நமது கையில் உள்ள ஒவ்வொரு ரேகையின் பலன்கள்...!

Discussion in 'Religious & Sprituality' started by NATHIYAMOHANRAJA, Mar 15, 2019 at 7:30 PM.

 1. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  4,430
  Likes Received:
  469
  Trophy Points:
  83
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  நமது கையில் உள்ள ஒவ்வொரு ரேகைகளுக்கும் சாஸ்திரங்கள் பலன்கள் கூறுகின்றன. கைரேகை சாஸ்திரத்தில் “திருமண ரேகை” அல்லது “தார ரேகை” ஒருவரின் வாழ்க்கை துணையை பற்றி கூறுவதாகும்.

  சூரிய ரேகை: சூரிய ரேகையானது விதி ரேகைக்கு இணையாக மோதிர விரலின் கீழே அமைந்திருக்கும். இந்த ரேகையின் பலனை வைத்து ஒருவரின் புகழ் மற்றும் இகழ்ச்சியை தெரிந்துக் கொள்ளலாம்.

  சுக்கிரன் ரேகை: சுக்கிரன் ரேகையானது சுண்டு விரலுக்கும், மோதிர விரலுக்கும் இடையில் துவங்கி, மோதிர விரல் மற்றும் நடுவிரலுக்கு கீழே ஒரு கீற்று போல சென்று நடுவிரலுக்கும், சுட்டு விரலுக்கும் இடையில் முடியும். இந்த ரேகை வைத்து ஒருவரது அறிவு மற்றும் திறமையை பற்றி தெரிந்துக் கொள்ளலாம்.

  நட்பு ரேகை: நட்பு ரேகையானது உள்ளங்கையின் விளிம்பு மற்றும் சுண்டு விரலின் கீழ் பகுதிக்கு இடையே காணப்படும். இந்த ரேகை உறவுகள் சார்ந்த பலன்களை கூறுகிறது.

  வெள்ளி ரேகை: வெள்ளி ரேகையானது மணிக்கட்டிற்கு அருகில் உள்ளங்கையின் கீழ் நோக்கி சென்று மேல் நோக்கி இருக்கும். இந்த ரேகையை வைத்து ஒருவருடைய உடல் நல பிரச்சனைகள், தொழில் போன்றவற்றை பற்றி தெரிந்துக் கொள்ளலாம்.

  பயண ரேகை: பயண ரேகையானது உள்ளங்கையின் புடைத்த விளிம்பில் இருந்து மணிக்கட்டிற்கும், இதய ரேகைக்கும் இடையில் காணப்படுகிறது. இந்த ரேகையை வைத்து ஒருவரால் எவ்வளவு நேரம் பயணிக்க முடியும் என்பதை பற்றி தெரிந்துக் கொள்ளலாம்.

  அப்போலோ ரேகை: அப்போலோ ரேகை என்பது வாழ்க்கையின் அதிர்ஷ்டத்தை குறிக்கும் ரேகை. இது மணிக்கட்டில் சந்திர மேட்டில் இருந்து மோதிர விரலுக்கு இடையே அமைந்துள்ளது.

  வட்ட ரேகை: வட்ட ரேகை ஆயுள் ரேகையை கடந்து x வடிவத்தை உருவாக்குகிறது. இது தீமையின் அறிகுறியாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் இது கைரேகை பார்க்க வருபவருக்கு பிரச்சனை விளைவிக்கும் என்று கூறப்படுகிறது.

  விதி ரேகை: விதி ரேகை மணிக்கட்டின் அருகில் உள்ளங்கையின் அடியில் இருந்து நடுவிரலை நோக்கி உள்ளங்கையின் மையத்தை நோக்கி உள்ளது. இது கல்வி மற்றும் தொழில் சார்ந்த வெற்றிகள் மற்றும் தடைகள் குறித்து கூறுகிறது.

  குரங்கு ரேகை: குரங்கு ரேகை மடிப்பானது சுட்டு விரலுக்குக் கீழே துவங்கி, சுண்டு விரலுக்குக் கீழ் முனையில் இதய ரேகை முடியும் இடத்தில் முடிவடைகிறது. இந்த ரேகை ஒருவருடைய உணர்ச்சிகளைக் குறித்து கூறுகிறது.

  இதய ரேகை: இதய ரேகை விரல்களுக்கு அடியில் உள்ளங்கையின் மேற்புறத்தில் உள்ளது. இது நுனிவிரலுக்கு அடியில் துவங்கி கட்டைவிரல் நோக்கி அமைந்துள்ளது. இது இதயத்தின் ஆரோக்கியம், உணர்சிகள், உணர்வுகள், இன்பம், துன்பம் ஆகியவற்றைக் குறிக்கிறது.

  தலை ரேகை: தலை ரேகை சுட்டுவிரலின் கீழ் உள்ளங்கையில் துவங்கி, உள்ளங்கையின் வெளிப்புற விளிம்பில் உள்ளது. இது கல்வி, புத்திசாலித்தனம், அறிவு, மனம், வேலை செய்யும் முறை ஆகியவற்றைக் குறித்து கூறுகிறது.

  ஆயுள் ரேகை: ஆயுள் ரேகை கட்டை விரலுக்கு மேல் உள்ளங்கையின் விளிம்பில் துவங்கி, மணிக்கட்டை நோக்கி ஒரு வில் போல அமைந்திருக்கும். இது ஒருவருடைய உடல் ஆரோக்கியம், பேரழிவு நிகழ்வுகள் மற்றும் இடமாற்றங்கள் குறித்து கூறுகிறது.
   

Share This Page