தீபாவளி - இனிப்பு வகைகள்

Discussion in 'Diwali Sweets' started by NATHIYAMOHANRAJA, Oct 30, 2018.

 1. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  6,802
  Likes Received:
  509
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  பச்சரிசி அதிரசம்


  சமைக்க தேவையானவை

  • பச்சரிசி - 2½ கப் (அ) 500 கிராம்
  • கறுப்பு வெல்லம் -300 கிராம்
  • ஏலக்காய் பொடி -1 டீஸ்பூன்
  • எள் - 1 டீஸ்பூன்
  • எண்ணெய் – தேவையான அளவு
  • Step 1.

   முதலில் அரிசியை 1 – 1½ மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும். பின்னர் தண்ணீரை நன்கு வடித்து விடவும்.
  • Step 2.

   பின் அரிசியை உலர்ந்த துணியில், நிழலில் காய வைக்கவும். முக்கால் பாகம் காய்ந்தவுடன் மிசினில் இடித்துக் கொள்ளவும்.
  • Step 3.

   இடித்து, சலித்துக் கொள்ளவும். வெல்லத்தை கனமான பாத்திரத்தில் ¼ கப் தண்ணீர் விட்டு காய்ச்சவும். வெல்லம் முழுவதும் கரைந்ததும்,
  • Step 4.

   அதனை வடிகட்டி மீண்டும் கம்பிபதம் வரும் வரை மெல்லிய தீயில் காய்ச்சவும். ஏலக்காய் பொடி, எள் ஆகியவற்றை வெல்லபாகில் சேர்க்கவும்.
  • Step 5.

   பின் சிறிது சிறிதாக வெல்லப் பாகை அரிசிமாவில் சேர்த்து கட்டி விழாதவாறு கிளறவும். அதிரசமாவானது சப்பாத்தி பதத்திற்கு வரும்.
  • Step 6.

   அடிகனமான பாத்திரத்தில் எண்ணெயை காய வைத்து அதிரசமாவை வடை மாதிரி தட்டி எண்ணெயில் பொரித்து எடுக்கவும். சுவையான பச்சரிசி அதிரசம் தயார்.
   
 2. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  6,802
  Likes Received:
  509
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  மைதா மாவு போளி

  சமைக்க தேவையானவை

  • மைதா மாவு - 2 கப்
  • தேங்காய்த்துருவல் - 1 கப்
  • வெல்லம் பொடித்தது - 1 கப்
  • நெய் - சுவைக்கு
  • சுக்குப்பொடி - 1/2 டீஸ்பூன்
  • ஏலக்காய் தூள் - 1/2 டீஸ்பூன்
  • மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
  • நல்லெண்ணெய் – தேவையான அளவு
  • உப்பு - 1/2 டீஸ்பூன்
  • Step 1.

   முதலில் மைதா மாவுடன், உப்பு, மஞ்சள் தூள், நெய் சேர்த்து, சிறிது சிறிதாக நீரைச் சேர்த்து, சப்பாத்திக்கு பிசைவது போல் பிசைந்து அதன் மேல் சிறிது நல்லெண்ணெயைத் தடவி, குறைந்தது அரை மணி நேரம் மூடி வைக்கவும்.
  • Step 2.

   வெல்லத்தில் 1/4 கப் தண்ணீரைச் சேர்த்து கொதிக்க விட்டு, வடிகட்டிக் கொள்ளவும். வடிகட்டிய வெல்லப்பாகை மீண்டும் அடுப்பிலேற்றி கொதிக்க விட்டு அத்துடன் தேங்காய்த்துருவலைச் சேர்த்து கெட்டியாகும் வரை கிளறி விடவும்.
  • Step 3.

   பின்னர் அத்துடன் சுக்குத்தூள், ஏலக்காய்த்தூள் ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கிளறி, இறக்கி வைத்து ஆற விடவும். அடுப்பில் தோசைக்கல்லை வைத்து சூடாக்கவும்.
  • Step 4.

   வாழை இலையில் அல்லது பிளாஸ்டிக் ஷீட்டில் சிறிது நெய் தடவி, அதில் எலுமிச்சை அளவு மாவை வைத்து பூரி வடிவில் தட்டி, அதன் மேல் எலுமிச்சம் பழ அளவு தேங்காய் பூரணத்தை வைத்து மூடி, மறுபடியும் பிளாஸ்டிக் ஷீட்டில் சிறிது நெய் தடவி மாவை வைத்து விரல்களால் சப்பாத்தி போல் தட்டி, தோசைக்கல்லில் போட்டு, அதை சுற்றி சிறிது நெய்யை ஊற்றி, இரு புறமும் சிவக்க சுட்டெடுக்கவும். சுவையான மைதா மாவு போளி தயார்.
   
 3. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  6,802
  Likes Received:
  509
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  தேங்காய் பர்பி

  சமைக்க தேவையானவை

  • தேங்காய் - 1 பெரியது
  • சர்க்கரை – 2 கப்
  • நெய் - தேவையான அளவு
  • ஏலக்காய், முந்திரி – தேவையான அளவு
  • Step 1.

   முதலில் தேங்காயை உடைத்து நன்றாக துருவிக் கொள்ள வேண்டும். பிறகு அடுப்பில் கனமான பத்திரத்தில் சர்க்கரையை போடவும். இதில் சர்க்கரையில் தேவையான தண்ணீர் ஊற்றவும். சர்க்கரை கரையும் வரை கிளறவும்.
  • Step 2.

   சர்க்கரை கரைந்த பின் துருவிய தேங்காயை போட்டு கிளறிக் கொண்டே இருக்கவேண்டும். இதன் இடையில் ஒரு தட்டில் சிறிது நெய் தடவி அருகில் வைத்து கொள்ளவும்.
  • Step 3.

   கிளறிக் கொண்டே இருக்க வேண்டும், அடி பிடிப்பது போல் இருந்தால் சிறிது நெய் விட்டு கிளறவும். தண்ணீர் சுண்டி பாத்திரத்தில் ஒட்டாமல் லேசாக பொங்கி வருவது போல் இருக்கும் போது அடுப்பை அணைத்து விட்டு நெய் தடவி வைத்துள்ள தட்டில் பரவலாக கொட்டவும்.
  • Step 4.

   ஒரு கத்தியில் லேசாக நெய் தடவி தேங்காய் பர்பியை சிறிய துண்டுகளாக வெட்டவும். பிறகு ஆற விடவும். சுவையான தேங்காய் பர்பி தயார்.
   
 4. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  6,802
  Likes Received:
  509
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  ரவா லட்டு

  சமைக்க தேவையானவை

  • ரவை – ½ கிலோ
  • சர்க்கரை – ½ கிலோ
  • பால் – 250 மில்லி லிட்டர்
  • தேங்காய் – 1
  • ஏலக்காய் – 12
  • நெய் – 6 ஸ்பூன்
  • முந்திரி பருப்பு – 50 கிராம்
  • Step 1.

   முதலில் முந்திரி பருப்பை சிறு துண்டுகளாக உடைத்து நெய்யில் வறுத்து எடுத்துக் கொள்ளவும். தேங்காயை துருவிக் கொள்ளவும்.
  • Step 2.

   ஏலக்காயை பொடித்துக் கொள்ளவும். பின் பாலை தண்ணீர் சேர்க்காமல் காய்ச்சி வைத்துக் கொள்ளவும். வாணலியில் நான்கு ஸ்பூன் நெய் விட்டு ரவையை வறுக்கவும். ஐந்து நிமிடங்களில் ரவை வறுபட்டு மணம் வரும்.
  • Step 3.

   வாணலியின் அடிப்பகுதியில் ஒட்டியுள்ள ரவை சிவக்க ஆரம்பித்ததும் தீயை சிம்மில் வைக்கவும். அடுத்ததாக சர்க்கரையை அதனோடு சேர்த்துக் கிண்டவும்
  • Step 4.

   . தொடர்ந்து சிம்மில் வைத்தே செய்யவும். ஓரளவு சர்க்கரையின் அளவு சிறுத்து ரவையோடு சேர்ந்து வரும்போது தேங்காய் துருவலைச் சேர்த்துக் கிண்டவும். ஓரளவிற்கு விடாமல் கிண்டவும். இல்லை எனில் அடியில் தீய்ந்து ஒட்டிக் கொள்ளும்.
  • Step 5.

   அப்பொழுது ஏலக்காய்த்தூளைச் சேர்த்து ஒன்றாக கலந்து வரும்படி கிளறவும். கடைசியாக 2 ஸ்பூன் நெய் சேர்த்து கிளறி அதனோடு வறுத்த முந்திரி பருப்பைச் சேர்க்கவும்.
  • Step 6.

   சூடான ரவைக் கலவையில் மிதமான சூட்டில் உள்ள பாலை ஊற்றி ஒரு பகுதியை மட்டும் நன்கு கலந்து விட்டு லட்டு பிடிக்கத் துவங்கலாம்.
  • Step 7.

   ரவைக் கலவை ஆறிவிட்டால் மறுபடியும் பாலை சூடுபடுத்தி ரவைக் கலவையில் ஊற்றி மீதமுள்ள லட்டைப் பிடிக்கவும். சுவையான ரவா லட்டு தயார்.
   
 5. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  6,802
  Likes Received:
  509
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  ஸ்வீட் லட்டு

  சமைக்க தேவையானவை

  • கடலை மாவு - அரை கிலோ
  • வெல்லம் - 100 கிராம்
  • நெய் - 400 கிராம்
  • சர்க்கரை - அரை கிலோ
  • பச்சைக்கற்பூரம் - கால் டீஸ்பூன்
  • ஏலக்காய் - 10 கிராம்
  • கிராம்பு - சிறிதளவு
  • எண்ணெய் - தேவையான அளவு
  • பாதாம், பேரீச்சை - தலா 25 கிராம்
  • திராட்சை, முந்திரி - தலா 25 கிராம்
  • கற்கண்டு - 5 கிராம்
  • Step 1.

   முதலில் கடலை மாவை பாத்திரத்தில் போட்டு, தண்ணீர் விட்டு இட்லி மாவு பதத்துக்கு கரைத்துக்கொள்ளவும்.
  • Step 2.

   பின் கனமான பாத்திரத்தில் எண்ணெயை ஊற்றி, காய்ந்ததும் மாவைக் கொஞ்சம் கொஞ்சமாக பூந்திக்கரண்டியில் ஊற்றி தேய்க்கவும்.
  • Step 3.

   பூந்திகள் எண்ணெயில் விழுந்தவுடனே மெதுவாக திருப்பிப் போடவும். ஓரிரு நிமிடங்கள் கழித்ததும் மீண்டும் திருப்பிப் போட்டு எடுத்து, எண்ணெய் வடிசட்டியில் கொட்டி, எண்ணெயை முழுவதுமாக வடித்துவிடவும்.
  • Step 4.

   கனமான பாத்திரத்தில் சர்க்கரை, வெல்லம் இரண்டையும் சேர்த்து நீர் விட்டு ஒரு கம்பி பதத்துக்கு பாகு காய்ச்சவும். அதற்குள் ஒரு வாணலியில் தேவையான அளவு நெய்யை விட்டு பாதாம், முந்திரி, திராட்சை, கிராம்பு, பேரீச்சை ஆகியவற்றை வறுத்துச் சேர்க்கவும்
  • Step 5.

   . இதில், நசுக்கிய ஏலக்காய், பச்சைக் கற்பூரம் சேர்க்கவும். எண்ணெய் வடித்த பூந்தி, கல்கண்டு இவற்றைச் சேர்த்து நன்கு கலந்து இறக்கவும். கைகளில் நெய்யை தடவிக்கொண்டு கைபொறுக்கும் சூட்டுடனேயே லட்டுகளாகப் பிடிக்கவும். சுவையான லட்டு தயார்.
   
 6. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  6,802
  Likes Received:
  509
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  குலாப் ஜாமூன்

  சமைக்க தேவையானவை

  • பால் பவுடர் - 2 1/2 கப்
  • சர்க்கரை - 5 கப்
  • பால் - தேவையான அளவு
  • நெய் - 2 மேசைக்கரண்டி
  • பேக்கிங் பவுடர் - சிறிது
  • மைதா மாவு - 2 மேசைக்கரண்டி
  • எண்ணெய் - தேவையான அளவு
  • Step 1.

   முதலில், பால் பவுடருடன் மைதா மாவு, பேக்கிங் பவுடர், நெய் சேர்த்து, தேவைக்கேற்ப பால் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
  • Step 2.

   பின் பிசைந்த மாவை சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும். ஒரு பாத்திரத்தில் 5 கப் சர்க்கரையைப் போட்டு, அத்துடன் 5 கப் தண்ணீர் ஊற்றிக் கரைத்து அடுப்பில் வைத்து ஒரு கம்பி பதம் வரும் வரை பாகு காய்ச்சவும்.
  • Step 3.

   மற்றொரு அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றிக் காயவிடவும். காய்ந்ததும் உருட்டி வைத்துள்ள உருண்டைகளைப் போட்டு சிவக்க பொரித்தெடுத்து சர்க்கரைப் பாகில் போடவும்.
  • Step 4.

   அனைத்து உருண்டைகளையும் போட்ட பிறகு, 5 நிமிடங்கள் கழித்து பாகு இருக்கும் அடுப்பை அணைக்கவும். சுவையான குலாப் ஜாமுன் தயார்.
   
 7. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  6,802
  Likes Received:
  509
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  பாதுஷா

  சமைக்க தேவையானவை

  • மைதா மாவு – 2 கப்,
  • உளுந்து பொடி – 2 டேபிள்ஸ்பூன்,
  • வெண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன்,
  • உப்பு - தேவையான அளவு
  • எண்ணெய் – தேவையான அளவு.
  Step 1.

  முதலில் உப்பு, சமையல் சோடாவை ஒன்றரை டீஸ்பூன் நெய்யில் நன்கு நுரைக்க தேய்த்து, இதில் மைதா மாவு, சிறிதளவு நீர் சேர்த்து சப்பாத்தி மாவு போல் பிசைந்து, பெரிய எலுமிச்சை அளவு மாவு எடுத்து, தட்டி, சூடான எண்ணெயில் (மிதமான சூட்டில்) பொரித்தெடுக்கவும். சர்க்கரையில் 50 மில்லி நீர் விட்டு சூடாக்கி, நுரைக்கையில் பால் விட்டு அழுக்கு நீக்கவும். பிசுக்கு பதத்துக்கு பாகு வந்ததும் எசன்ஸ் சேர்த்து இறக்கவும். பொரித்த பாதுஷாவை பாகில் முக்கி எடுக்கவும். சுவையான பாதுஷா தயார்.
   
 8. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  6,802
  Likes Received:
  509
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  ஸ்வீட் சோமாஸ்

  சமைக்க தேவையானவை

  • மைதா - 250 கிராம்,
  • ரவை - 1/2 கப்,
  • நெய் - 1 டீஸ்பூன்
  • பொடித்த சர்க்கரை - 1 கப்,
  • கசகசா - 1 டேபிள்ஸ்பூன்,
  • முந்திரி - தேவைக்கு,
  • கசகசா - 1 டேபிள்ஸ்பூன்,
  • பொட்டுக் கடலை - 1/2 கப்,
  • ஏலக்காய் - தேவைக்கு,
  • கொப்பரை தேங்காய் - 1 மூடி
  • எண்ணெய் - தேவையான அளவு.
  • Step 1.

   முதலில் மைதா, ரவை, நெய், சிறிது தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசைந்து ஈரத் துணி போட்டு மூடி வைக்கவும். கசகசாவை வறுத்து பொடிக்கவும்.
  • Step 2.

   அத்துடன் பூரணத்துக்குக் கொடுத்த அனைத்தையும் சேர்த்து பூரணம் தயாரித்துக் கொள்ளவும். பிசைந்து வைத்த மைதா மாவை பூரிகளாக இட்டு, சோமாஸ் அச்சில் வைத்து சோமாஸ் வடிவம் கொடுக்கவும். இதனுடன் தேவையான பூரணத்தை வைத்து மூடி எண்ணெயில் மிதமான தீயில் பொரித்து எடுக்கவும். சுவையான சோமாஸ் தயார்.
   
 9. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  6,802
  Likes Received:
  509
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  சீயம்


  சமைக்க தேவையானவை

  • பச்சரிசி - 1 கப்
  • உளுந்து - 1 கப்
  • உப்பு - 1 கப்
  • வெல்லம் - கால் கிலோ.
  • பெரிய தேங்காய் - 1.
  • ஏலக்காய் - 5 (பொடித்தது)
  • எண்ணை - தேவையான அளவு.
  • நெய் - 4 டீஸ்பூன்.
  • Step 1.

   முதலில் பூரணம் செய்ய தேங்காயை பூப் போல துருவிக் கொள்ள வேண்டும். பின்னர் வெல்லத்தைப் பொடித்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் வாணலியை வைத்து, அதில் 2 ஸ்பூன் நெய் ஊற்றவும். அதில் துருவிய தேங்காயைப் போட்டு, ஈரச் சத்து போகும் வரை கிளறவும்.
  • Step 2.

   அத்துடன், பொடித்த வெல்லத்தைப் போட்டுக் கிளறி, ஏலக்காய்த் தூளை சேர்த்து, உருண்டு வரும் போது கிளறி இறக்கி ஆற வைக்கவும். இதை முதல் நாளே செய்து வைத்துக் கொள்ளலாம். மாவிற்கு - பச்சரிசியையும், உளுந்தையும் ஒன்றாகக் களைந்து 1 மணி நேரம் ஊற வைக்கவும்.
  • Step 3.

   நன்றாக ஊறியதும் அதை மிக்சியில் நைசாக வரும் வரை அரைக்கவும். பின்னர் கரைத்த மாவில், துளி உப்புச் சேர்த்துக் கலக்கவும். சேர்த்த பூரணத்தை சிறு எலுமிச்சம் பழ அளவு உருட்டி வைத்துக் கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணை ஊற்றி, எண்ணை காய்ந்ததும், உருட்டி வைத்ததை மாவில் தோய்த்து எடுத்து எண்ணையில் போட்டுப் பொரிக்கவும். சுவையான சீயம் தயார்.
   
 10. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  6,802
  Likes Received:
  509
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  ஜிலேபி

  சமைக்க தேவையானவை

  • மைதா மாவு - 2 கப்,
  • அரிசி மாவு - ஒன்றரை டேபிள்ஸ்பூன்,
  • சர்க்கரை - 3 கப்,
  • பேகிங் பவுடர் - கால் டீஸ்பூன்,
  • தயிர் - 2 டேபிள்ஸ்பூன்,
  • மஞ்சள் ஃபுட் கலர் - ஒரு டீஸ்பூன்,
  • எண்ணெய் - தேவையான அளவு.
  Step 1.

  முதலில் மைதா மாவுடன், அரிசி மாவு, மஞ்சள் ஃபுட் கலர், பேகிங் பவுடர், தயிர் சேர்த்து வடை மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும். இதை 2 மணி நேரம் புளிக்கவிட்டு, ஜாங்கிரி பிழியும் துணியில் மாவைப் போட்டு, சூடான எண்ணெயில் பிழிந்து, பொரித்தெடுக்கவும். சர்க்கரையை கம்பிப் பாகு பதத்தில் காய்ச்சி, அதில் ஜிலேபிகளைப் போட்டு எடுக்கவும். சுவையான ஜிலேபி தயார்.
   

Share This Page