தண்ணீர் சிறந்த மருந்து

Discussion in 'General Health Tips' started by NATHIYAMOHANRAJA, Jun 19, 2019.

  1. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    6,170
    Likes Received:
    503
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    உடல் எடையைக் குறைக்கும் சோம்பு நீர்


    உடல் எடையைக் குறைக்க பலரும் பல செயல்களைப் பின்பற்றி இருப்பார்கள். இருப்பினும் எவ்வித பலனும் கிடைத்த பாடில்லை. ஆனால் சமையலில் பயன்படுத்தும் மணமிக்க உணவுப் பொருளான சோம்பு, உடல் எடையைக் குறைக்க இது எவ்வாறு உதவுகிறது. அதிலும் அதனை தண்ணீருடன் சேர்த்து குடித்து வந்தால், உடல் பருமன் குறையும். மேலும் ஆயுர்வேத மருத்துவத்தில் உடல் பருமனை குறைக்க சோம்பு தண்ணீர் பரிந்துரைக்கப்படுகிறது. ஏனெனில் உடலை சுத்தப்படுத்த தேவைப்படும் மெட்டபாலிசம் எனும் வேதியியல் பரிமாற்றத்தை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் சோம்பில் அதிக அளவில் உள்ளது. அதனால் சோம்பு தண்ணீர் பருகி உடல் எடையை குறைக்கலாம்.

    மெட்டபாலிசத்தை அதிகரிக்கும்


    சோம்பு தண்ணீர் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, உடலில் உள்ள கலோரிகள் மற்றும் கொழுப்புக்களை எரித்து, உடல் எடையைக் குறைக்க உதவும்.

    பசியை அடக்கும், இரத்த சுத்தம்


    அளவுக்கு அதிகமாக பசி எடுத்தால், அதனை குறைப்பதற்கு பலரும் கண்ட கண்ட மாத்திரைகளை வாங்கி போடுவார்கள். ஆனால் சோம்பு தண்ணீரைக் குடித்து வந்தால், அது இயற்கையிலேயே பசியை அடக்கும். இதனால் கண்ட கண்ட உணவுகளை சாப்பிடாமல் இருக்கலாம். சோம்பு தண்ணீர் இரத்தத்தில் உள்ள அதிகப்படியான யூரிக் ஆசிட்டுகளை வெளியேற்றி, இரத்தத்தை சுத்தப்படுத்தும்.

    டாக்ஸின்களை வெளியேற்றும்


    தற்போதைய காலத்தில் கண்ட உணவுப் பொருட்கள், காற்று மாசுபாடு, காஸ்மெடிக் பொருட்களால், டாக்ஸின்களானது பல வழிகளில் உடலில் நுழைகிறது. ஆனால் சோம்பு தண்ணீர் குடித்து வந்தால், அவை உடலில் இருந்து டாக்ஸின்களை முற்றிலும் வெளியேற்றி, சிறுநீரகங்களில் பிரச்சனை ஏற்படுவதைத் தடுக்கும்.

    தூக்கத்தை சீராக்கி புத்துணர்ச்சியை வழங்கும்


    தினமும் காலையில் காபி குடிப்பதற்கு பதிலாக, சோம்பு தண்ணீரைக் குடித்து வந்தால், மூளை நன்கு சுறுசுறுப்புடனும், புத்துணர்ச்சியுடனும் செயல்படும். சோம்பு தண்ணீர் மெலடோனின் என்னும் மூளையில் பிட்யூட்டரி சுரப்பியால் சுரக்கப்படும் நேச்சுரல் ஹார்மோனை சீராக உற்பத்தி செய்து, நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெற வழிவகுக்கும். இதன் மூலம் ஆரோக்கியமான உடல் எடையைப் பராமரிக்கலாம்.

    சோம்பு தண்ணீர் செய்முறை


    1 லிட்டர் தண்ணீரை நன்கு கொதிக்க விட்டு இறக்கி, அதில் 2 டேபிள் ஸ்பூன் சோம்பை சேர்த்து அறை வெப்பநிலையில் குளிர வைத்து பின் தினமும் குடித்து வர வேண்டும்.
     
  2. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    6,170
    Likes Received:
    503
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    வெந்நீரே... வெந்நீரே...


    இட்ஸ் ஹாட்!

    குளிர் காலத்தில் வெறும் வெந்நீரே அமிர்தமாகத் தெரியும். குடிக்க இதமானது மட்டுமின்றி, ஆரோக்கியத்துக்கும் உதவக்கூடியது இது. நாம் அறியாத வெந்நீரின் பயன்களையும் பட்டியலிடுகிறார் சித்த மருத்துவர் இந்திராணி...

    தினமும் காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் அரை லிட்டர் வெந்நீர் குடித்து வருவது நல்லது. பெரும்பாலான நோய்களுக்கு காரணம் மலச்சிக்கல். காலையில் வெந்நீர் குடிப்பவர்களுக்கு வயிற்றில் உள்ள தேவையற்ற நச்சுக் கழிவுகள் வெளியேறிவிடும். இரவில் படுப்பதற்கு முன் வெந்நீர் குடித்தாலும் வாயுப்பிடிப்பு, புளித்த ஏப்பம் ஆகிய பிரச்னைகள் ஏற்படாது.

    சுக்கு, மிளகு, பனங்கற்கண்டு, சீரகம் போட்டு தண்ணீரை கொதிக்க வைத்து குடித்து வந்தால் உடலில் உள்ள பித்தம் குறையும்.
    காலையில் சுடுநீரில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து குடித்து வந்தால் சளி, இருமல் சரியாகும். குழந்தைகளுக்கும் தேன் கலந்த வெந்நீரை பருகக் கொடுத்தால் சளி, சைனஸ், ஆஸ்துமா, இளைப்பு ஆகியவை கட்டுக்குள் வரும். உடல் எடையும் கூடாது.

    சிறு கைப்பிடி துளசி இலைகள், ஒரு துண்டு சுக்கு, 4 அல்லது 5 மிளகு, கொஞ்சம் திப்பிலி ஆகியவற்றை ஒன்றரை டம்ளர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து ஒரு டம்ளராக காய்ச்சி கஷாயம் போல செய்து தேன் ஒரு ஸ்பூன் கலந்து குடித்து வந்தால் சளி, இருமல் தொல்லை முழுமையாக நீங்கும்.

    வெந்நீரில் சில துளிகள் யூகலிப்டஸ் தைலம் விட்டு, ஆவி பிடிப்பதன் மூலம் மூக்கடைப்பு, சளி நீங்கும். ஆஸ்துமா பிரச்னையும் நீங்கும். இதை ஒரு வாரம் தொடர்ந்து செய்து வந்தால் நல்ல பயன் கிடைக்கும்.

    சுடு தண்ணீரில் குளிக்கும் போது மூட்டு எலும்புகளில் படும்படி ஊற்றி வந்தால் கை, கால் வலி குறையும். நல்லெண்ணெய் கொண்டு வலி உள்ள இடங்களில் மசாஜ் செய்த பின், அந்த இடத்தில் வெந்நீர் ஒத்தடம் கொடுத்து வந்தால் வலி நீங்கி நிவாரணம் கிடைக்கும்.

    பொறுக்கும் சூட்டில் வெந்நீர் எடுத்து, அதில் ஒரு ஸ்பூன் கல் உப்பு கலந்து குதிகால் வரை படும்படி உட்கார வேண்டும். இப்படி செய்தால் பாதவலி, குதிகால் வரை குறையும். ஆனால் உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் இதை செய்யும் போது தலையில் ஈரம் உள்ள துண்டை போட்டுக்கொண்டால் தலைசுற்றல் ஏற்படாது.

    அலுவலகத்துக்கு வெந்நீர் கொண்டு செல்பவர்கள் சீரகம், சுக்கு போட்டு கொதிக்க வைத்து எடுத்துச் சென்று குடித்தால் சரியான நேரத்திற்கு பசி எடுக்கும். செரிமானமும் சரியாகும்.’’
     
  3. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    6,170
    Likes Received:
    503
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    நோய்களை குணமாக்கும் தண்ணீர் சிகிச்சை

    உடலை ஆரோக்கியமாகவும், புத்துணர்ச்சியாகவும் வைத்துக் கொள்ள நாம் எத்தனையோ முறைகளைப் பின்பற்றுகின்றோம். உடல் நிலை பாதித்தால் அதனை சரி செய்யவும் எத்தனையோ சிகிச்சை முறைகளைக் கையாளுகிறோம். ஆனால் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும், பாதிக்கப்பட்ட உடலை மேம்படுத்தவும் தண்ணீர் நல்ல சிகிச்சையாக உள்ளது என்றால் அது மிகையாகாது. மருந்து, மாத்திரை, ஊசி, டாக்டர் என்று எதுவுமே இல்லாமல் இலவசமான சுலபமான சிகிச்சையே தண்ணீர் சிகிச்சை!

    தினமும் சுத்தமான தண்ணீரை ஒன்றே கால் லிட்டர் (சுமார் ஆறு டம்ளர்கள்) அருந்துவதால் ஏராளமான நோய்கள் தீருகின்றன என்பதை ஜப்பானின் நோயாளிகள் கழகம் கண்டறிந்துள்ளது. தலைவலி, ரத்த அழுத்தம், ரத்தசோகை, கீல்வாதம், மூட்டுவலி, சாதாரண பக்கவாதம், ஊளைச்சதை, காதில் இரைச்சல், வேகமான இதயதுடிப்பு, மயக்கம், இருமல், ஆஸ்துமா, சளி தொல்லை, மூளைக் காய்ச்சல், கல்லீரல் சார்ந்த நோய்கள், சிறுநீரகக் குழாய் நோய்கள், பித்தக்கோளாறுகள், வாயுக் கோளாறுகள், வயிற்றுப் பொருமல், மூலம், மலச்சிக்கல், ஒழுங்கற்ற மாதவிடாய், அளவற்ற வெள்ளைப்படுதல், கருப்பை புற்றுநோய், மார்புப் புற்றுநோய், தொண்டை சார்ந்த நோய்கள் தீரும்.

    எப்படி தண்ணீர் சிகிச்சை எடுத்துக் கொள்வது? காலையில் எழுந்தவுடன் (பல்துலக்கும் முன்பாகவே) 1250 மி.லி. தண்ணீரை ஒரே தடவையில் குடித்து விட வேண்டும். இது சுமார் 6 டம்ளர் அளவாக இருக்கும் .1.25 லிட்டர்கள் அளந்து வைத்துக் கொள்வது நன்று. இதற்கு நமது முன்னோர்கள் உஷபானம் என்று பெயரிட்டுள்ளனர். குடித்த பின்னர் முகம் கழுவிக் கொள்ளலாம். காலையில் இப்படி தண்ணீர் குடித்தப் பின்னர், ஒரு மணி நேரம் வரையிலும் எந்த விதமான பானங்களோ, பிஸ்கட், பழங்கள், தின்பண்டங்கள் எதையும் சாப்பிடக்கூடாது. இது மிக முக்கியமான நடைமுறையாகும்.

    காலையில் 1.25 லிட்டர் தண்ணீர் குடிப்பதற்கு ஏதுவாக முதல் நாள் இரவு சாப்பிட்டு முடித்தப் பின்னர் படுக்கைக்குச் செல்லும் முன்பாக, நரம்பு மண்டலத்தைத் தூண்டி விடக்கூடிய பானங்கள் (மது மற்றும் போதை வஸ்துக்கள்) உணவுகள் எதையும் சாப்பிடக்கூடாது. இந்த நிபந்தனையை கட்டாயம் பின்பற்ற வேண்டும். எனவே, இரவே பல் துலக்கிக் கொள்வது நன்று. ஒரே மூச்சாக 1 .25 லிட்டர் தண்ணீரை குடிக்க முடியுமா? சில நாட்கள் சிரமம் தான். இரண்டு மூன்று நிமிடங்களில் விட்டு விட்டும் குடிக்கலாம்.

    ஆரம்பத்தில் இரண்டு மூன்று நாட்கள் அல்லது ஒரு வாரம் வரையிலும் தண்ணீர் குடித்த சிறிது நேரத்தில் இரண்டு மூன்று தடவை சிறுநீர் செல்லும். அதுவும் நன்மைக்கே! சரி! எப்படி இந்த தண்ணீர் சிகிச்சை பலனளிக்கும்? சரியான முறையில் ( மேற்கூறிய முறையில்) சாதாரண நீரைக் குடிப்பதால் மனித உடலை சுத்தம் செய்கிறது. தினசரி 1.25 லிட்டர் அளவுக்கு தூயநீரைக் குடிப்பதால், குடலை வலுவாக்குகிறது. மருத்துவ வார்த்தையில் ஹெமடோபைஸில் எனப்படும் புதுரத்தத்தை உற்பத்தி செய்வதன் மூலம் குடல் முழுவதையும் வலுவடையச் செய்கிறது.

    இந்த முறையினால் குடலின் பகுதியில் உள்ள திசு மடிப்புகள் தூண்டப்படுகின்றன என்பது அறிவியல் கருவிகள் மூலம் ஆராய்ந்து நிரூபிக்கப்பட்டு விட்டன. குடல் பகுதியில் இருக்கும் திசு மடிப்புகள் சாப்பிட்ட உணவுப் பொருட்களை ரசமாக்கி உறிஞ்சும் போது புதுரத்தம் உற்பத்தி செய்யப்படுகிறது என்பதும் நிரூபிக்கப்பட்டு விட்டது. தினமும் குடல் சுத்தமாக்கப்படுவதால், தினமும் புது ரத்தம் உற்பத்தியாகிறது. இப்படி தினமும் புதுரத்தம் உற்பத்தியாவதால், உடலில் அதுவரை இருந்து வந்த நோய்கள் வெகுவேகமாக குணமடைகின்றன.

    இந்த சூழ்நிலையை தினசரி காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்துவதன் மூலம் மட்டுமே உருவாக்கிட முடியும். நீண்ட ஆய்வுக்குப் பிறகு, பின்வரும் அதிசயத்தக்க முடிவுகள் கிடைத்திருக்கின்றன.மலச்சிக்கல் ஒரேநாளில் குணமடைகிறது. வயிற்றுப் பொருமல் இரண்டு நாளில் குணமடைகிறது. சர்க்கரை நோய் ஏழு நாட்களில் குணமடைகிறது. ரத்த அழுத்தம் நான்கு வாரங்களிலும், புற்றுநோய் நான்கு மாதங்களிலும், க்ஷயரோகம் ஐந்து மாதங்களிலும் குணமடைகிறது. இந்த தண்ணீர் சிகிச்சையில் பின்பற்ற வேண்டிய முக்கிய குறிப்புகள்:

    மூட்டுவாதம், வாயுப்பிடிப்பு முதலிய நோய் இருப்பவர்கள் ஒரு வாரத்திற்கு தினந்தோறும் மூன்று தடவை காலை, மதிய உணவிற்கு ஒரு மணி நேரத்திற்கும், இரவு உணவுக்கு முன்பு இந்த தண்ணீர் சிகிச்சையை செய்து வர வேண்டும். ஒரு வாரம் கழித்து தினமும் காலையில் மட்டும் செய்து வந்தால் போதுமானது. மற்றவர்கள் தினமும் சாப்பிட்டு இரண்டு மணி நேரம் கழித்தப்பின்பே தண்ணீர் அருந்த வேண்டும். படுக்கைக்குச் செல்லும் முன்பாக காபி, டீ, நொறுக்குத் தீனிகள் சாப்பிடக் கூடாது. இது வரையில் சொல்லப்பட்டுள்ள வழிமுறைகளில் எதையும் மாற்றிச் செய்வது கூடாது.
     
  4. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    6,170
    Likes Received:
    503
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    தண்ணீரும் மினரல் வாட்டரும் சில டிப்ஸ்

    தவிச்ச வாய்க்கு தண்ணீர் கொடு என்ற பழமொழி இன்று மாறிவிட்டது. கடைகளில் காசு கொடுத்து தண்ணீர் பருகும் நிலை வந்துவிட்டது ஒருபுறம் என்றால் அந்த தண்ணீர் சுத்தமானதா ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்காததா என்பது மறுபுறம். இன்று, சாமானியர்களும் மினரல் வாட்டர் எனப்படும் சுத்திகரித்தத் தண்ணீரைப் பயன்படுத்துகின்றனர். பாட்டில்களில் கிடைக்கும் குடிதண்ணீர் சுகாதாரமானதுதானா? எத்தனை நாட்கள்வரை அதைப் பயன்படுத்தலாம்? மனதுக்குள் அலையடிக்கும் கேள்விகளை, தீவிர சிகிச்சைப் பிரிவு தலைமை மருத்துவர் வசந்த் செந்தில் முன் வைத்தோம்.

    பாட்டிலின் லேபிளில், ஐ.எஸ்.ஐ. முத்திரைக்குக் கீழ் ஏழு இலக்க எண்கள், ஐ.எஸ்.ஓ. தரச் சான்றிதழ் குறிப்பிடப்பட்டு இருந்தாலும், அவை உண்மையா எனக் கண்டுபிடிப்பது மிகவும் சிரமம்.

    பொது இடங்களில் விற்கும் பாட்டில் தண்ணீரின் தூய்மையை அறிவது உண்மையில் கடினம்தான். பல பாட்டில்களில் தயாரித்த தேதி, காலாவதி தேதி, பேட்ஜ் எண் போன்ற விவரங்கள் எதுவுமே குறிப்பிடப்பட்டு இருக்காது. உரிய விவரங்கள் உள்ள பாட்டில் தண்ணீரைப் பார்த்து வாங்குங்கள்.

    பாட்டிலில் கிடைக்கும் நீரைவிட குளோரினால் சுத்தம் செய்யப்பட்டு வரும் குழாய் நீர் பல மடங்கு சுத்தமானது. இரண்டு நாட்கள் வரை கிருமிகள் வளராது. 3 நாட்களுக்கு மேல் மிக மெதுவாக 7 நாட்கள் வரை கிருமிகள் வளர ஆரம்பிக்கும். 7 நாட்களுக்கு மேல் வேகமாக வளர வாய்ப்புண்டு. எனவே, குழாயில் பிடித்ததும் வடிகட்டி 20 நிமிடம் கொதிக்க வைத்து நன்றாக ஆறியப் பிறகு பருகுவது நல்லது.

    கொதிக்க வைத்த நீருடன் குளிர்ந்த நீரைக் கலப்பதும், நீரைக் கொதிக்கவைக்காமல் வெதுவெதுப்பாக சூடுபடுத்திக் குடிப்பதும் நீரில் உள்ள கிருமிகளை மிக வேகமாக வளரவைக்கும்.! வீடுகளில் சாதாரண ஃபில்டரின் மூலம் நீரை வடிகட்டினாலும், பாக்டீரியாவை வடிகட்டுமே தவிர வைரஸ் கிருமிகளை வடிகட்டாது. வைரஸ் கிருமிகளைக் கொல்ல, குடிநீரை 20 நிமிடம் நன்றாகக் கொதிக்க வைக்க வேண்டும்.

    பாட்டிலில் அடைக்கப்பட்டக் குடிநீர் பாட்டிலின் மூடியைத் திறந்த 24 மணி நேரத்துக்குள் பயன்படுத்திவிட வேண்டும். ஏனெனில், பாட்டிலில் தண்ணீர் அடைக்கப்பட்ட பிறகு, ஏற்படும் கிருமித் தொற்றை அழிக்கவல்ல கிருமி நாசினி (குளோரின் போன்றவை) இல்லாததால் பாட்டிலில் ஏற்படும் சிறு நுண்துளைகள்கூடக் கிருமித்தொற்றுக்கு வழிவகை செய்துவிடும்.

    தண்ணீரை வடிக்கட்டிக் கொதிக்க வைத்து அதே பாத்திரத்தில் வைத்திருந்தால் 24 மணி நேரம் வரை குடிக்க மிகப் பாதுகாப்பாக இருக்கும். ஆனால், வேறு பாத்திரத்துக்கு மாற்றும்போது கிருமித் தொற்று ஏற்பட வாய்ப்பு உண்டு. கொதிக்க வைத்து ஆறிய பிறகு, குளிர்பதனப் பெட்டியில் வைத்திருந்தாலும் 48 மணி நேரத்துக்கு மேல் அதைப் பயன்படுத்தக்கூடாது.
     
  5. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    6,170
    Likes Received:
    503
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    ஆரோக்கியத்திற்கு சிறந்தது அதிகாலை வெந்நீர்!


    குளிர்ந்த நீரைக் குடிப்பது இப்போதெல்லாம் ஒரு ஃபேஷன் ஆகிவிட்டது. காய்ச்சல், சளி என்றால் மட்டுமே வெந்நீர் அருந்துவது பலரின் வழக்கம். உடல் எடையைக் குறைக்க நினைக்கும் சிலர் காலையில் மட்டும் வெந்நீர் குடிப்பது உண்டு. ‘எடையைக் குறைக்க மட்டும் அல்ல, வெந்நீர் அருந்துவது உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியம் மேம்படவும் உதவும்’ எனச் சொல்கிறார்கள் மருத்துவர்கள்.

    உணவு, உடை, இருப்பிடம்போலவே நம் அன்றாட வாழ்வுக்கு தண்ணீர் மிக அவசியம். உடல் வெப்பநிலையைப் பராமரிக்க, ஊட்டச்சத்துக்களை உடலில் சேர்க்க, நச்சுக்களை அகற்ற... என நீர் ஏராளமான வேலைகளை நமக்குள் செய்கிறது. இரண்டு ஆக்ஸஜனும் ஒரு ஹைட்ரஜனும் சேர்ந்தது நீர் எனப் படித்திருப்போம். அது மட்டுமல்ல, நாம் அருந்தும் நீரில் சோடியம், கால்சியம், மக்னீசியம், தாமிரம் எனப் பல்வேறு தாதுஉப்புக்கள் கலந்திருக்கின்றன. இப்படி, பல நன்மைகளை அள்ளித் தரும் நீரைக் கொதிக்கவைத்து அருந்தலாமா, எவ்வளவு சூடாக அருந்தலாம், அதனால், ஏற்படும் நன்மைகள் என்னென்ன என்று பார்ப்போம்.

    வெந்நீர் குடிக்க உகந்த நேரம்


    எல்லா நேரமும் வெந்நீர் அருந்தலாம். இருப்பினும், அதிகாலையில் அருந்துவது மிகவும் நல்லது. அதிகாலையில், வெந்நீரை ஆற்றும்போது, காற்றில் கலந்திருக்கும் ஓசோன் வாயு, வெந்நீருடன் கலக்கும். ஓசோன் என்பது, சூப்பர் ஆக்சிஜன். அது நம் உடலின் சக்தியைத் தூண்டிவிடும். சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்துக்கு முன்பு குடித்தால், செரிமானத்தைத் தூண்டும்.

    செரிமான மண்டலம் மேம்பட...


    நமது இரைப்பையானது, புரத செரிமானத்துக்குத் தேவையான பெப்ஸின், ரெனின் முதலான என்ஸைம்களைக் கொண்டுள்ளது. இவை இரைப்பையில் இருக்கும். தினமும் காலை இரண்டு டம்ளர் வெந்நீர் குடிப்பதால், பழைய என்ஸைம்கள் வெளியேற்றப்பட்டு, புது அமிலங்கள் உற்பத்தியாகின்றன. அன்றைய தினம் முழுக்க செரிமான மண்டலம் திறனுடன் வேலை செய்ய இது உதவுகிறது.

    மலச்சிக்கலால் அவதிப்படுபவர்களுக்கு வெந்நீர் ஒரு அருமருந்து. மலச்சிக்கல் ஏற்படுவதற்கு முக்கியக் காரணம் அதிகமான கழிவுப் பொருட்கள், நம் குடலில் தங்குவதுதான். இதனால், வயிற்று வலி, உப்புசம் முதலானவை உண்டாகி தொந்தரவு செய்யும். வெந்நீர் அருந்தும்போது, அது உணவுப் பொருட்களை எளிதில் செரிமானம் செய்து, வெளியேற்ற உதவுகிறது.

    கழிவுகளை நீக்கும் வெந்நீர்


    காலை எழுந்ததும் வெந்நீர் குடிக்கும் பழக்கம், நம் உடல் எதிர்கொள்ளும் பெரும்பான்மையான நோய்களுக்குக்கான வாய்ப்புகளைக் குறைக்கிறது. வயிற்றைச் சுத்தப்படுத்துவதில், வெந்நீருக்கு இணை எதுவும் இல்லை. வெந்நீரோ, சூடான பொருளோ நம் உடலுக்குள் செல்லும்போது, அதிகமாக வியர்க்கும்; உடலின் வெப்பநிலை அதிகரிக்கும். இப்படி அதிகரித்த வெப்பநிலையைக் குறைத்து, நம் உடல் வெப்பத்தை சமநிலையில் வைத்திருக்கத்தான் வியர்வை உற்பத்தியாகிறது. இதனால், நம் உடலின் செல்களில் உள்ள நீர், உப்பு முதலான கழிவுகள் வெளியேறுகின்றன.

    செல்கள் புத்துணர்வு பெறும்

    வெந்நீர் அருந்தும்போது, ரத்தக் குழாய்கள் விரிவுபடுத்தப்படும். இதனால், உடல் முழுக்க நல்ல ரத்த ஓட்டம் கிடைக்கும். செல்களுக்கு ஊட்டச்சத்து மற்றும் ஆக்சிஜன் சீராகக் கிடைக்கும். செல்கள் புத்துணர்வுடன் இருக்கும். இதனால் நம் உடல், பலவிதமான தீங்கு விளைவிக்கும் நோய்களில் இருந்தும் தன்னைத் தற்காத்துக்கொள்கிறது. போதுமான அளவு வெந்நீர் அருந்திவந்தால் சருமம் பொலிவடையும்.

    வெந்நீரும் உலோகங்களும்!


    வெண்கலம், தாமிரப் பாத்திரங்களில் வெந்நீர் காய்ச்சி அருந்துவது நல்லது. இந்தப் பாத்திரங்கள் இல்லாதவர்கள், எவர்சில்வர் பாத்திரத்தில், நான்கு டம்ளர் தண்ணீர்விட்டு, 60 கிராம் தாமிரத்தட்டு / கட்டியைப் போட்டு, நன்கு கொதிக்கவிட்டு அருந்தலாம் அல்லது தாமிர டம்ளரில் அருந்தலாம். இதேபோல, வெள்ளி, தங்கத்தைப் போட்டும் தண்ணீரைக் காய்ச்சி அருந்தலாம். இதனால்...நரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும். உயர் ரத்த அழுத்தம், கீழ் வாதம், மன அழுத்தம் போன்றவை கட்டுப்படும். உணவு மண்டலம், சிறுநீரகம் தொடர்புடைய நோய்கள் குணமாகும்.சுவாச மண்டலம், நுரையீரல், இதயம், மூளை போன்றவற்றில் உள்ள கோளாறுகள் சரியாகும்.

    மற்ற பயன்கள்!


    இருமல் மற்றும் சளி ஏற்பட்டால், நம் தொண்டையின் டான்சிலில் அதிக வலி ஏற்படும். அப்போது, வெந்நீர் குடிப்பது தொண்டை வலியைக் குறைக்கும்; நீர்மமாக உள்ள சளியைக் கெட்டியாக்கி வெளியேற்றும். நம் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைந்து, ரத்தக் குழாய்கள் சற்று விரிவடைந்து, உடலின் ரத்த ஓட்டமும் மேம்படும்.
     

Share This Page