1. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    6,170
    Likes Received:
    503
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    *தேங்காய் நெய் :*
    பெரிய தேங்காய் - 1
    * தேங்காயை துருவி சிறிது சுடு தண்ணீர் (ஒன்றரை கப்) சேர்த்து அரைத்து பால் எடுக்கவும்.
    * தேங்காய் பாலை குளிர்சாதன பெட்டியில் ஒரு 4 மணி நேரம் வைக்கவும்.
    * தேங்காய் பாலில்லுள்ள க்ரீம் மேலே உறைந்து நிற்கும்ங்க, அதை மட்டும் எடுத்து அடி கனமான பாத்திரத்தில் போட்டு மிதமான தீயில் காய்ச்சவும்.
    * சுமார் ஒரு 20 நிமிடம் காய்ச்ச எண்ணை தனியாக கசடு தனியாக பிரிந்து வரும். கசடு பொன்னிறமானதும் இறக்கி ஆற வைத்து வடித்து பத்திரப்படுத்தவும்ங்க.
    * முடி உதிர்வு, தைராய்ட், தோல் வியாதிகள், காயங்களுக்கு தேய்க்கலாம் குணமாகும்ங்க.
    * குறிப்பா பாலூட்டும் தாய்மார்களுக்கு இருக்கும் புண்களுக்கு போடலாம் விரைவில் குணமாகும்.
    * ஒரு பெரிய தேங்காய்க்கு 75 ml எண்ணை கிடைக்கும்.
    * தேங்காய் இளசாகவும் இருக்க கூடாது ரொம்ப முற்றினதாகவும் இருக்க கூடாதுங்க.
    * தேவையெனில் காய்ச்சும் போது சிறிது கருப்வேப்பிலை சேர்க்கலாம். இது ஒரு அதி அற்புதமான எண்ணைங்க, பல மருத்துவ குணங்கள் கொண்டதுங்க.
     

Share This Page