தொடரும் கொலைகள் / Thodarum Kolaigal By Anug Sathya

Discussion in 'Serial Stories' started by Tamilsurabi, Oct 1, 2018.

 1. Rabina

  Rabina Well-Known Member

  Joined:
  Aug 14, 2018
  Messages:
  433
  Likes Received:
  252
  Trophy Points:
  63
  Gender:
  Female
  super update
   
  Anug sathya likes this.
 2. Meena Praveen

  Meena Praveen Member

  Joined:
  Mar 7, 2018
  Messages:
  46
  Likes Received:
  23
  Trophy Points:
  8
  so sad. second harish epdi irunthan ?
   
  Anug sathya likes this.
 3. Anug sathya

  Anug sathya Active Member

  Joined:
  Oct 1, 2018
  Messages:
  119
  Likes Received:
  96
  Trophy Points:
  28
  Gender:
  Male
  Aduthu Vara updates la soldren pa
   
 4. kannamma 20

  kannamma 20 Well-Known Member

  Joined:
  May 14, 2017
  Messages:
  440
  Likes Received:
  325
  Trophy Points:
  63
  Gender:
  Female
  Nice updates
   
  Anug sathya likes this.
 5. Kavyakeerthi

  Kavyakeerthi Active Member

  Joined:
  Oct 15, 2018
  Messages:
  104
  Likes Received:
  68
  Trophy Points:
  28
  Nice update
   
  Anug sathya likes this.
 6. Anug sathya

  Anug sathya Active Member

  Joined:
  Oct 1, 2018
  Messages:
  119
  Likes Received:
  96
  Trophy Points:
  28
  Gender:
  Male
  பாகம் 40 : பார்வை

  கருமை நிறம் மட்டுமே எங்கும் சூழ்ந்திருக்க பார்வையை மறைத்துக் கொண்டிருந்த இமைகள் விரிக்கப்பட்டதும், 3D தொழில் நுட்ப வீடியோ கேம் பார்வை (அட அதாங்க நாமலே கண்ணால பார்க்குற மாதிரி இருக்கும்ல அது) போல காட்சிகள் தொடங்கியது...

  வெண்மை நிற உடையின் மேல் பச்சை நிற துணியை கட்டிக் கொண்டு நின்ற மருத்துவர்களே முதன் முதலாக பார்வையில்பட்டனர்....

  ஓர் இடத்தில் நில்லாமல் பார்வை நாலா பக்கம் போய் வந்து கொண்டிருந்த போது சற்று ஈரபசையுடன் தெரிந்த சின்னஞ்சிறு கைகள் பார்வைக்கு படவும்... அதன் பிஞ்சு விரல்களை அசைத்தபடி அதையே அதிசயமாய் பார்த்துக் கொண்டிருந்த போது ஈரபசைகள் காற்றில் கரைந்து கருப்பு நிற வளையலாய் மாறிப் போனது...

  ஒரு கை மற்றொரு கையின் வளையலை பிடித்து இழுத்து விளையாடிய நேரம், அந்த பார்வை ஆரம்பிக்கும் கண்களுக்கு அருகே சிலர் '' லவின் குமார் '' என்று மூன்று முறை உச்சரிக்க, காதினுள் நுழைந்த காற்று கூச்சத்தை உண்டாக்கி கண்களை குறுக்க வைத்தது...

  பின் இமை பிரிந்து பார்வை விரிய இப்போது ஆடையில்லாதக் கைகள் நடைவண்டி ஒன்றை தள்ளிக் கொண்டு செல்ல, அதை அருகில் இருந்து ரசித்தவர்களின் மேல் அவ்வப்போது தன் கவனத்தை செலுத்தி முன்னேறியபோது தவறி விழுந்ததும் பார்வை தரையை தழுவியது...

  எழுந்து கொள்ளும் முயற்சியில் கையை ஊன்றிபோது உடலுக்கு உடைகள் ஏறிக் கொண்டது... அதில் இருந்த தூசியை தட்டிய போது காலுக்கு அடியில் பைக் ஒன்று கிடந்தது...

  அதை பார்த்துக் கொண்டிருந்த பார்வையாளனை '' டேய் லவின்... நாசமா போறவனே. அய்யோ.., அம்மா... உன்ன நம்பி பைக்ல ஏறுனேன் பாரு... என்ன சொல்லனும்டா... '' என்று இடுப்பில் கை வைத்து அழுத்தியபடி ஒருவன் வலியில் நெளியும் புழுவாய் தரையில் கிடந்தான்...

  பதறிஅடித்துக் கொண்டு அருகில் சென்று அவனுக்கு உதவியாய் கையை நீட்ட, காட்சிகள் மாற்றப்பட்டு நீட்டிய கையில் பெண்மையின் கை ஒன்று விரலை கோர்த்துக் கொண்டு கல்லூரி வாகனத்தின் படியில் ஏறியது...

  அந்த தீண்டலில் தன்னை மறந்து கண்களை மூடித் திறக்க வாகனம் கானாமல் போய் அந்த கையிற்கு சொந்தக்காரி இப்போது கடற்கரை மணலில் கால் பதித்தபடி முன்னால் நின்றாள்...

  அவள் முன்னால் ஒற்றை ரோஜா ஒன்றை நீட்ட, அவள் சந்தோஷத்துடன் பெற்றுக் கொண்ட மறு நொடி, பின் இருந்த கடல் வற்றி கடைகள் வந்தவிட, அவளின் மறு கை '' எப்போ தான்டா என்னை கல்யாணம் பண்ணிக்க போற..? '' என்று சினுங்களுடன் கண்ணத்தை தட்டி முகத்தை திருப்பியது...

  திரும்பிய திசையில் பிரம்மிக்கும் அழகுடன் பட்டு சேலை உடுத்தி அவளே அமர்ந்திருந்தாள்...

  அவளின் அழகில் சில நிமிடங்கள் பார்வை அவள் மீதே தடைபட்டு நின்றது... பின் சுற்றி நின்ற சுற்றத்தாரின் கேலி கிண்டல்களால் பார்வை திசை திரும்பி மண்டபத்தில் நிறைந்திருந்த கூட்டத்தை கவனித்து பின் தனக்கு சொந்தமான உடலின் பட்டுடை அலங்காரத்தை கண்டது....

  குனிந்திருந்த பார்வை நிமிரும் போது சுற்றியிருந்தோர் எல்லாம் சுழல்காற்றாய் மறைய, சில இந்திய உயர் ராணுவ அதிகாரிகள் '' உங்க நானோமைட் ரிசர்ச்சை நீங்க எங்களுக்காக பண்ணணும்... இது ரொம்ப ரகசியமா இருக்கனும் டாக்டர்..." என்று கூறி முடிக்கவும் பார்வை இரும்பு ஃபாக்டரிக்கு பின்னால் இருந்த கட்டிடத்திற்கு மாறியது....

  டச் ஸ்கிரீன் மொபைலின் திரையை கீழ் இருந்து மேலாக இழுத்து விட்டது போல நானோமைட் செல்ஸை வடிவமைத்தில் இருந்து, கோர்ட்சூட் மனிதரான டாக்டர் ஸ்டீபன் உதவியாளராக சேர்ந்ததை கடந்து, கடைசியில் சோதனை எலி ஒன்று உருகுலைந்து இறந்து போன நிகழ்வில் வந்து சிறிது நேரம் நிலையாய் நின்றது பார்வை...

  பார்வை எலியை கவனமாக உற்று நோக்க, உருகுலைந்த எலியின் உடல் இந்திய ராணுவ உயர் அதிகாரியாய் உருமாறி '' இனி இந்த ஆராய்ச்சியை நீங்க தொடர கூடாது... நீங்க தோத்து போயிடீங்க '' என்றவிட்டு அறை கதவை மூடிவிட்டு போனது....

  மூடிய கதவில் ஒரே ஸ்கிரீனில் ஓடவிடப்பட்ட இரண்டு வீடியோக்கள் போன்று பார்வை இரண்டாய் பிரிந்தது...

  இடதில் அதே ராணுவ அதிகாரி '' ஓகே நீங்க சொன்ன க்ளோனிங் மனித ஆராய்ச்சிக்கு நாங்க ஒத்துக்குறோம்.. இது மட்டும் வெளியல தெரிஞ்சா உலக நாடுகளுக்கே இந்தியா பதில் சொல்ல வேண்டியிருக்கும்.. சோ பி கேர்புல் அன்ட் கீப் சீக்கிரட்லி... உங்க மனைவிக்கு கூட இது தெரிய கூடாது '' என்க,

  வலதில் '' என்ன டாக்டர் சொல்றீங்க.!! கவர்மெண்ட்க்கு தெரியாமல் ரகசியமா நானோமைட் ஆராய்ச்சியை தொடர போறோமா.!! ஒன்னும் பிரச்சினை ஆகிடாதே..?'' என்று கோர்ட்சூட் மனிதர் கூறி முடிக்க காட்சிகள் ஒன்றாகி நானோமைட் செல்ஸ் ஏற்றிய சிரின்ஜியாய் உருவம் கொண்டது...

  ஊட்டி பங்களாவின் லாபினுள் நின்று கொண்டு சிரின்ஜி வழியாக செலுத்தப்பட்ட செல்களுடன் பார்வையும் தன் உடலினுள் பயணித்தது...

  நானோமைட் செல்கள் இயற்கை செல்களுடன் இனைந்து செயல்பட தொடங்கும் நேரம் குறிப்பிட்ட செல் உடலில் இருந்து பிரித்தெடுக்கப்பட, இப்போது லாப் இரும்பு பேக்டரிக்கு பின்னால் இருந்த கட்டிடத்திற்குள் மாற்றப்பட்டது...

  பார்வைக்கு சொந்தமான உடலில் இருந்து பிரித்தெடுத்த செல்களை உரிய ஆராய்ச்சி மூலம் உயிர் மற்றும் உடல் கொடுத்து உருவாக்க, முதல் இரண்டு சோதனை தோள்வியடையவும் கையிலிருந்த தாள்களில் 'சப்ஜக்ட் டூ ஆல்சோ பெயிலியர்' என சிவப்பு நிற மை அச்சடிக்கபட்டதும், மை மெல்ல படர்ந்து புடவையாய் மாறி கட்டியவளை சுற்றிக் கொண்டது...

  கண் எதிரில் அவளின் உப்பிய வயிறு தெரிய அதை ஆசையோடு தொட்டு தடவிய கையை பிடித்து முத்தமிட்ட இதழ்கள் '' நம்ம பையனுக்கு நான் ஹரிஷ்னு தான் பேர் வைக்க போறேன் '' என்றதும், சில நொடிகள் இரு உடலின் இதழ்கள் ஒன்றினைய தன்னவளின் கண்களில் தெரிந்த சிறு ஒளி பெரியதாகி தலைக்கு மேல் சென்று ஒளிந்திடும் எல்.யி.டி விளக்காய் மாறி பார்வையை கூசியது....

  கூச்சம் குறைந்து பார்வை புலப்பட இரும்பு ஃபாக்டரிக்கு பின்னால் இருக்கும் கட்டிடத்தின் ரகசிய அறையின் இன்க்குபேட்டரில் இருந்த குழந்தை இரு காலிலும் அசைவில்லாமல் கிடந்தது...

  கையில் இருந்த குறிப்பில் கால்கள் செயல்படவில்லை என்று ஆங்கிலத்தில் சில ஆராய்ச்சி குறிப்புகளுடன் குறிக்கப்பட்டு முடிக்கவும் தாளின் மேல் பெரிய எழுத்துக்களில் பொறித்திருந்த '' சப்ஜக்ட் த்ரீ '' என்ற ஆங்கில வார்த்தையை தழுவிச் சென்றது பார்வை...

  தழுவிச் சென்ற பார்வையை டேபிள் மேல் இருந்த மொபைல் தத்தெடுத்துக் கொள்ள திரையில் தெரிந்த '' அம்மா '' என்ற பெயர் கண்டு அழைப்பு ஏற்கப்பட்டது...

  எதிர் முனையில் '' டேய் உன் மனைவிக்கு பிரசவ வலி வந்துடுச்சு...சீக்கிரம் வா '' என மருத்துவமனை பெயர் கூறப்பட, காட்சிகள் மாறும் முன்பே அதை தடுத்து நிறுத்தியது கதவிடுக்கு வழியே தெரிந்த இரு உருவங்கள்...

  '' எனக்கு அந்த நானோமைட் செல்ஸ் வேனும்... இந்த கேடு கெட்ட மக்களுக்கு நல்லது பண்ண ஒன்னும் நான் அந்த ஆராய்ச்சிக்காக பணத்தை வாரி இறைக்கல... அதை வச்சி நான் நிறைய விஷயத்தை பண்ண முடியும்.. முடியும்னு தெரிஞ்சும் முயற்சி பண்ணாதவன் முட்டாள் '' என கோடிஸ்வர உருவம் ஒன்று கூறியது...

  மற்றொன்று '' உங்களுக்கு உதவி பண்ண தானே சார் என்னை இங்க சேர்த்து விட்டீங்க... நீங்க கவலைபடாதீங்க ஆராய்ச்சி முழுசா வெற்றி அடைஞ்சதும் லவின் குமார் கதையை முடிச்சுடலாம்... அப்புறம் இந்த ஸ்டீபன் நீங்க எதிர்பார்க்குற மாதிரி நானோமைட் செல்ஸ் செயல்பாடுகளை மாற்றி தரேன்.... '' என்றதை பார்த்ததும் அவர்களின் பார்வையும் ஒரே நேர்கோட்டில் சந்தித்தது....

  நொடியும் தாமதிக்காமல் குறிப்புகளை கைகள் பத்திரப்படுத்திக் கொள்ள, நெருங்கி வந்த ஸ்டீபனின் கழுத்தில் ஆரம்பக்கட்ட சோதனை செல்ஸை அடைத்து வைக்கப்பட்டிருந்த சிரின்ஜியை ஆழமாக குத்துப்பட்டு, மற்றொருவரை தள்ளிவிட்டு ஓட பார்வை காட்டு பங்களாவை விட்டு வெளியேறி, ஊட்டியின் மருத்துவமனை ஒன்றில் நுழைந்தது....

  கட்டியவளின் அருகே கண் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த தன் குழந்தையை கண்டவுடன் கண்கள் கலங்கி பார்வையை மறைக்க, கைகள் கொண்டு துடைக்கபட்டதும் பெற்றவர்களை தனியாக குறிப்பிட்ட ஊருக்கு செல்ல உத்தரவிட்ட பின் காரில் பயணம் தொடர்ந்து கொண்டிருந்தது...

  கணவனின் தவிப்பின் காரணம் புரியாமல் கட்டியவள் கேள்வி கேட்க, நடந்ததை சுறுக்கமாக கூறி முடிக்கும் சமயம், காரை துரத்தியபடி வந்த பைக் கண்ணாடியில் தெரிந்ததும் அதிவேகமெடுத்து கோயம்புத்தூரின் எல்லைக்குள் புகுந்தது கார்...

  ஒரு சில நிமிட இடைவெளியில் துரத்தி வந்த பைக்கிடம் இருந்து தப்பித்து வந்த காரில் டீசல் இல்லாமல் போக, தத்தி தினறி சரியாக ஒரு பெட்ரோல் பங்கை வந்தடைந்து நின்றது...

  ஆனால் அது நள்ளிரவை நெருங்கும் சமயம் என்பதால் அங்கு ஆட்கள் இல்லாமல் போக சுற்றும் முற்றும் பார்வை துரத்தி வந்த பைக்கை தேடியது...

  அது பார்வையில் படாவிட்டாலும் விரைவில் மாட்டிக் கொள்வது உறுதி என்று தெரிந்ததும், கட்டயவளின் காலில் விழுந்து, கதறி அழமுடியாமல் கையை வைத்து அடைத்துக் கொண்டவளை விட்டு குழந்தையின் உயிர் கருதி தனியாக அதை தூக்கிக் கொண்டு ஓட, சில வினாடி செலவில் பார்வையில் பட்டது கருணை இல்லம்....

  விரைவாக உள் நுழைந்து சர்ச்சின் வாசல் முன்னால் துக்கம் தொண்டை அடைக்க '' எங்களுக்கு எது ஆனாலும் உனக்கு ஒன்னும் ஆக விடமாட்டோம்... ஒருவேளை உயிரோட இருந்தா சீக்கிரமா வந்து உன்னை இங்கிருந்து கூட்டிட்டு போறேன்.. பத்திரமா இருந்துக்க.. '' என்று மொழி தெரியா குழுந்தையின் முன் மண்டியிட்டு அழ, சற்று தூரத்தில் தெரிந்த வெளிச்சத்தில் பத்து வயது சிறுமி (சிஸ்டர் ஷோபியா) ஒருவளை கண்டதும் வேக நடை போட்டு வெளியேறி தன்னவளின் பாதையை நோக்கி செல்ல தொடங்கியது பார்வை....

  பெட்ரோல் பங்கை நெருங்கும் சமயம் '' ஹலோ...சார்... கொஞ்சம் நில்லுங்க... '' என்ற வரிகள் காதில் விழுந்து பார்வை பின்னால் திரும்ப அங்கே ஒருவர் (ஃபாதர் லூயிஸ்) தன் வேகத்திற்கு ஈடாக துரத்திக்கொண்டு வருவதை கவனித்ததும் வேகம் இன்னும் அதிகரித்தது....

  '' ஹலோ... உங்களை தான்... அந்த குழந்தை உங்களோடதா.... கொஞ்சம் நில்லுங்க... சொன்னா கேளுங்க ஓடாதீங்க... '' என்ற வரிகள் தொடர்ந்து வந்து பின் துரத்த முடியாமல் சற்று மூச்சு வாங்கியது...

  அந்த இடைவெளியில் பெட்ரோல் பங்கை அடைந்ததும் வெளியே சென்றிருந்த பெட்ரோல் பங்க் வேளையாளின் (வாட்ச்மேன் கோபால்) பார்வை தன் மீது பட்டது....

  அவனிடம் சைகையை காட்டி வண்டியை நெருங்கிய போது சத்தமில்லாமல் தன்னை கொல்லும் நோக்கத்தில் வந்து கண்ணுக்கு மிக அருகில் தாண்டிச் சென்ற துப்பாக்கியின் தோட்டா ஒன்று பெட்ரோல் நிரப்பும் டேங்கில் பட, அரை நொடியின் அரை பொழுதில் காதை கிழிக்கும் சத்தத்துடன் வெடித்துச் சிதறியது அந்த பெட்ரோல் பங்க்......

  வெடித்துச் சிதறிய அதிர்வில் உடல் சிறு உயிருடன் வெளியே வீசியெறியப்பட பறந்து சென்ற நிலையில் துப்பாக்கி ஏந்திய கைகளுக்கு சொந்தக்காரன் (சேகர்), ஓடி ஒழியும் முன்பு பார்வையில் பட்டுவிட்டதும் விழுந்த வேகத்தில் தார்ச்சாலையில் தேய்ந்தபடி சென்றது பார்வை....

  வேகம் குறைந்து தூக்கியெறியப்பட்ட இயக்கம் நின்றதும் வெளியேறிய பெறு மூச்சுக் காற்று தரையில் பட்டு தூசியை பறக்கவிட்டது...

  அவை கண்ணில் படும் முன்பு இறு கைகள் கண் பார்வையை சாலையில் இருந்து வானத்தை நோக்கும் படி உடலை திருப்பி விட்டது....

  திருப்பிய கைகளுக்கு சொந்தமான தன்னை கருணை இல்லத்திலிருந்து துரத்தி வந்தவரின் முகத்தை கண்டதும் கண்கள் தானாக கண்ணீரை சிந்தியது...

  வெடிவிபத்தின் அதிர்வினால் குரல் பாதிக்கப்பட்ட நிலையிலும் மிகவும் சிரமப்பட்டு சற்று தெளிவாக'' ஹரிஷ்... அவனை காப்பாத்துங்க.. '' என்றதும் பார்வை எறிந்து கொண்டிருந்த காரினுள், தீயில் கறுகி கரிகட்டையாய் போன கட்டியவளை கண்ட நொடியே உயிர் உடல் விட்டு பிரிய இமைகள் மெல்ல மூடி பார்வையாய் ஓடிய நினைவுகளின் படங்கள் முடிந்தது...
   
 7. Anug sathya

  Anug sathya Active Member

  Joined:
  Oct 1, 2018
  Messages:
  119
  Likes Received:
  96
  Trophy Points:
  28
  Gender:
  Male
  நினைவுகளில் உடல் உயிர் விட்டு பிரிய அதை தன் கனவாக கண்டு கொண்டிருந்தவன் திடுக்கென்று எழுந்து கொண்டான்...

  மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க நினைவுகளில் கண்டதை தன் உடலில் உணர்ந்து, வியர்த்து கொட்டிய முகத்துடன் காரிலிருந்து வெளியேறி தலையை பிடித்த படி மண்டியிட்டு அமர்ந்து கொண்டான், சப்ஜக்ட் த்ரீ என்று பெயரிடப்பட்ட டாக்டர் லவின் குமாரின் குளோன்..

  சிறிது நேரம் அசையாமல் அமர்ந்திருந்தவன் தன்னை சமன்படுத்திக் கொண்டு எழுந்து காரிடம் செல்ல, மணி காலை 3.30 என காட்டிக் கொண்டிருந்தது அவனது கை கடிகாரம்...

  அரை மணி நேரம் கடந்ததும் தன் வீட்டின் கதவை திறந்து கொண்டு வெளியே வந்து ஜீப்பை ஆன் செய்தார் இன்ஸ்பெக்டர் மாணிக்கம்...

  ஆனால் நேற்றிரவே நண்பர்கள் ஜீப்பின் பிரேக் ஒயரை கட் செய்யும் முன்பு, டீசல் முழுவதையும் சந்தேகம் வராதபடி சப்ஜக்ட் த்ரீ காலி செய்திருந்த காரணத்தினால் உயிர் பெறாமல் தினறியது இன்ஸ்பெக்டரின் ஜீப்...

  '' அதுக்குள்ள காலி ஆகிடுச்சா..? '' ரீடிங்கில் கவனித்தவர் முனுமுனுத்தபடியே மெல்லிய சந்தேகத்துடன் ஜீப்பின் அடிபகுதியை கவனிக்க முயற்சி செய்தார்...

  ஆனால் அவரை மீறி வளர்ந்திருந்த தொப்பை அதற்கு இடம் கொடுக்காமல் சரிக்கு சமமாக மல்லுகட்டி இறுதியில் அதுவே வெற்றி பெற, பீட்டரின் கைவண்ணத்தால் துண்டிக்கப்பட்டு தொங்கிய ப்ரேக் ஒயரையும் கவனிக்கமால் மீண்டும் வீட்டிற்குள் சென்று பைக் சாவியுடன் வெளியே வந்தார்...

  வீட்டை விட்டு வெளியேறிய
  பைக், குறுகிய தெருக்களை கடந்து சாலையை அடைந்தது...

  பைக்கின் இடமாற்றத்தை அதில் பொருத்திய ஜி.பி.எஸ் ட்ராக்கர் மூலம் கண்காணித்தபடியே இருந்தவன் பைக் குறிப்பிட்ட இடத்தை வந்தடைந்ததும், அவரை நோக்கி காரை செலுத்த தொடங்கினான்....

  அதே நேரம் இன்ஸ்பெக்டரின் பின் திசையில் சந்தேகம் வராத அளவிற்கு அவரின் கண்களில் பட்டு விடாமல், அவரை கடத்துவதற்கு சரியான சந்தர்ப்பத்தை எதிர் நோக்கி பொறுமையுடன் அவரை பின் தொடர்ந்து வந்து கொண்டிருந்தது ரோகனின் கார்....

  சாலையின் அருகில் இருந்த வீடுகள் மற்றும் சில கட்டிடங்களின் பகுதிகள் முடிவடைந்து ஆள்அரவம் இல்லா பகுதி வரவும், இன்ஸ்பெக்டரின் இரு பக்கத்திலும் வந்து கொண்டிருந்த கார்கள் தங்களின் வேகத்தை அதிகப்படுத்தி இடைவெளியை குறைக்க தொடங்கின....

  தன்னை நோக்கி வரும் கார்களை கவனியாமல் இன்ஸ்பெக்டர் காதுகளில் ஹெட்செட் மாட்டிக் கொண்டு, ஜீப் ட்ரைவரிடம் வண்டியில் டீசல் இல்லாமல் போன விஷயத்தை கூறி இன்றைய தினத்தின் முதல் அர்சனைகளை அவருக்கு தராளமாக வழங்கினார்...

  தன் பக்க கண்ணாடியை இறக்கி தலையை வெளியே நீட்டியபடி வந்து கொண்டிருந்த பீட்டர், '' டேய் அது அந்த கார் தான...? '' என சந்தேகமாய் தங்களின் எதிர் திசையில் வந்து கொண்டிருந்த கருப்பு காரை கை காட்டினான்....

  தங்கள் பார்வையை இன்ஸ்பெக்டர் மீதும் கவனத்தை கடத்தலின் மீதும் மட்டுமே பதித்திருந்த மற்ற மூவரும் '' எது எந்த கார்..? '' என ஒன்றாய் கேட்டபடி, அவன் கைகாட்டிய திசையில் வேகமாக வந்து கொண்டிருந்த காரை அப்போது தான் கவனித்தனர்....

  அதை கண்டதும் '' அவனே தான்.." என்றான் ரோகன்...

  " ஒருவேளை இன்ஸ்பெக்டரை மீட் பண்ண மறுபடியும் வரானோ.. எதுக்கும் நீ காரை ஸ்லோ பண்ணு '' என்று அவன் தோள் தட்டி கட்டளை இட்டான் ஜான்....

  ஆனால் அவன் நினைத்து போல் இல்லாமல் கருப்பு காரின் வேகம் வர வர கூடிக் கொண்டே இருந்தது...

  நடக்க போவதை புரிந்து கொண்ட ஹரிஷ், '' இல்ல... இல்ல... இல்ல... அவன் அவரையும் கொல்ல போறான்... சீக்கிரம் போ ரோகன் '' என, ரோகனின் தொடையை தட்டி அவனை அவசரபடுத்தினான்....

  அர்சனைகளை வழங்கி முடித்திருந்த இன்ஸ்பெக்டர் இப்போது தனக்கு விருப்பமான பாடல் ஒன்றை முனுமுனுத்தபடி, அதை ஓட விட்டு கேட்கும் ஆவலில் மொபைலை நோண்டியபடி கார்களை கவனியாமல் சென்று கொண்டிருந்தார்...

  எதிர் திசையில் வந்தவன் ரோகனின் காரை சரியாக அடையாளம் கண்டதும்
  கியரை ' டக் ' என்று முன்னேற்றி ஆக்சிலரேட்டை அழுத்தி அதிவேகமாக இன்ஸ்பெக்டரை நெருக்கினான்....

  அதை கண்டு கதவின் கண்ணாடி இடைவெளியை தன் இருக்கையாக்கிக் கொண்டு உடலை வெளியேற்றிய பீட்டர் காரின் மேல் பகுதியை வேகமாக அடித்து சத்தத்தை எழுப்பினான்...

  '' யோவ்.... செவுட்டு இன்ஸ்பெக்டர் மொபைலை விட்டுட்டு முன்னாடி பாருயா.... ஆப்பு ஆன் த வே-ல வந்துட்டுருக்கு '' பீட்டர் முழு சத்தத்துடன் கத்தியும் பாடல் வரிகளை தவிர வேறு எதுவுமே அவரின் காதில் விழவில்லை....

  இரண்டு கார்களும் பத்து அடி இடைவெளி வித்தியாசத்தில் இன்ஸ்பெக்டரின் பைக்கை நெருங்கியது...

  அப்போதே மொபைலை பாக்கெட்டில் போட்டுக் கொண்டு ரோகனின் ஹாரன் சத்தம் கேட்டு கண்ணாடியில் தன்னை பின் தொடர்ந்து வரும் காரை கவனித்தார்...

  '' இது அந்த ரோகன் கார் ஆச்சே... பின்னாடி இந்த பக்கி ஏன் குரங்கு மாதிரி வெளியில தொத்திகிட்டு வருது '' பீட்டரின் சைகை புரியாமல் குழம்பியபடி பார்வையை தனக்கு முன்னால் செலுத்தினார்..

  அதுவரை தனக்கு எதிரே வந்தவர்களின் வலது புறமாக பயணத்திக் கொண்டிருந்த கார் கண் இமைக்கும் நேரத்தில் இடது பக்கமாய் வந்து நேர்கோட்டில் பைக்கை நெருங்கியது...

  இன்ஸ்பெக்டர் நடப்பவற்றை புரிந்து கொண்டு தன்னை சுதாரிக்கும் முன்பே வந்த வேகத்தில் அவரின் கழுத்தை பிடித்து தூக்கியபடி காரை நிருத்தாமல் இன்ஸ்பெக்டரின் ஷூ சாலையில் தேய இழுத்து சென்றான் சப்ஜக்ட் த்ரீ....

  இதை துளியும் எதிர் பார்க்காத ரோகன், எதிரே தொங்கிக் கொண்டு வரும் இன்ஸ்பெக்டரின் உடல் தன் காரின் சக்கரத்தில் பட்டு நசுங்கி விடாமல் இருக்க காரை முழு வேகத்துடன் சாலையின் இடது புறம் செலுத்தினான்...

  அதே நேரம் கருப்பு நிற காரும் அதற்கு எதிர் புறமாக தன் சக்கரத்தை சுழற்றிவிட்டி சென்றதால், ரோகன் காரின் பின் பகுதியில் அடிபடாமல் சில அங்குல இடைவெளியில் தப்பியவரின் பைக் நிலை தடுமாறி முழுவதுமாய் நொறுங்கி சில அடி தூரம் சாலையில் உறசியபடி சென்று விழுந்தது...

  ரோகன் வேகமாக தனது காரை திருப்பி, இன்ஸ்பெக்டரை இழுத்து செல்பவனை கோபத்துடன் துரத்த தொடங்கினான்...

  அவன் காரை கண்ணாடியின் வழியே அலட்சியமாய் பார்த்தவன் தன் காருக்கு முழு வேகத்தை கொடுத்து இரண்டு கார்களுக்குமான இடைவெளியை விரைவாக விரிவடைய வைத்தான்...

  கிட்டத்தட்ட எண்பது கிலோ எடை கொண்டவரை தன் ஒற்றை கையினால் கழுத்தை பிடித்து தூக்கியபடி விரைவாக சென்று கொண்டிருந்தவன் பார்வையை அவர் மீது செலுத்தாமலயே '' ஹலோ இன்ஸ்பெக்டர்... எப்படி இருக்கீங்க... ஹூம்... உங்களுக்கு என்ன...!!! கண்டவன் கிட்ட காசு வாங்கி உடம்ப வளர்த்துட்டு நல்லதான் இருப்பீங்க '' என்று இப்போது அலட்சியமாக அவர் மீது தன் பார்வையை செலுத்தினான்...

  தன் கழுத்தை நெறித்துக் கொண்டிருக்கும் கையிலிருந்து விடு பட முயற்சித்துக் கொண்டிருந்தவர் அவனை ஹரிஷ் என நினைத்து '' ஏய் ஹரிஷ்... முட்டாள் தனமா எதும் பண்ணாத.. நான் போலிஸ்காரன் '' என்றுகொண்டே, அந்த காரின் பின் சக்கரத்திற்கு அருகில் தனது கால் உரசிக் கொண்டு வருவதை கவனித்ததும் முயற்சியை கைவிட்டார்...

  '' ப்ப்ப்பாஆஆஆ... என்ன போலிஸ் சார் நீங்க.... நான் உங்க கழுத்தை விட்டா பேக் வீல்ல நசுங்கி நஞ்சு போயிடுவீங்கனு எவ்ளோ ஃபாஸ்டா கண்டு முடிச்சுடீங்க.. ஆனா...." இழுத்தவன்,

  " எனக்கு அப்படி தான் ஆகுமானு ஒரே டவுட்டாவே இருக்கு.. ஒரே தடவை செக் பண்ணி பார்த்துடுவோம் '' என்று புருவத்தை இருமுறை உயர்த்தி காட்டி பட்டென அவரின் கழுத்தை விடுவித்தான்...

  பின்னால் முழு வேகத்துடன் நெருங்க முடியாமல் தொடர்ந்து வந்து கொண்டிருந்த காரில் உள்ளவர்கள் அனைவரும் அதை கண்டு பதற, தரையில் விழ சென்றவர் தன்னிச்சையாக கதவை பிடித்துக் கொண்டு தப்பித்தார்...

  அவரது காலும் சக்கரத்தில் சிக்கமாமல் இடைவெளி மட்டுமே பாதியாய் குறைந்திருந்தது....

  காரை ஓட்டிக் கொண்டிருந்த ரோகன் தன் துப்பாக்கியை எடுத்து முன்னால் செல்லும் காரை சுட முயற்சிக்க, சரியாக குறி வைக்க முடியாமல் போனதும் ஹரிஷிடம் கண் ஜாடை காட்டினான்...

  கார் ஓடிக் கொண்டிருக்கும் போதே அதன் வேகம் குறையாமல் இருவரும் இடம் மாறினர்....

  " வாவ்... நீங்க இன்னும் தொங்கிட்டு தான் இருக்கீங்களா..! ஆமா அது என்ன பாக்கெட்டுல மொபைல் தானே..! '' கீழே விழாமல் தப்பித்தவரை கண்டவன்,

  மொபைலை எடுத்து நடப்பவற்றை சரியாக பதிவு செய்யும் படி தனது காரின் ஒரு பகுதியில் நிலையாக வைக்க, காரின் பின் பக்க கண்ணாடியில் தோட்டா ஒன்று வேகமாக பட்டு சிதறி போனது....
   
  Prabha_kannan likes this.
 8. Anug sathya

  Anug sathya Active Member

  Joined:
  Oct 1, 2018
  Messages:
  119
  Likes Received:
  96
  Trophy Points:
  28
  Gender:
  Male
  '' புல்லட் ப்ரூஃப்..." தனக்கு தானே கண்ணாடியை சுட்ட ரோகன் கூறிக் கொண்டு காரின் பின் சக்கரத்திற்கு குறி வைக்க பார்த்தான்...

  அவனது அடுத்தகட்ட நடவடிக்கையை புரிந்து கொண்டவன் ஸ்டேரிங்கில் இருந்த ஓர் பட்டனை அழுத்த, சக்கரத்தை ரோகனின் பார்வையில் இருந்து மறைந்தபடி மெட்டல் தடுப்பு ஒன்று கீழ் இறங்கி சாலையை தொட்டு விடாமல் நிலையாய் நின்றது...

  ரோகன் குறி வைக்க முடியாமல் போனதும் தன் பார்வையை அவனிடம் இருந்து மாற்றியவன் '' இவனுங்க வேற இடஞ்சல் குடுத்துட்டே இருக்கான்க... '' என சலித்துக் கொண்டான்...

  '' ஓகே சார் சொல்லுங்க உங்களுக்கும் அந்த கோர்ட்சூட் போட்டு சுத்துர ஸ்டீபன்க்கும் என்ன சம்மந்தம்..? ''

  வேகமாக கடந்து செல்லும் சாலையில் போடப்பட்ட வெள்ளை நிற கோட்டை கவனித்துக் கொண்டிருந்தவர், தன்னை காப்பாற்றி கொள்ளும் முயற்சியில் கைகளுக்கு பலம் கொடுத்து உடலை சற்று மேலே ஏற்றினார்...

  அவர் முன்னேறி விடாமல் இருக்க அவரின் வலது காலில் குறி வைத்து சுட்டான் எஸ்.த்ரீ.

  தோட்டா தொடையை பிளந்து கொண்டு உள் நுழைய, வலியில் அலறியபடி கீழே விழ சென்றவரின் கையை பிடித்து பழைய இடத்தில் வைத்தான்...

  '' கேள்வி கேட்டா பதில் சொல்லனும்... பதில் சொன்னா இடது கால் தப்பிக்கும் '' கட்டளையிட்டு அடுத்த குறியை இடது காலுக்கு மாற்றி வைத்தபடி காரை வேகமாக செலுத்தினான்...

  உடல் வலியிலும், உயிர் பயத்திலும் தன் உடலை தாங்க வலிமை இல்லாமல் நடங்கிக் கொண்டிருந்த கைகளை கண்டு முகம் வியர்க்க உண்மையை சுறுக்கமாக கூறியவர், அதன் பின்பே தங்களை துரத்தியபடி வந்த காரை ஓட்டிக் கொண்டிருந்த ஹரிஷை கவனித்தார்...

  '' யாரு.... நீ....? நீ எப்புடி ஹரிஷ் மாதிரியே இருக்க...? '' இன்ஸ்பெக்டர் அதிர்ச்சியுடன் கேட்க,

  '' ஏன்னா... நான் அவன் அப்பனோட மாதிரி... '' என்று அவரின் நெற்றியில் தன் துப்பாக்கியின் முனையை வைத்தான்....

  மிரண்டு போனவர் '' நான் தான் எல்லாத்தையும் சொல்லிட்டனே.... என்ன விட்டுடு " என உயிர் பயத்தில் கெஞ்சினார்..

  " இன்னும் ஒரு விஷயம் இருக்கு...'' என்று அவரின் கண்களை கூற்மையாக உற்று நோக்கியவன், '' இப்போ அந்த ஸ்டீபன் எங்க இருக்கான்..? '' என்று கேள்வி எழுப்பி, தனக்கு எதிரே வந்து கொண்டிருந்த லாரியின் மீது பார்வையை செலுத்தினான்....

  '' சத்தியமா சொல்றேன்.. எனக்கு அதை பத்தி எதும் தெரியாது... என்ன நம்பு ப்ளீஷ்..'' உடனே கூறிய வார்த்தைகளில் தெரிந்த பொய்யை உணர்ந்தவன்,

  சட்டென தன் காரின் கதவை திறந்து விட்டு அதை கார் வேகமாக செல்லும் நிலையிலும் காற்றை எதிர்த்து முழுவதுமாக திறந்த நிலையில் வைக்க, வலது காலால் அழுத்திக் கொண்டு லாரியில் மோதும் படி நேர்கோட்டில் சென்றான்....

  கதவை அழுத்தி பிடிப்பதற்காக அவன் ஆக்சிலரேட்டரில் இருந்து காலை எடுத்து விட, காரின் வேகம் குறைய தொடங்கியதும் பின்னால் துரத்திக் கொண்டு வந்த ஹரிஷ் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்டு முழுவேகத்துடன் அந்த காரின் அருகில் சென்றான்....

  தனக்கு முன்னால் வரும் காரின் கதவில் தொங்கியபடி தன் வாகனத்தில் இடிபட போகும் நபரை கண்டு நடக்கும் நிகழ்வில் பயந்து போன லாரி ட்ரைவர் முழு வேகத்துடன் ப்ரேக் அடித்து வண்டியை நிருத்தினாலும், எதிரே வரும் கருப்பு கார் வேகமாகவே வருவதை கவனித்து அரக்க பறக்க கீழே குத்தித்து ஓடினார் அவர்...

  கார் லாரியை நன்றாக நெருங்கி விட, லாரியில் அடிபட போவதை உணர்ந்து '' சொல்றேன்... சொல்றேன் '' என இன்ஸ்பெக்டர் பயத்தில் அலறினார்...சில அடி இடைவெளியில் கதவை மூட வைத்து அவரை காப்பாற்றி காரின் வேகத்தை கூட்டினான் சப்ஜக்ட் த்ரீ...

  இரண்டாம் முறை உயிர் தப்பி உரைந்து போயிருந்தவர் தனக்கு தெரிந்த தகவல்களை மூச்சு விடாமல் கூறினார்..

  '' தாங் யூ இன்ஸ்பெக்டர்... இப்போ நான் முன்னாடி போக போறேன்.. நீங்க கீழ போயிட்டு மேல போங்க.. மத்த ஆளுங்களையும் கூடிய சீக்கிரம் பின்னாடியே அனுப்பி வைக்கிறேன் '' என்றவன் கதவை பிடித்திருந்த அவரின் கையை சுட்டான்....

  உடலில் இருந்த மொத்த வலிமையும் இழந்து வலியில் துடித்து கொண்டிருந்தவர், கையில் சுடப்பட்டதும் கதவை பிடித்திருந்த கையை எடுத்து விட கால்களுக்கு இடையில் இருந்து தொடங்கி தலை வரை அந்த கருப்பு காரின் பின் சக்கரத்தில் உடல் நசுங்கி இறந்து போனார் இன்ஸ்பெக்டர் மாணிக்கம்....

  தங்கள் கண் முன்பே இன்ஸ்பெக்டர் மாணிக்கம் உடல் நசுங்கியதை கண்டு பார்வையை மற்றவர்கள் மாற்றிக் கொள்ள, கடைசி வரை அவரை காப்பாற்ற முடியாமல் போன கோபத்தில், எதையும் கவனியாமல் அவனை பிடித்து விடும் ஒரே நோக்கத்துடன் ஹரிஷ் தான் ஓட்டிய காரின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு மேலும் அதிகப்படுத்தி முன்னேறினான்.

  அளவுக்கு மீறிய வேகத்தில் தன்னை நெருங்கி வரும் ஹரிஷை கவனித்தவன் தனது காரின் வேகத்தை குறைத்து தனக்கு சமமாக வலது பக்கத்தில் ஹரிஷ் வந்ததும், அவனுக்கு முன்னால் பார்க்கும் படி கண்ணசைத்தான்...

  அப்போதே தனக்கு நேர் எதிரே ஹாரனை அலறவிட்டுக் கொண்டு வேகமாக வந்த மற்றொரு லாரியை கவனித்த ஹரிஷ் நொடியில் வலது பக்கமாய் காரை திருப்ப,

  நூல் அளவில் தப்பித்த கார் சாலையை விட்டு கீழிறங்கியதும் சில தூரம் சென்று புழுதியை படரவிட்டு மண்ணில் மாட்டிக் கொண்டது....

  சக்கரங்கள் நன்றாக மண்ணில் புதைந்து விட காரை அதிலிருந்து வெளியேற்ற முடியாது என புரிந்ததும் அனைவரும் கீழ் இறங்கினர்...
  அவர்களின் கண் பார்வை முன்னே கை அசைத்தபடி சென்னையை நோக்கி தப்பிச் சென்றான் சப்ஜக்ட் த்ரீ....
   
  Prabha_kannan and Tamilsurabi like this.
 9. Rabina

  Rabina Well-Known Member

  Joined:
  Aug 14, 2018
  Messages:
  433
  Likes Received:
  252
  Trophy Points:
  63
  Gender:
  Female
  super update...
   
  Anug sathya likes this.
 10. Prabha_kannan

  Prabha_kannan Well-Known Member

  Joined:
  Oct 25, 2017
  Messages:
  545
  Likes Received:
  325
  Trophy Points:
  63
  Location:
  trichy
  Nice update
   
  Anug sathya likes this.

Share This Page