தென்றலே திரும்பி விடு.... Thendrale Thirumbi vidu ..by Tamilvenba

Discussion in 'Serial Stories' started by தமிழ் வெண்பா, Mar 5, 2019.

  1. தமிழ் வெண்பா

    தமிழ் வெண்பா Active Member

    Joined:
    Mar 5, 2019
    Messages:
    137
    Likes Received:
    151
    Trophy Points:
    43
    Gender:
    Female
    "ஏய் இங்க இப்ப எதுக்குடி கூப்பிட்டுட்டு வந்துருக்க... நிறைய வேலையெல்லாம் இருக்கு...நான் போகனும் நகருடி..."

    "சரி போ...." என்றவள் கதவை சாத்தி அதன் மீது சாய்ந்து நின்றுக் கொண்டாள்....

    "போ... போனா.... வழிய விடுடி எரும..."

    "முடியாதுடா.... என்னடா பண்ணுவ..."

    "விளையாதடி.... கீழ நம்பள தேடுவாங்க....நீ நகரு மொதல..."

    "நகர முடியாதுடா.... என்னடா பண்ணுவ... நானும் பாக்குறேன் ரொம்ப ஓவரா போற..... மிஞ்சான கெஞ்சற.... கெஞ்சனா மிஞ்சற...." என்றபடி புடவையை இழுத்து இடுப்பில் சொருகி கொண்டு சண்டைக்கு தயாராகி அவனை நெறுங்கி வந்தாள்...

    "வேணாம் நான் ரொம்ப கோபமா இருக்கேன்.... அப்புறம் என்ன நடந்தாலும் அதுக்கு நான் பொறுப்பில்லை...." என்றபடி அவன் பின்னால் நகர....

    "கோபமா இருக்க மூஞ்சியப் பாரு... ஏதாவது ஒன்னையாவது உருபடியா செய்ய தெரியுதா... கோபமா இருக்கானான் கோபமா... அப்புறம் என்டா வச்ச கண்ணு வாங்காம என்னையே பாத்துக்கிட்டு இருக்க..."

    "நான் அங்க இருந்த வேற யாரையாவது பாத்து இருப்பேன்..."

    "ஓஓஓ.... அப்படிங்களா சார்.... அப்ப யார பாத்து பச்ச சட்டைய மாத்திட்டு நீல கலருல போட்டு வந்தீங்களாம்.... ம்ம்ம்....."

    ''ஐய்யையோ ராட்சசி பாத்துட்டா போலயே.... எத சொல்லி சமாளிக்கறது.... சமாளிப்போம்.... சமாளிச்சு தானே ஆகனும்...."

    "நான் கேக்கறேன்.... நீ என்னடா வாய மூடிட்டு இருக்க.... எப்படி சமாளிக்கலாமுனு யோசிக்கறீயா....."

    "அது.... அது.... அந்த சட்டை...."

    "அத தான் ஏன் மாத்துனனு கேக்கறன்...."

    "அதுல ஏதோ கற பட்டுட்டு.... அதான்...."

    "என்ன கற...."

    "அது அது மஞ்சள் கற...."

    "ஹா... ஹா.... என் செல்ல லூசு மாமா.... உனக்கு சமாளிக்க கூட தெரியாதாடா... யூ ஆர் சோ ஸ்விட்....." என அவனை நெருங்கி இருந்தாள் அவள்....

    அவன் இன்னும் பின்னே நகர.... சுவர் தான் இருந்தது.... நகர இடமில்லை....

    "ஏன் இப்ப அப்படி என்ன சமாளிக்க தெரியாம இருக்கேன்...."

    "ஏதோ டீ காபி கறனா நம்புவாங்க... மஞ்ச கறனா எப்படிடா நம்புவாங்க...."

    "நான் என்ன பொய்யா சொல்லறேன்.... காலர் இரண்டு பக்கமும் இருந்துச்சே..."

    "என்ன மாமா காமெடி பண்ணறதா நெனைப்பா... அப்ப இது என்ன..." என்று புது சட்டை என்பதால் அவன் சட்டை காலரில் வைக்கப்பட்டிருந்த மஞ்சளை காட்டினாள் அவள்....

    "அது அது... எல்லா புது சட்டையிலையும் இருக்கு.... இத போட்டதுக்கு அப்பறம் தான் தெரிஞ்சுது.... அதான் எதுக்கு சும்மா சும்மா மாத்திட்டுனு விட்டுட்டேன்...."

    "ஆகான்... அப்புறம்...." என அவனை நெருங்கி நின்றவள் அவன் கண்களை பார்த்து கேட்க....

    "அ....ப்...ப...ற...ம்...."

    "ம்ம்ம்ம்ம்.... அப்புறம்.... சொல்லு...." என அவனை நெருங்கி நின்று மீசை முடியை திருகி விளையாடினாள்...... இது ஒன்று போதாதா காதல் கொண்ட ஆணின் மனதை களவு கொள்ள...

    "ஏய் இப்படியெல்லாம் பண்ணாத.... அப்பறம் நடக்கற எதுக்கும் நான் பொறுப்பு இல்ல..."

    "என்ன நடக்கும் மாமா..." என அப்பாவியாய் அவன் சட்டை பட்டனை திருகிக் கொண்டே அவள் கேட்க.... அதற்கு மேல் பொறுக்க முடியாதவனாய் தன்னோடு சேர்த்து அவளை இறுக அணைத்து கொண்டான்....

    "ஏன் என்ன நடக்குனு உனக்கு தெரியாதா...." என்றபடி ஆடைகள் இல்லா இடையில் அவன் கரத்தால் வருடியபடி ஒற்றை புருவம் உயர்த்தி அவளிடம் வினவ.... "தெரியாதே..." என அவள் இதழ் சுழித்து சொன்ன அழகில் மயங்கி அவள் இதழ் நெருங்கிய நேரம் கதவை திறந்துக் கொண்டு சிவ பூஜையில் கரடியாய் வந்து நின்றான் கவி....

    அவனை பார்த்ததும் மகிழனை விலக்கி கொண்டு யாழ் கீழே ஓடிவிட... கவியை முறைத்துக் கொண்டு நின்றிருந்தான் மகிழ்.....

    "நீ இந்த நேரத்துல இங்க ரொமான்ஸ் பண்ணுவனு எனக்கு எப்படி தெரியும்... அதுக்கு ஏன்டா முறைக்கற..... கதவ தாப்பாள் போட்டுட்டு பண்ண வேண்டியது தான....."


    "இந்த நேரத்துல நீ இங்க கரடியாட்டாம் வருவனு எனக்கு மட்டும் எப்படி தெரியும்...."

    "ஏன் சொல்ல மாட்ட...."

    "ஏன் இப்ப இங்க வந்த...."

    "இங்க பட்டு புடவ இருக்காம்.... வந்தவங்க யாருக்கோ வச்சு குடுக்கனுமாம்.... அம்மா அவங்க சீமந்த புத்திரன எடுத்துட்டு வர சொல்லி அனுப்பனாங்களாம்.... போனவன ஆளே காணுமா.... அதான் நான் வந்தேன்...."

    "ஹி..... ஹி....."

    "வழியுது... தொடச்சிக்கோ...." என்றவன் அவனை இடித்து தள்ளிவிட்டு புடவையை எடுத்துக் கொண்டு நகர்ந்தான்....

    "மறந்துட்டேன்டா.... இன்னைக்கு தானே யாழுக்கு சர்ப்ரைஸ் குடுக்க போற.... எல்லா ஏற்பாடும் பண்ணிட்டியா...."

    "ம்ம்ம்.... பண்ணிட்டேன்டா..... இப்ப உன் தங்கச்சி அத பாத்து ஆச்சரிய பட வேண்டியது ஒன்னு தான் பாக்கி..."

    "ஆல் தி பெஸ்ட்டா...." என்றவன் அவனையும் கையோடு இழுத்து கொண்டு கீழே சென்று விட்டான்...

    ஒரு வழியாக எல்லா சடங்குகளும் முடிந்து மற்ற வேலைகளும் முடிந்து குடும்பத்தினர் மட்டும் மணமக்களுடன் கடைசி பந்தியில் அமரந்து கூத்தும் கேலியும் கிண்டலுமாய் சாப்பிட்டு முடிக்க மணி பத்தாகியது...

    உடனே அடுத்த சடங்காக அனைவரும் குலதெய்வ கோவிலுக்கு கிளம்பினர்.... மணமக்கள் மட்டும் தனித்து காரில் வர மற்ற குடும்பத்தினர் அனைவருக்கும் வேன் ஏற்பாடு செய்யபட்டிருந்தது.... அவனைவரும் அவர் அவர் ஜோடியுடன் அமர.... கவியும் ஆசையாக நிலாவின் பக்கத்தில் அமர போக.... அவனை இடித்து தள்ளிவிட்டு நிலா பக்கத்தில் மதி அமர்ந்து கொள்ள.... "கல்யாணத்துக்கு இன்னும் ஒரு மாசம் இருக்கு.... அதுகுள்ள என்ன அவசரம்.... இங்க வாங்க மாப்பிள..." என நம் மாணிக் பாஷா அவனை இழுத்து அருகே அமர்த்திக் கொள்ள.... "வட போச்சே..."ங்கற ரேஞ்சுல கவி பாவமா நிலாவ பாக்க... அதை கண்டு அங்கே ஒரு சிரிப்பலையே எழுந்து அடங்க.... சந்தோஷமாக அந்த பயணம் தொடங்கியது....

    யாழின் கையில் களைப்பில் உறங்கி கொண்டிருந்த தருவை வாங்கி தன்னுடன் வைத்துக் கொண்டார் வாணி.... கேலியும் கிண்டலும் என வேனே கல்யாண கலைகட்டி இருக்க.... இரவு சரியாக உறங்காததாலும் சில நாட்களாய் இருந்த வேலை பளுவனாலும் தன்னவளை நெருங்கி அமர்ந்து அவள் தோள் சாய்ந்து உறங்க தொடங்கியிருந்தான் மகிழ்.... அவளும் அவனை தன் கை வளைவிற்குள் கொண்டு வந்து அரவணைத்து அவன் தலை மீது தலை சாய்த்து உறங்க தொடங்கினாள்... அவளும் நேற்று இரவு உறங்கவில்லை தானே...

    நீண்ட நாட்களுக்கு பிறகு இருவரின் உள்ளமும் தெளிந்த நீரோடைப் போல் எந்த சலனமும் இல்லமால் நிம்மதியாக அமைதியான உறக்கத்தில் ஆழ்ந்தது....

    - காதல் தென்றல் மீண்டும் வீசும்...
     
  2. தமிழ் வெண்பா

    தமிழ் வெண்பா Active Member

    Joined:
    Mar 5, 2019
    Messages:
    137
    Likes Received:
    151
    Trophy Points:
    43
    Gender:
    Female
    அத்தியாயம் 59

    ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து இதமாக தூங்கி கொண்டு வர ஒரிடத்தில் பள்ளத்தில் ஏறி இறங்கியதில் மகிழ் விழித்துக் கொண்டான்... தன்னை தோளிலில் சாய்த்துக் கொண்டு உறங்கியவளை மெல்ல நிமிர்த்தி அவளை தன்மீது சாய்த்துக் கொண்டான்... அவள் மெல்ல சினுங்க.... அவள் முதுகை இதமாக வருடி விட்டவுடன் அவனுடன் இன்னும் ஒன்றிக் கொண்டு தூங்க ஆரம்பித்தாள் யாழ்... அதன் பிறகு அவனுக்கு எங்கே தூக்கம் வருவது... தூங்கும் தன்னவளையே ரசித்துக் கொண்டு வந்தான் அவன்... அதிலிருந்து கொஞ்ச நேரத்திலேயே அவர்கள் செல்ல வேண்டிய இடம் வந்துவிட.. அனைவரையும் முன்னே சென்று ஏற்பாடுகளை கவனிக்க சொன்னவன் யாழின் உறக்கம் கலையாமல் அவளை தாங்கி அமர்ந்து இருந்தான்... கவி வந்து ஏற்பாடுகள் முடிந்துவிட்டதென சொல்ல.... மெதுவாக தன்னவளின் கண்களில் ஒரு கருப்பு துணியை கட்டி எழுப்ப தொடங்கினான்...

    "கண்ணம்மா... கண்ணம்மா... எழுந்துரிடா... கோவில் வந்துடுச்சி..."

    அவள் கண்களை கசக்கி கொண்டு அந்த தூணியை அவிழ்க்க போக... "கண்ணம்மா... அவுக்காதடா... மாமா உனக்கு ஒரு சர்ப்ரைஸ் வச்சிருக்கேன்.... அப்படியே மாமா சொல்லற மாதிரி வாங்க பாக்கலாம்..." என்றான் மகிழ்...

    "அப்படி என்னடா சர்ப்ரைஸ்..." என்றபடி அவனுடன் எழுந்து நடக்க தொடங்கிவிட்டாள் யாழ்...

    "வந்தா தெரிய போகுது... வேன் ஸ்டெப்ஸ் இருக்கு பாரு... பாத்து இறங்கு..." என அவள் கையை பிடித்து வழி நடத்தியவன் அந்த திருவிழாவிற்கு அலங்கரிப்பது போல் அலங்கரிக்க பட்டிருந்தா கோவிலுக்குள் கூட்டி வந்து கட்டுகளை அவிழ்த்து விட்டான்....

    கண் கட்டை அவிழ்த்து விட்டதும் அவள் கண்களுக்கு முதலில் காட்சி அளித்தது... அந்த பிடாரி அத்தாள் தான்... அவளோ பிராபாவின் குலதெய்வ கோவிலுக்கு பேகிறோம் என நினைத்திருக்க அவர்கள் வந்ததோ அவள் ஊரில் இருக்கும் மூர்த்தியின் குலதெய்வ கோவிலுக்கு...

    அவள் கண்களை கசக்கி கொண்டு சுற்றிலும் கண்களை சுழல விட அவள் ஊர் மொத்தமும் அங்கே கூடி நின்றது... அவள் அதிர்ச்சியாக பார்க்க.... அவள் தோளில் கை போட்டு தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டான் மகிழ்...

    "யாழு... நீயாத்தா... வந்துருக்க... நான் வேற யாரோல்ல பட்டணத்துல இருந்து வந்திருக்காவோனு நெனைச்சேன்.... நிசாமாவே நீதானாத்தா...." என்றார் தோல் எல்லாம் சுருங்கிப் போன அந்த எழுபத்திஐந்து வயது கோவில் பூசாரி...

    "சாமி தாத்தா நீங்களா... நான் யாழ் தான் தாத்தா... என்னய நியாபகம் வச்சி இருக்கியல... எப்புடி இருக்கீக சாமிதாத்தா..." என யாழ் சொல்லவும் மொட்டை தலையுடன் புது பட்டு பாவடை சட்டையுடனும் அங்கே வந்து தன்னை தூக்கும்படி சொன்னாள் தரு...

    "தாத்தா.... நான் யாழினியோட ஹஸ்பெண்ட்.... இது எங்க பொண்ணு தர்ஷினி... குழதெய்வ கோவில தான் காது குத்துனுமுனு வந்துருக்கோம்... சடங்கெல்லாம் ஆரம்பிக்கலாமா..."

    "அதுக்கு என்ன ராசா... இந்தா இப்ப ஆரம்பிச்சிடுவோம்...." என்றார் சாமிதாத்தா...

    மற்றவர்களும் மூர்த்தியை அடையாளம் கண்டு கொண்டு தங்களுக்குள் சலசலக்க.... மகிழ் எல்லாரையும் அமைதி படுத்திவிட்டு தனது மனைவியையும் மகளையும் அணைத்தவாறு பேச தொடங்கினான்...

    என்ன உங்க யாருக்கும் தெரியாது... ஆனா எங்க அப்பாவ எல்லாருக்கும் தெரியும்... அவரு தான் எங்க அப்பா... இத்தன நாள் எங்களால இந்த ஊர்க்கு வர முடியாம போச்சு... அது ரொம்ப வருத்தமா தான் இருக்கு... என்ன பண்ணறது... இது யாழினி.... என் அத்த பொண்ணு... இப்ப என்னோட மனைவி... அத்த இறந்ததுக்கு அப்புறம் அவ எங்க வீட்டுக்கு தான் வந்தா... நாங்க கல்யாணம் பண்ணிக்கிட்டோம்... இந்த குட்டி தேவத தர்ஷினி எங்க பொண்ணு... இந்த குட்டி தேவதைக்கு தான் இப்ப காது குத்த போறோம்... பத்திரிக்க வச்சி கூப்பிட்ட வுடனே நாங்க யாருனு கூட தெரியாம வாழ்த்த வந்த அத்தனை பேருக்கும் நன்றி... வாழ்த்திட்டு இருந்து சாப்பிட்டுட்டு தான் போகனும்...

    தருவுக்கு காதனி விழா என்று ஊர் முழுவதும் கதிரின் நண்பர்கள் மூலம் பத்திரிக்கை கொடுத்து அழைத்திருந்தான் மகிழ்... அவர்களும் யார் என்று அறியும் ஆவலில் வந்திருக்கின்றனர்... அப்புறம் மதுவும் பிராபாவும் பிரபாவின் குல தெய்வ கோவிலுக்கு தான் போய் இருக்கிறார்கள்... அவர்களுடன் பிரபாவின் உறவுகள் இருக்கின்றனர்...

    யாழினி இன்னும் ஒன்றும் புரியாமல் சுற்றி பார்த்து விழிக்க.... ஒரு ஓரத்தில் நின்ற லட்சுமி அம்மாள் அவள் அருகில் வந்து நின்றார்...

    "அம்மா...."

    "ஏன்டி இப்படி.... பேந்த பேந்த முழிக்கற... உன் பொண்ணுக்கு தான காதுகுத்தறது... போய் ஆக வேண்டியத பாரு...."

    "அம்மா நீங்க எப்படி இங்க..."

    "அதெல்லாம் அப்புறம் சொல்லறேன்... போய் வேலைய பாரு..."

    அதற்குள் எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டு குழந்தையை அழைக்க தருவை தூக்கி கொண்டு அங்கு சென்றாள் யாழ்... தருவை வாங்கிக் கொண்ட பத்தர்.... "தாய் மாமாவ கூப்பிடுங்கப்பா.... காது குத்தனுமா இல்லையா...." என்றார்...

    ஒரு மூலையில் தன் குடும்பத்தினருடன் சமாதானம் ஆகாமல் முறுக்கி கொண்டிந்தான் கதிர்... அவனை நோக்கி இருந்த இடத்தில் இருந்து கொண்டே...

    "டேய் மச்சான்.... அதான் தாய் மாமான கூப்பிடறாங்கள... அங்க என்ன வெட்டி பேச்சு... வாடா சீக்கிரம்..." என மகிழ் கத்தி அழைக்க.... திறுதிறுவென விழித்துக் கொண்டு நின்றான் கதிர்....

    கதிர் விழித்துக் கொண்டு நிற்பதை பார்த்தவன்.... அவன் அருகில் வந்து கையை பிடித்து இழுத்து வந்தான்... "தாய் மாமான கூப்பிடறாங்களா... காதுல விழல..." என்றான்...

    கதிருக்கும் இது இன்ப அதிர்ச்சி தான்.... தருக்கு காது குத்த போகிறான் என தெரியும்... ஆனால் அவனை தாய் மாமன் இடத்தில் அமர வைப்பான்... என எதிர்பார்க்கவில்லை....

    "நான்... நான்... எப்புடிடா...."

    "நீதான்.... என் பொண்ணுக்கு தாய்மாமான்.... நீ உக்காரமா...." என்றபடி கதிரின் கலங்கிய கண்களை துடைத்துவிட்டு அவனை அமர வைத்த மகிழ்... சடங்குகளை தொடங்க சொன்னான்...

    எந்த ஊர் யாழ்- கதிரின் உறவை தவறாக பேசியதோ.... யாருடைய வார்த்தைகளை கேட்டு அவன் உயிரை தவறாக புரிந்துக் கொண்டானோ.... அந்த ஊருக்கு அவர்களின் உறவை புரிய வைக்க தான் இந்த காதுகுத்தும் சடங்கு என இருவரும் புரிந்து கொண்டனர்...

    யாழ் கண்கலங்க மகிழனை பார்க்க... "உன்ன இனிமே அடுத்தவங்க தப்பா நினைக்கறத கூட நான் அனுமதிக்க மாட்டேன்... அதுக்கு தான் இது..." என்றவன் அவளை தன் தோளோடு சேர்த்து அணைத்து கொண்டனர்...

    ஒரு வழியாக தரு அழ அழ காது குத்தி.... மாமன் வீட்டு சீர்வரிசையாக இரண்டு காதுகளிலும் கம்மளையும் மாட்டியாகி விட்டது.... அதன் பிறகு மகிழன் தன் மனைவி குழந்தையுடன் அனைவரிடமும் ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டான்...

    நம்ம கிருஷ் தருவோட மொட்ட மண்டய தடவிக்கிட்டே அவளவிட்டு நகராம இருக்கான்... அவனுக்கு அந்த மொட்ட மண்ட ஃபில் புடிச்சி போச்சி போல... இரண்டும் நம்ம யாழ்-கதிர் மாதிரி லைப் லாங் நல்ல ஃப்ரண்ட்ஸ இருக்கனும்...

    வந்தவர்களை விருந்து வைத்து கவனித்து அனுப்பிவிட்டு குடும்பமாக அவர்களும் கோவிலிலேயே அமர்ந்து உண்டு முடித்தனர்.... பெண்களும் பெரியவர்களும் பாரதியின் பெரிய வீட்டுக்கு சென்றுவிட நமது இளம் சிங்கங்கள் மட்டும் வயல்களையும் ஊரையும் சுற்றி பார்க்க சென்றது... அவர்களில் மகிழ்... கதிர்.... கவி.... ஜெகன்.... சுகன் ஐவர் அடக்கம்...

    அவர்கள் வயல் வரப்புகளில் நடந்து கதை பேசிக் கொண்டே வர கதிர் யாழின் வீர தீர பாரக்கிறமங்களை சொல்லிக் கொண்டு வந்தான்...

    "ஆமாம்...மச்சான் உனக்கு மரமேற தெரியுமாடா...." என்றான் கதிர்...

    "ஏன்டா....? தெரியாது...." என்றான் மகிழ்...

    "அப்புறம் எப்படிடா யாழ் உன்ன லவ் பண்ணா...?" என்றான் கதிர்...

    "ஏன்டா லவ் பண்ணறதுக்கும் மரமேறத்துக்கும் என்னடா சம்பந்தம்..." என்றது கவி...

    "அதானே...." என ஒத்துவூதினான் நமது செல்ல மகிழ்..

    "அதான் ஏன் கேக்கற.... நாங்க பத்தாவது படிக்கும் போது... இங்க ஒருத்தன் தெரியா தனமா அவள லவ் பண்ணறேனு சொல்லிட்டான்டா...."

    "அப்புறம் என்ன... லவ் எல்லாம் என்னக்கு செட் ஆகாது... படிக்கற வயசுல படிப்ப மட்டும் தான் பாக்கனும்.... போய் படிச்சி உருப்படற வழிய பாருனு ஒரே அட்வஸ் மழைய பொழிஞ்சி இருப்பாளே...." என்றான் மகிழ்...

    "ஏன்டா அவசர குடுக்க மூடுட்டு சொல்லறதா முழுசா கேக்க முடியாதாடா உன்னால..." என்ற கதிருக்கு... "அந்த லூசுக்கு எல்லாதுலையும் அவசரம் தான்...நீ சொல்லு மச்சி...." என கவியும் அவனுடன் சேர்ந்து கொள்ள.... "அட ச்ச்சீசீ... தொன தொனங்கமா என்னனு சொல்லி தொலைங்கடா..." என்றான் மகிழ்... [வேற ஒன்னும் இல்ல.... கீழ விழுந்தாலும் சாருக்கு மீசையில மண்ணு ஒட்டலனு சமாளிக்க வேண்டாமா...]

    "நீ சொன்ன மாதிரி சொல்லி இருந்தா தான் பரவாயில்லையே... முதல அந்த புளிய மரத்துல ஏறி புளியங்க பறிச்சிட்டு வானா பாரு... பயபுள்ள அவ பிளான் தெரியாம ஏறி... இவ இன்னும் மேல இன்னும் மேலனு உச்சிக் கிளை வரைக்கும் ஏற வச்சி பாரம் தாங்காம கிள முறஞ்சி விழுந்து.... அவன் கீழ உழுந்து கால் உடைஞ்சி... ஆறு மாசத்துக்கு புத்தூர் மாவு கட்டு போட்டு.. உனக்கு ஒரு கும்புடு நீ இருக்க திசைக்கு ஒரு கும்புடுனு அன்னைக்கு ஊர விட்டு போனவன் தான் இப்ப வரைக்கும் இந்த ஊர் பக்கம் தல வச்சி கூட படுக்கல..."

    அவன் சொல்லி முடிக்க அங்கே ஒரு சிரிப்பலை எழுந்தது... "மச்சான் நீ எதுக்கும் மரமெற கத்துக்கறது தான் நல்லது... இல்ல வீட்டுல இருக்க பைப் புடிச்சு ஏற சொல்லி பிராக்டிஸ் குடுத்தாலும் குடுப்பா... பாத்துக்கோ மச்சி..." என கவி சொல்ல அங்கே மீண்டும் ஒரு சிரிப்பலை எழுந்து அடங்கியது... மகிழ் மட்டும் நம்ம கவி செல்லத்த முறைச்சத அங்க யாருமே கண்டுக்கிட்டதா தெரியல...

    நடந்து கொண்டே அவர்கள் போர் செட்டின் அருகில் வந்துவிட.... அனைவரும் முகம் கழுவிவிட்டு செல்லலாம் என குனிய.... கவியின் பின்புறம் இருந்து எட்டி உதைத்தான் மகிழ்... அவன் தண்ணீரில் தலைகுப்பற விழ...

    "ஏன்டா கதிரு... இப்படி தான... உன்ன யாழு எத்தனானு சொன்னா....''

    "ஆமாமன்டா... இப்படியே தான்டா.... இதே மாதிரி தான்டா... ஃபர்பெக்ட் சாட் மச்சான்.... சூப்பர் டா... உங்களுக்குள்ள ஒரு வேவ் லெண்த் இருக்கு...."

    அதற்குள் காண்டான கவி மகிழையும் இழுத்து நீரில் தள்ள, மற்றவர்கள் மட்டும் மேலே இருக்க முடியுமா... அவர்கள் குளிக்கிறேன் என்ற பெயரில் தண்ணீரை ஒரு வழி செய்துவிட்டு ஒரு மணி நேரம் கழித்து தான் வீட்டிற்கு கிளம்பினர்...
     
    Rabina likes this.
  3. தமிழ் வெண்பா

    தமிழ் வெண்பா Active Member

    Joined:
    Mar 5, 2019
    Messages:
    137
    Likes Received:
    151
    Trophy Points:
    43
    Gender:
    Female
    அங்கே வீட்டிலோ சிலர் உண்ட கலைப்பில் உறங்க.... பாதிபேர் வேலை இருப்பதால் ஊருக்கு கிளம்பி விட்டனர்... யாழோ மகிழனுடன் பேச வேண்டும் என்ற தவிப்புடன் நொடிக்கு ஒரு முறை வாசலையே பார்த்திருந்தாள்... மற்றவர்கள் வீட்டிற்கு வர மகிழை மட்டும் காணவில்லை...

    "டே சுகு... மகி எங்கடா...."

    "அண்ணனா... பக்கத்து தெருவுல இருக்க நம்ம பண்ண வீட்டுல இருக்கு..."

    தரு வாணியுடன் உறங்கிக் கொண்டிருந்ததால் அவளை தவிர்த்து யாழ் மட்டும் மகிழனை தேடி சென்றாள்... வீடு முழுவதும் தேடி மகிழனை காணாததால் பின்பக்கம் தேடிச் சென்றாள்...

    "மகி... மகி..."

    "மகி... எங்கடா... இருக்க... இங்க தான் இருக்கேனு... சுகன் சொன்னான்... விளையாடம வெளிய வா..."

    "மகி.... மகி...." என அவனை தேடிக் கொண்டு புளியமரம் அருகில் வரை வந்துவிட்டாள் ஆனால் அவனை காணவில்லை....

    "ஹா....ஹா...ஹா....ஹா...." என பயங்கரமான சிரிப்பு சத்தம் கேட்க.... உடல் நடுங்க தொடங்கியது யாழுக்கு...

    "மகி... நீ தான... எனக்கு பயம் காட்டாத... ஒழுங்கா வந்துடு....." என சுத்தி சுத்தி பார்த்தபடி அவள் பயந்த குரலில் கூற மேலேயிருந்து குதித்தது ஒரு உருவம்... அதை பார்த்த யாழ் பயந்து தடுமாறி விழப் போன சமயம் விழாமல் தன்னோடு சேர்த்து இறுக்கி அணைத்துக் கொண்டான் மகிழ்...

    "ஏன்டி... இன்னும் நீ இந்த பேய்... பிசாசுக்கு எல்லாம் பயந்துக்கிட்டு தான் இருக்கீயா... ஹா...ஹா... என்ன கண்ணம்மா நீ... ஹா...ஹா... என்ன போய்... நான் பொம்பள சூரபுலி என் பொண்டாட்டினு சொல்லிட்டு இருக்கேன்..... ஹா...ஹா... நீ என்னடானா.... பயந்து சாவுற.... ஹா... ஹா..."

    ஏற்கனவே அவளை பயமுறுத்தியதால் கடுப்பில் இருந்தவள்... அவன் அவளை கிண்டல் செய்து சிரிக்கவும் ஏகத்துக்கும் கடுப்பானாள்.... அவனை முறைத்து பார்த்து கொண்டே புளியமரத்தில் இருந்து ஒரு குச்சியை ஒடிக்க, மகிழ் நாலு அடி தூரம் தள்ளி நின்றுக் கொண்டான்...

    "டேய் கிட்ட வாடா... எங்க ஓட பாக்குற... என்னையே கிண்டல் பண்ணி சிரிக்கறீயா... உன்ன இன்னைக்கு என்ன பண்ணறேன் பாரு...''

    "முடிஞ்சா அடி பாக்கலாம்..." என அவன் முன்னாள் ஓட அவனை துறத்திக் கொண்டு பின்னால் ஓடினாள் அவள்... அவன் அவளுக்கு போக்கு காட்டி கொண்டே இருக்க.... அவள் மூச்சிறைக்க ... "போடா... உன்ன என்னால புடிக்க முடியல... நான் வீட்டுக்கு போறேன்..." என உள்ளே செல்ல... அவன் அவள் முன்னே வந்து நின்றான்... ஆனால் இப்போது அவனை அடிக்கும் மனநிலையில் அவளில்லை... அவள் அமைதியாக இருக்க....

    "என்னடி வா அடிக்கறேன... இப்படி அமைதியா இருக்க...."

    அவள் மேலும் மூச்சிறைக்க.... உடல் வியர்த்து கொட்டி.... அங்காங்கே முத்து சிதறல்களாய் திரண்டிருக்க.... கண்களை மூடி இளைப்பாற முயன்றாள்...

    "கண்ணம்மா... என்னடா பண்ணுது... முடியலையா... ரொம்ப வேர்க்குது பாரு..." என்ற படி அவன் அவள் வியர்வையை துடைக்க வர பாய்ந்து அவனை இறுக கட்டிக் கொண்டாள் அவள்... அவன் மார்பில் சாய்ந்து இதமாக இளைப்பாற..... அவனும் அவளை தன்னோடு இறுக அணைத்துக் கொண்டான்... அவள் ஏதும் பேசாமல் இருக்க..... அவள் கண்ணீர் மட்டும் அவன் சட்டையை நனைக்க.... அவள் முகம் நிமிர்த்தினான் அவன்...

    "கண்ணம்மா... ஏன்டா... அழற... என்னாச்சிடா... என் மேல கோபமா... ப்ளீஸ் அழாதடா... என்னால தாங்க முடியல... இனிமே நீ எதுக்காகவும் அழ கூடாதுடா... அழாதடா ப்ளீஸ்..."

    இப்போது சத்தமில்லாத அழுகை விசும்பலாகவே மாறி இருந்தது... அவன் கண்களை பார்த்து.... "ஏன்டா என்ன இவ்வளோ லவ் பண்ணற... நான் உனக்கு அப்படி என்ன செஞ்சேன்... நல்லது செய்யாலனாக் கூட பரவாயில்லை.... உன்ன எவ்வளவு கஷ்டப்படுத்திட்டேன்... என் மேல கொஞ்சம்கூட கோபம் இல்லையா... " என்றாள் அவன் சட்டையை பிடித்துக் கொண்டு...

    அவள் கண்ணீரை துடைத்து நெற்றியில் இதழ் பதித்தவன்..... "நீ ஏன் உயிர்டி... நீ தான் நான் வாழறத்துக்கு காரணம்... இந்த காதலுக்காக என்ன வேணாலும் செய்யலாம்... நீயும் நானும் வேறயில்ல... அப்படி இருக்கும் போது நான் உனக்கு செய்யறதுக்கு நீ ஏதாவது செஞ்சிருக்கனுமுனு அவசியம் இல்ல... உன் காதல் ஒன்னே போதும்... அதுவும் இல்லாம நீ என்னடா தப்பு பண்ண.... நான் தான் தப்பு பண்ணேன்..."

    "நீ எதுவும் தப்பு பண்ணல மாமா... நான் தான் பண்ணேன்.... என்ன இருந்தாலும் நான் உன்னவிட்டுப் போயிருக்க கூடாது இல்ல...."

    "அப்ப நீ இருந்த நிலம அப்படி டா... அப்படி நடக்கலனா நமக்கு இத்தனை சொந்தம் கிடைப்பாங்களா சொல்லு... அதனால எல்லாமே நல்லதுக்கு தான்...."

    "என்ன இருந்தாலும் நான் பண்ணது தப்பு தானே..." அவள் அழுகை தொடர..... அவன் சமாதானங்கள் பொய்த்து போக.... அவள் அழுகையை கட்டுபடுத்த தன் இதழ்களால் அவள் இதழ் மூடி அழுகையை கட்டுக்குள் கொண்டு வந்தான்....

    நீண்ட நேர முத்தத்திற்கு பிறகு அவளை பிரித்து அவளை மடியில் அமர்த்திக் கொண்டவன்.... "இங்க பாருடா... நடந்த எதையும் மாத்த முடியாது... அதுனால நமக்கு எவ்வளவு கிடைச்சி இருக்குனு தான் பாக்கனும்.... அப்படி பாத்தா நம்ம எதையுமே இழக்கலையே.... என் பொன்டாட்டி கூட எனக்கு ஒரு பொண்ணும் இல்லடா கிடைச்சி இருக்கா.."

    "தரு நம்ப பொண்ணு இல்லையே மகி... உனக்கு நம்ம குழந்த பெத்துக்கனுமுனு தான ஆச.... நீ சொன்ன மாதிரி நமக்கு ஒரு குழந்த பொறந்தா தருவ இதே அன்போட பாத்துக முடியுமா..."

    "கண்ணம்மா... தரு நம்ம குழந்த இல்லனு நீயே மறந்துடனும்டா.... நீ எதையெல்லாம் நேசிக்கறையோ.... நானும் அதையெல்லாம் நேசிப்பேன்.... நமக்கு குழந்த பொறந்தா உனக்கு என் மேல உள்ள பாசமோ எனக்கு உன் உள்ள பாசமோ குறையுமா..... இல்லைலா.... அதே மாதிரி தான் நமக்கு தரு.... அவ நம்ம பொண்ணுடா...."

    "நிஜமாதான் சொல்லுறீயா...."

    "நிஜமாதான்....."

    "மாமா....."

    "என்னடா...."

    "ஐ லவ் யூ சோ மச்டா... ஐ மிஸ் யூ பேட்லி டா... நீ கிடைக்க நான் குடுத்து வச்சிருக்கனும்டா...."

    "அப்பா.... எத்தன நாளாச்சி நீ ஐ லவ் யூ சொல்லி.... இன்னொரு தடவ சொல்லேன்..."

    "ஐ லவ் யூ டா மாமா...ஐ லவ் யூ டா புருஷா... ஐ லவ் யூ டா செல்லம்....ஐ லவ் யூ டா தங்கம்.... ஐ லவ் யூ டா கண்ணா... ஐ லவ் யூ டா கண்ணா...." என அவன் முகத்தை கரங்களில் ஏந்தி முகம் முழுவதும் முத்தம் பதிக்க அவளை இழுத்து தன்னோடு அணைத்துக் கொண்டான் அவன்....

    அவனின் சட்டை பையிலிருந்த புளியம்பிஞ்சை எடுத்து.... "புளியங்க பறிக்க தெரிஞ்சா தான் லவ் பண்ணுவேனு சொன்னீயாமே..... பறிச்சுட்டு வந்துட்டேன்... இப்ப லவ் பண்ணலாமா கண்ணம்மா... ஐ லவ் யூ சோ மச்...."

    அவனை இழுத்து இறுக அணைத்தவள் அவன் இதழோடு தன் இதழ் பதித்தாள்... நீண்ட நேரம் தொடந்த முத்தத்தில் அவள் தொடங்கிய முத்தம் எப்போது அவன் வசம் சென்றது என்பதை இருவருமே அறியவில்லை....

    இதழ் முத்தத்தில் இருந்து மீண்டவன்... அவள் காதருகே குனிந்து.... "ப்ளீஸ் கண்ணம்மா... நீ எனக்கு வேணும்டா... இப்பவே வேணும்டா.... உனக்கு ஓ.கே வாடா...." என கிரக்கமான குரலில் வினவ.... தன் இதழ்களை அவன் இதழ்களில் சேர்த்து பதில் தந்தாள் அவள்... இந்த முறை தன் இதழ்களை அவள் வசம் ஒப்படைத்தவன் அவளை தன் கரங்களில் ஏந்திக் கொண்டான்... அவள் அவன் கழுத்தை இருக்கி கட்டிக் கொள்ள அவளை வீட்டின் உள்ளே தூக்கி சென்றான்...

    இதற்கு மேல் நமக்கு அனுமதி இல்லை.... காதலோடு இனியதொரு இல்லறம் அங்கே தொடங்கட்டும்... எப்போதும் காதலில் அவர்கள் திளைக்கட்டும்...

    - காதல் தென்றல் மீண்டும் வீசும்...
     
    Rabina and Thamaraikannan like this.
  4. தமிழ் வெண்பா

    தமிழ் வெண்பா Active Member

    Joined:
    Mar 5, 2019
    Messages:
    137
    Likes Received:
    151
    Trophy Points:
    43
    Gender:
    Female
    அத்தியாயம் 60

    மூன்று வருடங்களுக்கு பிறகு....

    முதல நம்ம செல்ல குட்டிங்க எல்லாம் என்ன பண்ணுறாங்கனு பாத்துடலாமா.... ஃப்ர்ஸ்ட் நம்ம மகி செல்லம்... மகியும் கவியும் ரியல் எஸ்டேட் பிசினஸையும் இப்ப பாத்துக்கறாங்க... அதுவும் இல்லமா கதிர் கூட சேந்து புதுசா ஹேட்டல் பிஸினஸ் ஆரம்பிச்சிருக்காங்க.....அதுக்கு ஃபுல் இன்சார்ச் கதிர் தான்.... இப்போ கதிரும் அவன் அழகான குட்டி குடும்பத்தோட யாழ் வீட்டுக்கு பக்கத்திலையே போய் செட்டில் ஆகிட்டான்.... ஒரே குஜால் தான் போங்க....

    அப்புறம் பிரபா விவாசாயம் தான் சாரோட மெயின் பிசினஸ்.... ஆள் வச்சி பாத்துக்கறான்... அதுவும் இல்லாம சின்ன சின்ன விவாசாயிகள் கிட்ட இருந்து அவங்க உற்பத்தி பண்ணற பொருட்கள நியாயமான விலைக்கு வாங்கி வெளிநாடு வரைக்கும் எக்ஸ்பேர்ட் பண்ணறான்... மது பிராண்ட்னா அவ்வளவு பேமஸ் அரிசி இப்போ எல்லாம்... அடுத்ததா ஊறுகாய் மாதிரி ஃபுட் புராடக்ட்ஸும் செய்யலானு யோசிச்சிட்டு இருக்கான்... சார் கூட மகி வீட்டுக்கு பக்கத்திலையே வந்துட்டார்... மகி அவங்க வீட்டுலையே தான் இருக்க சொன்னான்... ஆனா மாப்பிள சார்க்கு தன்மானம் இடம் குடுக்காததால பக்கத்துல அவன் சம்பாத்தியதுல வீடு வாங்கி குடி வந்துட்டான்...

    அப்புறம் நம்ம யாழும் நிலாவும் "அன்னை மெட்ரிகுலேஷன்"னு ஒரு ஸ்கூல் நடத்துறாங்க... பிரிகேஜ்- லயிந்து 10- வது வரைக்கும்..... அடுத்த வருஷம் +1, +2 கூட ஆரம்பிக்கலாமுனு இருக்காங்க.... நிலா பிரின்ஸ்பல்... யாழ் வைஸ்-பிரின்ஸ்பல்... யாழ தான் நிலா பிரின்ஸ்பலா இருக்கா சொன்னா... ஆனா மகிய கவனிக்கவே மேடமுக்கு நேரம் பத்தல... அப்புறம் எப்படி... 9 மணிக்கு போக வேண்டிய ஸ்கூலுக்கு 10.30 போவா... எப்ப பாரு பிரிகேஜ் பசங்க கூட ஒரே கூத்து தான்... அவள சாமாளிக்க தான் நிலா டெய்லி ஒரு லிட்டர் பால் குடிக்கனும் போல....

    யாழ் பண்ணற சேட்டைக்கு ஸ்கூலே அவ ஃபேன் போங்க... இப்படி தான் பாருங்க ஒரு நாள் 10- வது பசங்களோட சேந்து கிளாஸ மஸ் கட்டு பண்ணிட்டு பின்னாடி சுவரு ஏறி குதிச்சு புளியாங்க அடிக்க போனா... நிலா எதுக்குடி இப்படி பண்ணுன.... பசங்களுக்கு பப்ளிக் எக்ஸாம் இருக்கு இல்லனு கேட்டா... படிச்சி படிச்சி பைத்தியம் ஆகாறதுக்க... அதான் ஒரு என்டர்டைமன்டுக்கு ங்கற....

    இதுல நிலா ஏதாவது ஒன்னு கேட்டா... மொத்த ஸ்கூலும் போர் கொடிய தூக்கிட்டு ஸ்டைர்க் பண்ண கிளம்பிடுதுங்க... அவ என்ன பண்ணுவா பாவம்.... வந்த பேரண்ட்ஸா சமாளிச்சு அனுப்பறதுக்குள்ள போதும் போதுனு ஆயிட்டு.... சரினு திரும்பி வந்து பாத்தா.... அடுத்ததா மாங்க அடிக்க போலமானு ஒரு கூட்டத்த கூட்டி வச்சி பிளான் பண்ணிட்டு இருக்கா... நீங்களே சொல்லுங்க மக்களே இதெல்லாம் நியாயமா....

    சரினு இந்த மதுவையும் மலர்கொடியையும் துணைக்கு கூப்பிட்டா நாங்க புயூர் ஹோம் மேக்கரா தான் இருப்போம்... வர மாட்டேங்கறாலுங்க... அதனால அந்த யாழ் எரும மாட்டையும் அறுந்த வாலுங்களையும் கட்டி மோய்க்கற மொத்த பொறுப்பும் நிலாக்கு தான்... [ ஸ்ஸ்ஸ் அப்பா... பாவம்... பத்தாததுக்கு கவிய வேற வச்சு சமாளிக்கறாளே....]

    ஸ்கூல தான் இந்த லட்சனத்துல இருக்கேனு வீட்டுல யாழ ஏதாவது சொன்னா இந்த கதிரும் சுகனும் சேந்து மூஞ்ச மூனு கிலோ மீட்டர் தூக்கி வச்சிகறாங்க.... அதனாலையே யாழ வீட்டுல கூட நிலாவால கண்டிக்க முடியல.... ஸ்ஸ்ஸ்ஸ் அப்பா ரொம்ப குஷ்டம் தான்....

    ஆனா பாருங்க ஆரம்பிச்ச ரெண்டு வருஷமும் பப்ளிக் எக்ஸாமுல 100% ரிசல்ட் காட்டி இருக்காங்க.... அதுக்கு காரணம் டிச்சர்ஸ் தான்... ஆசிரிய பணியே அறபணி அதற்கே உன்னை அற்பணி -ங்கற கொள்கை கொண்டவங்க... அரசு பள்ளிகள விட அதிக சாம்பளமும் ஏகபட்ட சலுகைகளும் தரதால மனநிறைவோட சந்தோஷமா வேல பாக்குறாங்க...

    பிஸ் ரொம்ப கம்மி தான்.... இக்கட்டான சூழ்நிலையில அத கட்ட முடியாதவங்களுக்கு யாழே பர்சனலா கட்டிடறா... ஆக மொத்தம் ஸ்கூல் ஆரம்பிச்சி கவியும் மகியும் பிஸினஸ்ல சம்பாதிச்சத யாழும் நிலாவும் இதுல செலவு பண்ணிட்டு இருக்காங்க... இதுல அவனுங்க ரெண்டு பேருக்கும் ரொம்ப சந்தோஷம் தான்... எப்படியும் இன்னும் பத்து வருஷத்துல தமிழ் நாட்டிலையே நம்பர் ஒன் ஸ்கூலா வர எல்லா தகுதியும் இருக்குங்க....

    இதுல ஸ்பெஷல் என்னனா.... யாழோட டீச்சிங்க மெத்தட் தான்.... பத்து தடவ படிச்சு மனப்பாடம் பண்ண வேண்டியத ஒரே தடவ சொல்லி புரிய வச்சுடுவ.... யாருக்காவது புரியலானா ஸ்பெஷசலா தனிய உக்கார வச்சி எத்தன தடவ வேணா சொல்லி குடுப்பா....

    இதுலையும் அவ பசங்கள படிக்க வைக்க யூஸ் பண்ணற டெக்னிக் இருக்கே.... பாடம் முடிச்சுட்டு ஒரு கதைய சொல்லி சஸ்பென்ஸ்ல நிப்பாட்டி.... இன்னிக்கு நடத்தனத நாளைக்கு டெஸ்ட் வைப்பேன்... எல்லாரும் நல்லா எழுதன நாளைக்கு சொல்லறேம்பா பாருங்க... கத கேக்கவே எல்லாம் உழுந்து பொறன்டு படிச்சிட்டு வரும்.... அப்புறம் முக்கியமான விஷயம் அவ பிரதிலிபில இருந்து சுட்டு தான் கத சொல்லறானு யாரும் பசங்க கிட்ட சொல்லிடாதீங்க... அப்புறம் எல்லாம் இன்ஸ்டால் பண்ணிட்டு அதையே படிச்சிட்டு சுத்திட்டு திரியுங்க...

    அப்புறம் பாரதி... மூர்த்தி எவ்வளவு கூப்பிட்டும் விவசாயத்த விட மனசில்லனு அங்கையே இருந்துட்டாரு.... கீதாவும் அவர் கூடதான் இருக்கா... ஆனா ரெண்டு பேருக்கும் இடையே பேச்சு வார்த்தையே இல்ல... சாப்பாடு கூட பாரதிக்கு வெளில தான்...மேலுக்கு முடியாதப்ப வெண்ணி தண்ணீ கூட அவரே வச்சுக்கறாரு... ஏன்னா அபியும் சுகனும் கீதாவ பாக்க கூட பிடிக்காம மூர்த்தி வீட்டுலையே வந்து செட்டில் ஆகிட்டாங்க....

    அபியும் சுகனும் இங்கே வந்து தங்கி படிக்க ஆரம்பிச்சிட்டாங்க... அபி, B.Sc., Food science மூனாவது வருஷம் படிக்கறா... சுகன் 10-வது அன்னை மெட்ரிக்லேஷன்ல... இப்ப தெரியுதா யாழோட வால் தனதுக்கு யார் காரணமுனு...

    நம்ம மகி மூங்கி பிரம்ப எடுத்து நல்லா நாலு நாள் விளக்கெண்ணையில ஊர வச்சி ரெடி பண்ணி வச்சிருக்கான்... எதுக்கனு கேக்கறீங்கள இந்த தடிமாட்டு சுகன் மட்டும் 10-வதுல கம்மி மார்க் வாங்கட்டும்.... அவனையும் யாழையும் தொரத்தி தொரத்தி அடிக்க தான்... வரட்டும் வரட்டும் ரிசல்ட் வரைக்கும் பொறுத்து இருந்து பாப்பும்....

    ஒரு நேரம் பாத்தா மகியும் சுகனும் விநாயகம் பிரதர்ஸ் மாதிரி அண்ணன்டா.... தம்பிடானு... கட்டிபுடிச்சிட்டு நிப்பாங்க... அடுத்த நிமிஷமே அடிச்சுட்டு கட்டிபுடிச்சு உருண்டுட்டு இருப்பாங்க... ஏதுக்குனு கேக்கறீங்களா எல்லாம் தரு யார் செல்லாமுனு தான்...

    மகி... "தருமா... நீங்க அப்பா செல்லம் தான... அப்பா கிட்ட வாங்க..." னு கை நீட்ட... சுகனோ.... "தரு குட்டி நீங்க சித்தப்பா செல்லாம் தானே... சித்தப்பாகிட்ட வாங்க..."னு கை நீட்ட.... அந்த குட்டி "நான் என் ஃப்ரண்டு செல்லமாக்கும்.."னு கிருஷ் தோள்ல கை போட்டுகிட்டு பழிப்பு காட்ட.... ஒட்டு மொத்த குடும்பமும் கேக்க பிக்கனு சிரிக்க இவனுங்களுக்கு அப்படியே செவுத்துல முடிக்கலாமானு இருக்கும்... ஆனா முட்டுனா வலிக்குமே அதனால முட்டிக்கல....

    அப்புறம் நம்ம மகேஷ்.... இப்ப சார் சுகாதார துறை மந்திரியாக்கும்... சார பாக்கனுமுனா நாலு நாளைக்கு முன்னாடியே அப்பான்மெண்ட் வாங்கனும்.... அவ்வளவு பிஸி.... அதுனால எல்லா தொழிலையும் பக்கபலமா இருந்து அப்பப்ப கதிர் பாத்துக்கறான்.... சார் ரொம்ப நல்லவரா மாறிட்டாரு.... எந்த அளவுக்குனா கட்சில ஒருத்தர் தன் பொண்ண ஜாதிய காரணம் காட்டி காதலிச்சவனுக்கு கட்டி வைக்க மாட்டேனு அடம்பிடிக்க செவுட்லையே ஓன்னு வுட்டு அந்த கல்யாணத்த முன்ன நின்னு நடத்தி வைக்கற அளவுக்கு....

    அப்பறம் நம்ம லேகாவும் ரேவாவும் கல்யாணம் பண்ணி குடும்பம் குழந்தைங்கனு செட்டில் ஆகிட்டாங்க...

    கோகுலுக்கும் கல்யாணம் ஆகிட்டு... அவனுக்கு இப்ப தான் முத பாப்பா பொறக்க போகுது.... பொன்டாட்டி தலை பிரசவத்துக்கு பொறந்த வீட்டுக்கு போக அவனையும் துணையா மூனு மாசம் லீவு குடுத்து அனுப்பி வைச்சிட்டான் நம்ம மகி செல்லம்....

    அப்புறம் நம்ம பெருசுங்க.... அதானப்பா மூர்த்தி-வாணி... நட்டு-பாரு... அருணாசலம்-வள்ளி இவங்களுக்கு எல்லாம் பேர குழந்தைங்கள பாத்துக்கவே 24 மணி நேரம் பத்தல... ஒரு நாளைக்கு ஏன் 28 மணி நேரம் இல்லனு கேட்டு உசிர வாங்கிட்டு இருக்காங்க...

    அப்புறம் லட்சுமி அம்மா... உடம்பெல்லாம் சரியாகி சூப்பரா ரொம்ப சந்தோஷமா அன்னைதெரசா பசங்களோட இருக்காங்க... 17ஆ இருந்த பசங்க எண்ணிக்க இப்ப 34 ஆகிட்டு...

    ஒரு விசஷமுனா போதும் எல்லாரும் மூர்த்தி வீட்டுல ஒன்னா கூடிடுவாங்கனு... பாரதியும் ஊருல இருந்து வந்துடுவாரு... ஆனா கீதாவ மட்டும் யாரும் ஏத்துக்கல... ஏன் மகியே அவள மன்னிச்சலும் அபியும் சுகனும் மன்னிக்க தயார இல்ல... அவ வந்தா நாங்க வீட்டவிட்டு போய்டுவோனு உறுதியா இருக்க யாராலையும் எதுவும் பண்ண முடியல.... இந்த அழகான குருவி கூட்டுல அவளுக்கு இடமில்லை....

    அப்பா பொங்கல்.... நீயூ இயர்.... ஆடிபெருக்கு.... எல்லாத்துக்கும் பாக்கனுமே இவங்க வீட்டுல ஒரு குட்டி திருவிழாவே நடக்கும்... ஒரே கேலியும் கிண்டலும் கூத்தும் கும்மாளமும் வீடே கல கட்டும்ப்பா... ஃப்ரண்ட்ஸ் யாராவது கோயம்புத்தூர்ல இருந்தா ஒரு எட்டு போய் பாத்துட்டு வாங்க.... அங்கயிருந்து வர மனசே வராது... அவங்களும் விடமாட்டாங்க...

    எல்லா பண்டிகையும் மூர்த்தி வீட்டுல கொண்டடுனாலும் தீபாவளிக்கு மட்டும் புது துணிய போட்டுட்டு இரண்டு வெடி வச்சுட்டு [சாரிப்பா மறந்துட்டேன்.... இப்ப தான் வெடி வைக்க கூடாதே....] வைக்கமாலே கொடைக்கானல் போயிடறாங்க.... அன்னைதெரசா இல்லத்துல தான் எல்லாருக்கும் தீபாவளி.... ஒரே ஜாலி தான் அவங்க வாழ்க்கையில சந்தோஷத்துக்கு பஞ்சமே இல்ல...

    முக்கியமான பிஸ மறந்துட்டோமே.... ரகுநாதன் தான்.... அடிச்சு போட்டா ஒரு வாரம் வரைக்கும் ஏதுவும் சாப்பிட குடுக்கல.... கடைசியா செத்து போற நிலைமையில இருந்தவனை ஆக்ஸிடென்ட்னு ஆஸ்பத்திரியில போட ஒரு காலு இழுத்துகிச்சி... வலது கை எதுக்குமே புன்னியம் இல்லாம போச்சு... தலையிலையே அடிச்சதால கொஞ்சம் சித்தம் வேற கலங்கி போச்சி... ஒரு காலையும் கையையும் இழுத்துக்கிட்டு லூசு மாதிரி திரியறவன... கீதா தான் பாத்துகற.... நல்ல வேள அவனுக்கு கல்யாணம் ஆகல... பின்ன நாள் பூரா குடிச்சிட்டு ஊர சுத்தறவனுக்கு யாரு பொண்ணு குடுப்பா....

    இன்னும் ஒரு முக்கியமான ஆள விட்டுட்டோமே.... அவரப்பத்தி தெரிஞ்சுக்க நம்ப இப்ப இவங்களாம் எங்க இருக்காங்கனு பாக்கனும்.... வாங்க பாப்போம்....
     
  5. Prabha_kannan

    Prabha_kannan Well-Known Member

    Joined:
    Oct 25, 2017
    Messages:
    605
    Likes Received:
    369
    Trophy Points:
    63
    Location:
    trichy
    Nice story ...
     
  6. Thamaraikannan

    Thamaraikannan Active Member

    Joined:
    Feb 8, 2019
    Messages:
    141
    Likes Received:
    77
    Trophy Points:
    28
    Gender:
    Female
    Occupation:
    Homemaker
    Location:
    Tamilnadu
    Super updates
     
  7. Rabina

    Rabina Well-Known Member

    Joined:
    Aug 14, 2018
    Messages:
    771
    Likes Received:
    484
    Trophy Points:
    63
    Gender:
    Female
    super updates .. magi and love super. magi appa solamalaye avaroda nilaya purinchikitu help panrathu. ammava avanga familyoda sethu vachutan. moorthi and vani super. wifeoda brother than pazhi vanga ellam panranu therijum poruthu porathlam super.. family ellarum onu senthutanga. geetha senja thapuku thandana anubavachitruka.. mathu and prabha kalyam nalabadiya mudinchathu. kavi than pavam ellarum magi panra ella thapukum avanathan din katranga. kavi and magi friendship super..Waiting for next updates
     
  8. Kavyakeerthi

    Kavyakeerthi Active Member

    Joined:
    Oct 15, 2018
    Messages:
    159
    Likes Received:
    107
    Trophy Points:
    43
    Super updates ....
     

Share This Page