நின்வசமாதல் எப்போது? / Ninvasamathal Eppothu ? By Sahithya

Discussion in 'Serial Stories' started by Tamilsurabi, Apr 21, 2019.

 1. Tamilsurabi

  Tamilsurabi Administrator Staff Member

  Joined:
  Sep 11, 2014
  Messages:
  308
  Likes Received:
  195
  Trophy Points:
  43
  நின்வசமாதல் எப்போது?

  அத்தியாயம் 5

  "ஏய் இப்ப என்மேல தண்ணீ உத்துவியா மாட்டியா ?"-உதய் மிரட்ட .

  "இப்ப வழி விடுங்க "

  "முடியாது ,என்ன பண்ணுவ ".
  மிரட்சியுடன் அங்கும் இங்கும் பார்வையால் அலைந்தவள் , "நித்யா என்ன பண்ணிரீங்க,இங்கதான் உங்க அண்ணன் இருக்காரு "-என்று அந்த பக்கம் ஆதவனை தேடி சென்று கொண்டுயிருந்த நித்யாவை அழைத்தால் உத்ரா.

  "இங்க என்ன பண்ற ?"-கோபத்துடன் .

  "சும்மாதான் "-என்றான் உதய் உத்ராவை முறைத்தவாறு .

  "வரவர நம்ம வீட்டு ஆளுங்களுக்கு யாரு கூட பேசனும்னு தெரியல "-உத்ராவை அருவறுப்போடு நோக்கியவாறு .

  "கீழ வா அம்மா கூப்பிடறாங்க "

  "முதல உத்ரா கிட்ட மன்னிப்பு கேளு நித்யா "-என்றான் அடக்கிய கோபத்துடன் தன்னவள் முன் தங்கையின் பேச்சைக்கண்டு .

  "எதுக்கு ,சீக்கிரம் வா "-என்றபடி சென்றுவிட்டாள் .

  "என்ன சார் இப்பிடி சொல்லிட்டு போறாங்க "-என்று நகைத்தவாறு, பின்பு நிதானத்துடன் "இது தான் உங்களுக்கும் எங்களுக்கும் உள்ள வித்தியாசம் ,உங்க எண்ணம் எனக்கு புரியுது ஆனா அதுக்கு நா ஆளு இல்ல ,so please இனிமேல் இப்படி பண்ண வேணாம் ,என்னால திருப்பி பேசமுடியாதுன்னு இல்ல ,நாங்க அப்படி வளரல”.

  உதய்க்கு மண்டை காய்ந்துவிட்டது கோபத்துடன் தன் தங்கையை நோக்கி சென்றான் .

  ஸ்டோர் ரூமில் தன் கையில் கொடியாய் நின்றவளிடம் ,"மீரா நாம கல்யாணம் பண்ணிக்கலாமா என்ன சொல்ற ,ஹ்ம்ம் "-என்று பிறை நெற்றியை வருடியவாறு .

  எத்தகைய வார்த்தை கனவில் மட்டுமே உணர்ந்தது.

  அவன் வார்த்தையில் சுயநினைவு அடைந்த மீரா ஆதியின் கரத்தில் திமிறி ,"ஆதி என்ன பேசுறீங்க ,நாம எதுக்கு கல்யாணம் பண்ணிக்கணும் "-மனதை மறைத்தவாறு ,

  "என்னடி நக்கலா ,பல்ல உடைச்சுருவேன் "-என்று மீண்டும் தன் அணைப்பில் கொண்டுவந்து .

  "விடுங்க ,நா போகணும் "

  "போகலாம் ,அதுக்கு முன்னாடி நாங்க இன்னும் இங்க மூணு நாள் இருப்போம், நா தாத்தா கிட்ட உங்கப்பா ,எங்கப்பா கிட்ட நான் நாளைக்கே பேசுறேன் "

  "எவ்ளோ நாள் இல்லாத அக்கறை இப்ப மட்டும் ஏன் ?,எங்கப்பா ,உங்கப்பா கிட்ட பேசறது முதல உங்க அம்மாகிட்ட பேசிப்பாருங்க "-என்றபடி அவன் கையில் இருந்து விலகி கதவை நோக்கி சென்றாள் .
  "அப்பறோம் உங்களுக்கு தான் நா ஒத்துவரமாட்டினே ,பின்னே ஏன்?"-அன்று மனதில் வாங்கிய அடியால் .

  "அன்னைக்கு நாங்க பேசுனத கேட்டியா "கசந்த முறுவலுடன் "வேணும்னு கேக்கல ".

  "நா பேசமாட்டேன்னு நினைக்குற இல்ல "-கண்கள் இடுங்க .

  "இதுல நீங்க நினைக்கிறதோ நா நினைக்கிறதோ ஒண்ணுமில்லை "-சென்றுவிட்டாள்.

  யோசனையுடன் மாடி ஏறினான் ,தன் அறையில் விட்டத்தை வெறித்தவாறு உதய்அமர்ந்து இருந்ததை கண்டான் .

  "என்னாச்சு உதய் ஓரு மாதிரி இருக்க ".

  "இங்க வந்ததல்ல இருந்து பல மாதிரி இருக்கேன் "-முணங்கிவாறு .
  "சரி வா கீழ போலாம்".

  "நா வரல ".
  சிறிது நேரம் உதயை நோக்கிய பின் சென்றுவிட்டான் .

  "mom நா கொஞ்சம் உங்ககிட்ட தனியா பேசணும் "-தன் தாயின் அறையில் தன் தாய்மாமனை நோக்கி .

  "என் முன்னாடி என்ன தயக்கம் ஆதி ,சும்மா சொல்லு இப்ப தான் உங்க அம்மா உனக்கும் நித்யாவிக்கும் நடக்கப்போற கல்யாணத்தை பத்தி பேசிட்டு இருந்தா "- அவனை தன் தங்கையிடம் பேச விடாதவாறு .

  "சொல்லுப்பா,என்ன விஷயம் "

  "மாம் நீங்களும் ,அப்பாவும் மது அத்தைகிட்ட மீராவை கல்யாணம் பண்ண சம்மதம் கேளுங்க”- இதுவே முடிவாக என்றபடி .

  "என்ன ஆதி சொல்ற ,அப்ப நித்யா நிலை, பார்த்தியா லக்ஷ்மி இதுக்குத்தான் இங்க வரவேணான்னு சொன்னேன் "-கண்ணில் வன்மத்துடன் .

  "சாரி ,மாமா நா இதுவரைக்கும் நித்யாவை அந்தமாதிரி நினைச்சதில்லை ,மைத்தி எப்படியோ அப்படித்தான் நித்யா எனக்கு ".

  "mom வந்து பேசுங்க ".

  "அப்ப எங்க சம்மதம் தேவையில்லையா ஆதி "-மனதில் எழுந்த வலியுடன் .

  "கண்டிப்பா மாம் ,உங்களுக்கு என் சந்தோஷம் தான் பெருசுனா இப்படி சொல்லமாட்டிங்க, அதுவும் மீரா உங்க நாத்தனார் பொண்ணுதான் வேற யாருமில்லை "

  "சபாஷ் ,லக்ஷ்மி உன் பையன் எப்படி பேசுறான் பாரு ,எல்லாம் சேர்க்கை "-எப்படியும் அவனை விடக்கூடாது என்று .

  "என்னால முடியாது ஆதி ,மீராவை என் மருமகளா கொண்டுவர மாட்டேன் ,சீக்கிரம் ஊருக்கு கிளம்பலாம் இருந்தவரைக்கும் போதும் ".

  "so வந்து பேசமாட்டிங்க ,ok mom let it be ,நா உங்க பையன்னு நிருபிக்க வேணும்ல நானே பேசுறேன் ,இப்பவே,எனக்கு இல்லாத உரிமை வேற யாருக்கு இருக்குதுன்னு பாக்கறேன், முடிஞ்சா தடுத்துப்பாருங்க "-என்று தன் மாமனை நோக்கி சவால் பார்த்து புயல் போலச்சென்று விட்டான் .

  காத்திருந்தா காதல் மணம் வீசுமா ?
   
 2. Sahithya

  Sahithya New Member

  Joined:
  Mar 21, 2019
  Messages:
  9
  Likes Received:
  1
  Trophy Points:
  3
  Gender:
  Female
  thanks aishu:super:
   
 3. kavitha11

  kavitha11 Active Member

  Joined:
  Oct 3, 2014
  Messages:
  348
  Likes Received:
  228
  Trophy Points:
  43
  Gender:
  Female
  Location:
  Madurai
  Nice update
   
 4. Rabina

  Rabina Well-Known Member

  Joined:
  Aug 14, 2018
  Messages:
  771
  Likes Received:
  484
  Trophy Points:
  63
  Gender:
  Female
  nice update. aathi meera apakita keka porana? veetla mathavanga ellam ok solvangala?
   
 5. Prabha_kannan

  Prabha_kannan Well-Known Member

  Joined:
  Oct 25, 2017
  Messages:
  605
  Likes Received:
  369
  Trophy Points:
  63
  Location:
  trichy
  Wow...nice update
   
 6. Sahithya

  Sahithya New Member

  Joined:
  Mar 21, 2019
  Messages:
  9
  Likes Received:
  1
  Trophy Points:
  3
  Gender:
  Female
  thnks prabha_kannan
   
 7. Tamilsurabi

  Tamilsurabi Administrator Staff Member

  Joined:
  Sep 11, 2014
  Messages:
  308
  Likes Received:
  195
  Trophy Points:
  43
  நின்வசமாதல் எப்போது?


  அத்தியாயம் 6

  வரவேற்பறையில் குருநாதன் மற்றும் தேவன் ஊர் பெரிய தலைகளுடன் உரையாடிக்கொண்டு இருக்க ஆதி குருநாதனை நெருங்கினான் .
  "தாத்தா கொஞ்சும் பேசணும் "-என்றான் ஆதி பின்னால் தொடர்ந்து வந்துக்கொண்டிருந்த அன்னையும் மாமனையும் கண்டும் காணாதவாறு .


  "இருப்பா கண்ணா "-என்றபடி அவர்களிடம் தலையை விடைப்பெறும் விதமாக .
  அவர்கள் கலைந்து சென்றவுடன், "என்னப்பா என்ன விஷயம் ஏதாச்சும் வேணுமா ?"-என்றார் அக்கறையாக .


  ஆதிக்கு அந்த வீட்டில் தன் உரிமை என்னவென்று தெரிந்துவிட்டது இருப்பினும் "ஏன் தாத்தா ,நா என்ன இந்த வீட்டு விருந்தாளியா ,அப்புறம் ஏன் இப்படி கேக்குறீங்க "-அடக்கிய சினத்தோடு குரலை உயர்த்தியவாறு .

  "இல்லப்பா அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல ,புது ஊரு அதான் "-என்று பேரனிடம் பணிந்துபோனார் .

  சத்தம் கேட்டு அனைவரும் வெளியேவர மீரா அர்ஜுனிடம் சிரித்தபடி வந்துகொண்டுயிருந்தாள் .அதை பார்த்த ஆதிக்கு இறங்கிய கோபம் மீண்டும் மலையேறிவிட்டது .

  மனதில் "அவ்ளோ சொல்லியும் அவன்கிட்ட கூட பேசறதப்பாரு ,அவனும் அவன் மூஞ்சியும் ".

  "ஆதி ஏதாவது problem-மா ?"-கார்த்திக் குருநாதன் முகத்தை கவனித்தவாறு .
  "nothing கார்த்திக் ,நீ மது அத்தை அப்புறம் மாமாவை கூப்பிட்டுரையா,
  முக்கியமான விஷயம் பேசணும் so ப்ளீஸ்”-மீராவை முறைத்தவாறு .
  "எதுக்கு மதுவை கூப்டற ஆதி "-ராமநாதன் மகனை நோக்கி .


  "Dad இருங்க அவங்க வரட்டும் ,நீ போய் அவங்கள கூட்டிடுவா கார்த்திக் ".
  மீரா ஆதியை நோக்கியபடி அர்ஜுனிடம் பேசிக்கொண்டு இருந்தவள் அவன் தன் பெற்றோரை அழைக்க மனதில் கிலி அப்பிக்கொண்டது .


  மதுவும் மீராவின் தந்தையும் வர ஆதி தன் தந்தையிடம் சென்று ,"Dad மீராவை எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு ,so நீங்க மீராவை எனக்கு கல்யாணம் பண்ணிவைங்க”-மீராவை நோக்கி இதுவே இறுதியான முடிவு என்பது போல் .

  ராமநாதனுக்கு தன் காதுகளையே நம்பமுடியவில்லை ,எனினும் தன் தாரத்தின் முகத்தை பார்த்தார் .

  "என்ன விளையாட்றிய ஆதி "-தேவன் வேகத்துடன் எங்கே லக்ஷ்மியும் மகேந்திரனும் தன் தந்தையை குறைவாக பேசிவிடுவார்களோ என்று ,

  "இல்ல பெரியப்பா ,நா விளையாட்றது இல்ல "-நக்கலுடன் .

  குருநாதன் நேரடியாக மீராவின் தந்தை கிருஷ்ணாவிடம் "என்ன மாப்பிள்ளை சொல்றிங்க ,என்னானாலும் ராமநாதன் தான் தாய்மாமா முதல் உரிமை அவனுக்கு தான் "-அவர் இழுக்க

  கிருஷ்ணாவோ ,"மது அப்புறம் மீரா விருப்பம் தான் என்னோட விருப்பம் "-மனைவியே மகளுமே முன்னுரிமையை அளித்தபடி .

  உதய்க்கு நடக்கும் நிகழ்வுகள் நம்பும்படியாக இல்ல அருகில் இருந்த மைத்தியிடம் "உங்க அண்ணன் வேற level மைத்தி ,கல்யாணம் பண்ணிவைக்கிறாய்ங்களான்னு கேக்கல,பண்ணிவைங்க சொல்றான் "-பெருமூச்சுடன் .

  "பின்ன உங்கள மாதிரி பார்த்துடே இருக்கமுடியுமா ,உதய் பேசாம நீங்களும் இப்பவே உங்க லவ் மேட்டர சொல்லிடுங்க” -ஆர்வமாக .

  "என்ன entertainment -க்கு ஆள் தேடுறியா, பிச்சுப்போடுவேன் ,என்னமா ஐடியா கொடுக்குற பயபுள்ள ".

  "என்ன ராமநாதா ,நீ சொல்ற ?"

  லக்ஷ்மியோ ,"என்ன சொல்லயிருக்கு எனக்கு இஷ்டமில்லை ,எங்க அண்ணன் பொண்ணைத்தான் ,ஆதிக்கு பேசி முடிக்கப்போறோம் ,அதுவும் ஒரு அனாதையா என் வீட்டு மருமக நல்ல இருக்கு உங்க நியாயம் "- அவர் முடிக்கவில்லை ,"லக்ஷ்மி என்ன பேசுற"-ராமநாதன் ,"அண்ணி "-அலறியபடி மதுவும், நிரஞ்சனாவும் மீராவை பார்த்தார் .
  மீராவிற்கு எதுவும் புரியவில்லை, கிருஷ்ணாவோ தன் மகளை தன் சிறகுள் பாதுகாப்பதுபோல் அணைத்துக்கொண்டார்.


  குருநாதனோ,"ராமநாதா தயவு செஞ்சு உன் குடும்பத்த உன் அறைக்கு அழைச்சிட்டு போ "-பேத்தியை பார்த்தவாறு .

  "ஏன் நாங்க ஏன் உள்ளபோகணும் இது என் தங்கை வீடு "-மகேந்திரன் மனச்சாட்சி இல்லாமல் .

  "அப்பா கொஞ்சம் அமைதியா இருங்க "-என்றான் உதய் வெறுப்புடன் .

  "நீ ஏன் அண்ணா அப்பாவ அமைதியா இருக்க சொல்ற உனக்கு என்மேல அக்கறை இல்லையா ,இது என் வாழ்க்கை பிரச்சனை”- நித்யா குருநாதனை முறைத்தவாறு எல்லாம் இந்த மனுஷனால வந்தது .

  ஆதிக்கு யார் பேச்சும் கேட்கவில்லை,

  பயத்தில் கிருஷ்ணாவின் மார்பில் சாய்ந்து இருந்த மீராவே தெரிந்தாள்.
  பின்னர் ஓரு முடிவுடன் கிருஷ்ணாவின் அருகே சென்றான் .கிருஷ்ணா ஆதவனை நோக்க ,ஆதி தோளில் சாய்ந்திருந்த மீராவை இழுத்து அணைத்தான் .


  மிரட்சியுடன் மீரா ஆதியை பார்க்க,"என்னடி அப்படி பாக்குற ,நா அவ்ளோ சொல்லியும் அந்த அவன் கூட என்ன பேச்சு “-கண்ணடித்தபடி.

  “நாம கல்யாணம் பண்ணிக்கலாமா மீரா ப்ளீஸ் ?”-தன்னவள் கண்ணில் தன் மீதுள்ள காதலை கண்ட கர்வத்துடன் .

  "உங்க அண்ணா இப்படி எல்லாம் பேசுவாங்களா மைத்தி "-உத்ரா மைத்தியிடம்.
  "தெரியல உதி"-உத்ராவின் காதில் மெல்ல கூறியபடி அன்னைய நோக்கினாள் .


  அனைவரும் அதிர்ச்சியாக இருவரையும் பார்க்க ,"எனக்கு உங்கள சுத்தமா புடிக்காது, தயவு செஞ்சு என்ன விட்ருங்க "-யென்றபடி தன் அறைக்குள் சென்று மறைந்தாள், பின்னால் மதுவும் செல்ல .கோபத்துடன் அவள் அறையை நோக்கி சென்றான் .
   
  Suganyasomasundaram and Rabina like this.
 8. Rabina

  Rabina Well-Known Member

  Joined:
  Aug 14, 2018
  Messages:
  771
  Likes Received:
  484
  Trophy Points:
  63
  Gender:
  Female
  nice update.
   
 9. Sahithya

  Sahithya New Member

  Joined:
  Mar 21, 2019
  Messages:
  9
  Likes Received:
  1
  Trophy Points:
  3
  Gender:
  Female
  thnks Rabina
   
 10. kannamma 20

  kannamma 20 Well-Known Member

  Joined:
  May 14, 2017
  Messages:
  499
  Likes Received:
  373
  Trophy Points:
  63
  Gender:
  Female
  Nice update
   

Share This Page