தொடரும் கொலைகள் / Thodarum Kolaigal By Anug Sathya

Discussion in 'Serial Stories' started by Tamilsurabi, Oct 1, 2018.

  1. Tamilsurabi

    Tamilsurabi Administrator Staff Member

    Joined:
    Sep 11, 2014
    Messages:
    172
    Likes Received:
    84
    Trophy Points:
    28
    வணக்கம் தமிழ்சுரபி வாசக நெஞ்சங்களே

    நமது தளத்திற்கு வந்திருக்கும் புது எழுத்தாளர்

    அனுக் சத்யா
    வரவேற்பதில் மிக்கமகிழ்ச்சி அடைகிறது தமிழ்சுரபி ...

    கதையின்பெயர் -தொடரும்கொலைகள்
    சிறு வயதில் இருந்தே கருணை இல்லத்தில் வளரும் மூன்று நண்பர்கள் அவர்கள் வாழ்வில் திடீரென அடுத்து அடுத்து நடக்க போகும் மர்மமான கொலைகள்...

    காரணம் என்ன?

    காரணமானவர்கள் யார்?

    அவற்றை காவல்துறை உதவியுடனும் விசாரிக்கும் நண்பர்களுக்கு கிடைக்கும் அதிர்ச்சியான தகவல்கள்....

    நடக்கும் கொலைகளுக்கும் நண்பர்களுக்கும் என்ன சம்மந்தம்.??

    அவர்கள் கருணை இல்லத்தில் சேர்க்கப்பட்ட சூழ்நிலை தான் என்ன...?

    அதுவும் அல்லாது ரகசிய ஆராய்ச்சி, இந்திய ராணுவத்தின் ரகசிய குழு என்ற சில கற்பனைகள்...

    இவற்றோடு நட்பு மற்றும் காதல் இதை நோக்கியே இந்த பயணம்
     
  2. Anug sathya

    Anug sathya Member

    Joined:
    Oct 1, 2018
    Messages:
    31
    Likes Received:
    34
    Trophy Points:
    18
    Gender:
    Male
    தமிழ்சுரபியில் எனக்கு எழுத வாய்ப்பு கொடுத்த சரவணகுமாரி சகோதரிக்கு என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டு கதையை தொடங்குகிறேன்...

    பாகம் 1 : கருணை இல்லம்

    கோயம்புத்தூர் இரயில் நிலையத்தில் இருந்து சுமா‌ர் 30 நிமிட பயணத்தில் அந்த கருணை இல்லத்தின் நுழைவு வாயிலை வந்தடைந்தனர் அந்த இளம் தம்பதிகள்.....

    சுற்றும் முற்றும் இருந்த பல வகையான பூக்களின் வாசம் அவர்கள் நாசியை துளைக்க அவற்றை ரசித்தவாரே உள்நுழைந்தனர்.....

    பார்ப்பதற்கே ரம்மியமாய் இருக்கும் இவ்விடத்தில் உள்ள ஒவ்வொருவரும் சொல்ல முடியாத துக்கங்களை கடந்தோ அல்லது மறந்தோ வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

    கிட்டத்தட்ட 16000 சதுர அடி பரப்பளவில் இருந்த அந்த கருணை இல்லத்தின் நான்கில் ஒரு பங்கை சர்ச் ஆக்கிரமித்து கொண்டு ஒய்யாரமாக அவர்களை வரவேற்றது...

    இருவரும் சர்ச்சின் முகப்பு பகுதியை வந்தடைய அவர்களின் வரவையறிந்து வரவேற்க காத்துகொண்டிருந்தார் அந்த இல்லத்தின் உதவியாளர் சிஸ்டர் ஷோபியா....

    '' ஹலோ சார்.. வெல்கம்.. நான் தான் சிஸ்டர் ஷோபியா, உங்களுக்காகத்தான் காத்துகிட்டு இருக்கேன்....'' தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு அவர்களை உள்ளழைத்து சென்றார்...

    '' நாங்க வரத பத்தி ஃபாதர் கிட்ட சொல்லிடீங்களா?... ''

    '' எல்லா விபரங்களையும் ஏற்கனவே சொல்லிட்டேன்.. நீங்க இங்க வெயிட் பன்னுங்க நான் போய் ஃபாதர் கூட்டிட்டுவரேன்... ''

    அவர்களை சர்ச் இருக்கையில் அமர வைத்து அவ்விடம் விட்டு நகர்ந்தார்...

    சர்ச்சை விட்டு வெளியேறியவர் இடது புறமாக திரும்பி நேரே ஃபாதர் லூயிஸ் அலுவலக அறையை நோக்கி விரைந்தார்....

    அலுவலகத்தின் அறை கதவை நெருங்கியவர் அப்போது தான் கவனித்தார்..

    கதவு வெளிப்புறமாக தாழிடப்பட்டு இருந்தது...

    '' பகலில் அறை கதவை ஃபாதர் தாழிடமாட்டாரே '' ஒரு கனம் யோசித்து விட்டு அங்கிருந்து நகர நினைத்தவர் ஏதோ சத்தம் கேட்டு அப்படியே நின்றார்...

    அந்த சத்தம் வெளிப்பக்கமாக தாழிடபட்டு இருந்த ஃபாதர் லூயிஸின் அலுவலகத்தின் உள்ளிருந்து கேட்டது...

    மீண்டும் அதே சத்தம் உள்ளிருந்து கேட்க சிஸ்டரின் இதய துடிப்பு அதிகரித்தது...

    இனம்புரியாத பயம் அவரை தொற்றி கொள்ள மனதை கட்டுபடுத்தி கொண்டு மெதுவாக அறை கதவை நெருங்கியவர் கதவில் தன் காதை பொறுத்தி கூர்மையாக கவனித்தார்...

    அதே சமயம் அறையின் உட்புறம் இருளினுல் ஒரு 6 அடி உயர உருவம் சிஸ்டர் ஒட்டு கேட்டு கொண்டிருந்த அதே கதவின் மறு பக்கத்தில் தன் ஒரு பக்க காதை அழுத்தி ஒட்டு கேட்டு கொண்டிருந்தது...

    **************

    '' டேய் ஜான் அவனுக்கு இந்த கிஃப்ட் புடிக்குமாடா?... ''

    '' என்னடா கேட்ட?... '' மொபைலில் இருந்து பார்வையை நீக்கி பீட்டரை ஏறிட்டான் ஜான்.

    '' உனக்கு கேட்டுருக்கும்... ''

    '' டேய் இது உனக்கே ஓவரா இல்ல அவன் பர்த்டேக்கு என்ன கிப்ட் பன்னாலும்னு நான் கேக்கும் போது நீ தானே இந்த ஐடியா குடுத்த.. ''

    '' அதுக்கு இல்லடா... ''

    '' டேய்.. இந்த பல்சர் பைக் புடிக்காதுனு மட்டும் அவன் சொன்னான், நீ காலிடா... ''

    '' ஏற்கனவே என் பர்சு காலி அடுத்து நானா..!! '' பீட்டர் தன் தலையை அந்த காலி பர்சுக்குள் நுழைப்பது போல செய்கை செய்ய அதை பார்த்து ஜான் புன்னகைத்து கொண்டிருந்தான்...

    அதே நேரம் அவர்கள் நின்று கொண்டிருந்த அந்த பைக் ஷோரூமிலிருந்து வெளியே வந்த ஒருவர் அவர்களை நெருங்கினார்.

    கருநீல சட்டை மற்றும் பேன்ட் போட்டுக்கொண்டிருந்த அவரை பார்த்த உடனே அடையாளம் கண்டு கொள்ளலாம் அதே ஷோரூமில் வேலை செய்கிறார் என்பதை.

    '' சார் பைக்ல எக்ஸ்ட்ரா பிட்டிங்ஸ் எல்லாம் ஃபிக்ஸ் பன்னியாச்சு நீங்க வண்டிய எடுத்துக்கலாம் '' வந்தவர் கூறி முடித்தார்.

    '' இதோ வரேன்... '' பீட்டர் முன் செல்ல அவனை பின் தொடர்ந்த ஜான், ஏதோ நினைத்தவனாய் ஒரு நொடி சுற்றிலும் சந்தேக பார்வையை செலுத்தி விட்டு முன்னேறினான்..

    ஓரிரு நிமிடங்களில் வந்த வேலையை முடித்து கொண்டு இருவரும் புறப்பட்டனர் ...

    '' அங்க எல்லாம் தயாரா இருக்குமா..? '' கேள்வியோடு ஜானை ஏறிட்டவாரே தன் பைக்கிற்கு உயிர் கொடுத்தான் பீட்டர்..

    '' அப்படித்தான் நினைக்கிறேன்... ''

    ஜான் தன் நண்பனின் பிறந்தநாள் பரிசாக வாங்கிய புது பைக்கில் ஏறிக் கொண்டு இருவரும் அவ்விடம் விட்டு விடைபெற அவர்கள் மறையும் வரை அந்த கண்கள் அவர்களையே கவனித்து கொண்டிருந்தது...

    சொல்லபோனால் இருவரில் ஒருவனை தான் பார்த்தது

    '' ஜானை ''
     
  3. Prabha_kannan

    Prabha_kannan Well-Known Member

    Joined:
    Oct 25, 2017
    Messages:
    404
    Likes Received:
    256
    Trophy Points:
    63
    Location:
    trichy
    hi
    terror title good start.
     
    Anug sathya likes this.
  4. Anug sathya

    Anug sathya Member

    Joined:
    Oct 1, 2018
    Messages:
    31
    Likes Received:
    34
    Trophy Points:
    18
    Gender:
    Male
    Thanks
     
  5. Geethabalan

    Geethabalan Active Member

    Joined:
    Nov 21, 2014
    Messages:
    257
    Likes Received:
    231
    Trophy Points:
    43
    Gender:
    Female
    Occupation:
    HomeMaker,writing
    Location:
    Chennai
    Title nalla iruku... all the best...
     
    Anug sathya likes this.
  6. Anug sathya

    Anug sathya Member

    Joined:
    Oct 1, 2018
    Messages:
    31
    Likes Received:
    34
    Trophy Points:
    18
    Gender:
    Male
    Thank you
     
  7. kani _mozhi

    kani _mozhi Active Member

    Joined:
    Feb 12, 2018
    Messages:
    213
    Likes Received:
    133
    Trophy Points:
    43
    Gender:
    Female
    Wow. Suspense story a .waiting
     
  8. kani _mozhi

    kani _mozhi Active Member

    Joined:
    Feb 12, 2018
    Messages:
    213
    Likes Received:
    133
    Trophy Points:
    43
    Gender:
    Female
    Wow. Suspense story a .title e bayangarama iruku.
     
    Anug sathya likes this.
  9. janaki

    janaki Active Member

    Joined:
    Oct 3, 2014
    Messages:
    262
    Likes Received:
    166
    Trophy Points:
    43
    Gender:
    Female
    Location:
    Madurai
    Good start
     
    Anug sathya likes this.
  10. Anug sathya

    Anug sathya Member

    Joined:
    Oct 1, 2018
    Messages:
    31
    Likes Received:
    34
    Trophy Points:
    18
    Gender:
    Male

    பாகம் 2 - பாவமன்னிப்பு

    அந்த அறை முழுவதும் நிசப்தமாக இருந்தது...

    அறை கதவில் காதை வைத்து கேட்டு கொண்டிருந்த சிஸ்டர் ஷோபியா குழப்பத்துடன் தன் உடலை நிமிர்த்தினார்.

    '' முதல்ல சத்தம் கேட்டுச்சு... ஆனா இப்போ கேக்கலயே...!!! சரி எதுக்கும் திறந்து பார்த்துடலாம்... '' எண்ணியவாரே கதவை திறக்க முனைந்தார்.

    அறையின் உட்புறம் இருந்த அந்த உருவம் அதை உணர்ந்து வேகமாக செயல்பட்டது.

    தரையில் பதியும் தன் காலடி சத்தம் கூட கேட்காத அளவிற்கு விரைந்து, அங்கிருந்த மரத்தினால் செய்யப்பட்ட அலமாரியின் பின்னால் செல்ல, அந்த உருவத்தை கண்ட அதிர்ச்சியில் அங்கிருந்த பூனை ஒன்று மிரண்டு ஓடியது.

    அதே நேரத்தில் சிஸ்டர் ஷோபியா கதவை திறந்து கொண்டு உள்ளே வர, தரிகெட்டு ஓடிய பூனை அவர் கால் இடுக்கில் நுழைந்து ஓட, பயத்தின் உச்சத்திற்கே சென்றார் அவர்...

    அவர் இதயம் பன்மடங்கு வேகமாக அடித்து கொண்டிருந்தது...

    '' ச்ச... இந்த பூனைக்கா இவ்வளவு பயந்தேன்.!!! '' நினைத்தபடி மார்பில் கை வைத்து தன்னை ஆசுவாசப்படுத்தி கொண்டார்...

    பின் சுற்றிலும் நோட்டம் விட்டு மீண்டும் அறை கதவை சாத்திவிட்டு ஃபாதரை தேடி பூந்தோட்டத்தை நோக்கி சென்றார்.

    இதை கவனமாக கவனித்து கொண்டிருந்த அந்த மனிதன் அலமாரியின் பின்புறமிருந்து வெளியேறி வந்தான்.

    பின் சாவகாசமாக தான் வந்த வேலையை ஆரம்பித்தான்..

    '' ஃபாதர் நீங்க இங்க தான் இருக்கீங்களா. நான் உங்களத்தான் தேடிக்கிட்டு இருக்கேன் '' பூந்தோட்டத்தில் நுழைந்தாள் ஷோபியா.

    அவளை பார்த்து மெல்லியதாக புண்ணகைத்து விட்டு மீண்டும் பூக்களை பறிக்க தொடங்கினார் 65 வயது மதிக்கத்தக்க ஃபாதர் லூயிஸ் பெர்னாண்டஸ்.

    '' என்னை எதுக்கு தேடிகிட்டு இருக்க ஷோபியா..? '' அவளை பாராமலே வினவினார்.

    '' அவங்க வந்துட்டாங்க ஃபாதர்... ''

    '' யாரு..? ''

    '' மிஸ்டர் அன்ட் மிஸ்சஸ் ரகு....''

    '' ஹோ... !! சாரி ஷோபியா, நான் மறந்துட்டேன்... வயசாயிடுச்சில அதான் கூடவே மறதியும் வந்துடுச்சு...''

    '' இப்ப எங்க இருக்காங்க?... ''

    '' சர்ச்ல... ''

    '' ஹூம்... சரி வா போகலாம் '' தான் பறித்தப் பூக்களை ஃபாதர் எடுத்துக் கொண்டதும், இருவரும் சர்ச்சை நோக்கி நகர்ந்தனர்.

    ஃபாதர் லூயிஸின் அலுவலகத்தில் இருந்த மரத்தினால் செய்யப்பட்ட அந்த அலமாரியை கவனமாக நோட்டம் விட்டு கொண்டிருந்தான் அவன்.

    பல கரங்களால் எழுதப்பட்ட பைபிள்களும், ரெஜிஸ்டர் புத்தகங்களும் மற்றும் சில பொருட்களும் அதில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.

    அவற்றை கவனித்து விட்டு ரெஜிஸ்டர் புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த இடத்தை நெருங்கினான்.

    பின் தன் விரல்களால் அந்த புத்தகங்களை ஒவ்வொன்றாக ஆராந்து கொண்டிருந்தவன் ஓரிடத்தில் தன் விரல்களை நிருத்தினான்...

    அவன் இதழ்களில் விஷமபுன்னகை பிறந்து மறைந்தது.

    அவ்விடத்தில் இருந்த புத்தகத்தை எடுத்து கொண்டு சேரில் அமர்ந்தான்.

    அது 1995 ஆண்டின் குழந்தைகள் சேர்ப்பிற்கான ரிஜிஸ்டர் புக்...
    பக்கங்களை புறட்டியபடியே சரியா 16 ஆம் பக்கத்தில் நிருத்தினான்.

    அதன் வலது மூலையில் 3.3.1995 என தேதி குறிப்பிடப்பட்டிருந்தது. அதில் இருந்த வாசகங்களை வாசிக்க தொடங்கினான்

    குழந்தையின் பெயர் : ஹரிஷ்

    சேர்த்தவரின் பெயர் : லூயிஸ் பெர்னாண்டஸ்

    முகவரி எனும் இடத்தில் கருணை இல்லத்தின் முகவரி எழுதப்பட்டு இருந்தது.

    பின் கீழ் இருந்தவற்றை விரைவாக படித்து முடித்து புத்தகத்தை இருந்த இடத்திலேயே வைத்தான்...

    '' மன்னிச்சிடுங்க உங்கள ரொம்ப நேரம் வெயிட் பன்ன வச்சிட்டேன்... '' அந்த தம்பதிகளிடம் ஃபாதர் மற்றும் சிஸ்டர் ஷோபியா வர,

    '' பரவாயில்லை ஃபாதர் ...'' என்றவாறு மரியாதை நிமித்தமாக எழுந்து நின்றனர்.

    '' நீங்க வரத பத்தி சிஸ்டர் எல்லா விஷயங்களையும் சொன்னாங்க, ஒரு குழந்தையை தத்தெடுக்கனும்னு வந்துருக்கீங்க எனக்கு ரொம்ப சந்தோஷம்... ''

    சிறு புன்னகையை வீசி '' ஃபாதர் குழந்தைய பாக்கலாமா?... ''

    '' ஓ எஸ்... சிஸ்டர் இவங்கள அழைச்சிட்டு போய் நம்ம இல்லத்துல இருக்க குழந்தைகளை காட்டுங்க... மற்றதை அப்புறம் பாத்துக்கலாம்... '' ஃபாதர் சென்று விட, மற்ற மூவரும் வேறு வழியாக வெளியேறினர்.

    ஃபாதர் சிறிது நேரம் பிரார்த்திவிட்டு பாவமன்னிப்பு வழங்கும் இடத்தில் அமர்ந்தார்.

    அவர் அலுவலகத்திலிருந்து வெளியே வந்து சர்ச்சின் உள்ளே நுழைந்தவன் ஃபாதர் இருக்கும் இடத்தை கண்டுகொண்டான்.

    ஃபாதர் தன்னை கவனித்து விடாமல் கவனமாக அவரை நெருங்கியவன் பாவமன்னிப்பு கேட்கும் இடத்தில் மண்டியிட்டு பின் வார்த்தைகளை உதிர்த்தான்...

    '' எனக்கு பாவமன்னிப்பு கொடுங்க ஃபாதர்... '' குரலில் கேலி நிரைந்திருந்தது.

    அவன் குரலை கேட்டு ஆச்சரியபட்டவர் பின்னால் இருந்த நாள்காட்டியை நோக்கினார்.

    அது 3.3.2017 என பல் இழித்து காட்டியது..
     

Share This Page