தொட்டிச்செடி

Discussion in 'Poetry' started by NATHIYAMOHANRAJA, Nov 19, 2018.

  1. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    5,219
    Likes Received:
    486
    Trophy Points:
    83
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    நீ ஆலமரம்
    நான் தொட்டிச்செடி
    நம் வேர்கள்
    சந்திக்கவே முடியாது
    காற்றுக்கு மட்டுமே
    நாம் காதலர்கள்
    மழைகூட
    நம்மை வஞ்சித்துவிட்டது
    மரபுச் சட்டங்கள்
    நம்மைத் தண்டித்துவிட்டது


    என் வேப்பமரக் காற்று
    உன் மேல்துண்டை
    உரசியதில்
    என் சருகுகளில் தீ
    உன் கண்களில்
    என் மண்ணின்
    தூசி.
    உறுத்துகின்றது என்று
    உதறிவிடாதே
    உறுத்தலில்தான்
    உண்மைகள்
    பிரசவிக்கும்.


    என் பிச்சிப்பூக்கள்
    பூத்துக் குலுங்கியதில்
    புதர் நாகங்கள்
    வெட்டிவீழ்த்திவிட்டேன்
    இன்று
    தொட்டிச்செடிகளில்
    தொடர்கின்றது
    தோட்டம்
    மண்ணுக்காக ஏங்கும்
    என் வேர்கள்
    மலருக்காக நீள்கின்றன
    உன் கைகள்
    மயக்கத்தில்
    இலைகளையும்
    உதிர்க்கின்றன
    என் செடிகள்.
     

Share This Page