தீபாவளி - இனிப்பு வகைகள்

Discussion in 'Diwali Sweets' started by NATHIYAMOHANRAJA, Oct 30, 2018.

  1. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    6,170
    Likes Received:
    503
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    பாம்பே ஸ்வீட்

    சமைக்க தேவையானவை

    • மைதா மாவு - 150 கிராம்,
    • சர்க்கரை - 200 கிராம்,
    • ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை,
    • உப்பு - ஒரு சிட்டிகை,
    • எண்ணெய் - கால் கிலோ,
    • கொப்பரைத் துருவல் - 2 டீஸ்பூன்,
    • கேசரி கலர் - சிறிதளவு.
    Step 1.

    முதலில் மைதா, உப்புடன் நீர் சேர்த்து கெட்டியாக பூரி மாவு போல் பிசைந்து மெல்லியதாக சிறிய அப்பளம் போல் இடவும். இதை பாதியாக மடித்து, மீண்டும் அதை பாதியாக மடித்து எண்ணெயில் பொரித்து எடுக்கவும். சர்க்கரையில் சிறிதளவு நீர் விட்டு, இரட்டை கம்பி பதத்தில் பாகு காய்ச்சி, கேசரி கலர், ஏலக்காய்த்தூள் சேர்க்கவும். பொரித்த காஜாவை இதில் அழுத்தி தோய்த்து எடுத்து தட்டில் வைத்து, கொப்பரை தூவவும். சுவையான பாம்பே ஸ்வீட் தயார்.
     
  2. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    6,170
    Likes Received:
    503
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    தேங்காய் சீயம்

    சமைக்க தேவையானவை

    • தேங்காய்த் துருவல் - ஒரு கப்,
    • நெய் - ஒரு டீஸ்பூன்,
    • வெல்லம் - முக்கால் கப்,
    • உளுத்தமாவு - ஒரு டேபிள்ஸ்பூன்,
    • ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்,
    • எண்ணெய் - தேவையான அளவு.
    • பச்சரிசி மாவு - 100 கிராம்,
    • உப்பு - ஒரு சிட்டிகை.
    Step 1.

    முதலில் வெல்லத்தில் சிறிதளவு நீர்விட்டு கரைத்து, கொதிக்கவிட்டு, வடிகட்டி, தேங்காய்த் துருவல், ஏலக்காய்த்தூள், நெய், அரிசி மாவு சேர்த்து பூரணமாக கிளறி இறக்கி, எலுமிச்சை அளவு உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும். மேல் மாவுக்கு கொடுத்துள்ள பொருட்களை கலந்து, நீர் விட்டு பஜ்ஜி மாவு போல் கரைத்துக்கொள்ளவும். பூரண உருண்டைகளை மாவில் தோய்த்து சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும். சுவையான தேங்காய் சீயம் தயார்.
     
  3. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    6,170
    Likes Received:
    503
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    சுவையான ஜாங்கிரி


    சமைக்க தேவையானவை

    • முழு உளுந்து - 200 கிராம்,
    • அரிசி - ஒரு டீஸ்பூன்,
    • சர்க்கரை - 300 கிராம்,
    • கேசரி கலர் - சிறிதளவு,
    • ஏலக்காய் எசன்ஸ் - சில துளிகள்,
    • சீவிய முந்திரி - சிறிதளவு,
    • எண்ணெய் - தேவையான அளவு
    • Step 1.

      முதலில் உளுந்தை களைந்து அரிசியுடன் அரை மணி நேரம் ஊறவிட்டு கிரைண்டரில் பொங்க பொங்க அரைத்து பின் ஃபுட் கலர் சேர்க்கவும். சர்க்கரையுடன், அது கரையும் அளவு நீர் விட்டு, பிசுக்கு பதத்தில் பாகு காய்ச்சி, அகலமான பேசின் அல்லது தாம்பாளத்தில் ஊற்றி, எசென்ஸ் சேர்க்கவும்
    • Step 2.

      துணி அல்லது பால் கவரில் சிறிய துளையிட்டு மாவு நிரப்பி, சூடான எண்ணெயில் ஜாங்கிரியாக பிழிந்தெடுத்து, ரெடியாக இருக்கும் சர்க்கரைப் பாகில் சேர்த்து, 10 நிமிடம் ஊறிய பின் எடுத்துவிடவும். சீவிய முந்திரி கொண்டு அலங்கரிக்கவும். சுவையான ஜாங்கிரி தயார்.
     
  4. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    6,170
    Likes Received:
    503
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    ஜெல்லி பர்பி

    சமைக்க தேவையானவை

    • இளநீர் – ஒரு கப்
    • அகர் அகர் (ஒரு வகை கடல்பாசி) – ஒரு டீஸ்பூன்
    • சர்க்கரை – 3 டேபிள் ஸ்பூன்
    • தேங்காய்ப் பால் – ஒரு கப்
    • சர்க்கரை – 3 டேபிள் ஸ்பூன்

    உணவு செய்முறை : ஜெல்லி பர்பி

    • Step 1.

      முதலில் ஒரு பாத்திரத்தில் இளநீரை ஊற்றி அதில் அதில் அகர் அகர், சர்க்கரை சேர்த்து நன்றாகக் கலந்து அடுப்பில்வையுங்கள். ஐந்து முதல் எட்டு நிமிடம்வரை கிளறுங்கள்.
    • Step 2.

      சிறிது கெட்டியானதும் ஒரு அலுமினிய டிரேயில் கொட்டிப் பரப்பிவிடுங்கள். இதேபோல் தேங்காய்ப் பாலையும் செய்து முதலில் கொட்டிய இளநீரின் மேல் (கொஞ்சம் கெட்டியாக ஆனதும்) கொட்டிப் பரப்புங்கள்.
    • Step 3.

      அரை மணி நேரத்தில் நன்றாகப் பிடித்துக்கொள்ளும். பிறகு துண்டுகள் போட்டுப் பரிமாறவும்.
     
  5. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    6,170
    Likes Received:
    503
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    பிரட் லட்டு

    சமைக்க தேவையானவை

    • கடலை பருப்பு - 100 கிராம்,
    • பிரட் ஸ்லைஸ் - 6,
    • வெல்லம் - 1/4 கிலோ,
    • தேங்காய் - 1/4 மூடி
    • ஏலக்காய் - 4,
    • நெய் - 50 கிராம்.

    உணவு செய்முறை : பிரட் லட்டு

    • Step 1.

      முதலில் கடலை பருப்பை கிள்ளு பதமாக வேக வைத்து, தண்ணீரை சுத்தமாக் வடித்து, மிக்ஸியில் உதிராக அரைத்து சிறிது நெய்யில் வதக்கிக் கொள்ளவும்.
    • Step 2.

      தேங்காயை துருவி, சிறிது நெய்யில் லேசாக வறுத்து வைக்கவும். பிரெட்டை மிக்ஸியில் போட்டு ஓட்டினால பொலபொலன்னு வரும்.
    • Step 3.

      அதையும் சிறிது நெய்யில் வறுத்துக் கொள்ளவும். வெல்லத்தை தட்டி, சிறிது தண்ணீரை சேர்த்து, கரைத்து, வடிகட்டி அடுப்பில் வைக்கவும்.
    • Step 4.

      கொதிக்கும் போது, அரைத்த கடலை பருப்பு, பிரட்,தூளாக்கிய ஏலக்காய், தேங்காய், மீதி நெய் சேர்த்து கெட்டியாகும் வரை கிளறி இறக்கவும். ஆறியவுடன் எழுமிச்சை அளவு உருண்டைகளாக உருட்டவும்.
     
  6. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    6,170
    Likes Received:
    503
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    வாழைப்பழ பிஸ்கட்

    சமைக்க தேவையானவை

    • மைதா மாவு -- 200 கிராம்
    • சர்க்கரை பொடி -- 100 கிராம்
    • வெண்ணைய் -- 100 கிராம்
    • கார்ன்ப்ளேக்ஸ் -- 50 கிராம்
    • முந்திரி பருப்பு -- 25 கிராம்
    • பேக்கிங் பவுடர் -- 1/2 ஸ்பூன்
    • உப்பு -- 1 சிட்டிகை
    • பூவன் வாழைப்பழம் -- 1 என்னம்
    • முட்டை -- 1 என்னம்
    • வாழைப்பழ எசன்ஸ் -- சில துளிகள்

    உணவு செய்முறை : வாழைப்பழ பிஸ்கட்

    • Step 1.

      முதலில் முந்திரியை பொடியாக்கவும். முட்டையை நன்கு அடித்துக் கொள்ளவும். மைதா மாவு, பேக்கிங் பவுடரை கலந்து சலிக்கவும். அதனுடன் உப்பு சேர்க்கவும்.
    • Step 2.

      வெண்ணையுடன் சர்க்கரையை பொடியை கலந்து நன்கு அடித்து முட்டை, எசன்ஸ் சேர்த்து கலக்கி இக் கலவையில் கார்ன் ப்ளேக்ஸ், முந்திரி பவுடர் சேர்த்து மைதாமாவு , வாழைப்பழம் சேர்த்து நன்கு பிசையவும்.
    • Step 3.

      கலவை ஸ்பூனில் எடுக்கும் பதத்தில் இருக்க வேண்டும். நெய் தடவிய ட்ரேயில் கலக்கிய மாவை ஸ்பூனால் எடுத்து சின்ன சின்ன தாக பரவலாக வைக்கவும். ஓவனில் 300 டிகிரி பாரன்ஹீட்டில் 20 நிமிடம் வைத்து பரிமாறவும்.
     
  7. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    6,170
    Likes Received:
    503
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    சோர்மா லட்டு

    சமைக்க தேவையானவை

    • கோதுமை மாவு - 1 கப்
    • சர்க்கரை - 150 கிராம்
    • உப்பு - சிறிதளவு
    • ஏலக்காய் தூள் - 1 டீஸ்பூன்
    • பால் - 1/4 கப்
    • நெய் - 4 டீஸ்பூன்
    • நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்
    • கோவா (சர்க்கரை நீக்கியது) - 100 கிராம்
    • முந்திரி, பாதாம், கிராம்பு - தேவைக்கேற்ப

    உணவு செய்முறை : சோர்மா லட்டு

    • Step 1.

      முதலில் ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவைக் கொட்டி, சிறு தீயில் வறுத்து வைத்துக்கொள்ளவும். பிறகு, வறுத்த கோதுமை மாவுடன் சர்க்கரை, உப்பு, ஏலக்காய் தூள் மற்றும் கொதித்த பால், சிறிதளவு தண்ணீர், நெய் சேர்த்து நன்றாகப் பிசைந்து சப்பாத்தி மாவைப்போல் தயார் செய்துகொள்ளவும்.
    • Step 2.

      பின்னர் சப்பாத்திபோல் உருட்டி நான்கு துண்டுகளாக நறுக்கிவைத்து ஒரு வாணலியில் எண்ணெய் விட்டுப் பொறித்து, அதை உருளை வடிவத்தில் செய்து அதனுள் கோவா, நெய் மற்றும் பொடியாக நறுக்கிவைத்துள்ள பாதாம், முந்திரி, சிறிதளவு சர்க்கரை, ஏலப்பொடி சேர்த்து பிடிமானத்துக்காக ரெண்டு கிராம்பு வைத்து மைக்ரோ ஓவனில் வைத்து ஒரு நிமிடம் கழித்து எடுத்தால் சுவையும் சத்தும் நிறைந்த சோர்மா லட்டு தயார்.
     
  8. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    6,170
    Likes Received:
    503
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    பனானா மஃபின்


    சமைக்க தேவையானவை

    • மைதாமாவு – 2 கப்
    • சர்க்கரை - 1 1/4 கப்
    • வெண்ணெய் – 2 மேசைக்கரண்டி
    • பால் - 2 மேசைக்கரண்டி
    • முட்டை - ஒன்று (பெரியது)
    • வெனிலா எசன்ஸ் - 1/4 தேக்கரண்டி
    • கனிந்த வாழைப்பழம் – 3
    • உப்பு - ஒரு சிட்டிகை

    உணவு செய்முறை : பனானா மஃபின்

    • Step 1.

      முதலில் மைதா மாவை சலித்து எடுத்துக் கொள்ளவும். வாழைப்பழத்தை மசித்து வைக்கவும். சர்க்கரையை பொடி செய்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் வெண்ணெய் மற்றும் சர்க்கரையை சேர்த்து நன்றாக பீட்டரை வைத்து அடித்துக் கொள்ளவும்.
    • Step 2.

      அதனுடன் முட்டையை உடைத்து ஊற்றி மீண்டும் நன்கு அடிக்கவும். அதன் பின் வாழைப்பழக் கலவையை ஊற்றி அடித்து விட்டு பால் மற்றும் வெனிலா எசன்ஸ் சேர்த்து அடிக்கவும்.
    • Step 3.

      கடைசியாக, சலித்த மைதா மாவை சிறிது சிறிதாக தூவி மரக்கரண்டியால் ஒரே சீராக கலக்கவும். இப்பொழுது அவனை 350 F ல் வைத்து முற்சூடு செய்து வைக்கவும்.
    • Step 4.

      நன்றாக கலந்தவுடன் அதை கப் மோல்டுகளில் பேக்கிங் பேப்பர் போட்டு அதில் கலவையை ஊற்றி வைக்கவும். பேக்கிங் பேப்பர் இல்லையென்றால் வெண்ணெய் அல்லது பேக்கிங் ஸ்ப்ரே தடவி கலவையை வைக்கவும். கலவையை பேக்கிங் மோல்டுகளில் நிரப்பியதும், பேக்கிங் ட்ரேயில் அடுக்கி முற்சூடு செய்து வைத்திருக்கும் அவனில் 40 நிமிடங்கள் வைத்து (மஃபின் நன்றாக வெந்து பொன்னிறமாகும் வரை) எடுக்கவும்.
    • Step 5.

      சில நேரங்களில் 5 நிமிடம் கூடவோ குறையவோ இருக்கலாம், அப்போது மஃபின் வெந்ததா என்பதை அறிய கத்தியை வைத்து குத்தி ஒட்டாமல் வருகிறதா என்பதை பார்க்கவும்.
    • Step 6.

      மஃபின் வெந்து பொன்னிறமானதும் எடுத்து விடவும். சுவையான குழந்தைகள் விரும்பி சாப்பிடக் கூடிய பனானா மஃபின் ரெடி.
     
  9. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    6,170
    Likes Received:
    503
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    அவல் கேசரி

    சமைக்க தேவையானவை

    • சிவப்பு அவல் – 200 கிராம் (½ கப்)
    • தண்ணீர் – 400 கிராம் (1 கப்)
    • ஏலக்காய் – 3 எண்ணம்
    • முந்திரிப் பருப்பு – 6 எண்ணம்
    • சீனி – 100 கிராம்
    • கிஸ்மிஸ் பழம் – 10 எண்ணம்
    • நெய் – 6 டேபிள் ஸ்பூன்

    உணவு செய்முறை : அவல் கேசரி

    • Step 1.

      முதலில் வாணலியில் 2 ஸ்பூன் நெய் விடவும். நெய் உருகியதும் அதனுடன் அவலைச் சேர்த்து வறுக்கவும். அவல் பொறுபொறுவென்று வந்ததும் தனியே எடுத்து வைத்து விடவும். பின்பு 2 ஸ்பூன் நெய்யை விட்டு முந்திரியையும் கிஸ்மிஸையும் வறுத்து எடுக்கவும்.
    • Step 2.

      அடிகனமான பாத்திரத்தில் 1 கப் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். பின் தண்ணீர் நன்கு கொதித்ததும் அதனுடன் வறுத்து வைத்துள்ள அவலை சிறிது சிறிதாகச் சேர்த்து நன்கு கிளறி விடவும்.
    • Step 3.

      அவல் வெந்து தண்ணீர் வற்றும் சமயத்தில் சீனியை சிறிது சிறிதாகச் சேர்த்து கிளறவும்.
    • Step 4.

      பின் கெட்டியாகும் சமயத்தில் வறுத்த முந்திரி, கிஸ்மிஸ் மற்றும் ஏலக்காயை ஒன்றிரண்டாக உடைத்து சேர்க்கவும். பின் மீதமுள்ள நெய்யைச் சேர்த்து நன்கு கிளறி இறக்கி விடவும். சுவையான அவல் கேசரி தயார்.
     
  10. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    6,170
    Likes Received:
    503
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    இனிப்பு அவல்


    சமைக்க தேவையானவை

    • பொரித்த அவல் - அரை கிலோ
    • எள்ளு - 25 கிராம்
    • வேர்க்கடலை - 50 கிராம்
    • பொட்டுக்கடலை - 50 கிராம்
    • வெல்லம் - கால் கிலோ
    • தேங்காய் - ஒரு மூடி
    • ஏலக்காய் - 3

    உணவு செய்முறை : இனிப்பு அவல்

    • Step 1.

      முதலில் தேங்காயை சிறு பற்களாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். வெல்லத்தை பொடியாக நசுக்கி வைத்துக் கொள்ளவும். பின்னர் ஒரு பாத்திரத்தில் பொடித்த வெல்லத்தை போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து அடுப்பை சிறு தீயில் வைத்து பாகு காய்ச்சவும்.
    • Step 2.

      வாணலியில் நறுக்கி வைத்திருக்கும் தேங்காய் பல்லை போட்டு சிவக்க வறுத்து எடுக்கவும். பின்னர் பொட்டுக்கடலை மற்றும் வேர்க்கடலையை ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வறுத்து எடுக்கவும்.
    • Step 3.

      இறுதியாக எள்ளை வாணலியில் போட்டு நன்கு பொரிந்ததும் எடுத்து வைத்துக் கொள்ளவும். பொரித்த அவலை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு அதில் வறுத்த தேங்காய் பல், பொட்டுக்கடலை, வேர்க்கடலை, எள், ஏலக்காய் தூள் ஆகியவற்றை சேர்க்கவும்.
    • Step 4.

      வெல்ல பாகு கம்பி பதம் வந்ததும் எடுத்து இந்த கலவையுடன் ஊற்றி நன்கு கிளறி விடவும். சுவையான கார்த்திகை இனிப்பு அவல் தயார்.
     

Share This Page