டைட்டானிக் கனவுகள் / Titanic Kanavugal By Balasundar

Discussion in 'Serial Stories' started by Tamilsurabi, Feb 18, 2019.

 1. Bala sundar

  Bala sundar Member

  Joined:
  Feb 15, 2019
  Messages:
  57
  Likes Received:
  61
  Trophy Points:
  18
  Gender:
  Female
  டைட்டானிக் கனவுகள்.. எபி 15  அந்த நாற்பத்தியெட்டு நாட்கள்!
  ப்ரனவ் என்றுமே பொய் பேசியதில்லை. அப்படிப் பேசும் நிலையில் அவன் தள்ளப்பட்டதே இல்லை. பெற்றோர்கள் அவன் முடிவுகளுக்கு சரி என்றனர். அவன் முடிவுகளும் சரியாக இருந்தது. ஆனால் இன்று அவன் சுசியைப் பார்க்க அவளது கல்லூரிக்குச் செல்ல நினைத்த மறுகணமே அவன் உண்மையை மறைக்க ஆரம்பித்தான்.
  அவன் பொய் பேசவில்லை. உண்மையைத்தான் மறைத்தான். “ஃப்ரண்டைப் பார்க்கப் போகணும் வண்டியை எடு." என்றான் மதனிடம்.
  கேர்ள்ஃப்ரண்ட் என்னும் சொல்லில் கேர்ளை மறைத்து ஃப்ரண்ட் என்று மட்டும் சொன்னான். இதில் பொய் எங்கே இருக்கிறது? இல்லைதானே? யார் நம்பினாலும் நம்பாவிட்டாலும் ப்ரனவ் நம்பினான், தான் பொய் சொல்ல வில்லை என்று ப்ரனவ் நம்பினான்.

  மதனுடன் அந்த கல்லூரி வாசலில் வந்திறங்கியபோது மதன் அவனிடம் கேட்டான்,
  “இங்கயா உன் ஃப்ரண்டைப் பார்க்கப் போற?"

  “ஆமாடா. நீ கிளம்பு. உனக்கு வேற வேலை இருக்குன்னு சொன்னீயே. ம்.. ம்..கிளம்பு! நான் அந்த ஃப்ரண்டைப் பார்த்திட்டு இன்னும் ரெண்டு வேலைகள் முடிச்சிட்டுதான் வரப்போறேன். கிளம்புடா! சொல்லிட்டே இருக்கேன் பராக்கு பார்க்கிற! நம்ம ஆப்பை ஆப்ரேட்டிங் சிஸ்டம் சப்போர்ட் பண்ண மாட்டிக்குது. அதை என்னன்னு பார்த்து வை. நான் இன்னைக்கு நைட் ஷிஃப்ட் எடுத்திருக்கேன். உன் ப்ரோகிராம் கோட்ஸை ரீசெக் பண்ணி வை. நைட் ஒரு மணிக்கு எனக்கு டென்ஷன் ஏத்தாதே!"
  மதன் முணகிக்கொண்டே வண்டியைத் திருப்பி அதனை அந்தக் கல்லூரியைவிட்டு நகர்த்தினான்.
  ப்ரனவ் ஃபாஷன் டெக்னாலஜி டிப்பார்ட்மென்டுக்குச் சென்றான்.
  கேட்டரிங் லாப் அருகே அவன் நின்றபோது அவன் எதிர்ப்பார்த்த குரல் அவனுக்குக் கேட்டது.
  “சார் இங்க என்ன பண்றீங்க?" என்றது பின்க் கலர் சேலையில் வந்த சுசியின் உதடுகள்.

  “ஹய்யா! நான் சொன்ன மாதிரி சேலைதான் கட்டியிருக்கா!"


  என்று பீற்றிக் கொண்டது அவனது மனசாட்சி. ஆனால் மனசாட்சியைச் அசட்டை செய்துவிட்டு அவளுடன் இணைந்து நடந்தான் ப்ரனவ்.

  “நீங்க எப்படி இங்க?" திட்டமிட்டுக் காத்திருந்தாலும் காலம் காலமாய் பலர் கேட்கும் கேள்வியை, சுசியிடம் ப்ரனவும் கேட்டான்.

  “இது தான் சார் என் காலேஜ்!"

  “ஓ! நான் என் ஃப்ரண்டைப் பார்க்க வந்தேன்."

  “பாத்திட்டீங்களா?"

  “இப்பத்தான் பார்த்தேன்." இது பொய் இல்லையே? அவன் சுசியைப் இப்போதானே பார்த்தான்?

  “நான் கிளம்பட்டுமா? இன்னைக்கு காரில் வந்தேன். லேட்டா போனால் ரொம்ப டிராஃபிக் ஆகிடும். இந்த ரோட் ரொம்ப பிஸி ரோட். நான் வரட்டா?"

  அவள் கிளம்ப இரண்டு அடி எடுத்து வைத்தபோது ப்ரனவின் மனது நான் டால்ஃபின் கம்மலைப் பார்க்கலையே என்று உள்ளுக்குள் குதித்து ஆர்ப்பாட்டம் செய்தது.
  “சுசி.. ஒரு நிமிஷம்."

  “சொல்லுங்க!"

  “இங்கிருந்து எப்படி மெயின் ரோட்டுக்குப் போகணும்? என் ஃப்ரண்டோட தான் இங்க வந்தேன். அவனுக்கு வேற வேலை இருப்பதால் என்னை ட்ராப் பண்ணதும் கிளம்பிட்டான்."

  “மெயின் ரோட்டுக்கு எல்லாம் வெகிகிள் இல்லாமல் போக முடியாது ப்ரனவ் சார். நீங்க உள்ள வரும்போது டூ கிலோமீட்டர்ஸ் வந்திருப்பீங்கதான? அதே பாதைதான் வெளியே போறதுக்கும்! வாங்களேன் என் காரில் ஒரு லிஃப்ட் தர்றேன்."
  “நான் போறது.."

  “சார் மறுக்கவே கூடாது."

  அவன் ஏன் மறுக்கப்போறான்? நான் போறது உங்க வீட்டுக்கு பக்கத்தில் தான்! என்று சொல்ல வந்தான்.

  “சார் இந்த ஹெல்ப்கூட நான் பண்ணக்கூடாதா?"

  அட சுசிப்பெண்ணே.. அதற்குத்தானே அவன் தனது பென் டிரைவ்களை அம்போ என்று விட்டுவிட்டு வந்தது?
  ப்ரனவ் வெற்றிச் சிரிப்பு சிரிக்க, சுசி அவனிடம், “என் ஃப்ரண்ட்ஸ் நாலுபேரும் என்னோடதான் தினம் வருவாங்க.. ஒரு நிமி’ம் அவுங்களை காலேஜ் பஸ்ஸில் அனுப்பிட்டு வந்திடுறேன். ப்ளீஸ் வெயிட். என் தம்பியை மட்டும் இன்னைக்கு போற வழியில் கூட்டிட்டுப் போயிடலாம். போலாமா? உங்க வேலை?"

  “நல்லபடியா முடிஞ்சது! இனி கிளம்ப வேண்டியது தான்."

  “ஆமா ஆமா வந்த வேலை நல்ல படியா ஷேமமா முடிஞ்சிடுச்சி. பின்க் கலர் சேலையைப் பார்த்தாச்சு. டால்ஃபின் கம்மல் நாலு முறை இங்கிட்டும் அங்கிட்டும் ஆடுவதையும் பார்த்தாச்சு. மாராப்பின் இடைவெளியில் தெரிந்த அத்தனையும் பார்த்தாச்சு. ப்ளொசின் ஜன்னலைத்தான் பார்க்கலை. ஏரோப்ளைன் ஏர்ஹோஸ்டஸின் கழுத்தில் செயின் மட்டும் தெரிவதுபோல உன்னோட ப்ளவுஸ் கழுத்து முழுதும் மூடியிருக்கு." என்று ப்ரனவின் மனம் அவளிடம் அவளுக்கு கேட்காத குரலில் நாலு வரியில் பதில் கொடுக்க,

  “ப்ளீஸ் வெயிட் ஹியர்! டூ மினிட்ஸ். இதோ வந்தடுறேன்."
  ப்ரனவ் அவளிடம் ஒரு வரியில்,


  “அவசரமே இல்லங்க! டேக் யுவர் ஓன் டைம்!" என்றான்.

  கார் இரண்டு கிலோமீட்டர் சென்றபிறகு, “சார் நீங்க எங்க இறங்கணும்?"

  “உங்க ப்ளாட்ஸ்க்கு தான் போணும்."

  “என் ப்ளாட்டுக்கா?"

  “ஆமா! பால் டிப்போவுக்குப் போகணும். வசந்தா அக்காவிடம் பால் வாங்கிட்டு என் பைக் இன்னும் அங்கதான் இருக்கு, அதை எடுத்திட்டு என் வீட்டுக்கு போகணும்."

  “ஓ! அக்கா இன்னும் அதை அனுப்பலையா? சார் என்ன பாட்டு போட? தனுஷ் சாங்ஸ்தான் என்கிட்ட நிறைய இருக்கும். அதைப் போடவா?"

  “நான் தனுஷ் பாட்டு ரொம்ப கேட்பதில்லை. யூ நோ ஐ ஜஸ்ட் கான்ட் அன்டர்ஸ்டான்ட் வாட் கேர்ள்ஸ் லைக் இன் ஹிம்! (YOU KNOW I JUST CANT UNDERSTAND WHAT GIRLS LIKE IN HIM!)" என்றான்.

  “EVERYTHING!" என்று பதில் தந்தாள் சுசி.

  பதில் சொன்னவளுக்கு, தனுஷ் ப்ரனவிடம் எத்தனை வசவுகள் வாங்கிக் கட்டிக் கொண்டான் என்பது நிச்சயம் தெரிய வாய்ப்பில்லை.
  பால் டிப்போ வந்ததும் இறங்கினான்.


  விடைபெறும் முன் செல்பேசியின் எண்களைப் பரிமாறிக் கொண்டனர்.
  இருவரும் ஒன்றாக, “பை! சீ யூ!" என்றனர்.

  இரண்டு நாட்களுக்குப் பிறகு மீண்டும் ஒரு சந்திப்பு. அன்று டால்ஃபின் கம்மல்களைப் பார்க்கப்போனவன் அடுத்த நாளில் அவளது பெர்ஃபியூம் வாசனை மல்லிகையா? சந்தனமா? என்று அறிந்துகொள்ளப் போனான்.

  நான்கு நாட்களுக்குப் பிறகு மீண்டும் ஒரு ஹலோ.


  ஏழுநாட்களுக்குப் பிறகு அவனை அழைப்பதில் சின்ன மாற்றம் நடந்தது “ப்ரனவ் சார்" என்பது வெறுமனே “ப்ரனவ்" என்றானது. இப்படியே நாற்பத்தியெட்டு நாட்கள் கடந்திருந்தன.

  “சுசி வா போ" என்று அவன் உரிமை எடுத்தான். “ப்ரனவ் வா போ" என்று அவளையும் உரிமை கொடாட வைத்தான்.
  அவன் அவள் வீட்டிற்குள் நுழைவதில் எந்த தடையும் இருக்கவில்லை. சுசியின் பெற்றோர் இல்லாத வேளையில், அவளது தம்பி ருத்ரவுடன் அவளது வீட்டின் சோபாவில் உட்காருவதற்கு அடுத்த பத்து நாளில் அவனுக்கு சலுகை கிடைத்தது.
  சுசி ருத்ரவ் ப்ரனவ் மூவரும் நல்ல நண்பர்கள் ஆகினர். ருத்ரவ் ப்ரனவை சுசியின் நண்பனாகப் பார்க்கவில்லை. தனது நண்பனாகவே பார்த்தான். ப்ரனவ், ருத்ரவ் இல்லாதபோது அவர்கள் வீட்டிற்கு வருவதே இல்லை. அந்த காரணத்திற்காகவே அவனை ருத்ரவிற்கு மிகவும் பிடித்துவிட்டது.  ஃபுட்பால் பற்றிப் பேசினார்கள். ஸ்குவாஷ் பற்றிப் பேசினார்கள். சந்தைக்கு வந்த புதியரக கம்பியூட்டர் மென்பொருள் பற்றி சுசியிடம் இருவரும் விளக்கினார்கள். ஏதேனும் ஒரு இளம் டைரக்டர் இவர்கள் மூவரின் நட்பைப் பார்த்திருந்தால் தனது புதிய கதைக்கு பெயர்கூட வைத்து விடுவார். “அந்த நாற்பத்தியெட்டு நாள்கள்!" என்று.  ப்ரனவின் நாற்பத்தியெட்டு நாட்கள் அவன் மூளையின் ஒவ்வொரு செல்லையும் நிரப்பியது. பல நேரங்களில் இதனை அவன் கனவுதானே என்று ஒதுக்க முடியாமல் திணறினான்.
   
  kavitha11 and Rabina like this.
 2. Rabina

  Rabina Well-Known Member

  Joined:
  Aug 14, 2018
  Messages:
  868
  Likes Received:
  542
  Trophy Points:
  93
  Gender:
  Female
  nice ud
   
  Bala sundar likes this.
 3. Bala sundar

  Bala sundar Member

  Joined:
  Feb 15, 2019
  Messages:
  57
  Likes Received:
  61
  Trophy Points:
  18
  Gender:
  Female
  டைட்டானிக் கனவுகள் 16

  நிஜ உலகில்..


  நாட்கள் சென்றுகொண்டே போனது. ப்ரனவின் வாழ்க்கையும் வேகமாகச் சுழற்றிவிட்ட கடிகார முள்போல ஓடிக் கொண்டேயிருந்தது.
  அவனது கனவும் தொடர்ந்துகொண்டேபோனது.
  கனவோடு வாழ்ந்தான்.  கனவோடு சிரித்தான். அந்த கனவிற்காக ஒற்றைக்காலில் தவம் கிடந்தான். அவன் கனவு காண வேண்டும் என்றால், பஞ்சு மெத்தையில்தான் படுக்க வேண்டும் என்பது இல்லை. அவனது கேபினின் மேஜைகூட போதுமானதாக இருந்தது.
  அலுவலகத்தில் கிடைக்கும் பத்து நிமிடத்தில்கூட கண் அயர்பவன் அவளது முகம் பார்த்துவிட்டு கனவிலிருந்து வேண்டா வெறுப்பாய் வெளியேறினான்.
  நண்பர்கள் அவனிடம் கண்ட மாற்றத்தைப்பற்றி கேட்கத் தவறவில்லை. குறிப்பாக வெங்கட்.

  “என்ன ப்ரனவ் காலையே டேபிளில் படுத்துத் தூங்கிற? பத்து நிமிஷம் தூங்கி என்ன பண்ணப்போற?"  “ என்னமோ பண்ணிட்டுப் போறேன். உனக்கு என்ன?"
  நண்பன் திட்டியது கோபம் மூட்டினாலும், “ஆமா ஆமா எனக்கென்ன? சரி.. என்னமோ பண்ணு. டேபிளில் படுத்துத் தூங்கும் அளவுக்கு டயர்டா இருந்தியே.. அதான் என்ன ஏதுன்னு விசாரிக்கலாம் என்று நினைச்சேன் பாரு! என் புத்தியை இந்த கம்பியுட்டரின் கீபோர்ட் கொண்டே அடிக்கணும்!"

  “சரி சரி சாரிடா. என்ன வி’யமா பேச வந்தியோ அதை முதலில் சொல்லு!"

  “இன்னைக்கு நைட் நம்ம வெப் சைட் முடிச்சிடணும். பத்து மணிக்கு ஆரம்பிச்சா ஒரு மணிக்கு முடிச்சிடலாம் என்ன சொல்ற?"

  “பத்து மணியிலிருந்து ஒரு மணி வரையா?"

  “ஆமா!"

  “போடா.. நான் எட்டு மணிக்கு தூங்கப்போயிடுவேன்."

  “எட்டு மணிக்கா? எட்டு மணிக்கு ப்ரிகேஜி படிக்கும் என் அக்கா பையன்கூட தூங்க மாட்டான்."

  “சாரி மச்சி. எட்டு மணிக்குத் தூங்கலைன்னா மூளைக்கு ரொம்ப பிரச்சனை வரும். சைன்டிஸ்ட் சொல்லி இருக்காங்க. அதனால இனி எட்டுமணிக்கு மேல் சைட் வேலை பார்க்கவேண்டாம்டா. ஆறு மணிக்கு வந்திடு, எட்டு மணிக்கு வேலை முடிஞ்சிடும்."

  “சைன்டிஸ்ட எட்டு மணிக்குத் தூங்கச்சொல்லலை. எட்டு மணி நேரம் தூங்கச் சொல்லியிருக்காங்க!"

  “வெங்கட் 6 o’clock sharp!"

  “சரி சரி! வந்து தொலைக்கிறேன்!" என்று கோபமாக பேசிவிட்டுச் சென்றவன் ஆறுமணிக்கு ப்ரனவின் வீட்டு சோபாவில் உட்கார்ந்து கொண்டு அவனுடன் தங்களது வலைதளத்தின் வேலையைப் பார்த்தான்.
  எட்டு மணிக்கு ப்ரனவ் அலாரம் வைத்தார்போல் எழுந்து கொண்டு, “சரி மச்சான், நாளைக்குப் பார்ப்போமா?" என்று கேட்டபோது வெங்கட் தனது மனதின் சந்தேகத்தை உறுதிசெய்தான்.  ப்ரனவ், “பை!" என்று சொல்லிவிட்டு கதவை மூடப் போனபோது, “ப்ரனவ் யார் அந்தப் பொண்ணு?" என்றான்.
  “எந்தப் பொண்ணு? நீ யாரைப் பற்றிக் கேட்குற?"  “ப்ரனவ் என்கிட்ட இந்தக் கதை விடாதே! ஆறுமணிக்கு நான் வந்தபோது எனக்கு நீ காஃபி கொடுக்கலை. சரி, அதைக்கூட நீ மறந்திட்ட என்று விட்டுடலாம். ஆனா எட்டு மணிக்கு நான் கிளம்பும்போதும் சாப்பிட வைக்காம என்னை நீ அனுப்புறதைப் பார்த்தபோது எனக்கு டவுட்டே இல்ல. உன் நினைப்பெல்லாம் வேற எங்கோ இருக்கு! எந்தப் பொண்ணுகிட்ட விழுந்த? திரும்பவும் எந்தப் பொண்ணுன்னு என்கிட்டயே கேள்வி கேட்டன்னு வை.. நான் மனுஷனாகவே இருக்க மாட்டேன். மரியாதையா சொல்லு!"

  “வெங்கட்!" என்றான் யாருக்கும் கேட்காத கரகரப்பான குரலில்.
  “ம் கமான் மேன். சத்தமா பேசு!"

  உண்மையாகவே அவனிடம் என்ன பேச? தன் கனவைப் பற்றி எப்படிப் பேச என்று தெரியாமல் வேறு வழியின்றி
  “குட்நைட் வெங்கட்!" என்றான்.  பதிலுக்கு குட்நைட் சொல்லாமல் கோபமாக வாசல் கதவைச் சாத்திவிட்டு வெங்கட் சென்றுவிட்டான்.  மறுநாள் நூறு சாரி கேட்ட பிறகு, மலையேறிய ப்ரனவின் நண்பன் கொஞ்சம் கோபம் தணிந்து இரண்டு வார்த்தை பேசினான். இரண்டே வார்த்தை தான் பேசினான். “ம்" “ஹும் " என்று இரண்டே வார்த்தைதான் பேசினான்.

  “வெங்கட் நான் யாரையும் லவ் பண்ணலை. எந்தப் பொண்ணுகிட்டயும் ஐ லவ் யு சொல்லலை. என்னை நீ நம்பணும்."

  “ஏன் திரும்பத் திரும்ப பொய் சொல்றடா?"

  “ஐ டோன்ட் லவ் எனிபடி டாமிட்! ஐ ஆம் நாட் இன் லவ்! யு ஹேவ் டு பிலீவ் மீ!"
  “ நோ ஐ வில் நாட்! இது பொண்ணு மேட்டர்தான். ஆனா ஏதோ ஒரு காரணத்திற்காக என்கிட்ட சொல்ல மாட்டிக்கிற.. சரி விட்டுத்தள்ளு. ஆனா ஒண்ணு! எந்த விஷயத்தை உன்னால் என்கிட்ட சொல்ல முடியலையோ.. அதாவது உன்னோட ட்ரூ ஃப்ரண்ட்கிட்டக்கூட சொல்ல முடியலையோ அந்த விஷயத்தைக் கன்டினியு பண்ணாதே.. உனக்கு அது நல்லதில்லை ப்ரனவ். இதுதான் என் அட்வைஸ். இதுக்கு மேல் நான் ஒரு வார்த்தை அதைப்பற்றி பேச மாட்டேன். இப்போ பெர்சனல் பேச்சை விட்டுட்டு சாப்பாடு போடும் வேலையைப் பார்ப்போமா?" என்று பொரிந்து தள்ளிவிட்டான்.  வெங்கட் அலுவலகத்திற்குள் சென்றுவிட தனது வேலையை முடித்துவிட்ட ப்ரனவ் வேகமாக தனது வண்டியை கிளப்பிச் சென்றுவிட்டான். வீட்டில் நுழைந்ததும் வியர்த்து வழிந்த முகத்தின் வியர்வையை துடைத்தெடுத்தான். தாகம் எடுத்தது. தண்ணீர் குடித்தபோது அவனது விரல்கள் நடுங்கியது.
  ஒரு வேளை வெங்கட் சொன்னதுதான் உண்மையோ என்ற பயத்தால் வந்த நடுக்கம்.
  ஆனால் அவனது பயம் மனப்போராட்டம் எல்லாவற்றையும் விட்டுவிட்டு சரியாக அவன் கண்மூடிய பத்தாவது நிமிஷத்தில் கனவு வந்தது.

  ஆனால் அன்றைய கனவில் அவன் என்ன செய்ய நினைத்தானோ அதைச் செய்தான். நண்பனின் அறிவுரையை பின்பற்றினான். சுசியை விட்டுவிட தீர்மானித்தான்.  அவனது கனவில்......

  ப்ரனவ் எப்போதும்போல் சுசியின் வீட்டிற்குச் செல்கிறான். ருத்ரவும் அவனும் கொஞ்ச நேரம் கிரிக்கெட் விளையாடினார்கள். விளையாடி முடித்த பின் இருவரும் வீட்டிற்குள் வந்து தாகம் தணிய தண்ணீர் குடித்தார்கள். ருத்ரவ் குளிக்கச் சென்றான். ப்ரனவ் வீட்டிற்குள் சுற்றி வந்தான். சுசியிடம் எப்படிப் பேச்சை ஆரம்பிக்க என்று தனிமைக்காக காத்திருந்தான். அந்தத் தனிமை கிட்டியபோது பேச்சை ஆரம்பிக்கத் துணிவு இல்லை அவனிடத்தில். டேபிளில் இருந்த கணினியின் பக்கம் சென்று அதன் கீபோர்டின் பொத்தான்களை சும்மாவேணும் தொட்டுப் பார்த்தான்.  “ப்ரனவ் அந்த தகர டப்பாகிட்ட போயிடாதே.. ஏதோ டவுன்லோட் ஆகுதாம். ருத்ரவ் பத்து தடவை சொல்லிட்டான். அதைத் தொடக்கூடாதுன்னு பத்து தடவை சொல்லிட்டான். ஏதாவது ஆச்சுன்னா அப்புறம் என்கிட்ட கத்துவான். ப்ரனவ் எனக்கு ஒரு டீ போடப்போறேன். உனக்கும் ஒண்ணு போடவா?"

  “டீயா? வேணா சசி! ஆனா கம்பியூட்டரை தகர டப்பான்னு சொன்னதுக்காகவே உனக்கு கடைசி காலத்தில் கம்பியூட்டர் கிடைக்காமல் போகணும்ன்னு சாபம் கொடுக்கலாம் தெரியுமா? எனக்கு என்னோட ஆல்டைம் ஃப்ரண்ட் கம்பியூட்டர்தான்.


  “என்னோடு வீடியோ கேம் விளையாடும். பிஸியாக இருக்கேன் அப்புறம் வர்றேன்." என்று தட்டிக்கழிக்காது. ஐ லவ் கம்பியூட்டர்ஸ்!

  “அந்த தகரடப்பா யாருக்கு வேணும் ப்ரனவ்? வரும் சன்டே வந்திடு. என் பெரியப்பா பொண்ணு அடுத்த ப்ளாட்டில் இருக்கா. அவளோட பர்த்டே பார்ட்டி இருக்கு. அதனால் கண்டிப்பா வந்திடு. என் அம்மா டெல்லி போறாங்க. வருவதற்கு ஒரு வாரம் ஆகும். நான், நீ அப்புறம் அந்த தகர டப்பாவைப் கட்டிப்பிடித்துக் கொண்டு தூங்கும் என் தம்பியும் சேர்ந்து அரட்டை அடிக்கலாம். ஜாலியாக இருக்கும். ஓகே?"

  “சுசி உன்கிட்ட ஒரு வி’யம் சொல்லணும்."

  “என்ன ப்ரனவ்?"

  “நான் இப்ப கனவிலேதான் உன்கூட பேசிட்டு இருக்கேன். இது நிஜம் கிடையாது. இட்ஸ் ஜஸ்ட் எ டிரீம்."

  சுசி குப்பென்று சிரித்தாள்.

  “சிரிக்காதே சுசி. நிஜமாகத்தான் சொல்றேன். நாம இப்ப என்னோட கனவில் தான் பேசிக்கிட்டு இருக்கோம்."  சுசி அவன் அருகே வந்து அவனது கைகளைப் பிடித்து குலுக்கினாள். அவன் சட்டைப் பையிலிருந்து செல்பேசியை எடுத்து தொட்டுப் பார்த்தாள். அவனது சூட்கேஸை எடுத்து ஆட்டிப்பார்த்தாள். அதனைத் திறந்து உள்ளே இருக்கும் பொருட்களை ஆராய்ந்தாள்.  அவள் என்ன செய்கிறாள் என்பதைப் புரிந்து கொண்ட ப்ரனவ் அவளிடம், “சுசி உன்னால் என்னைத் தொட முடியும். என்னாலும் உன்னைத் தொட முடியும். நான் உண்மையான உருவம் தான். அப்புறம் என் விலாசம் எல்லாம் உண்மைதான். நான் ஒண்ணும் கீழ்ப்பாக்கத்தில் இருந்து தப்பிச்சு வரலை! நீ தான் நிஜம் கிடையாது. சுசின்னு ஒரு பொண்ணு இப்ப இந்த பூமியில் இல்லவே இல்லை. நீ என் சூட்கேஸை செக் செய்றதை நிறுத்துறியா? நான் சொன்ன விளக்கம் உனக்குப் போதுமா? போதலையா?"

  “இது எப்படி சாத்தியம் ப்ரனவ்? எனக்குப் புரியலை."

  “ஐஸ்கிரீம் சாப்பிடுவது போல் கனவு காணுறோம். அந்த ஐஸ்கிரீம் நிஜம் கிடையாது சுசி. அது நிழல். நீயும் என் கனவில் வரும் நிழல்தான் சுசி. என் கனவில் தான் நான் உன்னோடு இப்படி உட்கார்ந்து பேசிட்டிருக்கேன் என்பது எனக்கே நம்ப முடியாத ஆச்சரியமா இருக்கு! மத்தவங்க கனவுக்கும் என் கனவுக்கும் ஒரே ஒரு வித்தியாசம் இருக்கு. என்னால் என் கனவில் வரும் பொருட்களைத் தொட முடியும். என் கனவு முடியும் வரை தொட முடியும். யாரிடமும் இதைச் சொல்லக்கூட பயமா இருக்கு. என் ஃப்ரண்ட்ஸ்கிட்டக் கூட சொல்லலை என்றால் பார்த்துக்கோயேன்."

  முதலில் மெதுவாக பேசியவள் ஒவ்வொரு வி’யமாக அவனிடம் சொல்லி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தப் படுத்த அவளது குரல் ஓங்க ஆரம்பித்தது.

  “இல்லை ப்ரனவ் நான் நம்பமாட்டேன். என்கூட நீ பாப்கார்ன் சாப்பிட்டிருக்க. என் வீட்டில் சோபாவில் இப்ப உட்கார்ந்திருக்க. என் பேனாவிற்கு காட்ரிஜ் மாற்றிக் கொடுத்திருக்க. என் பென்டிரைவ் சரி பண்ணிக் கொடுத்த. அப்புறம் பக்கத்து வீட்டு நாய்க்கு பிஸ்கட் கூட வாங்கிக் கொடுத்த.. ரெண்டு மாசமா நான் உன்னைப் பார்க்கிறேன் ப்ரனவ்! இது எப்படி நிஜமாக இல்லாமல் போகும்?"

  “சுசி கத்தாதே. நீ மேடை ஏறிக் கத்தினாலும் என்னால் ஒண்ணும் பண்ண முடியாது. இதை நீ நம்பித்தான் ஆகணும். என் கனவு முடிந்த பிறகு உனக்கு என்னை ஞாபகம் இருக்காது!"

  “ உனக்கு? உனக்கு என்னை ஞாபகம் இருக்குமா?"

  “ம்.. இருக்கும் சுசி! என்னோட எல்லா கனவும் கனவு முடிந்த பிறகுகூட ஞாபகம் இருக்கு! இதே மாதிரி நான் மூன்று கனவு கண்டிருக்கேன். எனக்கு என்ன நடக்குதுன்னே புரியலை." என்று தலைமேல் கைவைத்து அவன் என்றுமே உட்காரத அவளது கட்டிலில் உட்கார்ந்தான். மேலும் புலம்ப ஆரம்பித்தான்.

  “எனக்கு என்ன நடக்குதுன்னே புரியல. என் லைஃப்ல்ல எதுவுமே தப்பா போனதில்லை சுசி. நான் தப்பாப் போக விட்டதில்லை. அதுதான் உண்மை. ஆனால் இப்ப எல்லாம் தப்புத் தப்பா இருக்கு! என்னால் என்னை கன்ட்ரோல் பண்ண முடியலை. முக்கியமா உன் வி’யத்தில் நான் பைத்தியம் பிடிச்சு திரிவேன்னு நினைக்கிறேன். பார்க்காமல் இருக்க முடியலை. ஆனா அடிக்கடி பார்த்துப் பழக பயமாவும் இருக்கு! எனக்கு ஏன் இப்படி?"

  “ப்ரனவ் கூல் டவுன்!"  “இல்லை சுசி உனக்குப் புரியாது. உன்னோட கஷ்டத்தை வலியை உன் ஃப்ரண்ட்ஸ்கிட்டகூட சொல்ல முடியாதபோது உன்னை யாரோ தர தரன்னு இழுத்து வந்து நடுத் தெருவில் விட்டதுபோல் இருக்கும்! நாலு நாள் நீ ஃப்ரண்ட்ஸ்கூட உம்முன்னு இருந்து பார். ஒருத்தன் கேள்விக்கும் பதில் சொல்ல முடியாமல் இருப்பது எவ்வளவு கஷ்டம்ன்னு உனக்கும் புரியும்."

  “ உன் அம்மா அப்பாகிட்ட சொன்னியா?"

  “ ஃப்ரண்ட்கிட்டயே சொல்ல முடியலை.." என்றான் வறட்சியான குரலில்.

  “ சாரி ப்ரனவ்!"

  “ என்னைப் பற்றி கவலைப்படாதே. நான் இந்த கனவிலிருந்து தப்பிக்க ஒரு ஐடியா கண்டுபிடிச்சிடுவேன்.. ஏதாவது ஒரு ஐடியாகூடவா வராமல் போயிடும்? ஏதாவது ஒரு வழி இருக்கும். உன்கிட்ட உண்மையைச் சொல்லணும்ன்னு தோணுச்சு. சொல்லிட்டேன். அவ்வளவுதான்."

  “ப்ரனவ் நான் என்ன பண்ணணும்?"

  “சுசி ஒரு ஐடியா! சுசி ஒரு வேளை நாம பார்க்காமல் இருக்கணும் என்று முடிவு பண்ணால் இந்த கனவு முடிந்திடும்ல்ல?"
   
  kavitha11 and Rabina like this.
 4. Rabina

  Rabina Well-Known Member

  Joined:
  Aug 14, 2018
  Messages:
  868
  Likes Received:
  542
  Trophy Points:
  93
  Gender:
  Female
  nice ud
   
 5. Bala sundar

  Bala sundar Member

  Joined:
  Feb 15, 2019
  Messages:
  57
  Likes Received:
  61
  Trophy Points:
  18
  Gender:
  Female
  டைட்டானிக் கனவுகள் 17

  “சுசி ஒரு ஐடியா! சுசி ஒரு வேளை நாம பார்க்காமல் இருக்கணும் என்று முடிவு பண்ணால் இந்த கனவு முடிந்திடும்ல்ல?"

  “தெரியலையே ப்ரனவ்!"

  “அப்படித்தான் இருக்கணும் சுசி. நான் உன்னை பார்க்க மாட்டேன் என்று உன்கிட்டயே சொல்லிட்டு போயிட்டா? நானும் நீயும் சண்டை போட்டால்? இந்த கனவு எப்படி கன்டினியு ஆகும்?அதுதான் கரெக்ட். அப்பாடா நான் ஒரு வழி கண்டுபிடிச்சிட்டேன்."

  “இருக்கலாம்.. ஆனா.."

  “ஆனாவும் இல்லை ஆவன்னாவும் இல்லை.. நான் இதைத்தான் செய்யப்போறேன்.. சுசி, இனி நான் உன்னை பார்க்கப்போவதில்லை. இந்த கனவில் இருந்து வெளியே போகணும். கனவு வரவில்லை என்றால் எவெரிதிங் வில் பி ஃபைன். ஐ வில் மிஸ் யு! பட் வெங்கட் என்னை ஒரு வாரத்தில் தேத்திடுவான்.. நானும் அவனும் நிறைய வெப்சைட் டிசைன் பண்ணுவோம். ஜஸ்ட் லைக் ஓல்ட் டேஸ்.. எல்லாம் சரியாகிடும்.. சொல்லு சுசி .. எல்லாம் சரியாகிடும்ன்னு சொல்லு!"

  “ஜஸ்ட் லைக் ஓல்ட் டேஸ்.. எல்லாம் சரியாகிடும் ப்ரனவ்!"

  “தாங்க்ஸ் சுசி."

  “ப்ளீஸ் கெட் அவுட் ப்ரனவ் !"

  “என்ன சொன்ன?"

  “உனக்கு கேட்டுச்சு நான் சொன்னது!"

  “சுசி நீ என்னை சும்மா கோச்சிக்கிட்டா போதும்.. சீரியஸா எல்லாம் வேணாம். சிரிச்சிக்கிட்டே சண்டை போடு! எங்க சிரி பார்க்கலாம்."

  “ப்ரனவ் நான் சீரியஸாகத்தான் சொல்றேன். பறவைகளுக்கு கூண்டு வைக்கலாம் தப்பில்லை. அது அதனுடைய பாதுகாப்பிற்காக செய்யிறோம். நான் சிலர் வீட்டில் நாய்க்கு கூண்டு வச்சி பார்த்திருக்கேன். அது ரொம்பத் தப்பா தோணும். கிட்டத்தட்ட மனுஷனோட குணாதிசியம் கொண்ட ஒரு விலங்கின் நடமாட்டத்தைச் சுருக்கி வச்சிருக்காங்க. எனக்கு அது பிடிக்காது. நீ இப்ப உன்னோட கனவில் அகப்பட்டிருக்க. அதன் காரணம் நான் என்று சொல்ற! அதே காரணத்தை நானும் நம்புறேன். இப்போதான் எனக்குள் என்மேல் கோபம் வர ஆரம்பிக்குது.."

  “ சுசி இதில் உன் தப்பு எதுவுமே இல்லை.."

  “இருக்கு! உனக்குத் தெரியாது.. உன்னை நான் தினம் தினம் பார்க்கணும் என்று எனக்குப் பிடித்த கடவுள்கிட்ட யெல்லாம் வேண்டினேன். பத்து முறை பூவா தலையா போட்டுப் பார்த்தேன். நான் உன்னோட குட் ஃப்ரண்டாக இருக்கணும்ன்னு பல முறை கடவுள்கிட்ட வேண்டியிருக்கேன். அதனால்தான் இந்த கனவு உனக்கு இத்தனை நாள் வந்திருக்கணும். இப்பதான் அது எவ்வளவு பெரிய தப்புன்னு புரியிது. உன்னை நானே நாலு அறைக்குள் பூட்டி வச்சிருந்திருக்கேன்.. அதான் நீ இந்த கனவில் இருந்து சீக்கிரம் வெளியே வரணும் என்பதற்காகத் தான் நான் இப்ப உன்னை வெளியே போகச்சொன்னேன். ப்ளீஸ் போறியா?"

  “உனக்கு நான் சொல்வது புரியலை. நாம் ஏன் மனகசப்புடன் பிரியணும்? நமக்குள்ள எந்த பிரச்சனையும் இல்லையே? ஒரு அக்ரிமென்ட் நமக்குள்ள போடுறதா நினைச்சுக்குவோம். நீயும் நானும் இனி ஃப்ரண்ட்ஸ் கிடையாதுன்னு ஒரு அக்ரிமென்ட். இரண்டுபேரும் ஒருத்தரை ஒருத்தர் இனி பார்க்க ஆசை படமாட்டோம் என்று அக்ரிமென்ட் போட்டுக்குவோம். பரஸ்பர ஒப்பந்தம். சரிதான?"

  “ ப்ளீஸ் ப்ரனவ் கெட் அவுட்."

  அவளது நிராகரிப்பினால் கோபம் கொண்டு, “பை!"
  என்றான் அமைதியாக.
  ஆனால் அவன் கையில் சுசியின் கைபேசி இருந்ததைப் பார்த்து சுசி அதனைப் பெற தனது கைகளை நீட்டினாள்.
  ப்ரனவ் அதனை உடைத்திட எழுந்த கோபத்தைக் கட்டுக்குள் கொண்டுவந்து அவளிடம் கொடுக்காமல் மேஜைமேல் வைத்தான்.

  அவள் காதருகே தனது உதடுகளை கொண்டு சென்றான். அதன்பிறகு தனது கைகளைக்கொண்டு கதவின்மேல் தனது கோபத்தைக் காட்டி, “பை" என்றான் மிக மிக சத்தமாக.  நிஜ உலகில்..  திடுமென கனவில் இருந்து தூக்கி வீசப்பட்ட ப்ரனவ் தனது படுக்கை கசந்திட, காலை ஆறு மணிக்கெல்லாம் எழுந்து வாக்கிங் சென்றான்.
  அவன் வாக்கிங் சென்ற நேரம் சாலையில் ஜோடி ஜோடியாக தம்பதிகள் வாக்கிங் சென்றனர். இதற்கு முன்பாக அவன் வாக்கிங் சென்றபோதெல்லாம் அறுபது வயது, ஐம்பது வயது ஆட்கள்தான் அதிகம் நடைபயணம் செய்வார்கள். ஆனால் இன்று நமது ஜனத்தொகையில் அனைவரும் தம்பதிகளே என்று எண்ணும் அளவிற்கு அவன் கண்முன்னே ஜோடிகள் நடந்து சென்றனர்.
  கொஞ்சம் இளைப்பார ஒரு கீரை சூப் கடையில் ஒரு காய்கறி சூப் வாங்கினான். ஆனால் அவன் சூப்பைக் குடித்த நேரம் முழுதும் கடைக்காரன் தனது டாவுடன் டாவடித்தான். காதுகளை கைகள் கொண்டு பொத்தமுடியாமல் ப்ரனவ் தவித்த தவிப்பு வார்த்தைகளால் சொல்லி மாளாது.

  அந்த இடத்தைவிட்டு நகர்ந்தவன் ஒரு பூங்காவிற்குள் நுழைந்தான். அங்கேயிருந்த ஒரு ஃப்ளேம் ஆஃப் ஃபாரஸ்ட் மரத்திற்கு அடியில் அமைதியாக உட்கார்ந்து தனது சுவாசத்தை உணர்ந்தான். சுவாசக்காற்று சீராக உள்ளே சென்று சீராக வெளியே வந்தது.
  அவன் அருகில் ஒரு கிளி ஜோசியம் பார்ப்பவன் உட்கார்ந்திருந்தான். அவனிடம் இரண்டு கிளிகள் இருந்தது. ஒரு கிளி கூண்டிற்குள்ளும் மற்றொன்று வெளியேயும் இருந்தது.

  வெளியே இருந்த கிளியின் பெயர் ராஜாவாம். அந்த ஆள் அப்படித்தான் பெயர் சொல்லி அதனை அழைத்தான். அவன் தனது கிளிகளுடன் பேசியதை ப்ரனவ் கவனித்தான். மனிதன் மனிதனுடன் பேசுவதே அபூர்வமாய் ஆன இக்காலத்தில் அவன் கிளிகளுடன் பேசுவது ப்ரனவிற்கு விசித்திரமாய்ப் பட்டது.

  “ராஜா இங்க வா உனக்கு நாலு பச்சை மிளகாய் வச்சிருக்கேன்."
  என்று தனது கைகளில் இருந்த பச்சை மிளகாயைக் காட்டினான் ஜோசியக்காரன்.
  கிளி அவன் பேசுவதைக் காதில் வாங்கியதாகத் தெரியவில்லை.


  “அட எம்புட்டு நேரமா கூப்பிடுறேன். நீ இப்படி பிகு பண்ணுறியே? நானே காலையில் இருந்து கிராக்கியே இல்லைன்னு படுகடுப்பில் இருக்கேன் நீ வேற என்னை கடுப்படிக்காத!"

  கிளியிடம் எந்த சலனமும் இல்லை.

  “போயேன். நீ சாப்பிட்டால் எனக்கென்ன? சாப்பிடலைன்னா எனக்கென்ன? நான் என்னோட கட்டுச்சோறை சாப்பிடப்போறேன்."

  சிறிது நேரத்தில் ஒரு பொட்டலத்தைப் பிரித்து உண்ணத்தொடங்கினான். அந்த பொட்டலத்தைப் பிரித்ததும் எலும்பிச்சை வாசம் அந்த இடத்தில் நிரம்பியிருந்த காற்றில் கலந்து பரவியது.
  இரண்டு வாய் அள்ளிப் போட்டவன் அவனது சாப்பாட்டில் ஏதோ ஒன்று கையில் தட்டுப்பட அதனை எடுத்துப் பார்த்தான். அது சாதம் கிளறும்போது தாளித்த வத்தல்.
  அதனை கையில் எடுத்துப்பார்த்தவன் உள்ளங்கையில் வைத்துக்கொண்டு மீண்டும் கூண்டின் அருகே சென்றான்.

  “இந்தா பாரு ராஜா கடைசிதபா கேட்குறே. இந்தா இந்த வத்தலை கடிச்சிப்போடு."

  கிளி இம்மியளவுகூட அசையவில்லை. உனக்கு இப்ப என்ன பிரச்சன? ஏன் இப்படி செய்யிற? என்று தன்னுள்ளே புலம்பியவன். ஏதோ ஒன்று யோசித்தபடி கூண்டிற்குள் இருந்த கிளியையும் திறந்துவிட்டான்.
  கூண்டிற்குள் இருந்த கிளி வெளியே வந்ததும் வெளியே இருந்த கிளி அதனருகே சென்று அதன் அலகுடன் உரசியது. ஜோடிக்கிளிகள் காதல் செய்தது. இரண்டும் சேர்ந்தே வந்து அவன் கைகளில் இருந்த பச்சை மிளகாயையும் வத்தலையும் கொத்தித் திண்றது. ஜோசியக்காரன் சிரித்துக் கொண்டே சொன்னான்.

  “ராணியோட சேரத்தான் இத்தனை ஆர்ப்பாட்டம் பண்ணியா படவா? ஏய் உன் ஆளு உன்னை நல்லாதான் மயக்கி வச்சிருக்கு! அதனை வாங்கி நாற்பத்தியெட்டு நாள்தான் ஆகுது. அதுக்குள்ள உன்னை கைக்குள் போட்டுக்கிச்சா? சின்ன புள்ளையாட்டம் அடம்பண்ணுற? ம்.. ம்.. ஜமாய்!"

  இந்த கிளிகளின் சேட்டைகளைப் பார்த்தபின் ப்ரனவின் இதயமும் இப்போது சின்ன புள்ளையாட்டம் தனது ராணி வேண்டும் என்று அடம்பிடிக்க ஆரம்பித்தது.

  விளைவு?

  கனவிலிருந்து தூக்கி எறியப்பட்ட ப்ரனவ் அன்றைய இரவில் கனவிற்குள் மீண்டும் ஆசை ஆசையாய் நுழைந்து கொண்டான் நாற்பத்தியெட்டு நாட்கள் பேசிப்பழகிய தனது ராணியைத் தேடி!
   
  kavitha11 and Rabina like this.
 6. Rabina

  Rabina Well-Known Member

  Joined:
  Aug 14, 2018
  Messages:
  868
  Likes Received:
  542
  Trophy Points:
  93
  Gender:
  Female
  nice ud
   
  Bala sundar likes this.
 7. kavitha11

  kavitha11 Active Member

  Joined:
  Oct 3, 2014
  Messages:
  349
  Likes Received:
  230
  Trophy Points:
  43
  Gender:
  Female
  Location:
  Madurai
  Wow..Nice
   
  Bala sundar likes this.
 8. Bala sundar

  Bala sundar Member

  Joined:
  Feb 15, 2019
  Messages:
  57
  Likes Received:
  61
  Trophy Points:
  18
  Gender:
  Female
  டைட்டானிக் கனவுகள் எபி 18

  அவனது கனவில்..
  தனது ப்ளாட்டிற்குச் செல்ல தானியங்கியில் இரண்டே நிமிடத்தில் போகப் பிடிக்காமல் படிக்கட்டில் பத்து நிமிடங்கள் பொழுதைக் கழித்துவிட்டு போகலாம் என்ற எண்ணத்தில் அந்த சிறுவர் புங்காவிலிருந்து வெளியேறி அசோசியே’ன் அறையைத் தாண்டி அடுத்துவரும் கேன்டீனைத் தாண்டி படிக்கட்டுகளின் அருகே வந்தாள். ஆனால் அவளுக்கு பல நேரங்களில் அசரீரிபோல் கேட்கும் குரல் நிஜமாய் அவளது காதினில் கேட்டது.
  “சுசி!"
  ஆனால் அந்தக் குரல் கேட்டதும் விழித்துக்கொண்ட அவளது ஐம்புலன்களும் அவளிடம் எச்சரிக்கை செய்து அவளை திரும்பிப் பார்க்க அனுமதிக்கவில்லை.
  “சுசி நில்லு.நான் உன்னைத்தான் பார்க்க வந்தேன். என்னைப் பார்."
  ஆனால் அவன் நில்லு என்றபோது அவளது கால்கள் நின்றுவிட்டது. என்னைப் பார் என்றபோது அவள் அவனைப் பார்த்தாள். அவளது மூளை அவனது கட்டுப்பாட்டிற்குள் இருக்கும்போது ஐம்புலன்கள் கைகளைக் கட்டிக்கொண்டு வேடிக்கை பார்கக வேண்டியது தான்!

  “எதுக்கு?"

  “உன் அம்மா ஊரில் இல்லை. நீ நான் அப்புறம் அந்த தகர டப்பாவைக் கட்டிக்கிட்டு தூங்கும் உன் தம்பி ருத்ரவ் எல்லோரும் பத்து நாள் ஜாலியாக இருக்கலாம் தானே? அதான்."
  “சுசி.. நான் உன்கிட்ட அடிமையாகிட்டேன். என்னால் உன்னைப் பார்க்காமல் இருக்க முடியாது. உன்னோடு என்னை யாரோ இரும்பு சங்கிலியால் கட்டினது போல நான் ஃபீல் பண்றேன். இது நடந்திடுமோன்னு உன்னை முதல் நாள் நான் பார்த்தபோதே பயந்தேன். நான் பயந்தது போலவே ஆகிடுச்சு. நானும் நீயும் என் கனவால் இணைக்கப்பட்டிருக்கோம் சுசி. நீ என்னோட மாரிஜுனா ஆகிட்ட!"

  “என்ன?"

  “அப்படின்னா தெரியாது? மாரிஜுனா தெரியாது? எவ்வளவு நல்ல பொண்ணா இருக்க? உன்னைப்போய் அந்த வெங்கட் விடச்சொன்னான் பாரு.. அவனை.. மாரிஜுனா ரொம்ப சின்னச் செடி சுசி. நம்ம கொத்தமல்லி மாதிரிதான். ஆனா போலீசுக்குதான் அதைப் பிடிக்க மாட்டிக்குது!"

  “நான் மாரிஜுனாவாகவும் இருக்க வேண்டாம் கொத்தமல்லியாகவும் இருக்க வேண்டாம்."  “புதினா? புதினாவாக இருக்கியா சசி! அதுக்கு நல்ல வாசனை இருக்கு தெரியுமா?"

  “ப்ரனவ் ஐ ஆம் டெட் சீரியஸ்!"

  “அதெப்படி டெட் சீரியஸாக முடியும்? சீரியஸாகிதானே டெட் ஆக முடியும்?"

  “ப்ரனவ் யு ஆர் கிராசிங் த லிமிட்ஸ்! திஸ் இஸ் நாட் ஃப்ன்னி!"

  “சரி நான் நேரா விஷயத்துக்கு வரேன். நான் கனவில் பார்க்கும் எல்லா பொருள் மீதும் எனக்கு ஒரு அளவிடமுடியாத விருப்பம் வந்திடும். நான் மூன்று மாதம் முன்பாக என் கனவில் பார்த்த கார் பற்றி என்னால் இருபது நிமி’ம் நான்-ஸ்டாப்பாக பேச முடியும். அடுத்து நான் ஒரு ஹோட்டல் ரூம் பார்த்தேன் அந்தக் கனவு பற்றியும் என்னால் மூச்சு விடாமல் பேச முடியும்.. என் கனவுகளும் நானும் இரண்டு மேக்நெட் போலத்தான். எனக்குப் பிடிக்குதோ இல்லையோ என்னை கண்டிப்பா அதுகிட்டே இழுத்துக்கிடும்."

  “ப்ரனவ் எனக்கு அப்படி எதுவும் தோணலை.."

  “பொய். நிச்சயம் தோணும் சுசி.. எனக்கு தோன்றுவதில் ஒரு சதவிதம் தோன்றினால்கூட உன்னால் என்னைப் பார்க்காமல் இருக்க முடியாது. உனக்கு சைன்டிஃபிக்கா இதை என்னால் புரிய வைக்க முடியும்! ஒருத்தன் நாற்பத்திஎட்டு நாள், அதாவது ஒரு மண்டலம், தினம் ஆறுமணிக்கு தண்ணி அடிச்சான்னு வை நாற்பத்தி ஒன்பதாவது நாள் அவன் நாடி நரம்பு எல்லாம் தண்ணியடிக்க துடிக்கும். நானும் நீயும் நாற்பத்தியெட்டு நாள் பழகிட்டோம். அதுக்கு மேலேயும் பழகிட்டோம். இப்ப உனக்கு எதுவுமே தோணலைன்னு சொல்றது பெரிய பொய் சுசி!"

  “தோணலை. இடத்தைக் காலி பண்ணு ப்ரனவ்."

  “சுசி நில்லு.. நான் சொல்றதைக் கேளு.."

  “இல்லை ப்ரனவ் நான் கிளம்பணும். என்னால் இந்த மெலோ டிராமாவை ரசிக்க முடியலை. இது உன்னோட கனவு என்பதையோ நான் உன்கூட கனவில் தான் பேசுறேன் என்பதையோ துளிகூட நம்ப முடியலை.. என்னோடு பிணைக்கப்பட்டிருப்பதாக நீ சொல்ற வி’யத்தை என்னால் எப்படி நம்ப முடியும்? நான் காலையில் டீ குடித்தது நிஜம் இப்ப உன்கூட பேசுறது நிஜம். நீ என் கையை வலிக்க வலிக்க பிடித்திருப்பது நிஜம்.. இப்போ என்கூட நீ சண்டை போடுவது நிஜம்.. ஆனால் எதுவுமே நிஜம் இல்லை இது எல்லாம் கனவு என்று நீ சொல்வது உனக்கே அபத்தமாக இல்லை? இனி ஒரு நிமி’ம்கூட உன்கூட நான் நின்னு பேச மாட்டேன்."

  “சுசி நீ சொல்வது சரிதான். இது அபத்தமாக மட்டும் இல்லை ஆபத்தாகவும் எனக்கு இருக்குன்னு நீ புரிஞ்சிக்கணும். ஒரு பொண்ணுகூட பழகிட்டு.. அந்தப் பொண்ணை ஒரு நாள் என் கனவு முடியும்போது நான் திரும்ப பார்க்கவே மாட்டேன் என்ற உண்மை மூளைக்கு எட்டும்போது அது எனக்கு
  எவ்வளவு ஆபத்தானது என்று எனக்குப் புரியாதா?"

  “ப்ரனவ்.. ஐ டூ கான்ட் பேர் திஸ்.. நான் போறேன் ப்ளீஸ்."

  “சுசி நில்லு போகாதே.."

  சுசி வேகமாக அவன் கைகளை உதறிக் கொண்டு எவ்வளவு வேகமாக செல்ல முடியுமோ அவ்வளவு வேகமாக சென்றாள்.
  “சுசி.. நில்லுடின்னு சொல்றேன் போய்கிட்டே இருக்க.."என்று ப்ரனவ் அவள் வேகத்தை மிஞ்ச அவள் முன்னே போய் நின்றான்.
  அவன் ரௌத்திரமாக டி என்று அழைக்கவும் கோபமாக அவனை முறைத்தாள்.

  “சாரி சுசி. என் வாழ்க்கையில் நான் டி என்று யாரையும் கூப்பிட்டதில்லை. என் அம்மா என்னை அப்படி வளர்க்கலை."

  “சரி நான் போகலை. என்ன செய்யணும் என்று சொல்லு உன் முன்னாடி தானே நிற்குறேன் எனக்கு காது கேட்கும். "

  “முதலில் உனக்கும் என்னை பிடிச்சிருக்குன்னு ஒத்துக்கோ! உனக்கு என்னைப் பிடிக்கும். எனக்குத் தெரியும்."

  “என்னைப் பற்றிய கிசு கிசு நானே என் காதால் கேட்பது போல இருக்கு.."

  “சுசி பி சீரியஸ்!"

  “நான் விளையாடலை.."

  “நானும் என் வாழ்க்கையுடன் விளையாடிப் பார்ப்பதில்லை.."

  “கடவுளே!"

  “அவர் நம்ம பிரச்சனைக்கு மத்தியஸ்தம் பண்ண வரமாட்டார். நான் கேட்டதற்கு பதில்!"

  “என்ன கேட்டு வச்ச? எனக்கு ஞாபகம் இல்லை."

  “அதெல்லாம் நல்லாவே ஞாபகம் இருக்கும். மறக்கக்கூடிய கேள்வியா நான் கேட்டேன்? ஆனாலும் நீ பிகு பண்ணுவதால் திரும்பக் கேட்கிறேன். என்னை உனக்கு பிடிச்சிருக்கா?"

  “தெரியலை.."

  “ராங் ஆன்சர்."

  “அம்மா…"

  “அதுவும் ராங் ஆன்சர். உனக்கு பதில் சொல்லவே தெரியாதா?"

  “கொஞ்சம் பிடிச்சிருக்கு!"

  “மேட்டர் முடிந்தது! நாம் என் கனவு முடியும் வரை லவ் பண்ணப்போறோம்.

  “என்னமோ உப்புமா கிண்டப்போறோம் என்பது போல ஈசியா சொல்ற?"

  “உப்புமா போல இதுவும் ஈசிதான். நீ என்னை ஹனின்னு கூப்பிடணும். நான் உன்னை பேபின்னு கூப்பிடணும். ரொம்ப சிம்பிள்."

  “ப்ரனவ் அப்புறம்? வேற எதுவும் இருக்கா? ஸ்வீட்ஹார்ட். டார்லிங்.. இப்படி வேற ஏதாவது?"

  “அது நாலு மாசம் போன பிறகு வரும் டயலாக். ஆனால் இப்போதைக்கு ஹனியும் பேபியும் போதும்!"

  “என்னிடம் ஒரே ஒரு சந்தேகம் இருக்கு. உன் கனவு முடியும் வரை லவ் பண்ணப்போறோம் என்று சொன்னால் என்ன அர்த்தம்?"

  “கனவு முடிந்த பிறகு நாம் சந்திக்க மாட்டோம் என்று அர்த்தம்!"

  “அதன் பிறகு என் நிலைமை? நான் என்ன மிஷினா? என் நினைவுகள் அழிந்திடுமா என்ன?"

  “சுசி இது கனவு. இது ஒரு சின்ன ஃப்ரண்ட்ஷிப்பாகத்தான் இருக்கப்போகுது. அதுக்கு மேல் எதுவும் இல்லை. எனக்கு உன்னை ஹக் பண்ணணும் கிஸ்
  பண்ணணும் என்ற எண்ணம் கண்டிப்பாக வரவில்லை. வரவும் வராது."


  (யார் காதினில் பூ சுற்றிகிறான் ப்ரனவ்? உங்கள் காதிலா? என் காதிலா? அல்லது கூசியின் காதிலா? )
  மேலும் தனது வள வளா கொள கொளா பேச்சைத் தொடர்ந்தான் ப்ரனவ்,
  “எனக்கோ உனக்கோ இதனால் மனதளவில் எந்த பாதிப்பும் வராமல் பார்த்துக்கணும். மீண்டும் நாம் கனவில் சந்திக்கும் வாய்ப்பே கிடையாது. கனவு நின்றபிறகு என் நிலைமை ரொம்ப கஷ்டம் தான். கொஞ்சம் எமோ’னல் பிரேக்டவுன் ஆவேன். என் கனவைதான் என்னால் மறக்க முடியாதே? என் ஃப்ரண்ட்ஸ் அம்மா அப்பா என் கசின்ஸ் எல்லோரும் என்னை இயல்பான நிலையில் கொண்டு வந்திடுவாங்க. என் கனவை கொஞ்சம் கொஞ்சமாக மறக்க வைச்சிடுவாங்க. சீக்கிரமே யாரையாவது கல்யாணம்கூட செய்து வச்சிடுவாங்க!"
  “சூப்பர்! இப்பதான் என்னை லவ் பண்ணக் கூப்பிட்ட.. ஆனால் பத்து நிமி’த்தில் வேற பொண்னோடு கல்யாணம் செய்துப்பேன் என்று சொல்ற.. இந்த தமிழ்நாட்டில உன்னைப் போல் லவ்வையும் பிரேக்கப்பையும் எவனும் ஒரே நேரத்தில் சொல்லியிருக்க வாய்ப்பே இல்லை."

  “சுசி நான் உண்மையைச் சொல்றேன். பொய்யாக உன்னை ஏமாற்ற விரும்பலை. என் நிலையை யோசித்துப்பார். இருபது பசங்களும் பொண்ணுங்களும் என் கீழே வேலை செய்யிறாங்க. அந்தப் பொண்ணுங்களில் யாராவது ஒருத்தர் என் கனவில் வந்திருக்கலாம். அப்படி வந்திருந்தால் என் கனவு பலிக்க வழி இருக்கு. வாய்ப்பு இருக்கு! ஆனால் லட்சுமி ஃப்ளாட்ஸ் என்று ஒண்ணு இருக்கு என்பதுகூட உறுதியில்லை. நான் சென்னையின் மூலை முடுக்கை நன்கு அறிந்தவன். நான் அறிந்த வரையில் அப்படி ஒரு ஃப்ளாட்ஸ் சென்னையில் இல்லவே இல்லை. ஆனால் அந்த ஃப்ளாட்ஸ்க்கு நான் போறேன், அதிலே சுசின்னு ஒரு பொண்ணை கனவில் சந்திக்கிறேன். அவள் மீது அட்டையாய் என் இதயம் ஒட்டிக்குது. என்னை லவ் பண்ணு என்று அந்தப் பொண்ணுகிட்ட கெஞ்சிட்டு இருக்கேன். என் ஃப்ரண்ட்ஸ் கிட்ட இதைச் சொன்னால் சிரிப்பாங்க. அவுங்க சிரிப்பது இருக்கட்டும்
  அவளிடம் அசடு வழிந்துகொண்டு “என்னைக் காதலி" என்று கேட்கிறேன் என்று நான் சொல்வதை என்னாலே நம்ப முடியலை.. மற்றவங்க எப்படி நம்புவாங்க?
  இதோ இப்போ உன் முன்னாடி ஃப்ர்ஸ்ட் ஸ்டான்டர்ட் பையன் அவனது பக்கத்து பென்ச்சில் இருக்கும் ஒரு பொண்ணுகிட்ட பென்சில், ரப்பர் கேட்டு நிற்பதுபோல் நான் நிற்கிறேன் என்பதை என் கண்னே நம்பாதபோது வேறு யாரும் நம்பமாட்டாங்க.
  ஆனால் நீ இதை நம்பணும். இது என்னோட கனவு. இதுக்கு எதிர்காலம் கிடையாது. அதான் உன்னை காயப்படுத்தாமல் என் கனவை முடித்திட ஆசை படுறேன். நான் இப்போ சொன்னது தான் எதார்த்தம். நாம் நிச்சயமாய் ஒன்னுசேர முடியாது. அதைத்தான் கொஞ்சம் காமெடியாகச் சொன்னேன். நீயும் என்னை புரிஞ்சிக்கணும். நமது காதல் கல்யாணத்தில் முடியாது. நமது காதல் என் கனவிற்குப் பிறகு தொடராது!"
  “காதல் சொன்ன அன்றைக்கே பிரிவைப்பற்றியும் விளக்கமாச் சொன்னதுக்கு உனக்கு கோல்டன் குலோப் ஆஸ்கர் எல்லாம் ஒன்றாகவே கொடுக்கலாம். இப்போ சமீபத்தில் 300 கோடி வருமானம் கொடுத்த ரொமான்டிக் காமெடி படம் லா லா படம். அந்தப் படம் எனக்குப் பிடிக்காது டைட்டானிக் படம் எனக்குச் சுத்தமாக பிடிக்காது சேது படத்தை நான் பாதி படத்திற்குமேல் பார்த்ததில்லை. அப்புறம் குணா படத்தை நான் கன்னா பின்னான்னு திட்டியிருக்கேன். பூவே உனக்காக படத்திற்கு நான் யு ட்யுபில் ஒரு ஸ்டார் மட்டும் தான் கொடுத்தேன். மூன்றாம் பிறை படத்தின் கதையை நான் விக்கிபீடியாவில் வாசித்திட்டு படத்தையே பார்க்கவில்லை. அப்புறம் முக்கியமாக அந்த புக் I too had a love story அதை நான் வாசித்ததும் என் ஃப்ரண்ட் வதனாகிட்ட கொடுத்திட்டேன். இது எல்லாம் ஏன் என்று உனக்குத் தெரியுமா?"

  “ஏன் என்று எனக்கு நல்லாவே புரியுது. அந்த லா லா படம் மட்டும் தான் நான் பார்க்காத படம்.ஆனால் மற்ற எல்லாமே நான் பார்த்ததுதான். அதனால் நல்லாவே புரியுது."

  “எனக்கு லவ்வர்ஸ் பிரிஞ்சா பிடிக்காது. சுத்தமா புடிக்காது. பிடிக்கவே பிடிக்காது."

  “சுசி நான் சொல்வது உனக்குப் புரியலை.. நாம் லவ் பண்ணுவோம் ஆனால் லவ்வர்ஸ் கிடையாது. இது ஒரு கானல் நீர். உனக்கு புரிவதுபோல் சொல்லணும் என்றால்.. “இருக்கு ஆனால் இல்லை!”

  “புரியலை! அதெப்படி லவ் பண்ணாலே லவ்வர்ஸ்தானே?"
   
  Rabina likes this.
 9. dharshini

  dharshini Well-Known Member

  Joined:
  Oct 10, 2017
  Messages:
  382
  Likes Received:
  293
  Trophy Points:
  63
  Gender:
  Female
  nice
   
  Bala sundar likes this.
 10. Rabina

  Rabina Well-Known Member

  Joined:
  Aug 14, 2018
  Messages:
  868
  Likes Received:
  542
  Trophy Points:
  93
  Gender:
  Female
  nice update
   
  Bala sundar likes this.

Share This Page