டிரம்ப் இந்தியா வருகை

Discussion in 'Memes and Funny Videos - Daily Updates' started by NATHIYAMOHANRAJA, Feb 24, 2020.

 1. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  8,130
  Likes Received:
  525
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  சுச்சின்.. சீவாலா.. மேடையிலேயே குழம்பிய டிரம்ப்.. ஷாக்கான கூட்டம்.. என்ன இப்படி சொல்லிட்டாரே!


  அகமதாபாத்: நமஸ்தே டிரம்ப் விழாவில் இன்று பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப் சில வார்த்தைகளை தவறாக உச்சரித்தது பெரிய வைரலாகி உள்ளது.
  Trump India Visit|டிரம்ப்பின் இந்திய வருகை... பின்னணி என்ன ?
  நமஸ்தே டிரம்ப் விழா மிகவும் பிரம்மாண்டமாக இன்று காலை நடந்து முடிந்தது. இந்தியா வந்திருக்கும் அமெரிக்க அதிபர் டிரம்ப் இன்று குஜராத்தில் மக்கள் முன்னிலையில் பேசினார்.
  அகமதாபாத்தில், ஒரு லட்சத்து 10 ஆயிரம் பேர் கூடியுள்ள மொதேரா அரங்க மேடையில் பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மக்கள் முன்னிலையில் பேசினார். இந்தியா குறித்தும், பிரதமர் மோடி உடனான அவரின் நட்பு குறித்தும் டிரம்ப் பேசினார்.
  என்ன
  என்ன சொன்னார்
  இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி ஒரு காலத்தில் ''சீவாலாவாக'' இருந்தார் என்று அதிபர் டிரம்ப் குறிப்பிட்டார். ''சாய்வாலா'' என்பதை சொல்ல முயன்றுதான் ''சீவாலா'' என்று குறிப்பிட்டார். அதேபோல் பிரதமர் மோடி ஒரு காபிடேரியாவில் பணியாற்றினார் என்றும் டிரம்ப் குறிப்பிட்டு இருந்தார். இவர் இந்த சொல்லை பயன்படுத்திய போது அங்கு இருந்தவர்கள் பலர் இவர் என்ன சொல்கிறார் என்று தெரியாமல் குழம்பினார்கள்

  [​IMG]
  சச்சின்
  சச்சின் டெண்டுல்கர்
  அதேபோல் உலகம் முழுவதும் புகழ்பெற்ற சச்சின் டெண்டுல்கர் என்ற பெயரை டிரம்ப் 'சுச்சின் டெண்டுல்கர்'' என்று குறிப்பிட்டார். அதேபோல் மிகவும் பிரபலமான படமான ''ஷோலே'' என்பதை குறிப்பிட ''ஷோஜே'' என்று குறிப்பிட்டார். அதேபோல் வேதாஸ் என்று சொல்வதற்கு பதிலாக, வேஸ்டாஸ் என்று குறிப்பிட்டார். சுவாமி விவேகானந்தர் என்று சொல்வதற்கு பதில் ''விவேகமானான்'' என்று குறிப்பிட்டார்.

  [​IMG]
  தவறு
  என்ன தவறு
  அவர் இப்படி அடுத்தடுத்து தவறு செய்தது சிலரை சிரிக்க வைத்தது. இன்னும் சிலர் அவருக்கு இதெல்லாம் தெரியாது. அவர் கஷ்டப்பட்டு இந்தியர்களை கவர வேண்டும் என்று பேசுகிறார். அவரை கிண்டல் செய்ய கூடாது என்று கருத்து தெரிவித்தனர் .அதேபோல் இந்த பிரதமர் மோடியும் இதில் சில விஷயங்களை தவறாக குறிப்பிட்டார்.
  டிரம்ப்
  டோலன்ட் டிரம்ப்
  அதன்படி, அவர் டொனால்ட் டிரம்ப் என்று குறிப்பிடுவதற்கு பதிலாக, ''டோலன்ட் டிரம்ப்'' என்று குறிப்பிட்டார். இந்த வீடியோவும் இணையம் முழுக்க வெளியாகி உள்ளது. பலரும் இதை ஷேர் செய்து வருவதால் இந்த வீடியோ வைரலாகி வருகிறது. முன்னதாக இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசி முடித்ததும் மக்கள் வெளியேறியது குறிப்பிடத்தக்கது. அதாவது டிரம்ப் பேசும் வரை மக்கள் காத்திருக்கலாம் அங்கிருந்து வெளியேறி சென்றார்கள்.
   
 2. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  8,130
  Likes Received:
  525
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  "முன்னாடி வந்து பாருங்க" - ட்ரம்ப்புக்கு குரங்கு பொம்மைகளை விளக்கிய பிரதமர் மோடி


  சபர்மதி ஆசிரமத்தில் மூன்று குரங்கு பொம்மைகள் சொல்ல வருவது என்ன என்பது குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கு பிரதமர் மோடி விளக்கி கூறினார்.
  அமெரிக்க அதிபர் ட்ரம்ப் 2 நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ளார். அவருடன் அவரது மனைவி மெலனியா ட்ரம்ப், மகள் இவான்கா ட்ரம்ப் ஆகியோரும் வந்துள்ளனர். பகல் 11.40 மணியளவில் அகமதாபாத் விமானநிலையம் வந்த ட்ரம்ப்பை இந்திய பிரதமர் மோடி ஆரத்தழுவி வரவேற்றார். மேலும் அவரது மனைவி மற்றும் மகளை கைக்குலுக்கி வரவேற்றார். இதையடுத்து அங்கிருந்து ட்ரம்ப்பும், மெலனியாவும் காந்தியின் சபர்மதி ஆசிரமத்திற்கு வருகை புரிந்தனர்.

  [​IMG]

  அங்கு காந்தியின் புகைப்படத்திற்கு மரியாதை செலுத்திய ட்ரம்ப், காந்தி சுற்றிய ராட்டையை சுற்றிப்பார்த்து மகிழ்ந்தார். பின்னர், அங்கு ' தீயதை பேசாதே, தீயதை பார்க்காதே, தீயதை கேட்காதே' என்ற கருத்தினை வெளிப்படுத்தும் குரங்கு பொம்மைகள் குறித்து மோடி தெளிவுப்படுத்தினார். இதை ஆச்சரியத்துடன் ட்ரம்ப்பும் மெலனியாவும் குரங்கு பொம்மைகளுக்கு பின்னால் நின்று கேட்டுக்கொண்டிருந்தனர். அப்போது முன்னால் வந்து பாருங்கள் என்று மோடி அழைக்க இருவரும் குரங்கு பொம்மைகளின் முன்புறம் வந்து ரசித்தனர்.
   
 3. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  8,130
  Likes Received:
  525
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  சபர்மதி நினைவிடத்தில் காந்தி குறித்து எழுதாத ட்ரம்ப்: 2010-ல் பராக் ஒபாமா எழுதியது என்ன தெரியுமா?


  குஜராத்திலுள்ள சபர்மதி காந்தி நினைவிடத்துக்குச் சென்ற அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பார்வையாளர்கள் புத்தகத்தில் காந்தி குறித்து எழுதாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

  அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இரண்டு நாள்கள் அரசு முறைப் பயணமாக இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார். குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்துக்கு வந்திறங்கிய ட்ரம்பை, பிரதமர் மோடி சென்று வரவேற்றார். ட்ரம்புடன் அவரது மனைவி மெலனியா ட்ரம்ப்பும் உடன் வந்துள்ளார். அகமதாபாத் விமானநிலையம் வந்திருக்க ட்ரம்ப்பையும் மெலனியா ட்ரம்பையும் மோடி நேரில் வந்து வரவேற்றார்.

  பின்னர், மூவரும் சபர்மதியிலுள்ள காந்தி ஆசிரமத்துக்குச் சென்றனர். அங்கே இருந்த பார்வையாளர்கள் பதிவேட்டில் எழுதிய ட்ரம்ப், 'இந்த இடத்தை சுற்றிக் காட்டியதற்காக என்னுடைய மிகச் சிறந்த நண்பர் மோடிக்கு நன்றி' என்று குறிப்பிட்டிருந்தார். அதில், காந்தி குறித்து எதுவும் எழுதவில்லை. அது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.முன்னதாக, 2010-ம் ஆண்டு இந்தியாவுக்கு வருகை தந்த அப்போதைய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, எழுதிய வாக்கியங்களும் தற்போது நினைவுகூரப்படுகின்றன. அப்போது பராக் ஒபாமா, 'காந்தியின் வாழ்க்கையின் சாட்சியங்களாய் இருக்கும் இந்த இடத்தை பார்ப்பதற்கு எனக்கு கிடைத்த வாய்ப்பின்மூலம், நான் நம்பிக்கையாலும் உத்வேகத்தாலும் நிரப்பப்பட்டுள்ளேன். காந்தி ஒரு நாயகன், இந்தியாவுக்கு மட்டுமல்ல இந்த உலகத்துக்கே'என்று குறிப்பிட்டுள்ளார்.
   
 4. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  8,130
  Likes Received:
  525
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  அதிதி தேவோ பவ: டிரம்பின் ஹிந்தி ட்வீட்டுக்கு மோடியின் பதில்!


  அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இன்று இந்தியா வந்துள்ளார். ஆமதாபாத் வந்திறங்கிய அவர், சபர்மதி ஆசிரமத்தில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பின்னர் ஒரு லட்சம் பேர் கலந்து கொண்ட மிகப் பிரமாண்டமான விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார்.
  முன்னதாக, டிரம்ப் இந்தியாவுக்கு வரும் முன்னர், ஹிந்தியில் ஒரு டிவிட்டர் பதிவினைச் செய்திருந்தார். அதுகுறித்து கருத்து தெரிவித்த மோடி, இந்தியாவுக்கு வருகை தரும் 7வது அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப். இதுவரையிலும், இந்தியாவுக்கு வந்த எவரும் ஹிந்தியை ஒரு இருதரப்பு தொடர்பு ஊடகமாக பயன்படுத்தியதில்லை. இந்த ட்வீட் இந்தியாவின் மென்பொருள் துறையின் சக்தியைக் காட்டுகிறது என்று குறிப்பிட்டார் மோடி.
  மேலும் டொனாட்ல் ட்ரம்பை வரவேற்கும் விதமாக அதிதி தேவோ பவ என்று குறிப்பிட்டு, விருந்தினரைப் போற்றுவோம் என்று தெரிவித்திருந்தார். பாரதத்தின் பண்டைய வேத ஞானக் கருத்து இது என்பதும், அதனை பிரதமர் மோடி குறிப்பிட்டு, நாட்டின் பாரம்பரிய அடையாளத்தை வெளிப்படுத்தியிருப்பதும் பலரது பாராட்டுகளையும் பெற்றது.
  முன்னதாக இந்த நிகழ்ச்சியில் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்.
  தேநீர் விற்ற மோடி, பிரதமர் பதவிக்கு உயர்ந்துள்ளார், அவரை எல்லாரும் நேசிக்கிறார்கள்
  இந்தியர்களால் எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு உதாரணம் பிரதமர் மோடி
  விவேகானந்தர் போன்ற ஞானிகள் பல நல்ல தத்துவங்களை வழங்கி சென்றுள்ளனர்
  கலாச்சாரம், வாழ்வியல், பொருளாதாரத்தில் இந்தியா இணைந்து செயல்படுகிறது
  இந்தியாவின் சாம்பியன், ஒப்பற்ற தலைவர் பிரதமர் மோடி அவர்களுக்கு நன்றி
  இந்தியா மீது எப்போதும் எங்களுக்கு காதல் உண்டு
  வேற்றுமையில் ஒற்றுமை, ஜனநாயகத்தை மதிக்கும் நாடு இந்தியா
  இந்தியா எங்களது இதயத்தில் இடம் பிடித்த நாடு
  வறுமையில் இருந்து பல கோடி இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர்
  இந்திய படைகளுக்கு ஹெலிகாப்டர்கள், போர் விமானங்களை வழங்க தயார்
  விண்வெளி திட்டங்களிலும் அமெரிக்கா ஒத்துழைப்புடன் செயல்படும்
  தீவிரவாதத்தை ஒடுக்க இந்தியாவுடன் இணைந்து செயல்படுவோம்
  தீவிரவாதிகளை ஒழிப்பதற்கு இந்தியா நல்ல தலைமையை கொண்டுள்ளது
  பாகிஸ்தானில் தீவிரவாதத்தை ஒடுக்குவதில் முனைப்பு காட்டி வருகிறேன்
  'டைகர் டிரயல்' என்ற பெயரில், இரு நாடுகளின் ராணுவ கூட்டுப்பயிற்சி நடைபெறும்
  ஏவுகணைகள், ராக்கெட்டுகள், கப்பல் கட்டுவதில் இந்தியாவுடன் ஒத்துழைப்பு - என்று பேசினார்.
   

Share This Page