டைட்டானிக் கனவுகள் / Titanic Kanavugal By Balasundar

Discussion in 'Serial Stories' started by Tamilsurabi, Feb 18, 2019.

  1. Bala sundar

    Bala sundar Member

    Joined:
    Feb 15, 2019
    Messages:
    44
    Likes Received:
    51
    Trophy Points:
    18
    Gender:
    Female
    Th
    thanks ma
     
  2. Rabina

    Rabina Well-Known Member

    Joined:
    Aug 14, 2018
    Messages:
    804
    Likes Received:
    497
    Trophy Points:
    63
    Gender:
    Female
    nice update
     
  3. Bala sundar

    Bala sundar Member

    Joined:
    Feb 15, 2019
    Messages:
    44
    Likes Received:
    51
    Trophy Points:
    18
    Gender:
    Female
    Episode 25
    ********************************
    நிஜ உலகில்.. ********************************
    ப்ரனவ் அந்த ஐ.சி.யூவில் படுத்திருந்தபோது அருகில் வந்து அவன் முகத்தையே இமைக்காமல் பார்த்துவிட்டுச் சென்றாள் இளவயது நர்ஸ் வாணி.
    ப்ரனவினால் அந்த மருந்துகளின் வாடையில்கூட சுசியின் இதழ் நறுமனத்தை உணர முடிந்தது. அவள் அவனிடம் “யு ஆர் வெரி வெரி சிக் மை ப்ரனவ் பேபி!" என்று கர்வமாகச் சொன்னது நினைவில் வந்தது.


    அவன் ஐ.சி.யுவில் இருப்பதையோ அவனது மருந்து அட்டவணை இல்லாமல் இருப்பதால் செவிலியர்கள் குழம்புவதையோ அவன் அறியவில்லை. ஆனால் அவனை காதலித்த பெண்ணின் “ஐ லவ் யு ப்ரனவ்!" மட்டும் காதில் ஒலித்துக் கொண்டேயிருந்தது.

    “என்ன வயசு இருக்கும் இந்த புள்ளைக்கு?" என்று
    கேட்டவாறே அந்த ஆஸ்பத்திரியின் துப்புரவு பணிசெய்யும் அனந்தம்மாள், நர்ஸ் வாணியிடம் தனது ரிப்போர்ட் கார்டை கொடுத்தார்.
    “எல்லா ரூமும் முடிச்சி அடடென்டர்ஸ்கிட்ட சைன் வாங்கிட்டு வந்திட்டியாக்கா? சரி சரி. நான் மேனேஜ்மென்ட் ஆளுங்கிட்ட கொடுத்திடுறேன்." என்றாள் நர்ஸ் வாணி.


    “அந்த புள்ளக்கு என்ன வயசு?"
    “அந்த பையனுக்கா? இருபத்தி அஞ்சு இருக்கும்ல்ல?"
    “இருக்கும் இருக்கும். பாவம் என்ன ஆச்சோ? தெரியலை. இப்படி ஐ.சி.யூவில் படுத்துக்கிடக்கு. என்ன பிரச்சனையாக இருக்கும்?"


    “வேற என்ன? லவ் ஃபெலியராகத்தான் இருக்கும். சூசைட் பண்ண டிரைபண்ணிட்டு இங்க வந்து படுத்துக்கிடக்கான். அம்மா அப்பாவைப் பத்தி கவலையே படுவது கிடையாது. பொண்ணு ஐ லவ் யூ சொல்லாட்டி நல்லா மப்புல கோபத்தில் வண்டி ஓட்டிட்டு எங்காவது விழுந்து மண்டையை உடைச்சிக்கிடுறாங்க."

    “மருந்து எதுவும் ஏறலையே? ஏன்? ஆளு திடமா இருப்பதால் தப்பிச்சிட்டான் போல?"

    “தப்பிச்சிட்டானா? யாருக்குத் தெரியும். டியூட்டி டாக்டருக்குத்தான் தெரியும்."

    “மயக்கத்தில் இருக்கானா? கோமாவில் இருக்கானா?"

    “அதுவும் டியூட்டி டாக்டருக்குத்தான் தெரியும்கா."

    ****************
    அவனது கனவில்..

    ****************
    ப்ரனவை பேபி என்று சுசி அழைக்க ஆரம்பித்த காரணம் அவளுக்கே தெரியவில்லை. ஆனால் அந்த அந்யோன்யம் அவளுக்கே மிகவும் பிடித்தது. அவனுக்கும் தான்.
    வழக்கம்போல் ருத்ரவ் ஹாலில் உட்கார்ந்திருக்க ப்ரனவ் அவனுடன் சாப்பாட்டு அறையின் நாற்காலியில் சுழன்றுகொண்டே சுசி அடுக்களையில் சமையல் செய்து கொண்டிருப்பதை வேடிக்கை பார்த்தான். அந்த வீட்டில் சாப்பாட்டு அறைக்கும் அடுக்களைக்கும் தொடர்பு இருக்கும். இரண்டுக்கும் நடுவே உள்ள சுவரில் 4 அடியில் சன்னல் போன்ற அமைப்பு இருக்கும். அந்த திறந்த சன்னல் வழியாக அடுக்களைக்குள் நடப்பதை சாப்பாட்டு அறை வழியே பார்க்கலாம்.


    “இன்னைக்கு உன் சமையலா?"
    “ஆமாம் ப்ரனவ். அம்மாவுக்கு முக்கியமான வேலை இருக்காம். டெல்லி வரை போயிருக்காங்க. சுதா அக்கா சாதம் குழம்பு எல்லாம் வச்சிட்டாங்க. நான் சும்மா இந்த மீன் வறுவல் மட்டும் பண்னேன். ஆனால் மீன் வறுவல் நல்லாவே வரலை.. சொதப்பல்.. என்றவாறே கருகிய மீன் துண்டுகளை சாமான் கழுவும் தொட்டியில் கொட்டினாள்.
    “எவ்வளவு விலை தெரியுமா.. அத்தனை மீனும் வேஸ்டாகிடுச்சு.. என்னால் தான் ப்ரனவ்.."

    “நீ இவ்வளவு ஃபீல் பண்ணுவியா?"


    “ஆயிரத்தி ஐநூறு ரூபாய் ப்ரனவ்.. வாவல் மீன்.. எப்போதாவதுதான் கிடைப்பதே.. கொஞ்சம் மீன் குழம்பும் வச்சேன். படு கேவலமாக வந்தது. ஏதாவது ஒரு தப்பு பண்ணிடுறேன். நல்ல மூடில் இருந்தேன். இப்ப எதைப் பார்த்தாலும் கோபம் கோபமா வருது." என்று கோபமாக அவள் கைகளை ஆட்டிப் பேசியபோது அவளது கைபேசி கீழே விழுந்து அதன் பாகங்கள் கழன்று சிதறியது.


    அதனைப் பொறுக்க நினைத்து அவள் ஒரு எட்டு வைத்த போது அருகில் இருந்த நாற்காலியில் இடித்துக் கொண்டாள்.
    ஸ்! ஆ! என்று அவள் கத்துவதைப் பார்த்த ப்ரனவ் அவளது கைகளைப் பற்றி கண்களைப் பார்த்து மெதுவாகப் பேசினான்.

    “சுசி இதைமட்டும் ஞாபகம் வச்சிக்கோ.. ஒண்ணு நமக்கு நல்லா அமையலைன்னா இன்னொன்று சுப்பரா வருப்போகுதுன்னு அர்த்தம். கோபமோ விரக்தியோ நமக்கு உதவி செய்யாது. நல்லா வராததை நினைத்து கவலைப்படாமல் நன்றாக வரப்போகும் விஷயத்தைக் கண்டுபிடிப்பது தான் புத்திசாலித்தனம் சுசி. மீன் குழம்பு நல்லா வரலைன்னா நாளைக்கு நண்டுக் குழம்பு நல்லா வரும் என்று மனதை லேசாக வச்சிக்கோ.. நான் அப்படித்தான் நினைச்சுப்பேன்."

    “ஆனா எவ்வளவு நேரம் இதைச் செய்தேன் தெரியுமா? அதான் மனசு ஆறவே மாட்டிக்குது.."

    “சுசி என்கூட வாயேன்.."


    “எங்க?"

    “வா சொல்றேன்."

    அவளை லிஃப்டிற்குள் தள்ளியவன் ஐந்து என்னும் எண்ணை அழுத்தினான்.
    “மொட்டை மாடிக்கா? நான் வர மாட்டேன்.தனியா இருந்தா நீ என்னை.. என்னை.."
    “கிஸ் பண்ண மாட்டேன். இந்த லிஃப்டின் மேல் சத்தியம்!" (பாவம் அந்த லிஃப்டிற்கு அற்பாயுசு. சீக்கிரமே பேரிச்சம்பழக்கடைக்கு போகப்போகுது. அதன் விதி அப்படி! யார் என்ன பண்ண முடியும் சொல்லுங்க?)

    ****************

    நிஜ உலகில்..


    ****************
    அந்த மிகப்பெரிய ஆஸ்பத்திரியில் வெங்கட்டும் மதனும் வரவேற்பறையில் நின்று பேசிக்கொண்டிருந்தனர்.
    பணத்தைக் கத்தை கத்தையாக எண்ணி கவுன்டரில் கொடுத்துக்கொண்டிருந்தான் வெங்கட். பணம் எண்ணும் மிஷின் வெங்கட்டின் பணத்தையும் எண்ணியது அவன் அருகில் வெறும் மஞ்சள் சரடு மட்டுமே அணிந்து நின்றுகொண்டிருந்த பெண் அளித்த கத்தை நோட்டுகளையும் எண்ணியது. அது ரன் வட்டியில் வங்கியதோ? மீட்டர் வட்டியில் வாங்கியதோ?

    “வெங்கட் அந்த ப்ரனவ் எங்கடா?" என்று வினவினான் மதன்.


    “ஆஸ்பத்திரிக்குப் வரச் சொன்னேன். வந்திருவான்டா."- வெங்கட்.


    “அவன் அம்மா என்கிட்ட அவன் எங்கன்னு கேட்குறாங்க. நீ இன்னும் அவன் வரலைன்னு சொல்ற?"

    “டேய் நான் இங்க ரிஷப்ஷனுக்கு வந்து அரை மணி நேரம் ஆகிடுச்சு. நான் மேலே ஐ.சி.யு வுக்குப் போய் பார்த்திட்டு சொல்றேன். அவன் அங்க வந்திருக்கலாம்ல?ஒருவேளை அவன் ஐ.சி.யு விற்கு வெளியே வெயிட் பண்ணலாம்!"
    “நீ பணத்தைக் கட்டிட்டு வா." என்று அவனை நிறுத்திவிட்டு கிளம்பினான் மதன்.
    ஆனால் ஐ.சி.யுவின் வாசலுக்குச் சென்றவன் அந்த அறையின் கண்ணாடிக் கதவுகள் வழியாக பார்த்தபோது திடுக்கிட்டான்.
    ஐ.சி.யுவின் அறையில் ப்ரனவ் கண்களை இறுக மூடிப் படுத்திருந்தான்.

    ********************************

    அவனது கனவில்..
    ********************************


    “சுசி என்கூட வாயேன்.."

    “எங்க?"

    “வா சொல்றேன்."

    அவளை லிஃப்டிற்குள் தள்ளியவன் ஐந்து என்னும் எண்ணை அழுத்தினான்.
    “மொட்டை மாடிக்கா? நான் வர மாட்டேன். தனியா இருந்தா நீ என்னை.. என்னை.."

    “கிஸ் பண்ண மாட்டேன். இந்த லிஃப்டின் மேல் சத்தியம்!"

    “ப்ரனவ்.."

    “சும்மா இரு சுசி. உன்னை கிஸ் பண்ண மொட்டை மாடிக்குத்தான் நான் கூட்டிட்டு போகணுமா? ருத்ரவ் பாதி நேரம் டி.வி பார்த்திட்டே தூங்கி வழியிறான்.. அந்த நேரத்தில் நான் கிஸ் பண்ண முடியாதா? இப்ப மொட்டை மாடியில் உன்னை கிஸ்பண்ண மாட்டேன். தைரியமா என்கூட நீ வரலாம்."

    “ப்ரனவ்.."

    “சரி சரி.. அந்தப் பேச்சை விடு. சுசி பேச்சை விடு என்று சொன்ன அடுத்த நொடி லிஃப்ட் கதவுகள் திறந்தது.


    “சுசி கீழே பாரேன்.. என்ன தெரியுது?

    “அட எவ்வளவு உயரம்? இந்த ஹைட்டில் இருந்து விழுந்தால் என்ன ஆவது?"

    “யார் தெரியிறா?"

    “தண்ணி வாட்டர்கேன் போடும் பையன் மினி ஆட்டோவில் வந்து இறங்குறான்."

    “அப்புறம்?"

    “நம்ம ஐயர்ன்காரர் இருக்கார்.. காய்கறிவிற்கும் அக்கா இருக்காங்க…"


    “சுசி இந்தப்பக்கம் பாரேன்.."
    என்று மொட்டை மாடியின் மறு பக்கத்திற்கு அழைத்துச்சென்றான்.



    “ஷேர் ஆட்டோகாரன் ஜனம் ஏறுவதற்காக தொண்டைத்தண்ணி வற்ற கத்திட்டு இருக்கான். கீழே அந்த பழவண்டிக்காரன் ஏலம்போட்டு பழத்தை வித்திட்டு இருக்கான். அவுங்களுக்கு நினைச்ச வசூல் தினம் கிடைச்சிடுமா? நிச்சியம் கிடைக்காது. ஆனால் நஷ்டம் அடைஞ்ச மறுநாளும் திரும்ப தொண்டைத்தண்ணி வற்ற கத்துவாங்க.. ஒரு நாள் ஏமாற்றத்தால் லாபம் தரப்போகும் மறுநாளை நாம இழந்திடக்கூடாது சுசி. நீ என்னடான்னா இன்னைக்கு மீன் குழம்பு ஒழுங்க வரலை.. கருவாட்டுக் குழம்பு வைக்கத் தெரியலைன்னு புலம்புற.."



    “அப்புறம் இன்னும் ஒன்று.. நான் மற்றவங்ககிட்ட பொய் பேசினதே கிடையாது. என் அம்மா என்னை அப்படி சின்னதிலிருந்தே வளர்த்திட்டாங்க. மத்தவங்ககிட்ட பொய் சொன்னால்தான் தப்பு. நம்மகிட்ட நாமே பொய் சொல்லிக்கலாம். நீ உன்னிடம் பொய் சொல்லணும்.


    “மீன் குழம்பு அப்படி ஒண்ணும் மோசம் இல்லை.. நல்லாத்தான் இருந்திச்சு.." அப்படின்னு உன்கிட்ட நீயே சொல்லிக்கணும்.. சிரிக்காதடி.. நான் சீரியஸாதான் சொல்றேன்."



    “உனக்கு நீ எப்போதும் நூறு மார்க் கொடுத்துக்கணும். அதில் இருக்கும் கிக் எதிலும் கிடைக்காது
    தெரியுமா? உன்னிடம் நீயே அப்ப அப்ப “குட் ஜாப் சுசி"ன்னு சொல்லிக்கணும். நானெல்லாம் என்கிட்ட ஒரு நாளைக்கு குறைஞ்சது பத்து பொய் சொல்வேன் தெரியுமா? சிரிக்காதடி நிஜமாத்தான். என் ஃப்ரண்ட் வெங்கட்டைவிட நான் தான் சூப்பரா இருக்கேன் என்று கண்ணாடி பார்க்கும்போதெல்லாம் சொல்லிக்குவேன்."
    “அந்தப் பொய்யை நான் உன் ஃப்ரண்டைப் பார்த்ததும் நம்புறேன்.. பத்துப் பொய்யில் வேற ஏதாவது சொல்லு. ஜாலியா இருக்கு கேட்கக் கேட்க.."



    “நான் மட்டும் பி.ஈ படிக்கலைன்னா டாக்டர் சீட் கிடைச்சு இந்நேரம் டெல்லி ஏய்ம்ஸில் வேலை பார்த்திட்டுயிருப்பேன் என்று சொல்லிக்குவேன். அந்த வெள்ளை கோட் மீதும் ஸ்டெத்தெஸ்கோப் மீதும் எனக்கு அலாதிப் ப்ரியம்."


    “இப்பவும் ஒண்ணும் கெட்டுப்போகலை.. ஒரு கோடி உன் கையில் இருந்தால் நம்ம ஆளுங்க உன்னை கூப்பிட்டு மெடிக்கல் சீட் கொடுப்பாங்க. அப்புறம் டெல்லி ஏய்ம்ஸ்தான் போகணுமா? பெட்ரோமாக்ஸ் லைட்தான் வேணுமா? நம்ம மதுரைக்கே ஏய்ம்ஸ் மருத்துவமனை வருதுப்பா.." என்றாள் சிரித்துக்கொண்டே..



    “இப்போதெல்லாம் காலை எழுந்து பிரஷ் பண்ணும்போதே என் கணக்கு ஆரம்பிச்சிடும். இப்பலாம் அது எனக்கு ரொம்பத் தேவைப்படுது." என்றான் அவளது சிரித்த முகத்திலிருந்து தனது கண்களை எடுக்காமல்.
    அவனது கண்கள் மாறுபாடாய் அவளைப் பார்த்ததையும் அவள் கவனிக்கவில்லை. அவன் அவள் பக்கத்தில் மிக நெருக்கமாய் நின்றதையும் அவள் கவனிக்கவில்லை. அரட்டையடிக்கும் போது பொதுவாகவே பெண்களுக்கு கொஞ்சம் சுற்றி இருப்பது மறந்தே போயிடுது.


    “இன்னைக்கு காலையில் நீ பிரஷ் பண்ணும்போது சொல்லிக்கிட்ட பொய் பற்றிச் சொல்லேன்.. ஏய் ஒண்ணே ஒண்ணு சொல்லுப்பா.. ப்ரனவ். இன்டரஸ்டிங்கா சொல்லு.."
    அவளது கைகளைப் பிடித்து இழுத்து அவளை தன் மார்போடு இறுக்கியவன் அவளிடம் ஒன்றும் பேசவில்லை.



    நிசப்தமான அமைதியில் அவள் அவனது செயலினால் திடுக்கிட்டாள்.
     
    Tamilvanitha, HELEN MARY and Rabina like this.
  4. Rabina

    Rabina Well-Known Member

    Joined:
    Aug 14, 2018
    Messages:
    804
    Likes Received:
    497
    Trophy Points:
    63
    Gender:
    Female
    nice update..
     
  5. Bala sundar

    Bala sundar Member

    Joined:
    Feb 15, 2019
    Messages:
    44
    Likes Received:
    51
    Trophy Points:
    18
    Gender:
    Female
    எபி 26


    பாலா சுந்தர்



    “இப்பவும் ஒண்ணும் கெட்டுப்போகலை.. ஒரு கோடி உன் கையில் இருந்தால் நம்ம ஆளுங்க உன்னை கூப்பிட்டு மெடிக்கல் சீட் கொடுப்பாங்க. அப்புறம் டெல்லி ஏய்ம்ஸ்தான் போகணுமா? பெட்ரோமாக்ஸ் லைட்தான் வேணுமா? நம்ம மதுரைக்கே ஏய்ம்ஸ் மருத்துவமனை வருதுப்பா.." என்றாள் சிரித்துக்கொண்டே..


    “இப்போதெல்லாம் காலை எழுந்து பிரஷ் பண்ணும்போதே என் கணக்கு ஆரம்பிச்சிடும். இப்பலாம் அது எனக்கு ரொம்பத் தேவைப்படுது." என்றான் அவளது சிரித்த முகத்திலிருந்து தனது கண்களை எடுக்காமல்.
    அவனது கண்கள் மாறுபாடாய் அவளைப் பார்த்ததையும் அவள் கவனிக்கவில்லை. அவன் அவள் பக்கத்தில் மிக நெருக்கமாய் நின்றதையும் அவள் கவனிக்கவில்லை.

    அரட்டையடிக்கும் போது பொதுவாகவே பெண்களுக்கு கொஞ்சம் சுற்றி இருப்பது மறந்தே போயிடுது.
    “இன்னைக்கு காலையில் நீ பிரஷ் பண்ணும்போது சொல்லிக்கிட்ட பொய் பற்றிச் சொல்லேன்.. ஏய் ஒண்ணே ஒண்ணு சொல்லுப்பா.. ப்ரனவ். இன்டரஸ்டிங்கா சொல்லு.."



    அவளது கைகளைப் பிடித்து இழுத்து அவளை தன் மார்போடு இறுக்கியவன் அவளிடம் ஒன்றும் பேசவில்லை.
    நிசப்தமான அமைதியில் அவள் அவனது செயலினால் திடுக்கிட்டாள்.


    அவனது மார்பினில் தன் நெற்றியை மட்டும் வைத்தாள். அவனது இதயத் துடிப்பு கேட்டது.
    “நாம இப்போ பேசுறது கனவில் நடக்கலை நிஜத்தில் தான் நடக்குதுன்னு தினம் தினம் என்கிட்ட பொய் செல்லிட்டு இருக்கேன்டி.."


    “நிஜமா? நிஜ லைஃபிலும் என்கூட பழக உனக்குப் பிடிக்குமா?"

    தன்னையும் அறியாமல் அவளது கூந்தலை மெதுவாகப் பற்றி அவள் முகத்தை நிமிர்த்தி, “நிஜமா! ரொம்ப ரொம்பப் பிடிக்கும்!"

    அவள் மனதில் இருந்த காதல் கண்களில் குவிய அவன் நிதானம் இழந்தான். பேச்சிழந்தான்.
    இது கனவு. இந்த காதல் நிஜக் காதல் இல்லை. இது சும்மாக்காச்சுக்கு என்று போதித்த போதகன் தான் கற்பித்த பாடத்தில் பெரும்பிழை இருக்கு என்பதனை ஒத்துக் கொண்டான். வெளிப்படையாய் கர்வமின்றி ஒத்துக்கொண்டான் தனது வீழ்ச்சியை.


    “சுசி.."

    “ம்?"

    “ஐ லவ் யூ"

    “இது கனவு ப்ரனவ்!"

    “தெரியும்.. ஆனால் ஐ லவ் யூ!"
    “நாம் வாழ்க்கையில் சேரவே முடியாது ப்ரனவ்!"
    “தெரியும்.. பட் ஐ ஆம் அன்கன்டிஷனலி இன் லவ்வித் யூ இடியட்!"

    “மீ டூ ப்ரனவ!"

    “சுசி"

    “ம்!"

    “தனுஷை எனக்கு கண்டிப்பா பிடிக்கணுமா?"

    “தனுஷை எனக்கு மட்டும் பிடிச்சா போதும். ஆனா அவனைவிட இப்பயெல்லாம் இன்னொரு இடியட்டைத்தான் பிடிக்குது. ஆனா அவன் அப்படி ஒன்னும் தனுஷைவிட அழகெல்லாம் இல்லை. ஆனாலும் இப்பயெல்லாம் அவனைத்தான் பிடிக்குது!"

    “யாருடி அது?" என்று சிரித்துக்கொண்டே கேள்வி கேட்டான் பதிலைத் தெரிந்துகொண்டேதான்.
    “அவன் ரொம்ப பெரிய பொறுக்கி தெரியுமா?"

    “ஓ!"

    “ஆமா ப்ரனவ்.. இருபது கோடி பொண்ணுங்க இருக்கும் தமிழ்நாட்டில் நான்தான் அவன் கனவில் வரணும் என்று அடம்பிடிச்சி என்னை பொறுக்கி எடுத்திருக்கான்.

    அப்படிப்பார்த்தா அவன் பெரிய பொறுக்கிப்பயல்தானே?" என்று கூறி கலகலவென சிரித்தாள்.
    “சுசி" என்று ரம்மியமாய் அவளை அழைத்து அவளை இறுக அணைத்தான் தன்னையறிந்தே.
    அடுத்த நிமிஷம் அவளிடம் இருந்து பிரிந்து நின்று அவள் கண்களைப் பார்த்துச்சொன்னான்..


    “சுசி நான் முதல் முதலா என்கிட்ட பொய் பேசாமல் மற்றவங்ககிட்ட பொய் பேசிட்டேன். நான் உன்கிட்ட பொய் பேசிட்டேன்."

    “உன்னை இங்க கூட்டிட்டு வரும்போது கிஸ் பண்ண மாட்டேன் என்று சொன்னேனே?"

    “அது?"

    “அதுதான் நான் விபரம் தெரிந்து சொன்ன முதல் பொய்யாகப்போகுது."

    “அப்படியா?"

    “அப்படித்தான!" என்று அவள் இதழில் மூழ்கினான்.


    அவன் நிமிர்ந்தபோது “இந்தப் பொய் அழகா இருக்குல்ல?" என்று இருவருக்கும் பொதுவாக கேட்டான்.


    அதன்பிறகு அங்கே சிரித்த இரண்டு காதல் பறவைகளும் காதல் செய்தனர் மிக மிக அழகாக. காதல் தான் செய்தனர்.. காமம் தவிர்த்து காதல் மட்டும் செய்தனர்.

    ****************
    நிஜ உலகில்..
    ****************
    மதன் வேகமாக தனது கைபேசியின் எண்களை அழுத்தினான். கைபேசி தனது வேலையைச் சரியாகச் செய்தது. “மச்சி ப்ரனவ் இங்கதான்டா இருக்கான். ஐ.சி.யுவில்தான் இருக்கான்." என்றான் பதட்டமாக.
    “அதான் நான் சொன்னேன்ல? அவன் அங்கதான் போயிருப்பான் என்று? சரி நீ அங்கயே இரு. நான் பணத்தைக் கட்டிட்டு வந்திடுறேன்."
    “டேய் அவன் ஐ.சி.யு விற்கு வெளியே வெயிட் பண்ணலை. ஐ.சி.யுவில் ஒரு பெட்டில் அட்மிட் ஆகியிருக்கான்."

    “என்ன?விளையாடத மதன். இது விளையாடும் விஷயம் இல்லை."
    “ஆமாம்டா. நான் விளையாடலை. ஐ ஆம் டெட் சீரியஸ்!"

    “சரி நீ அங்கயே இரு. நான் இரண்டு நிமிஷத்தில் வந்திடுறேன்."

    வெங்கட் சொன்னபடியே இரண்டு நிமிடத்தில் வந்த வெங்கட் தன் கண்களால் கண்ட காட்சியை நம்பாமல் பித்துபிடித்தவன் போல் ஆனான். கண்களில் இருந்து கொட்டிய கண்ணீரை துடைத்தவாறே அருகில் வந்த நர்சிடம் கேட்டான் “மேடம்.. அந்த.."

    “சார். உங்க அம்மாவையும் அப்பாவையும் இப்பதான் நார்மல் வார்ட் மாத்தினோம். நான் வெளியே போயிருந்தேன். இப்பதான் வந்தேன். உங்க ரிலேட்டிவ் அவுங்ககூட இவ்வளவு நேரம் பேசிக்கிட்டுயிருந்தாங்க. அவுங்களுக்கு எங்ககிட்ட கேட்டு ஆரஞ்சு ஜுஸ்கூட வாங்கிக்கொடுத்தாங்க. உங்க அம்மாவும் அப்பாவும் கெஸ்டைப்பார்த்ததும் எழுந்து உட்கார்ந்திட்டாங்க.
    டியூட்டி டாக்டர் கரெக்டா அந்த நேரம் வந்தாரா.. உடனே அவுங்க இம்புரூவ்மென்ட் பார்த்திட்டு நார்மல் வார்டுக்கு மாத்திட்டார். பிரஷர் மட்டும் கண்கானிக்க சொல்லியிருக்கார். உங்க ரிலேடிவ் வந்த நேரம்தான் எல்லாம் சார்."

    “அம்மாவை பத்திக் கேட்கலை.. அந்த பெட்டில் ஒருத்தன் படுத்திருக்கானே?"

    “எந்த பெட்?"

    “அம்மா இருந்த பெட்டுக்கு பக்கத்து பெட்?"

    “யாரு.. இருங்க பார்த்திட்டு சொல்றேன்."

    “பாருங்க சிஸ்டர். கொஞ்சம் சீக்கிரம் கேட்டுச் சொல்லுங்க."

    உள்ளே சென்று ப்ரனவை பார்த்த நர்ஸ் அடுத்த நிமிடம் மிகுந்த சத்தத்தில் “சார்!" என்றார்.

    ஆனால் இவர்களது அதிர்ச்சியைப் பற்றித் தெரியமாலே அந்த கட்டிலில் கண்மூடிப் படுத்திருந்தான் ப்ரனவ்.
    *********************
    அவனது கனவில்..
    **********************
    கனவில் ப்ரனவும் சுசியும் தங்கள் காதலைச் சொல்லி பத்து நாட்கள் கடந்திருந்தன. காதல் என்றால் என்ன? என்று இரண்டு பக்க கட்டுரைப் போட்டி வைத்தால் இருவருமே ஜெயித்துவிடுவார்கள். பத்து நாட்களில் இருவருக்கும் காதலும் சிரிப்பும் அளவுக்கு அதிகமாகவே கிடைத்தது.


    ப்ரனவ் அவளுக்காக அவன் அம்மா செய்த தக்காளிச் சட்டினியை கொண்டு வந்திருந்தான். ஐந்து இட்லியும் சேர்த்து பொட்டலம் கட்டிக் கொண்டு வந்திருந்தான்.
    நான்கு இட்லி அவள் வயிற்றுக்குள் போய்விட்டது.

    ஐந்தாவது இட்லி வேண்டுமா வேண்டாமா என்று தன்னுள்ளே அவள் தர்க்கம் செய்த நேரம் ப்ரனவிடம் காட்டவேண்டி பழமுதிர்ச்சோலை கடையில் வாங்கிய ஸ்டராபெரி பழங்களை தனது கைப்பையில் போட்ட ஞாபகம் அவளுக்கு வந்தது.
    “ப்ரனவ் அந்த ஹேன்ட் பேக்கை எடுத்துக் கொடேன்.."


    “ஏன் நீ எடுக்க மாட்டியா? நான் கேம் விளையாடுறது தெரியலையா? எடு சுசி.."


    “ப்ளீஸ் ப்ரனவ்.. நான் எவ்வளவு தள்ளி இருக்கேன். நீ தான் என் ஹேன்ட் பேக் பக்கத்தில் இருக்க..ஹேன்ட் பேக் கைக்கு எட்டும் தூரத்தில் இருக்க.. உனக்குதான் ஒண்ணு காட்டணும்!"


    “நான் அதை அப்புறம் பார்க்குறேன். எழுந்து இரண்டு எட்டு எடுத்து வை, அப்போ உன் கைக்கு எட்டும் தூரத்தில் ஹேன்ட் பேக் வந்திடும்."
    “ப்ரனவ் நீ திமிர் பிடித்தவன் தெரியுமா? யாராவது உன்கிட்ட இந்த உண்மையை சொல்லியிருக்காங்களா?"

    அவன் இல்லை என்று தலையை மட்டும் ஆட்டிச் சொன்னபடியே கைபேசித்திரையை வெறித்துக்கொண்டிருந்தான்.


    தள்ளு என்று அவனை இடித்துத் தள்ளிவிட்டு அவனிடம் ஒரு அடியும் வாங்கிக்கொண்டு தனது கைப்பையை எடுக்க சுசி குனிந்தாள்.


    அவனை இடித்துக்கொண்டு அவளை உரசிய இன்பத்தில் லயித்திருந்தான் அந்த கள்ளுளி மங்கன்.


    கண்களை மூடி அந்த நொடியை ரசித்தான். அவள் நிமிரும்முன் கண்களைத் திறந்து கைபேசித்திரையில் கண் வைத்தான்.ஆனால் அவள் தேகம் தான் கைபேசியின் திரை இருக்கவேண்டிய இடத்தில் அவனுக்குத் தெரிந்தது. அவனது உள்ளங்கைக்குள் அவள். அவள் தேகத்தை ரசித்தான். அவனது விரல்கள் அட்டூழியம் செய்தது. கனவு தானே தப்பில்லை என்றது அவன் மனசாட்சி.


    அவள் நிமிர்ந்த நொடியில் ஐந்து நிமிடங்களுக்கு முன்பாக உள்ளே செலுத்திய தக்காளிச் சட்டினி சிறு குடலில் இருந்து தொண்டைவரை வந்து புரையேறியது.


    புளிப்பும் காரமும் சேர்ந்து புரையேறி மூக்கிலும் தொண்டையிலும் எரிச்சலை உண்டு பண்ணியது. சட்டென்று வாயை மூடிக்கொண்டாள்.
    அருகில் இருக்கும் பெண்ணின் சிறு அசைவை கண்டுபிடிக்கவில்லை என்றால் அந்த பெண்ணின் அருகில் இருப்பது நிச்சயம் ஒரு ஆணாக இருக்க முடியாது என்பது பலரது கணிப்பு.


    “என்ன புரையேறிடுச்சா?" என்று கணிப்புகளை பொய்யாக்காமல் அக்கரையாய் விசாரித்தான் ப்ரனவ். “இல்லையே!
    ெஒண்ணுமில்லை."

    அதானே.. டயட்டில் இருக்கிறேன் என்று பீற்றிக்கொள்ளுபவள் “ஐந்து இட்லியும் தக்காளிச் சட்டினியும்" கதையைச் சொல்வாளா? ஹும் ஹும். கனவில் கூட நடக்காத விஷயம். அதனால்தான் அது ப்ரனவ் கனவிலும் நடக்கவில்லை.


    “என்ன புரையேறுச்சு? தக்காளிச் சட்டினியா?
    “அதான் ஒண்ணுமில்லை என்று சொல்லிட்டேன் தானே? சும்மா தொண தொணன்னுட்டு.."


    “சுசி நீ நாக் அவுட் ஆகிட்ட. நான் கண்டு பிடிச்சிட்டேன். அந்த தக்காளிச் சட்டினிதான புரையேறியது?. நல்லா எரியுமே தொண்டையும் மூக்கும்? போய் தண்ணி குடி.. ம் ம்.. சொல்றது கேட்குதா? கேட்கலையா?"


    “அதான் ஒண்ணுமில்லை என்று சொல்லிட்டேன்ல்ல?" அதற்கு மேல் அவளிடம் தனது அறிவுரைகளை வழங்காமல் போக்கிமேனைத் (pழமநஅயn) தொடர்ந்தான். ப்ரனவிடம் ஒண்ணுமில்லை என்று சொல்லிவிட்டு அமைதியாக உட்கார்ந்திருப்பது பெரும் சாவலாக இருந்தது.

    கண்ணில்கூட எரிச்சல் வந்தது. கண்களில் எரிச்சல் மிகுதியால் கண்ணீர் வந்தது. இதற்குமேல் முடியாதடா சாமி என்று தண்ணீர் குடித்திட முடிவு செய்தாள்.
    இப்போது இவன் முன்னால் தண்ணீர் குடித்தால் “நான் அப்பவே சொன்னேன்ல்ல" என்று கேலி செய்வான் என்று மனதில் தோன்றிய காரணத்தால் சில நிமிடங்கள் அமைதியாக இருந்தாள். பிறகு செயலில் இறங்கினாள்.
    “என்னமோ அடுப்பில் வச்சேனே? என்ன? கருகின வாசம் வருதுல்ல ப்ரனவ்? "
    “இல்லையே? உனக்கு வருதா?"
    “ஆமா நல்லாவே தெரியுது. ஏன்? உனக்குத் தெரியலையா? என்ன மூக்கோ உன் மூக்கு?"
    “அதான் ஒண்ணும் இல்லை என்று சொல்றேன்ல்ல. பக்கத்து ப்ளாட்டில் ஏதாவது பாத்திரம் அடுப்பில் பிடிச்சுப் போயிருக்கும்."
    அவள் அவனைப் பார்த்து முறைத்தாள்.


    “தீஞ்ச வாசனை நல்லா வருது. இதுகூட கண்டுபிடிக்கத் தெரியலை? நீ உன் போக்கிமானை தேடிட்டே இரு. நான் பார்த்திட்டு வந்திடுறேன்." என்றவள் முகத்தில் சிறிதும் கோபம் இல்லாமல் அவனை நோக்கி மென்மையாய் புன்னகை செய்து எழுந்து சென்றாள்.

    சிறு புன்னகையில் அவனை கைது யெ்தாள்...
     
    Tamilvanitha and Rabina like this.
  6. Rabina

    Rabina Well-Known Member

    Joined:
    Aug 14, 2018
    Messages:
    804
    Likes Received:
    497
    Trophy Points:
    63
    Gender:
    Female
    nice ud
     
    Bala sundar likes this.
  7. Tamilvanitha

    Tamilvanitha Well-Known Member

    Joined:
    Dec 26, 2017
    Messages:
    471
    Likes Received:
    324
    Trophy Points:
    63
    Gender:
    Female
    Nice story
     
    Bala sundar likes this.
  8. Bala sundar

    Bala sundar Member

    Joined:
    Feb 15, 2019
    Messages:
    44
    Likes Received:
    51
    Trophy Points:
    18
    Gender:
    Female
    Episode 27

    அவள் அவனைப் பார்த்து முறைத்தாள். “தீஞ்ச வாசனை நல்லா வருது. இதுகூட கண்டுபிடிக்கத் தெரியலை? நீ உன் போக்கிமானை தேடிட்டே இரு. நான் பார்த்திட்டு வந்திடுறேன்." என்றவள் முகத்தில் சிறிதும் கோபம் இல்லாமல் அவனை நோக்கி மென்மையாய் புன்னகை செய்து எழுந்து சென்றாள்.



    அவள் வேகமாக அடுக்களைக்குள் சென்றதுகூட அவனுக்குச் சந்தேகம் அளிக்கவில்லை. ஆனால் அவன் அடுக்களைக்குள் சென்று அவளுக்கு உதவி செய்யாமல் இருந்த போதும், அவள் முகத்தில் கடகளவுகூட கோபம் கொப்பளிக்காமல் இருந்ததுதான் சந்தேகம் அளித்தது.

    காரணம் யோசித்தவனுக்கு அரை நாழிகையில் விடை கிடைத்தது.
    உள்ளே சென்றவள் இரண்டு நிமிடத்தில் வெளியே வந்தாள். “உள்ளயிருந்து வாசனை வரலை ப்ரனவ். இங்கதான் ஏதோ.. ஏதோ வாசம் மட்டும் வருது. ஓ அப்போது ஐயர்ன் பாக்ஸ் யூஸ் பண்னேன் அதான் இந்த வாசனை.
    நல்லவேளை அடுப்பில் எதுவும் இல்லை." என்றவள் அவளது புத்தகங்களை எடுத்துக்கொண்டு உட்கார்ந்து கொண்டாள்.




    சிறு குடல் முழுதும் நிரம்பிய தண்ணீரால் சின்னதாய் ஏப்பம் ஒன்றும் வெளி வந்தது. தம்கட்டி ஏப்பத்தை மறைத்தாள்.
    அவசரம் அவசரமாய் அவள் குடித்த தண்ணீர் உதடுகளை நணைத்திருந்தது.
    இதனை கவனிக்காமல் இருப்பது எவ்வளவு பெரிய மடையனாலும் முடியாத காரியம்.


    தொண்டையின் எரிச்சல் அடங்க தண்ணீரை வயிறு முழுதும் நிரப்பிக் கொண்டதால் அவளுக்கு வந்த திக்கு முக்காடலில் அவள் லேசாய் மூச்சுவாங்கிக் கொண்டிருந்தாள்.
    இதனை கவனிக்காமல் இருப்பது எவ்வளவு பெரிய மங்குனி மடையனாலும் முடியாத காரியம்.
    தனது கைபேசியை அணைத்துவிட்டு ஃப்ரிஜிற்குள்ளிருந்து குளிர்ச்சியான நீரை பாட்டிலில் பருகியபடி அவளிடம் விபரம் சொன்னான், “காலையிலே எனக்கு பயங்கரமா புரையேறுச்சு சுசி.
    இட்லியோடு தக்காளிச் சட்டினியை கன்னா பின்னான்னு உள்ளே அமுக்கினேனா.. சாப்பிட்ட கொஞ்ச நேரத்தில் புரையேறிடுச்சு.. அடுப்படியில் இருந்த என் அம்மாக்கு புரையேறிய சத்தம் எப்படிக் கேட்டுச்சோ எனக்குத் தெரியாது. உடனே என்கிட்ட வந்து என் தலையை தட்டிக் கொடுத்தாங்க. எப்படித் தெரியுமா? இப்படிதான்!" என்று சுசியின் தலையில் நன்றாகவே நாலு தட்டு தட்டினான்.



    “அப்பதான் என்னோட மூக்கில் எரிச்சல் கொஞ்சம் குறைந்தது. அப்புறம் ஜில்லென்று ஐஸ் வாட்டர் எடுத்திட்டுவந்து என் வாயைத் திறக்கச்சொல்லி அவுங்களே ஒரு டம்ளர் தண்ணீரையும் குடிக்க வச்சாங்க எப்படித் தெரியுமா?"

    “இப்படித்தான்" என்று கையில் வைத்திருந்த குளிர்ந்த நீரை அவள் முகவாயை பிடித்து வாயைத் திறக்க வைத்து ஊற்றினான்.



    குளிர்ந்த நீரை அவள் மறுக்கவில்லை. குளிர் நீரும் தேவைப்பட்டது. அவன் அரவணைப்பும் தேவைப்பட்டது. அவளது டெடி பியர் அவளுக்கு குளிர் நீர் புகட்டிடுமா என்ன? சமையல் செய்யும் சுதா அக்காவுக்கு அவளிடம் இப்படி ஒரு வழியிருக்கு என்று சொல்லிடத்தான் நேரம் இருக்குமா? ஷோ கேஸின் சாமான்களை துடைக்கும்போது அதனை உடைத்திடாமல் துடைக்கணுமே என்ற கவலை தான் அவர் ஞாபகத்தில் முதலில் இருக்கும்.


    எந்நேரமும் சன் மியூசிக் சானலின் பாடலைப் பாடிக் கொண்டிருக்கும் அவள் வீட்டு நாற்பது இன்ச் தொலைக்காட்சி பெட்டிக்கு அவளுக்கு புரையேறினால் என்ன கவலை? அவள் அப்பத்தாவிற்கு புரையேறினால் என்ன கவலை?
    ஏதோ நினைத்து சுசியின் கண்கள் கலங்குவதை பார்த்த ப்ரனவ் அவளிடம் அடுத்து எப்படிப் பேச வேண்டும் என்பதை தெரிந்து கொண்டான். அவளின் மனக்கலக்கத்தை உணர்ந்தவன் தனது உரையாடலை கொஞ்சம் கொஞ்சலாக மாற்றினான்.


    “அப்புறம் சுசி .. என் நெஞ்சு எரியிதான்னு அம்மா கேட்டாங்களா.. நானும் ஆமான்னு சொன்னேனா.. உடனே என் நெஞ்சில் கைவைத்து அழுத்தி தேய்ச்சிவிட்டாங்களா எரிச்சல் போயே போயிடுச்சு. அது எப்படின்னா.. உன் காதைக் கொடு சொல்றேன்! "
    இப்போது அவளது கண்ணீரை முந்திக்கொண்டு வந்தது சிரிப்பும் வெட்கமும்!

    ********////******
    நிஜ உலகில்..
    ********////******

    “எந்த பெட்?" என்று நர்ஸ் கேட்டதற்கு
    “அம்மா இருந்த பெட்டுக்கு பக்கத்து பெட்." என்று பதில் சொன்ன வெங்கட் இதயம் வேகமாக இயங்கியது.
    “யாரு.." இருங்க பார்த்திட்டு சொல்றேன்.


    “பாருங்க சிஸ்டர். கொஞ்சம் சீக்கிரம் கேட்டுச் சொல்லுங்க." என்று வெங்கட் பரபரத்தான்.

    உள்ளே சென்று ப்ரனவை பார்த்த நர்ஸ் அடுத்த நிமிடம் மிகுந்த சத்தத்தில் “சார்!" என்றார்.

    சார் என்று அலறிய வேகத்தில் அந்த நர்ஸ் வெங்கட் பக்கம் திரும்பினார். “என்ன ஆச்சு?" என்று கவலையுடன் கேட்ட வெங்கட் இருதயம் ஒரு நிமிடம் நிறுத்தித்துடித்தது.

    “சார் இது தான சார் உங்க ரிலேடிவ்? இவர்தான் உங்க அம்மாவுக்கும் அப்பாவுக்கும் ஆரஞ்சு ஜுஸ் வாங்கிக் கொடுத்தார். இப்ப பத்து நிமிஷத்திற்கு முன்னாடிதான் என்கிட்ட பேசிட்டு இருந்தார். இவர் எப்படி சார் ஐ.சி.யு வில்?"

    “உங்க கூட பேசிட்டு இருந்தானா?"

    “ஆமா சார். உங்க அம்மாவையும் அப்பாவையும் ஷிஃப்ட் பண்ணுவதைப் பத்தி பேசிட்டு இருந்தோம். ஷிஃப்ட் பண்ண இன்னும் அரை மணி நேரம் ஆகும் ஏதாவது காஃபி சாப்பிட்டு வாங்க என்று நான்கூட சொன்னேன்னே!"

    மதன் உடனே ஐ.சி.யுவின் உள்ளே சென்றான். ப்ரனவைத் தட்டி எழுப்பினான்.

    “டேய் ப்ரனவ்.. ப்ரனவ்.." ப்ரனவ் கண்களைக் கசக்கி எழுந்தான். சுற்றும் முற்றும் பார்த்தான். அவனைச் சுற்றி நண்பர்கள் நின்றுகொண்டிருந்தனர். தனது கட்டிலுக்கு அருகில் இருந்த கட்டிலைப் பார்த்தான்.


    “என்னடா மதன்? எதுக்கு எழுப்பின? அம்மாவையும் அப்பாவையும் நார்மல் வார்ட் மாத்திட்டாங்களா?" என்று தூக்க கலக்கத்தில் பேசியவன் அவர்கள் முகத்தில் கோபம் ருத்ரவதாண்டவம் ஆடுவதை கவனிக்கவேயில்லை. அவன் தான் சுசியிடம் கனவில் ஜல்சா செய்து கொண்டிருந்தானே? இதையெல்லாம் அவன் புறக்கண்ணுக்குத் தெரியுமா என்ன?

    “டேய் எருமை.. எதுக்குடா இங்க வந்து படுத்துக்கிடக்க? "

    “எருமை" என்று மதன் தாய்மொழியில் திட்டியதும் தான் சுரணையே வந்தது ப்ரனவிற்கு.


    “ஏன் இங்க வந்து படுத்தேனா? ஆஸ்பத்திரியாடா இது? ஒரே கூட்டம். வெளியே தரையில் பத்து பேர் படுத்திருக்கான். எங்க திரும்பினாலும் ஒரே மருந்து வாடை. இங்கதான் நாலு பெட்டும் ஃபிரீயா இருந்திச்சு. உங்க அம்மாகூட பேசிட்டே இருந்தேனா.. தூக்கம் வந்திடுச்சு அதான் பேசாமல் இங்க படுத்து கனவு காணலா.." என்று ஏதோ சொல்ல வந்ததை பாதியில் நிறுத்தினான் ப்ரனவ்.


    “உன்னை இங்க பார்த்ததும் பயந்தே போயிட்டோம்டா.. எருமை. அங்க பாரு வெங்கட்டை! அவன் அழுதிட்டு இருக்கான்." வெங்கட் ஒரு ஓரத்தில் நின்று அழுவதைப்பார்த்த ப்ரனவிற்கு தான் செய்த தவறு புரிந்தது. அவனருகே சென்றான்.


    “டேய் மச்சி பயந்திட்டியா?" வெங்கட் ஒன்றும் பேசாமல் கதவைப் பிடித்துக்கொண்டு தரையை வெறித்துக் கொண்டு நின்றான்.


    “டேய்.. ஒரு குட்டித் தூக்கம் போடலாம்ன்னு.."

    வெங்கட் ஒண்ணும் பேசலை.
    “பேச மாட்டியா.. போ.. உன் பர்ஸை மட்டும் கொடு. என் பர்ஸை மறந்திட்டேன். இந்த ஹாஸ்பிட்டலில் ஒரு ஆரஞ்சு
    ஜுஸ்கூட லெமன் ஜுஸ் மாதிரி இருக்கு. ஜுஸ்கூட பேஷன்டுக்கு கொடுக்கிற மாதிரி கொடுக்கிறான். நான் வெளியே போய் ஒரு மாதுளை ஜுஸ் வாங்கிக் குடிக்கப்போறேன். குடுடா பர்ஸை!"

    “போடா.. போய் வெளில புல்லை மேய்ஞ்சிட்டு வா!"

    “சொல்லுவடா சொல்லுவ.. காலையில் பல்லை மட்டும் தேய்ச்சிட்டு உனக்காக வேகமா வண்டி ஓட்டிட்டு வந்தேன்ல? இதுவும் சொல்லுவ இன்னமும் சொல்லுவ."

    “உனக்கு எப்ப ஃபோன் பண்னேன்? இப்ப வந்து நிற்கிற? "
    “டேய் வண்டியில் வேகமா வந்து டிராஃபிக் போலிஸ்கிட்ட மாட்டிக்கிட்டேன்டா!"

    “அப்புறம்?"

    “அப்புறம் என்ன? அவர் பனிஷ் பண்ணாரு நானும் பனிஷ்மென்ட்டை ஏத்துக்கிட்டேன்."

    “என்னடா பனிஷ்மென்ட்?"

    “இங்க பாரு." என்று தனது மணிக்கட்டைக் காட்டினான்.
     
    HELEN MARY, Kavyakeerthi and Rabina like this.
  9. Rabina

    Rabina Well-Known Member

    Joined:
    Aug 14, 2018
    Messages:
    804
    Likes Received:
    497
    Trophy Points:
    63
    Gender:
    Female
    ena punishment. thookam vantha icu laya poi thoonguva pranav ithula kanavu vera...
     
  10. Kavyakeerthi

    Kavyakeerthi Active Member

    Joined:
    Oct 15, 2018
    Messages:
    176
    Likes Received:
    115
    Trophy Points:
    43
    Kanavu kana icu kulla poi paduthitana .funny guy..
     

Share This Page