தமிழகம் செய்திகள்

Discussion in 'Diet and Healthy Eating' started by NATHIYAMOHANRAJA, Jul 8, 2019.

 1. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  6,170
  Likes Received:
  503
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  வேடசந்தூர் அருகே எரிந்த காரில் இருந்து இளைஞர் எலும்புக் கூடாக மீட்பு: போலீசார் விசாரணை


  திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே எரிந்த காரில் இருந்து இளைஞர் எலும்புக் கூடாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வேடசந்தூர் அருகே கோவிலூரைச் சேர்ந்த ஓட்டல் அதிபர் மகாமுனி என்பவரின் மகன் சிவா. இவர் தோப்புப் பட்டி கிராமத்தில் நேற்றிரவு நடந்த கரகாட்டத்தைப் பார்ப்பதற்காக தனியாக காரில் சென்றுள்ளார்.

  இன்று காலை வரை அவர் வீடு திரும்பாத நிலையில், வேலாயுதம்பாளையம் கணவாய் என்ற பகுதியில் கார் ஒன்று முற்றிலும் எரிந்து கிடப்பதாகவும், உள்ளே ஒருவர் எரிந்து எலும்புக் கூடாக கிடப்பதாகவும் வடமதுரை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. விரைந்து சென்ற போலீசார், விசாரணை மேற்கொண்டதில், அது சிவாவின் கார் தான் என்பதும், எரிந்து எலும்புக் கூடாக கிடப்பது அவர் தான் என்பதும் உறுதியானது.

  சாலை மார்க்கமாக ஊருக்குச் செல்ல வேண்டிய சிவா, சாலையை விட்டு இறங்கி, அந்தப் பகுதிக்குச் சென்றது ஏன் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. எனவே இது கொலையா? அல்லது விபத்தா? என்பது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
   
 2. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  6,170
  Likes Received:
  503
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்துச் சென்ற வழக்கு: நீதிமன்றத்தை விட்டு வெளியேற மறுத்த நிர்மலாதேவி


  விருதுநகர்: மாணவிகளை தவறான பாதையில் அழைத்துச்சென்ற வழக்கில் கைதான நிர்மலாதேவி, நீதிமன்றத்தை விட்டு வெளியேற மறுத்துள்ளார். ஜாமினில் வெளியே வந்த பேராசிரியை நிர்மலாதேவி இன்று ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
   

Share This Page