டைட்டானிக் கனவுகள் / Titanic Kanavugal By Balasundar

Discussion in 'Serial Stories' started by Tamilsurabi, Feb 18, 2019.

 1. Tamilsurabi

  Tamilsurabi Administrator Staff Member

  Joined:
  Sep 11, 2014
  Messages:
  314
  Likes Received:
  215
  Trophy Points:
  43
  வணக்கம் தமிழ் சுரபி வாசகர்களே


  நம்முடைய தளத்திற்கு வந்திருக்கும் புதிய எழுத்தாளர் பாலாசுந்தர் அவர்களை வரவேற்பதில் மகிழ்கிறோம்


  தலைப்பு - டைட்டானிக் கனவுகள்


  IMG-20190218-WA0013.jpg

  ஒரு கனவும் அழகான காதலும் உங்களுக்காக தந்திருக்கிறேன் .
  உங்களில் ஒருத்தியாக என் கதை நாயகி இருப்பாள்.


  இது ஒரு காதல் கனவு
  காதல் கண்ணாமூச்சி ஆட்டத்தில் உங்களையும் நுழைய வைக்கப்போகிறேன்.
  நுழைந்ததும் காதல் வயப்படுவீர்கள். ரெடி?


   
 2. Bala sundar

  Bala sundar Member

  Joined:
  Feb 15, 2019
  Messages:
  57
  Likes Received:
  61
  Trophy Points:
  18
  Gender:
  Female
  டைட்டானிக் கனவுகள் !

  பாலா சுந்தர்

  Episode 1

  ப்ரனவ் அந்த அழகிய மணமேடைப் பந்தல் அருகே வருகிறான். இன்று அவனது திருமணம். அவனது மொத்தக் குடும்பமும் மண்டபத்திலேயே தங்கிவிட்டது. திருமண மண்டபம் வெகு தொலைவில் இருந்ததால் இரு வீட்டாரும் மண்டபத்தில் இருந்த நாற்பது அறைகளையும் தாங்களே எடுத்துக் கொண்டார்கள். அவனால் அந்த மணமேடையின் அழகைக் கண்டு ரசிக்காமல் இருக்க முடியவில்லை. ஜெரீபரா பூக்களும், மல்லிகையும் அந்த மணமேடையை அலங்கரித்த விதம் அவன் மனதுக்குள்ளும் நறுமணம் வீசச்செய்தது.

  மனது மணந்தது. மல்லிகையாய் மணந்தது. அங்கு நிறைந்திருந்த ஜெரீபரா மலர் போல வண்ணமயமாய் அவன் வாழ்க்கை இருக்கப்போவதை நினைத்துப் பூரித்தது.

  “என்ன ப்ரனவ் இன்னும் நீ குளிச்சிட்டு பட்டு வேஷ்டியைப் போடலையா? அப்பா வேற எங்க போனாரோ? நான் தான் தனியே அல்லாடிட்டு இருக்கேன். கல்யாண மண்டபத்துக்கு எல்லாரும் எட்டு மணிக்கே வர ஆரம்பிச்சிடுவாங்க. மாமன் சாஸ்திரம் ஏழு மணிக்குன்னு புரோகிதர் டைம் ஃபிக்ஸ் பண்ணிட்டார். அவர் இப்ப வந்து ஏற்பாடெல்லாம் பண்ண ஆரம்பிச்சிடுவார். அதுக்குள்ள நீ ரெடியாகிடு சரியா? மணி ஆறாகுது. சீக்கிரம் உன் ரூமிற்குப் போய் ட்ரஸை மாத்து. நான் திரும்ப திரும்ப உன்னை வந்து செக் பண்ண முடியாது. ஆமாம் உன் ஃப்ரண்ட்ஸ் ஏழு மணிக்கு வந்திடுவாங்கல்ல? அவுங்களைதான் சமையற்கட்டில் நிற்கச் சொல்லணும். ஒரு மணிநேரம் அங்க நின்னு பார்த்துக்கிட்டா போதும். அப்புறம் நம்ம மாமா பார்த்துக்குவார். என்னம்மா கண்ணெல்லாம் வீக்கமா இருக்கு? கல்யாணப் பொண்ணுகூட விடிய விடிய பேசினியா?"
  ப்ரனவ் மகிழ்ச்சியாய் புன்னகை செய்தான்.

  “வெங்கட் வந்திடுவான்மா. நான் போய் குளிச்சிட்டு வந்திடுறேன்."
  “அப்ப சரி. மண்டப வாசலில் போய் பார்த்தியா? நீயும் உன் வீட்டுக்காரியும் இருக்கும் கோல டிசைனைப் பார். ரொம்ப அழகா செல்வம் தம்பி வரைந்திருக்கு. நேற்று நைட் ஏழு மணிக்கு ஆரம்பிச்சாங்க. விடியக்காலைதான் முடிச்சாங்க. உன் வீட்டுக்காரிதான் ஜொலிக்கிறா போ.. நீயும் நல்லாதான் இருக்க.. ஆனா என் மருமகதான் டாப் தெரியுமா?"
  ப்ரனவ் கர்வமாகச் சிரித்தான்.

  “அட ப்யூட்டிஷன் வந்திட்டாங்களே.. உன் மாமா பொண்ணுங்க புக் பண்ணிருந்தாங்க. அவுங்களை உன் மாமா பொண்ணுங்க இருக்கும் ரூமிற்கு கூட்டிட்டுப் போ. நான் போய் கோலத்தை ஒரு ஃபோட்டோ எடுத்திட்டு வர்றேன்." என்று கூறியவர் வேகமாக வாசலுக்கு விரைந்தார்.

  அவனது மாமனின் குலம் செழிக்க வைக்க வந்த குத்துவிளக்குள் இருக்கும் அறைப் பக்கமாகச் செல்லவே ப்ரனவிற்கு தயக்கமாக இருந்தது. “மாமா பொண்ணுகளுடன் கல்கத்தா கோஷ்டியும் இருக்குமே.. அப்புறம் அந்த அமேரிக்கா வாண்டுகளும் ஆஜர் ஆகியிருக்குமே.." எல்லாம் சேர்ந்து இஷ்டத்திற்கு கேலி பேசுமே என்று தயங்கினான்.

  பிறகு, “ரூமை காட்டியதும் இடத்தைக் காலி செய்யப்போறோம். இதுல்ல என்ன இருக்கு?" என்று உடனே தயக்கத்தை அப்புறப்படுத்தினான். ப்யுடிஷனுக்கு அறையைக் காண்பித்தான்.

  அறை வாசலில் வந்து நின்றபோது அந்த அழகுக்கலை நிபுணர் அவனிடம்,
  “சார்.. இதுதான் ரூமா?" என்று வினவினார். ஆமா என்று கூறிவிட்டு அவன் இரண்டு அடிகள் நகர்ந்தான். அப்போது.. அவர் சத்தமாக அவனை அழைத்தார்.

  “சார்.."

  “என்னங்க?"

  “சார். ஒரு ஹெல்ப். என்னோட வண்டியில் இன்னொரு பையை வச்சிட்டு வந்திட்டேன். இந்தப் பையை ஒரு நிமிஷம் பார்த்துக்கோங்க. நான் எடுத்திட்டு வந்திடுறேன். உங்களுக்கு லேட் ஆகிடுச்சுன்னா உள்ளே ரூமில் கொண்டு போய் வச்சிடுவோமா?" என்றாள்.

  அதுங்க முகத்தில் விழிப்பதற்கு பதில் இரண்டு நிமிடங்கள் இந்த பை மூட்டைகளைக் காவல் புரிவதில் தப்பில்லை என்றது அவனது உள்ளுணர்வு.

  “நீங்க போய் எடுத்திட்டு வாங்க நான் இதைப் பார்த்துக்குறேன்." என்றான்.
  அவன் சரி என்றதும் வேகமாக வாசல் நோக்கி எட்டு வைத்தார் அந்தப் பெண்மணி.
  அவன் சுவரில் சாய்ந்து நின்றுகொண்டு, கால்களைப் பின்பக்கமாக மடக்கி சவரில் வைத்துக்கொண்டு கண்களை மூடி தனது தேவதையின் முகத்தைக் காண ஆசை கொண்டான். ஆனால் கண்களை மூடி யோசித்துப் பார்த்தபோது அவனது தேவதையின் முகம் கண்களில் தெரியவில்லை.
  ஏமாற்றம்! பெரு ஏமாற்றம் அவனுக்கு ஏற்பட்டது.

  துணிந்து மறுமுறை கண்களை மூடினான். இப்போது அவன் அவனது தேவதையை நினைக்கத் தொடங்கும் முன் அறைக்குள் இருந்த குத்துவிளக்குகள் அரசல் புரசலாக பேசிக் கொண்டது. கதவைத் தாளிட்டுக்கொண்டாலும் சன்னல்களை அகலமாகத் திறந்து வைத்துக்கொண்டு பேசினால் பக்கத்து அறைக்குக்கூட கேட்குமே? அதனால் ப்ரனவிற்கும் அந்த பேச்சுகள் பிசிரில்லாமல் கேட்டது.

  “ஏய் மது மாமாவின் ஆளைப் பார்த்திருக்கியா?" என்றாள் ப்ரீத்தி.

  “ஓ!" என்றாள் மது.
  “ஆள் எப்படிடீ இருப்பாங்க? நான்தான் பொண்ணு பார்க்க வரலையே. நிச்சியத்திற்கும் வரலை.. நான் தான் மிஸ் பண்ணிட்டேன்."
  “ரொம்ப நல்லாதான் இருப்பாங்க. ரொம்பக் கலர் எல்லாம் கிடையாது. ஆனா நச்சுன்னு இருப்பாங்கடி."
  “ஏய் நான் ஒண்ணு கேட்பேன் நீ கோச்சிக்கக் கூடாது!"

  “கேளு!"

  “ஏய் இன்னைக்கு நைட் யாருடி பூ அலங்காரம் எல்லாம் செய்வாங்க?"
  “நானில்லை.." என்றாள் மது.

  “அட ஆசையப் பாரு.. மாமாவோட ஆளின் அம்மாவைப் பார்த்தேன்டி.. மது! இதுதான் பொண்னோட அம்மான்னு பக்கத்தில் இருந்தவங்க பேசிக்கிட்டாங்க.."

  “எப்ப?" என்று அங்கிருந்த மற்ற இரண்டு யுவதிகளும் கேட்க..

  “இப்பதான் ப்ரீத்தி அவுங்களை கார் பார்க்கிங்கில் பார்த்தேன். பூக்கார அண்ணன்கிட்ட இரண்டாயிரம் உதிரிப் பூ ஆர்டர் கொடுக்கும் போது நான் பக்கத்தில்தான் இருந்தேன்.

  நான் என் காரிலிருந்து என் சாமான் எடுத்திட்டு இருந்தேன். அவுங்க, அவுங்க காருக்கு பக்கத்தில் நின்னுகிட்டு இருந்தாங்க. ஜிலேபி, லட்டு எல்லாம் அரை கிலோ ஃபோனிலேயே அமிர்தம் ஸ்வீட்ஸில் ஆர்டர் போட்டாங்க. பன்னீர் கூஜாவில் பன்னீர்கூட ஊத்தி வச்சிட்டாங்களாம் யார்கிட்டயோ சொன்னாங்க." என்று அதி முக்கிய செய்தி ஒன்றை வாசித்தாள் மது.
  ப்ரனவின் மனதில் இப்போது பன்னீர் கம கமத்தது!

  “பால் சொம்பில் பால் ஊத்தி வைக்க வேண்டியதுதான் பாக்கின்னு சொல்லு!" என்று மதுவிடம் மற்றவள் இன்னும் ஒரு விஷயம் எடுத்துக் கொடுத்தாள்.

  ப்ரனவின் உதட்டில் இப்போது பாலின் சுவை தெரிந்தது. ஜில்லென்ற தருணம்! (அட அவனுக்குப்பா!)
  பெண்டுகளின் சலசலப்பில் அவனது கவனம் கலைந்தது.

  “எல்லாம் உன் மாமாவின் ஆளோட ரூமில் இப்ப இருக்கும்டி. அவ்வளவு பூ போட்டு அலங்காரம் செய்தால் ரூமே மனக்கும்ல்ல? ஏய் சொல்லுப்பா யாரு நைட் ரூமை டெக்கரேட் செய்வாங்க?"

  ப்ரனவின் மனம் மீண்டும் மல்லிகையின் நினைவில் மணந்தது. உடலில் மெல்லிய அதிர்வு!

  “அதுவா.. அந்தப் பெண்ணின் அண்ணிமார் யாராவது செய்வாங்க. அவுங்களுக்கு நிறைய உடன்பிறவா அண்ணன்கள் உண்டாம். அதில் பாதி டிக்கெட்டுக்கு இன்னும் கல்யாணம் ஆகலை தெரியுமா?"
  அதற்கும் ஒரு சிரிப்பு மற்றவர்களிடத்தில்.

  மது ப்ரீத்தியின் காதில் ஏதோ ஒன்று கிசு கிசுத்தாள்.
  “உனக்கு இப்ப என்ன தெரியணும்? மகளே நீ எங்க சுத்தி எங்க வருவன்னு தெரியும். ஆனா அதுக்கு நான் ஆள் இல்லை. போய் குளி. அத்தை வந்தா திட்டுவிழும். நீ போறியா? நான் போகவா?" என்று கேட்டவளிடம்
  “ஏய் ஏய் ப்ளீஸ்டீ.. கொஞ்ச நேரம் கல்யாணப் பொண்ணை கலாய்க்கலாம்டி.. ஃபோன் நம்பர் இருக்கா? ஃபோன் போடு."

  “ஓ!" செய்யலாமே என்றாள் சுபா.
  “சூப்பர்டி" என்றாள் கவி. கொல்லென்று சிரித்தனர் மற்றவர்கள். ஆனால் ப்ரனவ் சிரிக்காமல் பற்களைக் கடித்தான். ஒருவரது சந்தோஷம் மற்றவரது கோபம். ஆனால் கோபம் இல்லாத கோபம்!

  ப்ரனவ் அவர்கள் மீது கோபம் இல்லாத கோபம் கொண்டான்.
  அவர்கள் அதற்குள் மணப்பெண்ணிடம் செல்பேசியில் பேச ஆரம்பிச்சாச்சு!
  “ஹலோ!" இருவர் பேசுவதை அந்த நால்வரும் கேட்பதற்கு ஸ்பீக்கரை ஆன் செய்திருந்தார்கள்.

  “ஹலோ" என்றாள் எதிர்முனையில் மணப்பென்.

  “மேடம் பூ மார்கெட்டிலிருந்து பேசுறோம். உங்க வீட்டுக்கு இரண்டாயிரம் உதிரி மல்லிகைப்பூ வரும். அதை நீங்க பூ மார்கெட்டுக்கே திருப்பி அனுப்பிடுங்க.. அதுக்கு பதில் உங்களுக்கு வேற பூ கொடுத்திடுறோம். என்ன ஃப்ங்ஷன்? என்ன மாதிரி பூ தர?"

  “அது.. அது.."

  “என்ன மேடம்? இப்படி யோசிக்கிறீங்க? ஃப்ங்ஷன் நடக்கப் போகுதா இல்லையா?"

  “அடப்பாவிகளா! அந்ந்ந்த நேரத்திற்காகத்தான்டி நான் காத்திட்டுயிருக்கேன்!" என்றான் ப்ரனவ் மனதில்.

  “சரி சரி எங்கிட்ட அரளிப்பூ இருக்கு. அதை வேணும்ன்னா ஒரு மூடையா வாங்கிக்கோங்க."

  மணப்பெண் திரு திருவென முழித்திருக்க வேண்டும். அந்தப் பக்கத்தில் இருந்து எந்த பதிலும் இல்லை.

  ப்ரனவ் வேகமாக தனது கைபேசியில் அவளுக்கு வாட்ஸ் ஆப் மெசேஜ் அனுப்பினான்.
  “என்ன மேடம் பதிலே கானோம்? நாங்க என்ன பண்ணட்டும்?"
  பெண்டுகள் விடாமல் கலாய்த்தது.

  “சுபா கவி நீங்க இன்னும் கிளம்பலையா? என்கூட ஃபோனில் அரட்டையடிக்கிறீங்க? எனக்கு டைம் ஆகிடுச்சு.. இந்த கல்யாணப்பட்டில் எக்கச்சக்க பின் குத்துறாங்கப்பா.. எல்லாத்தையும் நோட் பண்ணி வச்சிக்கணும்ல்ல? சேலையை கட்டிக்கிட்டே உங்ககூட என்னால் பேச முடியலை. ப்யூட்டிஷன் பாவம் இல்ல? கஷ்டப்பட்டு சேலையை கட்டிவிடுறாங்க. நான் மணமேடைக்கு வந்ததும் எந்த பூ என்று சொல்லவா?" என்று மணப்பெண் அவர்கள் சீண்டுதலுக்கு பதில் சொன்னபோது வம்பிழுக்கும் கூட்டம் அமைதியானது. செல்பேசியும் அமைதியானது. கைபேசியை அணைத்து கட்டிலில் கோபமாக போட்டாள் ப்ரீத்தி.

  “எம்டன் போட்டுக்கொடுத்திருக்கான்டி." என்றாள் ப்ரீத்தி.

  “நம்ம நம்பர்கூட அனுப்பியிருக்கான் பாரேன்." என்று கண்டுபிடித்தாள் மது.

  “சரியான ஆளுடி அவன்! என்றாள் ப்ரீத்தி. ஆமாம் ஆமாம் என்றது மொத்தக்கூட்டமும். என்னதான் உள்ளுக்குள் புகைந்தாலும் அனைவரது மனதும் அந்தப் பின்னிலேயே இருந்தது. ஒருவர்கூட அதைப்பற்றி மூச்சு விடவில்லை. அந்த நோட் பண்ணுவது எதற்கு? என்று யாரும் யாரிடமும் சந்தேகம் கேட்கவில்லை.

  அதே நேரத்தில் பொதிமூட்டைகளுடன் அந்த அழகுக்கலை நிபுணரும் வந்துவிட ப்ரனவ் இடத்தைக் காலி செய்தான்.
  தனது அறைக்குள் வந்ததும் தன்னவளைப் பார்க்க வேண்டும் என்று தோன்றவும் தனது செல்பேசியை எடுத்து வாட்ஸ் ஆப்பில் அவளது டிபியைத் திறந்தான். அதிலும் ஏமாற்றமே. அவள் அவனது ஃபோட்டோவை வைத்திருந்தாள். இவனது புது ஃபோனில் பழைய ஃபோடடோக்கள் இல்லை. இவனது டிபியில் இவனும் இவனது காதலியும் ஏதோ ஒரு மிக்கி மவுஸ் முகமூடியைப் பிடித்துக்கொண்டு நின்றிருந்தார்கள்.

  மணமேடையில் ஆசை தீர ரசிக்கலாம் என்ற சமாதானத்தோடு குளிக்கச் சென்றான் ப்ரனவ்.
  ஆனால் புகை மூட்டத்தில் சூழ்ந்திருந்த மணமேடையிலும் அவனுக்கு ஏமாற்றமே. தெளிவாய் அவள் முகத்தை அவனால் பருக முடியவில்லை.
  அவளைச் சுற்றியே திரிந்த குழந்தைப்பட்டாளம் இருவருக்கும் இடையே உட்கார்ந்து கொண்டு மாலைகளுக்குள் மூழ்கியிருந்த அவளது முகத்தைக் காணவிடவில்லை.

  ஒரு பக்கக் கன்னமும், ஒரு பக்க கண்ணும், புருவமும் மட்டுமே அவனுக்கு காணக் கிடைத்தன.
  பால், பழம் சாப்பிட்டபோதும் பந்தியில் காளான் பிரியாணியை பேருக்கு உண்டபோதும் அவள் குனிந்த தலை நிமிரவில்லை.
  நேரம்தான் நகர்ந்தது. இருவருக்கும் இடையில் இருந்த இடைஞ்சல்கள் குறையவில்லை. மாலை நான்கு மணி யானது. யாரும் நலுங்கு வைக்கவில்லை. அவனால் இன்னும் அந்த மதி முகத்தை ஒரு பக்கவாட்டில்தான் பார்க்க முடிந்தது. வெட்கம் என்ற பெயரில் குனிந்து இருந்தாள் மணமகள்.
   
 3. Tamilvanitha

  Tamilvanitha Well-Known Member

  Joined:
  Dec 26, 2017
  Messages:
  476
  Likes Received:
  329
  Trophy Points:
  63
  Gender:
  Female
  Good start
   
  Last edited by a moderator: Feb 19, 2019
  Bala sundar likes this.
 4. Rabina

  Rabina Well-Known Member

  Joined:
  Aug 14, 2018
  Messages:
  867
  Likes Received:
  542
  Trophy Points:
  93
  Gender:
  Female
  nice start
   
  Bala sundar likes this.
 5. SMH Shahul Hameed

  SMH Shahul Hameed New Member

  Joined:
  Feb 19, 2019
  Messages:
  1
  Likes Received:
  1
  Trophy Points:
  3
  Gender:
  Male
  Great Start and keep it up
   
  Bala sundar likes this.
 6. Kavyakeerthi

  Kavyakeerthi Active Member

  Joined:
  Oct 15, 2018
  Messages:
  177
  Likes Received:
  120
  Trophy Points:
  43
  Nice start. Pranav super.
   
  Bala sundar likes this.
 7. Bala sundar

  Bala sundar Member

  Joined:
  Feb 15, 2019
  Messages:
  57
  Likes Received:
  61
  Trophy Points:
  18
  Gender:
  Female
  டைட்டானிக் கனவுகள் எபி 2
  பாலா சுந்தர்

  மணமேடையில் தன்னவளை ஆசை தீர ரசிக்கலாம் என்ற சமாதானத்தோடு குளிக்கச் சென்றான் ப்ரனவ்.
  ஆனால் புகை மூட்டத்தில் சூழ்ந்திருந்த மணமேடையிலும் அவனுக்கு ஏமாற்றமே. தெளிவாய் அவள் முகத்தை அவனால் பருக முடியவில்லை.

  அவளைச் சுற்றியே திரிந்த குழந்தைப்பட்டாளம் இருவருக்கும் இடையே உட்கார்ந்து கொண்டு மாலைகளுக்குள் மூழ்கியிருந்த அவளது முகத்தைக் காணவிடவில்லை.

  ஒரு பக்கக் கன்னமும், ஒரு பக்க கண்ணும், புருவமும் மட்டுமே அவனுக்கு காணக் கிடைத்தன.
  பால், பழம் சாப்பிட்டபோதும் பந்தியில் காளான் பிரியாணியை பேருக்கு உண்டபோதும் அவள் குனிந்த தலை நிமிரவில்லை.
  நேரம்தான் நகர்ந்தது. இருவருக்கும் இடையில் இருந்த இடைஞ்சல்கள் குறையவில்லை. மாலை நான்கு மணி யானது.
  யாரும் நலுங்கு வைக்கவில்லை. அவனால் இன்னும் அந்த மதி முகத்தை ஒரு பக்கவாட்டில்தான் பார்க்க முடிந்தது. வெட்கம் என்ற பெயரில் குனிந்து இருந்தாள் மணமகள்.

  “மறுநாள் விருந்தின் போது நலுங்கு வைக்கலாம். இப்போது கிளம்பினால் வீட்டிற்குச் செல்ல ஆறுமணியாகிடும். இரவு சடங்கு எட்டு மணிக்கு என்று புரோகிதர் சொல்லியிருக்கார்." என்று பெண்ணின் அன்னைக்கு மெல்லிய குரலில் தகவல் தந்தார் ப்ரனவின் தாயார்.

  மணமகளின் அன்னை, “ஆமா! ஆமா இந்த மண்டபத்தில் இருந்து இந்த சென்னை டிராபிக்கில் எங்க வீட்டுக்குப் போக இன்னும் இரண்டு மணிநேரம் கட்டாயம் ஆகிடும். நாளைக்கே நலுங்கு வச்சிடலாம். நீங்க சொல்றதுதான் சரி சம்பந்தி. நாங்க பொண்ணையும் மாப்பிள்ளையையும் அழைச்சிட்டுப் போறோம்."

  மண்டபத்தைவிட்டுக் கிளம்பும்போது, “மண்டப வாசலில் அவள் முகத்தைக் கோல டிசைனில் வரைஞ்சிருக்காங்களே.. அதையாவது ஆசை தீரப் பார்க்கலாம்." என்று நினைத்தவனுக்கு பெருத்த ஏமாற்றமே. அவனது சொந்தபந்தம், நட்பு வட்டாரம் அனைத்தும் கோலத்தை முழுதும் மறைத்துக்கொண்டு நின்றது.

  அவன் கையில் கைபேசி இல்லை. இருந்திருந்தால் அவனும் ஃபோட்டோ எடுக்கிறேன் என்றாவது அந்த கூட்டத்திற்குள் நுழைந்திருப்பான்.

  மனமே இல்லாமல் வேனிற்குள் நுழைந்தான். ஆனால் அதன்பிறகு, “கல்யாணப் பொண்ணு ரொம்ப டயர்டா தெரியுது. கொஞ்ச நேரம் வண்டியில் போகும்போதாவது ரெஸ்ட் எடுக்கட்டும்." என்று யாரோ ஒரு மறைகழன்றவன் சொன்னதும் மணமகள் தனது தாயின் மடியில் படுத்துத் தூங்கிக்கொண்டே அந்த வேனில் ப்ரனவுடன் பயணித்தாள்.

  “நல்லா தூங்கு கும்பகரனியே! புருஷன் உன்னை வேடிக்கை பார்த்திட்டே வர்றேன்!" என்று வாழ்த்தியவண்ணம் இரண்டு மணி நேரமும் வந்தான் அந்த வேனில். வீட்டிற்குள் வந்ததும், “மாப்பிள்ளை ரெஸ்ட் எடுக்கட்டும். அவரை ரூமிற்கு கூட்டிட்டு போங்க!" என்று சொன்னது அதே மறை கழன்ற கேஸ்.

  ப்ரனவ், “நான் கேட்டேனா? நான் கேட்டேனா? ஆல் ஆஃப் யு கெட் அவுட். நான் என் பொண்டாட்டிக்கூட ரொமான்ஸ் பண்ணணும்!" என்று கத்தாமல்,
  “இட்ஸ் ஓகே. ஐ ஆம் நாட் டயர்ட்." என்றான். ஆனால் அவன் எவ்வளவு மறுத்த போதும் ஒரு மணி நேரம் ஒரு ரூமில் தனியே விடப்பட்டான். அதன்பிறகு ஏழு மணிக்கு மேல் போஜனம் நடந்தது. “எனக்கு சாப்பாடே வேண்டாம் இன்னைக்கு அவளது முகத்தைக்கூட நான் இன்னும் முழுசா பார்க்கலை!" என்று கத்தியது அவன் மனது.

  “எங்கே அவள்?" என்று தேடிய விழிகளைக் கண்டதும் ஒரு வயதான பெண்மணி, “பொண்ணு முகம் கழுவி டிரஸ் மாத்திட்டு இருக்கு தம்பி. நீங்க இப்ப சாப்பிடுங்க. அவ பழம் மட்டும் சாப்பிடுறாளாம். நீங்க இந்த தேங்காய்ப் பால் சாதத்தை கொஞ்சம் சாப்பிடுங்க!" என்றார்.


  “எவனுக்கு வேண்டும் தேங்காய்ப்பாலும் பசும்பாலும்?, என்று கத்தவேண்டும் போல் இருந்தது அவனுக்கு.
  மணி எட்டானது. அவனது அறை வாசலில் இளம் பெண்களின் சிரிப்புச் சத்தம் கேட்டது. அவன் அறையின் வாசலை குறிபார்த்து கட்டிலில் உட்கார்ந்திருந்தான். வாசல் கதவு திறக்கவில்லை. ஊதுபத்தியின் நறுமணம் அவனை ஈர்த்தது. அதனை ஒரு நொடி வேடிக்கை பார்த்தான். கதவு மூடும் ஓசை கேட்டது. உடனே நிமிர்ந்தான். இருபத்திநாலு மணி நேரத்திற்குப் பிறகு அவளது முகத்தைப் முழுமையாகப் பார்க்கும் ஆவலில் நிமிர்ந்தவன் கண்ணில் பட்டது மயில் தனது அழகிய தோகையுடன் ஜொலித்த கல்வேலைப்பாடுகள் நிறைந்த ஒரு ரவிக்கையின் பின் பகுதிதான். மல்லிகை அவளது சடையில் எக்கச்சக்கமாக நிறைத்திருந்தது. அவள் கதவைச் சாத்திக் கொண்டிருந்தாள். எழுந்து அவள் அருகில் சென்றான். அவனது அரவம் கேட்டு அவள் திரும்பவில்லை. கதவில் ஒட்டிக்கொண்டு நின்றாள்.


  பொறுமை இழந்தவனாக அவளைத் தன் புறம் திருப்பினான்.
  வேறு எதுவும் அங்கு நடக்கவில்லை. கண்கள் இருட்டானது. அவனது அறை முழுதும் கும்மிருட்டானது. கண்கள் குவியமில்லா காட்சிகள் கண்டது. குருடன் போல இருட்டில் திண்டாடினான்.

  அதன்பிறகு மீண்டும் பார்வை வந்தபோது ப்ரனவ் தனது வீட்டில், தனது கட்டிலில், தனது அறையின் சுவரில் மாட்டிவைக்கப் பட்டிருந்த கடிகாரத்தில் “மணி ஆறு" என்று வாசித்தான்.

  மல்லிகையைத் தேடினான்.. காணவில்லை.

  பன்னீர் கூஜாவைத் தேடினான்.. காணவில்லை. பால்சொம்பை, ஊதுபத்தியைத் தேடினான். காணவில்லை.

  தாலிகட்டிக் கொண்டுவந்த அவனது மணவாட்டியைத் தேடினான்.. காணவில்லை.

  குனிந்து தனது ஆடைகளைப் பார்த்தான். ஷார்ட்ஸ் அணிந்திருந்தான். பட்டு வேட்டியும் சட்டையும் மிஸ்ஸிங்!

  கனவு என்றது அவனது மூளை!
  அட கனவா? என்றது அவனது மனது!

  வெறும் கனவு! ஐ ஆம் ஸ்டில் எ வெர்ஜின்! என்று வெடித்தது அவனது ஆண்மை!


  ப்ரனவிற்கு தனது கனவை நினைத்து சிரிப்புதான் முதலில் வந்தது. பிறகு அது ஏக்கமாக மாறியது. கல்யாணம் செய்து ஃப்ர்ஸ்ட்நைட் வரை வந்தபிறகும் அவள் முகத்தைப் பார்க்க முடியவில்லையே என்ற ஏக்கம் வந்தது.

  அதே ஏக்கத்துடன் எழுந்து பல் துலக்கிவிட்டு சைக்கிளங் போய் வந்தான். குளித்துவிட்டு தனது அன்றாட காரியங்களால் அந்த நாளைத் தொடங்கினான்.

  “அம்மா, எனக்கு சர்க்கரை போடாமல் ஒரு காஃபி." என்று அன்னையிடம் ஆண்மை மிளிரும் குரலில் பேசினான் ப்ரனவ்.

  “ப்ளாக் காஃபியாகவே போட்டிருங்கம்மா."

  “வந்திட்டியா ப்ரனவ்.. அம்மா உனக்காகத்தான் இவ்வளவு நேரம் காத்திட்டு இருக்கேன். நீ உன் ப்ரண்ட்ஸ்கூட சைக்கிளிங் போனப்போ எங்கே சூப் குடிச்சி சாப்பாட்டு வேலையை முடிச்சிடுவியோன்னு பயந்திட்டே இருந்தேன்."

  “இன்னைக்கு சூப் குடிக்கலைம்மா. வேற பக்கமா சைக்கிங் போனோம்." என்று அன்னைக்கு பதில் தந்துவிட்டு தனது டையை இறுக்கிக்கொண்டே தனது தலை முடியை சரிபார்த்தபடி ப்ரனவ் கண்ணாடி முன் நின்றான். அவனது அம்மாவும் அப்பாவும் கனரா பாங்க் ஊழியர்கள். இருவரும் வேலையில் சேர்ந்த சில நாட்களில் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இருவரும் பணி நிமித்தமாக மாற்றல் வாங்கிக்கொண்டே இருந்தாலும் ப்ரனவ் அன்னையுடன் தான் எப்போதும் வசித்து வந்தான்.

  பணி மாற்றம் காரணமாக மூன்று வருடத்திற்கு ஒரு ஊரில் வசித்தனர் இருவரும். கணவர் ஒரு ஊர், தான் ஒரு ஊர் என்று குழந்தை வளர்ப்பதில் மிகுந்த சிரமம் அடைந்ததால் ஒரு குழந்தை போதும் என்று முடிவு செய்தார் ப்ரனவின் அன்னை.

  ப்ரனவின் தாத்தா பாட்டிகள் வயோதிக பருவத்தை அடைந்து விட்டதால் அவர்களாலும் ப்ரனவை வளர்க்க முடியவில்லை.

  விளைவு?

  ப்ரனவ் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, மராட்டிகூட நன்றாகவே பேசுவான்.

  தற்போது பத்து ஆண்டுகளுக்குப் பிறகு மூவரும் சென்னையில் ஒன்றாக இருக்கும் வாய்ப்பு கிடைத்தது. இரண்டு வருடங்களாக சென்னைவாசம் அவர்களை ஒரே கூட்டிற்குள் ஒன்றாகப் பிணைத்தது.
  அதிக நேரம் மகனுடன் செலவிட முடியாவிட்டாலும் கிடைத்த நேரத்தில் அன்பில் திக்கு முக்காட வைத்துவிடுவார்கள் அவனைப் பெற்றவர்கள்.

  அந்த குருவிக் கூட்டிற்குள் அழகான மைனா ஒன்றும் விரைவில் சேரப்போவதை அறியாத அந்த இருவரும் மற்ற விஷயங்களைப் பற்றியே பேசினர்.

  அவனது ஒவ்வொரு அசைவையும் ரசித்த அன்னை அவனிடம் மேலும் குரலில் இனிமை காட்டிச் சொன்னார்,
  “மணி எட்டுதானப்பா ஆகுது. இப்பதான நீ உன் ஃப்ரண்ட்ஸ்கூட சைக்கிளிங் போயிட்டு வந்த.. அதுக்குள்ள கிளம்பணுமா?"

  “ஆமாம்மா சீக்கிரம் போகணும். கமல் இன்னைக்கு வரமாட்டான். அவன் என்னிடம் சின்ன உதவி கேட்டிருக்கான். அதான் சீக்கிரம் போறேன். தோசை ஊத்திட்டீங்களா? லேட் ஆகிடுச்சு."

  “வா வா.. நான் எப்போவோ ஊத்தி வச்சிட்டேன்."

  சாப்பிட்டதும் ப்ரனவிடம் அவனது அம்மா சொன்னார், “ப்ரனவ் அம்மாவும் பேங்குக்கு போயிடப்போறேன். அப்பாவும் காலை சீக்கிரமே கிளம்பிட்டார். நான் சாவியை எதிர்வீட்டில் கொடுத்திட்டு போறேன். நீ அங்க வாங்கிக்கோ.. சரியா? அம்மா இன்னைக்கு வர கொஞ்சம் லேட் ஆகும். எட்டு மணி ஆகிடும்."

  “சரிம்மா.. என்கிட்டயும் ஒரு சாவி இருக்கு. நான் அதையே யூஸ் பண்ணிக்கிறேன். நேரம் கெட்ட நேரத்தில் எதக்கு அவுங்களை டிஸ்டர்ப் பண்ணணும்?"

  “உன்கிட்டயும் ஒரு சாவி இருக்குதானே? நான் மறந்தே போனேன் பார்.. அப்படியே செய்.. "

  “அம்மா எப்ப V.R.S வாங்கப்போறீங்க? நீங்க இனிமே ரெஸ்ட் எடுக்கணும்.."

  “ரெஸ்ட்டா? நம்ம வாட்ச்மேன் தாத்தா வயசு என்ன தெரியுமா? எழுபத்திரெண்டு!"

  “அம்மா.. ஐ ஆம் சீரியஸ்!"

  “புரியுது.. புரியுது.. நிச்சியம் இந்த டிசெம்பரில் கொடுத்திடுவேன்! ஓகே? இத்தனை நாள் நிற்காமல் ஜாலியாக ஓடிட்டுயிருந்தேன். நீ என்னை டி.வி முன்னாடி அமைதியா உட்காரச்சொல்ற? நான் சூப்பர்நுயேஷன் வாங்கலாம் என்று பார்த்தால் விடமாட்ட போலயே?"

  “என்னது சூப்பர்நுயேஷனா? ரிட்டயர்மென்ட் வரை வேலை பார்க்கணுமா? உங்களுக்கு என்ன வயசு இப்போ? ஐம்பது? ஐம்பத்திரெண்டு?"

  “கொஞ்சம் கிட்ட வந்திட்ட.."

  “சரி ஐம்பத்திரெண்டுன்னு வச்சிக்கோங்க. நீங்க தான் பர்த்டேயே கொண்டாட மாட்டீங்களே.. கேட்டா பறவை கொண்டாடுதா? மான் கொண்டாடுதா? யானை கொண்டாடுதான்னு என்கிட்ட கேள்வி கேட்பீங்க. நீங்க பிறந்த வருஷத்தை நீங்களும் என்கிட்ட சொன்னதில்லை. அப்பா வயசை வைத்துதான் உங்க வயசை கணிக்கிறேன்.. இன்னும் எட்டு வருஷம் சூப்பர்நுயேஷன் வாங்கும் வரையெல்லாம் நீங்க ஓடிட்டு இருக்க முடியாதும்மா."

  “ஹா.. ஹா என் ஆதார் கார்டை அதுக்குத்தான் ஐயா கெஞ்சிக் கெஞ்சிக் கேட்டீங்களோ?"

  “அம்மா ப்ளீஸ்.. வில் யு அலோ மீ டு ஸ்பீக்?" ஏற்கனவே கனவினால் வந்த ஏமாற்றம் அவனை பொறுமை இழக்கச்செய்தது.

  “கோ ஆன்.."

  “அம்மா போதும் நீங்க ஓடினது.. நம்ம வீட்டில் சும்மா உட்கார வேண்டாம். எனக்கு, அப்பாக்கு சிஸ்டமில் கொஞ்சம் வேலை பாருங்க. உலகத்தை சுற்றிப் பாருங்க.."

  “உனக்கு நல்ல பொண்ணு கிடைக்கணும்ன்னு என்னை பிள்ளையார் கோயிலாகப் பார்த்துச் சுற்றிப் பார்க்கச் சொல்ற?"

  “அப்படியே வச்சிக்கோங்களேன்.. ஆனால் கண்டிப்பா இந்த வருஷம் நீங்க V.R.S வாங்கணும்."

  “அதான் சரின்னு சொல்லிட்டேன்ல்ல.. நீ கிளம்பும்மா தம்பி.."

  “ஓ கே! நான் கிளம்புறேன். இப்பவே லேட் ஆகிடுச்சு மா.. வெங்கட் ஃப்ளைஓவர் பக்கமாக காத்திட்டு இருப்பான். பை!"

  பைக்கில் ஏறியதும்
  “அம்மா.." என்றான் ப்ரனவ்.

  “என்ன? வழக்கம் போல சாவியை மறந்திட்டியா?"

  “இல்லைம்மா.. எனக்கு நீங்க பொண்ணு தேடி கோயில் கோயிலாக சுத்தாதீங்க.. அங்கயெல்லாம் பொண்ணு கிடைக்கும் சான்ஸ் ரொம்ப கம்மி. மால், சென்னை சில்க்ஸ், போத்தீஸ், டோனி அன்ட் கை (tony and guy) கிரீன் ட்ரன்ட்ஸ்.. மாதிரி இடத்தில் தேடுங்க. அங்கதான் ஹன்டெரட் பர்சன்ட் வாய்ப்பிருக்கு."

  “ப்ரனவ்" என்று அவனது அன்னை சற்றே ஓங்கிக் குரல் கொடுக்க..

  “அம்மா போயிட்டுவர்றேன்! பை!" என்று வண்டியின் இன்ஜின் வேகத்தைக் கூட்டினான் அவன்.

  பாலா சுந்தர்
   
 8. kani _mozhi

  kani _mozhi Well-Known Member

  Joined:
  Feb 12, 2018
  Messages:
  414
  Likes Received:
  272
  Trophy Points:
  63
  Gender:
  Female
  Nice start....All the best
   
  Bala sundar likes this.
 9. Tamilvanitha

  Tamilvanitha Well-Known Member

  Joined:
  Dec 26, 2017
  Messages:
  476
  Likes Received:
  329
  Trophy Points:
  63
  Gender:
  Female
  nice. pranav kandathu kanava ?
   
  Bala sundar likes this.
 10. Rabina

  Rabina Well-Known Member

  Joined:
  Aug 14, 2018
  Messages:
  867
  Likes Received:
  542
  Trophy Points:
  93
  Gender:
  Female
  nice update .
   
  Bala sundar likes this.

Share This Page