தொடரும் கொலைகள் / Thodarum Kolaigal By Anug Sathya

Discussion in 'Serial Stories' started by Tamilsurabi, Oct 1, 2018.

 1. Anug sathya

  Anug sathya Active Member

  Joined:
  Oct 1, 2018
  Messages:
  149
  Likes Received:
  108
  Trophy Points:
  43
  Gender:
  Male
  பாகம் 5 : அனு

  கடல் மட்டத்திலிருந்து 2240 மீட்டர் உயரத்தில் பச்சை வர்ண உடையில் இயற்கை எழில் கொஞ்சும் விதமாக காட்சி அளித்து கொண்டிருக்கிறாள் மலைகளின் அரசி...

  கதிரவன் அவள் இயற்கை அழகில் மயங்கி தன் வெப்ப கரங்களால் அனைத்திட நினைத்து தோற்றுப் போய்க்கொண்டிருந்த அந்த காலை வேளையில்....

  '' டேய் ஹரிஷ் காலையிலயே எங்கடா கிளம்புற...? '' கேள்வியோடு ஹரிஷின் அறைக்குள் நுழைந்தான் ஜான்.

  '' இன்னைக்கி அனுவுக்கு டாக்டர் அப்பாயின்மென்ட் இருக்குடா... அவள ஹாஸ்பிடல் கூட்டிட்டு போகனும்... ''

  '' அப்படியா...!!! சரி போய்ட்டு வா... '' ஜான் நழுவப் பார்த்தான்.

  '' எங்கடா நழுவுற, ஒழுங்கா என்கூடவா.. '' அவன் கையை ஹரிஷ் பிடித்துக் கொள்ள, கையை உதறிவிட்டு வெளியே ஓடினான் ஜான்.

  ஹரிஷ் அவனை பின் தொடர்ந்தவாரே '' டேய் நில்லுடா, இல்ல என் கிட்ட அடி வாங்குவடா... '' என்றான்.

  சட்டென நின்ற ஜான் '' உன்கிட்ட கூட அடிவாங்கிறலாம், ஆனா அவகிட்ட வாங்க முடியாதுடா.. '' என்றுவிட்டு மீண்டும் ஓட்டத்தை தொடங்கி வீட்டுக்கு வெளியே ஓடினான்.

  சிறிது தூரம் அவனை துரத்தி பார்த்தான்... ஆனால், ஜான் நிற்பதாக தெரியவில்லை...
  சலித்துக் கொண்டே வீடு திரும்பிய ஹரிஷை இடைமறித்து, '' எங்கடா போய்ட்டு வர...? எனக்கு ஒரு சர்ட் எடுக்கனும் நீ வர்றியா... '' என்றான் பீட்டர்.

  'பலி ஆடு தானா வந்து வெட்டுனு சொன்ன விடுவேனா' என நினைத்து கொண்டே,
  '' என்ன வார்த்த கேட்ட....!! வா மச்சான் போகலாம்... '' அவனை அழைத்துக் கொண்டு கிளம்பினான் ஹரிஷ்...

  நேராக ஒரு வீட்டு வாசலில் போய் வண்டி நின்றது... அப்போது தான் அந்த வீட்டை கவனித்த பீட்டர்க்கு தூக்கிவாரிப் போட்டது...

  '' டேய் இங்க எதுக்குடா கூட்டிட்டு வந்த...!!! ''

  '' பின்ன தனியா அடிவாங்க சொல்றியா, வாடா...'' வலுக்கட்டாயமாக பீட்டரை உள்ளிளுத்து சென்றான்.

  '' இதுக்கு தான் பாசமா வண்டில ஏத்திட்டு வந்தியா... அவளுக்கு கண்ணு தெரியும் போதே, யார அடிக்கிறோம், எதவச்சி அடிக்கிறோம்னு பார்த்து பார்த்து அடிப்பா... இப்ப கண்ட பொருள, கண்ட மேனிக்கு, கண்ட இடத்துல அடிப்பாடா... என்னைய வுட்டுறா நான் ஓடியே வூட்டுக்கு போய்க்கிறேன்... ''

  பீட்டர் காலில் விழாத குறையாக கதறிக் கொண்டிருக்க அவர்களை கவனித்த அனுவின் அம்மா '' வாங்கப்பா உங்களுக்காக தான் அனு மேல் ரூம்ல வெயிட் பண்ணிட்டு இருக்கா போங்க '' என சூட்சமம் நிரைந்த குரலில் கூறிவிட்டு தன் வேலையை தொடர்ந்தார்...

  சூட்சமத்தை புரிந்து கொண்ட ஹரிஷ், பீட்டரை தன் முன்னே தள்ளிக்கொண்டு அறையின் கதவை திறக்கவும், அந்த பொருள் பறந்து வந்து பீட்டர் நெற்றியை தாக்கியது...

  வழி தாங்காமல் கத்திக்கொண்டே பீட்டர் கீழே குனிந்து நெற்றியை தேய்க்க, அடுத்த பொருள் ஹரிஷ் மேல் வந்து விழுந்தது...

  '' சந்தோஷமாடா உனக்கு, உன்னைய டிரெஸ் எடுக்கக் கூப்பிட்டது குத்தமாடா... இப்புடி சொம்புல அடிவாங்க வச்சிட்டியே... உன் சங்காத்தமே வேணாமுடா '' பீட்டர் கீழே ஓடி விட, ஹரிஷ் மெதுவாக ரூமுக்குள் நுழைந்தான்.

  அவன் காலடி சத்தம் கேட்டு மீண்டும் அவனை அடிக்க 'அருகில் ஏதாவது இருக்கிறதா' என அனு கையை துழாவி பார்க்க, அதை புரிந்து கொண்டவனாய் விரைந்து சென்று அவள் கைகளைப் பிடித்துக் கொண்டான்.

  '' ச்சீ... கைய எடுடா பொறுக்கி.. நான் உன் மேல கோவமா இருக்கேன்...''

  '' மேடம்க்கு ரொம்ப கோவம் போல... அதனால தான் அவன் மேல சொம்பையும், என் மேல டெடிபேரயும் தூக்கி போட்டிங்களா... உனக்கு ஒழுங்கா கோவபடக் கூட தெரியலடி '' என அவளருகே அமர்ந்து கொண்டான்...

  '' அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல... நான் கவனிக்காம தான் தூக்கி போட்டேன், இத காரணமா வச்சிகிட்டு பக்கத்துல உக்காராதே...'' அவனிடம் இருந்து நகர்ந்து உக்கார்ந்தாள்...

  '' சரி அதைவிடு... காலையே அழகா டிரஸ் பண்ணிக்கிட்டு, யாருக்காக வெயிட் பண்ணிட்டு இருக்க...? எனக்காக தானே '' மீண்டும் நகர்ந்து அவள் அருகில் அமர்ந்து கொண்டான் ஹரிஷ்...

  தன் தவறை உணர்ந்தவளாய் பதில் ஏதும் கூறாமல் மாட்டிக் கொண்ட வெக்கத்தில் உதட்டை கடித்துக் கொண்டவள் '' உனக்கு என் மேல அக்கறையே இல்ல '' என்று மீண்டும் கோபித்துக் கொண்டாள்...

  ''அப்படி எல்லாம் ஒன்னும் இல்லடி...''

  ''அப்பறம் ஏன் உன் பர்த்டேக்கு நான் சொல்லியும் நீ என்ன விட்டுட்டு போன...? ''

  அவன் பதில் ஏதும் கூறாமல் அவளையே பார்த்துக் கொண்டிருக்க, மீண்டும் அவளே தொடர்ந்தாள் குரலில் உண்மையான கலக்கத்துடன்...

  '' எனக்கு பயமா இருக்கு ஹரிஷ்... ''

  '' ஏன், என்ன ஆச்சு...? ''

  '' எனக்கு இப்படி ஆனதுல இருந்து நீ என் கிட்ட சரியா பேசுறதில்ல... ஏதோ யோசணையாவே இருக்க... அதனால.... ''

  '' அதனால...? ''

  '' நீ... ''

  '' நான்....!! ''

  '' நீ என்ன அவாய்ட் பண்ணுறியோனு தோனுது... ''

  அவள் சொல்லி முடிக்கும் முன்னே அவள் கண்ணத்தில் தன் கைரேகையை பதித்திருந்தான் அவன்...

  அறை முழுவதும் அமைதியாக இருக்க, கோபத்தில் அவன் விடும் அனல் காற்றை உணர முடிந்த அவளாள், அவளை அடித்து விட்ட வலியில் அவன் சிந்திய கண்ணீர் துளிகளை உணர முடியாமல் போனது அவள் தவறில்லையே....

  '' சாரி டா '' இப்போது அவள் கண்களிலும் நீர் துளிகள்....

  அவன் அடித்ததால் வந்த வலியால் அல்ல, அவனை அடிக்க வைத்த தன் வார்த்தையால்...

  தன்னை நிதானித்து கொண்டு அவள் கண்ணங்களை தன் கரங்களில் ஏந்திக் கொண்டவன், அவள் கண்ணீரை துடைத்துக் கொண்டே '' சாரிடி, கோவத்துல அடிச்சிட்டேன்... வலிக்கிதா...? '' என கண்ணங்களை மெதுவாக வருடினான்.

  அவள் இல்லை என்பது போல் தலையசைத்து அவன் தோளில் தலைசாய்ந்து அவனை அனைத்துக் கொண்டாள்...

  '' எங்க இல்லத்துல நாங்க இருக்கும் போது, எங்கள எல்லாரும் அக்கறையா பார்த்துப்பாங்க... ஆனா அதுல பாசத்தவிட எங்க மேல அவங்களுக்கு இருந்த கருணை தான் அதிகமா இருக்கும்... அந்த மாதிரி உன்ன யாரும் பார்க்க கூடாதுனு நினைச்சேன்... உனக்கு பார்வை வந்ததும், உன்ன கூட்டிட்டு போய் எல்லோர்க்கும் அறிமுகப்படுத்தனும்னு ஆசைபட்டேன்... அதனால தான் உன்ன நான் கூட்டிட்டு போகல அனு... ''

  '' மத்தபடி நீ சொன்ன மாதிரி எல்லாம் எதுவும் இல்ல... உனக்கு பார்வை வந்தாலும் வராமலே போனாலும் எனக்கு நீ தான்டி பொண்டாட்டி... ''

  அவன் வார்த்தையில் நெகிழ்ந்தவள், '' சாரிடா இதை புரிஞ்சிக்காம நான் ஏதுஏதோ பேசிட்டேன் '' என்று காதலனென கைகோர்த்து, மனாளனென அவன் மடி சாய்ந்து கொண்டாள்.

  தன் மடி சாய்ந்த தன்னவளின் தலைமுடியை கோதியவாரே நேற்றைய நிகழ்ச்சிகளை அவளிடம் கூற ஆராம்பித்தான் ஹரிஷ்...

  கீழே சென்ற பீட்டர் நேரே கிட்சனுக்குள் சென்று ஐஸ் கட்டியை எடுத்து நெற்றியில் வைத்துக் கொண்டவன் '' என்னடா பீட்டரு உனக்கும் அடி பலமோ...!! '' என்ற குரலை கேட்டு திரும்பினான்...

  அங்கே அனுவின் அம்மா அவன் தலையை தாக்கிய சொம்புடன் நின்று கொண்டிருந்தார்கள்.

  '' அப்ப ப்ளான் பன்னிட்டு தான் மேல அனுப்புனீங்களா...? ஆமாம் அதென்ன உனக்குமானு கேட்டீங்க வாட் இஸ் த மேட்டர்...? ''

  '' காலைல அனு பாசமா கூப்பிட்டாலேனு போனேன்டா... போனதும் கதவுக்கு பக்கதுல நிக்க சொல்லிட்டு கட்டில்ல போய் உக்காந்து கிட்டா. அப்புறம் 'என்ன கூப்பிடுமா' னு சொன்னா எதுக்கு இப்படி பண்றானு தெரியாம நானும் நம்பி அவ பேர சொல்லி கூப்பிட்டேன்... அப்ப தான்டா இப்புடி ஆயிடுச்சு '' என்றார் நெற்றியை தேய்த்துக் கொண்டு...

  '' அப்ப என்ன அடிக்க உங்கள வச்சி ஒத்திகை பார்த்துருக்கா அப்படி தான...? ''

  '' ஆமான்டா.... ''

  '' அப்ப அந்த சொம்பு எங்க...? '' பீட்டர் கேட்க, அவர் கையிலிருந்ததையே காட்டினார்...

  '' சண்டாளி ஒரு சொம்ப வச்சு ரெண்டு பேத்த காலி பண்ண பார்த்துருக்காளே..!!! ''

  '' அவ ஏன்டா இப்படி உங்க மேல கோவத்துல இருக்கா...? ''

  '' வேற எதுக்கு உங்க வருங்கால மாப்புள பிறந்த நாளுக்கு இங்க தான் செலிபிரேட் பன்னனும்னு அவ சொன்னா... நாங்க இல்லத்துக்கு தான் போவோம்னு சொன்னோம்.... அவளும் வரேன்னு சொன்ன... ஆனா நாங்க விட்டுட்டு போய்டோம் அதான்... ''

  '' உங்களுக்கு தேவைதான்டா '' தன் பங்குக்கு அவன் தலையில் அடித்துவிட்டு செல்ல,

  '' இன்னைக்கி சொம்புல அடி வாங்கனும்னு என் ராசில இருக்கு போல... '' என சலித்துக் கொண்டே கிச்சனில் இருந்து வெளியேறி டைனிங் டேபிளில் உக்காந்து கொண்டான் பீட்டர்...

  சில நிமிடங்களில் ஹரிஷ் அனுவை கீழ் அழைத்து வந்தான். காலை உணவை முடித்தவிட்டு பீட்டரை அனுவின் ஸ்கூட்டியில் வர சொல்லிவிட்டு அவளை தன்னுடன் அழைத்துச் சென்றான்...

  சிறிது நேர பயணம், சிறிது நேர காத்திருப்பு என ஒரு மணிநேரம் கடந்தபின்பு டாக்டரின் அறைக்குள் நுழைந்த மூவரையும் புன்னகையுடன் வரவேற்றார் டாக்டர் சக்திவேல்.

  '' ஹலோ டாக்டர் எப்படி இருக்கீங்க...? ''

  '' ஃபைன் ஹரிஷ். ப்ளீஸ் சிட்... ''

  '' இன்னைக்கி வரசொல்லி இருந்தீங்க ஏன் டாக்டர்...? '' என்றாள் அனு...

  '' ஆமா அனு... உன்னோட எல்லா டெஸ்ட் ரிப்போர்டும் வந்துடுச்சு. உன்னோட இந்த திடீர் கண்பார்வை இழப்புக்கு என்ன காரணம்னு எங்களால சரியா புரிஞ்சிக்க முடியல... பட், கண் பகுதியில இருக்க கூடிய செல்ஸ் பாதிக்கப்பட்டு இருக்கு. இது ஒரு டெம்ரவரி ஐ லாஸ் தான் அதனால பயப்படத் தேவையில்லை. நான் டேப்லெட்ஸ் எழுதி குடுக்குறேன், அத ஃபாலோ பண்ணு '' சொல்லிவிட்டு மற்றவர்கள் கவனிக்காமல் இருக்கும் போது ஹரிஷிடம் கண்களால் சமிக்ஞை செய்தார்.

  புரிந்து கொண்ட ஹரிஷ், '' ஓகே டாக்டர், அப்ப நாங்க கிளம்புறோம் '' என்று விட்டு வெளியேறி அங்கிருந்து இருக்கையில் அனுவுடன் அமர்ந்து கொண்டான்...

  பீட்டர் டாக்டர் எழுதிக் கொடுத்த மருந்துகளை வாங்கி வருவதாக சென்றான்... அவன் அங்கிருந்து சென்ற சிறிது நேரத்தில், ஹரிஷ் ரெஸ்ட்ரூம் செல்வதாகக் கூறிவிட்டு மீண்டும் டாக்டர் அறைக்குள் நுழைந்தான்...

  பீட்டர் வருவதற்குள் டாக்டரிடம் பேசிவிட்டு மீண்டும் வந்து அமர்ந்து கொண்டான்... பின் பீட்டர் வரவும் மூவரும் அவ்விடம் விட்டு விடைபெற்றுக் கொண்டு கிளம்பினர்...

  அனுவின் வீட்டிற்கு சென்று அவள் அம்மாவிடம் விபரத்தை கூறிவிட்டு இருவரும் தங்கள் வீட்டிற்கு தேவையான பொருட்களையும் பீட்டர்க்கு துணிமணிகளையும் வாங்கி கொண்டு தம் வீட்டை அடைந்தனர்...

  அந்தநாள் ஒருவழியாக முடிய ஹரிஷ் மட்டும் தனியாக சென்று டாக்டரை சந்தித்து பேசியதை நினைத்துக் கொண்டு தூக்கம் வராமல் 3 மணி வரை புரண்டு கொண்டிருந்து விட்டு அசதியில் தூக்கத்தில் ஆழ்ந்தான்...

  காலை 6 மணிக்கு மொபைல் ரிங்டோன் அவனை எழுப்பியது.

  அரை தூக்கத்தில் அழைப்பை ஏற்றுக் கொண்டு பேசியவனை சிஸ்டரின் வார்த்தைகள் தூக்கிவாரிப் போட வைத்தது..

  பட படத்த குரலில் கேட்டான் '' சரியா கேக்கல மறுபடியும் சொல்லுங்க.. ''

  மறுமுனையில் அழுதுக் கொண்டே பதில் வந்தது

  '' ஃபாதர் இறந்து விட்டார்...''
   
 2. kani _mozhi

  kani _mozhi Active Member

  Joined:
  Feb 12, 2018
  Messages:
  372
  Likes Received:
  241
  Trophy Points:
  43
  Gender:
  Female

  Haha...okk
   
  Anug sathya likes this.
 3. kani _mozhi

  kani _mozhi Active Member

  Joined:
  Feb 12, 2018
  Messages:
  372
  Likes Received:
  241
  Trophy Points:
  43
  Gender:
  Female
  Super update . Sombula adi vangina Peter and anu amma sema. Adikk a trial pathurukka anu athu theriyama Amma sikitanga..
  Father epdi iranthar ? Murder a ?
   
  Anug sathya likes this.
 4. Prabha_kannan

  Prabha_kannan Well-Known Member

  Joined:
  Oct 25, 2017
  Messages:
  557
  Likes Received:
  343
  Trophy Points:
  63
  Location:
  trichy
  super update . father irantathu kolai or iyarkaiya va ?
  kolai na first murder in this story ...
   
  Anug sathya likes this.
 5. kannamma 20

  kannamma 20 Well-Known Member

  Joined:
  May 14, 2017
  Messages:
  451
  Likes Received:
  334
  Trophy Points:
  63
  Gender:
  Female
  Nice updates.
   
  Anug sathya likes this.
 6. jayalashmi

  jayalashmi Active Member

  Joined:
  Nov 12, 2017
  Messages:
  285
  Likes Received:
  230
  Trophy Points:
  43
  Gender:
  Female
  தொடரும் கொலைகள் திகில் கிளப்பும் தலைப்பு
   
  Anug sathya likes this.
 7. Anug sathya

  Anug sathya Active Member

  Joined:
  Oct 1, 2018
  Messages:
  149
  Likes Received:
  108
  Trophy Points:
  43
  Gender:
  Male
  Haha... Nandri sago
   
 8. Anug sathya

  Anug sathya Active Member

  Joined:
  Oct 1, 2018
  Messages:
  149
  Likes Received:
  108
  Trophy Points:
  43
  Gender:
  Male
  பாகம் 6 : விசாரணை

  காலை 6.30 மணி வாக்கில், என்றும் இல்லாத அளவிற்கு கருணை இல்லம் மிகவும் பதட்டமாகக் காட்சி அளித்தது.

  பிரார்த்தனைக்கு வந்த பொதுமக்கள் ஒருபுறம் என்ன விபரம் என்றே தெரியாமல் நின்று கொண்டிருக்க, அதில் சிலரோ ஃபாதரை கைது செய்ய காவல்துறை அதிகாரிகள் வந்திருப்பதாக தங்கள் போக்கிற்கு வதந்திகளை பரப்பி கொண்டிருந்தனர்...

  மறுபுறம் சர்ச்சின் வாசலில் குழந்தைகள் மற்றும் வேலையாட்களுடன் சிஸ்டர் ஷோபியாவும் கண்களில் நீர் ததும்ப, துக்கத்தை அடக்கிக் கொண்டு சுவரில் சாய்ந்தபடி ஃபாதரின் அலுவலகத்தையே பார்த்த வண்ணம் இருந்தார்...

  கூட்டத்தில் சலசலப்பு அதிகமாகி கொண்டிருக்க அதை கட்டுப்படுத்தும் வேலையில் மூன்று காவலர்கள் முயன்று கொண்டிருந்தனர்.

  சிறிது நேரத்தில் ஃபாதர் அலுவலகத்திலிருந்து தன் தொப்(பை)பி சரி செய்தவாரே வெளியே வந்தார் இன்ஸ்பெக்டர் மாணிக்கம்.... அவரை பின் தொடர்ந்து வந்தார் ஏட்டு செல்வம்...

  '' யோவ் ஏட்டு என்னையா இங்க இவ்வளவு பேர் நிக்கிறாங்க... இல்லத்துல இருக்கவங்கல தவிர மத்த எல்லாத்தையும் அடிச்சு தொரத்து... ஆம்புலன்ஸ் ஏன் இன்னும் வரல...!! ஃபாரன்சிக் டிப்பார்ட்மென்ட்க்கு சொல்லியாச்சா இல்லயா...? எங்கயா போனான் இந்த எஸ்.ஐ அவன கூப்பிட்டு வா...'' சரமாரியாக தன் கரகரத்த குரலில் இன்ஸ்பெக்டர் கூற, அதை கவனித்த எஸ்.ஐ ரோகன் அவர் முன்னால் வந்து சல்யூட் அடித்தான்.

  26 வயது துடிப்பான இளைஞன்... 6 அடிக்கும் மேல் உயரம்... மாநிறம்... கட்டுக் கோப்பான உடல்... காவல்துறையில் சேர்ந்து சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தவன், வேலையில் சேர்ந்த 6 மாதத்தில் அனைவரிடமும் கெட்டப் பெயர் வாங்கி கொண்டான்... காரணம் அவனது நேர்மை... தன் திறமையை வெளிப்படுத்த சரியான தருணத்திற்காக காத்துக் கொண்டிருக்கும் ஒரு உண்மையான காவல் அதிகாரி...

  '' யோவ் எங்கயா போய் தொலைஞ்ச...? ''

  ''விசாரிச்சு கிட்டு இருந்தேன் சார்...''

  '' ஆம்புலன்ஸ் என்ன ஆச்சு, ஏன் இன்னும் வரல...? ''

  '' சொல்லியாச்சு சார், இன்னும் பத்து நிமிஷத்துல வந்துடும்... ''

  '' சரி, விசாரிச்ச வரைக்கும் என்ன சொல்றாங்க...? ''

  '' சிஸ்டர் தான் சார் காலைல பார்த்து இருக்காங்க... பொருள் எல்லாம் செதறி கிடந்ததை பார்த்து சந்தேகப்பட்டு அவர தொட்டு பார்க்கும் போது தான் அவர் இறந்துடாருனு தெரிஞ்சிருக்கு... அப்புறம் நமக்கு கால் பண்ணி சொல்லி இருக்காங்கலாம். ரொம்ப அழுதுகிட்டு இருக்காங்க அவங்க கிட்ட மேல எதும் விசாரிக்க முடியலை. மத்தவங்க யாருக்கும் எந்த விஷயமும் தெரியலை சார்... ''

  '' நான் கிளம்புறேன்... நீ இங்கேயே இருந்து எல்லாத்தையும் பார்த்துக்க... ஒருத்தர் விடாம எல்லாரையும் விசாரி... ஸ்பாட்டுக்குள்ள யாரையும் போகவிடாத... ரெண்டு கான்ஸ்டபிளை காவலுக்கு போடு... வேற எதாவது எவிடன்ஸ் கிடைக்கிதானு பாரு... ஃபாரன்சிக் டிப்பார்ட்மென்ட்ல இன்பார்ம் பண்ணி ஆளுங்கள வர சொல்லு... '' அடுத்தடுத்த கட்டளைகளையிட்டுக் கொண்டே கூட்டத்தை விலக்கிவிட்டு ஜீப்பில் ஏறி புறப்பட்டுச் சென்றார் இன்ஸ்பெக்டர்...

  அவரை வழி அனுப்பிவிட்டு உள்ளே வந்தவன் முதல் காரியமாக கூட்டத்தை வெளியேற்றிவிட்டு ஃபாதரின் அலுவலகத்தினுள் நுழைந்து தன் பார்வையை சுழலவிட்டான்....

  சற்று விசாலமான அறை... நடுவில் டேபிள் மற்றும் சேர் போடப்பட்டிருந்தது.... ஃபாதரின் உயிரற்ற உடல் இருக்கையில் அமர்ந்தவாறு டேபிளில் தலைசாய்ந்து தூங்குவது போலிருந்தது... பார்பதற்கு அசதியில் தூங்குகிறார் என்றே தோன்றும்....

  சிஸ்டர்க்கு சந்தேகத்தை வரவழைத்தது ஃபாதருக்கு பின்னால் இருந்த மரத்தினாலான அலமாரி தான். அதே அலமாரியின் பின்னால் தான் முந்தையநாள் ஹரிஷ் ஒழிந்து கொண்டு சிஸ்டரின் கண்களில் படமால் மறைந்து கொண்டான்.

  ஆனால் அன்றை விட இப்பொழுது சில மாறுதல்கள். அலமாரியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த எல்லா புத்தகங்களும் இப்போது கீழே சரிந்து கிடந்தன. தன் கைரேகைகள் பதியாத அளவிற்கு எந்தப் பொருளையும் தொட்டு விடாமல் கவனிக்கத் தொடங்கினான் ரோகன்.

  டேபிளின் இருபுறமும் சிலப் பொருட்கள் சிதறிக் கிடந்தன... அவை டேபிளில் இருந்து கீழே விழுந்து உடைந்திருக்க வேண்டும் என்பதை யூகித்துக் கொண்டான்...

  இப்படியாக ஆராய்ந்து கொண்டிருந்த ரோகனின் கண்கள் கதவின் மூலையில் கிடந்த கருப்பு நிற பேக்கை கவனித்தன அதை நெருங்கும் சமயம்,

  '' சார் ஆம்புலன்ஸ் வந்துடுச்சு '' அறையினுள் நுழைந்தார் ஏட்டு.

  ஆம்புலன்ஸில் இருந்து இறங்கிய இருவரும் ஃபாதரின் உயிரற்ற உடலை ஸ்ரக்ச்சரில் வைத்து வெள்ளை துணியால் மூடியபோது ஃபாதரின் கால் விரல்களில் சிறிது ரத்தம் வெளியேறி காய்ந்து போயிருந்தை ரோகன் கவனிக்க தவறவில்லை...

  உடலை ஏற்றிக் கொண்டு ஆம்புலன்ஸ் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு செல்ல தயாரானது. அதே நேரம் கைரேகை நிபுணர்குழு வரவும் அவர்களுக்கு சம்பவ இடத்தை காட்டினான்.

  குழந்தைகளை தவிர மற்ற அனைவரிடமும் கைரேகைகளை சோதனைக்காக எடுத்து கொள்ளுமாறு கூறி பின் மீண்டும் விசாரணை செய்வதற்கு சென்று விட்டான் ரோகன்.

  இன்னும் சிஸ்டர் அழுது கொண்டு தான் இருந்தார் மற்றவர்களை விட சிஸ்டர் ஷோபியாவிற்கு ஃபாதரின் மரணம் பெரிய இழப்பு தான். நினைவு தெரியும் நாளுக்கு முன்னிருந்தே அதே இல்லத்தில் ஃபாதரின் அரவணைப்பில் வாழ்ந்தவர்.

  அவர் மேலிருந்து பாசத்தினால் தான் தன் படிப்பை முடித்துக் கொண்டு வெளியில் எவ்வளவோ நல்ல வேலை வாய்ப்புகள் கிடைத்தும் இல்லத்தில் பணிபுரிந்தார். ஃபாதர் அவரை பெற்றெடுத்தவர் இல்லை என்றப் போதிலும் தன் மகளைப் போலவே வளர்த்தார். ஆகவே ஃபாதர் லூயிஸின் இழப்பு சிஸ்டரை பெரிதும் பாதித்தது.

  இதை புரிந்து கொண்டு அவரிடம் அதிக கேள்விகளை கேக்காமல் சில விபரங்களை மட்டும் கேட்டுத் தெரிந்து கொண்டு சிஸ்டரை அனுப்பிவிட்டான்.

  பின் சாட்சி சொல்ல வருபவர்களையே குற்றவாளி போல பாவிக்கும் காக்கிசட்டை காரர்களின் அதே முறையில் தான் மற்ற அனைவரிடமும் விசாரணை நடத்தினான் ரோகன்.

  விசாரித்த வரையில் அவன் தெரிந்து கொண்டது எல்லாம் இல்லத்தில் மொத்தம் ஐம்பத்து ஏழு குழந்தைகள்... அவர்களை கவனித்து கொள்ளவும் படிப்பிற்காகவும் சிஸ்டர் உட்பட மூன்று ஆசிரியர்கள்... நான்கு பெண்கள் இரண்டு ஆண்கள் என மொத்தம் ஆறு வேலையாட்கள் இது தவிர வெளியில் தங்கி படித்துக் கொண்டிருக்கும் நமது நண்பர்கள்.

  இவை யாவும் ரோகனுக்கு பெரியதாக தெரியவில்லை... அவன் மனதில் உறுத்திக் கொண்டிருந்த ஒரே விஷயம் இல்லத்தில் வேலைபுரியும் வாட்ச்மேன் கோபால்....

  அதுவும் அவர் கடந்த இரண்டு நாட்கள் விடுமுறையில் சென்று இருப்பது தான், அவர்மீது ரோகனுக்கு மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தியது....

  காலை 8 மணி வாக்கில் நண்பர்கள் கருணை இல்லத்தை வந்தடைந்தனர். அனுவிடம் எவ்வளவு கூறியும் அவள் கேளாமல் தானும் வருவதாக் கூறியதால் வேறு வழி இல்லாமல் அனுவின் அம்மாவுடன் அவளை அழைத்து வந்தனர்...

  கொஞ்சம் கொஞ்சமாக தங்கள் மனதை சமாதானபடுத்தி கொண்டிருந்த அனைவரும் அவர்களை பார்த்தவுடன் மீண்டும் கண்ணீர்விடத் தொடங்கினர்...

  நண்பர்கள் தங்கள் துக்கத்தை மனதில் புதைத்துக் கொண்டு அவர்களுக்கு ஆறுதல் கூற முயற்சித்து தோற்று போயினர். பின் ஒருவழியாக மற்றவர்களிடம் இருந்து நடந்தவற்றை கேட்டு தெரிந்து கொண்டனர்.

  பின் குழந்தைகள் யாரும் சாப்பிடாமல் இருந்ததால் அவர்களுக்கு உணவு வாங்கி வருவதாக கூறிவிட்டு மூவரும் வெளியில் சென்று விட்டனர். இன்று யாரும் வேலை செய்யும் மனநிலையில் இல்லாததால் வெளியிலிருந்து வாங்கிவரப்பட்டது...

  வெளியில் தங்கி படித்துக் கொண்டிருக்கும் மூவரும் வந்தவுடன் தன்னிடம் தெரியப்படுத்தும் படி எஸ்.ஐ கூறியிருந்ததால், காவல் பணியில் நின்று கொண்டிருந்த கான்ஸ்டபிள் தன் பணியை செவ்வனே செய்து முடிக்க சில நிமிடங்களில் அங்கு வந்து சேர்ந்தான் ரோகன்..

  வெளியில் சென்ற மூவரும் வந்தவுடன் முதலில் ஹரிஷ் அடுத்து பீட்டரிடம் தனித் தனியாக விசாரணை நடத்தப்பட்டது.

  கடைசியாக ஜான் அந்த அறைக்குள் அழைக்கப்பட்டான்.

  அறைக்குள் இரண்டு சேர் எதிர் எதிர் திசையில் போடப்பட்டிருக்க, அதில் ஒன்றில் ரோகன் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருந்தான்.

  உள்ளே வந்த ஜானை எதிரில் இருந்த சேரில் உக்கார சொல்லிவிட்டு தன் மொபைலில் வாய்ஸ் ரெக்கார்டை ஆன் செய்து விசாரணையை அவனிடத்தில் தொடர்ந்தான்...

  '' உங்க பேர் என்ன...? ''

  '' ஜான்... ''

  '' கடைசியா ஃபாதரை எப்ப பார்த்தீங்க...? ''

  '' முந்தையநாள் சாயந்திரம், ஒரு 6 மணி இருக்கும்... அப்ப தான் நாங்க கடைசியா பார்த்தது... ''

  '' நாங்கன்னா..!! யார் யார்...? ''

  '' நான், ஹரிஷ் அப்புறம் பீட்டர்... ''

  '' எத்தனை வருஷமா இங்க இருக்கீங்க...? ''

  '' 10 வயசுல இருந்து இங்க தான் இருக்கேன்... ''

  '' ஃபாதர் இறந்தபோ எங்க இருந்தீங்க...? ''

  '' ஊட்டில இருந்தேன்... ''

  '' ஃபாதர் இறந்தது உங்களுக்கு எப்படி தெரியும்...? ''

  '' காலைல ஹரிஷ்க்கு சிஸ்டர் கால் பண்ணி சொன்னாங்க... அவங்க சொல்லி தான் தெரியும்... ''

  இன்னும் சில கேள்விகளை கேட்ட பின்பு ஜானிடமும் கைரேகையை பெற்றுக் கொண்டு அனுப்பினான்.

  ஜான் அந்த அறைக் கதவை திறந்து கொண்டு வெளியில் செல்ல எத்தனித்தத் தருணம்,

  '' ஜான் '' என்று ரோகன் கூப்பிட, திரும்பி பார்த்தான்...

  '' இதுக்கு முன்னாடி நாம மீட் பண்ணிருக்கோமா ஜான் '' சேரிலிருந்து எழுந்து நின்றான் ரோகன்.

  '' தெரியல... ஏன்..? ''

  '' எனக்கு அப்படி தான் தோனுது... ''

  '' எனக்கு அப்படி தோனல.... தோனாது '' மறு வார்த்தை பேசாமல் அவ்விடம் விட்டு விடைபெற்றான் ஜான்....
   
 9. kani _mozhi

  kani _mozhi Active Member

  Joined:
  Feb 12, 2018
  Messages:
  372
  Likes Received:
  241
  Trophy Points:
  43
  Gender:
  Female
  Nice.going good.
   
  Anug sathya likes this.
 10. Rabina

  Rabina Well-Known Member

  Joined:
  Aug 14, 2018
  Messages:
  560
  Likes Received:
  337
  Trophy Points:
  63
  Gender:
  Female
  nice updates.
   
  Anug sathya likes this.

Share This Page