தொடரும் கொலைகள் / Thodarum Kolaigal By Anug Sathya

Discussion in 'Serial Stories' started by Tamilsurabi, Oct 1, 2018.

 1. Rabina

  Rabina Well-Known Member

  Joined:
  Aug 14, 2018
  Messages:
  670
  Likes Received:
  420
  Trophy Points:
  63
  Gender:
  Female
  nice
   
  Anug sathya likes this.
 2. kannamma 20

  kannamma 20 Well-Known Member

  Joined:
  May 14, 2017
  Messages:
  475
  Likes Received:
  353
  Trophy Points:
  63
  Gender:
  Female
  Yaruku ennachu ? Next kolai ?
   
  Anug sathya likes this.
 3. malarmathi

  malarmathi விழுந்தால் அழாதே, எழுந்திரு!

  Joined:
  Feb 6, 2018
  Messages:
  414
  Likes Received:
  334
  Trophy Points:
  63
  Gender:
  Female
  Occupation:
  இல்லத்தரசி
  Location:
  கோவை
  சுப்பரா போகுது கதை . சஸ்பென்ஸ் நெறைய வருது .ஹரிஷ் எ பத்தி தெரிய வேண்டியதன் அவசியம் என்ன ?
   
  Anug sathya likes this.
 4. Anug sathya

  Anug sathya Active Member

  Joined:
  Oct 1, 2018
  Messages:
  163
  Likes Received:
  116
  Trophy Points:
  43
  Gender:
  Male
  Evano evanayo adichutan..
   
 5. Anug sathya

  Anug sathya Active Member

  Joined:
  Oct 1, 2018
  Messages:
  163
  Likes Received:
  116
  Trophy Points:
  43
  Gender:
  Male
  Harish ku epudi kaayam ellam thaana kunam agudhu nu kandu pudikanumla
   
 6. Anug sathya

  Anug sathya Active Member

  Joined:
  Oct 1, 2018
  Messages:
  163
  Likes Received:
  116
  Trophy Points:
  43
  Gender:
  Male
  பாகம் 19 : ஓட்டம்

  ஆண் ஒருவரின் அலறல் குரல் கேட்டு நால்வரும் திடுக்கிட்டு ஃபாக்டரிக்கு பின்னால் ஓடினர்...

  அங்கே, பீட்டர்க்கு தண்ணீர் பாட்டிலை கொடுத்து விட்டுச் சென்ற கான்ஸ்டபிள் தலையில் சற்று பலமாக அடிபட்டு ரத்தம் வெளியேற, தரையில் மயங்கி நிலையில் கிடந்தார்...

  அவர் அருகே ஐந்தரை அடி உயர மனிதன் ஒருவன் கையில் இரும்பு கம்பியை பிடித்துக் கொண்டு நிற்க அதிலிருந்து ரத்தம் சொட்டிக் கொண்டிருந்தது...

  கான்ஸ்டபிளை இரும்பு கம்பியால் தாக்கிய போது அவரின் அலறலினால் வந்தவர்களின் காலடி சத்தம் கேட்டு, அவன் தன் பாக்கெட்டில் இருந்த கைக்குட்டையை எடுத்து முகத்தில் கண்கள் மட்டுமே தெரியும் படி இருக்கிக் கட்டிக் கொண்டு திரும்ப அங்கே ஹரிஷ் வந்து கொண்டிப்பதை பார்த்து என்ன செய்வதென்று தெரியாமல் தன் கையிலிருந்த இரும்பு கம்பியை அவனை நோக்கி ஏறிந்தான்...

  ஹரிஷ் சுதாரித்திக் கொண்டு கீழே குனிய நினைத்து தன் உடலை குறுக்கிக் கொள்ள, இரும்பு கம்பியோ அவனின் இடது கண்ணின் மேலாக நெற்றியை தாக்கி விட்டு விழுந்தது...

  ஹரிஷ் சற்று தடுமாறி கீழே விழப் போக அவனை நெருங்க நினைத்து முதல் அடி எடுத்து வைத்தவன் ஹரிஷின் பின்னால் ஓடி வந்து கொண்டிருந்த மற்ற மூவரையும் பார்த்ததும் அடுத்த காலடியை அவனது பக்கவாட்டில் பதித்து, ஃபாக்டரிக்கு பின்னால் காட்டினுள் சென்ற ஒற்றை அடி பாதையை நோக்கி விரைவாக ஓட ஆரம்பித்தான்...

  ஹரிஷ் ஒரு முறை தன் தலையை சிலிர்த்துக் கொள்ள, நெற்றியில் வழியும் தன் ரத்தத்தை பொருட்படுத்தாமல் கீழே விழப் போனவன், தன்னை நிலை நிருத்திக் கொண்டு தன்னை தாக்கியவனை பார்க்க, அவன் ஒற்றை அடி பாதையில் நுழைவதை கண்டதும் அவனை துரத்தியபடி அந்த பாதையில் நுழைந்தான்...

  ஹரிஷின் பின்னால் வந்தவர்கள் நடந்தவற்றை பார்த்து அதிர்ந்து போக நேரமில்லாமலிருக்க, ஜான் சற்றும் நிற்காமல் ஓடிய நிலையிலேயே குனிந்து தன் வலது கையில் ஹரிஷ் மேல் அந்த மனிதன் தூக்கி எறிந்த கம்பியை மண்ணோடு பற்றிக் கொண்டு, ஹரிஷை பின் தொடர்ந்து அதே பாதையில் ஓடினான்...

  ஜானுக்கு பின்னால் வந்து கொண்டிருந்த ரோகன் ஒருவேளை அந்த மனிதன் காட்டினுள் நுழைந்து விட்டால் பிடிப்பது கஷ்டம் என புரிந்து கொண்டு சட்டென முடிவெடுத்தவனாய் தன் இடது பக்கம் வந்து கொண்டிருந்த பீட்டருக்கு கைவிரலை தூக்கி சுட்டிக் காட்டிவிட்டு ஒற்றையடி பாதையின் வலது புறமாக காட்டினுள் நுழைந்து ஓட, அவனின் செயலை புரிந்து கொண்ட பீட்டர் பாதையின் இடது புறமாக காட்டினுள் நுழைந்து ஓடத் தொடங்கினான்...

  தன்னை துரத்திக் கொண்டு வரும் நால்வரையும் திரும்பி பார்க்காமல் அந்த மனிதன் ஒற்றை அடி பாதையில் எதிலும் இடித்து விடாமல் வளைந்து நெளிந்து அதிவேகமாக ஓடிக் கொண்டிருக்க,

  இருபுறத்திலுருந்தும் பாதையினுள் நீட்டிக் கொண்டிருந்த முட்செடிகளில் சட்டையோடு தோளையும் சேர்த்துக் கிழித்துக் கொண்டு அந்த மனிதனை வெறியுடன் துரத்திக் கொண்டிருந்தான் ஹரிஷ்...

  ஹரிஷின் வேகத்தில் அவன் மீது பட்ட சில முட்செடிகளின் சிறு கிளைகள் ஒடிந்து விழ, அதையும் சமாளித்துக் கொண்டு ஓட வேண்டியதாய் இருந்தது ஜானுக்கு...

  காட்டினுள் நுழைந்து ஓடிய பீட்டர் மரத்தின் வேர்களில் கால்களை சிக்கிக் கொள்ளாமலும் முட்புதர்களையும் தாண்டிக் கொண்டு எகிரி குதித்து ஓட,

  ரோகன் தன் எதிரே மழையினால் வேறோடு சாய்ந்திருந்த மரத்திற்கும் தரைக்குமான இடைவெளியில் சரிந்துக் கொண்டு சென்று பின் மீண்டும் அதே வேகத்தில் எழுந்து ஓடினான்...

  காட்டினுள் நுழைந்தபடி துரத்திக் கொண்டிருந்த இருவரும் ஒற்றை அடி பாதையில் ஓடிக் கொண்டிருந்த மற்ற மூவரையும் அவ்வப்போது மரங்களின் இடைவெளிகளில் பார்த்துக் கொண்டு சரியான திசையில் அவர்களை தவறவிட்டு விடாது குறிப்பிட்ட இடையில் தொடர்ந்து கொண்டிருக்க, அந்த மர்ம மனிதன் சட்டென பாதையின் இடது புறமாக காட்டினுள் நுழைந்து ஓட ஆரம்பித்தான்...

  '' பீட்டர்... உன் பக்கம் தான் வரான்... பிடி... விட்டுடாதே... '' என ஹரிஷ் கூறிக் கொண்டு அவனும் காட்டினுள் நுழைந்தான்...

  சகோதர்கள் இருவரும் ஹரிஷ் சென்ற இடத்தில் ஏற்பட்ட சறுகுகளின் சலசலப்பை அடையாளமாய் வைத்துக் கொண்டு கண் மூடித் தனமாக ஓடி வந்து பீட்டரின் மேல் இடித்துக் கொண்டு மூவரும் கீழே விழ '' ஆஆஆ '' என்றபடி வலியில் தன் கையின் மேல் பகுதியை பிடித்துக் கொண்டு எழுந்தான் பீட்டர்...

  '' சாரி... சாரி... '' என மற்ற இருவரும் எழுந்து கொண்டு சுற்றும் முற்றும் பார்க்க ஹரிஷ் எங்கே சென்றான் என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை...

  அவன் பெயரை கூறி கத்திக் கொண்டே கீழே விழும் போது கடைசியாக கேட்ட சருகுகளின் சத்தம் வந்த திசையை நோக்கி ஓட பீட்டரும் அவர்கள் பின்னால் ஓடினான்...

  கிட்டத்தட்ட காட்டின் மைய்யப் பகுதியை வந்துவிட்ட நிலையிலும் ஹரிஷ் எங்கிருக்கிறான் எனத் தெரியாமல் மூவரும் தனி தனியாக பிரிந்து சென்று தேடலாமென எண்ணி கால் போனப்போக்கில் ஓட ஆரம்பித்தனர்...

  கண் இரண்டும் திறந்த நிலையில் இருந்த போதும் கண்ணை கட்டி காட்டில் விட்டது போல் சில நிமிடங்கள் கழிந்து கொண்டிருக்க,

  காட்டினுள் ஓர் இடத்தில் இருந்து கார் ஒன்றின் எஞ்சின் ஸ்டார்ட் ஆகும் சத்தம் கேட்டது...

  மூவரும் சத்தம் வந்த திசையை நோக்கி விரைந்து செல்ல, அந்த காட்டின் மண் பாதையில் புழுதியை பரப்பிக் கொண்டு செல்ல தொடங்கியது அந்த கார்...

  மூன்று திசையில் இருந்தும் ஓடிவந்து கொண்டிருந்த மூவரும் மண் பாதையில் சென்று கொண்டிருந்த காரை பார்த்தவுடன் வேகத்தை அதிகரித்து ஓட அவர்களை கவனித்த அந்த மனிதன் தன் காரின் வேகத்தை கூட்டினான்...

  காருக்கும் அவர்களுக்குமான இடைவெளி கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துக் கொண்டே இருக்க, சற்றும் எதிர்பாராத நிலையில் கார் செல்லும் பாதையின் முன்பு வந்து குதித்தான் ஹரிஷ்...

  அந்த மனிதனை துரத்திக் கொண்டு வந்த போது தன் நெற்றியில் வழியும் ரத்தம் கண்களை மறைத்து விட்ட சமயம் அந்த மனிதனை தவர விட்டவன்,

  அவனை கண்டுபிடிக்க தன் கண்ணில் பட்ட உயரமான மரத்தில் விரைவாக ஏறி காட்டை சுற்றி நோட்டமிட்டு அந்த மனிதன் ஓர் குறிப்பிட்ட இடத்தை நோக்கி ஓடுவதை கண்டு அந்த திசையில் தன் பார்வையை செலுத்தியிருந்தான்...

  அங்கே மண் பாதையில் கார் ஒன்று நிருத்தப்பட்டிருப்பதை கண்டு கொண்டவன் அந்த மனிதனின் நோக்கத்தை புரிந்து கொண்டு அவன் செல்ல நினைக்கும் திசை பக்கமாய் ஓடி வந்து அந்த மனிதன் அந்த இடத்தை அடைவதற்குள் வந்து சேர்ந்திருந்தான்...

  காரை அந்த காட்டுப் பாதையின் மண் சாலையில் விரைவாக ஓட்டிக் கொண்டு வந்த மனிதன் தன் பாதையின் எதிர் திசையில் கையில் ஓர் மரக்கட்டையுடன் வந்து நின்ற ஹரிஷை கண்டு சட்டென ப்ரேக்கை அழுத்த,

  காரின் டயர் '' சிர்ர்ர்ர்'' என்ற சத்தத்துடன் தன்னை மண்ணில் தேய்த்துக் கொண்டு ஹரிஷ்க்கு முன் சில மீட்டர் இடைவெளியில் காரை நிருத்தியது...

  காரை பின் தொடர்ந்து வந்த மற்ற மூவரும் காரின் மற்ற மூன்று திசையிலிருந்தும் வந்து அதே இடைவெளி அளவில் மூச்சிறைக்க நின்று கொண்டிருந்தனர்...

  காரின் முன் புறம் ஹரிஷ் கையில் ஓர் உருளை மரக்கட்டையுடன் நின்று கொண்டிருக்க, காரின் வலது புறம் நின்று கொண்டு தன் துப்பாக்கியால் காரின் மூடப்பட்ட முன்பக்க கண்ணாடியை குறி வைத்தான் ரோகன்...

  '' ஏன் ரோகன் பார்த்துகிட்டு இருக்க சுடு அவனை... '' என்று தன் அடிபட்ட கையின் வலியை பொருத்துக் கொள்ள மற்றொரு கையால் அதை பிடித்துக் கொண்டு காரின் பின் புறமிருந்து பீட்டர் கூற,

  '' இல்ல... வேண்டாம்... அவன் நமக்கு உயிரோட வேனும் '' என்ற காரின் இடது பக்கமாய் நின்று கொண்டு பதறிய ஜானின் வார்த்தைகள், அந்த மனிதனுக்கு ஆறுதலாய் மாறி போனது...

  ஹரிஷும் அந்த மனிதனும் ஒருவர் மற்றோருவரை கண்களால் எரித்து விடும் அளவிற்கு குரோதத்துடன் பார்த்துக் கொண்டிருக்க, ஹரிஷின் நெற்றியிலிருந்து வடிந்த ரத்தம் அவனது இடது கண்ணின் இமை வழியாக சொட்டு சொட்டாய் தரையில் சிந்திக் கொண்டிருந்தது...

  ரத்தம் சிந்திய நிலையில் தன் எதிரில் நின்ற கொண்டிருந்தவனை சில நொடிகள் தன் பார்வையால் மேலும் கீழும் நோட்டமிட்டவன், அவனுக்கு சவாலிடுவது போல தன் காரின் ஆக்ஸிலரேட்டரை விட்டு விட்டு மிதித்து காரை உறுமவிட்டான்....

  ஹரிஷ் தன் கையிலிருந்த உருட்டுக் கட்டையை இறுக்கிபிடித்துக் கொண்டு காரின் கண்ணாடியை உடைக்க எண்ணி கையை ஓங்கிய சமயம், சட்டென அந்த மனிதன் தன் காரின் பின் சக்கரத்தை மட்டுமே இயக்கி காரை ஓரே புள்ளியில் வட்டமாக சுழலவிட ஆரம்பித்தான்...

  காரின் முன் பக்க சக்கரம் இருந்த இடத்திலேயே இடது வலதாக சுற்றிக் கொண்டிக்க பின் பக்க சக்கரங்கள் மண் தரையில் ஓர் வட்டத்தை ஏற்படுத்திக் கொண்டு மண்ணை காற்றில் பறக்க வைத்து புழுதியை ஏற்படுத்தியது...

  கண் இமைக்கும் நேரத்தில் அந்த மனிதன் இதை செயல்படுத்த அடுத்த சில நொடிகளில் புழுதி மண்டலம் அந்த இடத்தை சூழ்ந்து கொண்டு பார்வையை மறைத்தது...

  அந்த மனிதன் காரை நிருத்தாமல் அதே வேகத்தில் இயக்க, கண்களில் மண் துகள்கள் விழுந்து விடாமல் நால்வரும் தலையை சற்று குனிந்து கொண்டு கையை முகத்திற்கு முன்னால் நீட்டியபடி பார்வையை செலுத்த நினைத்தனர்...

  ஆனால் புழுதி படலம் வர வர அதிகரித்துக் கொண்டே போக 'இனி வேறு வழியில்லை. எப்படியாவது அவனை தடுக்கனும்' என நினைத்துக் கொண்டு புழுதியை பொருட்படுத்தாது முன்னேறி செல்ல ஆரம்பித்தான் பீட்டர்...

  முன்னேறி சென்றவன் ரோகனை விரைவில் நெருங்கிவிட, அவன் கவனிக்காத சமயத்தில் அவனது கையில் இருந்த துப்பாக்கியை பிடுங்கி தன் போக்கிற்கு சுட ஆரம்பித்தான்...

  முதல் தோட்டா வே காரின் கண்ணாடியின் மீது தான் வைத்திருந்த இரும்பு கம்பியை தூக்கி எறிந்து தாக்கிய ஜானின் கால்களுக்கு நடுவே நுழைந்து செல்ல,

  அதன் விசையை உணர்ந்த ஜான் தன்னை பாதுகாத்துக் கொள்ள புழுதியை விட்டு வெளியேற நினைத்து பின்னால் செல்ல ஆரம்பித்தான்...

  அடுத்த தோட்ட சரியாக காரின் வலது பக்க பின் கதவின் கண்ணாடியை துளைத்துக் கொண்டு சென்றது...

  ' இனி உயிருக்கு உத்திரவாதம் இல்லை..' என்பதை புரிந்து கொண்டு தன் காரை சுழலவிடுவதை நிருத்தியவன், அங்கிருந்து தப்பிக்க கண்மூடித் தனமாக வாகனத்தை செலுத்த ஹரிஷ் அங்கே நின்று கொண்டிருப்பதை கவனித்து காரின் வேகத்தை அதிகரித்தான்...

  முன்பே ரத்தம் சிந்தியதால் ஏற்பட்ட இடையூரின் காரணமாக பார்வை சிறிது தடைபட்டு போக, இப்போது புழுதியினால் முழுவதுமாக கண்களை மூடி கசக்கிக் கொண்டிருந்த ஹரிஷ், தன்னை நோக்கி வரும் காரை கவனியாமல் இருக்க அந்த கார் அவனை அதிவேகமாக நெருங்கியது...

  ஏற்கனவே புழுதியை விட்டு வெளியேறிய ஜான் அதை கவனித்து ஹரிஷை நோக்கி ஓடி காரில் இடிபடாமல் மயிரிலையில் அவனை தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டு காரைவிட்டு தள்ளி சென்று கீழே விழுந்தான்...

  தன் கையிலிருந்த துப்பாக்கியை பீட்டர் பிடுங்கிக் கொண்டு இப்படி ஓர் செயலை செய்வான் என எதிர் பார்த்திடாத ரோகன் ஒருவழியாக அவனிடமிருந்து தன் துப்பாக்கியை மீண்டும் அபகரித்துக் கொண்டு தப்பிச் செல்லும் காரின் டையரை குறிபார்த்து சுட துப்பாக்கியில் இருந்து சத்தம் மட்டுமே வெளியேறியதே தவிர வேறு ஒன்றும் நடக்கவில்லை...

  ரோகன் தன்னிடம் இருந்து துப்பாக்கியை அபகரித்துக் கொள்ளும் முன்பே பீட்டர் அனைத்து தோட்டக்களையும் காலி செய்திருந்தான்...

  '' ஏன்டா இப்படி பண்ணுன..? '' என்ற ரோகன் ஆத்திரத்தில் பீட்டரை முறைத்த போது தான், தான் செய்த செய்த தவறை முழுவதுமாக உணர ஆரம்பித்தான் பீட்டர்...

  ஆனால் இவர்கள் இருவரையும் கவனியாமல் தன்னை காப்பாற்றிய ஜானுக்கு நன்றியை கூறிவிட்டு ஹரிஷ் கார் சென்ற இடத்தை நோக்க,

  கார் அவனது கண் பார்வையிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து கொண்டிருந்த சமயம் அவனது காயங்களும் தானாக மறைந்து கொண்டிருந்தது...
   
 7. Rabina

  Rabina Well-Known Member

  Joined:
  Aug 14, 2018
  Messages:
  670
  Likes Received:
  420
  Trophy Points:
  63
  Gender:
  Female
  peter sodhapitane..
   
  Anug sathya likes this.
 8. Anug sathya

  Anug sathya Active Member

  Joined:
  Oct 1, 2018
  Messages:
  163
  Likes Received:
  116
  Trophy Points:
  43
  Gender:
  Male
  Hmmm.. Konjam avasara pattutan
   
 9. Anug sathya

  Anug sathya Active Member

  Joined:
  Oct 1, 2018
  Messages:
  163
  Likes Received:
  116
  Trophy Points:
  43
  Gender:
  Male
  பாகம் 20 : ரகசிய அறை

  ஊட்டி காட்டு பங்களாவின் அடிதளத்தில் அமைந்திருந்த ரகசிய லாபில் நின்று கொண்டிருந்தார், நாம் முன்பே பார்த்திருந்த கோட்சூட் மனிதர்...​

  வெள்ளை நிற கோர்ட் ஒன்றை போட்டுக் கொண்டு ஹரிஷின் ரத்த மாதிரியின் செயல்பாடுகளை அவர் பிரம்மிப்புடன் பார்த்துக் கண்டிக்க,

  ராஜ் அவரின் அருகில் அமைதியாக இருப்பது போல் நின்று கொண்டிருந்தான்...

  சிறிது நேரம் அந்த வேலையில் மும்மரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தவர், தன் உடலை நிமிர்த்திக் கொள்ள, '' யார் டாக்டர் இந்த ஹரிஷ்...? எப்படி அவனோட உடலில் உங்களோட நானோமைட் செல்ஸ் இருக்கு...!! ''

  '' அது மட்டும் இல்லாமல் நாமலே இன்னும் இந்த ஆராய்ச்சியோட பாதி நிலையில் தான் இருக்கோம்.. ஆனா அவன் உடலுக்குள் உள்ள செல்கள் நாம நினைத்தை விட சிறப்பா செயல்பட்டுகிட்டு இருக்கு... ''

  '' ஒருவேளை நம்மளை போல வேறுயாரும் இந்த ஆராய்ச்சியை செய்துகிட்டு இருக்காங்களா.!! அவங்க தான் அவன் உடலில் அதை செலுத்தி இருப்பாங்களா..? '' என தான் அடக்கி வைத்திருந்த கேள்விகளை கொட்டிக் கொண்டிருந்தவனை ஏறிட்டவர் பெறுமூச்சு ஒன்றை வெளியிட்டபின் நிதானமாக கூற ஆரம்பித்தார்...

  '' இந்த ஆராய்ச்சியை வேற யாரும் செய்யல ராஜ். ஹரிஷோட உடலில் இருக்க நானோமைட் செல்ஸ்க்கு காரணம் அவனோட அப்பா லவின் குமார் தான். அவரு தான் இந்த ஆராய்ச்சியை 28 வருஷத்துக்கு முன்னாடி தொடங்கினார்...

  இதுக்கு இந்திய அரசாங்கமும் ஒப்புதல் அளித்தது... நான் அவருக்கு உதவியாளனா இருந்தேன்.. ரெண்டு வருஷம் தீவிரமான ஆராய்ச்சிக்கு பிறகு நானோமைட் செல்ஸை உருவாக்கினார்... அதை ஒரு எலியோட உடலில் செலுத்துனப்போ, ஒரு சில நிமிசத்துல அந்த எலியோட உடல் மொத்தமும் உருகுழைந்து போயிடுச்சி... ''

  '' அப்பறம் என்ன ஆச்சு டாக்டர்..!, '' தெரிந்து கொள்வதில் மிகவும் ஆர்வம் காட்டினான் ராஜ்...

  '' இரண்டு வருட உழைப்பு எங்க கண்ணு முன்னாடியே சிதைந்து போனதை லவினால தாங்கிக்க முடியல... எல்லாம் சரியா இருந்தும் ஏன் இப்படி ஆனதுனு நானும் அவரும் கண்டுபிடிக்க ட்ரை பண்ணோம். கடைசியில் மனித செல்களுக்கும் மற்ற உயிரனங்களோட செல்களுக்கும் இருக்கும் வித்தியாசம் நான் பிரச்சினையா இருக்குனு தெரிஞ்சிக்கிட்டோம்... ''

  '' அதனால எங்க ஆராய்ச்சியை மனித உடலில் மட்டும் தான் செலுத்தி சோதனைகளை செய்ய முடியும்னு தெரிய வந்தப்போ, இந்திய அரசாங்கம் எங்க ஆராய்ச்சியை இனி தொடர கூடாதுனு தடை பண்ணிட்டாங்க. ஆனா நானும் லவினும் அரசாங்கத்துக்கு தெரியாமல் எங்க ஆராய்ச்சியை இங்க தொடர்ந்து செய்ய ஆரம்பிச்சோம்... ''

  '' அதுக்காக லவின் தன்னையே அந்த ஆராய்ச்சிக்கு பயன்படுத்திக்கிட்டார். அந்த சமயத்தில் தான் அவரோட மனைவி கர்ப்பம் ஆனாங்க. ஒருவேளை லவினோட உடம்பில் நாங்க செலுத்திய நானோமைட் செல்ஸ் விந்தணு மூலமாக அவரோட குழந்தைக்கு வந்துருக்கனும்... ''

  '' நாம இது வரைக்கும் வளர்ந்த செல்ஸ்ல மட்டும் தான் இந்த ஆராய்ச்சியை செய்து இருக்கோம். ஆனால் ஹரிஷ் அவன் அம்மாவோட கருப்பையிலிருக்கும் போதே அது அவனோட ஸ்டெம்செல்ஸோட கலந்துடுச்சு...''

  '' அதனால என்ன இருக்கு டாக்டர்? '' அமைதியாய் இருந்தவன் குழப்பத்துடன் கேட்டான்...

  '' ஸ்டெம்செல்ஸ்க்கு எந்த ஒரு உறுப்பாகவும் மாறக் கூடிய தன்மையும் நாம நினைச்சு பார்க்காத அளவிற்கு எதிர்ப்பு சக்தியும் இருக்கு ராஜ்... அதனால தான் நானோமைட் செல்ஸால அவனுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படமால் இருக்கு. ''

  '' இப்போ டாக்டர் லவின் குமார் எங்க சார் இருக்காரு...? அவரோட பையன் ஏன் இப்படி ஒரு கருணை இல்லத்தில் வளர்ந்து கிட்டு இருக்கான்..? ''

  ராஜை நோக்கியவர், '' டாக்டர் லவின் குமார் ஒரு தீ விபத்தில் இறந்துட்டார். அந்த விபத்து கூட ஹரிஷ் வளர்ந்த அந்த கருணை இல்லத்துக்கு பக்கத்துல தான் நடந்ததுச்சு. அதுல லவினும் அவர் மனைவியும் அந்த இடத்துலயே இறந்து போயிட்டதா சொல்றாங்க... ''

  '' ஆனால் ஹரிஷ் எப்படி அதுல இருந்து தப்பிச்சான்னு எனக்கு தெரியல.. '' என்றுவிட்டு அந்த ரகசிய அறையை விட்டு வெளியேறினார்..

  *******************​

  தன் துப்பாக்கியை அபகரித்துக் கொண்டு பீட்டர் செய்துவிட்ட காரியத்தால் அவன் மீது ஆத்திரம் அடைந்தவன், அவனை அடிக்க கையை ஓங்க, ஓங்கிய கையை அவனது பின் பக்கத்தில் இருந்து பிடித்துக் கொண்டான் ஜான்...

  '' கையை விடு ஜான். இவன் என்ன பண்ணானு பார்த்தீல...? நான் அந்த ஆளை பிடிச்சிருப்பேன். ஆனா இப்போ இவனால அவன் தப்பிச்சிட்டான்.. '' கோபத்தில் திமிறியவனின் கையை உதறி விட்டான் ஜான்...

  '' முடிஞ்சதை பத்தி பேசுறதால நடந்த விஷயம் மாறப் போறது கிடையாது. அடுத்து என்ன பண்றதுனு யோசிப்போம்...'' என்றுவிட்டு பீட்டரை நெருங்கினான்...

  '' இனி என்ன பண்றது... அதான் உன் ஃப்ரண்டு அவனை தப்பிக்க வச்சிட்டானே. அந்த கார் போன திசையில் கோயம்புத்தூரில் இருந்து சென்னை போற நான்குவழி சாலை இருக்கு. இன்னேரம் அவன் அதை ரீச் பண்ணியிருப்பான்...நாம அவனை மொத்தமா மிஸ் பண்ணிட்டோம்..'' என்று ரோகன் கூறி முடிக்கும் முன்பே பின்னால் இருந்து,

  '' அவன் இன்னும் நம்ம கிட்ட இருந்து முழுவதுமா தப்பிக்கல ரோகன். '' என்ற ஹரிஷின் குரல் கேட்க அனைவரும் அவன் திசையை நோக்கினர்...

  ஹரிஷ் மண் தரையில் காரின் சக்கரங்கள் ஏற்படுத்திய வட்டத்தின் அருகில் குத்துக்காலிட்டு அமர்ந்தபடி, மண் தரையில் ஏற்பட்டிருந்த ஈரத்தை தொட்டு முகர்ந்து பார்க்க, அதிலிருந்து டீசல் வாடை அடித்தது..

  '' அந்த காரில் டீசல் லீக் ஆகுது... ஒருவேளை பீட்டர் துப்பாக்கியால சுட்டப்போ அந்த காரோட டீசல் டேங்கில் ஓட்டை ஏற்பட்டு இருக்காலம். அவனால கொஞ்ச தூரம் தான் போக முடியும். சீக்கிரமா போனா பிடிச்சிடலாம் '' என ஹரிஷ் எழுந்து நின்று கொண்டான்...

  ஹரிஷின் வார்த்தைகளை கேட்ட ரோகன் சற்றும் தாமதிக்காமல், தன் கார் இருந்த ஃபாக்டரியின் திசை பக்கமாய் ஒடிக் கொண்டே '' நாம ஓடி போய் அவனை பிடிக்க முடியாது. நான் கார் எடுத்துகிட்டு அங்க போறதுக்குள்ள ஒருவேளை அவன் தப்பிச்சிட வாய்ப்பிருக்கு..''

  '' என்ன பண்ண போற..? '' நின்ற இடத்திலிருந்து ஜான் குரல் கொடுக்க,

  '' உடனே ஸ்டேசன்க்கு இன்ஃபார்ம் பண்ணி செக்போஸ்டை அலர்ட் பண்ணிடுறேன். '' என்றுவிட்டு விரைந்து சென்று காட்டினுள் நுழைந்து மறைந்தான்..

  ரோகன் சென்ற பாதையை பார்த்துக் கொண்டிருந்த மூவரும் தங்களுக்குள் ஒருமுறை பார்த்துக் கொண்ட பின், ஹரிஷூம் ஜானும் ரோகனை பின் தொடர்ந்து செல்ல எத்தனித்த தருணம் '' ஏய் கொஞ்சம் இருங்க... '' என்று தடுத்து நிருத்தினான் பீட்டர்....

  '' அந்த ஆள் ஃபாக்டரிக்கு வரனும்னு நினைச்சிருந்தா ஏன் இப்படி காட்டிக்குள்ள நுழைஞ்சி வரனும், நாம வந்த வழியாவே வந்துருக்கலாமே. அந்த பாதை தப்பிச்சு போறதுக்கும் இந்த பாதையை விட ரொம்ப ஈசியா இருந்துருக்குமே '' என்றான்...

  இருவரும் அவன் என்ன கூற வருகிறான் என புரியாமல் அவனையே குழப்பத்துடன் பார்த்துக் கொண்டிருக்க அவர்களை புரிந்து கொண்டு அவனே தொடர்ந்தான்...

  '' ஒருவேளை அவன் ஃபாக்டரிக்கு வரனும்னு இங்க வராம வேற எங்கையாவது வந்துருக்கலாம் இல்லயா... அதனால கூட இந்த பாதைய யூஸ் பண்ணிருக்கலாம் '' என்றான் பீட்டர்...

  '' அப்படியே இருந்தாலும் அவன் எதுக்காக ஃபாக்டரிக்கு வரனும். எதுக்காக அந்த கான்ஸ்டபிளை அடிக்கனும்... எனக்கு ஒன்னும் புரியலை..'' என்று ஹரிஷ் கூற,

  '' அதை தெரிஞ்சிக்கனும்னா அவன் இங்க எதுக்காக வந்தான்...? எங்க வந்தான்னு நாம கண்டுபிடிப்போம். ஒருவேளை அங்க நமக்கு ஏதாவது க்ளூ கிடைக்க வாய்ப்பிருக்கு '' என்றான் ஜான்..

  '' நான் காட்டுக்குள்ள நுழையும் போது அவனை மிஸ் பண்ணிட்டேன். அப்போ ஒரு மரத்தில் ஏறி நான் பார்த்தப்போ இந்த பக்கம் தான் அவன் காரை நிருத்தி இருந்ததை கவனிச்சேன். '' என்று அந்த மர்ம மனிதன் சென்ற திசைக்கு எதிர் திசையில் ஹரிஷ் தன் கையை உயர்த்தி சுட்டிக் காட்ட பின் மூவரும் அந்த திசையில் செல்ல தொடங்கினர்...

  சிறிது நேரத்தில் நண்பர்கள் மூவரும் அந்த மனிதன் தன் காரை நிருத்தியிருந்த இடத்தை வந்தடைய, கார் சக்கரங்களின் தடங்கள் அந்த இடத்தையும் தாண்டி காட்டினுள் சென்றதை கவனித்த ஜான் அதை மற்றவர்களிடம் தெரியப்படுத்தினான்...

  பின் மூவரும் அந்த இடத்தை தாண்டி முன்னேறி செல்ல, காட்டினுள் நுழைந்து சென்ற ரோகன் ஒருவழியாக சரியான பாதை கண்டுபிடித்து ஃபாக்டரிக்கு பின்னால் வந்து சேர்ந்தான்...

  அங்கே தலையில் அடிபட்ட கான்ஸ்டபிளை கானாமல் சற்று திகைத்தவனுக்கு, மர்ம மனிதனை துரத்திக் கொண்டு சென்று காட்டினுள் நுழையும் போது தனக்கு பின்னால் கேட்ட காலடி சத்தத்தின் நியாபகம் வந்து போனது...

  ஒருவேளை அலறல் சத்தம் கேட்டு ஃபாக்டரிக்குள் போஸ்ட்மாடம் செய்தவர்கள் வந்திருக்க வேண்டும். அவர்கள் தான் அவரை தூக்கிச் சென்றிருக்க வேண்டும் என நடந்ததை சரியாக யூகித்துக் கொண்டான். பின் தன் காரை நெருங்கியவன் அதில் வைத்திருந்த வாக்கிடாக்கியின் மூலம் கன்ட்ரோல் ரூமை தொடர்பு கொண்டு விபரத்தை கூறிவிட்டு ஃபாக்டரிக்குள் நுழைந்தான்...

  ஃபாக்டரியின் உள்ளே இன்னும் போஸ்ட்மாடம் நடந்து கொண்டிருந்தது...
  தன் பார்வையை சுற்றிலும் சுழலவிட, அந்த இடத்தின் மூலையில் இருந்த ஓர் இரும்பு டேபிளில் கான்ஸ்டபிள் தலையில் கட்டுபோடப்பட்டு கிடத்தி வைக்கப்பட்டிருப்பதை கவனித்து அவரை நெருங்கினான்...

  உள்ளே வந்த ரோகனை கவனித்த மூவரில் ஒருவர் அவனை நெருங்கி சென்று, '' என்ன நடந்தது..? '' என வினவ, ரோகனும் நடந்தவற்றை ஓர் அளவிற்கு அவரிடம் கூறி முடித்தப்பின் அந்த இடத்தை விட்டு வெளியேறி, தன் காரில் ஏறி விரைவாக புறப்பட்டுச் சென்றான்...

  அதே சமயம் காட்டினுள் சென்ற நண்பர்கள் மூவரும், மண் பாதையின் முடிவிற்கு வந்திருந்தனர்...

  இனி எந்த பக்கம் செல்வது என புரியாமல் சுற்றிலும் நோட்டமிட ஓர் இடத்தில் சில செடிகளின் கிளைகள் ஒடிக்கப்பட்டிருப்பதை கவனித்து அந்த பக்கமாக செடிகளின் மத்தியில் நுழைந்து சென்றனர்...

  சில நிமிட நேரங்கள் கழிந்த பிறகு காட்டினுள் அமைந்திருந்த ஓர் பழுதடைந்த கட்டிடத்தை கண்டுபிடித்த மூவரும் அதை நெருங்கி செல்லாமல், சற்று தொலைவில் இருந்தவாரே நோட்டமிட்டு அங்கு வேறு யாரும் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டபின்பே அருகில் சென்றனர்...

  '' இவ்ளோ பெரிய காட்டுக்குள்ள எவன்டா பில்டிங்கை கட்டுனுது..? '' என்ற ஜான் அந்த கட்டிடத்தின் பழுதடைந்த கதவை திறந்து கொண்டு உள்ளே செல்ல,

  அவன் பின்னால் நின்று கொண்டு தலையை மட்டும் உள்ளே நீட்டிய பீட்டர் '' வேற யாரு... கொத்தனார் தான்... '' என்க ஹரிஷ் அவனின் பின்னால் உதைத்து உள்ளே தள்ளினான்....

  கட்டிடத்தின் உள்ளே எல்லா இடங்களிலும் தூசி படிந்து அழுக்காயிருக்க தரையில் ஏற்பட்டிருந்த சில காலடி தடங்கள், அம்மனிதன் இங்கு தான் வந்திருக்கிறான் என்பதை புரியவைத்தது...

  காலடி தடங்களை மூவரும் பின்பற்றி செல்ல, சில அடி தூரம் சென்ற காலடி தடம் அந்த கட்டிடத்தின் ஓர் அறையில் சென்று முடிந்தது...

  '' டேய் என்னடா இது... இந்த ரூம் மட்டும் தூசியே இல்லாமல் க்ளீனா இருக்கு. ஒருவேளை இங்க இருந்த எல்லாத்தையும் அவன் எடுத்துட்டு போய்ட்டானோ..! '' என்ற ஜான் அறை முழுவதையும் அங்குலம் அங்குலமாக தன் பார்வையை செலுத்தி ஏதேனும் கிடைக்கிறதா எனத் தேடிப்பார்த்தான்...

  ஆனால் அப்படி எதுவும் கிடைக்காமல் வெறுப்படைந்து '' ச்ச '' என்று தன் காலால் தரையில் உதைத்து தன் கோபத்தை வெளியிட்டான்..

  '' அவன் எதுக்காக இங்க வரனும்..! அப்படி இங்க என்ன இருந்துருக்கும்..? '' என்ற ஹரிஷ் பீட்டரை நோக்க, அவனோ தன் மொபைலை நோண்டிக் கொண்டிருப்பதை கவனித்து '' உன்னால தான்டா அவன் தப்பிச்சிட்டான்... '' என்றுவிட்டு அவனை மீண்டும் ஒரு உதை விட்டான்...

  அவனின் உதையில் தடுமாறி கீழே விழப்போனவன் அருகில் இருந்த சுவரில் தன் கையை பதித்து தன்னை தாங்கிக் கொள்ள நினைக்க, அவன் கைபட்ட இடத்திலிருந்த செங்கல் தன்னை சுவற்றுக்குள் இழுத்துக் கொண்டது...

  கைவைத்த இடம் உள்ளே செல்லவும் மேலும் தடுமாறியவன் அந்த சுவரில் முழுவதுமாய் இடித்துக் கொண்டதும், அந்த சுவர் ஒரு கதவு போல் திறந்து கொண்டு தன் உள்ளிருந்த ரகசிய அறையை அவர்களுக்கு காட்டிக் கொடுத்தது....
   
  kani _mozhi likes this.
 10. kani _mozhi

  kani _mozhi Active Member

  Joined:
  Feb 12, 2018
  Messages:
  385
  Likes Received:
  251
  Trophy Points:
  43
  Gender:
  Female
  Super. Sema suspense. Enna room athu ?
   
  Anug sathya likes this.

Share This Page