நான் சம்யுக்தா-என் வாழ்வு என் இஷ்டம் by Jeyanthi

Discussion in 'Serial Stories' started by saravanakumari, May 7, 2018.

 1. saravanakumari

  saravanakumari Administrator Staff Member Manager Manager Manager

  Joined:
  Nov 12, 2014
  Messages:
  2,277
  Likes Received:
  1,037
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  home maker
  Location:
  villupuram
  வணக்கம் தமிழ்சுரபி வாசகர்களே


  நம் தளத்திற்கு மேலும் ஒரு புது எழுத்தாளர் இணைய இருக்கிறார் . அவரை வரவேற்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம் .  எழுத்தாளர் ஜெயந்தி அவர்கள்  தலைப்பு :


  நான் சம்யுக்தா-என் வாழ்வு என் இஷ்டம்  இந்த கதையோட நாயகி சம்யுக்தா.அவ வேலை செய்ற இடத்துல அவளோட பாஸ் அவள ப்ரொபோஸ் செய்றார்.அது அவரோட தங்கைக்கு பிடிக்கல.சம்யுக்தாவும் அவரோட காதல நிராகரிக்கறாங்க.அதுக்கு காரணம் கேட்ட அவங்களோட பாஸ்க்கு தான் இன்னொருத்தர விரும்பறதா சொல்றாங்க.அதுக்கப்றம் அவங்க வாழ்க்கையில என்ன நடக்குதுன்றதுதான் கதை........
   
 2. Ezhilanbu

  Ezhilanbu Well-Known Member

  Joined:
  Sep 21, 2017
  Messages:
  541
  Likes Received:
  861
  Trophy Points:
  93
  Gender:
  Female
  வாழ்த்துக்கள்
   
 3. Jeyanthi M

  Jeyanthi M New Member

  Joined:
  May 6, 2018
  Messages:
  2
  Likes Received:
  5
  Trophy Points:
  3
  Gender:
  Female
  thank you ezilanbu
   
 4. Jeyanthi M

  Jeyanthi M New Member

  Joined:
  May 6, 2018
  Messages:
  2
  Likes Received:
  5
  Trophy Points:
  3
  Gender:
  Female
  எபிசொட் 1
  “நா உன்ன திருமணம் செஞ்சுக்கலாம்ன்னு ஆசைப்படுறேன்” என சொன்ன ப்ருத்வியையே ஆச்சர்யமாகப் பார்த்தாள் சம்யுக்தா.

  அவளுடைய பதிலை தெரிந்துகொள்வதற்குமுன் பிருத்வியைப் பற்றி இன்னும் கொஞ்சம் பார்ப்போம்.
  ப்ருத்வி..


  இந்த கேள்வியை இவளைத் தவிர வேறு யாரிடமாவது அவன் கேட்டிருந்தாள் உடனே சரி என்று அவர்கள் சொல்லியிருப்பார்கள்.

  அவ்வளவு ஏன் இந்த கேள்வியை அவன் தன்னிடம் கேட்க மாட்டானா என ஏங்குகிற பெண்கள்கூட அதிகமே.

  அவனை தன்னுடைய வலையில் விழ வைப்பதற்காக முயன்று அதில் தோற்றுப்போனவர்களும் உண்டு.

  அவன் இதுவரை எந்த பெண்ணையும் தப்பான கண் கொண்டுபார்த்ததாக இதுவரை கேள்வியில்லை.

  சென்னையிலுள்ள மிக பெரிய தொழிலதிபர்களுல் அவனும் ஒருவன்.

  அவனுடைய தந்தையே மிக பெரிய தொழிலதிபர் என்றாலும் அவன் தன்னுடைய முயற்சியால் இந்த துறையில் சாதித்தது நிறைய.

  தொழிற்துறையில் அவனை தெரியாதவர்களே இருக்க முடியாது.அந்த அளவுக்கு பிரபலமானவன்.

  அவனுடைய குணம்,கம்பீரம் மற்றும் தொழிற்துறையில் அவனுடைய சாதனை என அனைத்தையும் தொழில்துறையில் அனைவருக்கும் தெரியும் என்பதால் தன்னுடைய புதல்வியை எப்படியாவது அவனுக்கு திருமணம் செய்துவைதுவிட வேண்டும் என்பது அவர்களில் பலருடைய கனவு.

  அவர்களுடைய மகள்களுக்கும் இதில் சம்மதமே.

  இவ்வாறு அவனை மணப்பதற்காக பல பெண்கள் காத்துக் கொண்டிருக்க அவனுடைய பார்வையோ தனக்கு கீழ் வேலை செய்யும் ஒரு சாதாரண பெண்ணின் மீது விழுந்ததற்கு காரணம் என்ன சொல்ல.

  பெயரினால் வந்த மோகமா,
  இல்லை அவளுடைய அழகினால் அவன் ஈர்க்கப்பட்டானா
  அப்படியும் இல்லையென்றால் மற்ற அனைவரில் இருந்தும்
  வித்தியாசப் பட்டு இருக்கும் அவளுடைய குணத்தினால்
  அவனுக்கு அவளை பிடித்ததா அல்லது
  இதுதான் விதியா என்பது கடவுளுக்கு மட்டுமே தெரிந்த உண்மை.


  இப்போது அவளுடைய பதிலைப் பார்ப்போம்.

  சற்று நேரம் அவனையே ஆச்சரியமாகப் பார்த்தாள் சம்யுக்தா.

  அவளுக்கு தன்னுடைய காதுகளையே நம்ப முடியவில்லை.

  அவனுடைய கம்பனியிலையே வேலை பார்ப்பதால் அவளுக்கும் அவனைப் பற்றி தெரியும்தானே...

  அவனுடைய கடைக்கண் பார்வைக்காக காத்து கொண்டிருக்கும் பெண்களைப் பற்றியும் அவள் அறிந்திருப்பாள்தானே...

  அப்படிப்பட்ட ஒருவன் தன்னை திருமணம் செய்ய விரும்புவதாக சொன்னால் ஆச்சரியப் படாமல் எப்படி இருக்க முடியும்.

  “என்ன சம்யுக்தா பதிலையே காணோம்.நா உன்கிட்ட தான் கேட்டுகிட்டு இருக்கேன்” என சொன்னான் ப்ருத்வி

  "நீங்க கேட்டது எனக்கு ரொம்ப சந்தோஷம் சார்.ஆனா என்னால உங்கள திருமணம் செஞ்சுக்க முடியாது” என சொன்னாள் சம்யுக்தா.

  “ஏன்.உனக்கு என்ன பிடிக்கலையா”

  “அப்படியெல்லாம் ஒன்னும் இல்லை சார்.எனக்கு இப்போதைக்கு திருமணம் செஞ்சுகொள்ள விருப்பம் இல்லை”

  “அப்படியா ரொம்ப சந்தோஷமா போச்சு.உனக்கு இப்போ திருமணம் செய்ய விருப்பம் இல்லன்னா பரவாயில்லை.நாம ரெண்டு பேரும் கொஞ்ச நாள் காதலிக்கலாம்.உனக்கு எப்போ என்ன மாரேஜ் செய்யனும்ன்னு தோணுதோ அப்போ நாம கல்யாணம் செஞ்சுக்கலாம்.”

  “அது முடியாது”

  “ஏன்”

  “ஏன்னா நா ஏற்கனவே ஒருத்தர விரும்புறேன்”

  “அப்படியா,யார் அது”

  “அது வந்து” என தயக்கத்துடன் நிறுத்தினாள் சம்யுக்தா

  “எதுக்கு சம்யுக்தா இவ்வளவு தயங்கற ஒருவேள அப்படி யாருமே இல்லையா.என்ன அவாய்ட்
  செய்யறதுக்காக அப்படி பொய் சொன்னியா எதுவா இருந்தாலும் என்கிட்டே தயங்காம உண்மைய சொல்லு”


  “அப்படியெல்லாம் இல்லை சார்.உங்களை நா ஏன் அவாய்ட் செய்யப் போறேன்.உங்களைமாதிரி ஒரு நல்ல பெர்சன் எனக்கு ஹஸ்பெண்டா வந்தா எனக்கு நல்லதுதான”

  “சரி அப்படின்னா ஏன் தயங்குற”

  “அதுவந்து நீங்க ரொம்ப பிடிவாதக்காரர் நினச்சத எப்படிவாவது சாதிக்கனும்ன்னு நினைக்கிறவர்ன்னு எனக்கு தெரியும்“

  “சோ,நீ என்ன சொல்ல வர்ற நீ விரும்புரவரோட பேர சொன்னா நா உன்னையும் அவரையும் பிரிச்சுட்டு உன்ன எப்படியாவது நா திருமணம் செஞ்சுக்குவேன்னு நீ பயப்படுறியா.என்ன பாத்தா உனக்கு வில்லன் மாதிரி இருக்கா” என கேட்டான் ப்ருத்வி

  இதுக்கு மேலும் தயங்குவது சரி இல்லை என்பதால் பதிலளித்தாள் சம்யுக்தா.

  அவனைப் பற்றி அனைத்தையும் அவளிடம் கேட்டு தெரிந்துகொண்ட ப்ருத்வி “சரி சம்யுக்தா உனக்கு என்ன உதவி என்றாலும் என்கிட்ட கேளு.நா உன்கிட்ட ப்ரோபோஸ் செஞ்சதால எப்படி இவன்கிட்ட கேக்குறதுன்னு நினைச்சு தயங்காத” என கூறினான்.

  ப்ரித்வியின் மனம் மிகுந்த குழப்பத்தில் இருந்தது.சம்யுக்தா இன்னொருவரை விரும்புவதை அவனால் நம்ப முடியவில்லை.

  தான் விரும்பிய எதுவுமே இதுவரை தனக்கு கிடைக்காமல் இருந்தது கிடையாது.

  அப்படி இருக்கும்போது இது மட்டும் எப்படி நடக்காமல் இருக்க முடியும்..

  ஒருவேளை இவ்வளவு பெரிய இழப்பை தருவதற்காகத்தான் கடவுள் தனக்கு மற்ற எல்லாவற்றையும் தான் வாழ்வில் அளித்திருகிறாரோ.   
 5. Prabha_kannan

  Prabha_kannan Well-Known Member

  Joined:
  Oct 25, 2017
  Messages:
  477
  Likes Received:
  291
  Trophy Points:
  63
  Location:
  trichy
  nice start .
   
 6. Athvika

  Athvika Member

  Joined:
  Feb 14, 2018
  Messages:
  61
  Likes Received:
  27
  Trophy Points:
  8
  Gender:
  Female
  நைஸ்
   
 7. anitha09

  anitha09 Active Member

  Joined:
  Oct 10, 2017
  Messages:
  308
  Likes Received:
  240
  Trophy Points:
  43
  Gender:
  Female
  next episode eppo
   
 8. kannamma 20

  kannamma 20 Well-Known Member

  Joined:
  May 14, 2017
  Messages:
  382
  Likes Received:
  288
  Trophy Points:
  63
  Gender:
  Female
  Next update eppo poduveenga.
   

Share This Page