டிரம்ப் இந்தியா வருகை

Discussion in 'Memes and Funny Videos - Daily Updates' started by NATHIYAMOHANRAJA, Feb 24, 2020.

  1. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    8,130
    Likes Received:
    525
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    டிரம்ப்- மோடி பேசிக்கொண்டிருக்கும் போதே அரங்கத்தை விட்டு வெளியேறிய மக்கள்


    அஹமதாபாத்: அஹமதாபாத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் பேசிக்கொண்டிருக்கும் போதே அரங்கத்திலிருந்து மக்கள் வெளியேறி சென்றார்கள். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
    Trump India Visit|டிரம்ப்பின் இந்திய வருகை... பின்னணி என்ன ?
    உலகத் தலைவராக, உலகிற்கு நாட்டமை போல் நடந்து கொள்பவராக அறியப்படுபவர் அமெரிக்க அதிபர். இந்த பதவியில் யார் இருந்தாலும் அவர் தான் உலக நாடுகளை நாட்டமை செய்வார். அந்த வகையில் டிரம்ப் அதிபராக பதவி ஏற்றதில் இருந்து கொஞ்சம் அதிகமாகவே நாட்டமை செய்து வருகிறார்.
    அவர் முதல்முறையாக இந்தியாவிற்கு வந்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஏர்ஃபோர்ஸ் ஒன் என்ற தனி விமானத்தில் இன்று முற்பகல் 11.40 மணியளவில் இந்தியா வந்தார். அதிபா் டிரம்புடன், அவரது மனைவி மெலானியா டிரம்ப், மகள் இவாங்கா, மருமகன் ஜேரட் குஷ்னா் ஆகியோரும் வந்தார்கள் மேலும், டிரம்ப் நிா்வாகத்தைச் சோந்த அமைச்சா்கள், அதிகாரிகள் அடங்கிய குழுவும் இந்தியா வந்துள்ளது.
    டிரம்ப் மற்றும் அவரது குழுவினருக்கு இந்திய அரசு மிகப்பெரிய வரவேற்பு அளித்துள்ளது. சுமார் ஒரு லட்சம் பேரை குஜராத்தின் அஹமதாபாத்தில் உள்ள மோதிரா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் குவித்து டிரம்பை வரவேற்றுள்ளது. அவரை வரவேற்கும் நிகழ்ச்சிக்கு வைக்கப்பட்ட பெயர் நமேஸ்தே டிரம்ப். இந்த நிகழ்ச்சயில் குவிந்த மக்கள் மத்தியில் அதிபர் டிரம்ப்பும, பிரதமர் மோடியும் உற்சாகத்துடன் உறையாற்றி கொண்டிருந்தார்கள்.
    டிரம்ப், பிரதமர் மோடியை புகழ்ந்து பேசுகையில், டீ வாலா வாக தனது வாழ்க்கையை தொடங்கியவர் பிரதமர் மோடி. அவர் டீ விற்கும் பணி செய்தார். அனைவரும் அவரை நேசிக்கின்றனர். ஆனால் நான் சொல்கிறேன் அவர் மிகவும் கடினமானவர்" என்றார். அத்துடன் மோடியை நீங்கள் குஜராத்தின் பெருமை மட்டுமல்ல.. கடின உழைப்பால் இந்தியர்கள் எதையும் சாதிக்கலாம் என்பதற்கு வாழும் எடுத்துக்காட்டு நீங்கள் என்று பாராட்டினார்.
    இப்படி ஒருவரை ஒருவர் பாராட்டி பேசிக்கொண்டிருந்த போதே அரங்கத்தை விட்டு ஏராளமான மக்கள் வெளியேறினர். 'நமஸ்தே டிரம்ப் ' கூட்டத்தில் சுமார் ஒரு லட்சம் மக்கள் பங்கேற்ற நிலையில் பலரும் புறப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
     
  2. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    8,130
    Likes Received:
    525
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    தாஜ்மகாலை சுற்றிப் பார்ததார் ட்ரம்ப்: 3 ஆயிரம் கலைஞர்கள் வரவேற்பு

    இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஆக்ராவில் உள்ள தாஜ்மகாலை பார்வையிட்டார். அவருக்கு 3 ஆயிரம் கலைஞர்கள் திரண்டு வரவேற்பளித்தனர்.
    அமெரிக்க அதிபர் டெனால்டு ட்ரம்ப்பும், அவரது மனைவி மெலானியாவும் இன்று காலை 11.40 மணிக்கு அகமதாபாத் வந்தனர். பிரதமர் நரேந்திர மோடி அவர்களை நேரில் வரவேற்றார்.
    பின்னர் விமான நிலையத்தில் இருந்து கிரிக்கெட் மைதானத்துக்கு ட்ரம்ப் காரில் சென்றார். வழிநெடுக மக்கள் திரண்டு நின்று அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
    வழியில் 30 இடங்களில் மேடைகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த மேடைகளில் கர்பா நடனம் உட்பட இந்தியாவின் 28 மாநிலங்களின் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
    இதனைத் தொடர்ந்து வழியில் சபர்மதி ஆசிரமத்துக்கு ட்ரம்ப் சென்றார். அங்கு அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் ஆசிரமத்தை அவர் சுற்றிப் பார்த்தார்.

    [​IMG]

    அங்குள்ள மகாத்மா காந்தியின் உருவப்படத்துக்கு அவர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அந்த ஆசிரமத்தில் காந்தி பயன்படுத்திய பொருட்களை வியப்புடன் பார்த்தார். பார்வையாளர்கள் பதிவேட்டில் அவர் கையெழுத்திட்டார்.
    ட்ரம்ப்பும், அவரது மனைவி மெலானியாவும் சபர்மதி ஆசிரமத்தில் உள்ள ராட்டையில் நூல் நூற்றனர். அப்போது ராட்டை குறித்து பிரதமர் மோடி அவருக்கு விளக்கம் அளித்தார்.
    [​IMG]
    ANI

    @Ani


    #WATCH US President Donald Trump and First Lady Melania Trump received by UP Governor Anandiben Patel and Chief Minister Yogi Adityanath in Agra.

    [​IMG]

    533
    4:36 PM - Feb 24, 2020
    Twitter Ads info and privacy

    91 people are talking about this



    பின்னர், மதியம் 1.05 மணிக்கு அகமதாபாத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள சர்தார் வல்லபாய் படேல் கிரிக்கெட் மைதானத்துக்கு சென்றார். அங்கு ட்ரம்ப்பை வரவேற்று 'நமஸ்தே ட்ரம்ப்' நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதில் சுமார் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்றனர்.

    [​IMG]

    பின்னர் ட்ரம்பும், மெலனியாவும் அகமதாபாத்தில் இருந்து தாஜ்மகாலை சுற்றி பார்ப்பதற்காக ஆக்ரா சென்றனர். ஆக்ரா விமான நிலையம் வந்தடைந்த அவர்களை உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் வரவேற்றனர். அங்கு இந்திய கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் 3 ஆயிரம் கலைஞர்கள் திரண்டு இசை இசைத்து, நடனமாடி ட்ரம்பை வரவேற்றனர்.
    பின்னர் ட்ரம்பும், மெலானியாவும் தாஜ்மகாலுக்கு சென்று பார்வையிட்டனர். அங்குள்ள வருகைப்பதிவு புத்தகத்திலும் ட்ரம்ப் கையெழுத்திட்டார்.
     
  3. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    8,130
    Likes Received:
    525
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    தாஜ்மஹாலை பார்வையிடுகிறார் அதிபர் டிரம்ப்


    ஆக்ரா: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தாஜ்மஹாலை பார்வையிடுகிறார். மனைவி மெலினியா, மகள் இவாங்கா மற்றும் மருமகனுடன் தாஜ்மஹாலை பார்வையிடுகிறார்.
     
  4. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    8,130
    Likes Received:
    525
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    ஒபாமா எழுதிய காந்தி பற்றிய குறிப்பு.. வைரலாகும் புகைப்படம்

    டிரம்ப் இந்தியா வந்துள்ள நிலையில், ஒபாமா எழுதிய காந்தி பற்றிய குறிப்பு இணையத்தில் வைரலாகி வருகிறது.

    இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோரை பிரதமர் மோடி வரவேற்றார். இதனைத் தொடர்ந்து சபர்மதி ஆசிரமம் சென்று பார்வையிட்டதை அடுத்து, உலகின் மிக பிரம்மாண்டமான ஸ்டேடியமான அகமதாபாத்தின் சர்தார் படேல் ஸ்டேடியத்தில் நடைபெற்ற 'நமஸ்தே டிரம்ப்' நிகழ்ச்சியில் டிரம்ப் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.

    இதனை தொடர்ந்து தாஜ் மஹாலை காண ஆக்ரா சென்றுள்ளனர். இந்நிலையில் கடந்த 2015 ஆம் ஆண்டு, அப்போதைய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, காந்தியின் நினைவிடத்திற்கு வந்தபோது காந்தி குறித்து எழுதிய குறிப்பு ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
    [​IMG]
    அதில், 'ஜூனியர் மார்டின் லூதர் கிங் சொன்னது இன்றும் உண்மையாக உள்ளது. காந்திய உணர்வு இந்தியாவில் இன்றும் உயிரோடு உள்ளது. அது உலகிற்கு பெரிய பரிசாக உள்ளது. எல்லா தேசங்கள் மற்றும் எல்லா மக்களிடையேயும் எப்போதும் நாம் அன்பு மற்றும் அமைதியின் உணர்வைப் பகிர்ந்துக்கொண்டு வாழ்வோம்' என கூறியுள்ளார்.
     
  5. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    8,130
    Likes Received:
    525
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    பிரதமர் மோடியை 'காப்பியடித்த' அதிபர் டிரம்ப்! இதை கவனித்தீர்களா?!


    மெரிக்க அதிபர் டிரம்ப் இன்று காலை இந்தியா வந்தடைந்தார். அவரை இந்தியப் பிரதமர் மோடி வரவேற்று சிறப்பித்தார். பின்னர் குஜராத்தில் உள்ள மொடேரா மைதானத்தில் நமஸ்தே டிரம்ப் என்ற நிகழ்வானது மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
    அதில் கலந்து கொண்டு பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், சிறப்பான வரவேற்புக்கு நன்றி கூறி பின்னர் அவரது உரையை நீட்டித்தார். இந்தியாவின் பல சிறப்பான திட்டங்களையும் பாராட்டி பேசியதோடு வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்தார்.
    இந்தநிலையில் அவர் இந்தியா வருகை தருவதற்கு முன்னதாக அவரது டுவிட்டர் பக்கத்தில் ஹிந்தி மொழியில் ட்விட் செய்து வெளியிட்டிருந்தார். அந்த ட்விட்டில் நாங்கள் இந்தியா வருவதை ஆர்வமாக எதிர்நோக்குகிறோம், சில மணி நேரங்களில் இந்தியா வந்து அனைவரும் சந்திப்போம் என்று குறிப்பிட்டிருந்தார்.
    பொதுவாக, மோடி தான் இந்த பாணியை பின்பற்றி கலக்குவார். ஆனால் தற்போது மோடியின் பாணியை டிரம்ப் பின்பற்றி இருக்கிறார். மேலும் 2 நாட்கள் டிரம்ப் இந்தியாவில் பயணம் செய்ய இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
     
  6. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    8,130
    Likes Received:
    525
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    பிரதமர் மோடியை 'காப்பியடித்த' அதிபர் டிரம்ப்! இதை கவனித்தீர்களா?!


    மெரிக்க அதிபர் டிரம்ப் இன்று காலை இந்தியா வந்தடைந்தார். அவரை இந்தியப் பிரதமர் மோடி வரவேற்று சிறப்பித்தார். பின்னர் குஜராத்தில் உள்ள மொடேரா மைதானத்தில் நமஸ்தே டிரம்ப் என்ற நிகழ்வானது மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
    அதில் கலந்து கொண்டு பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், சிறப்பான வரவேற்புக்கு நன்றி கூறி பின்னர் அவரது உரையை நீட்டித்தார். இந்தியாவின் பல சிறப்பான திட்டங்களையும் பாராட்டி பேசியதோடு வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்தார்.
    இந்தநிலையில் அவர் இந்தியா வருகை தருவதற்கு முன்னதாக அவரது டுவிட்டர் பக்கத்தில் ஹிந்தி மொழியில் ட்விட் செய்து வெளியிட்டிருந்தார். அந்த ட்விட்டில் நாங்கள் இந்தியா வருவதை ஆர்வமாக எதிர்நோக்குகிறோம், சில மணி நேரங்களில் இந்தியா வந்து அனைவரும் சந்திப்போம் என்று குறிப்பிட்டிருந்தார்.
    பொதுவாக, மோடி தான் இந்த பாணியை பின்பற்றி கலக்குவார். ஆனால் தற்போது மோடியின் பாணியை டிரம்ப் பின்பற்றி இருக்கிறார். மேலும் 2 நாட்கள் டிரம்ப் இந்தியாவில் பயணம் செய்ய இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
     
  7. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    8,130
    Likes Received:
    525
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    இந்தியாவுலதான் கோபேக்குன்னா.. அமெரிக்காவுல டோண்ட் கம்பேக் - ட்ரம்ப்பை வச்சு செய்யும் நெட்டிசன்கள் !


    இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை மீண்டும் அமெரிக்காவுக்கு வராதீர்கள என ஒருவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    இந்தியாவுக்கு அரசியல் பயணமாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இன்று மதியம் வந்தார். அவருக்கு மிக பிரம்மாண்டமாக வரவேற்புகள் அளிக்கப்பட்டு நட்சத்திர விடுதியில் தங்க வைக்கப்பட இருக்கிறார். இந்நிலையில் இன்று காலை அவர் இந்தியா வருவதற்கு முன்பாக டிவிட்டரில் #GobackTrump என்ற ஹேஷ்டேக் ட்ரண்ட் ஆகியது. வழக்கமாக மோடிக்குதான் நம்மாட்கள் இந்த ஹேஷ்டேக்கை பயன்படுத்துவார்கள்.
    இந்தியாவில்தான் இந்த நிலைமை என்றால் அமெரிக்காவிலோ அவரை இன்னும் மோசமாக விமர்சனம் செய்யும் வகையில் ஒரு நபர் ட்ரம்பின் டுவிட்டிலேயே கமெண்ட் செய்துள்ளார். ட்ரம்ப் இந்திய பயணத்தை முன்னிட்டு இன்று காலை 'நான் இந்தியாவுக்கு கிளம்பிவிட்டேன்' என டிவிட்டரில் சொல்ல, அதில் குறும்புக்காரர் ஒருவர் 'தயவு செய்து திரும்பி வராதீர்கள்' என கமெண்ட் செய்துள்ளார்.
     
  8. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    8,130
    Likes Received:
    525
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    கலவரம்..!துப்பாக்கிச் சூடு..! காவலர் பலி..! டெல்லி விரையும் பிரதமர் மோடி.!


    டெல்லி: சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில் வெடித்த கலவரத்தில் காவலர் ஒருவர் பலியாக, அவசர, அவசரமாக டெல்லி திரும்புகிறார் பிரதமர் மோடி.
    குடியுரிமை சட்டத்துக்கு எதிராக டெல்லி யமுனா விஹார் பகுதியில் நடைபெற்று வந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் வாகனங்கள், வீடுகளை சேதப்படுத்தினர்.
    அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் திணறிய போலீசார் ஒரு கட்டத்தில் கண்ணீர்புகை குண்டுகளை வீசினர். துப்பாக்கிச் சூடு நடத்தியும் போராட்டக்காரர்களை கலைத்தனர்.
    இந்த கலவரம் மற்றும் அதனை தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையில், தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. கோகுல்புரி, பஜன்புரா, மாஜ்புர் உள்ளிடட பல பகுதிகளில் வன்முறை வெடித்திருக்கிறது. இந்த கலவரத்தில் ஒரு காவலர் கொல்லப்பட்டார். உயரதிகாரி ஒருவர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடி வருகிறார்.
    அமெரிக்க அதிபர் டிரம்ப் குஜராத்தில் இருந்து ஆக்ரா சென்று பின்னர், டெல்லி வர உள்ளார். இப்படிப்பட்ட சூழலில், துப்பாக்கிச் சூடு நடந்திருப்பது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, அகமதாபாத்தில் இருந்து பிரதமர் மோடி அவசரமாக டெல்லி விரைந்துள்ளார்.
     
  9. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    8,130
    Likes Received:
    525
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    இந்தியா வந்த அதிபர் டிரம்ப்; அமெரிக்க இந்தியா இடையிலான கெமிஸ்ட்ரி!


    பிரதமர் மோடியின் தலைமையில் இந்தியா உலக அரங்கில் முன்னணி நாடாகவும் பொருளாதார வல்லரசாகவும் வளர்ந்துள்ளது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் பாராட்டு!!
    இரு வல்லமை மிக்க நாடுகளின் தலைவர்களான, அதிபர் டிரம்ப் மற்றும் பிரதமர் மோடியின் சந்திப்பு இந்திய மண்ணில் நிகழ்வதை உலகமே உன்னிப்பாக உற்று நோக்குகிறது. இந்திய பிரதமர் அமெரிக்கா சென்றபோது அவரை கவுரவிக்க 'ஹவ் டி மோடி?' என்ற மாபெரும் வரவேற்பு அளிக்கப்பட்ட்து. அதில் ஐம்பதாயிரம் பேர் கலந்து கொண்டார்கள். அதற்கு நிகராக என்பதை விட அதற்கு ஒருபடி மேலே ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்கும் 'நமஸ்தே டிரம்ப்' என்ற பிரம்மாண்ட வரவேற்பு டிரம்ப்பிற்கு இந்தியாவில் அளிக்கப்பட்டுள்ளது.
    இருவருமே அதிரடியாக முடிவெடுப்பவர்கள். தன் நாட்டின் நலனுக்காக உறுதியான முடிவுகளை எடுக்கக் கூடியவர்கள். அமெரிக்க மண்ணில் பிறப்பதாலேயே ஒரு குழந்தைக்கு உடனடியாக அதற்கு அந்த நாட்டின் குடியுரிமை கிடைத்து விடும் என்று இருந்த சட்டத்தை அபத்தமானது என்று வர்ணித்த டிரம்ப் அதை நீக்குவதற்கான சட்டத்தை கடந்த ஆண்டு இயற்றினார். இதன் மூலம் அமெரிக்காவிற்கு சுற்றுலா வருபவர்களுக்கு குழந்தை பிறந்தால் கூட அந்த குழந்தைக்கு குடியுரிமை கிடைத்து வந்த முந்தைய நிலையில் மாற்றம் ஏற்பட்ட்து.
    இதே போல பிரதமர் மோடி அவர்கள் இந்திய நாட்டில் சட்ட விரோதமாக குடியேறிவர்களை கண்டறியவும், உண்மையாக குடியுரிமை தேவைப்படும் அகதிகளுக்கு குடியுரிமை கிடைக்கவும் தேவையான சட்டத்தை பல எதிர்ப்புகளுக்கு இடையே நிறைவேற்றினார்.
    அதிபர் டொனால்ட் ஜான் டிரம்ப் மற்றும் நரேந்திர தாமோதர் தாஸ் மோடி இருவருமே தாங்கள் கல்வி கற்ற துறையிலேயே பரிணமித்த்து ஒரு ஆச்சரியம். டிரம்ப் பொருளாதாரத்தில் பட்ட படிப்பு முடித்தவர். மோடி அரசியல் அறிவியலில் முதுகலை முடித்தவர். முன்னதாக டிரம்ப் ஒரு வெற்றிகாரமான தொழிலதிபராக பணக்கார்ராக அறியப்பட்டார். பிறகே அரசியலுக்கு வந்தார். தான் பொருளாதார ஆதாயத்திற்காக பதவிக்கு வரவில்லை என்று அறிவிப்புடன் டிரம்ப் அரசியல் பிரவேசம் செய்தார். மோடி அவர்கள் விவேகானந்தரின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு நாட்டுக்கு சேவை செய்யும் முழு நோக்கத்துடன் அரசியலுக்கு வந்தார். மோடி அவர்களின் அரசியல் பயணம் நெடுங்கால அளவை கொண்டது. இருவரும் விமர்சன்ங்களை பற்றி கவலைப்படாமல் நாட்டுக்கு நன்மை தரும் முடிவுகளை எடுக்கும் தலைமை பண்பு கொண்டவர்கள்..
    எனவே, இரு தலைவர்களின் நட்பும் உலகளவில் ஒரு பேசுபொருளாக இருந்தது. இருவரும் சந்திக்கும் சமயங்களில் ஒரு அன்பான புரிதலுடன் இருவரும் இருப்பதை காண முடியும். அமெரிக்காவில் ஒரு முறை டிரம்பின் ஐ.கியூ பற்றி கேள்வி எழுந்து அந்த செய்தி பரபரப்பானது. அப்போது டிரம்ப் ஐ.கியூ சோதனையில் கலந்து கொண்டு அதை நிரூபித்ததாகவும் ஒரு செய்தி உண்டு. அவரது ஐ.கியூ (IQ) 156 என்று அவர் கூறியிருந்தார். ஆனால் டிரம்ப் சற்று உணர்ச்சி வசப்பட்டு ஏறுமாறான அறிக்கைகளை விட்டு சிலசமயம் வாங்கிக் கட்டிக் கொள்வார். முதலில் கொரிய அதிபர் கிம் ஜாங் உன் உடன் காரசாரமான அறிக்கைகள் விட்டார். பிறகு சிறிது நாட்கள் கழித்து நான் அவரை நேசிக்கிறேன் என்று சொல்லி அதற்கு முற்றுப் புள்ளி வைத்தார்.
    பிரதமர் மோடி அவர்கள் அரசியல், மொழி, கலாசாரம், ஆன்மிகம் என எல்லா துறைகளிலும் ஆழ்ந்த அறிவு கொண்டவர். அவரது மேடைபேச்சோ, அல்லது வானொலியின் மன் கி பாத் உரையோ மக்கள் மனதை தொடும் விதமாக இருக்கும். அவரது உரை நடுவே மெல்லிய நகைச்சுவை இழையோடும். தவிர மோடி அவர்களிடம் ஐ.கியூ (IQ) மட்டுமல்ல இ.கியூ (E.Q) எனப்படும் Emotional Quotient திறன் அதிகம். எப்போதுமே தவறான அறிக்கைகளையோ, பாகுபாடான விஷயங்களையோ பிரதமர் மோடி பேசியதே இல்லை. ஒரு பக்குவமான ஆளுமை கொண்ட ஒரு தலைவராகவே மோடி காணப்படுகிறார்.
    டிரம்பின் வயது 73, மோடியின் வயது 69. இருவரும் தன்னலமற்று தங்கள் நாடுகளுக்கு பணியாற்றுவதில் ஒத்த கருத்தை கொண்டுள்ளார்கள் எனலாம். மேலும் தலைவர்கள் இருவரும் தலைமைப் பண்புடன், அதிகார வல்லமையை சரியாக கையாளும் திறன் கொண்டவர்களாக இருப்பதால் உலகம் அவர்கள் மீது அபரிதமான மரியாதை கொண்டுள்ளது. இரு நாட்டின் நட்புறவை பார்த்து சில நாடுகள் பொறாமையும், சில நாடுகள் அச்சமும் கொள்கின்றன. அதிதி தேவோ பவ என்பதற்கு ஏற்ப டிரம்பிற்கு இந்தியாவில் விமரிசையான வரவேற்பு கொடுக்கப்பட்டு வருகிறது.
     
  10. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    8,130
    Likes Received:
    525
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    இஸ்லாமிய பயங்கரவாதம் உலகின் மிகப் பெரிய அச்சுறுத்தல் - அதிபர் டிரம்ப்!


    இஸ்லாமிய பயங்கரவாதம் தான் உலகின் மிகப் பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
    அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இரண்டு நாள் இந்திய பயணமாக இன்று மதியம் 12 மணியளவில் அகமதாபாத் விமான நிலையத்திற்கு வருகை தந்தார். அவருடன் மனைவி மெலனியா மற்றும் மகள் இவான்கா ஆகியோரும் வந்திருந்தனர். அதிபர் டிரம்புக்கு சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்டு கலை நிகழ்ச்சிகளுடன் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் சொகுசு காரில் அங்கிருந்து காந்தியடிகளின் சபர்மதி ஆசிரமத்திற்கு சென்று மனைவியுடன் சுற்றிப்பார்த்தார். அப்போது மோடி உடனிருந்து அங்கிருந்தவற்றை விளக்கினார்.
    அதை தொடர்ந்து அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அகமதாபாத் கிரிகெட் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற 'நமஸ்தே ட்ரம்ப்' நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில், இந்தியாவிற்கு எப்போதும் உண்மையான நட்பு நாடாக அமெரிக்கா விளங்கும் என உறுதியளித்தார். இந்தியாவை அமெரிக்கா நேசிக்கிறது என்றும், இந்தியா மீது அமெரிக்க மதிப்புகொள்வதாகவும் தெரிவித்த டிரம்ப், இந்தியாவின் மிகச்சிறந்த தலைவராக மோடி விளங்குவதாக புகழாரம் சூட்டினார்.
    தொடர்ந்து பேசிய அவர், பிரதமர் மோடியின் தலைமையில் ஒவ்வொரு கிராமமும் மின்சார வசதியை பெற்றுள்ளது என்றும், மோடியின் தலைமையில் இந்தியா எந்த சாதனையையும் நிகழ்த்தும் எனவும் கூறினார். இந்தியர்களின் ஒற்றுமை உலக நாடுகளுக்கு ஒரு உதாரணம் என்றும் அவர் தெரிவித்தார்.
    மேலும் 70 ஆண்டுகளில் இந்தியா பொருளாதார வல்லரசு நாடாக மாறியுள்ளதாக தெரிவித்த அவர், உலக முழுவதும் வாழும் நடுத்தர மக்களின் தாயகமாக இந்தியா உருவெடுக்கும் எனவும், எல்லைகளை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க அனைத்து நாடுகளுக்கும் உரிமை இருக்கிறது எனவும் தெரிவித்தார். அதேபோல இஸ்லாமிய பயங்கரவாதம்தான் உலகின் மிகப் பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது என்று கூறிய டிரம்ப், பயங்கரவாத்திற்கு எதிராக இந்தியாவுடன் இணைந்து அமெரிக்கா செயற்படும் எனவும் உறுதியளித்தார்.
    அத்துடன் ராணுவ உபகரணங்களை இந்தியாவுக்கு வழங்க தயாராக இருக்கிறோம். இந்தியாவிற்கான இராணுவ உதவிகளை தொடர்ந்து வழங்குவோம். இந்தியாவுடன் தொடர்ந்து நல்லுறவு நீடிக்க அமெரிக்கா தொடர்ந்து நடவடிக்கை எடுக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார். இதன் முதற்கட்டமாக இந்தியாவுடன் 3 பில்லியன் டாலர் (21.5 ஆயிரம் கோடி) மதிப்பிலான பாதுகாப்பு ஒப்பந்தத்தில் நாளை கையெழுத்திடவுள்ளதாகவும் ட்ரம்ப் அறிவித்தார்.
    மேலும் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு 100 வீதம் அழிக்கப்பட்டுள்ளது. அந்த அமைப்பின் தலைவர் அல்பக்தாதி கொல்லப்பட்டுள்ளார் எனத் தெரிவித்த ட்ரம்ப், தெற்கு ஆசியாவில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண அமெரிக்க தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார்.
     

Share This Page