தீபாவளி - இனிப்பு வகைகள்

Discussion in 'Diwali Sweets' started by NATHIYAMOHANRAJA, Oct 30, 2018.

  1. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    7,858
    Likes Received:
    523
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    தேங்காய் லட்டு

    தேவையான பொருட்கள்
    துருவிய தேங்காய் – ஒரு கப்
    சக்கரை – ஒரு கப்
    நெய் – இரண்டு தேகரண்டி
    முந்திரி – ஐந்து நம்பர்
    திராட்சை – ஐந்து நம்பர்
    ஏலக்காய் – மூன்று (பொடித்தது)
    செய்முறை
    ஒரு பாத்திரத்தில் நெய் ஊற்றி காய்ந்ததும் முந்திரி, திராட்சை போட்டு பொன்னிறம் வந்தவுடன் சக்கரை சேர்த்து நன்றாக கிளறவும்.
    சக்கரை உருகியதும் தேங்காய் திருவல் சேர்த்து கைவிடாமல் கிளறவும் ஐந்து நிமிடகளுக்கு.
    பிறகு, ஒரு தட்டில் எடுத்து வைத்துகொள்ளவும். மீதமான சூட்டில் லட்டு பிடிக்கவும்.
    சிம்பிள்லான ஸ்வீட் இது.
     
  2. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    7,858
    Likes Received:
    523
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    கோதுமை பாயசம்

    தேவையான பொருட்கள்
    நெய் – இரண்டு டீஸ்பூன்
    முந்திரி – ஐந்து
    ஏலக்காய் பொடி – கால் டீஸ்பூன்
    சுக்கு பொடி – கால் டீஸ்பூன்
    வெல்லம் – அரை கப்
    தண்ணீர் – தேவையான அளவு
    தேங்காய் பால் – கால் கப்
    கோதுமை ரவை – ஒரு கப்
    செய்முறை
    கடாயில் நெய் ஊற்றி காய்ந்ததும் முந்திரி போட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்து வைத்துகொள்ளவும்.
    அதே கடாயில் சிறிது நெய் ஊற்றி கோதுமை ரவையை வறுத்து எடுக்கவும்.
    பிறகு, ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வருத்த கோதுமை ரவையை சேர்த்து வேகவிடவும், பின், வெல்லம் தண்ணீரில் கரைத்து வடிகட்டி அதில் ஊற்றவும், ஏலக்காய் பொடி, சுக்கு பொடி சேர்த்து ஒரு கொதிவிட்டு நெய் இரண்டு டீஸ்பூன் சேர்த்து வருத்த முந்திரி, தேங்காய் பால் சேர்த்து இரண்டு நிமிடம் கழித்து எறக்கிவிடவும்.
     
  3. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    7,858
    Likes Received:
    523
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    பாதாம் அல்வா

    தேவையான பொருட்கள்
    பாதாம் – 1/2 கப்
    சர்க்கரை – 1/2 – 3/4 கப்
    பால் – 1/2 கப்
    நெய் – 1/4 – 1/2 கப்
    குங்குமப்பூ – சிறிதளவு(ஒரு மேசைக்கரண்டி பாலில் ஊற வைக்கவும் )
    செய்முறை
    பாதாம் பருப்புகளை இரவு முழுவதும் ஊற வைத்து, பின் தோலை உரித்துக் கொள்ளவும்.
    இல்லையெனில் சுடு நீரில் சில நிமிடங்கள் பாதாம் பருப்புகளைப் போட்டு கொதிக்க வைத்து தோல் உரித்துக் கொள்ளவும்.
    தோல் உரித்து வைத்துள்ள பாதாம் பருப்பை 1/4 கப் பால் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
    பாத்திரத்தில் 1/4 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். தண்ணீர் கொதித்தவுடன் அடுப்பை அணைத்து விட்டு சர்க்கரை சேர்த்து நன்கு கரையுமாறு கலந்து கொள்ளவும்.
    சர்க்கரை கரைந்த பின்பு, இதனுடன் அரைத்து வைத்துள்ள பாதாம் விழுது, மீதமுள்ள பால், குங்குமப்பூ சேர்த்து, அடுப்பை மிதமான சூட்டில் வைத்து கிளறவும்.
    அல்வா கெட்டியாக ஆரம்பித்தவுடன்( 2 தேக்கரண்டி நெய் தனியே வைக்கவும்) நெய்யை சேர்த்து குறைந்த தீயில் நன்கு கிளறவும்.
    அல்வா பாத்திரத்தின் ஓரத்தில் ஒட்டாமல் வரும் வரை நன்கு கிளறவும்.
    இறுதியாக அடுப்பை அணைத்து விட்டு எடுத்து வைத்துள்ள 2 தேக்கரண்டி நெய் சேர்த்து சிறிது நேரம் கிளறவும். இப்படி செய்வதால் அல்வா மிகவும் மிருதுவாக இருக்கும்.
    பாதாம் அல்வா தயார்.
     
  4. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    7,858
    Likes Received:
    523
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    ஜிலேபி

    தேவையான பொருட்கள்
    மைதா மாவு – ஒரு கப்
    பட்டை – ஒரு துண்டு
    ஏலக்காய் – 2
    ரோஸ் வாட்டர் – சிறிது
    பேக்கிங் பவுடர் – கால் தேக்கரண்டி
    பேக்கிங் சோடா – கால் தேக்கரண்டி
    ஃபுட் கலர் – சில துளிகள்
    சர்க்கரை – 2 கப்
    எண்ணெய் – பொரிக்க
    செய்முறை
    மைதா மாவுடன் ஃபுட் கலர், பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா கலந்து தேவையான நீர் விட்டு (கெட்டியாகவோ, அல்லது நீர்க்கவோ இருக்கக்கூடாது) கலந்து 4 மணி நேரம் வைக்கவும்.
    புளித்த பின் மாவின் பதத்தை சரிபார்க்கவும். பிழிந்து விடும் பதத்தில் இருக்கவேண்டும்.
    மாவு புளித்த பின் ஒரு கெட்சப் பாட்டிலில் ஊற்றியோ அல்லது ஒரு ஜிப் லாக் பேக்கில் ஊற்றியோ தயாராக வைக்கவும்.
    சுகர் சிரப் செய்ய ஒரு கப் நீர் விட்டு சர்க்கரை சேர்த்து ஏலக்காய், பட்டை சேர்த்து கொதிக்க விடவும்.
    ஒரு கம்பி பதம் வந்ததும் 2 தேக்கரண்டி ரோஸ் வாட்டர் கலந்து வைக்கவும்.
    எண்ணெய் காய்ந்ததும் ஜிலேபியாக பிழியவும்.
    முக்கியமாக எண்ணெயின் சூடு, சிறிது மாவை விட்டதும் மேல் எழும்பி வரும் பதத்தில் இருக்கவேண்டும்.
    அதிக சூடாக இருந்தாலோ, சூடு குறைவாக இருந்தாலோ ஜிலேபி ஜிலேபியாக வராது.
    இரண்டு பக்கமும் திருப்பி விட்டு நன்றாக சிவந்ததும் எடுத்து எண்ணெய் வடிய விட்டு சூடான சிரப்பில் போடவும்.
    சிரப்பில் 5 நிமிடம் ஊறினால் போதும். மாலத்தீவு முறையில் செய்த ஜிலேபியா தயார்.
     
  5. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    7,858
    Likes Received:
    523
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    பிஸ்தா பர்பி

    தேவையான பொருட்கள்:
    பால் – நான்கு லிட்டர்
    சர்க்கரை – ஒண்ணேகால் கிலோ
    பிஸ்தா – 250 கிராம்
    பிஸ்தா கலர் – 2 சொட்டுக்கள்
    செய்முறை:
    பாலை அடிகனமான பாத்திரம் அல்லது வாணலியில் ஊற்றி சுண்டக் காய்ச்சவும்.
    கோவா பதத்திற்கு பால் சுண்டியதும் சர்க்கரை சேர்த்துக் கிளறவும்.
    பிஸ்தா பருப்பை பொடியாக துருவவும்.
    துருவிய பிஸ்தா எசன்ஸை கோவாவுடன் சேர்த்துக் கிளறி ஒரு தட்டில் கொட்டி பரப்பவும்.
    ஆறியவுடன் வேண்டிய வடிவத்தில் துண்டுகள் போடலாம்.
     
  6. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    7,858
    Likes Received:
    523
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    ரவா லட்டு

    தேவையான பொருட்கள்
    வெள்ளை ரவை – ஒரு கிலோ
    சக்கரை – ஒன்றைகிலோ
    ஏலக்காய் – பத்து (பொடித்தது)
    நெய் – 2௦௦ கிராம்
    முந்திரி – 5௦ கிராம்
    செய்முறை
    கடாயில் ரவையை வறுத்து பொடி செய்து கொள்ளவும்.
    சக்கரை, ஏலக்காய் ஆகியவற்றை நன்றாக பொடி செய்து கொள்ளவும்.
    பிறகு, ரவை, ஏலக்காய், சக்கரை ஆகியவற்றை ஒன்றாக கலந்து கொள்ளவும்.
    நெய்யை உருகுமமளவிற்கு இலேசாக சூடு செய்து அதனுடன் கலந்து நன்கு கலக்கவும்.
    இந்த மாவை சீரான அளவு உருண்டைகளாக உருட்டவும்.
    தேவைபட்டால் பால் சேர்க்கலாம்.
    ஆனால் லட்டை சிக்கரமாக` பயன் பயன்படுத்தி விட வேண்டும்.
     
  7. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    7,858
    Likes Received:
    523
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    குலாப் ஜாமூன்

    தேவையான பொருட்கள்
    பால்கோவா – கால் கிலோ (சக்கரை இல்லாமல்)
    மைதா – 5௦ கிராம்
    எண்ணெய் – தேவையான அளவு
    சக்கரை – 15௦ கிராம்
    ஏலக்காய் – நான்கு
    செய்முறை
    மைதா மாவுடன், பால்கோவா சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.
    ரொம்ப கெட்டியாகவோ அல்லது ரொம்ப தளர்வாகவோ இருக்க கூடாது.
    சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.
    சக்கரை சிரப் செஉது அதில் ஏலக்காய் பொடி சேர்த்து கொள்ளவும்.
    கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் உருண்டைகளை போட்டு பொன்னிறமானதும் எடுத்து விடவும்.
    பிறகு சக்கரை சிரப்பில் சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
     
  8. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    7,858
    Likes Received:
    523
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    தேங்காய் மாம்பழ பர்ஃபி

    தேவையான பொருட்கள்
    மாம்பழ – இரண்டு கப் (நறுக்கியது)
    சர்க்கரை – நான்கு கப்
    சர்க்கரை சேர்க்காத கோவா – அரை கப்
    தேங்காய் துருவல் – ஒரு கப்
    செய்முறை
    மாம்பழம், தேங்காய் துருவல் சேர்த்து விழுதாக அரைத்து கொள்ளவும்.
    பிறகு, கடாயில் சர்க்கரை, கோவா சேர்த்து பாகு பதம் வந்தவுடன் அரைத்த விழுதில் கொட்டி கிளறவும்.
    ஒரு தட்டில் நெய் தடவி அதில் அந்த கலவையை கொட்டி துண்டுகள் போட்டு பரிமாறவும்.
     
  9. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    7,858
    Likes Received:
    523
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    சந்திரகலா

    தேவையான பொருட்கள்
    மைதா – ஒரு கப்
    நெய் – அரை கப்
    சர்க்கரை – ஒரு கப்
    கோவா – 35 கிராம் (சர்க்கரை இல்லாதது)
    ஆரஞ்சு கலர் – கால் டீஸ்பூன்
    சோடா – கால் டீஸ்பூன்
    முந்திரி பவுடர் – மூன்று டேபிள்ஸ்பூன்
    ஏலக்காய் தூள் – அரை டீஸ்பூன்
    எண்ணெய் – தேவைகேற்ப
    செய்முறை
    சர்க்கரை இல்லாத கோவாவில் ஏலக்காய் தூள், முந்திரி தூள் சேர்த்து பிசையவும்.
    சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து கலந்து கொதிக்கவிட்டு ஒரு கம்பி பதம் பாகு வந்தவுடன் இறக்கி வைத்து கொள்ளவும்.
    பிறகு, ஒரு பத்திரத்தில் மைதா மாவு சிறிதளவு தண்ணீர், கலர் பவுடர், சோடா ஆகியவற்றை கலந்து நெய் சூடாக்கி அதில் கலந்து நன்றாக பிசையவும்.
    பிசைந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக எடுத்து பூரி போல் திரட்டி நடுவில் கோவா கலவையை வைத்து சோமாசு போல் செய்து கடாயில் எண்ணெய் வைத்து காய்ந்ததும் அதில் போட்டு பொரித்து எடுக்கவும்.
    பிறகு, சர்க்கரை பாகில் போட்டு ஊறவைத்த பின் எடுத்து பரிமாறவும்.
     
  10. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    7,858
    Likes Received:
    523
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    பெஸரட் லட்டு

    தேவையான பொருட்கள்
    பயத்தம்பருப்பு – அரை கப்
    சர்க்கரை – அரை கப்
    நெய் – கால் கப்
    ஏலக்காய் தூள் – சிறிதளவு
    முந்திரி – பத்து
    திராட்சை – பத்து
    செய்முறை
    கடாயில் பயத்தம்பருப்பை போட்டு நன்றாக வறுத்து எடுக்கவும்.
    பிறகு, அதை பவுடர் செய்து கொள்ளவும்.
    சர்க்கரையையும் பவுடர் செய்து கொள்ளவும்.
    பிறகு, கடாயில் நெய் ஊற்றி காய்ந்ததும் முந்திரி, திராட்சை போட்டு வறுத்து எடுத்து கொள்ளவும்.
    ஒரு பாத்திரத்தில் பயத்தம்பருப்பு பவுடர், சர்க்கரை பவுடர், வறுத்த முந்திரி, திராட்சை, ஏலக்காய் தூள், தேவையான அளவு நெய் விட்டு சிறு சிறு உருண்டைகளாக பிடித்து கொள்ளவும்.
    சுவையான பயத்தம்பருப்பு லட்டு ரெடி.
     

Share This Page