த‌மிழக‌ம் செய்திகள்

Discussion in 'Memes and Funny Videos - Daily Updates' started by NATHIYAMOHANRAJA, Mar 17, 2020.

 1. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  8,130
  Likes Received:
  525
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  புதிதாக ஓட்டுனர் உரிமம் வழங்குவது நிறுத்தி வைப்பு: தமிழக அரசு அறிவிப்பு

  கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழக அரசு அவ்வப்போது பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

  கல்வி நிலையங்களுக்கு விடுமுறை, தியேட்டர்கள் மால்கள் அடைப்பு, சென்னை தி நகரில் உள்ள கடைகளை அடைக்க வேண்டும் போன்ற உத்தரவுகள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள புதிய தகவலின்படி தமிழகத்தில் உள்ள அனைத்து ஆர்டிஓ அலுவலங்களிலும் புதிதாக ஓட்டுநர் உரிமம் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளதாகவும், மார்ச் 31ம் தேதிக்கு பிறகே ஓட்டுனர் உரிமை வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

  கொரோனா வைர.ஸ் பாதுகாப்பு நடவடிக்கையாக தமிழக அரசின் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது மேலும் பேருந்து ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் அனைவருக்கும் முகக்கவசம் வழங்கப்படும் என்றும் குளிர்சாதன பேருந்துகளில் போர்வைகள் வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், அவ்வகை பேருந்துகளில் திரைச்சீலைகளும் அகற்றப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

  மேலும் கால் டாக்சிகள் ஆட்டோக்கள் உள்ளிட்ட வாகனங்களில் தூய்மை பணிகள் மேற்கொள்ள அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவருக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் அவர்கள் சற்று முன் தெரிவித்துள்ளார். தமிழக அரசின் அனைத்து துறைகளும் மிகவும் சுறுசுறுப்பாக கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டு வருவதற்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்
   
 2. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  8,130
  Likes Received:
  525
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  ரயில்வே நடை மேடை கட்டணம் ரூ.50 ஆக உயர்வு !

  ரயில்வே நடை மேடை கட்டணம் ரூ.50 ஆக உயர்வு !
  கொரோனா வைரஸ் உலகெங்கிலும் 1,82,000-க்கும் மேற்பட்டோரை பாதித்துள்ளது. மேலும் 7,100 க்கும்

  மேற்பட்ட இறப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவற்றில், சீனாவில் 80,800-க்கும் மேற்பட்டோரும் இத்தாலியில் 27, 900-க்கு மேற்பட்டோரும் பாதிக்கப்படுள்ளனர்.

  உலகம் முழுவதும் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ், தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இதனால், பல மாநிலங்களில் கொரோனா காரணமாக எமெர்ஜென்சி அறிவிக்கப்பட்டுள்ளது.

  இன்று காலை வரை இந்தியாவில் சுமார் 129 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என தகவல் வெளியிடப்பட்ட நிலையில், மூவர் உயிரிழந்தனர். ஆனால், தற்போது இந்த எண்ணிக்கை உயர்ந்து இந்தியாவில் 137 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 40 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

  இதுகுறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளதாவது :

  விடுமுறை கால சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும்,
  வெளிமாநிலங்களில் இருந்து வரும் ரயில் பயணிகளுக்கு தெர்மல் ஸ்கேன் பரிசோதனை செய்யப்படும் .மேலும், ஆர்டிஓ அலுவலகம் ஓட்டுநர் உரிமம் வழங்க மார்ச் 31 ஆம் தேதி வரை நடை விதிக்கபடுவதாகவும், மக்கள் வசதிக்கு ஏற்ப பேருந்துகளை இயக்க உத்தரவிட்டுள்ளதாகவும்
  அவர் தெரிவித்துள்ளார்.

  இந்த நிலையில் தென்னக ரயில்வே கூறியுள்ளதாவது :

  மக்கள் அதிக அளவில் ரயில் நிலையத்திற்கு வருவதை தவிர்க்கும் வகையில் நடைமேடை கட்டணம் ரூ.50 ஆக உயர்த்தப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.

  ரயில்வே ’பிளாட் பார்ம் ’கட்டணம் ரூ.10 லிருந்து ரூ. 50 ஆக உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
   
 3. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  8,130
  Likes Received:
  525
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  சென்னையில் வீடுகளை கண்காணிக்க தனிக்குழு - மாநகராட்சி ஆணையர் !!

  சென்னையில் வீடுகளை கண்காணிக்க தனிக்குழு - மாநகராட்சி ஆணையர் !!
  கொரோனா வைரஸ் உலகெங்கிலும் 1,82,000-க்கும் மேற்பட்டோரை பாதித்துள்ளது. மேலும் 7,100 க்கும்

  மேற்பட்ட இறப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவற்றில், சீனாவில் 80,800-க்கும் மேற்பட்டோரும் இத்தாலியில் 27, 900 - க்கு மேற்பட்டோரும் பாதிக்கப்படுள்ளனர்.

  உலகம் முழுவதும் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ், தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இதனால், பல மாநிலங்களில் கொரோனா காரணமாக எமெர்ஜென்சி அறிவிக்கப்பட்டுள்ளது.

  இன்று காலை வரை இந்தியாவில் சுமார் 129 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என தகவல் வெளியிடப்பட்ட நிலையில், மூவர் உயிரிழந்தனர். ஆனால், தற்போது இந்த எண்ணிக்கை உயர்ந்து இந்தியாவில் 137 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 40 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

  தமிழகத்தில் கொரோனா வைரஸ் அறிகுறிகள் இருப்பவர்களுக்கு மருத்துவமனையில் மருத்துவர் கண்காணிப்பில் உள்ளனர்.

  இந்நிலையில், சென்னையில் பிரபல மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியான தி நகர் எனப்படும் தியாகராய நகரில் கடைகளை மூடப்படும் எனவும், மக்கள் அத்தியாவசியமின்றி வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம் எனவும்
  மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்
  உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.


  இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் கூறியுள்ளதாவது :
  சென்னையில் நாள் ஒன்றுக்கு 80 வீடுகள் மருத்துவக் குழுவால் கண்காணிக்கப்படும்,. கொரொனோ குறித்து அறிகுறி தெரியவந்தால், 044 -45969424 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.

  மேலும், அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளதாவது :

  விடுமுறை கால சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், வெளிமாநிலங்களில் இருந்து வரும் ரயில் பயணிகளுக்கு தெர்மல் ஸ்கேன் பரிசோதனை செய்யப்படும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
   

Share This Page