நடிகர்கள், நடிகைகள் வாழ்க்கை வரலாறு

Discussion in 'Non Fiction' started by NATHIYAMOHANRAJA, Oct 15, 2019.

 1. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  7,082
  Likes Received:
  512
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  ரஜினியின் இமயமலைப் பயணம்
  ரஜினிகாந்த் அவர்கள், ஒவ்வொரு படம் முடித்து அந்த படம் திரைக்கு வந்ததும், இமயமலைக்குச் செல்வதையும், அங்குள்ள ஆசிரமத்தில் தங்கி தியானம் செய்வதையும் வழக்கமாக கொண்டுள்ளார். சினிமா, பணம், புகழ் என பல சிகரத்தை தொட்டுப்பார்த்தாலும், அவருக்கான தேடல் ‘இமயமலை பயணம்’ எனக் கூறப்படுகிறது.
  ரஜினியின் பஞ்ச் டயலாக்ஸ்
  தென்னிந்தியாவில் மட்டுமல்லாமல், உலக திரைப்படத்துறையில் பஞ்ச் டயலாக்ஸ் என்றால், அனைவரின் மனத்திலும் நினைவுக்கு வருபவர், ரஜினிகாந்த் மட்டுமே. ஒவ்வொரு திரைப்படத்திலும் தன்னுடைய ஸ்டைலான நடிப்பிலும், பஞ்ச் டயலாக்குகள் மூலமும் ரசிகர்களை கவர்ந்துள்ளார் என்று கூறினால் அது மிகையாகாது. அவர் வெளிபடுத்திய ஒவ்வொரு டயலாக்கும் இன்றும் மக்கள் மனதில் நீங்காமல் இடம் பெற்றுள்ளது.
  • 16 வயதினிலே திரைப்படத்தில், “இது எப்படி இருக்கு?”
  • “மூன்று முகம்” திரைப்படத்தில், “வத்திக்குச்சிக்கு இரண்டு பக்கம் உரசினாதான் தீ பிடிக்கும். ஆனா, இந்த அலெக்ஸ் பாண்டியனுக்கு எந்த பக்கம் உரசினாலும் தீப்பிடிக்கும்”
  • “முத்து” திரைப்படத்தில், “எப்ப வருவேன்? எப்படி வருவேன்னு யாருக்கும் தெரியாது, ஆனா வரவேண்டிய நேரத்துல கரக்டா வருவேன்.” அண்ணாமலை திரைப்படத்தில், “கஷ்டப் படாம எதுவும் கிடைக்காது, கஷ்டபடாம கிடைக்கிறது என்னைக்குமே நிலைக்காது” மற்றும் “சொல்றதை தான் செய்வேன், செய்றதைதான் சொல்லுவேன்”
  • “பாட்ஷா” திரைப்படத்தில் “நான் ஒரு தடவை சொன்னா, நூறு தடவை சொன்ன மாதிரி”
  • “பாபா” திரைப்படத்தில் “நா லேட்டா வந்தாலும், லேட்டஸ்டா வருவேன்” மற்றும் “அசந்தா அடிக்கிறது உங்க ஸ்டைல், அசராம அடிக்கிறது என் ஸ்டைல்”
  • “படையப்பா” திரைப்படத்தில், “என் வழி தனி வழி” மற்றும் “அதிகமா கோபப்படற பொம்பளையும், அதிகமா ஆசப்படற ஆம்பளையும் நல்லா வாழ்ந்ததா சரித்திரமே இல்ல”
  • “சிவாஜி” திரைப்படத்தில், “பேரை கேட்டாலே சும்மா அதிருதுல்ல” மற்றும் “பண்ணிங்க தான் கூட்டமா வரும், சிங்கம் சிங்கலாதான் வரும்”
  குடும்ப வாழ்க்கை
  “தில்லு முல்லு” திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தபொழுது, லதா ரங்காச்சாரியை முதன் முதலாக சந்தித்தார். சென்னையிலுள்ள “எத்திராஜ் கல்லூரியில்” படித்துக் கொண்டிருந்தபொழுது, ரஜினியை பேட்டி எடுக்க லதா அவர்கள் சென்றிருந்தார். அந்த பேட்டியின்போதே “தன்னை மணக்க விருப்பமா?” என்று ரஜினிகாந்த் கேட்க, “வெட்கத்தோடு பெற்றோரிடம் கேளுங்கள்!” என்று லதா சொல்லிவிட்டார். பிறகு, ஒய்.ஜி மகேந்திரனின் உதவியுடன் (லதாவின் சகோதரி சுதாவை இவர் மணந்துள்ளார்) லதாவின் பெற்றோரிடம் சம்மதம் பெற்ற அவர்கள், 1981 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்கள். இவருக்கு ஐசுவர்யா மற்றும் சௌந்தர்யா என்ற இருமகள்கள் உள்ளனர்.
  விருதுகள்
  • 1978 ஆம் ஆண்டு “முள்ளும் மலரும்” திரைப்படத்திற்காக “தமிழக அரசு திரைப்பட விருது” வழங்கப்பட்டது.
  • 1979 ஆம் ஆண்டு “ஆறிலிருந்து அறுபது வரை” திரைப்படத்திற்காக “தேவர் விருது” வழங்கப்பட்டது.
  • 1984 ஆம் ஆண்டு “நல்லவனுக்கு நல்லவன்” திரைப்படத்திற்காக “ஃபிலிம்பேர் விருது” வழங்கப்பட்டது.
  • 1985 ஆம் ஆண்டு தமிழக அரசின் “கலைமாமணி விருது” வழங்கப்பட்டது.
  • 1989 ஆம் ஆண்டு “எம்.ஜி.ஆர் விருது” வழங்கப்பட்டது.
  • 1992 ஆம் ஆண்டு “அண்ணாமலை” திரைப்படத்திற்காக “அம்பிகா விருது” வழங்கப்பட்டது.
  • “16 வயதினிலே” மற்றும் “முள்ளும் மலரும்” திரைப்படத்திற்காக “அரிமா சங்கம் விருது” வழங்கப்பட்டது.
  • “நல்லவனுக்கு நல்லவன்”, “ஸ்ரீ ராகவேந்தரா”, “பிளட் ஸ்டோன்”, “தளபதி”, “அண்ணாமலை”, “வள்ளி”, “பாட்ஷா”, “முத்து” போன்ற திரைப்படங்களுக்காக சினிமா எக்ஸ்பிரஸ் விருது வழங்கப்பட்டது.
  • “முள்ளும் மலரும்”, “மூன்று முகம்”, “முத்து”, “படையப்பா”, “சந்திரமுகி”, “சிவாஜி” போன்ற திரைப்படத்திற்காக ‘தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகள்’ வழங்கப்பட்டது.
  • 2000 ஆம் ஆண்டு இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான “பத்ம பூஷன்” விருது வழங்கப்பட்டது.
  தனக்கென ஒரு பாதையில் ஸ்டைலான நடிப்பில் அசைக்கமுடியாத ராஜாவாக நடைபோட்டு வரும் ரஜினிகாந்த் அவர்கள், திரையுலகில் மட்டும் ‘சூப்பர்ஸ்டார்’ என இல்லாமல், நிஜ வாழ்க்கையிலும் சூப்பர்ஸ்டாராக வாழ்ந்து வருகிறார். பணம், புகழ், அந்தஸ்து என அனைத்திலும் நிறைவைப் பெற்றுவிட்டாலும், இன்று வரை அவர் சாதாரண மனிதராக ஒரு எளிமையான வாழ்க்கையயை மட்டுமே வாழ விரும்புகிறார். தன்னம்பிக்கையும், சாதிக்க வேண்டும் என்ற விடாமுயற்சியையும் கொண்டு கடுமையாக உழைத்தால், வாழ்கையில் முன்னேறலாம் என்ற பாடத்தை கற்றுத்தந்துள்ளார்.
   
 2. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  7,082
  Likes Received:
  512
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  அமிதாப் பச்சன்

  சிறந்த எழுத்தாளர் மற்றும் கவிஞரான ஹரிவன்ஷ் ராய் பச்சன் அவர்களின் மகனும், இந்தித் திரையுலகில் நான்கு தசாப்தங்களாக தனது பங்களிப்பை அளித்து, ‘சூப்பர் ஸ்டார்’ என்று போற்றப்படுபவர், அமிதாப் பச்சன் அவர்கள். இந்தியாவின் முன்னணி நடிகர்கள் பட்டியலில், முதல் இடத்தைத் தொடர்ந்து பதினாறு ஆண்டுகள் பிடித்திருப்பவரும் இவரே. திரையுலகில், நடிகர் என்ற ஒரே இலக்கோடு நிறுத்திக் கொள்ளாமல், பின்னணிப் பாடகர், திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் தொலைக்காட்சித் தொகுப்பாளர் என்று பன்முகம் கொண்டவர், அமிதாப் பச்சன் அவர்கள். எண்ணற்ற ‘சர்வதேச விருதுகள்’, ‘பத்மஸ்ரீ விருது’, ‘பத்ம விபூஷன் விருது’, ‘4 முறை தேசிய விருதுகள்’, ’14 முறை ஃபிலிம்ஃபேர் விருதுகள்’ என 180 விருதுகளைத் தனது திரையுலக வாழ்வில் பெற்று, இன்றளவும் ஹிந்தித் திரையுலகில் செயல்பட்டு கொண்டிருக்கிறார். இந்திய சினிமா வரலாற்றில் மிக முக்கிய நபர்களில் ஒருவராகவே மாறிவிட்ட அமிதாப் பச்சன் அவர்கள், 40 முறை ‘ஃபிலிம்ஃபேர் விருதுகளுக்காகப் பரிந்துரைக்கப்பட்ட ஒரே நடிகரென்ற பெருமைக்குரியவர். திரையுலகப் பின்னணியைத் தவிர, 1984 முதல் 1987 வரை இந்தியப் பாராளுமன்றத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினராகவும் இருந்தார். இந்திய சினிமா வரலாற்றில் மிகப் பெரிய செல்வாக்கு மிகுந்த நடிகர்களுள் ஒருவராகத் திகழும் அமிதாப் பச்சன் அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் திரையுலகில் அவர் ஆற்றிய சாதனைகள் பற்றி மேலுமறிய தொடர்ந்து படிக்கவும்.
  பிறப்பு: 11 அக்டோபர், 1942 (வயது 70)
  பிறப்பிடம்: அலகாபாத், ஐக்கிய மாகாணங்கள், பிரிட்டிஷ் இந்தியா
  பணி: நடிகர், தயாரிப்பாளர், பாடகர், தொலைக்காட்சி தொகுப்பாளர், அரசியல்வாதி
  நாட்டுரிமை: இந்தியா

  பிறப்பு
  அமிதாப் பச்சன் அவர்கள், இந்தியாவின் வட மத்திய மாநிலமான உத்திர பிரதேசத்தில் உள்ள அலகாபாத்தில் ஹரிவன்ஷ் ராய் பச்சன் மற்றும் தேஜி பச்சன் தம்பதியருக்கு மகனாக அக்டோபர் மாதம் 11 ஆம் தேதி, 1942 ஆம் ஆண்டில் பிறந்தார். அவருக்கு அஜிதாப் என்று ஒரு தம்பியும் இருக்கிறார்.
  அமிதாப் பெயர் காரணம்
  அவரது தந்தை ஹரிவன்ஷ் ராய் பச்சன், ஒரு தலைச்சிறந்த ஹிந்தி எழுத்தாளரும், கவிஞரும் ஆவார். அமிதாப் அவர்களின் இயற்பெயர், ஸ்ரீவஸ்தவா. ஆரம்பத்தில் அவருக்கு ‘இன்குய்லாப்’ என்று பெயரிட்ட அவரது தந்தை, அவரது நண்பரின் அறிவுரைப்படி, அவருக்கு ‘அமிதாப்’ என்று பெயர் சூட்டினார். ‘அமிதாப்’ என்றால் ‘நிலையான ஒளி’ என்று அர்த்தம். ‘பச்சன்’ என்ற பெயரில் அவரது தந்தை வெளியிட்ட படைப்புகள் வெற்றிப் பெற்றதால், அதுவே அவரது குடும்ப உறுப்பினர்கள் அனைவருடைய குடும்பப் பெயராக மாறியது. அமிதாப்பின் தந்தை 2007லும், அவரது தாயார் 2003லும் இயற்கை எய்தினர்.
  ஆரம்ப வாழ்க்கையும், கல்வியும்
  அமிதாப் பச்சன் அவர்கள், தனது பள்ளிப்படிப்பை நைனிடாலில் உள்ள ஷெர்வுட் கல்லூரியில் முடித்தார். பள்ளிப்படிப்பை வெற்றிகரமாக முடித்தப் பின்னர், அவர் தில்லி பல்கலைக்கழகத்தின் கீழ் வரும் கிரோரி மால் கல்லூரி அறிவியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார். தனது கல்லூரி வாழ்க்கைக்குப் பிறகு, அவருக்குக் கொல்கத்தாவில் உள்ள ஷா வாலஸ் என்ற கப்பல் நிறுவனத்தில் வேலைக் கிடைத்ததால், அவர் அங்கு இடம்பெயர்ந்தார். அதன் பின்னர், வேறொரு கப்பல் நிறுவனத்தில் சரக்குத் தரகராகப் பணிபுரிந்தார். அவரது இளம் வயதிலிருந்தே, சினிமா மீது பற்றுடையவராக இருந்ததால், சினிமாவில் முயற்சி செய்வதற்காக மும்பைக்குச் சென்றார்.
  திரையுலக வாழ்க்கை
  1969ல், ‘புவன் ஷோம்’ என்ற ‘தேசிய விருது’ பெற்ற திரைப்படத்தில் விவரணையாளராகப் பணியாற்றினார். பின்னர், அதே ஆண்டில், ‘சாத் ஹிந்துஸ்தானி’ என்ற படத்தில் முதல் முறையாக திரையில் அறிமுகமானார். அப்படம், அவருக்கு ‘சிறந்த புதுமுகத்திற்கான தேசிய திரைப்பட விருதினைப்’ பெற்றுத்தந்தது. ஆகவே, அவருக்குத் தொடர்ந்து பட வாய்ப்புகள் வந்து குவிந்தன. அவர் நடித்தத் திரைப்படங்களின் பட்டியல் பின்வருமாறு: ‘பாம்பே டாக்கி’ (1970), ‘பர்வானா’ (1971), ‘ஆனந்த்’ (1971), ‘குட்டி’ (1971), ‘பியார் கி கஹானி’ (1971), ‘பந்தே ஹாத்’ (1973), ‘ஜன்ஜீர்’ (1973), ‘கெஹ்ரி சால்’ (1973), ‘அபிமான்’ (1973), ‘சுப்கே சுப்கே’ (1975), ‘ஃபரார்’ (1975), ‘மிலி’ (1975), ‘தீவார்’ (1975), ‘ஷோலே’ (1975), ‘தோ அஞ்சானே’ (1976), ‘கபி கபி’ (1976), ‘ஹேராஃபேரி’ (1976), ‘அலாப்’ (1977), ‘சரண்தாஸ்’ (1977), ‘அமர் அக்பர் அந்தோனி’ (1977), ‘ஷத்ரன்ஜ் கே கிலாரி’ (1977), ‘அதாலத்’ (1977), ‘இமான் தரம்’ (1977), ‘கூன் பசினா’ (1977), ‘பர்வரிஷ்’ (1977), ‘கஸ்மே வாடே’ (1978), ‘திரிசூல்’ (1978), ‘டான்’ (1978), ‘தி கிரேட் கேம்ப்லெர்’ (1979), ‘கோல்மால்’ (1979), ‘மன்ஸில்’ (1979), ‘தோஸ்தானா’ (1980), ‘ராம் பல்ராம்’ (1980), ‘ஷான்’ (1980), ‘கமாண்டர்’ (1981), ‘நசீப்’ (1981), ‘தேஷ் பிரேமி’ (1982), ‘நமக் ஹலால்’ (1982), ‘சக்தி’ (1982), ‘நச்தீக்’ (1983), ‘அந்தா கானூன்’ (1983), ‘மகான்’ (1983), ‘கூலி’ (1983), ‘ஃபிலிம் ஹை ஃபிலிம்’ (1983), ‘இன்குய்லாப்’ (1984), ‘ஷராபி’ (1984), ‘கேரஃப்தார்’ (1985), ‘மர்த்’ (1985), ‘ஆக்ரீ ராஸ்தா’ (1986), ‘கோன் ஜீத்தா கோன் ஹாரா’ (1987), ‘சூர்மா போபாலி’ (1988), ‘ஷாகின்ஷா’ (1988), ‘ஹீரோ ஹீராலால்’ (1988), ‘கங்கா ஜமுனா சரஸ்வதி’ (1988), ‘பட்வாரா’ (1989), ‘தூஃபான்’ (1989), ‘ஜாதுகர்’ (1989), ‘மெயின் ஆஜாத் ஹூன்’ (1989).
  மேலும் அவர், ‘அக்நீபத்’ (1990), ‘க்ரோத்’ (1990), ‘ஆஜ் கா அர்ஜுன்’ (1990), ‘ஹம்’ (1991), ‘அஜூபா’ (1991), ‘இந்திரஜீத்’ (1991), மேரே சப்னே’ (1996), ‘ம்ரித்யூதத்தா’ (1997), ‘மேஜர் சாப்’ (1998), ‘படே மியான் சோட்டே மியான்’ (1998), ‘லால் பாட்ஷா’ (1999), ‘சூரியவன்ஷம்’ (1999), ‘ஹிந்துஸ்தான் கி கசம்’ (1999), ‘கோஹ்ரம்’ (1999), ‘ஹலோ பிரதர்’ (1999), ‘பீவி நம்பர் 1’, (1999), ‘மொகபத்தீன்’ (2000), ‘ஏக் ரிஷ்தா: தி பாண்ட் ஆஃப் லவ் ‘ (2001), ‘லகான்’ (2001), ‘அக்ஸ்’ (2001), ‘கபி குஷி கபி கம் …'(2001), ‘ஆன்கேன்’ (2002), ‘ஹம் கிஸிஸே கம் நஹி’ (2002), ‘அக்னி வர்ஷா’ (2002), ‘காந்தே’ (2002), ‘குஷி’ (2003), ‘அர்மான்’ (2003), ‘மும்பை சே ஆயா மேரா தோஸ்த்’ (2003), ‘பூம்’ (2003), ‘பாக்பன்’ (2003), ‘ஃபன்டூஷ்’ (2003), ‘காக்கீ’ (2004), ‘ஏத்பர்’ (2004), ‘ருத்ராக்ஷ்’ (2004), ‘இன்சாஃப்’ (2004), ‘தீவார்’ (2004), ‘வீர்-ஜாரா’ (2004), ‘அப் தும்ஹாரே ஹவாலே வதான் சாத்தியோ’ (2004), ‘பிளாக்’ (2005), ‘பன்டி ஆர் பப்லி’ (2005), ‘பரிநீதா’ (2005), ‘பஹேலி’ (2005), ‘சர்க்கார்’ (2005), (2005), ‘தில் ஜோ பி கஹே’ (2005), ‘ஏக் அஜ்னபீ’ (2005), ‘அம்ரிதாதாரே’ (2005), ‘ஜமானத்’ (2006), ‘ஃபேமிலி – டைஸ் ஒப் ப்லட்’ (2006), ‘கபி அல்விதா நா கெஹனா’ (2006), ‘பாபுல்’ (2006), ‘ஏகலவ்யா: தி ராயல் கார்ட்’ (2007), ‘நிஷப்த்’ (2007), ‘சீனி கம்’ (2007’ஜூம் பராபர் ஜூம்’ (2007), ‘ராம் கோபால் வர்மா கி ஆக்’ (2007), ‘ஓம் சாந்தி ஓம்’ (2007), ‘ஜோதா அக்பர்’ (2008), ‘பூத்நாத்’ (2008), ‘சர்க்கார் ராஜ்’ (2008), ‘தி லாஸ்ட் லியர்’ (2008), ‘காட் துசி கிரேட் ஹோ’ (2008), ‘யார் மேரி ஜிந்தகி’ (2008), ‘தில்லி 6’ (2009), ‘அலாதின்’ (2009), ‘பா’ (2009), ‘ரான்’ (2010), ‘மிஸ்டர் பட்டி ஆன் சுட்டி’ (2010), ‘தீன் பட்டி’ (2010), ‘கந்தகார்’ (2010), ‘புத்தா … ஹோகா தேரா பாப் ‘(2011), ‘ஆரக்ஷன்’ (2011), ‘டிப்பார்ட்மென்ட்’ (2012), ‘போல் பச்சன்’ (2012), ‘தி கிரேட் கேட்ஸ்பை’ (2013), ‘சத்தியாக்கிரகம்’ (2013), ‘பூத்நாத் 2’ (2013), மற்றும் ‘ஜமானத்’ (2013).
  தொலைக்காட்சி வாழ்க்கை
  ‘ஹூ வாண்ட்ஸ் டு பிகம் எ மில்லினர்?’ என்ற பிரிட்டிஷ் கேம் ஷோவைத் தழுவி உருவான ‘கோன் பனேகா கரோர்பதி’ என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியை அமிதாப் பச்சன் அவர்கள், 2000 ஆம் ஆண்டிலிருந்து 2005 ஆண்டு நவம்பர் மாதம் வரைத் தொகுத்து வழங்கினார். அதன் பின்னர், அவர் நோய்வாய்ப்பட்டதால், அதிலிருந்து விலகிக் கொண்டார்.
  அரசியல் வாழ்க்கை
  ராஜீவ் காந்தியுடனான நீண்ட நாட்கள் இருந்த நட்பை கௌரவிக்கும் விதமாக, திரையுலக வாழ்வில் சற்று இடைவெளி விட்டு, 1984ல் அரசியலில் இறங்கினார், அமிதாப் பச்சன் அவர்கள். அலகாபாத்தில் 8 வது மக்களவைப் பொதுத் தேர்தலில், உத்தர பிரதேச முன்னால் முதல்வர் ஹெச். என். பகுகுணா அவர்களை எதிர்த்துப் போட்டியிட்ட அவர், தேர்தல் வரலாற்றிலேயே மிக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றார். வெற்றிப்பெற்று, பொறுப்பேற்ற அவர், மூன்று ஆண்டுகளுக்கு பின்னர் 1987ல் ராஜினாமா செய்தார்.
  இல்லற வாழ்க்கை
  அமிதாப் பச்சன் அவர்கள், பிரபல ஹிந்தித் திரைப்பட நடிகையான ஜெய பாதுரியுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார். அவர்களது ஜோடி பெரிதும் பேசப்பட்டது. அவர்கள் இணைந்து நடிக்கும் போது, அவர்கள் இருவருக்குள்ளும் காதல் மலர்ந்ததால், அவர்கள் பெற்றோர் சம்மதத்துடன் 3ஆம் தேதி ஜூன் மாதம், 1973 ஆம் ஆண்டில் மணமுடித்தனர். இவர்களுக்கு ஸ்வேதா மற்றும் அபிஷேக் என இரு குழந்தைகள் பிறந்தனர். அபிஷேக் பச்சனும் ஒரு பிரபல நடிகராவார். அவர் உலக அழகியும், நடிகையுமான ஐஸ்வர்யா ராயைத் திருமணம் செய்துகொண்டார்.
  விருதுகளும், அங்கீகாரங்களும்
  • இந்தியாவின் மூன்றாவது உயரிய விருதான ‘பத்ம பூஷனை’ 2001 ஆம் ஆண்டிலும், நான்காவது உயரிய விருதான ‘பத்மஸ்ரீயை’ 1984 ஆம் ஆண்டிலும் வென்றார்.
  • கவுரவ டாக்டர் பட்டத்தை – ஜான்சி பல்கலைக்கழகத்திலிருந்து 2004 ஆம் ஆண்டிலும், தில்லி பல்கலைக்கழகத்திலிருந்து 2006 ஆம் ஆண்டிலும், ஆஸ்திரேலியாயாவில் உள்ள குவின்ஸ்லாந்து யுனிவர்சிட்டி ஆஃப் டெக்னாலஜியில் இருந்து 2011 ஆம் ஆண்டிலும் பெற்றார்.
  • தேசிய திரைப்பட விருதை 1970 ஆம் ஆண்டில், ‘சாத் ஹிந்துஸ்தானி’ படத்திற்காகவும், 1990 ஆம் ஆண்டில், ‘அக்நீபத்’ படத்திற்காகவும், 2005 ஆம் ஆண்டில், ‘பிளாக்’ படத்திற்காகவும், 2009 ஆம் ஆண்டில், ‘பா’ படத்திற்காகவும் பெற்றார்.
  • ஃபிலிம்ஃபேர் விருதுகளை 1971ல் ‘ஆனந்த்’ படத்திற்காக, 1973ல் ‘நமக் ஹரம்’ படத்திற்காக, 1977ல் ‘அமர் அக்பர் ஆண்டனி’ படத்திற்காக, 1978ல் ‘டான்’ படத்திற்காக, 1990ல் பிலிம்பேர் வாழ்நாள் சாதனையாளர் விருது (முதல் பெற்றவர்), 1991ல் ‘ஹம்’ படத்திற்காக, 2000 ஆம் ஆண்டில், மில்லேனியம் பிலிம்பேர் சூப்பர் ஸ்டார், 2000 ஆம் ஆண்டில், ‘மொகபத்தீன்’ படத்திற்காக, 2001ல், ‘அக்ஸ்’ படத்திற்காக, 2003ல், ‘பிலிம்பேர் பவர் விருதும்’, 2005ல் ‘பிளாக்’ படத்திற்காக இரு விருதுகளும், 2010ல், ‘பா’ படத்திற்காக, மற்றும் 2011ல், இந்திய திரைப்பட துறையில் 40 ஆண்டுகள் வெற்றிகரமாக முடித்ததற்காக ‘ஃபிலிம்பேர் சிறப்பு விருதும்’ பெற்றார்.
  காலவரிசை
  1942: அலகாபாத்தில் ஹரிவன்ஷ் ராய் பச்சன் மற்றும் தேஜி பச்சன் தம்பதியருக்கு மகனாக அக்டோபர் மாதம் 11 ஆம் தேதி, 1942 ஆம் ஆண்டில் பிறந்தார்.
  1969: ‘புவன் ஷோம்’ என்ற ‘தேசிய விருது’ பெற்ற திரைப்படத்தில் விவரணையாளராகப் பணியாற்றினார்.
  1969: ‘சாத் ஹிந்துஸ்தானி’ என்ற படத்தில் முதல் முறையாக திரையில் அறிமுகமானார்.
  2000 – 2005: ‘கோன் பனேகா கரோர்பதி’ என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
  1984: அரசியலில் இறங்கினார்.
  1984: இந்தியாவின் மிக உயரிய விருதான ‘பத்மஸ்ரீயை’ வென்றார்.
  1987: மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார்.
  2001: இந்தியாவின் மூன்றாவது உயரிய விருதான ‘பத்ம பூஷனை’ வென்றார்.
   
 3. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  7,082
  Likes Received:
  512
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  மணிவண்ணன்


  இயக்குனராக தமிழ்த் திரையுலகில் அடியெடுத்து வைத்து, பல வெற்றிப் படங்களை இயக்கி, வெற்றிக் கண்டதோடு மட்டுமல்லாமல், ஒரு நடிகராகவும் 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர், மணிவண்ணன் அவர்கள். ஒரு இயக்குனராகவும், நடிகராகவும் தமிழ் ரசிகர்களின் மனதைக் கவர்ந்த அவர், தனது 50-வது திரைப்படமான ‘நாகராஜசோழன் எம். ஏ.எம்.எல்.ஏ’ என்ற படத்தை இயக்கிமுடித்து, அதன் இசையையும் வெளியிட்டுள்ளார். இயக்குனராகவும், நடிகராகவும் இருந்து வந்த அவர், ‘நிழல்கள்’, ‘அலைகள் ஓய்வதில்லை’, மற்றும் ‘ஆகாய கங்கை’ போன்ற திரைப்படங்களுக்குக் கதாசிரியராகவும் பணிபுரிந்துள்ளார். 1982ல், தமிழ்த் திரையுலகில் ‘கோபுரங்கள் சாய்வதில்லை’ என்ற படம் மூலமாக இயக்குனராக அறிமுகமான அவர், ’24 மணி நேரம்’, ‘நூறாவது நாள்’, ‘ஜல்லிக்கட்டு’, ‘சின்ன தம்பி பெரிய தம்பி’, ‘தெற்குத் தெரு மச்சான்’, ‘அமைதிப்படை’ போன்ற வெற்றிப் படங்களைத் தமிழ் ரசிகர்களுக்குப் பரிசாக்கியவர். அத்தகைய சிறப்புமிக்க இயக்குனரும், நடிகருமான மணிவண்ணன் அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் தமிழ்த் திரையுலகில் அவர் ஆற்றிய சாதனைகள் பற்றி மேலுமறிய தொடர்ந்து படிக்கவும்.
  பிறப்பு: 31 ஜூலை, 1954
  பிறப்பிடம்: சூலூர், கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா
  பணி: நடிகர், இயக்குனர், கதாசிரியர், வசனகர்த்தா
  இறப்பு: ஜூன் 15, 2013
  நாட்டுரிமை: இந்தியன்
  பிறப்பு

  மணிவன்னான் அவர்கள், தென்னிந்தியாவில் உள்ள தமிழ்நாட்டில் இருக்கும் கோயம்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சூலூர் என்ற கிராமத்தில் ஆர். எஸ். மணியம் மற்றும் மரகதம் தம்பதியருக்கு மகனாக ஜூலை மாதம் 31 ஆம் தேதி, 1954 ஆம் ஆண்டில் பிறந்தார். அவருக்குப் பெற்றோரிட்ட பெயர் ‘மணிவண்ணன் ராஜகோபால்’. அவருக்கு மூன்று சகோதரிகள் உள்ளனர்.
  ஆரம்ப வாழ்க்கையும், கல்வியும்
  மணிவண்ணன் அவர்களது தாயார் ஒரு பஞ்சாயத்துத் தலைவர் மற்றும் அவரது தந்தை ஒரு அரிசி வியாபாரியாகவும், ஜவுளி வர்த்தகராகவும், அரசியல்வாதியாகவும் இருந்தனர். மேலும், அவருடைய குடும்பத்தில் ஒரே மகன் என்பதாலும், வீட்டில் அவருக்குச் செல்லம் அதிகமாகவே இருந்தது. இதனால் அவருக்குப் படிப்பில் அதிகளவு நாட்டம் செல்லவில்லை. இருப்பினும், கோவை அரசு கலைக் கல்லூரியில் பி.யூ.சி வரை படித்த அவர், பலருடன் நட்பாக இருந்தார். அப்பொழுது அவருக்கு அறிமுகமானவரே, சத்யராஜ் அவர்கள். கல்லூரியில் படிக்கும் போது, பல மேடை நாடகங்களால் ஈர்க்கப்பட்ட அவர், சில நாடகங்களில் நடிக்கவும் செய்திருக்கிறார்.
  திரையுலகப் பிரவேசம்
  பாரதிராஜாவின் ‘கிழக்கே போகும் ரயில்’ என்ற திரைப்படத்தால் பெரிதும் கவரப்பட்ட மணிவண்ணன் அவர்கள், 1௦௦ பக்கம் ரசிகர் மின்னஞ்சல் ஒன்றை பாரதிராஜாவிற்கு அனுப்பினார். அவரது உள்ளார்வமிக்கத் தாக்கத்தை உணர்ந்த பாரதிராஜா அவர்கள், அவரை சந்திக்க விரும்பியதால், சென்னை சென்றார், மணிவண்ணன். மேலும், 1979ல் பாரதிராஜா ‘கல்லுக்குள் ஈரம்’ என்ற படத்தை இயக்கும் போது, அவரைத் தன்னுடைய உதவியாளராக சேர்த்துக் கொண்டார். ‘நிழல்கள்’, ‘டிக் டிக் டிக்’, ‘காதல் ஓவியம்’, ‘அலைகள் ஓய்வதில்லை’, ‘ஆகாய கங்கை’, ‘லாட்டரி டிக்கெட்’, ‘நேசம்’ போன்ற படங்களுக்குக் கதாசிரியராகவும், வசனகர்த்தாவாகவும் பணிபுரிந்திருக்கிறார். ‘புதிய வார்ப்புகள்’, ‘கொத்த ஜீவிதாலு’ (தெலுங்கு), ‘கிழக்கே போகும் ரயில்’ (தெலுங்கு), ‘ரெட் ரோஸ்’ (ஹிந்தி) மற்றும் ‘லவ்வர்ஸ்’ (இந்தி) போன்ற படங்களில் பாரதிராஜாவின் உதவி இயக்குனராகப் பணிபுரிந்த அவர், பாரதிராஜாவின் ‘கொடிப் பறக்குது’ என்ற படத்தில் வில்லனாகத் திரையில் அறிமுகமானார்.
  திரையுலக வாழ்க்கை
  1982ல் வெளியான ‘கோபுரங்கள் சாய்வதில்லை’ என்ற படம், மணிவண்ணன் தமிழ் திரையுலகில் தனித்து இயக்கிய முதல் படமாகும். அதைத் தொடர்ந்து, ‘ஜோதி’ (1983), ‘வீட்டிலே ராமன் வெளியிலே கிருஷ்ணன்’ (1983), ‘இளமைக் காலங்கள்’ (1983), ‘குவாகுவா வாத்துக்கள்’ (1984), ‘ஜனவரி ஒன்னு’ (1984), ‘இங்கேயும் ஒரு கங்கை’ (1984), ‘இருபத்தி நாலு மணிநேரம்’ (1984), ‘நூறாவது நாள்’ (1984), ‘அன்பின் முகவரி’ (1985), ‘விடிஞ்சா கல்யாணம்’ (1986), ‘பாலைவன ரோஜாக்கள்’ (1986), ‘முதல் வசந்தம்’ (1986), ‘இனி ஒரு சுதந்திரம்’ (1987), ‘தீர்த்தக் கரையினிலே’ (1987), ‘புயல் படும் பாட்டு’ (1987), ‘கல்யான் கச்சேரி’ (1987), ‘ஜல்லிக்கட்டு’ (1987), ‘சின்ன தம்பி பெரிய தம்பி’ (1987), ‘கணம் கோர்ட்டார் அவர்களே’ (1988), ‘உள்ளத்தில் நல்ல உள்ளம்’ (1988), ‘மனிதன் மாறிவிட்டான்’, (1989), ‘வாழ்க்கை சக்கரம்’ (1990), ‘சந்தனக்காற்று’ (1990), ‘புது மனிதன்’ (1991), ‘தெற்குத் தெரு மச்சான்’ (1992), ‘கவர்மென்ட் மாப்பிள்ளை’ (1992), ‘மூன்றாவது கண்’ (1993), ‘அமைதிப்படை’ (1994), ‘வீரப்பதக்கம்’ (1994), ‘ராசாமகன்’ (1994), ‘தோழர் பாண்டியன்’ (1994), ‘கங்கை கரை பாட்டு’ (1995), ‘ஆண்டான் அடிமை’ (2001), ‘நாகராஜசோழன் எம்.ஏ.எம்.எல்.ஏ’ (2013) என ஐம்பது திரைப்படங்கள் இயக்கியுள்ளார். தற்போது, தனது 50-வது திரைப்படமான ‘நாகராஜசோழன் எம். ஏ.எம்.எல்.ஏ’ என்ற படத்தை இயக்கிமுடித்து, அதன் இசையையும் வெளியிட்டுள்ளார்.
  நடிகராக மணிவண்ணன்
  ஒரு உதவி இயக்குனராக தமிழ்த் திரையுலகில் நுழைந்த மணிவண்ணன், பாரதிராஜாவின் ‘கொடி பறக்குது’ என்ற படம் மூலமாக வில்லனாக அறிமுகமானார். அக்கதாபாத்திரம் நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்ததால், தொடர்ந்து 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அவர் இயக்கிய ‘அமைதிப்படை’ படத்தில் நடித்த கதாபாத்திரம் மக்களிடையே நன்மதிப்பைப் பெற்றதால், அவர் ‘கோகுலத்தில் சீதை’, ‘காதல் கோட்டை’, ‘அவ்வை சண்முகி’, ‘காதலுக்கு மரியாதை’, ‘ஜீன்ஸ்’, ‘பொற்காலம்’, ‘சங்கமம்’, ‘படையப்பா’, ‘முதல்வன்’, ‘துள்ளாத மனமும் துள்ளும்’, ‘முகவரி’, ‘ரிதம்’, ‘பார்த்தாலே பரவசம்’, ‘டும் டும் டும்’, ‘காசி’, ‘பிரியாத வரம் வேண்டும்’, ‘பம்மல் கே. சம்பந்தம்’, ‘பஞ்சதந்திரம்’, ‘வசீகரா’, ‘மஜா’, ‘சம்திங் சம்திங்… உனக்கும் எனக்கும்’, ‘ஆதி’, ‘சீனா தானா’, ‘சிவாஜி’, ‘குருவி’, ‘ராமன் தேடிய சீதை’, ‘தில்லாலங்கடி’, ‘வேலாயுதம்’ போன்ற பல்வேறு படங்களில் தனக்கென உரித்தான பாணியில் வசனங்களை சர்வசாதாரணமாக அவரது சிறப்பான நடிப்பில் வெளிப்படுத்தி, அவர் ஒரு சிறந்த இயக்குனர் மட்டுமின்றி மிகப்பெரிய நடிகர் என்பதையும் நிரூபித்துள்ளார். அவர், தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகர்களான சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜீத், விக்ரம் போன்றோருடன் இணைந்து நடித்துள்ளார்.
  இல்லற வாழ்க்கை
  மணிவண்ணன் அவர்கள், செங்கமலம் என்பவரை மணமுடித்தார். அவர்கள் இருவருக்கும் ஜோதி என்ற மகளும், ரகுவண்ணன் என்ற மகனும் உள்ளனர். அவரது மகனும் ஒரு நடிகரென்பது குறிப்பிடத்தக்கது.
  அரசியல் வாழ்க்கை
  மணிவண்ணன் அவர்கள், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் (ம.தி.மு.க.) அரசியல் கட்சியில் சேர்ந்தார். மேலும், 2006 ஆம் ஆண்டில் நடந்த சட்டமன்ற தேர்தலில், அக்கட்சிக்கு ஆதரவாகப் பிரச்சாரமும் மேற்கொண்டார்.
  இறப்பு
  இயக்குனராகத் தனது 50 வது படத்தை இயக்கி, அப்படத்தை வெளியிட்ட மணிவண்ணன் அவர்கள், தனது 58வது வயதில் மாரடைப்பால் சென்னை நெசப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் ஜூன் மாதம் 15 ஆம் தேதி, 2013 ஆம் ஆண்டில் காலமானார். அவரது விருப்பப்படி, அவரது உடல் தமிழ் ஈழக் கொடியால் மூடப்பட்டது.
  காலவரிசை
  1954: தமிழ்நாட்டில் இருக்கும் கோயம்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சூலூர் என்ற கிராமத்தில் ஆர். எஸ். மணியம் மற்றும் மரகதம் தம்பதியருக்கு மகனாக ஜூலை மாதம் 31 ஆம் தேதி, 1954 ஆம் ஆண்டில் பிறந்தார்.
  1979: பாரதிராஜா ‘கல்லுக்குள் ஈரம்’ என்ற படத்தை இயக்கம் போது, அவரைத் தன்னுடைய உதவியாளராக சேர்த்துக் கொண்டார்.
  1989: ‘கொடிப் பறக்குது’ என்ற படத்தில் வில்லனாகத் திரையில் அறிமுகமானார்.
  1982: ‘கோபுரங்கள் சாய்வதில்லை’ என்ற படம், மணிவண்ணன் தமிழ் திரையுலகில் தனித்து இயக்கிய முதல் படமாகும்.
  1994: அவர் இயக்கிய ‘அமைதிப்படை’ பெரும் திருப்புமுனையாக அமைந்தது.
  2006: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் (ம.தி.மு.க.) அரசியல் கட்சியில் சேர்ந்த அவர், 2006 ஆம் ஆண்டில் நடந்த சட்டமன்ற தேர்தலில், அக்கட்சிக்கு ஆதரவாகப் பிரச்சாரமும் மேற்கொண்டார்.
   
 4. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  7,082
  Likes Received:
  512
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  இயக்குனராக தமிழ்த் திரையுலகில் அடியெடுத்து வைத்து, பல வெற்றிப் படங்களை இயக்கி, வெற்றிக் கண்டதோடு மட்டுமல்லாமல், ஒரு நடிகராகவும் 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர், மணிவண்ணன் அவர்கள். ஒரு இயக்குனராகவும், நடிகராகவும் தமிழ் ரசிகர்களின் மனதைக் கவர்ந்த அவர், தனது 50-வது திரைப்படமான ‘நாகராஜசோழன் எம். ஏ.எம்.எல்.ஏ’ என்ற படத்தை இயக்கிமுடித்து, அதன் இசையையும் வெளியிட்டுள்ளார். இயக்குனராகவும், நடிகராகவும் இருந்து வந்த அவர், ‘நிழல்கள்’, ‘அலைகள் ஓய்வதில்லை’, மற்றும் ‘ஆகாய கங்கை’ போன்ற திரைப்படங்களுக்குக் கதாசிரியராகவும் பணிபுரிந்துள்ளார். 1982ல், தமிழ்த் திரையுலகில் ‘கோபுரங்கள் சாய்வதில்லை’ என்ற படம் மூலமாக இயக்குனராக அறிமுகமான அவர், ’24 மணி நேரம்’, ‘நூறாவது நாள்’, ‘ஜல்லிக்கட்டு’, ‘சின்ன தம்பி பெரிய தம்பி’, ‘தெற்குத் தெரு மச்சான்’, ‘அமைதிப்படை’ போன்ற வெற்றிப் படங்களைத் தமிழ் ரசிகர்களுக்குப் பரிசாக்கியவர். அத்தகைய சிறப்புமிக்க இயக்குனரும், நடிகருமான மணிவண்ணன் அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் தமிழ்த் திரையுலகில் அவர் ஆற்றிய சாதனைகள் பற்றி மேலுமறிய தொடர்ந்து படிக்கவும்.
  பிறப்பு: 31 ஜூலை, 1954
  பிறப்பிடம்: சூலூர், கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா
  பணி: நடிகர், இயக்குனர், கதாசிரியர், வசனகர்த்தா
  இறப்பு: ஜூன் 15, 2013
  நாட்டுரிமை: இந்தியன்
  பிறப்பு

  மணிவன்னான் அவர்கள், தென்னிந்தியாவில் உள்ள தமிழ்நாட்டில் இருக்கும் கோயம்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சூலூர் என்ற கிராமத்தில் ஆர். எஸ். மணியம் மற்றும் மரகதம் தம்பதியருக்கு மகனாக ஜூலை மாதம் 31 ஆம் தேதி, 1954 ஆம் ஆண்டில் பிறந்தார். அவருக்குப் பெற்றோரிட்ட பெயர் ‘மணிவண்ணன் ராஜகோபால்’. அவருக்கு மூன்று சகோதரிகள் உள்ளனர்.
  ஆரம்ப வாழ்க்கையும், கல்வியும்
  மணிவண்ணன் அவர்களது தாயார் ஒரு பஞ்சாயத்துத் தலைவர் மற்றும் அவரது தந்தை ஒரு அரிசி வியாபாரியாகவும், ஜவுளி வர்த்தகராகவும், அரசியல்வாதியாகவும் இருந்தனர். மேலும், அவருடைய குடும்பத்தில் ஒரே மகன் என்பதாலும், வீட்டில் அவருக்குச் செல்லம் அதிகமாகவே இருந்தது. இதனால் அவருக்குப் படிப்பில் அதிகளவு நாட்டம் செல்லவில்லை. இருப்பினும், கோவை அரசு கலைக் கல்லூரியில் பி.யூ.சி வரை படித்த அவர், பலருடன் நட்பாக இருந்தார். அப்பொழுது அவருக்கு அறிமுகமானவரே, சத்யராஜ் அவர்கள். கல்லூரியில் படிக்கும் போது, பல மேடை நாடகங்களால் ஈர்க்கப்பட்ட அவர், சில நாடகங்களில் நடிக்கவும் செய்திருக்கிறார்.
  திரையுலகப் பிரவேசம்
  பாரதிராஜாவின் ‘கிழக்கே போகும் ரயில்’ என்ற திரைப்படத்தால் பெரிதும் கவரப்பட்ட மணிவண்ணன் அவர்கள், 1௦௦ பக்கம் ரசிகர் மின்னஞ்சல் ஒன்றை பாரதிராஜாவிற்கு அனுப்பினார். அவரது உள்ளார்வமிக்கத் தாக்கத்தை உணர்ந்த பாரதிராஜா அவர்கள், அவரை சந்திக்க விரும்பியதால், சென்னை சென்றார், மணிவண்ணன். மேலும், 1979ல் பாரதிராஜா ‘கல்லுக்குள் ஈரம்’ என்ற படத்தை இயக்கும் போது, அவரைத் தன்னுடைய உதவியாளராக சேர்த்துக் கொண்டார். ‘நிழல்கள்’, ‘டிக் டிக் டிக்’, ‘காதல் ஓவியம்’, ‘அலைகள் ஓய்வதில்லை’, ‘ஆகாய கங்கை’, ‘லாட்டரி டிக்கெட்’, ‘நேசம்’ போன்ற படங்களுக்குக் கதாசிரியராகவும், வசனகர்த்தாவாகவும் பணிபுரிந்திருக்கிறார். ‘புதிய வார்ப்புகள்’, ‘கொத்த ஜீவிதாலு’ (தெலுங்கு), ‘கிழக்கே போகும் ரயில்’ (தெலுங்கு), ‘ரெட் ரோஸ்’ (ஹிந்தி) மற்றும் ‘லவ்வர்ஸ்’ (இந்தி) போன்ற படங்களில் பாரதிராஜாவின் உதவி இயக்குனராகப் பணிபுரிந்த அவர், பாரதிராஜாவின் ‘கொடிப் பறக்குது’ என்ற படத்தில் வில்லனாகத் திரையில் அறிமுகமானார்.
  திரையுலக வாழ்க்கை
  1982ல் வெளியான ‘கோபுரங்கள் சாய்வதில்லை’ என்ற படம், மணிவண்ணன் தமிழ் திரையுலகில் தனித்து இயக்கிய முதல் படமாகும். அதைத் தொடர்ந்து, ‘ஜோதி’ (1983), ‘வீட்டிலே ராமன் வெளியிலே கிருஷ்ணன்’ (1983), ‘இளமைக் காலங்கள்’ (1983), ‘குவாகுவா வாத்துக்கள்’ (1984), ‘ஜனவரி ஒன்னு’ (1984), ‘இங்கேயும் ஒரு கங்கை’ (1984), ‘இருபத்தி நாலு மணிநேரம்’ (1984), ‘நூறாவது நாள்’ (1984), ‘அன்பின் முகவரி’ (1985), ‘விடிஞ்சா கல்யாணம்’ (1986), ‘பாலைவன ரோஜாக்கள்’ (1986), ‘முதல் வசந்தம்’ (1986), ‘இனி ஒரு சுதந்திரம்’ (1987), ‘தீர்த்தக் கரையினிலே’ (1987), ‘புயல் படும் பாட்டு’ (1987), ‘கல்யான் கச்சேரி’ (1987), ‘ஜல்லிக்கட்டு’ (1987), ‘சின்ன தம்பி பெரிய தம்பி’ (1987), ‘கணம் கோர்ட்டார் அவர்களே’ (1988), ‘உள்ளத்தில் நல்ல உள்ளம்’ (1988), ‘மனிதன் மாறிவிட்டான்’, (1989), ‘வாழ்க்கை சக்கரம்’ (1990), ‘சந்தனக்காற்று’ (1990), ‘புது மனிதன்’ (1991), ‘தெற்குத் தெரு மச்சான்’ (1992), ‘கவர்மென்ட் மாப்பிள்ளை’ (1992), ‘மூன்றாவது கண்’ (1993), ‘அமைதிப்படை’ (1994), ‘வீரப்பதக்கம்’ (1994), ‘ராசாமகன்’ (1994), ‘தோழர் பாண்டியன்’ (1994), ‘கங்கை கரை பாட்டு’ (1995), ‘ஆண்டான் அடிமை’ (2001), ‘நாகராஜசோழன் எம்.ஏ.எம்.எல்.ஏ’ (2013) என ஐம்பது திரைப்படங்கள் இயக்கியுள்ளார். தற்போது, தனது 50-வது திரைப்படமான ‘நாகராஜசோழன் எம். ஏ.எம்.எல்.ஏ’ என்ற படத்தை இயக்கிமுடித்து, அதன் இசையையும் வெளியிட்டுள்ளார்.
  நடிகராக மணிவண்ணன்
  ஒரு உதவி இயக்குனராக தமிழ்த் திரையுலகில் நுழைந்த மணிவண்ணன், பாரதிராஜாவின் ‘கொடி பறக்குது’ என்ற படம் மூலமாக வில்லனாக அறிமுகமானார். அக்கதாபாத்திரம் நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்ததால், தொடர்ந்து 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அவர் இயக்கிய ‘அமைதிப்படை’ படத்தில் நடித்த கதாபாத்திரம் மக்களிடையே நன்மதிப்பைப் பெற்றதால், அவர் ‘கோகுலத்தில் சீதை’, ‘காதல் கோட்டை’, ‘அவ்வை சண்முகி’, ‘காதலுக்கு மரியாதை’, ‘ஜீன்ஸ்’, ‘பொற்காலம்’, ‘சங்கமம்’, ‘படையப்பா’, ‘முதல்வன்’, ‘துள்ளாத மனமும் துள்ளும்’, ‘முகவரி’, ‘ரிதம்’, ‘பார்த்தாலே பரவசம்’, ‘டும் டும் டும்’, ‘காசி’, ‘பிரியாத வரம் வேண்டும்’, ‘பம்மல் கே. சம்பந்தம்’, ‘பஞ்சதந்திரம்’, ‘வசீகரா’, ‘மஜா’, ‘சம்திங் சம்திங்… உனக்கும் எனக்கும்’, ‘ஆதி’, ‘சீனா தானா’, ‘சிவாஜி’, ‘குருவி’, ‘ராமன் தேடிய சீதை’, ‘தில்லாலங்கடி’, ‘வேலாயுதம்’ போன்ற பல்வேறு படங்களில் தனக்கென உரித்தான பாணியில் வசனங்களை சர்வசாதாரணமாக அவரது சிறப்பான நடிப்பில் வெளிப்படுத்தி, அவர் ஒரு சிறந்த இயக்குனர் மட்டுமின்றி மிகப்பெரிய நடிகர் என்பதையும் நிரூபித்துள்ளார். அவர், தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகர்களான சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜீத், விக்ரம் போன்றோருடன் இணைந்து நடித்துள்ளார்.
  இல்லற வாழ்க்கை
  மணிவண்ணன் அவர்கள், செங்கமலம் என்பவரை மணமுடித்தார். அவர்கள் இருவருக்கும் ஜோதி என்ற மகளும், ரகுவண்ணன் என்ற மகனும் உள்ளனர். அவரது மகனும் ஒரு நடிகரென்பது குறிப்பிடத்தக்கது.
  அரசியல் வாழ்க்கை
  மணிவண்ணன் அவர்கள், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் (ம.தி.மு.க.) அரசியல் கட்சியில் சேர்ந்தார். மேலும், 2006 ஆம் ஆண்டில் நடந்த சட்டமன்ற தேர்தலில், அக்கட்சிக்கு ஆதரவாகப் பிரச்சாரமும் மேற்கொண்டார்.
  இறப்பு
  இயக்குனராகத் தனது 50 வது படத்தை இயக்கி, அப்படத்தை வெளியிட்ட மணிவண்ணன் அவர்கள், தனது 58வது வயதில் மாரடைப்பால் சென்னை நெசப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் ஜூன் மாதம் 15 ஆம் தேதி, 2013 ஆம் ஆண்டில் காலமானார். அவரது விருப்பப்படி, அவரது உடல் தமிழ் ஈழக் கொடியால் மூடப்பட்டது.
  காலவரிசை
  1954: தமிழ்நாட்டில் இருக்கும் கோயம்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சூலூர் என்ற கிராமத்தில் ஆர். எஸ். மணியம் மற்றும் மரகதம் தம்பதியருக்கு மகனாக ஜூலை மாதம் 31 ஆம் தேதி, 1954 ஆம் ஆண்டில் பிறந்தார்.
  1979: பாரதிராஜா ‘கல்லுக்குள் ஈரம்’ என்ற படத்தை இயக்கம் போது, அவரைத் தன்னுடைய உதவியாளராக சேர்த்துக் கொண்டார்.
  1989: ‘கொடிப் பறக்குது’ என்ற படத்தில் வில்லனாகத் திரையில் அறிமுகமானார்.
  1982: ‘கோபுரங்கள் சாய்வதில்லை’ என்ற படம், மணிவண்ணன் தமிழ் திரையுலகில் தனித்து இயக்கிய முதல் படமாகும்.
  1994: அவர் இயக்கிய ‘அமைதிப்படை’ பெரும் திருப்புமுனையாக அமைந்தது.
  2006: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் (ம.தி.மு.க.) அரசியல் கட்சியில் சேர்ந்த அவர், 2006 ஆம் ஆண்டில் நடந்த சட்டமன்ற தேர்தலில், அக்கட்சிக்கு ஆதரவாகப் பிரச்சாரமும் மேற்கொண்டார்.
   
 5. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  7,082
  Likes Received:
  512
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  ஸ்ரீதேவி


  ஸ்ரீதேவி இந்திய திரைபடத் துறையில் ஒரு புகழ்பெற்ற நடிகை ஆவார்.1967 ஆம் ஆண்டு ‘கந்தன் கருணை’ என்ற தமிழ் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர், பாரதிராஜாவின் ‘16 வயதினிலே’ படத்தின் மூலம் பிரபலமான இவர், இந்தி, மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தன்னுடைய நடிப்புத் திறமையினால் அனைவருடைய மனதிலும் நீங்கா இடம் பிடித்த ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றி கீழே காண்போம்.
  பிறப்பு: ஆகஸ்ட் 13, 1963
  பிறப்பிடம்: சிவகாசி, தமிழ்நாடு (இந்தியா)
  பணி: திரைப்பட நடிகை
  நாட்டுரிமை: இந்தியா
  பிறப்பு:

  ஸ்ரீதேவி, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் விருதுநகர் மாவட்டதிலுள்ள சிவகாசியில் ஆகஸ்ட் 13, 1963 ஆம் ஆண்டு பிறந்தார்.
  ஆரம்ப வாழ்க்கை:
  ஸ்ரீதேவி தனது தந்தையை “லம்ஹே” திரைப்பட படப்பிடிப்பின் போதும் மற்றும் தாயை “ஜூடாய்” படப்பிடிப்பின்போதும் இழந்தார். அவருடைய பெற்றோர்களை இளம் பருவத்திலேயே இழந்ததால், சமுதாயத்தில் பல பிரச்சனைகளை சந்திக்கவேண்டியதாயிற்று. 1986 மற்றும் 1987 ஆம் ஆண்டுகளில் ஸ்ரீதேவியையும், பாலிவுட் நடிகர் மிதுன் சக்ரவர்த்தியையும் இணைத்து ஒரு சில வதந்திகள் பரவியது. ஆனால், மிதுன் சக்ரவர்த்தி அவரது மனைவி யோகிதா பாலியை விவாகரத்து செய்யவில்லை என்ற முடிவுக்கு வரவே அந்த பிரச்சனையும் அத்துடன் மறைந்தும்போனது. பின்னர், ஜூன் 2, 1996 ஆம் ஆண்டு ஸ்ரீதேவிக்கும், திரைப்பட தயாரிப்பாளரான போனி கபூருக்கும் திருமணம் நடைபெற்றது. ஸ்ரீதேவிக்கு, ஜான்வி மற்றும் குஷி என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். அவருடைய திருமணத்திற்கு பிறகு, அவருடைய மைத்துனனான(கணவனுடன் பிறந்த) அனில் கபூருடன் நிறைய படங்கள் நடித்துள்ளார்.
  திரைப்பட வாழ்க்கை:
  தமிழ் நாட்டில் பிறந்து இந்திய திரைப்படத்துறையில் புகழ்பெற்று விளங்கிய ஸ்ரீதேவி,1967-ல் ‘கந்தன் கருணை’ என்ற தமிழ் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.கதாநாயகியாக இவர் நடித்த முதல் திரைப்படம் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் 1976ல் வெளிவந்த ‘மூன்று முடிச்சு’.ஆரம்ப காலத்தில் கமலஹாசன், ரஜினிகாந்த் போன்றவர்களுடன் பல திரைப்படங்களில் நடித்த இவர், பின்னர் மலையாளத் திரைப்படங்களிலும் தன்னுடைய நடிப்புத் திறமையை வெளிப்படுத்தினார். ‘ஆலிங்கனம்’, ‘குட்டவும் சிக்க்ஷையும்’, ‘ஆத்யபாடம்’, ‘ஆ நிமிஷம்’ போன்றவை ஸ்ரீதேவியின் சிறந்த மலையாளத் திரைப்படங்கள் ஆகும்.
  இந்தி திரை உலகில் ஸ்ரீதேவி:
  1978 ஆம் ஆண்டு ஸ்ரீதேவிஇந்தி திரைப்படங்களில் அறிமுகமானார். ஆனால், இவர் நடித்த முதல் இந்தி திரைப்படமான “சோல்வா சாவன்” துரதிருஷ்டவசமாக வெற்றி பெறவில்லை. பின்னர், இவருடைய இரண்டாவது படமான “ஹிம்மத்வாலா” ஒரு பெரும் வெற்றியை தேடித்தந்ததோடு மட்டுமல்லாமல், இந்தி திரைப்படஉலகில் ஒரு நட்சத்திர அந்தஸ்தையும் பெற்றுத்தந்தது. அதன் பிறகு, அவருடைய “சத்மா” திரைப்படம் பெரும் புகழையும், பாராட்டுகளையும் தேடித்தந்தது.1980ஆம் ஆண்டு காலகட்டங்களில், இவர் ஒரு சிறந்த நடிகையென்று அனைவராலும் பாராட்டப்பெற்றார்.பின்னர், “சாந்தினி” திரைப்படம் பெரும் வெற்றியை தேடித்தந்தது மட்டுமல்லாமல், கோலிவுட்டில் அதிக சம்பளம் பெரும் நடிகைகளில் இவரும் ஒருவரென்ற அந்தஸ்தையும் தந்தது.
  பெரும் திருப்பத்தை ஏற்படுத்திய மூன்றாம் பிறை:
  பாலுமகேந்திராவின் இயக்கத்தில் 1983ஆம் ஆண்டு வெளிவந்த “மூன்றாம் பிறை” திரைப்படம், திரைப்பட உலகில் பல சாதனைகளைப்பெற்றது. இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இப்படத்தில் கமலுடன் மனநிலை பாதித்த ஒரு பெண்ணாக ஸ்ரீதேவி நடித்திருந்தார். இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சி, அனைவரையும் வியக்கவைத்தது மட்டுமல்லாமல், திரைப்பட உலகில் ஒரு புதிய பரிணாமத்தையும் ஏற்படுத்தியது எனவும் கூறலாம்.
  திருமண வாழ்க்கைக்குப் பிறகு:
  போனி கபூரை திருமணம் செய்துகொண்ட பிறகு சினிமாவைவிட்டு விலகியிருந்த ஸ்ரீதேவி, ஆறு ஆண்டுகள் கழித்து ஒன்றிரண்டு தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தார். பின்னர் 14 ஆண்டுகளுக்கு பிறகு “இங்கிலீஷ் விங்கிலிஷ்” திரைப்படத்தின் மூலம் மீண்டும் திரைப்படத் துறையில் கால்பதித்தார். இப்படம் தமிழிலும், இந்தியிலும் ஒரே நேரத்தில் தயாரிக்கப்பட்டு 2012 ஆம் அண்டு அக்டோபர் 5ஆம் தேதி வெளியிடப்பட்டது. பிறகு தெலுங்கிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.
  பத்மஸ்ரீ விருது:
  தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் தன்னுடைய நடிப்புத் திறமையை வெளிபடுத்திய ஸ்ரீதேவிக்கு,2013 ஆம் ஆண்டு குடியரசு தினத்தன்று மத்திய அரசால் “பத்மஸ்ரீ” விருது வழங்கப்பட்டது.
  விருதுகள்:
  • ‘பிலிம்பேர் விருது (தெற்கு)’–‘மீண்டும் கோகிலா’ என்ற தமிழ் படத்திற்காக வழங்கப்பட்டது.
  • சிறந்த நடிகைக்கான ‘பிலிம்பேர் விருது’,“சால்பாஸ்” திரைப்படத்திற்காக வழங்கப்பட்டது.
  • சிறந்த நடிகைக்கான ‘பிலிம்பேர் விருது’,“லம்ஹே” திரைப்படத்திற்காக வழங்கப்பட்டது.
  • ‘பிலிம்பேர் விருது’,“க்ஷன க்ஷனம்” என்ற தெலுங்கு படத்திற்காக வழங்கப்பட்டது.
  மற்ற விருதுகள்:
  • ‘நந்தி விருது’,“க்ஷன க்ஷனம்” என்ற தெலுங்கு படத்திற்காகவழங்கப்பட்டது.
  • “MAMI விருது” இந்தி சினிமாவில் இவருடைய சிறந்த பங்களிப்பிற்காகவழங்கப்பட்டது.
  • “வம்சி ஆர்ட்ஸ் தியேட்டர் இன்டர்நேஷனல்”மூலமாக ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ கிடைத்தது.
  • ‘டொராண்டோ’ சிறந்த நடிகைக்கான விருதினை“தேவராகம்” படத்திற்காக வழங்கியது.
  ஸ்ரீதேவியின் முக்கிய படைப்புகள்:
  தமிழ்:

  • நம் நாடு (1969)
  • குமார சம்பவம் (1969)
  • மூன்று முடிச்சு (1976)
  • காயத்ரி (1977)
  • கவிக்குயில் (1977)
  • மனிதரில் இத்தனை நிறங்களா (1978)
  • முடிசூடா மன்னன் (1978)
  • பைலட் பிரேம்நாத் (1978)
  • மூன்றாம் பிறை (1983)
  மலையாளம்:
  • குமார சம்பவம் (1969), முதல் மலையாள திரைப்படம்.
  • ஸ்வப்னங்கள் (1970)
  • பூம்பட்டா (1971)
  • தீர்த யாத்ரா (1972)
  • ஆசீர்வாதம் (1976)
  • அந்தர்தனம் (1977)
  • வேளாம்பல் (1977)
  • அவளுடே ராவுகள் (1978)
  • அம்மே நாராயணா (1984)
  • தேவராகம் (1996)
  தெலுங்கு
  • பங்காறக்க (1977)
  • எற்ற குலாபிழு (1978) (சிகப்பு ரோஜாக்கள்(தமிழ்) டப்பிங்)
  • கார்திகா தீபம் (1979)
  • வேட்டகாடு (1979)
  • அத்தகாடு (1980)
  • சுட்டளுன்னாரு ஜாகர்த்த (1980)
  • தேவ்டு இட்ச்சினா கொடுக்கு(1980)
  • கரான தொங்க (1980)
  • கக்க்ஷா (1980)
  • மாமா அல்லுல்லா சவால் (1980)
  இந்தி (பாலிவுட்)
  • ஹிம்மத்தவாலா (1983)
  • ஜஸ்டிஸ் சௌத்ரி (1983)
  • கலாக்கார் (1983)
  • சத்மா (1983)
  • இன்கிலாப் (1984)
  • ஜாக் உட்டா இன்சான் (1984)
  • நயா கதம் (1984)
  • மக்சத் (1984)
  • தோபா (1984)
  • பலிதான் (1985)
  • மாஸ்டர்ஜி (1985)
  • சர்ஃபரோஷ் (1985)
  • பகவான் தாதா (1986)
  • தர்ம அதிகாரி (1986)
  • நகினா (1986)
  • ஜான்பாஸ் (1986)(cameo)
  • கர்ம (1986)
  • சுஹாகன் (1986)
  • ஔலாத் (1987)
  • மிஸ்டர் இந்தியா (1987)
  • சால்பாஸ் (1989)
  • சாந்தினி (1989)
  • பந்ஜாரன் (1991)
   
 6. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  7,082
  Likes Received:
  512
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  சிவாஜி கணேசன்

  சிவாஜி கணேசன் அவர்கள், தென்னிந்தியாவின் ஒரு பெரிய நடிகராகவும், அரசியல்வாதியாகவும் இருந்தார். தனது குழந்தைப் பருவத்திலிருந்தே நடிப்பதில் பேரார்வம் கொண்ட அவர், அதில் தன்னைத் தீவிரமாக ஈடுபடுத்திக் கொண்டார். பின்னர், அவர் தெலுங்கில் ஒன்பது திரைப்படங்கள், கன்னடத்தில் ஒன்று, மலையாளத்தில் இரண்டு, ஹிந்தியில் இரண்டு திரைப்படங்கள் என முன்னூறுக்கும் மேற்பட்ட இந்திய திரைப்படங்களில் நடித்துள்ளார்.
  சிவாஜி கணேசன் அவர்களைப் பற்றி மேலும் தகவல் பெற, அவரது இந்த வாழ்க்கை வரலாற்றைத் தொடர்ந்துப் படிக்கவும்.
  பிறப்பு: 1 அக்டோபர் 1927
  பிறந்த இடம்: விழுப்புரம், தமிழ்நாடு, இந்தியா
  இறப்பு: 21 ஜூலை 2001
  தொழில்: நடிகர், அரசியல்வாதி
  நாட்டுரிமை: இந்தியா
  பிறப்பு:

  சிவாஜி கணேசன் அவர்கள், சின்னையா மன்றாயருக்கும், ராஜாமணி அம்மாளுக்கும் மகனாக விழுப்புரத்தில் 1 அக்டோபர் 1927 ஆம் ஆண்டு பிறந்தார். அவரது இயற்பெயர் விழுப்புரம் சின்னையாப்பிள்ளை கணேசன்.
  ஆரம்பகால வாழ்க்கை
  சிவாஜி கணேசன் அவர்கள், தனது இளம்வயதிலேயே நாடகங்களால் பெரிதும் ஈர்க்கப்பட்டதாலும், அதில் பங்கேற்பதில் ஆர்வம் இருந்ததாலும், தனது கனவினை நிறைவேற்ற ஒன்பது வயதிலேயே வீட்டை விட்டு ஓடிவந்தார். பின்னர், அவரது சொந்த அம்மாவே நாடகக் குழுவில் இடம் பெற உதவி செய்தார். சிவாஜி கணேசன் அவர்கள், கமலா என்பவரை மணமுடித்தார். அவர்களுக்கு ராம்குமார், பிரபு என்ற மகன்களும், சாந்தி, தேன்மொழி என்ற மகள்களும் உள்ளனர்.
  திரையுலக வாழ்க்கை:
  திரையுலகுக்கு வரும் முன், நாடகங்களில் நடித்த சிவாஜி கணேசன் அவர்கள், ‘இந்து ராஜ்ஜியம்’ என்ற நாடகம் மூலமாக மிகவும் பிரபலமானார். இதில் பேரரசர் சிவாஜியாக நடித்த அவரின், நடிப்புத் திறமையைத் தந்தைப் பெரியார் அவர்கள் பெரிதும் பாராட்டினார். அவர், அவரை ‘சிவாஜி கணேசன்’ என்றழைத்தார். இந்நிகழ்ச்சியே, அவருக்கு ‘சிவாஜி கணேசன்’ என்ற பெயரை நிலைக்கச் செய்தது.
  தமிழ்த் திரையுலகில், ‘பராசக்தி’ என்ற திரைப்படம் மூலமாக அறிமுகமான சிவாஜி கணேசன் அவர்கள், முன்னூறுக்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். அவர், இரண்டு ஹிந்தி திரைப்படங்கள், ஒன்பது தெலுங்குத் திரைப்படங்கள், மற்றும் ஒரு மலையாளத் திரைப்படத்திலும் நடித்துள்ளார். அவருக்குத் தெளிவான, உணர்ச்சிப் பூர்வமான தமிழ் உச்சரிப்பும், நல்ல குரல்வளமும், சிறந்த நடிப்புத் திறனும் இருந்ததால், ‘நடிகர் திலகம்’ என்றும், ‘நடிப்புச் சக்கரவர்த்தி’ என்றும் மக்களாலும், திரையுலகத்தினராலும் அழைக்கப்பட்டார்.
  அக்காலத்தில், தேசத் தலைவர்களின் பத்திரங்களை ஏற்றுத் திறம்பட நடித்த முக்கிய நடிகர்களுள் ஒருவர், சிவாஜி கணேசன் அவர்கள். ‘இராஜராஜ சோழன்’ மற்றும் ‘கப்பலோட்டிய தமிழன்’ ஆகிய திரைப்படங்களே இதற்கு சான்றாகும். ‘மனோகரா’, ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ போன்ற திரைப்படங்கள், இவரின் வீர வசனத்திற்காகப் பெயர்ப் பெற்றவை. ‘பாசமலர்’, ‘வசந்த மாளிகை’ போன்ற திரைப்படங்களில் இவரது உணர்ச்சிப்பூர்வமான நடிப்பைக் காணலாம். ‘கந்தன் கருணை’, ‘திருவிளையாடல்’, ‘சரஸ்வதி சபதம்’ போன்ற பக்தித் திரைப்படங்களும் பெரிதும் பேசப்பட்டவை.
  அரசியல் வாழ்க்கை
  அரசியலில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்த சிவாஜி கணேசன் அவர்கள், 1955 வரை திராவிட இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். 1961ல், காங்கிரஸ் கட்சியில் இணைந்து செயல்பட்டார். 1982ல் நாடாளுமன்றத்தின் மேலவை உறுப்பினரானார். பின்னர், கட்சியில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, 1987ல் கட்சியை விட்டு விலகி, ‘தமிழக முன்னேற்ற முன்னணி’ என்ற புதிய கட்சியைத் தொடங்கினார். பெரும்நடிகராக இருந்தாலும், அவருக்கு அரசியலில் எம்.ஜி.ராமச்சந்திரன் போல செல்வாக்குக் கிடைக்கவில்லை. ஆகவே, தனது இறுதிக்காலத்தில் அரசியலிலிருந்து ஒதுங்கியிருந்தார்.
  விருதுகள்:
  1960 – ஆப்பிரிக்க-ஆசியத் திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்கான விருது கிடைத்தது.
  1966 – பத்ம ஸ்ரீ விருது
  1984 – பத்ம பூஷன் விருது
  1995 – செவாலியே விருது (Chevalier)
  1997 – தாதா சாகேப் பால்கே விருது
  1962 – சிறப்பு விருந்தினராக அமெரிக்க நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, நயாகரா மாநகரின் ‘ஒரு நாள் நகரத் தந்தை’ என கௌரவிக்கப்பட்டார்.
  இறப்பு
  தென்னிந்திய திரைப்படத் துறையில், சிறந்த நடிகராக விளங்கிய சிவாஜி கணேசன் அவர்கள், சுவாசப் பிரச்சினைக் காரணமாக, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, ஜூலை 21, 2001 ஆம் ஆண்டு தனது 74வது வயதில் மரணமடைந்தார்.
   
 7. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  7,082
  Likes Received:
  512
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  மோகன்லால்

  மோகன்லால் விஸ்வநாதன் நாயர்’ என்ற இயற்பெயர் கொண்ட மோகன்லால் ஒரு புகழ் பெற்ற மலையாள திரைப்பட நடிகர் ஆவார். இந்திய திரைப்படத் துறையில் முதன்மையான விருதாக கருதப்படும் “தேசிய திரைப்பட விருதை” நான்கு முறையும், ஒன்பதுக்கும் மேல் “பிலிம்பேர்” விருதையும், பலமுறை “கேரள மாநில அரசு விருதையும்”, மற்றும் இந்திய அரசால் வழங்கப்படும் நாட்டின் நான்காவது உயரிய குடியியல் விருதான “பத்ம ஸ்ரீ” விருதையும் பெற்று தென்னிந்திய திரைப்படத்துறையில் புகழ்பெற்று விளங்குபவர். இத்தகைய சிறப்புப் பெற்றுத் திகழும் மாபெரும் நடிகர் மோகன்லாலின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை விரிவாக காண்போம்.
  பிறப்பு: மே 21, 1960
  இடம்: இலந்தூர் (பத்தனம்திட்ட மாவட்டம்), கேரளா
  பணி: திரைப்பட நடிகர், தயாரிப்பாளர் மற்றும் தொழிலதிபர்.
  நாட்டுரிமை: இந்தியா
  பிறப்பு:
  மோகன்லால் அவர்கள், 1960 ஆம் ஆண்டு மே மாதம் 21 ஆம் நாள் இந்தியாவின் கேரளா மாநிலத்தின் பத்தனம்திட்ட மாவட்டத்திலுள்ள இலந்தூர் என்ற இடத்தில் விஸ்வநாதன் நாயருக்கும், சாந்தகுமாரிக்கும் மகனாகப் பிறந்தார். இவருடைய இயற்பெயர் மோகன்லால் விஸ்வநாதன் நாயர்.
  ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி:
  முடவன்முகளிலுள்ள எல்.பி பள்ளியில் தன்னுடைய ஆரம்ப கல்வியை தொடர்ந்த அவர், பின்னர் திருவனந்தபுரத்தில் உள்ள மாடன் பள்ளியில் கல்வி கற்றார். பள்ளியில் படிக்கும் பொழுதே இவருக்கு நடிப்பதில் ஆர்வம் இருந்ததால், பள்ளியில் அவ்வப்போது நடைபெற்ற நாடகங்களில் ஆர்வமுடன் பங்கேற்றார். பிறகு “மகாத்மா காந்தி கல்லூரியில்” தன்னுடைய பட்டப்படிப்பை முடித்தார்.
  திரைப்படத் துறையில் மோகன்லாலின் பங்கு:
  1978 ஆம் ஆண்டு திரைப்பட வாழ்க்கையை தொடங்கிய மோகன்லால் அவர்களின் முதல் திரைப்படமான “திறநோட்டம்” பல காரணங்களால் ஒரு சில இடங்களில் மட்டும் வெளியிடப்பட்டது. பின்னர், 1980ல் வெளியான “மஞ்சில் விரிஞ்ச பூக்கள்” மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது எனலாம். அதன் பிறகு பல படங்களில் நடித்த மோகன்லாலுக்கு, 1986ல் வெளிவந்த “டி.பி பாலகோபாலன் எம். ஏ” என்ற திரைப்படம் இவருக்கு “கேரள அரசின் சிறந்த நடிகருக்கான விருதை” பெற்றுத் தந்தது. ‘ராஜாவின்டே மகன்’, ‘சன்மனசுள்ளவர்களுக்கு சமாதானம்’, ‘காந்தி நகர் செகண்ட் ஸ்ட்ரீட்’, ‘நாடோடிக்கட்டு’, ‘வரவேல்பு’, ‘சித்ரம்’, ‘தூவானத்தும்பிகள்’, ‘தாழ்வாரம்’ போன்ற பல வெற்றிப் படங்களை வழங்கி மலையாளத் திரையுலகில் சூப்பர்ஸ்டாராக வலம்வந்தார் என கூறலாம்.
  தொடர்ந்து பல வெற்றிப்படங்களை தந்த மோகன்லாலுக்கு, 1989ஆம் ஆண்டு வெளிவந்த “கிரீடம்” திரைப்படம் இவருக்கு தேசியவிருதை பெற்றுத்தந்தது. பின்னர், 1991ஆம் ஆண்டு வெளிவந்த “பாரதம்” என்ற திரைப்படத்தில் இவருடைய நடிப்பைப் பாராட்டி மீண்டும் ஒரு “தேசிய விருது” தேடிவந்தது. இதைத் தொடர்ந்து ‘ஹிஸ் ஹைனெஸ் அப்துல்லாஹ்’, ‘முதுனம்’, ‘ஸ்படிகம்’, ‘மணிசித்திரத்தாழ்’, ‘கலாபானி’, ‘கண்மடம்’ போன்ற வெற்றிப் படங்களை வழங்கி, மலையாளத் திரைப்பட உலகின் மாபெரும் கதாநாயகனாக தன்னை நிலைப்படுத்திக்கொண்டார். 1999 ஆம் ஆண்டு, ஷஜ்ஜி என் கருன் இயக்கத்தில் வெளிவந்த “வானபிரஸ்தம்” திரைப்படம் சிறந்த நடிகருக்கான மற்றுமொரு “தேசிய விருதை” இவருக்கு பெற்றுத்தந்தது.
  பிறமொழி திரைப்படங்களில் மோகன்லாலின் பங்கு:
  மோகன்லால் அவர்கள், மலையாள மொழி திரைப்படங்களில் மட்டுமல்லாமல், தமிழ், இந்தி, கன்னடம் மற்றும் தெலுங்கு மொழித்திரைப்படங்களிலும் நடித்துள்ளார். 1997 ஆம் ஆண்டு, மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த “இருவர்” என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்திருந்தார். பின்னர், தன்னுடைய முதல் பாலிவுட் படமான “கம்பெனியில்” நடித்து, இந்தி மொழியில் முத்திரைப் பதித்தார். ‘கோபுர வாசலிலே’ (தமிழ்), ‘இருவர்’ (தமிழ்), ‘உன்னைப்போல் ஒருவன்’ (தமிழ்), ‘காண்டீவம்’ (தெலுங்கு), ‘லவ்’ (கன்னடா), ‘ராம் கோபால் வர்மா கி ஆக்’ (இந்தி), ‘தேஜ்’ (இந்தி) போன்ற இவருடைய பிறமொழி படங்களாகும்.
  விருதுகள்:
  • 1989ல் சிறந்த நடிகருக்கான ஜூரி விருது (தேசிய விருது) “கிரீடம்” திரைப்படத்திற்காக வழங்கப்பட்டது.
  • 1991ஆம் ஆண்டு “பாரதம்” என்ற திரைப்படத்தில் இவருடைய நடிப்பைப் பாராட்டி “தேசிய விருது” வழங்கப்பட்டது.
  • 2000ல் சிறந்த நடிகருக்கான தேசிய விருது “வானபிரஸ்தம்” என்ற திரைப்படத்திற்காக வழங்கப்பட்டது.
  • 2000ல் சிறந்த படம் மற்றும் இயக்குநருக்காக “தேசிய விருது” “வானபிரஸ்தம்” என்ற திரைப்படத்திற்காக வழங்கப்பட்டது.
  • 2001 ல் மத்திய அரசால் “பத்ம ஸ்ரீ” விருது வழங்கப்பட்டது.
  • 2010ல் ‘ஸ்ரீ சங்கராசார்யா சமஸ்கிருத பல்கலைக்கழகம்’ மூலம் ‘கௌரவ டாக்டர் பட்டம்’ வழங்கப்பட்டது.
  • சிறந்த நடிகருக்கான “கேரள மாநில அரசின் விருது” ஒன்பது முறை இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
  • சிறந்த நடிகருக்காக “பிலிம்பேர் விருது” பத்து முறைக்கும் மேல் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
  • இந்திய திரைப்படத்துறை, இவரை கௌரவிக்கும் வகையில் “லெஃப்டினென்ட் காலோனஸ்” பதவியை வழங்கியது.
   
 8. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  7,082
  Likes Received:
  512
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  ஹேமமாலினி

  இந்தித் திரைப்பட உலகில் இருபது வருடத்திற்கு மேல் “கனவுக் கன்னியாக” ரசிகர்களை வியக்க வைத்தவர், ஹேமமாலினி. தமிழ்நாட்டில் பிறந்து, மும்பைக்கு இடம் பெயர்ந்து, இந்தித் திரையுலகில் வெற்றிக் கொடி நாட்டிய அவர், பரதநாட்டிய கலையிலும் சிறந்து விளங்கினார். அனந்தசாமி தயாரித்த “சப்னோ கா சௌதாகர்” என்ற இந்தித் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி, பல ஆண்டுகள் ரசிகர்கள் மனதில் கனவுக் கன்னியாக வளம்வந்த ஹேமமாலினியின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை விரிவாகக் காண்போம்.
  பிறப்பு: அக்டோபர் 16, 1948
  இடம்: திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு(இந்தியா)
  பணி: திரைப்பட நடிகை
  புனைப்பெயர்: கனவுக் கன்னி
  முதல் திரைப்படம்: “சப்னோ கா சௌதாகர்”
  பிறப்பு:

  ஹேமமாலினி அவர்கள், இந்தியாவின் தமிழ்நாடு மாவட்டத்தில் அமைந்துள்ள திருச்சிராப்பள்ளியில் அக்டோபர் 16, 1948 ஆம் ஆண்டு சக்கரவர்த்திக்கும், ஜெயாவிற்கும் மகளாக பிறந்தார். இவருடைய தந்தை இன்சூரன்ஸ் கார்ப்பரேஷனில் அதிகாரியாகவும், தாய் சமூக சேவகராகவும் பணிபுரிந்து வந்தனர்.
  ஆரம்ப வாழ்க்கை:
  தந்தை தில்லியில் வேலைப்பார்த்து வந்ததால், ஹேமமாலினியின் பள்ளிப்படிப்பு அங்கேயே தொடங்கியது. அவர் பள்ளிப்படிப்போடு, பரதநாட்டியமும் கற்றுக்கொண்டார். பின்னர், அவருடைய தந்தைக்கு சென்னைக்கு பணிமாற்றம் கிடைத்ததால், ஹேமமாலினி தன்னுடைய நடனக் கலையை சென்னையில் தொடர்ந்தார்.
  திரைப்பட வாழ்க்கை:
  1963-ல் “இது சத்தியம்” என்ற திரைப்படத்தில் ஹேமமாலினியின் நடனம் இடம்பெற்றது. பின்னர், அவருடைய நடனத்தைப் பார்த்த அனந்தசாமி, அவருடைய “சப்னோ கா சௌதாகர்” என்ற இந்திப் படத்தில் ஹேமாவை அறிமுகம் செய்யத் தீர்மானித்தார். அதன் மூலம் “சப்னோ கா சௌதாகர்” என்ற இந்தித் திரைப்படத்தில் கதாநாயகியாக ஹேமமாலினி அறிமுகமானார். இப்படத்தின் கதாநாயகன் ராஜ்கபூர். படம் எதிர்ப்பார்த்த அளவிற்கு வெற்றியைத் தரவில்லை என்றாலும், ஹேமமாலினியின் தோற்றமும், நடிப்பும், நடமும் ரசிகர்களைக கவர்ந்தது எனலாம். பின்னர், தேவ் ஆனந்துடன் “ஜானி மேரா நாம்” என்ற திரைப்படத்தில் நடித்தார். இந்தப் படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றதால், ஹேமமாலினியைத் தேடிப் பல படங்கள் வந்தன. ரசிகர்களின் “கனவுக் கன்னியாக” மாறிப்போன அவர், இந்தி நடிகைகளில் நம்பர் ஒன் இடத்தையும் பிடித்தார்.
  ஹேமமாலினி, மீண்டும் தேவ் ஆனந்துடன் இணைந்து “தேரே மேரே சப்னே” என்ற திரைபடத்தில் நடித்தார். பின்னர், தர்மேந்திரா மற்றும் சஞ்சீவ் குமாருடன், ஹேமமாலினி இரட்டை வேடத்தில் நடித்து வெளிவந்த “சீதா ஔர் கீதா” என்ற திரைப்படம் பெரும் வெற்றியைப் பெற்றது. 1970-80 ஆம் ஆண்டுகளில் பல வெற்றிப்படங்களில் நடித்திருந்தாலும், 1975 ஆம் ஆண்டு வெளிவந்த “ஷோலே” திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை தேடித்தந்தது. ஹேமமாலினி, தர்மேந்திரா, சஞ்சீவ்குமார், அமிதாப் பச்சன், அம்ஜத்கான், ஜெயபாதுரி ஆகியோர் நடித்த இப்படம் மும்பையில் ஒரு தியட்டரில் ஐந்தாண்டுகள் ஓடி சாதனைப் படைத்தது. இப்படத்தின் வெற்றி, ஹேமமாலினியை புகழின் உச்சிக்கே கொண்டு சென்றது என கூறலாம். கமலுடன் இணைந்து “ஹேராம்” மற்றும் “தசாவதாரம்” போன்ற தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
  ஹேமமாலினி நடித்த திரைப்படங்கள்:
  100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள ஹேமமாலினி அவர்கள், சுமார் 25 ஆண்டுகாலம் இந்தித் திரைப்பட உலகில் புகழோடு விளங்கியுள்ளார். ஹேமமாலினி நடித்த திரைப்படங்களில் சில, ‘பாண்டவ வனவாசம்’, ‘சப்னோ கா சௌதாகர்’, ‘வாரிஸ்’, ‘ஜஹான் பியார் மிலே’, ‘தும் ஹசீன் மெய்ன் ஜவான்’, ‘ஷராஃபத்’, ‘ஆண்சூ ஔர் முஸ்கான்’, ‘ஜானி மேரா நாம்’, ‘பராயா தன்’, ‘நயா ஜமானா’, ‘லால் பத்தர்’, ‘அந்தாஸ்’, ‘தேரே மேரே சப்னே’, ‘சீதா ஔர் கீதா’, ‘ராஜா ராணி’, ‘கோறா ஔர் காலா’, ‘கரம் மசாலா’, ‘பாய் ஹோ தொ அய்ஸா’, ‘பாபுல் கி கல்யான்’, ‘ஷெரீஃப் பத்மாஷ்’, ‘பிரேம் பர்வத்’, ‘சுப்பா ருஸ்தம்’, ‘கெஹரி சால்’, ‘ஜுக்னு’, ‘ஜோஷீலா’, ‘துல்ஹன்’, ‘அமீர் கரிப்’, ‘தோஸ்த்’, ‘பிரேம் நகர்’, ‘பத்தர் ஔர் பாயல்’, ‘ஹாத் கி சஃபாயி’, ‘தர்மாத்மா’, ‘குஷ்பு’, ‘பிரதிக்யா’, ‘ஷோலே’, ‘ஷராஃபத் சோட தி மேனே’, ‘நாச் உடே சன்சார்’, ‘சாரஸ்’, ‘டஸ் நம்பரி’, ‘மெஹபூபா ஜானேமன்’, ‘ஷிரிடி கே சாய் பாபா’, ‘ட்ரீம் கேர்ள்’, ‘தில் கா ஹீரா’, ‘தி பர்னிங் ட்ரைன்’, ‘அலிபாபா ஔர் 40 சோர்’, ‘கிரான்த்தி’, ‘மேரி அவாஸ் சுனோ’, ‘சத்தே பெ சத்தா’, ‘தேஷ் ப்ரேமி’, ‘ரசியா சுல்தான்’, ‘அந்தா கானூன்’, ‘ஹம் தோனோ’, ‘சிதாபூர் கி கீதா’, ‘ஜமை ராஜா’, ‘ஹே ராம்’, ‘சென்சார்’, ‘அமன் கெ பரிஷ்தே’, ‘பாக்பான்’, ‘வீர்-சாரா’, ‘பாக்மதி’, ‘கங்கா’ மற்றும் ‘லாகா சுனரி மே டாக்’.
  திருமண வாழ்க்கை:
  ஹேமமாலினியை மணக்க பல நடிகர்கள் போட்டிப்போட்டனர். அவர்களில் தர்மேந்திரா, சஞ்சீவ்குமார் மற்றும் ஜித்தேந்திரா ஆகியோர் முக்கியமானவர்கள் ஆவார். இறுதியில் தர்மேந்திராவை திருமணம் செய்து கொண்டார். ஏற்கனவே திருமணம் ஆனவர் என்றாலும் அவருடைய காதலை ஏற்றுக்கொண்டார். இவர்களுக்கு இஷா மற்றும் ஆஷா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்.
  விருதுகள்:
  • 1999 ஆம் ஆண்டு “சீதா ஔர் கீதா” என்ற திரைபடத்திற்காக சிறந்த நடிகைக்கான “ஃபிலிம்பேர் வாழ்நாள் சாதனையாளர் விருது” வழங்கப்பட்டது.
  • இந்தியாவின் நான்காவது மிகப் பெரிய விருதான “பத்மஸ்ரீ விருது”, 2000 ஆம் ஆண்டு மத்திய அரசால் வழங்கப்பட்டது.
  • வாழ்நாள் சாதனையாளருக்கான “ஜீ சினி விருது” 2003ல் வழங்கப்பட்டது.
  • “ஸ்டார் ஸ்கிரீன் விருது” (அமிதா பச்சன் உடன்) “பாக்பன்” ஜோடி நம்பர் ஒண்ணுக்காக வழங்கப்பட்டது.
  • 2003 ஆம் ஆண்டு ‘பாலிவுட் திரைப்பட சாதனையாளர் விருது’ வழங்கப்பட்டது.
  • இந்திய பொழுதுபோக்குத்துறையில் ஹேமமாலினியின் பங்களிப்பைப் பாராட்டி, வர்த்தக இந்திய சேப்பர் கூட்டமைப்பு மற்றும் இன்டஸ்ட்ரி (FICCI) அமைப்பு மூலமாக “வாழும் வரலாறு விருது” 2004 ஆம் ஆண்டில் வழங்கப்பட்டது. (இவ்விருது, வாழும்போதே தன்னுடைய வாழ்க்கை வரலாற்றைப் பதிவு செய்தவர்களுக்கு வழங்கப்படும் விருதாகும்).
  • இந்திய சினிமாவில் ஹேமமாலினியின் சிறப்பான பங்களிப்பை பாராட்டும் விதத்தில் நார்வே அரசு, ஹேமமாலினியின் அஞ்சல் தலையை வெளியிட்டது.
  ஏறத்தாழ 25 ஆண்டுகாலம் இந்தித் திரைப்பட உலகில் புகழோடு விளங்கிய ஹேமமாலினி அவர்களுடைய சாதனைகளும், அவர் பெற்ற புகழும் மகத்தானவையே!!!
   
 9. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  7,082
  Likes Received:
  512
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  மம்முட்டி

  முகமது குட்டி’ என்ற இயற்பெயர் கொண்ட ‘மம்முட்டி’, ஒரு புகழ்பெற்ற மலையாள நடிகராவார். மலையாளம், தமிழ் மற்றும் இந்தி என சுமார் 300 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ள அவர், இந்திய திரைப்படத் துறையில் முதன்மையான விருதாக கருதப்படும் “தேசிய திரைப்பட விருதை” மூன்று முறையும், கேரள அரசின் விருதை மூன்று முறைக்கு மேலும், ஏழு முறைக்கும் மேல் ‘ஃபிலிம்பேர் விருதையும், மத்திய அரசின் “பத்ம ஸ்ரீ” விருது மற்றும் பல விருதுகளையும் பெற்று, மலையாள திரையுலகின் மாபெரும் நடிகனாக விளங்குகிறார். மம்முட்டியின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை மேலும் விரிவாகக் காண்போம்.
  பிறப்பு: செப்டம்பர் 07, 1951
  இடம்: செம்பு (கோட்டயம் மாவட்டம்), கேரளா மாநிலம், இந்தியா
  பணி: மலையாள திரைப்பட நடிகர்.
  நாட்டுரிமை: இந்தியா
  பிறப்பு:
  மம்முட்டி அவர்கள், 1951 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 7 ஆம் நாள் இந்தியாவின் கேரளா மாநிலத்தில் கோட்டயம் மாவட்டத்திலுள்ள செம்பு என்ற இடத்தில் இஸ்மாயில் என்பவருக்கும், பாத்திமாவுக்கும் மகனாக ஒரு முஸ்லீம் குடும்பத்தில் பிறந்தார். இவருடைய இயற்பெயர் முகமது குட்டி.
  ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி:
  1960 ஆம் ஆண்டுக்கு பிறகு அவருடைய குடும்பம் எர்ணாகுளம் என்ற இடத்திற்கு குடிபெயர்ந்தது. தன்னுடைய ஆரம்ப கல்வியை புனித ஆல்பர்ட்ஸ் பள்ளி மற்றும் எர்ணாகுளம் அரசுப் பள்ளியில் முடித்த அவர், கொச்சியிலுள்ள மகராஜாஸ் கல்லூரியில் பட்டப்படிப்பைத் தொடங்கினார். பின்னர், எர்ணாகுளம் அரசு சட்டக்கல்லுரியில் சட்டம் பயின்ற அவர், மஞ்சேரியில் இரண்டு ஆண்டுகள் சட்டப்பயிற்சியும் மேற்கொண்டார்.
  திரைப்பட வாழ்க்கை:
  தன்னுடைய கல்லூரிப் பருவத்திலேயே நடிக்கத் தொடங்கிய மம்முட்டி அவர்கள், 1971ல் “அனுபவங்கள் பாலிச்சகள்” மற்றும் “காலச்சக்கரம்” போன்ற திரைப்படங்களில் ஒரு சில கதாபாத்திரத்தில் நடித்தார். ஆனால், அந்த கதாபாத்திரங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெற்றுத்தரவில்லை. பிறகு, எம்.டி. வாசுதேவன் இயக்கத்தில் “தேவலோகம்” என்ற திரைப்படத்தில் ஒரு முன்னணி கதாபத்திரத்தில் நடித்தார். இந்த திரைப்படமும் பல காரணங்களால் வெளியிடப்படவில்லை.
  1980 ஆம் ஆண்டு எம்.டி. வாசுதேவன் நாயர் இயக்கத்தில் வெளிவந்த “வீல்கணுண்டு ஸ்வப்ணங்கள்” திரைப்படம், இவருக்கு ஒரு பெரிய தொடக்கமாக இருந்தது எனலாம். பின்னர் ‘மேலா’, ‘திருஸ்னா’ போன்ற திரைப்படங்கள் அவருக்கு மலையாளத் திரைப்பட உலகில் ஒரு கதாநாயன் அந்தஸ்த்தை பெற்றுத்தந்தது. அதன் பிறகு, இவர் ஏற்று நடித்த கதாபத்திரங்களும், திரைப்படங்களும் மாபெரும் வெற்றியை பெற்றது மட்டுமல்லாமல், இவருக்கு திரைப்படப் துறையில் பெரும் புகழும் பெற்றுத்தந்தது. ‘அஹிம்சா’, ‘யவனிகா’, ‘கூடேவிதே’, ‘ஆ ராத்திரி’, ‘ஆள்கூட்டத்தில் தனியே’, ‘ஆதியொழுக்குகள்’, ‘யாத்திரா’, ‘நிறக்கூட்டு’, ‘தனியாவர்தனம்’, ‘நியூ டெல்லி’, ‘சிபிஐ டைரி குறிப்பு’, ‘ஜகார்த்தா’, ‘சேதுராம ஐயர் சிபிஐ’, ‘நேரரியன் சிபிஐ’, ‘அக்ஷரங்கள்’, ‘சுக்ரதம்’ போன்ற திரைப்படங்கள் மாபெரும் வெற்றியைப் பெற்றத் தந்தது.
  தேசிய விருதுகள்:
  1989 ஆம் ஆண்டு, டி. ஹரிஹரன் இயக்கத்தில் வெளிவந்த “வடக்கன் வீரக்கதா” மற்றும் 1990 ஆம் ஆண்டு கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த “மதிலுகள்” திரைப்படம் மம்முட்டியின் திரைப்பட வாழ்கையில் ஒரு மாபெரும் வெற்றியைப் பெற்றத் தந்தது எனலாம். இந்திய திரைப்படத்துறையில் உயர்ந்த விருதான “தேசிய விருதை” இவ்விரண்டு திரைப்படங்களும் அவருக்கு பெற்றுத்தந்தன. பிறகு, 1994 ஆம் ஆண்டு வெளிவந்த “பொந்தன் மாடா” மற்றும் ‘விதேயன்’ திரைப்படங்கள் இரண்டாவது “தேசிய விருதையும்” மற்றும் 2000 ஆம் ஆண்டு வெளிவந்த “டாக்டர் பாபா சாஹேப் அம்பேத்கார்” திரைப்படம் மூன்றாவது தேசிய விருதையும் இவருக்கு பெற்றுத்தந்தது. மேலும் ‘முருகயா’, ‘மஹாயனம்’, ‘அமரம்’, ‘வாட்சல்யம்’, ‘ராஜமாணிக்கம்’, ‘மாயாவி’ போன்ற திரைப்படங்கள் மாபெரும் வெற்றியைப் பெற்றது மட்டுமல்லாமல், பல விருதுகளையும் அவருக்குப் பெற்றுத்தந்தன.
  பிறமொழித் திரைப்படங்கள்:
  மம்முட்டி அவர்கள், மலையாள திரைப்படத்தில் மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். 1989ல் கே.மது இயக்கத்தில் வெளிவந்த “மௌனம் சம்மதம்” என்ற திரைப்படத்தில் முதன் முதலில் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். பின்னர், பல படங்களில் தன்னுடைய நடிப்பால் தமிழ் திரைப்பட ரசிகர்களின் நெஞ்சிலும் இடம்பிடித்தார். ‘அழகன்’, ‘தளபதி’, ‘கிளி பேச்சு கேட்கவா’, ‘அரசியல்’, ‘ஆனந்தம்’, ‘எதிரும் புதிரும்’, ‘கார்மேகம்’, ‘ஜாக்பாட்’, ‘மக்கள் ஆட்சி’, ‘மறுமலர்ச்சி’, ‘ராஜா போக்கிரி ராஜா’, ‘விஷ்வ துளசி’, ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’, ‘பழசி ராஜா’ போன்றவை மம்முட்டி நடித்த தமிழ் திரைப்படங்கள் ஆகும். “திரியத்திரி” என்ற திரைப்படத்தின் மூலம் இந்தியில் அறிமுகமான அவர், 2000 ஆம் ஆண்டு வெளிவந்த “டாக்டர் பாபா சாஹேப் அம்பேத்கார்” என்ற திரைப்படத்தின் மூலம் தேசிய அளவிலான பேரையும், புகழையும் அடைந்தார் எனலாம்.
  சமூகப்பணிகள்:
  மம்முட்டி அவர்கள், சினிமாவில் மட்டுமல்லாமல் நிஜத்திலும் ஒரு நல்ல மனிதன் தான் என்பதை பல சமூக பணிகளில் மூலம் நிருபித்துள்ளார். கேரளாவிலுள்ள “பெயின் அண்ட் பல்லியேடிவ் கேர் சொசைட்டி” அறக்கட்டளை அமைப்பின் உறுப்பினராக இருக்கிறார். இந்த அமைப்பு வலி மற்றும் நோய்ப் தணிப்பு கவனிப்பு மையமாக செயல்படுகிறது. மக்களுக்கு பலவகையான முறையில் நன்மைபயக்கும் “ஜீவன் ஜோதியில்” தூதராக இருக்கிறார். குழந்தைகள் நலனை பாதுகாக்கும் “இந்திய தெருமுனை இயக்கத்தில்” நல்லெண்ணத் தூதராக இருக்கிறார். “காழ்ச்சா இலவச கண் பாதுகாப்பு மற்றும் சிகிச்சை” அமைப்பின் மூலமாக பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். இதுமட்டுமல்லாமல், பல சமூக அமைப்புகள் மூலமாக சமூகத்தில் புறக்கணிக்கப்பட்ட மற்றும் அடித்தட்டு மக்களுக்கு பல உதவிகளை செய்து வருகிறார்.
  பிறப்பணிகள்:
  “அக்க்ஷயா தகவல் தொழில்நுட்ப விரிவாக்க திட்டத்தில்” நல்லெண்ணத் தூதராக நியமிக்கப்பட்டார். ‘சேனல் வீ’, ‘கைராலி டிவி’ மற்றும் ‘பீப்பிள் டிவி’ போன்றவற்றில் மலையாள தகவல் தொடர்பின் தலைவராக நியமிக்கப்பட்டார். 2006 ஆம் ஆண்டு “சவுத் இந்தியன் பேங்கின்” உலகளாவிய வணிக தூதராக நியமிக்கப்பட்டார்.
  விருதுகளும், அங்கீகாரங்களும்:
  • 1994 ஆம் ஆண்டு “பொந்தன் மாடா” மற்றும் “விதேயன்” என்ற திரைப்படங்களுக்காக “தேசிய விருது” வழங்கப்பட்டது.
  • 1998 ஆம் ஆண்டு இந்திய அரசால் “பத்மஸ்ரீ” விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.
  • 2000 ஆம் ஆண்டு வெளிவந்த “டாக்டர் பாபா சாஹேப் அம்பேத்கார்” திரைப்படம் மூன்றாவது தேசிய விருதையும் இவருக்கு பெற்றுத்தந்தது.
  • ‘ஆதியொழுக்குகள்’ (1984), ‘யாத்ரா’ (1985), ‘மதிலுகள்’ (1990), ‘அமரம்’ (1991), ‘பூதக்கண்ணாடி’ (1997), ‘ஆர்யன்னகலுடேவீடு’ (2001), ‘காழ்ச்சா’ (2004), ‘கருத்த பக்சிகள்’ (2006) போன்ற திரைப்படங்களுக்காக சிறந்த நடிகருக்கான “ஃபிலிம்பேர் விருது” வழங்கப்பட்டது.
  • ‘அஹிம்சா’ (1981), ‘ஆதியொழுக்குகள்’ (1984), ‘யாத்ரா’ (1985), ‘நிறக்கூட்டு’ (1985), ‘ஒருவடக்கன்’ (1989), ‘வீரக்காத’ (1989), ‘மரிகயா’ (1989), ‘மகாயனம்’ (1989), ‘விதேயன்’ (1993), ‘பொந்தன் மடா’ (1993), ‘வால்சல்யம்’ (1993), ‘காழ்ச்சா’ (2004), போன்ற திரைப்படங்களுக்காக “கேரள மாநில திரைப்பட விருதுகள்” வழங்கப்பட்டது.
  • 2010 ஆம் ஆண்டு கேரளா பல்கலைகழகம் மற்றும் கோழிகோடு பல்கலைக்கழகங்கள் இவருக்கு ‘டாக்டர் பட்டம்’ வழங்கி கௌரவித்தது.
  • ‘யவனிகா’(1982), ‘சுக்ருதம்’(1994), ‘பூதக்கண்ணாடி’ (1997) போன்ற திரைப்படங்களுக்காக “கேரள ஃபிலிம் கிரிடிக்ஸ் அசோசியேசன்” விருதுகள் வழங்கப்பட்டது.
  மேலும் பல திரைப்படங்களுக்காக “திரைப்பட விமர்சன விருதுகள்”, “வனித்த விருதுகள்”, “ஏசியாநெட் திரைப்பட விருதுகள்” என பல விருதுகளை அவர் பெற்றுள்ளார்.
  தன்னுடைய நடிப்புத் திறமையால் பல விருதுகளைப் பெற்று, கேரளத் திரைப்பட உலகின் தலைசிறந்த நடிகனாக விளங்கிய மம்மூட்டி அவர், ஏழை மக்களுக்கு உதவும் நோக்கத்துடன் பல மறுவாழ்வு அமைப்புகளின் மூலமாக நிறைய உதவிகளை வழங்கி, நிஜ வாழ்கையில் ஒரு சூப்பர் ஸ்டாராக வாழ்ந்து வருகிறார் என்றால் அது மிகையாகது!!!
   
 10. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  7,082
  Likes Received:
  512
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  கமல்ஹாசன்

  இந்தியத் திரைப்படத்துறையில், குழந்தை நட்சத்திரமாக ‘களத்தூர் கண்ணம்மாவில்’ அறிமுகமாகி, தனது ஈடுஇணையற்ற நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி, ‘உலகநாயகன்’ என்று போற்றப்படும் கமல்ஹாசன் அவர்கள், இருநூற்றுக்கும் மேற்பட்ட இந்திய திரைப்படங்களில் நடித்துள்ளார். தனது வாழ்க்கை முழுவதையும் திரைத்துறைக்கே அர்பணித்தத் திறமையான நடிகர்களுள் ஒருவராவர். நான்கு முறை தேசிய விருதும், பதினெட்டு முறை ஃபிலிம்ஃபேர் விருதும் பெற்ற கமல்ஹாசன் அவர்களைப் பற்றியறிய மேலும் தொடர்ந்துப் படிக்கவும்.
  பிறப்பு: நவம்பர் 7, 1954
  பிறந்த இடம்: பரமக்குடி, தமிழ்நாடு, இந்தியா
  தொழில்: நடிகர், திரைக்கதையாசிரியர், இயக்குனர், பாடலாசிரியர், பின்னணிப் பாடகர், நடன அமைப்பாளர், தயாரிப்பாளர்
  நாட்டுரிமை: இந்தியா
  ஆரம்ப கால வாழ்க்கை

  கமல்ஹாசன் அவர்கள், தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டத்திலிருக்கும் பரமக்குடியில் குற்றவியல் வழக்கறிஞராக இருந்த டி.சீனிவாசனுக்கும், ராஜலக்ஷ்மி அவர்களுக்கும் மகனாக பிறந்தார். நான்கு குழந்தைகளில், கடைக்குட்டியாகப் பிறந்த கமலுக்கு, இளம் வயதிலிருந்தே, படிப்பைத் தவிர மற்ற கலைகளில் ஆர்வம் அதிகமிருந்ததால், மிகுதியான நேரத்தை அதில் செலவிட்டார். சாருஹாசன், சந்திரஹாசன், மற்றும் நளினி ரகு இவருடைய உடன் பிறந்தவர்கள். கமல் அவர்களின் தந்தை, கட்டுப்பாடு மிகுந்தவராக இருந்ததால், தனது மகன்களை நன்குப் படிக்க வைக்க எண்ணினார். அவரின் எண்ணத்திற்கேற்ப, கமலின் மூத்த சகோதரர்கள் இருவரும் தனது தந்தையை உதாரணமாகக் கொண்டு, சட்டம் பயின்றனர்.
  இல்லற வாழ்க்கை
  1978ல், வாணி கணபதி என்பவரை மணமுடித்த கமல்ஹாசன், பத்து ஆண்டுகள் கழித்து அவரிடம் விவாஹரத்துப் பெற்று, சரிகா என்ற நடிகையை மணமுடித்தார். அவர்களுக்கு, ஷ்ருதி ஹாசன் மற்றும் அக்ஷரா என்ற மகள்கள் உள்ளனர். பின்னர், சிம்ரனுடனான தொடர்பின் காரணமாக, சரிகா அவர்கள், கமலிடம் விவாஹரத்துக் கோரினார். 2002ல் சரிகாவுடனான உறவிலிருந்து விடுதலைப் பெற்ற பின், 2005லிருந்து கௌதமியுடன் இணைந்து வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்.
  திரையுலக வாழ்க்கை
  தனது திரையுலக வாழ்க்கையை, ஒரு குழந்தை நட்சத்திரமாகத் தொடங்கிய கமல்ஹாசன் அவர்கள், தீவிர நாடகக் கலைஞராகவும் இருந்து வருகிறார். 1960ல் வெளியான ‘களத்தூர் கண்ணம்மா’ திரைப்படத்தில் முதன்முதலில் அறிமுகமான போது, அவருக்கு வயது ஆறு. அத்திரைப்படத்தின் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான ‘இந்திய தேசிய விருதைப்’ பெற்றார். குழந்தை நட்சத்திரமாகப் பல திரைப்படங்களில் நடித்த இவர், ஒரு இளைஞனாக, 1970ல் வெளியான ‘மாணவன்’ என்ற திரைப்படத்தில் ஒரு பாடலில் மற்றும் தோன்றினார். 1973ல், வெளியான கே.பாலச்சந்தர் அவர்களின் ‘அரங்கேற்றம்’ என்ற திரைப்படம் அவருக்கு ஒரு திருப்புமுனையாக இருந்தது. துணைக் கதாப்பாத்திரமாக பல கதைகளில் நடித்தாலும், அவர் எதிர்மறையான கதாப்பாத்திரங்களில் நடித்த ‘சொல்லத்தான் நினைக்கிறன்’, ‘குமாஸ்தாவின் மகள்’ போன்ற திரைப்படங்கள் பெரிதும் பேசப்பட்டவை. 1974ல் வெளிவந்த, ‘நான் அவன் இல்லை’ திரைப்படமே அவர் துணைக் கதாப்பாத்திரத்தில் நடித்த கடைசித் திரைப்படமாகும்.
  1974ல் வெளியான ‘கன்னியாகுமரி’ என்ற மலையாளப் படம் மூலமாக கதாநாயகனாக உருவெடுத்தார். இந்தப் படம் அவருக்கு அம்மொழிக்கான ஃபிலிம்ஃபேர் விருதினைப் பெற்றுத் தந்தது. தமிழ்த் திரையுலகில் நாயகனாக அவர் அறிமுகமாகிய முதல் படம், கே.பாலச்சந்தர் அவர்கள் இயக்கிய ‘அபூர்வ ராகங்கள்’. இப்படத்திற்காக, அவருக்கு ‘ஃபிலிம்ஃபேர் விருதும்’, ‘தேசிய விருதும்’ கிடைத்தது. 1970களில், ரஜினிகாந்த்தும், கமல்ஹாசனும் பல திரைப்படங்களில் இணைந்து நடித்தனர். ’16 வயதினிலே’, ‘மூன்று முடிச்சு’, ‘அவர்கள்’, ‘இளமை ஊஞ்சல் ஆடுகிறது’ போன்ற திரைப்படங்கள் அவ்விருவரின் கூட்டணிக்கு நல்ல எடுத்துக்காட்டு. பின்னர், தொடர்ந்து வெற்றிப் படங்களான ‘சிகப்பு ரோஜாக்கள்’, ‘வருமையின் நிறம் சிகப்பு’, ‘நீயா’, ‘கல்யாண ராமன்’, ‘நினைத்தாலே இனிக்கும்’, ‘ராஜப்பார்வை’, ‘மூன்றாம் பிறை’ ஆகிய படங்கள் இவருக்குப் பல விருதுகளைத் தேடித்தந்தது.
  அதே சமயத்தில், அவர் ஹிந்தித் திரையுலகிலும் கவனம் செலுத்தினார். ‘ஏக் துஜே கே லியே’, ‘சாகர்’, ‘ராஜ் திலக்’, கிரஃப்தார்’ ஆகிய திரைப்படங்கள் அவர் நடித்த ஹிந்தி திரைப்படங்களில் சில. 1990களில் வெளியான ‘அபூர்வ சகோதர்கள்’, ‘குணா’, ‘தேவர் மகன்’, ‘மகாநதி’, ‘குருதிப்புனல்’, ‘இந்தியன்’, ‘அவ்வை ஷண்முகி’ போன்ற படங்கள், வெற்றிகரமான பாக்ஸ் ஆஃபிஸ் திரைப்படங்களாக உருவெடுத்தன. 1990ல், அவரின் அற்புதமான நடிப்புத் திறமைக்காக, இந்திய அரசு அவருக்கு மிக உயரிய விருதான ‘பத்மஸ்ரீ’ விருதை வழங்கியது. அன்று முதல், இவர் ‘பத்மஸ்ரீ கமல்ஹாசன்’ என்றும் அழைக்கப்படுகிறார்.
  இரண்டு ஆண்டுகள் நீண்ட இடைவெளிக்குப்பின் வெளியான திரைப்படம், ‘ஹே ராம்’. இது அவருடைய சொந்தத் தயாரிப்பான ‘ராஜ்கமல் பட நிறுவனத்தின்’ படைப்பாகும். அப்போது ஆட்சியிலிருந்த காங்கிரஸ், இந்த படத்திற்குத் தடை விதித்தாலும், இப்படம் பெருமளவு வெற்றியை அடைந்தது. பின்னர், ‘தெனாலி’, ‘பம்மல் கே. சம்பந்தம்’, ‘பஞ்சதந்திரம்’, ‘வசூல் ராஜா MBBS’ போன்ற திரைப்படங்கள் அவருடைய நகைச்சுவை உணர்வுக்காகப் பெரிதும் பேசப்பட்டவை. கெளதம் மேனன் இயக்கத்தில் வெளியான ‘வேட்டையாடு விளையாடு’, கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவந்த ‘தசாவதாரம்’ உலகளவில் பெரும் வெற்றியைத் தேடித்தந்தது. அண்மையில் அவர் நடித்து, இயக்கி தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தியில் வெளியான ‘விஸ்வரூபம்’ பாக்ஸ் ஆஃபிஸில் வெற்றிப் பெற்று வெளிவந்த சில நாட்களிலேயே 120 கோடி வருவாயை ஈட்டியுள்ளது.
  நடிப்பைத் தவிர, அவர் பல படங்களுக்கு, பாடல்களும் எழுதியிருக்கிறார். மேலும், தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், மற்றும் ஆங்கிலத்தில் எழுபதுக்கும் மேற்பட்டப் பாடல்களைப் பாடியும் உள்ளார். திறமைசாளியான கமல்ஹாசன் அவர்கள், பரதநாட்டிய கலைஞர் என்பதால், பல படங்களுக்கு நடனக்கலைஞராகவும் இருந்துள்ளார்.
  இலக்கிய படைப்புகள்
  தமிழ் இலக்கியத்தில் அவருக்கு இருக்கும் ஆர்வத்தாலும், எழுத்துத் திறனாலும் ‘மையம்’ என்ற பத்திரிக்கையை இயக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். இவ்விதழைக் ‘கமல்ஹாசன் நற்பணி மன்றம்’ இயக்கி வருகிறது. தனது ரசிகர் சங்கம் மூலமாக, சினிமா, குழந்தை வசவு, காஷ்மீர் மோதல், போதை மருந்துப் போன்ற சமுதாயப் பிரச்சனைகளை, தனது புத்தகமான ‘தேடித் தீர்ப்போம் வா’ என்ற தலைப்பில் சேகரித்து வெளியிட்டார்.
  பொதுநலப் பணிகள்
  ‘கமல் நற்பணி இலக்கியம்’ என்ற அமைப்பின் கீழ் பல சமுதாயப் பொது நல அமைப்புகள் அமைத்து சமூக சேவையில் ஈடுபட்டு வருகிறார்கள், அவரது ரசிகர்கள். ஏழை எளியோருக்கு உதவுவது, பள்ளிக் குழந்தைகளுக்குப் புத்தகம், கணினிப் போன்றவற்றை வழங்குவது போன்ற நற்பணிகளும் செய்கிறார்கள். ஹ்ருதயராகம் 2010 என்ற திட்டத்தின் தூதராக இருந்த அவர், எய்ட்ஸினால் பாதிக்கப்பட்டோருக்கு உதவுவதன் பொருட்டாக ஒரு அனாதை இல்லத்தை அமைத்தார். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நிவாரண நிதித் திரட்டி, சென்னை போரூரிலிருக்கும் ஸ்ரீ ராமச்சந்திரா பல்கலைக்கழகத்தில், செப்டம்பர் 2010ஆம் ஆண்டு வழங்கினார்.
  விருதுகள்
  • சிறந்த நடிப்பிற்காக மூன்றாம்பிறை, நாயகன், இந்தியன் போன்ற படங்களுக்காக இந்திய அரசின் தேசிய விருதுகளைப் பெற்றார்.
  • சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்காக ‘இந்திய தேசிய விருது’ அவரது முதல் படமான ‘களத்தூர் கண்ணம்மாவிற்காக’ வழங்கப்பட்டது.
  • 18 முறை ஃபிலிம்பேர் விருதுகள் பெற்ற பெருமை, கமல்ஹாசன் அவர்களையே சேரும்.
  • 1990ல், ‘பத்மசிறீ விருது’ பெற்றார்.
  • 2005ல், சத்யபாமா நிகர்நிலை பல்கலைக்கழகம் அவருக்கு ‘டாக்டர் பட்டம்’ வழங்கி கௌரவித்தது.
  முக்கியமான திரைப்படங்கள்
  கமல்ஹாசன் அவர்களின், திரையுலக வரலாற்றில் பெரிதும் பேசப்பட்டத் திரைப்படங்களுள் சில…
  • களத்தூர் கண்ணம்மா
  • 16 வயதினிலே
  • மூன்றாம் பிறை
  • நாயகன்
  • அபூர்வ சகோதரர்கள்
  • மைக்கேல் மதன காமராஜன்
  • குணா
  • மகாநதி
  • தேவர் மகன்
  • இந்தியன்
  • அவ்வை சண்முகி
  • ஆளவந்தான்
  • தெனாலி
  • தசாவதாரம்
   

Share This Page