டைட்டானிக் கனவுகள் / Titanic Kanavugal By Balasundar

Discussion in 'Serial Stories' started by Tamilsurabi, Feb 18, 2019.

 1. Bala sundar

  Bala sundar Member

  Joined:
  Feb 15, 2019
  Messages:
  57
  Likes Received:
  61
  Trophy Points:
  18
  Gender:
  Female
  Thanks ma
   
 2. Bala sundar

  Bala sundar Member

  Joined:
  Feb 15, 2019
  Messages:
  57
  Likes Received:
  61
  Trophy Points:
  18
  Gender:
  Female
  Thanks ma
   
 3. Bala sundar

  Bala sundar Member

  Joined:
  Feb 15, 2019
  Messages:
  57
  Likes Received:
  61
  Trophy Points:
  18
  Gender:
  Female
  *********
  Episode. 19

  *********

  "சுசி நான் சொல்வது உனக்குப் புரியலை.. நாம் லவ் பண்ணுவோம் ஆனால் லவ்வர்ஸ் கிடையாது. இது ஒரு கானல் நீர். உனக்கு புரிவதுபோல் சொல்லணும் என்றால்.. “இருக்கு ஆனால் இல்லை!”

  “புரியலை! அதெப்படி லவ் பண்ணாலே லவ்வர்ஸ்தானே?"  “நாம தான் கிஸ்கூடப் பண்ணப்போவதில்லையே அப்புறம் எப்படி லவ்வர்ஸ் ஆக முடியும்?"  “ஓ மை காட்.. ஐ கான்ட் பிலீவ் திஸ் இஸ் ஹாப்பன்னிங்! ஒரு பையன் என்கிட்ட இப்படி பேசறான் என்பதை என்னால் நம்பவே முடியலை."  “நாம தான் ஹக்கூடப் பண்ணப்போவதில்லையே அப்புறம் எப்படி உண்மையான லவ்வர்ஸ் ஆக முடியும்?"
  “ஹே.. நீ.."  “அட அதைவிடு, நாமதான் “அந்த” தப்பே பண்ணப்போவதில்லையே? அப்புறம் எப்படி உண்மையான லவ்வர்ஸ் ஆக முடியும்? அப்புறம் எப்படி காதல் தோல்வி என்ற ஒண்ணு வரும்?"

  “திரும்ப அதைச் சொன்ன.. எத்தனையோ பேர் கண்ணியமாக லவ் பண்றாங்க தெரியுமா?"  “அப்படியா?"

  “உன் கணிப்பு ரொம்பத் தப்பு. ரொம்ப ரொம்ப தப்பாயிருக்கு.. பொண்ணுங்களை எப்படி இவ்வளவு மட்டமாக நீ எடைபோடலாம்?"  “சாரி.. மனதில் பட்டதைச் சொன்னேன். அவ்வளவுதான். மத்தவங்களைப் பற்றி நாம் ஏன் பேசணும்? நம்மைப் பற்றி பேசத்தான் நிறைய இருக்கே! என்னை சும்மாக்காச்சு லவ் பண்ண சம்மதமா இல்லையா? யெஸ்? ஸே யெஸ் சுசி. இப்படி வச்சிக்கலாம் 50 - 50. 50 பெர்சென்ட் லவ்வர்ஸ் 50 பெர்சென்ட் ஃப்ரண்ட்ஸ்! ஓகே? இல்லை அதை பாதி யெஸ் பாதி நோ என்று வச்சிக்கலாமா?"  “கடவுளே.." என்று கூறியவள் அவனிடமிருந்து விலகி வேகமாக நான்கு எட்டு எடுத்து வைத்து அந்த மாடிப்படியின் முதல் படிக்கட்டில் கால் வைத்தாள்.
  ஆனால் அடுத்த படிக்கட்டில் அவன் வந்து நின்றுகொண்டான்.
  “டோன்ட் ஸ்டால்க் மி!"  “50 – 50 ஓகேயா?"  அவனது பிடிவாதத்தின் அளவைப் புரிந்து கொண்டு அவன் சொன்ன மேக்னட் போன்ற ஈர்ப்பு விசையை அவளும் உணர்ந்து இருந்ததால்,
  “ 50 – 50! பாதி யெஸ் பாதி நோ!" என்றாள்!  *******
  நிஜ உலகில்..


  *********
  “ப்ரனவ் எங்க இருக்க?" என்று வெங்கட் செல்பேசியின் வாயிலாக ப்ரனவிடம் கேள்வி கேட்டான். அப்போதுதான் தனது கனவை நினைத்து சிரித்துக் கொண்டே அவன் பல்துலக்கிக்கொண்டு இருந்தான். கைபேசி அழைத்ததும் லௌட் ஸ்பீக்கரில் போட்டுவிட்டு தனது வேலையைத் தொடர்ந்தான்.

  “என்னடா வெங்கட்?"  “ப்ரனவ் எங்கடா இருக்க?
  “வெங்கட் பல்தேய்ச்சிட்டு இருக்கேன். என்ன ஒரே பதட்டமா இருக்கடா?"

  “டேய் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் ஆக்சிடென்ட் ஆயிடுச்சு. ரெண்டு பேரும் ஐ.சி.யூவில் இருக்காங்க. இரண்டு பேரும் இப்போ நல்லாதான் இருக்காங்க. நாளைக்கே நார்மல் வார்ட் மாற்றிவிடுவாங்களாம். ஆனால் எனக்குதான் கொஞ்சம் பதட்டமா இருக்கு. நீ வர்றியாடா?"  “வர்றேன் மச்சி. தைரியமா இரு."
  “டேய் மெதுவா வா. ஓவர் ஸ்பீடில் வண்டி ஓட்டாதே!"  “சரிடா."

  ப்ரனவ் குளித்து முடித்து தனது வேலைகளைச் செய்து முடித்தபின் பைக்கில் ஏறி டாப் கியரில் அதனைச் செலுத்தினான்.  வேகம் வேகம் என்று மனம் அவனிடம் அடம்பிடிக்க அவனது வண்டியும் வேகம் எடுத்தது. வேகத்தின் போதை மிகவும் உந்துசக்தி வாய்ந்தது. வண்டி எண்பதில் போகும்போது காற்று முகத்தில் அடித்து கன்னங்களை சில்லிட வைக்கும் அனுபவம் போதை ஏற்றும். சுகம் தரும்.

  அதே சுகத்தை அனுபவித்துக்கொண்டு வண்டியை நிறுத்தாமல் ஓட்டியவன் சாலையில் புதிதாக வைக்கப்பட்டிருந்த ஒரு பேரிகேடின் மேல் வண்டியை மோதினான்.  அதன்பிறகு அங்கிருந்தவர்கள் கேட்டது எல்லாம் ஆம்புலன்ஸ் சத்தமும் போலீஸ் ஜீப்பின் ஸைரன் சத்தமும்தான்.
  அந்த ஹாஸ்பிட்டலின் ஐ.சி.யு அறையில் ஒரு கட்டிலில் படுத்திருந்த ப்ரனவ் கண்களை மூடியதும் அவன் முன்னே அவனது சுசி வந்தாள்.  ******************
  அவனது கனவில்..  ******************
  சுசியின் காலிங் பெல்லில் கை வைத்துக்கொண்டே ப்ரனவ் “பஞ்சுமிட்டாய் வாங்கலாம்.


  ரங்கராட்டினம் சுத்தலாம்…" என்று பாட்டு பாடினான்.
  அவன் காலிங் பெல்லை அழுத்திய விதத்தில் வந்திருப்பது அவன்தான் என்று ஐயம்திரிபற உணர்ந்தாள் சுசி. ஆனால் அவனுக்கு கதவைத் திறந்துவிட தயக்கமாக இருந்தது.

  “உள்ளே வந்ததும் காதலன் என்ற உரிமை எடுப்பானோ? அவன் சொன்னதுக்கெல்லாம் தலையை 360 டிகிரி ஆட்டியதால் காதலனின் சலுகைகள் இலவசம் என்று அவன் நினைத்தால்? அவனைப் பற்றி எனக்கு என்ன தெரியும்? ஃப்ரண்ட்ஸா இருந்தப்ப ஒண்ணா உட்கார்ந்து பேசினது வேற..  இப்போ சேர்ந்து உட்கார்ந்து பேசுறது வேற இல்லையா? எப்படி அவனுக்கு யெஸ் சொன்னேன்? ச்ச.. ஒண்ணும் புரியலை.." என்ற மனக்குழப்பத்தில் இருந்தவள் தனது தம்பி வர இன்னும் எத்தனை மணி நேரம் ஆகும் என்று யோசித்தவாறே தனது அடுக்களையில் இருக்கும் கடிகாரத்தைப் பார்த்தாள். மணி பிற்பகல் பன்னிரெண்டு என்று காண்பித்தது.
  “சரி ருத்ரவ் வர இன்னும் இருபது நிமிஷம்தானே இருக்கு? அதனால் கதவைத் திறக்கலாம். ப்ரனவ் வம்பிழுக்க மாட்டான். நல்ல பையனாகத்தான் தெரியுது. ஆனால் தனியாக இருப்பதை மட்டும் தவிர்த்திடணும். பஞ்சும் நெருப்பும் ஒரே சோபாவில் உட்கார்ந்திருந்தால் பிரச்சனைதான். எதுக்கு பிரச்சனை? நெருப்புடன் இருக்கும் போது தண்ணீரையும் அதான் நம்ம ருத்ரவையும் பக்கத்தில் வைச்சிடுவோம். தனியாக அவனுடன் அரட்டை அடிக்கவே கூடாது." என்ற யோசனையில் சாவியை எடுத்துக்கொண்டு கதவைத் திறந்தாள்.  சுசி மனதில் ஒரு பட்டிமன்றம் நடந்துகொண்டிருந்தது. ஆனால் அவன் பேச்சாளர் ராஜா மைக்கின் அருகே வரும்போது இந்தப் பூனையும் பால் குடிக்குமா? என்பது போல் அமைதியாக வருவாரே அது போல சிரித்த முகமாய் அமைதியாக, “பஞ்சு மிட்டாய் வாங்கலாம்.. ரங்கராட்டினம் சுத்தலாம்." என்று பாடிக்கொண்டிருந்தான்.  பொண்ணுங்க சும்மா பார்த்து சிரிச்சிட்டாலே அடிச்சாச்சு லக்கி ப்ரைஸ் கிடைச்சாச்சு லவ்லி வைஃப் என்று பாட்டு பாடும் பசங்க இருக்கும் இந்த தமிழ்நாட்டில் 50 – 50 பாதி யெஸ் பாதி நோ என்று ஒரு பொண்ணு சொன்ன பிறகு ப்ரனவ் இந்தப் பாட்டு பாடுவதில் தப்பில்லை.
  ஆனால் உலக நியதியை நாம் தெரிந்து கொண்ட அளவு சுசி தெரிந்து கொள்ளாத காரணத்தால் அவள் கதவைத் திறந்ததும் பாட்டு பாடிக்கொண்டிருந்த ப்ரனவைப் பார்த்து கோபமாக, “ எனக்குப் பஞ்சு மிட்டாயே பிடிக்காது!" என்றாள்.  “நம்ப முடியலையே? எந்நேரமும் கையில் சமையல் புக்கைத்தான் வச்சிருக்க.. உனக்கு சாப்பாடு சமாச்சாரங்கள் ரொம்பப் பிடிக்கும்ன்னு நினைச்சேன். அதான் பஞ்சு மிட்டாய் பத்திப் பாடினேன்."  “எனக்கு விஜயின் பாட்டு டான்ஸ் மட்டும் தான் பிடிக்கும்."  “அதானே பார்த்தேன். அவர்தானே தொட்ட பேட்டா ரோட்டில் முட்டை புரோட்டா என்று பாடியிருக்கார். அதான் உனக்கு அவரைப் பிடிச்சிருக்கு."
  உள்ளே நுழைந்து தனது ஷ{வைக் கழற்றி ஓரமாய் வைத்துக்கொண்டு இருந்தவனிடம், “ஏன் ப்ரனவ்"
  “ம்?"
  “இந்த பொண்ணுங்க பசங்களை துரத்தித் துரத்தி அடிப்பதைப் பற்றி நீ என்ன நினைக்கிற?"  “டொமெஸ்டிக் வயலன்ஸ் என்று நினைக்கிறேன்."  “தப்பு. இன்டர்நேஷனல் வயலன்ஸ்! என்ன முழிக்கிற? புரியலையா? த டெர்மினேடர் ரைஸ் ஆஃப் த மிஷின்ஸ் என்று நான் நினைக்கிறேன், அதிலே ஒரு பொம்பலை ரோபோ ஆம்பள ரோபோவை துரத்து துரத்துன்னு துரத்தும் ப்ரனவ்! அதனால் பொண்ணுங்க பசங்களை துரத்தித் துரத்தி அடிச்சா அது இன்டர்நேஷனல் வயலன்ஸ்! உன்னை நான் துரத்தித் துரத்தி அடிச்சா அது டொமஸ்டிக் வயலன்ஸா இருக்காது. இன்டர்நேஷனல் ரேன்ஜுக்கு இருக்கும்."

  “ரொம்ப படம் பார்க்குற.. அதான் வயலன்ஸ் பத்தியே நினைக்கிற.. பசங்களைப் பொண்ணுங்க அடிச்சா அதுக்கு கேஸே கிடையாதுன்னு நினைக்காதே சுசி. ஆண்பாவம் புடிச்சிக்கும். ஆமா நீ ரொம்ப படம் பார்ப்பியோ? நீ அன்றைக்குகூட லா லா படம் பற்றி என்னமோ சொன்னியே? அந்த படத்தைப் பற்றி சொல்லேன் சுசி …." என்றவாறே டீபாயை இழுத்துப் போட்டுக்கொண்டு அதில் கால்களை நீட்டியவாறு சோபாவில் உட்கார்ந்தேவிட்டான். டையைக்கூட கழற்றிவிட்டான்.  ப்ரனவ் சொல்லேன் சுசி என்று சொன்ன நொடி அவளது கோபம் தவிடு பொடியானது. ப்ரனவ் கூறியதுபோல் ஒரு ஈர்ப்பு விசை அவளுக்குள்ளும் இருக்கத்தான் செய்தது.
  ஒரு சொல். ஒரு மந்திரச் சொல்!


  அவளது பெயர் மந்திரச் சொல்லானது. அவனது உதடுகள் அவளது பெயரைச் சொன்னபோது அது மந்திரச் சொல்லானது.
  அவனால் வசியம் செய்யப்பட்டவள் அவனிடம் அவளாகவே அரட்டையடித்தாள்.

  “ப்ரனவ் உனக்கு ஜி.கே ரொம்ப கம்மியாக இருக்கு!"  “ஏன்? சொல்லேன் நானும் தெரிஞ்சிக்கிறேன்."  “கம்மின்னா கம்மிதான். லா லா படம் பற்றி தெரியலைன்னு சொல்றியே அதை வச்சித்தான் சொல்றேன்."  “ப்ளுடோ நம்ம சூரியக் குடும்பத்தைவிட்டு போயாச்சுன்னு தெரியும். நம்ம சந்திராயன் மாபெரும் வெற்றின்னு தெரியும். நாசாவின் ஏவுகணை எடுத்துச்சென்ற மிகச் சிறிய சாட்டிலைட் கலாம் சாட். அதைச் செய்தது நம்ம சென்னை ஆளுங்க என்று தெரியும். அந்தளவுக்கு ஜி.கே என்கிட்ட இருக்குன்னு நான் நினைக்கிறேன். ஆனால் ஒரு சினிமா படத்தைப்பற்றி நான் விக்கிபீடியா வாசிக்கலை என்பதால் என் ஜி.கே கம்மியா இருக்குன்னு சொல்றியே." என்று இதயத்திற்கு வலிப்பது போல் பாசாங்கு செய்தான்.
   
  jayalashmi and Rabina like this.
 4. Rabina

  Rabina Well-Known Member

  Joined:
  Aug 14, 2018
  Messages:
  863
  Likes Received:
  544
  Trophy Points:
  93
  Gender:
  Female
  nice ud
   
  Bala sundar likes this.
 5. Bala sundar

  Bala sundar Member

  Joined:
  Feb 15, 2019
  Messages:
  57
  Likes Received:
  61
  Trophy Points:
  18
  Gender:
  Female
  episode 20

  *******************
  அவனது கனவில்..
  ***********/*/***
  பொண்ணுங்க சும்மா பார்த்து சிரிச்சிட்டாலே அடிச்சாச்சு லக்கி ப்ரைஸ் கிடைச்சாச்சு லவ்லி வைஃப் என்று பாட்டு பாடும் பசங்க இருக்கும் இந்த தமிழ்நாட்டில் 50 – 50 பாதி யெஸ் பாதி நோ என்று ஒரு பொண்ணு சொன்ன பிறகு ப்ரனவ் இந்தப் பாட்டு பாடுவதில் தப்பில்லை.
  ஆனால் உலக நியதியை நாம் தெரிந்து கொண்ட அளவு சுசி தெரிந்து கொள்ளாத காரணத்தால் அவள் கதவைத் திறந்ததும் பாட்டு பாடிக்கொண்டிருந்த ப்ரனவைப் பார்த்து கோபமாக, “ எனக்குப் பஞ்சு மிட்டாயே பிடிக்காது!" என்றாள்.

  “நம்ப முடியலையே? எந்நேரமும் கையில் சமையல் புக்கைத்தான் வச்சிருக்க.. உனக்கு சாப்பாடு சமாச்சாரங்கள் ரொம்பப் பிடிக்கும்ன்னு நினைச்சேன். அதான் பஞ்சு மிட்டாய் பத்திப் பாடினேன்."

  “எனக்கு விஜயின் பாட்டு டான்ஸ் மட்டும் தான் பிடிக்கும்."

  “அதானே பார்த்தேன். அவர்தானே தொட்ட பேட்டா ரோட்டில் முட்டை புரோட்டா என்று பாடியிருக்கார். அதான் உனக்கு அவரைப் பிடிச்சிருக்கு."

  உள்ளே நுழைந்து தனது ஷ{வைக் கழற்றி ஓரமாய் வைத்துக்கொண்டு இருந்தவனிடம், “ஏன் ப்ரனவ்"

  “ம்?"

  “இந்த பொண்ணுங்க பசங்களை துரத்தித் துரத்தி அடிப்பதைப் பற்றி நீ என்ன நினைக்கிற?"  “டொமெஸ்டிக் வயலன்ஸ் என்று நினைக்கிறேன்."  “தப்பு. இன்டர்நேஷனல் வயலன்ஸ்! என்ன முழிக்கிற? புரியலையா? த டெர்மினேடர் ரைஸ் ஆஃப் த மிஷின்ஸ் என்று நான் நினைக்கிறேன், அதிலே ஒரு பொம்பலை ரோபோ ஆம்பள ரோபோவை துரத்து துரத்துன்னு துரத்தும் ப்ரனவ்! அதனால் பொண்ணுங்க பசங்களை துரத்தித் துரத்தி அடிச்சா அது இன்டர்நேஷனல் வயலன்ஸ்! உன்னை நான் துரத்தித் துரத்தி அடிச்சா அது டொமஸ்டிக் வயலன்ஸா இருக்காது. இன்டர்நேஷனல் ரேன்ஜுக்கு இருக்கும்."  “ரொம்ப படம் பார்க்குற.. அதான் வயலன்ஸ் பத்தியே நினைக்கிற.. பசங்களைப் பொண்ணுங்க அடிச்சா அதுக்கு கேஸே கிடையாதுன்னு நினைக்காதே சுசி. ஆண்பாவம் புடிச்சிக்கும். ஆமா நீ ரொம்ப படம் பார்ப்பியோ? நீ அன்றைக்குகூட லா லா படம் பற்றி என்னமோ சொன்னியே? அந்த படத்தைப் பற்றி சொல்லேன் சுசி …." என்றவாறே டீபாயை இழுத்துப் போட்டுக்கொண்டு அதில் கால்களை நீட்டியவாறு சோபாவில் உட்கார்ந்தேவிட்டான். டையைக்கூட கழற்றிவிட்டான்.  ப்ரனவ் சொல்லேன் சுசி என்று சொன்ன நொடி அவளது கோபம் தவிடு பொடியானது. ப்ரனவ் கூறியதுபோல் ஒரு ஈர்ப்பு விசை அவளுக்குள்ளும் இருக்கத்தான் செய்தது.  ஒரு சொல். ஒரு மந்திரச் சொல்! அவளது பெயர் மந்திரச் சொல்லானது. அவனது உதடுகள் அவளது பெயரைச் சொன்னபோது அது மந்திரச் சொல்லானது.
  அவனால் வசியம் செய்யப்பட்டவள் அவனிடம் அவளாகவே அரட்டையடித்தாள்.  “ப்ரனவ் உனக்கு ஜி.கே ரொம்ப கம்மியாக இருக்கு!"  “ஏன்? சொல்லேன் நானும் தெரிஞ்சிக்கிறேன்."  “கம்மின்னா கம்மிதான். லா லா படம் பற்றி தெரியலைன்னு சொல்றியே அதை வச்சித்தான் சொல்றேன்."  “ப்ளுடோ நம்ம சூரியக் குடும்பத்தைவிட்டு போயாச்சுன்னு தெரியும். நம்ம சந்திராயன் மாபெரும் வெற்றின்னு தெரியும். நாசாவின் ஏவுகணை எடுத்துச்சென்ற மிகச் சிறிய சாட்டிலைட் கலாம் சாட். அதைச் செய்தது நம்ம சென்னை ஆளுங்க என்று தெரியும். அந்தளவுக்கு ஜி.கே என்கிட்ட இருக்குன்னு நான் நினைக்கிறேன். ஆனால் ஒரு சினிமா படத்தைப்பற்றி நான் விக்கிபீடியா வாசிக்கலை என்பதால் என் ஜி.கே கம்மியா இருக்குன்னு சொல்றியே." என்று இதயத்திற்கு வலிப்பது போல் பாசாங்கு செய்தான்.  “அது மட்டுமில்லை.. அந்தப் படம் பற்றிச் சொன்னா உனக்குப் புரியவும் புரியாது."

  “ஏன்?"

  “ புரியாதுன்னா விடேன்."

  “ஏன்னு சொல்லு சுசி."

  அதே மந்திரச் சொல்.. சக்திமிக்க வசியம் வைப்பது தெரியாமல் மீண்டும் அழைத்தான்.

  “சொல்லு சுசி."
  அவள் கீழ்ப்படிந்தாள் சிறு குழந்தைபோல். அவன் குதூகலித்தான் சிறு பையன்போல்.  “சரி கதையைச் சொல்றேன். ஆனால் அந்தக் கதையைப் பற்றி ஒரு டவுட்கூட கேட்கக்கூடாது."

  “சரி கேட்கமாட்டேன். வசமாக அவள் முகத்தைப் பார்த்தவாறு உட்கார்ந்துகொண்டான்."

  “கண்டிப்பா டவுட் வரும். ஆனா என்னைத் தொந்தரவு செய்யக்கூடாது."

  “நான்தான் டவுட்டே வராதுன்னு சொல்றேன்ல்ல? நீ திரும்பத் திரும்ப வரும் வரும்ன்னா என்ன அர்த்தம்?" என்று கோபமே கொள்ளாமல் சளைத்துக்கொண்டவனிடம்,
  “சும்மாக்காச்சு லவ் பண்ணக்கூப்பிட்ட ஆளுக்கு.. 50- 50 டீல் பேசின ஆளுக்கு அந்தப் படத்தின் காதல் புரிவது ரொம்பக் கஷ்டம் ப்ரனவ்."

  ப்ரனவ் சுசியின் விளக்கத்தை முழு சுயநினைவில் கேட்டிருந்தாலும் அந்த விளக்கத்திற்கு பதில் சொல்லாமல்,
  “கதையைச் சொல்லு சுசி"
  என்றான்.  சுசி மறுபேச்சின்றி அவனிடம் அந்தக் கதையைச் சொல்ல ஆரம்பித்தாள்.
  “கதையின் ஹீரோயின் மியா ஒரு ஃபேமஸ் நடிகையாகணும் என்ற கனவோடு தனது சொந்த ஊரைவிட்டு வருகிறா. செபாஸ்டின் என்ற பையன் தனது ஜாஸ் இசைத்திறமையை வெளிப்படுத்தும் விதமாக ஒரு கிளப் தொடங்கும் கனவோடு அவனும் லாஸ் ஏன்ஜல்ஸ் ஊருக்கு வருகிறான். சொந்தமாக ஒரு கிளப் ஆரம்பித்து அழிந்துவரும் ஜாஸ் கலைக்கு உயிர் கொடுக்க நினைக்கிறான்.
  இருவரும் ஒரு மோதலில் சந்திக்கிறாங்க. அடுத்து இருவர் மத்தியிலும் நல்ல ஃப்ரண்ட்ஷிப்பைத் தாண்டி ஒரு உறவு உண்டாகுது. கண்டதும் காதல் இல்லை.
  அழகான பாடல் ஆடல் என்று படம் நகருது.
  ஆனால் கண்டுகொண்ட மூன்றாவது சந்திப்பில் காதல் வந்திடுது. சேர்ந்து வாழுறாங்க. பாட்டு டான்ஸ் காமெடி என்று ரொமான்டிக் மியுசிக்கல் படமாக நகருது கதை. இருவரும் தங்களது லட்சியங்களை அடைய கஷ்டப்படுறாங்க. செபாஸ்டின் ஜாஸ் இசையை விட்டுக் கொடுத்துவிடும் நிலையில் வந்திடுறான். மியா ஒரு மேடை நாடகத்தில் தனது மோசமான நடிப்பினால் விரக்தியடைகிறாள். இந்த விரக்தி மோதிலில் கொண்டு விடுது. தனது லட்சியம் நசுக்கப்படும் ஆதங்கம் அவனிடம். இருவரும் பிரிஞ்சிடுறாங்க. ஐந்து வருடம் கழித்து மியா தான் ஆசைபட்டது போல் நடியையாகிடுறா. வேறு ஒருவனை மனமாற ஆசைகொண்டு மணக்கிறாள். ஒரு குழந்தைக்குத் தாயாகிறாள். இந்த நேரத்தில் தனது கணவருடன்
  ஒரு கிளப்பிற்கு போகிறா.
  அங்க செபாஸ்டின் ஜாஸ் இசையை வாசித்துக் கொண்டிருக்கிறான். அது அவனது கிளப் என்பதை மியா தெரிந்து கொள்கிறாள். அவனும் அவனது லட்சியத்தை அடைந்துவிட்டதை உணர்கிறாள். ஆனால் ஏதொ ஒரு உணர்வு இருவர் கண்கள் சந்திக்கும்போது இருவருக்கும் வருது.
  இருவரும் அவர்கள் காதல் ஜெயித்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்று கற்பனை செய்து பார்க்கிறாங்க. அவர்களது கற்பனையில், அவர்களது கல்யாணம், குழந்தை, ஒரு எளிய வீடு காட்சிகளாக வருது..


  கற்பனை முடியுது. மியா தனது கணவருடன் அந்த கிளப்பை விட்டு வெளியேறுகிறாள்.
  ஆனால் கிளம்பும் முன் செபாஸ்டினைப் பார்த்து கண்ணீருடன் ஒரு சிரிப்பு சிரிக்கிறா. அவனும் சிரிக்கிறான். படம் முடிந்திடுது."

  “என்ன படம் முடிஞ்சிடுச்சா?"  தன்னால் ஆர்வத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் கேள்வியை கேட்டே விட்டான் ப்ரனவ்.

  “நோ டவுட்ஸ்.."

  “நீ நல்லா படத்தைப் பார்த்தியா? படம் அத்தோடு முடிஞ்சிடுதா?"  “ப்ரனவ்!"  “இல்லை சுசி.. நிஜமாகவே இத்தோடு முடிச்சிட்டானா? அட ரொம்ப தப்பு பண்ணிட்டான் போ. நம்ம கோடம்பாக்கம் ஆளுங்ககிட்ட படத்தைக் கொடுத்திருந்தேன்னு வை.. படத்தை இனிமேல் தான் பிச்சி மேஞ்சிருப்பாங்க. நம்மாளு என்ன பண்ணிருப்பான்னு சொல்லவா?"

  “வேண்டாம். நல்ல படத்தைக் கொலை செய்யாதே ப்ரனவ்."  “ஒரு லைன் மட்டும் சொல்றேன் சுசி."  “நம்மாளு அந்த கிளைமாக்ஸ் எப்படி கொண்டு போயிருப்பான் தெரியுமா? ஹீரோயின் பேரு என்ன சொன்ன?" என்று கேட்டவனால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை. ஆனால் உதடுகளை அழுத்தி வைத்துக்கொண்டு சிரிப்பை அடக்கினான்.

  “சொல்லமாட்டேன் போ!"

  “மியா.. மியான்னு தானே சொன்ன? ச்ச ரெண்டு தடவைக்கு மேல் சொல்லவே பயமா இருக்கு.. ரெண்டு தடவைக்கு மேல் சொன்னா.. உன் மீன் தொட்டியில் இருக்கும் மீனுக்குத் தான் ஆபத்து. பக்கத்து வீட்டில் இருக்கும் பூனைக்குட்டி அதைத்தான் நான் கூப்பிடுறேன்னு நினைச்சிட்டு இங்க வந்திடாது?"

  “வேணா.. அடிப்பேன்.. எனக்கு அவளை ரொம்பப் பிடிக்கும்!"

  “சரி பேரு வச்ச ஆத்தா யாரோ? நமக்குத் தேவையில்லை.. நம்ம ஆளுங்க மியாவை பத்து கிளசரின் பாட்டில் காலியாகும் வரை படத்தில் அழ விட்டிருப்பாங்க."

  “அப்புறம் மியாவோட புருஷன் மூக்கில் செபாஸ்டின் ஒரு குத்துவிட்டிருப்பான். இருவரும் கட்டிப் புரண்ட பிறகு மியா ஸ்டாப் இட் என்று கத்துவா.. சிரிக்காத சுசி நான் சீரியஸா சொல்லிட்டு இருக்கேன்ல்ல?"

  … சுசி ஒன்றும் பேசவில்லை.

  “இதே படத்தை மும்பைக்காரன் என்ன பண்ணிருப்பான் தெரியுமா?"  “ நீ என்னமோ படத்தில் நாலு பாட்டு டான்ஸுக்கே படம் மியுசிக்கல் ரொமான்ஸ்ன்னு புகழ்ந்தியே.. நம்ம ஷேட்டு இருபத்தினாலு பாட்டு போடுவான். எல்லா பாட்டிலும் டான்ஸ் நச்சுன்னு இருக்கும். அதுவும் யாஷ் சோப்ராகிட்ட படத்தைக் கொடுத்திட்டானா படத்தை ஒரு வருஷத்திற்கு குறையாமல் ஓட வச்சிடுவார். கடைசி சீனில் குறைந்தது நாற்பது பேர் ஸ்கீரினில் இருப்பாங்க. அதில் வெள்ளை சுடிதார் போட்ட வயதான பெண்மணி கண்டிப்பா இருப்பாங்க.. ஏய் சுசி நான் என்ன ஜோக்கா சொல்றேன்? விழுந்து விழுந்து சிரிக்கிற? உனக்கு ஏதாவது டவுட் இருக்கா? ஏதோ கேட்க வர்ற மாதிரி இருக்கு? பார்த்தியா? நான் சொன்ன மாதிரி டவுட்டே கேட்கலை. உனக்குதான் டவுட் நிறைய இருக்கு போல. சரி போனா போகட்டும் நீ கேளு! உன்னை மாதிரி நோ டவுட்ஸ்னுலாம் சொல்ல மாட்டேன்."

  “ஆந்திராகாரன்கிட்ட படம் போச்சுன்னா?"

  “ரொம்ப சிம்பிள். சிரஞ்சீவியோட பேரன்தான் ஹீரோ. அந்த ஹீரோவும் தரையில் கால் பதிக்காமல் உடல் நரம்பு புடைக்க டான்ஸ் ஆடுவார். சரியா? சி.ஜியாவது மண்ணாங்கட்டியவது? அவர் ஆடும் ஸ்பீடை கம்பியூட்டர்கூட கொண்டு வர முடியாது! என்ன நான் சொன்னது சரியா?"

  “சரி .ரொம்ப ரொம்ப சரி."
  என்றவள் அடுத்த நிமிடம் தனது தம்பி ருத்ர்வ் இன்னும் ஒரு மணி நேரம் தாமதமாக வந்தால் நல்லாயிருக்குமே என்று நினைத்தாள்.
  தன்னுள் அந்தச் சமயம் தோன்றிய எண்ணத்திற்காக தன்னைத் தாமே கடிந்துவிட்டு அவனுடன் இணைந்து நகைப்பதை நிறுத்தினாள்.
  அவளின் தம்பி ருத்ரவ் பத்து நிமிடங்ளில் வந்து சேர்ந்தான். தம்பியுடன் இருந்தபோது ப்ரனவ் அளவாக பேசுவதைக் கவனித்தாள்.
  தனியாக இருந்தபோது அவளை சிரிக்க வைத்தவன் தம்பியுடன் இருந்தபோது சிந்திக்க வைக்கும் விஷயங்களாகத்தான் பேசினான். ஆந்திராவில் மக்கள் வெள்ளத்தில் பட்ட கஷ்டங்கள் பற்றிப் பேசினான். அமேரிக்க அதிபர் ஓபாமாவின் அனுகுமுறைகள் பற்றிப் பேசினான். ட்ரம்ப்பின் ஆதி தத்துவங்களைப் பற்றிப் பேசினான். அமேரிக்காவின் அதிபர் தேர்தலின்போது அங்கேயிருக்கும் நம் இந்தியர்களின் விவாதங்களைப் பற்றி விவாதம் செய்தான்.

  ருத்ரவ் உடன் இருந்தால் மட்டுமே இருவர் உள்ளமும் அலைபாயாது என்பதை உணர்ந்தாள். பஞ்சும் நெருப்பும் பக்கத்தில் இருக்கும்போது ஒரு நெருப்பை அணைக்கும் கருவியாக ருத்ரவைப் பார்த்தாள்.

  ஆக அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு அந்த அறையில் ஒரு பஞ்சும், ஒரு நெருப்பும் ஒரு நெருப்பை அணைக்கும் கருவியும் சோபாவில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தது.
   
  Rabina likes this.
 6. Rabina

  Rabina Well-Known Member

  Joined:
  Aug 14, 2018
  Messages:
  863
  Likes Received:
  544
  Trophy Points:
  93
  Gender:
  Female
  Nice update.
   
  Bala sundar likes this.
 7. kani _mozhi

  kani _mozhi Well-Known Member

  Joined:
  Feb 12, 2018
  Messages:
  412
  Likes Received:
  271
  Trophy Points:
  63
  Gender:
  Female
  Nice update
   
  Bala sundar likes this.
 8. Bala sundar

  Bala sundar Member

  Joined:
  Feb 15, 2019
  Messages:
  57
  Likes Received:
  61
  Trophy Points:
  18
  Gender:
  Female
  எபி 21


  டைட்டானிக் கனவுகள்..

  ************
  அவனது கனவில்...

  ************


  ப்ரனவ் சுசியின் வீட்டிற்குச் செல்வதற்காக அந்தத் திங்கள் அன்று கிளம்பிக்கொண்டிருந்தான். அவன் தினம் ஒரு முறையாவது சுசியைப் பார்த்துவிடுவான். அவனுள் இருக்கும் காந்த சக்தி அவனை அவளிடம் தானாக கொண்டு சேர்த்துவிடும்.
  அவனது கனவுலகில் அவன் காலையில் எழுந்தான், குளித்தான், வேலைக்குச் சென்றான். ஆஃபீஸ{க்குப் போகும் முன் சுசியை ஐந்து நிமிடங்கள் அவளது வீட்டில் சந்தித்தான். ஒன்பது மணிக்கு சுசியின் அன்னை அலுவலகம் சென்று விடுவார். ருத்ரவும் சுசியும் பதினோரு மணிக்கு தங்களது கல்லூரிக்கு சென்று விடுவார்கள். அதனால் கல்லூரிக்குச் செல்லும் முன் காலை பத்து மணிக்கு ப்ரனவ் அவளை சந்திப்பதை வழக்கமாக வைத்திருந்தான்.
  பகலில் பார்க்கும் ஒரு மணிநேரம் பத்தாது என்று அன்று மாலை ஆறுமணிக்கு அவளைக் காண கல்லூரிக்குச் சென்றான். அவனை உள்ளே விடாமல் காவலாளி தடுத்து ஆர்ப்பாட்டம் செய்துவிட்டார். உடனே சுசிக்கு கைபேசியில் அழைப்பு விடுத்தான். அவள் முதலாவதாக அவன் விடுத்த அழைப்பை ஏற்கவில்லை. ஏனென்றால் தோழிகள் கூட்டம் அவளை காண்டீனில் மொய்த்துக்கொண்டு நின்றது. அடுத்த இரண்டு அழைப்புகளையும் ஏற்கவில்லை. நான்காவது அழைப்பு வரும்போது தோழிகளின் கவனம் அவளது செல்பேசியில் பதிந்தது.


  “என்ன சுசி ஃபோனைக் கட் பண்ற?" என்று ஒருத்தி சொன்னபோது
  “இல்லை. நம்பர் மட்டும் வருது அதான் கட் பண்னேன். யாரோ தெரிஞ்சவங்கன்னு நினைக்கிறேன். அதான் கூப்பிட்டுட்டே இருக்காங்க. நம்பரை சேவ் பண்ணாமல் வச்சிருக்கேன். இருங்க நான் யாருன்னு கேட்டுட்டு வந்திடுறேன்."  ப்ரனவ் செல்பேசியின் எண்ணைக்கொடுத்த போது அதனை அவள் பதியவில்லை. ஆனால் அந்த எண் நான்கு ஏழில் முடிவதால் அவளுக்கு அவனது எண்ணின் கடைசி நான்கு எண்கள் மனப்பாடம் ஆனது. அதனால் அழைத்தது அவன் என்று தெரிந்தது அவளுக்கு.
  அவள் உணவகத்தைவிட்டு வெளியே வந்த அடுத்த நொடி அவளது கைபேசி கிணுகிணுத்தது.
  தனது செல்பேசியின் பச்சை பொத்தானை அழுத்துவதற்கு அதற்குமேல் அவள் யோசிக்கவில்லை.
  “ஹலோ!"

  “சுசி என் நம்பரை நீ சேவ் பண்ணியா? பண்ணலையா?"
  “யாரு?"  “யாரா? உன்பின்னாடி லோ லோன்னு திரியிறானே அந்த ப்ரனவ் பேசுறேன்."

  கர்வம் சிரிப்பு இரண்டு உணர்ச்சிகளுக்கு நடுவே அவள் கட்டாயம் பதில் தரவேண்டும் என்கிற நிலையில் இருந்தாள்.  “சொல்லு ப்ரனவ். என் பக்கத்தில் ஃப்ரண்ட்ஸ் இருந்தாங்க. அதான் எடுக்கலை."  “அப்ப என் நம்பர் என்று உனக்குத் தெரியும்! நாலு முறை நான் அழைத்தபோதும் என் நம்பர் என்று தெரிஞ்சுதான் நீ எடுக்கலை. அப்படித்தான?"
  “இப்ப சொல்ல வந்ததைச் சொல்."

  “என் கேள்விக்கு பதில்."  “நான் ஃபோனை வைக்கிறேன்"
  “ஃபோனை வச்சினா நாளைக்கு காலை ஒன்பது மணிக்கு உன் வீட்டுக்கு வந்திடுவேன். உனக்கு உன் வீடுதான் வசதியாக இருக்கும் போலயே.. சரி நான் காலை ஒன்பது மணிக்கு உன் வீட்டுக்கே வந்திடுறேன்."

  “ஏய்.. அப்படி எதுவும் பண்ணிடாதப்பா. லவ் ஸ்டோரி புக் வாங்கினாலே என்னை இரண்டு நாளு திட்டித் தீத்திடுவாங்க. இதுதான் என் லவ்வர் என்று உன்னைக் காட்டினேன்னா வேற வினையே வேண்டாம். ஃபோனை எடுக்காமல் இருந்ததற்கு சாரி. எதுக்கு கூப்பிட்ட?"

  “சுசி நேற்று வெங்கட் அவன் கேர்ள்ஃப்ரண்டுடன் டேட்டிங் போனான்."

  “அவனோட கனவில் போனானா நிஜமா போனானா?"

  “நிஜமாத்தான் போனான். அப்புறம் காயத்ரிகூட அவன் ஹஸ்பென்ட்கூட மில்லியனம் மாலுக்கு டேட்டிங் போனா.."

  “அதுக்கு பேர் ஷாப்பிங்! டேட்டிங் கிடையாது."

  “அவுங்க ஒரு குண்டூசிகூட வாங்கலையே? அப்படின்னா அது டேட்டிங்தான். நாம ரெண்டு பேரும் எப்ப போலாம்? இன்னைக்கா நாளைக்கா?"

  “ப்ரனவ்.."

  “ம்.. சொல்லு.. இன்னைக்கு போலாமா? நாளைக்கு போலாமா? "

  “ப்ரனவ்.."

  “சொல்லுலு.."

  “குட் நைட்! அன்ட் ஸ்வீட் டிரீம்ஸ்!"
  அதன்பிறகு எத்தனை முறை ப்ரனவ் அழைத்தபோதும் சுசியின் உயிரில்லாத கைபேசி அந்த அழைப்புகளை ஏற்கவேயில்லை.


  மறுநாள் காலை பத்து மணிக்கு அவளது வீட்டில் ப்ரனவ் இருந்தான். அவள் ஒரு வார்த்தைகூட பேசவில்லை.
  பொறுமையை முற்றிலும் இழந்த ப்ரனவ் தானாக பேச ஆரம்பித்தான்.

  “சுசி இன்று நாம கோல்டன் பீச் போறோம். சரியா?"  “ஸ்கூட்டியில் அவ்வளவு தூரம் போக முடியாது! உன் காரில் நான் வரமாட்டேன்."

  “சரி உன் காரில் போவோம்."

  “எனக்கு அவ்வளவு தூரம் டிரைவ் பண்ணிப் பழக்கமில்லை ப்ரனவ்."

  “நான் டிரைவ் பண்ணுறேன்."

  “அம்மாக்குத் தெரிஞ்சி.. அப்புறம் அப்பாக்குத் தெரிந்தால் நான் செத்தேன்! "  “தெரியாமல் பார்த்துக்கல்லாம்."
  “ருத்ரவ் வந்திடுவான். நாம மூனு பேரும் டி.வி பார்க்கலாம்."  “விராட்கோலி சிக்ஸ் அடிப்பதை பார்த்துட்டே சோபாவை என்னால் தேய்க்க முடியாது. நீ என்னுடன் வர.. அவ்வளவுதான்."
  அவள் கையில் இருந்த பர்ஸைப் பிடுங்கினான். அதிலிருந்து ஒரு சாவியை எடுத்தான்.
  “உன் காரை எடுத்திட்டு நான் மூனு மணிக்கு உன் காலேஜுக்கு வர்றேன்! நீ வந்திடு!"
  அவன் காரின் சாவியை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டான். ஆனால் அவனது அதிரடி பட்டாசுப் பேச்சு சுசியின் வரவேற்பறைய முழுதும் ஒலித்துக் கொண்டேயிருந்தது.

  அவளது கைபேசிக்கு மூன்று மணிக்கு விடாது அழைத்தான். அவள் எடுக்காத போது அவளது தோழியின் எண்ணிற்கு நிறுத்தாமல் அழைத்தான். அவனது அழைப்புகள் நிராகரிக்கப்பட்டபோது மற்றொரு தோழியின் எண்ணிற்கு அழைத்தான்.
  அவளது கைபேசியில் இருந்து அவன் சுடச் சுட சுட்ட எண்கள்! அவன் அவனாக எடுத்துக்கொண்ட எண்கள் தக்க சமையத்தில் அவனுக்குக் கை கொடுத்தது. சுசிக்கு வேறு வழியில்லை. அவனுக்கு ஒரு மிஸ்ட் கால் கொடுத்துவிட்டு கல்லூரியைவிட்டு வெளியேறி அவனது காரில் ஏறினாள்.
  காரில் ஏறியதும் ருத்ரவிற்கு கைபேசியில் அழைத்து “நானும் ப்ரனவும் கோல்டன் பீச் போறோம். என்ன? என் துணைக்கு நீயும் வர்றியா? அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம். ச்ச.. ச்ச.. அப்படியெல்லாம் ப்ரனவ் செய்யமாட்டான். நானே பார்த்துப்பேன் பை!" என்று பேசிவிட்டு அதனை அணைத்தாள்.

  “ருத்ரவ்கிட்ட என்னமோ நானே பார்த்துக்குறேன் என்று சொன்னியே? அது என்ன?"

  “ஓ! அதுவா? நீ என்கிட்ட மிஸ்பிஹேவ் பண்ணா என்ன பண்ணுவ? ன்னு கேட்டான். அதுக்கு தான் நானே பார்த்துக்குவேன்னு சொன்னேன்"  ப்ரனவைச் சீண்டிய பிறகுதான் அவளது கோபம் தணிந்தது. வம்படியாக இழுத்துக்கொண்டு வந்துவிட்டானே என்ற கோபம் தணிந்தது.

  ப்ரனவ் முறைத்ததும்,


  “இல்லப்பா.. ப்ரனவை காரை மெல்ல ஓட்டுச்சொல்லு. சட்டு சட்டுன்னு பிரேக் போடச் சொல்லாதேன்னு சொன்னான். அதுக்குதான் நானே பார்த்துக்குவேன்னு சொன்னேன்ப்பா.. நிஜமா!" என்றாள் சிரித்துக்கொண்டே.
  அவன் பற்களை நற நறவென கடித்துக்கொண்டு, “சீட் பெல்ட் ப்ளீஸ்" என்றபோது அவள் சீட் பெல்ட் போடவில்லை.  ஆனால் வண்டியின் வேகத்தைப் பார்த்து அடுத்த பத்தாவது நிமிடத்தில் சீட் பெல்ட் போட்டவள் அவனிடம் “ப்ரனவ் கொஞ்சம் மெதுவா போயேன். பயமா இருக்கு!" என்றாள்.  ஆனால் சிலருக்கு சில நேரங்களில் பேசுவது எல்லாம் எதிர்மறையாகவே புரிகிறது.
  ஆக அவன் அவளிடம் என்ன சொன்னான்?

  “இன்னும் வேகமா போணுமா? சரி சுசி." என்றான்.

  அவள் முறைத்ததும் வேகத்தைக் குறைத்தான். அடுத்த பத்தாவது நிமிடத்தில் வேகத்தைக் கூட்டினான்.  அவள் முறைத்ததும் மீண்டும் வேகத்தைக் குறைத்தான். அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் வேகத்தைக் கூட்டினான்.
  கோல்டன் பீச்சுக்குள் நுழைந்ததும் சுசி ஒன்றும் பேசாமல் வருவதைப்பார்த்து,
  “என்ன அமைதியா இருக்க? வாட்டர் தீம் பார்க் போகலாமா? நல்லா இருக்கும். இல்லை முதலில் ரைட் போகலாமா? அட உள்ள நுழைந்ததும் பசிக்குதே.. உனக்கு ஸ்வீட் கார்ன் பிடிக்குமா? எனக்கு ஒண்ணு வாங்கப் போறேன். அப்படியே உனக்கும் ஒண்ணு வாங்கிட்டு வர்றேன். இங்கயே இரு நான் வாங்கிட்டு வர்றேன்."  ப்ரனவ் இரண்டு கைகளிலும் பட்டர் ஸ்வீட் கார்னை பிடித்துக்கொண்டு சுசியின் அருகே வந்த நின்றான். அவளிடம் ஒரு கப்பைக் கொடுத்த போது அவள் கைகளை உயர்த்தி அதை வாங்கினாள். ஆனால் அவளது முகம் அசதியுடன் காணப்பட்டது.

  “என்ன சுசி ஒரு மாதிரி இருக்க?"
  “ஒரு மாதிரி வயிறு புரட்டுது."  “சுசி ஃப்ரண்ஸுடன் கேன்டீனுக்குப் போனாலும் டின்னருக்குப் போனாலும் பாய்ஃப்ரண்ட் ஃபோனில் கூப்பிட்டா அட்டென்ட் பண்ணணும். இல்லைன்னா இப்படித்தான். என் நம்பரைப் பார்த்திட்டே ஃபோனை எடுக்காமல் இருந்தியே.. அதான் வயிறு புரட்டுது. உனக்கு ஏற்கனவே ஆண்பாவம் பற்றி சொல்லியிருக்கேன்ல்ல?"  “சும்மாயிருக்கியா கொஞ்ச நேரம்! எல்லாம் உன்னால் தான். ப்ரனவ் நீ வண்டியா ஓட்டின? ரோலர் கோஸ்டர் ஓட்டினடா! உனக்கு எவன் லைசன்ஸ் கொடுத்தான்? நீ ஓட்டின லட்சணத்தில் எனக்கு வயிறு புரட்டுது. கண்டிப்பா வாந்தி எடுக்கப்போறேன்."

  “நான் நார்மல் ஸ்பீடில் தான் போனேன்!"

  “பொய்! அண்டப்புழுகு!"

  “நான் பொய் பேசுவதில்லை சுசி.நிஜமா நான் போனதெல்லாம் ஒரு ஸ்பீடே இல்லை தெரியுமா. ஆனா பாதி நேரம் 80 யில் தான் போனேன்."  “ஆமா… முதலில் 80-ல் தான் போன.. அப்பறம் 100-ல் போன. அப்புறம் 90-ல் போன.. அடுத்த பத்தாவது நிமிஷம் 120-ல் போன.. திரும்ப வேகத்தை தொண்ணூறாகக் குறைச்ச.. இரண்டு நிமிஷத்தில் 80 அடுத்த இரண்டு நிமிஷத்தில் திரும்ப 120…"  “உனக்கு வயிறு கலக்கலை? இப்படி வேக்கத்தைக் கூட்டி குறைச்சி வண்டி ஓட்டுனா வயிறு கலக்காமல் என்ன செய்யும்? உன் பக்கத்தில் உட்கார்ந்திருந்த எனக்கு வயிறு புரட்டி எடுத்திடுச்சே? உனக்கு ஒண்ணும் செய்யலையா? பத்து ஹார்ப்பின் பென்ட் சுத்தின மாதிரி இருந்திச்சு தெரியுமா? இன்னும் எனக்கு வயிறு புரட்டுது. உன்னால் தான் ப்ரனவ்."  “ரொம்பத்தான் அழாத.. இதைச் சாப்பிடு வயிறு சரியாகிடும். உன் ஃப்ரண்ட்ஸோட கேன்டீனில் பஜ்ஜி சோமாஸ் சாப்பிட்டிட்டு என்னைக் குறைசொல்லாத.. ஸ்வீட் கார்ன் சாப்பிடு சரியாகிடும்."

  அவள் பதில் ஏதும் சொல்லவில்லை.

  “சுசி.. இந்தா சுசி.."

  சரியான கடவுச்சொல் கிடைத்தபிறகு சொல்பேச்சு கேட்டது சுசியின் முளை.  ஆனால் நான்கு ஸ்பூன் உள்ளே சென்றபிறகு குமட்டிக்கொண்டு வரவே அருகில் இருந்த வாஷ்பேஷனில் வாந்தி பண்ணினாள் சுசி. இதனைப் பார்த்த அருகில் இருந்த நாற்பது வயது பெண்மணி, “அட.. அஜீரணமா பொண்ணு? ஒரு ஆரஞ்சு ஜுஸ் புளிப்பா வாங்கிக் குடி எல்லாம் சரியாகிடும்." என்றார்.

  வயிற்றில் இருந்தது எல்லாம் காலியாகிட ப்ரனவிடம் மெல்ல நடந்து சென்றாள்.
   
  Rabina likes this.
 9. Rabina

  Rabina Well-Known Member

  Joined:
  Aug 14, 2018
  Messages:
  863
  Likes Received:
  544
  Trophy Points:
  93
  Gender:
  Female
  pranav kanavla susiya pada paduthran...
   
  Bala sundar likes this.
 10. jayalashmi

  jayalashmi Active Member

  Joined:
  Nov 12, 2017
  Messages:
  304
  Likes Received:
  246
  Trophy Points:
  43
  Gender:
  Female
  வணக்கம்

  கனவுக்கும் நிஜத்திற்கும் இடையில் ஏற்படும் நல்ல கதை அமைப்பு .
   

Share This Page