த அருமையான பயணத்துக்கு நன்றி என கூறி கையெழுத்திட்டிருந்தார்.

  *தொடர்ந்து தீயதை பேசாதே, தீயதை பார்க்காதே, தீயதை கேட்காதே எனும் காந்தியின் கொள்கையை வலியுறுத்தும் குரங்கு பொம்மை குறித்து அமெரிக்க அதிபருக்கு, பிரதமர் மோடி விளக்கிக் கூறினார்.

  *சபர்மதி ஆசிரம நிகழ்வுகளை முடித்துக் கொண்டு, உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான மொடேராவுக்கு அமெரிக்க அதிபரும், அவரது மனைவியும் புறப்பட்டு சென்றனர்.

  *அகமதாபாத் காந்தி நகரில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் கிரிக்கெட் மைதானத்தில் நடந்த நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில் பங்கேற்று உரை நிகழ்த்தினார்.

  *அகமதாபாத்தில் 'நமஸ்தே டிரம்ப்' நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் ஆக்ரா வந்தடைந்தார் அமெரிக்க அதிபர் டிரம்ப். அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பிற்கும் மனைவி மிலானியாவுக்கும் ஆக்ராவில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

  *ஆக்ரா விமான நிலையத்தில் டிரம்ப்பை உ.பி. முதல்வர் ஆதித்யநாத், ஆளுநர் ஆனந்திபென் படேல் ஆகியோர் வரவேற்றனர். பள்ளி மாணவ மாணவியர்கள் மயிலாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டத்துடன் டிரம்ப் தம்பதியை வரவேற்றனர். பின்னர் ஆக்ரா விமான நிலையத்தில் இருந்து தாஜ்மகாலுக்கு டொனால்ட் டிரம்ப் புறப்பட்டனர்.

  *சுமார் 5 மணி அளவில் தாஜ்மகாலை அதிபர் ட்ரம்ப் சென்று அடைந்தார். மனைவி மெலனியா, மகள் இவாங்கா மற்றும் மருமகனுடன் தாஜ்மகாலை அமெரிக்க அதிபர் டிரம்ப் பார்வையிட்டார்.தொல்லியல் துறையை சேர்ந்த தலைமை ஆய்வாளர், உலக அதிசயமான தாஜ்மகாலின் தொன்மை மற்றும் சிறப்புக்கள் குறித்து ட்ரம்ப் குடும்பத்தினரிடம் விளக்கினார்.

  *அத்துடன் தாஜ்மகாலுக்கு முன்பாக மனைவி மெலனியாவுடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டார் ட்ரம்ப், அமெரிக்க அதிபர் டிரம்ப் தாஜ்மகாலை பார்வையிடும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்கவில்லை.
   
 7. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  8,130
  Likes Received:
  525
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  இந்தியா - அமெரிக்கா நட்புறவு நீடிக்க வேண்டும்: மோடி பேச்சு

  ஆமதாபாத்: 5 மாதங்களுக்கு முன்பு 'ஹவ்டி மோடி' நிகழ்ச்சி மூலம் தன்னுடைய அமெரிக்க பயணம் தொடங்கியது போல், 'நமஸ்தே டிரம்ப்' நிகழ்ச்சி மூலம் இந்திய பயணத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடங்குகிறார் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு ஆமதாபாத் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனையடுத்து சபர்மதி ஆசிரமத்திற்கு பிரதமர் மோடியுடன் சென்று பார்வையிட்ட டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா, ஆமதாபாத்தில் உள்ள சர்தார் பட்டேல் ஸ்டேடியத்தை திறந்து வைத்தனர். அங்கு நடைபெற்ற 'நமஸ்தே டிரம்ப்' நிகழ்ச்சியில் 1.10 லட்சம் பார்வையாளர்கள் மத்தியில் மோடி பேசியதாவது:உலகின் மிகப்பெரிய ஜனநாயகமான இந்தியா, டிரம்பை வரவேற்கிறது. இந்தியா - அமெரிக்கா நட்புறவு நெடுங்காலம் நீடிக்க வேண்டும். 5 மாதங்களுக்கு முன்பு 'ஹவ்டி மோடி' நிகழ்ச்சி மூலம் எனது அமெரிக்க பயணம் தொடங்கியது. தற்போது எனது நண்பர் டிரம்ப், தனது இந்திய பயணத்தை 'நமஸ்தே டிரம்ப்' நிகழ்ச்சி மூலம் தொடங்குகிறார். இவ்வாறு மோடி பேசினார்.
   
 8. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  8,130
  Likes Received:
  525
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  காந்தி பெயரைக் குறிப்பிடாத ட்ரம்ப்: கனல் கக்கும் காங்கிரஸ் தலைவர்கள்

  புது தில்லி: சபர்மதி ஆசிரம விருந்தினர் குறிப்பேட்டில் மகாத்மா காந்தியின் பெயரை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குறிப்பிடததற்கு காங்கிரஸ் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
  இந்தியாவுக்கு முதல் முறையாக வருகை தந்திருக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்துக்கு வருகை தந்தார். இந்தியா வரும் பல்வேறு உலகத் தலைவர்களும் இந்த ஆசிரமத்துக்குச் செல்வது வழக்கம்.
  அந்த வகையில், சபர்மதி ஆசிரமத்துக்கு வருகை தந்த டொனால்ட் டிரம்ப்புக்கும் அவரது மனைவி மெலனியாவுக்கும் பிரதமர் மோடி உள்ளிட்டோர் சிறப்பான வரவேற்பு அளித்தனர். சபர்மதி ஆசிரமத்தில் வைக்கப்பட்டிருக்கும் மகாத்மா காந்தியடிகளின் புகைப்படத்துக்கு இரு தலைவர்களும் மரியாதை செலுத்தினர். பின்னர், ஆசிரமத்தில் வைக்கப்பட்டிருக்கும் காந்தி தொடர்பான சிறப்பான பல்வேறு பொருட்கள் மற்றும் விஷயங்கள் குறித்து டொனால்ட் டிரம்புக்கு பிரதமர் மோடி விளக்கினார்.
  அப்போது, ஆசிரமத்தில் வைக்கப்பட்டிருந்த நூல் நூற்கும் இராட்டையைப் பார்த்த டிரம்ப் தம்பதி அதனருகே அமர்ந்து, நூல் நூற்க முயன்றனர். அப்போது மெலனியா இராட்டையைச் சுழற்ற, அதற்கு ஏற்றவாறு பஞ்சுத் திரி நூலாக மாறுவதை டிரம்ப் வியப்போடு பார்த்தார். இதற்கு பிரதமர் மோடி விளக்கம் அளித்தார். டிரம்ப் மற்றும் மெலனியா இருவரும் இராட்டை செயல்படும் விதம் குறித்து மிகுந்த ஆர்வத்தோடு கேட்டறிந்தனர்.

  [​IMG]

  டொனால்ட் டிரம்ப் மற்றும் மெலனியா, பிரதமர் மோடியுடன் சபர்மதி ஆசிரமத்தை சுற்றிப் பார்த்தனர். அப்போது, ஆசிரமத்தில் வைக்கப்பட்டிருந்த மூன்று குரங்குகள் பொம்மையைக் காட்டி பிரதமர் நரேந்திர மோடி டிரம்ப் தம்பதிக்கு விளக்கினார். பிறகு, ஆசிரமத்தில் வைக்கப்பட்டிருக்கும் வருகைப் பதிவேட்டில், ஆசிரமம் பற்றிய தங்களது கருத்துகளை பதிவிட்டு, தம்பதியர் கையெழுத்திட்டனர்.
  அந்த பதிவேட்டில், எனது மிகச் சிறந்த நண்பர் நரேந்திர மோடிக்கு, இந்த சிறப்பான பயணத்தை ஏற்படுத்திக் கொடுத்தமைக்கு மிக்க நன்றி என்று கூறி கையெழுத்திட்டுள்ளார் டொனால்ட் டிரம்ப்.
  பின்னர் சபர்மதி ஆசிரம பயணத்தை முடித்துக் கொண்டு டொனால்ட் டிரம்ப் ஆமதாபாத்தில் கட்டப்பட்டுள்ள மொடேரா மைதானத்துக்குப் புறப்பட்டுச் சென்றனர்.
  இந்நிலையில் சபர்மதி ஆசிரம விருந்தினர் குறிப்பேட்டில் மகாத்மா காந்தியின் பெயரை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குறிப்பிடததற்கு காங்கிரஸ் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
  இதுதொடர்பாக காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான மனிஷ் திவாரி தனது ட்விட்டர் பக்கத்தில், ட்ரம்பின் பதிவு உள்ள விருந்தினர் பதிவேட்டின் பக்கத்தை வெளியிட்டு, 'இதை எனக்கு ஒருவர் அனுப்பி வைத்துள்ளார். சபர்மதி ஆசிரமத்தில் ட்ரம்பின் பதிவு இது. இதில் காந்தியைப் பற்றி ஒரு குறிப்பு கூட இல்லை. மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி யார் என்றாவது அவருக்குத் தெரியுமா?' என்று பதிவிட்டுள்ளார்.
  அடுத்ததாக, 2010-ஆம் ஆண்டு அப்போதைய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இந்தியா வந்திருந்த சமயத்தில், காந்தியின் சமாதி அமைந்துள்ள ராஜ்காட்டிலோ அல்லது சபர்மதி ஆஸ்ரமத்திலோ பதிவு செய்திருந்த தகவலையும் அவர் பகிர்ந்திருந்தார். அதில் ஒபாமா, 'இந்தியாவிற்கு மட்டும் அல்ல. காந்தி உலகத்திற்கே ஒரு நாயகர் என்று பதிவு செய்திருந்தார். அதைச் சுட்டிக் காட்டிய மணிஷ் திவாரி, ' இருவருக்குமான வேறுபாடு முற்றிலும் வெளிப்டையாகத் திரிகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
  அதேசமயம் முன்னாள் அமைச்சரான சசி தரூரும் அதிபர் ட்ரம்பின் செயலை வன்மையாகக் கண்டித்துள்ளார்.
   
 9. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  8,130
  Likes Received:
  525
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  மனைவியுடன் ஆக்ரா சென்ற டிரம்ப்: தனியாக டெல்லி திரும்பிய மோடி

  அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இன்று இந்தியாவிற்கு வருகை தந்த நிலையில் சபர்மதி ஆசிரமம் மற்றும் நமஸ்தே டிரம்ப் ஆகிய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது
  இந்த நிலையில் இந்த நிகழ்ச்சிகளை அடுத்து மனைவியுடன் ஆக்ராவிலுள்ள தாஜ்மகாலைப் பார்க்க அமெரிக்க அதிபர் டிரம்ப் சென்றார்
  இந்த நிலையில் டெல்லியில் நடைபெற்ற சிஏஏ போராட்டத்தில் திடீரென வன்முறை வெடித்தது துப்பாக்கி சூடு நடைபெற்றதாகவும் செய்தியை அறிந்து உடனடியாக பிரதமர் மோடி டெல்லி திரும்பியுள்ளார். அமெரிக்க அதிபர் ஆக்ராவுக்கும் இந்திய பிரதமர் டெல்லிக்கும் திரும்பியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
   
 10. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  8,130
  Likes Received:
  525
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  'விசா' பிரச்சினை : டிரம்புடன் மோடி பேசவேண்டும் : காங்கிரஸ் வலியுறுத்தல்

  புதுடில்லி,பிப்.24, இந்தியாவுக்கு 2 நாள் சுற்றுப்பயணமாக அமெரிக்க அதிபர் டிரம்ப் இன்று (திங்கட் கிழமை) இந்தியா வருகிறார். டில்லியில் நாளை அவரும், பிரதமர் மோடியும் சந்தித்து பேசுகிறார்கள்.
  இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா தனது சுட்டுரைப் பதிவில் கூறி இருப்பதாவது:-
  அமெரிக்காவில் பணியாற்ற செல்வோருக்காக வழங்கப்படும் 85 ஆயிரம் எச்-1பி விசாக்களில் 70 சதவீதத்தை இந்தியர்கள் பெறு கிறார்கள். அமெரிக்க அரசு குடி யுரிமை தொடர்பான கொள்கை களை கடுமையாக்கி இருப்பதால், தகவல் தொழில்நுட்ப துறையில் பணியாற்றுவோர் எச்-1பி விசா பெறுவது பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. 2015ஆ-ம் ஆண்டில் 6 சதவீதமாக இருந்த விசா நிராகரிப்பு, 2019ஆம் ஆண்டில் 24 சதவீதமாக அதிகரித்து விட்டது.
  எனவே பிரதமர் மோடி அமெ ரிக்க அதிபர் டிரம்பை சந்திக்கும் போது எச்-1பி விசா பிரச்சினை குறித்து பேசவேண்டும். எச்-1பி விசா நடைமுறையை எளிமையாக்கு மாறு கேட்டுக் கொள்ள வேண்டும்.
  அமெரிக்கா விதித்துள்ள தடை யால் ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவது நிறுத்தப் பட்டு இருப்பதால், இந்தியாவுக்கு குறைந்த விலையில் கச்சா எண் ணெய் கிடைப்பதை உறுதி செய்யு மாறு டிரம்பை மோடி கேட்டுக் கொள்ள வேண்டும் என்று அவர் கூறி உள்ளார்.
  ஆனந்த் சர்மா
  முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான ஆனந்த் சர்மா கூறுகையில், மோடி-டிரம்ப் பேச்சுவார்த்தையில் இந்தியாவுக்கு சாதகமாக பெரிய அளவில் எதுவும் நடந்து விடுவதற்கான வாய்ப்பு இல்லை என்று கூறினார்.
  பாதுகாப்பு, விண்வெளி ஆய்வு, அணுசக்தி துறைகளில் ஒத்து ழைப்பை நீடிப்பது போன்ற வழக்க மான அம்சங்கள் பேச்சுவார்த்தை யில் இடம்பெறும் என்று நம்புவ தாகவும் தெரிவித்தார்.
   
Share This Page