தீபாவளி - இனிப்பு வகைகள்

Discussion in 'Diwali Sweets' started by NATHIYAMOHANRAJA, Oct 30, 2018.

  1. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    6,706
    Likes Received:
    509
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    பந்தர் லட்டு

    சமைக்க தேவையானவை

    • அரிசி மாவு - ஒரு டீஸ்பூன்
    • கடலை மாவு - 200 கிராம்
    • நெய் - 100 கிராம்
    • பொடித்த சர்க்கரை - 150 கிராம்
    • எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு
    • ஏலக்காய்த்தூள் - சிறிதளவு
    • வறுத்த முந்திரி - சிறிதளவு
    • உப்பு - ஒரு சிட்டிகை

    உணவு செய்முறை : பந்தர் லட்டு

    • Step 1.

      முதலில் கடலை மாவு, அரிசி மாவு, உப்பு ஆகியவற்றை சேர்த்து, நீர் விட்டு பிசைந்து முறுக்கு அச்சில் போட்டு, சூடான எண்ணெயில் பிழியவும்.
    • Step 2.

      பின்பு முக்கால் பாகம் வெந்து வருகையில் எடுத்து அவற்றை ஆறவிட்டு மிக்ஸியில் பொடி செய்யவும்.
    • Step 3.

      நெய்யை சூடாக்கி பொடித்த சர்க்கரை, ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரி, பொடித்த முறுக்கு சேர்த்துக் கலந்து, உருண்டை பிடிக்கவும்.
     
  2. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    6,706
    Likes Received:
    509
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    ஜவ்வரிசி லட்டு

    சமைக்க தேவையானவை

    • ஜவ்வரிசி - அரை கப்
    • வேர்க்கடலை - 2 ஸ்பூன்
    • பொட்டுக்கடலை - கால் கப்
    • முந்திரி, திராட்சை - 7
    • ஏலக்காய் - 2
    • நெய் – 2 டேபிள் ஸ்பூன்

    உணவு செய்முறை : ஜவ்வரிசி லட்டு

    • Step 1.

      முதலில் முந்திரிப்பருப்பை பொடியாக நறுக்கவும். ஏலக்காயை மற்றும் வெல்லத்தை பொடி செய்து கொள்ளவும். பிறகு வாணலியில் முதலில் ஜவ்வரிசியை போட்டு நன்கு பொரியும் வரை வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
    • Step 2.

      அதன் பின் வேர்க்கடலை, பொட்டுக்கடலை அடுத்தடுத்து போட்டு வறுத்து எடுத்து எல்லாவற்றையும் ஆற வைக்கவும். பிறகு ஆறியதும் எடுத்து மிக்ஸியில் போட்டு பொடிச் செய்துக் கொள்ளவும்.
    • Step 3.

      கடாயில் நெய் ஊற்றி முந்திரி, திராட்சையை வறுத்து எடுத்துக் கொள்ளவும். பின்பு வறுத்து பொடித்த பொடியில் ஏலக்காய் தூள், வெல்லம், வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து கலந்து கொள்ளவும்.
    • Step 4.

      நெய்யை காயவைத்து உருக்கி, ஜவ்வரிசி கலவையில் ஊற்றி கிளறவும். இந்த ஜவ்வரிசி கலவையை நன்கு பிசைந்து இளஞ்சூடான பதத்தில் இருக்கும்பொழுதே உருண்டைகளாக பிடித்து வைக்கவும்.
     
  3. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    6,706
    Likes Received:
    509
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    கடலைமாவு லட்டு

    சமைக்க தேவையானவை

    • கடலை மாவு – 1 கப்
    • சர்க்கரை – 1 கப்
    • உப்பு – 1 சிட்டிகை
    • டால்டா – பொரிக்க (அல்லது நெய்/எண்ணெய்)
    • முந்திரிப் பருப்பு – 10
    • கிஸ்மிஸ் – 20
    • டைமண்ட் கல்கண்டு – 1 டேபிள்ஸ்பூன்
    • கிராம்பு, ஏலக்காய் – 4
    • பச்சை கற்பூரம் – 1 சிட்டிகை
    • மஞ்சள் கலர்

    உணவு செய்முறை : கடலைமாவு லட்டு

    • Step 1.

      முதலில் கடலை மாவைக் கட்டிகளில்லாமல் நன்கு சலித்துக்கொள்ளவும். பிறகு சிட்டிகை உப்பு சேர்த்து, தேவையான நீர் கலந்து தோசைமாவு பதத்திற்குக் கரைத்துக்கொள்ளவும்.
    • Step 2.

      பின்பு அடுப்பில் வாணலியில் டால்டாவைக் காயவைக்கவும்.அதன்பின் பூந்திக் கரண்டி அல்லது துளைகள் உள்ள வேறு ஏதாவது பாத்திரத்தின் உட்புறமாக சிறிது எண்ணெய் தடவிவிட்டு, காய்ந்த டால்டாவிற்கு நேராகப் பிடித்து, மாவை சிறிதுசிறிதாக விட்டால் முத்துமுத்தாக விழ ஆரம்பிக்கும். (விடும்போது டால்டா நன்கு காய்ந்து, தீ மிதமான சூட்டில் இருக்கவேண்டும். குறைவான சூடோ, தீயோ இருந்தால் பூந்தி ஒன்றோடொன்று ஒட்டிக்கொள்ளும்.)
    • Step 3.

      வாணலியில் டால்டா நிறைத்து பூந்தி விழுந்ததும் நிறுத்திவிட்டு, திருப்பிவிட்டு வேகவிடவும்.வெந்ததும் சிறிது முன்கூட்டியே மென்மையான பதத்தில் எடுத்து, வடிதட்டில் கொட்டி உபரி டால்டாவை வடிக்கவும்.
    • Step 4.

      ஒரு கனமான வாணலி அல்லது உருளியில் சர்க்கரையுடன் அரை கப் தண்ணீர் சேர்த்து பாகு காய்ச்சவும். ஒற்றைக் கம்பிப் பாகுப் பதத்திற்கு சிறிது கூடவே கொதிக்கவிட்டு ஆனால் இரட்டைக் கம்பிப் பதம் அளவு கெட்டியாகாமல் இறக்கிவிடவும்.
    • Step 5.

      இறக்குமுன், ஏலப்பொடி, பச்சைக் கற்பூரம், நெய்யில் வறுத்த முந்திரி, கிஸ்மிஸ், ஒன்றிரண்டாக உடைத்த கிராம்பு, மஞ்சள் நிறம் சேர்த்துவிடவும்.
    • Step 6.

      பாகில் டைமண்ட் கல்கண்டு, பூந்தியைக் கலந்து, கலவையில் சிறிது சூடு இருக்குப்போதே கையில் நெய்யைத் தடவிக்கொண்டு சிறு சிறு உருண்டைகளாகப் பிடித்துவைக்கவும்.
     
  4. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    6,706
    Likes Received:
    509
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    கந்தரப்பம்

    சமைக்க தேவையானவை

    • பச்சரிசி-1 கப்
    • புழுங்கல் அரிசி-1/2 கோப்பை, மேல் சம அளவு
    • உளுந்து – அரிசியின் மேல் கோபுர அளவு ,அல்லது 1 மேஜைக்கரண்டி
    • வெந்தயம்-1/2 தேக்கரண்டி
    • ஏலக்காய் - 4
    • தேங்காய் துருவியது-1 மேஜைக்கரண்டி
    • எண்ணை பொரித்தெடுக்க
    • வெல்லம் -1 கப்

    உணவு செய்முறை : கந்தரப்பம்

    • Step 1.

      முதலில் அரிசி மற்றும் பருப்பை நன்கு கழுவி வெந்தயம் சேர்த்து 2 மணி நேரம் வரை ஊரவைக்கவும். பின்பு நீரை வடித்துவிட்டு மிருதுவாக அரைக்கவும்,ஏலக்காய்,தேங்காய் மற்றும் வெல்லப்பொடி சேர்த்து 2 நிமிடம் அரைத்தெடுக்கவும்.
    • Step 2.

      அரைத்த மாவை 1 வரம் வரை பிரிட்ஜில் வைத்து பயன் படிதலாம்.வானலியில் எண்ணையை காய வைக்கவும்.காய்ந்த பின் 1 கரண்டி அளவு மாவை எடுத்து காய்ந்த எண்ணையின் நடுவில் மெதுவாக உற்றவும் ஓரங்களில் வெந்த பின், திருப்பி விட்டு 1/2 நிமிடத்தில் எடுக்கவும்.
    • Step 3.

      இது போன்று மீதமுள்ள மாவையும் ஒன்றொன்றாக சுட்டு எடுக்கவும்.பணியாரம் மீந்து விட்டால் இட்லி பத்திரத்தில் ஆவியில் வைத்து 2 நிமிடம் வேக வைத்து எடுக்கவும்.
     
  5. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    6,706
    Likes Received:
    509
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    நெய் அப்பம்

    சமைக்க தேவையானவை

    • கோதுமை மாவு – ஒரு கப்
    • அரிசி மாவு – கால் கப்
    • வெல்லத் தூள் – முக்கால் கப்
    • தேங்காய்த் துருவல் – கால் கப்
    • ஏலக்காய்த் தூள் – அரை டீஸ்பூன்
    • பேக்கிங் சோடா – ஒரு சிட்டிகை
    • பால் – முக்கால் கப்
    • நெய் – தேவையான அளவு

    உணவு செய்முறை : நெய் அப்பம்

    • Step 1.

      முதலில் கோதுமை மாவு, அரிசி மாவு, வெல்லத் தூள், தேங்காய்த் துருவல், ஏலக்காய்ப் பொடி, பேக்கிங் சோடா இவற்றை நன்றாகக் கலந்துகொள்ளுங்கள். வெதுவெதுப்பான பாலை அதில் சேர்த்து, இட்லி மாவு பதத்தில் கரைத்துக்கொள்ளுங்கள்.
    • Step 2.

      பேக்கிங் சோடா சேர்க்க விரும்பாதவர்கள், அதற்குப் பதில் ஒரு வாழைப்பழத்தைச் சேர்த்துக்கொள்ளலாம்.
    • Step 3.

      பின்னர் கரைத்த மாவை, பத்து நிமிடம் ஊறவிடுங்கள்.
    • Step 4.

      ஆப்பச் சட்டியில் நெய் விட்டுச் சூடானதும் மாவுக் கலவையை ஊற்றுங்கள். ஒரு பக்கம் வெந்ததும் திருப்பி பொன்னிறம் ஆனதும் எடுக்கவும். சுவையான நெய் அப்பம் தயார்.
     
  6. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    6,706
    Likes Received:
    509
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    பொரி உருண்டை

    சமைக்க தேவையானவை

    • அரிசிப்பொரி – 1 லிட்டர்
    • சீனி – 100 கிராம்
    • நெய் – 4 டீஸ்பூன்

    உணவு செய்முறை : பொரி உருண்டை

    • Step 1.

      முதலில் கனமான வாணலியை அடுப்பில் சிறுதீயில் வைத்து நான்கு டீஸ்பூன் நெய்யை விடவும். பின் 100 கிராம் சீனியைச் சேர்க்கவும்.
    • Step 2.

      சீனி நெய்யுடன் சேர்ந்து இளகிய பின் பொறு பொறுப்பான 1 லிட்டர் அரிசிப்பொரியை அதனுடன் சேர்க்கவும்.
    • Step 3.

      நன்கு கிளறிவிடவும். பொரி, சீனி, நெய் சேர்ந்து பெரிய பந்து போல் உருண்டு வரும் வேளையில் கீழே இறக்கி சிறு சிறு உருண்டைகளாகப் பிடிக்கலாம். சுவையான பொரி உருண்டை தயார்.
     
  7. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    6,706
    Likes Received:
    509
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    இனிப்பு சேவு

    சமைக்க தேவையானவை

    • பச்சரிசி மாவு - 1 கப்
    • கடலை மாவு - 1 கப்
    • சர்க்கரை - 3 கப்
    • தண்ணீர் - 1 கப்
    • என்னை - பொரிக்க தேவையான அளவு

    உணவு செய்முறை : இனிப்பு சேவு

    • Step 1.

      முதலில் ஒரு பாத்திரத்தில் 3கப் சர்க்கரையுடன் 1கப் தண்ணீர் சேர்த்து கம்பி பதமாக பாகு காய்ச்சிக் கொள்ளவும்.
    • Step 2.

      இன்னொரு பாத்திரத்தில்,கடலைமாவையும்,பச்சரிசி மாவையும் போட்டு,சிறிது சிறிதாக தண்ணீர் விட்டு,கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.
    • Step 3.

      வாணலியில் என்னையை காய வைத்து,முருக்கு குழாயில் பிசைந்த மாவை போட்டு,பிழிந்து வெந்தவுடன்,அதனை சீனி பாகில் போட்டு எடுக்கவும்.
     
  8. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    6,706
    Likes Received:
    509
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    அதிரசம்


    தேவையான பொருட்கள்:

    பச்சரிசி - 2 கப்
    வெல்லம் - 2 கப்
    பொடித்த ஏலக்காயம் - கால் டீஸ்பூன்
    சுக்கு தூள் - 1 டேபிள்ஸ்பூன்
    நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
    எண்ணெய் - பொறிப்பதற்கு

    செய்முறை:

    அரிசியை எடுத்து ஒரு அரை மணி நேரம் ஊற வையுங்கள். பின்னர் தண்ணீரை வடிகட்டி எடுத்து விட்டு அரிசியை உலர்த்தி (சற்று ஈரப்பதம் இருக்குமாறு) பின்னர் மாவாக அரைத்துக் கொள்ளுங்கள்.

    பாகு செய்ய:

    அடிப்பாகம் கனமான பாத்திரம் ஒன்றை எடுத்து அதில் வெல்லத்தைப் பொட்டு கொஞ்சம் (கால் டம்ளர்) தண்ணீரை ஊற்றி காய்ச்சுங்கள். வெல்லம் நன்றாக கரைந்ததும், மண் இல்லாமல் அதை வடிகட்டி எடுக்கவும். பிறகு வெல்லத்தை மீண்டும் காய்ச்சி பாகு எடுக்க வேண்டும்.

    பாகு சரியாக வந்திருக்கிறதா என்பதை எப்படி அறிய, ஒரு சிறிய கிண்ணத்தில் தண்ணீரை விட்டு, அதில் சிறிது பாகு வெல்லத்தை விடுங்கள். அது கரையாமல், அப்படியே உருண்டு வந்தால் சரியான பதம் என்று அர்த்தம். சரி, பாகு வந்ததும், இறக்கி விடுங்கள். பிறகு அதில், அரிசி மாவையும், ஏலக்காய், சுக்கு தூள் போட்டு கிளறி பின்னர் அதில் நெய்யை விடவும்.

    சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, பதமாக தட்டி அதை எண்ணெயில் போட்டு பொறிக்கவும். சாப்பிட்டுப் பாருங்க, அதிரசம் சுவையாகவும், மிருதுவாகவும் அருமையாக இருக்கும்.
     
  9. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    6,706
    Likes Received:
    509
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    பாசிப்பருப்பு லட்டு

    தேவையான பொருட்கள்:

    பாசிப் பருப்பு - 2 கப்
    சர்க்கரை - 2 கப்
    நெய் 200 கிராம்
    ஏலக்காய் - 6
    முந்திரி உடைத்தது - 50 கிராம்

    செய்முறை:

    முந்திரியை சிறிது நெய்யில் வறுத்து வைத்துக் கொள்ளவும். அதே வாணலியில் பாசிப் பருப்பை வாணலியில் போட்டு வாசனை வரும் வரை வறுத்து ஆற வைத்து மிக்சியில் அரைக்கவும்.

    அரைத்த மாவை சலித்து கொள்ளவும். மிக்சியில் சர்க்கரையை போட்டு பொடித்து கொள்ளவும். ஒரு தட்டில் அரைத்த மாவு, சர்க்கரை, ஏலக்காய் துள், வறுத்த முந்திரி அனைத்தையும் போட்டு நன்றாக கலந்து வைக்கவும்.

    வாணலியில் 200 கிராம் நெய் ஊற்றி உருக்கவும். நெய் கருகாமல் சூடானவுடன் அதை மாவின் மேல் ஊற்றவும். அதை மாவை கலந்து வெதுவெதுப்பான சூட்டிலேயே கையால் லட்டு பிடித்து ஆற விடவும். அவ்வளவுதான் சுவையான லட்டு தயார்.
     
  10. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    6,706
    Likes Received:
    509
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    கோதுமை அப்பம்

    தேவையான பொருட்கள்:

    கோதுமை மாவு - 1 கப்
    அரிசி மாவு - 2 மேஜைக்கரண்டி
    வெல்லம் - 1/2 கப்
    வாழைப்பழம் - 1
    ஏலக்காய் - 1
    சமையல் சோடா - 1 சிட்டிகை
    உப்பு - 1 சிட்டிகை
    எண்ணெய் அல்லது நெய் - பொறிக்க தேவையான அளவு

    செய்முறை:

    பொடி செய்த வெல்லம், மற்றும் அனைத்தையும் (எண்ணெய் தவிர) ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து, வடை மாவை போல கரைத்துக்கொள்ளவும்.எண்ணெய்யை காய வைத்து ஒரு கரண்டி கொண்டு, மாவை எண்ணெய்யில் ஊற்றவும். வெந்து மேலே எழும்பி வரும் பொழுது, திருப்பி விட்டு வேக விடவும். சிவந்ததும் எண்ணெய்யை வடித்து எடுத்துவிடவும்.

    கோதுமை மாவு, அரிசி மாவு, சோடா உப்பு மூன்றையும் கலந்து வைக்கவும். வெல்லத்தை 200 கிராம் தண்ணீர் ஊற்றி பாகு காய்ச்சி வடிகட்டி வைத்துக் கொள்ளவும். இதனுடன் ஒரு வாழைப்பழத்தையும் சேர்த்து பிழைந்து கொள்ளவும். வடிகட்டிய பாகை கலந்து வைத்துள்ள மாவில் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி இட்லி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.

    அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் ஒரு குழிக்கரண்டி மாவு எடுத்து எண்ணெயில் ஊற்றவும். ஒரு தடவைக்கு நான்கு அப்பங்கள் வீதம் ஊற்றவும். ஒரு நிமிடம் கழித்து திருப்பி போடவும். நன்கு வேகும்வரை பொரித்து சிவந்தவுடன் எடுத்து வைக்கவும்.

    மீதமுள்ள எல்லா மாவையும் இதே முறையில் சுட்டு எடுக்கவும். சுவையான கோதுமை அப்பம் தயார்.
     

Share This Page