தமிழகம்

Discussion in 'Memes and Funny Videos - Daily Updates' started by NATHIYAMOHANRAJA, Jul 18, 2019.

 1. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  7,633
  Likes Received:
  523
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  கட்டுமான பணியில் அலட்சியம்... சுருங்கி போனது புத்தேரி குளம் கால்வாய்  நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை பொய்த்து விட்டதன் காரணமாக குளங்கள், கால்வாய்கள் வறண்டு கிடக்கின்றன. பேச்சிப்பாறை அணையில் இருந்து திறந்து விடப்பட்டுள்ள தண்ணீரை நம்பி தான் சாகுபடி பணிகள் நடக்கின்றன. ஏற்கனவே முறையாக சானல் தூர்வாரப்படாததால், கடைவரம்பு பகுதி வரை தண்ணீர் செல்ல வில்லை. பயிர்கள் வளர்ந்து வரும் நிலையில் போதிய தண்ணீர் இல்லாமல் பயிர்கள் கருகும் நிலை வந்துள்ளது. இந்த நிலையில் பொதுப்பணித்துறை சார்பில் சிறப்பு நிதி ஒதுக்கீடு அடிப்படையில் ஒரு சில சானல்கள் மற்றும் குளங்களில் புனரமைப்பு பணிகள் நடக்கின்றன. இந்த பணிகள் முறையாக நடக்க வில்லை என்று விவசாயிகள் குற்றம் சாட்டி உள்ளனர். புனரமைப்பு பணிகளில் சானல்கள் சுருங்கி விடுகின்றன என்றும் விவசாயிகள் கூறினர்.

  நாகர்கோவில் அடுத்த புளியடி பகுதியில் செங்குளம் உள்ளது. இந்த குளத்துக்கு அனந்தனார் சானலில் இருந்து தண்ணீர் வரும். இந்த குளம் நிரம்பி மறுகால் ஓடை வழியாக புத்தேரி குளத்துக்கு தண்ணீர் செல்லும். இந்த மறுகால் ஓடை உடைந்து மழை காலங்களில் தண்ணீர் வெளியேறி சாலையும் சேதம் அடைந்து வந்தது. இந்த கால்வாய் வழியாக, அந்த பகுதி பாசன நிலங்களுக்கும் தண்ணீர் செல்லும். எனவே இந்த கால்வாயை சீரமைத்து தர வேண்டும் என அந்த பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். தற்போது பொதுப்பணித்துறை சார்பில் உடைப்பு ஏற்பட்ட பகுதியில் சீரமைப்பு பணி நடக்கிறது. கால்வாயின் இரு பக்கமும் கான்கிரீட் தடுப்பு அமைக்கப்படுகிறது. இதில் கால்வாயின் அளவை சிறிதாக்கி பணி நடக்கிறது. இதனால் மழை காலங்களில் தண்ணீர் வேகமாக வரும் சமயத்தில் மேலும் உடைப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இந்த கால்வாய் அகலத்தை ஏற்கனவே இருப்பது போல் விரிவுப்படுத்தி கட்ட வேண்டும். மேலும் தடுப்பு சுவரின் உயரத்தை அதிகரித்து கட்ட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறுகையில், செங்குளம் மறுகால் கால்வாய் மழை காலங்களில் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு வந்தது.

  நீண்ட கால கோரிக்கையை ஏற்று, பொதுப்பணித்துறை சார்பில் மறுகால் கால்வாய் கட்டுமான பணி நடந்தது. கால்வாயின் இரு பக்கமும் உள்ள மணல் திட்டுகளை அகற்றி, சமன்செய்து கட்டுமான பணியை நடத்தாமல், பெயரளவுக்கு கட்டுமான பணி நடப்பதால், கால்வாய் அளவு குறைந்துள்ளது. இதனால் அரசு பணம் வீணடிப்பு செய்யப்படுவதை தவிர வேறு எந்த பயனும் விவசாயிகளுக்கு இல்லை. எனவே முறையாக புனரமைப்பு பணிகள் நடக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
   
 2. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  7,633
  Likes Received:
  523
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  நம்பிக்கையில்லா தீர்மான விவாதம்: காங்கிரஸ் - பாஜக இடையே கடும் மோதல்!

  கர்நாடகத்தில் ஆளும் காங்கிரஸ்-மதசார்பற்ற ஜனதாதளம் கூட்டணி அரசுக்கு பெரும்பான்மை இல்லாத சூழல் உருவாகியுள்ள நிலையில், சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று கோரினார் முதல்வர் குமாரசாமி.


  முதல்வர் குமாராமி தலைமையிலான மஜத - காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு பெரும்பான்மையை நிரூபிக்க 113 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவைப்படுகிறது. தற்போதைய நிலையில், 224 எம்எல்ஏக்களை கொண்ட கர்நாடக சட்டப்பேரவையில் மஜத (37), காங்கிரஸ் (78), பகுஜன் சமாஜ் (1), சுயேச்சைகள் (2) கூட்டணியின் பலம் 118 ஆக உள்ளது. பெரும்பான்மைக்கு 113 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவைப்படும் நிலையில், பாஜகவின் பலம் 105 ஆக உள்ளது.

  முன்னதாக, கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் மற்றும் மஜத கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் 15 பேர் பாஜக-வுக்கு சாதகம் அளிக்கும் வகையில் பதவி விலகல் கடிதங்களை சட்டப்பேரவைத் தலைவர் ரமேஷ்குமாருக்கு அனுப்பினர்.

  முதல்வர் தாக்கல் செய்த நம்பிக்கையில்லா தீர்மானத்தில் பேசிய முன்னாள் முதல்வரும், சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவருமான சித்தராமையா, கட்சித்தாவல் தடை சட்டம் குறித்து பேசினார்.
  [​IMG]
  ''ஒரு கட்சியை சேர்ந்த சில எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்தபோது, அவர்களை கட்சியின் ஓர் அங்கமாக கருதாமல் எப்படி தனிநபர்களாக கருதமுடியும்?'' என்று சித்தராமையா வினவினார்.

  இன்று ஒரு நாளில் இது குறித்து முடிவு செய்து விட முடியாது என்று சித்தராமையா மேலும் கூறினார். சித்தராமையாவின் கருத்துக்கு எதிராக பாஜக உறுப்பினர்கள் பலர் கருத்து தெரிவித்தனர். அவர் உண்மைக்கு மாறாக பேசுகிறார் என்று குரல் எழுப்பினர்.

  கர்நாடக சட்டப்பேரவை தலைவர் ரமேஷ்குமார் கூறுகையில், ''சட்டப்பேரவைக்கு வரவேண்டாம் என்று ஒரு உறுப்பினர் விரும்பினால், அவர்கள் சட்டமன்ற கையேட்டில் கையெழுத்திட சட்டமன்ற பணியாளர்கள் அனுமதிக்கமாட்டர்'' என்று பேசினார்.
  [​IMG]
  உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை நான் மதிக்கிறேன். அரசியலமைப்பு சட்டத்தின்படி முடிவெடுக்க எனக்குள்ள உரிமையை நான் பயன்படுத்துவேன் என்று அவர் கூறினார். தற்போது உணவு இடைவேளைக்காக சட்டமன்ற நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டு உள்ளது. மீண்டும் 3 மணிக்கு நம்பிகையில்லா தீர்மானம் மீது விவாதம் தொடங்குகிறது.

  ஆரம்பத்தில் இந்த விவாதத்தில் பேசிய முதல்வர் குமாரசாமி, ''எனக்கும், என் அமைச்சர்களுக்கும் சுயமரியாதை உண்டு. இந்த அரசை நிலைகுலைய வைக்கும் முயற்சியில் யார் ஈடுபடுகிறார்கள் என்பது தெளிவாக வேண்டும்'' என்று குறிப்பிட்டார்.

  [​IMG]
   

Share This Page