தேங்காய் பர்பி

Discussion in 'Recipes for children' started by NATHIYAMOHANRAJA, Aug 2, 2018.

  1. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    7,858
    Likes Received:
    523
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    குழந்தைகள் ஸ்பெஷல்: தேங்காய் பர்பி,
    தேவையான பொருட்கள்:
    துருவிய தேங்காய் : 2 கப்
    சர்க்கரை : 1 கப்
    பால் : 3 டீஸ்பூன்
    முந்திரி : 1 டீஸ்பூன்
    ஏலக்காய் தூள் : 1 சிட்டிகை
    நெய் : தேவைக்கேற்ப
    ஒரு வாணலியில் நெய் சூடானதும் உடைத்த முந்திரி பருப்புகளை வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
    வாணலியில் தேங்காய் துருவலை மிதமான சூட்டில் நிறம் மாறிவிடாத அளவிற்கு வறுக்கவும்.
    பின்னர், சர்க்கரை மற்றும் பால் சேர்த்து நன்கு கலக்கவும். சர்க்கரை உருகி, தேங்காயுடன் இணையும் வரை வேகவிடவும்.
    அடி பிடித்துவிடும் என்பதால், அடிக்கடி கிளறிவிட்டுக்கொண்டே இருக்கவும். தேங்காய் பதம் கட்டியானதும் வாசனைக்காக ஏலக்காய் தூள், வறுத்த முந்திரி பருப்பு மற்றும் சிறிதளவு நெய் சேர்க்கவும். கெட்டித்தன்மை பெற்றதும் இறக்கிவிடவும்.
    ஒரு தட்டில் கொட்டி சதுர வடிவத்திற்கு பரப்பிவைக்கவும். பின், சிறிதுசூடு குறைந்ததும் கத்தி கொண்டு சிறிய சதுர வடிவிற்கு வெட்டிவைக்கவும். நன்கு ஆறிய பிறகு எடுத்து சுவைக்கலாம்.
     

Share This Page