தீபாவளி - இனிப்பு வகைகள்

Discussion in 'Diwali Sweets' started by NATHIYAMOHANRAJA, Oct 30, 2018.

 1. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  6,330
  Likes Received:
  503
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  பச்சரிசி அதிரசம்


  சமைக்க தேவையானவை

  • பச்சரிசி - 2½ கப் (அ) 500 கிராம்
  • கறுப்பு வெல்லம் -300 கிராம்
  • ஏலக்காய் பொடி -1 டீஸ்பூன்
  • எள் - 1 டீஸ்பூன்
  • எண்ணெய் – தேவையான அளவு
  • Step 1.

   முதலில் அரிசியை 1 – 1½ மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும். பின்னர் தண்ணீரை நன்கு வடித்து விடவும்.
  • Step 2.

   பின் அரிசியை உலர்ந்த துணியில், நிழலில் காய வைக்கவும். முக்கால் பாகம் காய்ந்தவுடன் மிசினில் இடித்துக் கொள்ளவும்.
  • Step 3.

   இடித்து, சலித்துக் கொள்ளவும். வெல்லத்தை கனமான பாத்திரத்தில் ¼ கப் தண்ணீர் விட்டு காய்ச்சவும். வெல்லம் முழுவதும் கரைந்ததும்,
  • Step 4.

   அதனை வடிகட்டி மீண்டும் கம்பிபதம் வரும் வரை மெல்லிய தீயில் காய்ச்சவும். ஏலக்காய் பொடி, எள் ஆகியவற்றை வெல்லபாகில் சேர்க்கவும்.
  • Step 5.

   பின் சிறிது சிறிதாக வெல்லப் பாகை அரிசிமாவில் சேர்த்து கட்டி விழாதவாறு கிளறவும். அதிரசமாவானது சப்பாத்தி பதத்திற்கு வரும்.
  • Step 6.

   அடிகனமான பாத்திரத்தில் எண்ணெயை காய வைத்து அதிரசமாவை வடை மாதிரி தட்டி எண்ணெயில் பொரித்து எடுக்கவும். சுவையான பச்சரிசி அதிரசம் தயார்.
   

Share This Page