திமுக தலைவர் கலைஞர் கருணாநிதிக்கு புதுச்சேரியில் வெண்கலச் சிலை: முதல்வர் நாராயணசாமி

Discussion in 'Magazines' started by NATHIYAMOHANRAJA, Aug 8, 2018.

 1. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  7,858
  Likes Received:
  523
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  திமுக தலைவர் கருணாநிதி மறைந்ததையடுத்து தமிழகம் மற்றும் புதுவையில் இன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு சார்பில் 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் புதுச்சேரியிலும் அரசு சார்பில் 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார். 95 வயதான கலைஞர் கருணாநிதி நேற்று மாலை 6.10 மணிக்கு காவேரி மருத்துவமனையில் காலமானார்.

  கடந்த 11 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த கருணாநிதி காலமானார். 25ம் தேதி உடல்நலக்குறைவால் கோபாலபுர இல்லத்தில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் ரத்த அழுத்தம் காரணமாக 27-ம் தேதி அதிகாலை 1.30 மணி அளவில் காவேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று இயற்கை எய்தினார்.

  மேலும், புதுச்சேரி அரசு சார்பில் கருணநிதிக்கு முழு உருவ வெண்கலச் சிலை அமைக்கப்படும் என்றும் காரைக்காலில் அமைய உள்ள புறவழிச்சாலைக்கு கருணாநிதி பெயர் சூட்டப்படும் என்றும் நாராயணசாமி அறிவித்துள்ளார்.
   

Share This Page