ட்விட்டர் சர்வே: தீபாவளி போனஸ் உங்கள் திட்டம் என்ன?

Discussion in 'Memes and Funny Videos - Daily Updates' started by NATHIYAMOHANRAJA, Nov 2, 2018.

 1. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  2,213
  Likes Received:
  74
  Trophy Points:
  48
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  தீபாவளிப் பண்டிகையை ஒட்டி போனஸ் கிடைத்தால் என்ன செய்வீர்கள் என நாணயம் ட்விட்டரில் ஒரு சர்வே நடத்தி னோம். இந்த சர்வேயில் கலந்துகொண்டவர்களில் 27% பேர் பொருள்களை வாங்கப் போவதாக சொல்லியிருக்கிறார்கள். ஒவ்வொரு தீபாவளிக்கும் கிடைக்கும் போனஸைக் கொண்டு ஒவ்வொரு பொருளாக வாங்குவது நல்ல விஷயம்தான்.
  [​IMG]
  போனஸாகக் கிடைக்கும் தொகையை முதலீடு செய்யப் போவதாக 19% பேர் சொல்லியிருக்கிறார்கள். போனஸாகக் கிடைக்கும் பணத்தில் கொஞ்சம் தங்கம் வாங்கலாம்; குழந்தையின் பள்ளிப்படிப்புக்கான கட்டணத்தைக் கட்ட மியூச்சுவல் ஃபண்டில் போட்டு வைக்கலாம். நல்ல பங்கைக்கூட வாங்கப் பயன்படுத்தலாம். போனஸ் பணத்தைக்கொண்டு முதலீடு செய்வது நல்ல விஷயமே.

  ஆனால் 54% பேர், கடனை அடைக்க போனஸ் பணத்தைப் பயன்படுத்தப் போவதாகச் சொல்லியிருக்கிறார்கள். போனஸ் என்பது நமது உழைப்பின் பலனாகக் கிடைக்கும் தொகை. இந்தப் பணத்தைக் கடனை அடைக்கப் பயன்படுத்துவது குடும்பத்தின் மகிழ்ச்சியைக் குலைப்பதாக இருக்கும். புதிதாகக் கடன் வாங்காமல் இருக்கவும், ஏற்கெனவே இருக்கும் கடனைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைக்கத் திட்டமிட்டுச் செலவு செய்வதும்தான் கடனிலிருந்து தப்பிக்கும் வழிகள் ஆகும்.
  அடுத்த தீபாவளிக்காவது போனஸ் தொகையைப் பொருள் வாங்கவோ அல்லது முதலீடு செய்யவோ பயன்படுத்துவோம்!

  - ஏ.ஆர்.கே
   

Share This Page