தனிமையில் மாரடைப்பு வந்தால் ???

Discussion in 'Health care' started by saravanakumari, Sep 29, 2018.

 1. saravanakumari

  saravanakumari Administrator Staff Member Manager

  Joined:
  Nov 12, 2014
  Messages:
  2,277
  Likes Received:
  1,037
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  home maker
  Location:
  villupuram
  தனிமைல இருக்குறவங்க மாரடைப்பு வந்தா எப்படி எதிர் கொள்ளனும்.??

  இதய தசைக்கு போற இரத்தம் குறைவது அல்லது நிறுத்தப்படுவதால் மாரடைப்பு ஏற்படுது. இரத்தம் தடைபடுவதற்கு காரணம் இரத்த குழாயில் ஏற்படும் அடைப்பு. அதை எம்ர்ஜென்சியாக சரி செய்ய CPR முறை செயல்படுத்தலாம். (யூ--டியூப்'ல செய்முறை விளக்கம் இருக்கு.)
  ஆனால் துரதிருஷ்டவசமா CPR செய்ய இன்னொருத்தர் வேணும். தனியா நாமளே செய்து கொள்ள முடியாது. Cough CPR என்னும் தொடர்ந்து இருமுதல், மூச்சை இழுத்து விடுதல் மூலமாக ஒரு சிலருக்கு இதய இரத்தக் குழாய் அடைப்பு நீங்கலாம். இதற்கு உறுதியான மருத்துவ ஆராய்ச்சி முடிவுகள் இல்லை. இது ஒரு முயற்சி மட்டுமே.

  ஒரே ஓரளவுக்கு உறுதியான வழி ஆஸ்பிரின் மாத்திரை எடுப்பது. அது இரத்தம் உறைவதை தடுப்பதால் இரத்தக்குழாய் அடைப்பு நீங்க வாய்ப்பு அதிகம். ஆனால் ஆஸ்பிரின் அலெர்ஜி இருக்கான்னு முன்னாடியே ஒன்னு போட்டு செக் பண்ணி வச்சுக்கிறது நலம்.

  ஸ்மோக்கிங், சர்க்கரை, பிபி, தண்ணி அடிக்கும் பழக்கம், அதிக உடல் எடை உள்ளவர்கள் 40 வயதுக்கு மேல் ரெகுலராக உடம்பை செக் செய்து கொள்வதுடன், ஆஸ்பிரினை கையில் வைத்து கொள்வது நலம்.
  பதட்டம் அடைவதால் இதய துடிப்பு அதிகரிக்கும். அது ஆபத்தை இன்னும் அதிகரிக்கும் என்பதால் ஒரு ஆஸ்பிரின் போட்டு விட்டு உங்கள் பகுதியில் இருக்கும் எமெர்ஜென்சி 108 போன்ற நம்பர்களுக்கு கால் செய்து விட்டு அமைதியாக காற்றோட்டமான இடத்தில் ரெஸ்ட்டில் இருப்பது நலம்.

  கூட ஆள் இருந்தால் ஹாஸ்பிடலுக்கு நாமளே போகலாம்.

  Dr.சரவணகுமார் B.H.M.S.M.D.,
   

Share This Page