தீபாவளி லேகியம் / Diwali Legiyam

Discussion in 'Diwali Sweets' started by saravanakumari, Oct 30, 2018.

 1. saravanakumari

  saravanakumari Administrator Staff Member Manager

  Joined:
  Nov 12, 2014
  Messages:
  2,278
  Likes Received:
  1,040
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  home maker
  Location:
  villupuram
  தீபாவளி லேகியம்

  தீபாவளி நெருங்கி விட்டது. அனைவரின் வீட்டிலும் இனிப்பு பலகாரங்கள், கை முறுக்குகள் போன்றவற்றை இந்நேரம் செய்து தயார்படுத்தி இருப்பீர்கள்.

  தீபாவளியன்று புத்தாடை உடுத்தி காலையில் எண்ணை தேய்த்துக் குளித்துவிட்டு பலகாரங்களை உண்பதன் வழி தொண்டை கட்டு வரும். அதோடுமட்டுமல்லாமல் வயிற்றில் அஜீரணம் ஏற்படும். மேலும் பட்டாசு புகையினாலும் சிலருக்கு சளி பிடிக்கும். இதனைத் தவிர்க்கவே தீபாவளி லேகியம் தயாரிக்கப்படுகிறது.இந்த லேகியத்தை குளித்து விட்டு வந்து ஒரு உருண்டை வாயில் போட்டுக் கொள்ள வேண்டும்.

  சரி தீபாவளி லேகியம் எப்படி செய்வது என்று பார்ப்போம்.

  தீபாவளி லேகியம் செய்ய தேவையான பொருட்கள்:

  தணியா : 4 கப்
  இஞ்சி : 200 கிராம்
  ஓமம் : 100 கிராம்
  சுக்கு, மிளகு, திப்பிலி : தலா 10 கிராம்
  வெல்லம் 100 கிராம்: (துருவிக் கொள்ளவும்)
  பொடித்த ஏலக்காய் 5 கிராம்: (விருப்பப்பட்டால்)
  நெய் : 1/4 கப்

  செய்முறை:

  தணியாவை ஊற வைத்து அரைத்து வடிகட்டி சாறு எடுக்கவும். இஞ்சியை அரைத்து வடிகட்டி சாறு எடுக்கவும். சுக்கு, மிளகு, திப்பிலியை பொடித்துக் கொள்ளவும்.

  வடிகட்டிய தணியா சாறு, இஞ்சிச் சாறு, சுக்கு மிளகு திப்பிலி பொடி, ஓமம், பொடித்த ஏலக்காய் அனைத்தையும் சேர்த்து, வெல்லத்துடன் கலக்கவும்.அடி கனமான வாணலியை அடுப்பில் வைத்து இந்தக் கலவையை சேர்த்துக் கிளறி, பின்னர் நெய் சேர்த்து, சுருள வந்தவுடன் கீழே இறக்கி, ஆற வைத்து, பாட்டிலில் போட்டு வைத்துக் கொள்ளவும்.

  தீபாவளி பலகாரத்தை தைரியமாக சாப்பிட்டு ஒரு உருண்டை லேகியத்தை எடுத்து தவறாமல் வாயில் போட்டு கொள்ளுங்கள்.

  தீபாவளியை சந்தோஷமாக கொண்டாடுங்கள்.
   
  jayalashmi likes this.
 2. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  6,802
  Likes Received:
  509
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  தீபாவளி மருந்து

  தேவையானவை:


  மல்லி (தனியா), மிளகு, சீரகம், ஓமம் - தலா 2 டேபிள்ஸ்பூன், சுக்கு - 50 கிராம், ஏலக்காய் - 6, பொடித்த வெல்லம் - 100 கிராம், நெய் - 50 கிராம், தேன் - ஒரு டேபிள்ஸ்பூன், நல்லெண்ணெய் - 50 மி.லி,
  தண்ணீர் - ஒரு கப்

  செய்முறை:

  ஒரு கப் வெந்நீரில் மல்லி, மிளகு, சீரகம், ஓமம், சுக்கு, ஏலக்காய் ஆகியவற்றைச் சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு நீரை வடிகட்டிவிட்டு மிக்ஸியில் மிருதுவாக அரைத்தெடுக்கவும். கடாயில் அரைத்த விழுதுடன் நல்லெண்ணெய், வெல்லத்தூள் சேர்த்து, அடுப்பை சிறுதீயில் வைத்து 15 முதல் 20 நிமிடங்கள் வரை கிளறவும். அதனுடன் நெய் சேர்த்துக் கிளறி, கலவை கெட்டியாக வரும்போது இறக்கி ஆறவிடவும். ஆறியதும் தேன் கலந்து ஈரமில்லாத டப்பாவில் சேகரிக்கவும்.
  [​IMG]
  குறிப்பு: கங்கா ஸ்நானத்துக்கு இணையாக தீபாவளியில் இன்னொரு விஷயமும் பிரபலம். அது தீபாவளி மருந்து. வீட்டுப் பெரியவர்கள், குடும்பத்திலுள்ள அனைவருக்கும் குட்டிக்குட்டியாக மூன்று உருண்டைகள் தீபாவளி மருந்தைக் கொடுப்பது மரபு. செரிமானத்தைச் சீராக்கும். மருத்துவ குணம் கொண்டது இந்த மருந்து. தீபாவளியின்போது கணக்கின்றிச் சாப்பிடுகிற இனிப்பு, காரங்கள் வயிற்றைப் பதம் பார்க்காமல் இருப்பதற்கான முன்னெச்சரிகை சிகிச்சையும்கூட.
   
 3. jayalashmi

  jayalashmi Active Member

  Joined:
  Nov 12, 2017
  Messages:
  304
  Likes Received:
  246
  Trophy Points:
  43
  Gender:
  Female
  நல்லதகவல்
   
 4. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  6,802
  Likes Received:
  509
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI

Share This Page